இங்கு நான் கூறவிருக்கும் நன்மை பொருளாதாரம் சார்ந்ததல்ல. பன்மொழி அறிவால் நான் இன்றும், 63 வயது பூர்த்தியான நிலையிலும் கணிசமாக பொருள் ஈட்டுபவனாக இருப்பதை ஒரு துணைப்பொருளாகவே பார்க்கிறேன். அது முக்கிய நோக்கமல்ல. ஜெயா டிவி. நேர்க்காணலில் நான் குறிப்பிட்டதை இங்கு மறுபடி கூறுவேன். பல மொழிகள் கற்றதன் முக்கிய நோக்கமே அந்ததந்த மொழிகளிலுள்ள புத்தகங்களை அதே மொழிகளில் படிப்பதேயாகும்
இதெல்லாம் திடீரென எழுதக் காரணம்? ஜெயமோகன் அவர்களது யயாதி பற்றிய பதிவை அவர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்டு படித்தேன். அப்போது இப்புத்தகத்தை நான் எவ்வாறு படித்தேன் என்பது என் நினைவுக்கு வந்தது. வி.ச. காண்டேகர் எழுதிய யயாதியை மொழிபெயர்த்தது அவரது தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ. ஸ்ரீனிவாசாச்சாரியார் அவர்கள். சமீபத்தில் 1986-ல் அதை ரொம்ப சுவாரசியமாக படித்து கொண்டிருந்தேன். திடீரென பொசுக்கென நின்று விட்டது. பார்த்தால் முதல் பாகம் முற்றும் என வந்திருந்தது. அப்போது தில்லியில் இருந்தேன். ஆகவே அங்கு அதை வாங்க இயலவில்லை. அந்த ஆண்டு சென்னைக்கு விடுமுறையில் வந்தேன். நேராக கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள் வீட்டிற்கே சென்றேன். கலைமகள் காரியாலயத்தில் முகவரி கிடைத்தது. வரவேற்று பேசிக் கொண்டிருந்தவரிடம் இரண்டாம் பாகம் எங்கும் கிடைக்கவில்லை என கூறினேன். அதை தான் எழுதி முடிக்கவேயில்லை என சாவகாசமாகக் கூறினாரே பார்க்கலாம்.
என்ன செய்வது என புரியாது திகைத்தேன். தில்லிக்கும் திரும்பியாயிற்று. எங்கள் ஐ.டி.பி.எல். நூலகத்தில் சில கதைபுத்தகங்களும் வைத்திருப்பார்கள். அங்கு சென்று யயாதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பு கிடைக்குமா எனப் பார்த்தேன். நல்ல வேளை, அது கிடைத்தது. பிறகென்ன? தமிழில் விட்ட இடத்திலிருந்து ஹிந்தியில் தொடர்ந்து படித்தேன். ஆக ஒரு புத்தகத்தை இரு மொழிகளில் படித்தேன். ஆனால் முதல் பாராவில் நான் சொன்னதற்கும் இதற்கும் சிறு வேற்றுமை உண்டு. அதாவது வி.ச. காண்டேகரின் யயாதி மூலமொழி மராத்தி. அது எனக்குத் தெரியாது. ஆகவே வேறு வழியின்றி ஹிந்தி மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்க வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக ஹிந்தியும் தெரிந்ததால் அப்புத்தகத்தை முழுக்க படிக்க முடிந்தது. இன்னொரு விஷயம், இந்திய மொழிகளில் எந்த மொழியில் படித்தாலும் மகாபாரதத்தில் வந்த கிளைக்கதையான யயாதி விசித்திரமாகவே தோன்றியிராது.
யயாதி தமிழிலும் முழுக்கவே வந்துள்ளதாக இப்போது அறிகிறேன். பின் ஏன் அவர் தான் பாதியிலேயே அதை விட்டு விட்டதாகக் கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை அப்புறமாக அவர் அதை செய்திருக்கலாமோ என்னவோ அறியேன்.
பர்ஃப்யூம் என்னும் தலைப்பில் ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு நாவலின் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு கிடைத்தது. படிக்க கையில் எடுத்தவுடன் கீழே வைக்கவியலவில்லை. அவ்வளவு விறுவிறென்று கதை சென்றது. அருமையான ஃபிரெஞ்சு நடை. பாதி புத்தகம் முடித்தாயிற்று. அன்று ஜெர்மன் நூலகத்துக்கு சென்றால், அஒப்புத்தகத்தின் ஜெர்மன் ஒரிஜினலே கிடைத்தது. பிறகென்ன, விட்ட பகுதியை ஜெர்மனில் முடித்தேன். அருமையான ஜெர்மன் நடை என்பதையும் கூற வேறு வேண்டுமோ? ஆக இந்தப் புத்தகத்தையும் இரு மொழிகளில் படித்தேன்.
சற்றே வேறுபட்ட அனுபவம் ஹாரி பாட்டர் புத்தகங்கள். ஏழு புத்தகங்களையுமே ஆங்கில மூலத்தில் படித்தாகிவிட்டது. ஜெர்மன் மொழியாக்கத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது புத்தகங்களும், பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் முதல் மூன்று புத்தகங்களும் படித்தாகிவிட்டது. அடாடா என்ன தேர்ச்சியான மொழிபெயர்ப்பு?
மொழிபெயர்ப்பு என்றதும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது.
Ephraim Kishon ஒரு ஹங்கேரிய யூத எழுத்தாளர். இரண்டாம் உலக மகாயுத்தத்துக்கு பிறகு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தவர். மத்திய ஐரோப்பாவை சேர்ந்த அவருக்கு பல ஐரோப்பிய மொழிகள் (ஜெர்மன் உட்பட) தாய்மொழி லெவலுக்கு சரளமாக வரும். இஸ்ரேலுக்கு வந்ததும் ஹீப்ரூவில் எழுத ஆரம்பித்தார். அவரது புத்தகங்கள் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்படும். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை Friedrich Torberg ஜெர்மனில் மொழிபெயர்ப்பார். அந்த மொழியில் தானே எழுதியிருந்தால் எப்படியிருக்குமோ அதே மாதிரி தோர்பெர்க் மொழிபெயர்த்துள்ளார் என்று கிஷோன் அழுத்தம்திருத்தமாகக் கூறுவார். ஒரு மொழிபெயர்ப்புக்கு இதைவிட பெரிய பாராட்டு இருக்கவே முடியாது என்பது இன்னொரு மொழிபெயர்ப்பாளனான எனக்கு தெரியும். தோர்பெர்க் மரணத்துக்கு பிறகு கிஷோனே தனது புத்தகங்களின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பை செய்தார். வேறு யாரையும் அவர் இந்த விஷயத்தில் நம்புவதாக இல்லை என்பதே நிஜம்.
போகிற போக்கில் பல மொழிகள் அறிந்திருப்பதன் இன்னொரு பயனையும் பார்த்துவிடுவோமே.
ஒரு வீட்டில் இரண்டு குட்டி எலிகள் வசித்து வந்தன. அம்மா எலிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இரண்டும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு கடுவன் பூனை அந்த எலிகளை துரத்த ஆரம்பித்தது.
இரண்டும் உயிரை கையில் பிடித்து ஓடின.
அப்போது அந்தப் பக்கம் வந்த அம்மா எலி ஒரு ஓரமாகப் போய் ஒளிந்துக் கொண்டு "வள், வள்" என்றுக் குலைத்தது.
பூனை நடு நடுங்கிப் போய் "மியாவ்" என்றுக் கத்திக் கொண்டே ஓடி விட்டது.
அம்மா எலி தன் குட்டிகளிடம் வந்து பெருமையுடன் கூறியது:
"அன்னிய மொழியைக் கற்பதனால் என்ன நன்மை என்பதைப் பார்த்தீர்களா?"
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
8 hours ago
12 comments:
ஒரு நன்மை அல்லங்க, பல நன்மை இருக்கு. அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா!
:)))
நன்றி ஐயா , பழமைபேசி சொன்னது போல பல நண்மை இருக்கிறது. எப்படி ஒரு மொழியை கற்பது என்று ஒரு பதிவு இடுங்களேன்
இந்தக் கதை செம க்ளாசிக் டச்சில் இருக்குங்க.
HI
Ya it is very interesting,as Ram told could you please write a topic on How to learn a new language like French or German ? Which language (other than Indian language) to begin with ?
Sudharsan
@ராம்குமார் & சுதர்சன்
பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_22.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
u r very much true
நீங்க பன்மொழி வித்தகரா இருப்பீங்க போல....
சின்ன ஆச்சரியம்ம்... போன வாரம்தான் இதே லைன்ல நானும் ஒரு பதிவு போட்டேன்...
http://thuklak.blogspot.com/2009/03/blog-post_30.html
// RamKumar said...
நன்றி ஐயா , பழமைபேசி சொன்னது போல பல நண்மை இருக்கிறது. எப்படி ஒரு மொழியை கற்பது என்று ஒரு பதிவு இடுங்களேன்
//
Dondu Saar,
I too agree with ramkumar point, also i went thru your link provided, it shows how you learned in 1969. If you could provide some more detail...could be useful
Couple of times i tried learning french using CD, but was not sure whether the way i spell the word is correct or not Eg: Bonjour, madamme, Au Revour etc..
Aani
நான் சமீபத்தில் 1960-61, 1961-62 கல்வியாண்டுககளில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது மற்றும் பதினோராம் வகுப்பில் படித்த காலகட்டத்தில் எனது சக மாணவன் ஒருவன், அவன் பெயர் ரவீந்திர மேனன். வகுப்பின் முதல் மாணவன் அவன். அவன் என்ன செய்வானென்றால் கல்வியாண்டு ஆரம்பத்திலேயே கணக்கு புத்தகத்தில் உள்ள அத்தனை பயிற்சிகளையும் தானே செய்து முடித்து விடுவான். முதல் ஒரு மாதத்திற்குள் முழு புத்தகத்தையும் முடித்து விடுவான். அவன் கணக்கில் நூற்றுக்கு நூறுதான் எப்போதுமே வாங்குவான்.
அவனுடைய முறையைத்தான் நான் எனது ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு வகுப்புகளுக்கு பாவித்தேன். உறுதியான வெற்றியை இது பெற்றுத் தரும். 1969-ஆக இருந்தாலும் சரி 2009-ஆக இருந்தாலும் இதுதான் மாறாத உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கவியரசர் கண்ணதாசனை சாதி மற்றும் மத வெறியர் என்றும் ஒரு கழகக் கண்மணி கண் மன் தெரியாமல் விமர்சித்தது பற்றி உங்கள் கருத்து.
தான் பிறந்த சாதியையும் மதத்தையும் உயர்வாக நினப்பதே பாவம் வெறி என்று பொருள் கொள்வது தாழ்வு மன்ப்பான்மையா ?
பச்சைக்கு எத்தனை தொகுதி கிடைக்கும்
பிரஞ்ச் மற்றும் ஜெர்மனில் நம்ம புதுக் கவிதை மாதிரி வசனங்களையே மடக்கி மட்க்கி எழுதும் கொடுமை உள்ளதா ?
மா.தவராஜன்
//தான் பிறந்த சாதியையும் மதத்தையும் உயர்வாக நினப்பதே பாவம், வெறி என்று பொருள் கொள்வது தாழ்வு மன்ப்பான்மையா?//
அப்படியென்றால் தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கொரு குணமுண்டு என இறும்பூது எய்துவதும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலே வந்தது தமிழினம் என பெருமிதம் கொள்பவர்கள் இன வெறியர்களா?
ஆனால் இன்னொரு சந்தேகம், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழனுக்கு தலைமை தாங்க தகுதி இல்லை எனக் கூறும் கன்னட மொழி பேசுபவரை தலைவனாக சுவீகரித்து புளகாங்கிதம் அடையும் அளவுக்கு நடந்து கொள்ளும் தமிழர்கள் மானம் கெட்டவர்களா?
இப்படியெல்லாம் கேள்வி கேட்டு கொண்டே போகலாம்.
வரிகளை மடக்கி மடக்கி போடுகிறார்களா அல்லது நிஜமாகவே கவிதை எழுதுகிறார்களா ஜெர்மானியர் மற்றும் ஃபிரெஞ்சுக்காரர் என்பதையெல்லாம் கண்டு கொள்ளும் அளவுக்கு எனக்கு கவிதை அறிவு போதாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment