எங்கள் வீட்டின் எதிலிருந்த டெர்மினசிலிருந்து பஸ் கிளம்ப, அதைப் பிடிக்கும் அவசரத்தில் டயரி மற்றும் பேனாவை மறந்து விட்டேன். கிண்டியில் இறங்கி, ஒரு நோட்டு புத்தகமும் பேனாவும் வாங்கி, இன்னொரு பஸ் பிடித்தேன். எனது பஸ் காந்தி சிலைக்கு அருகில் வரும்போது மணி மாலை 5.15 ஆகிவிட்டது. ‘தனது’ காரிலிருந்து ஜ்யோவ்ராம் சுந்தர் இறங்கினார். சந்திப்பு வழமையாக நடக்கும் இடத்தை அடையும்போது ஏற்கனவே கணிசமான அளவில் பதிவர்கள் குழுமியிருந்தனர்.
பேசாமல் எனது நோட்புக்கை பாஸ் செய்து ஒவ்வொருவரையும் தத்தம் பெயர் விவரங்களை அதில் எழுதும்படி கேட்டுக் கொண்டேன்.
வந்தவர்கள் விவரம் பின்வருமாறு:
1. பாலராஜன் கீதா, 2. அகநாழிகை என்னும் பொன் வாசுதேவன், 3. நந்தா, 4. பாலபாரதி, 5. நரேஷ், 6. ச. முத்துவேல், 7. கேபிள் சங்கர், 8. நிசார், 9. சி.எம் கார்த்திகேயன், 10. அதிஷா, 11. டி.வி. ராதாகிர்ஷ்ணன், 12. ஜ்யோவ்ராம் சுந்தர், 13. பெ. ரமேஷ், 14. சிந்தாமணி, 15. லக்கிலுக், 16. நாக. இளங்கோவன், 17. ஜயக்குமார், 18. நர்சிம், 19. ஜோன்சன், 20. பிரபு, 21. ஆசன் அலி, 22. ஷண்முகப்பிரியன், 23. கார்க்கி, 24. தண்டோரா, 25. அக்கினிப்பார்வை, 26. சரவணன், 27. மருத்துவர் ப்ரூனோ, 28. தாமிரா 29. தும்பி, 30. வண்ணத்து பூச்சியார், 31. MayVee, 32. ஜாக்கி சேகர் (நேரடியாக டீக்கடைக்கு வந்து விட்டார் எனக் கேள்விப்பட்டேன்) ஆகியோர்.
காடுவெட்டி குரு ஜெயிதால் நன்றாக இருக்கும் திமுக ஆதரவாளர் பதிவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது. ரூபாய் பத்தாயிரம் கட்டி வேட்பாளராக விண்ணப்பித்த ஒருவர் கடைசியில் கலைஞரிடம் அவரைப் பார்க்கவே வந்ததாகவும், மற்றப்படி தேர்தலில் எல்லாம் நிற்கும் எண்ணம் எல்லாம் இல்லை எனக் கூறி அவருடன் ஃபோட்டோ எடுத்து கொண்டு நடையைக் கட்டியதாகவும், இம்மாதிரி குருட்டுத்தனமாக பக்தர்கள் இருக்கும்வரை திமுகவுக்கு தோல்வி இல்லை என இன்னொரு பதிவர் கூறினார். ஜெயக்குமார் என்பவர் அரசியல் பேச்சை கேட்டு சற்றே விலகி நிற்க நான் அவருடன் பேச்சு கொடுத்தேன். அவர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் செய்து வருவதாக கூறினார். பி.ஏ. வரலாறு அவர் தபால் வழிக்கல்வியி9ல் படித்தாராம். தான் வலைப்பதிவு எல்லாம் போடுவதில்லை எனவும் அவர் வாசகர் மட்டுமே எனவும் கூறினார்.
தமிழக அரசு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச ஹாஸ்டல் வசதியுடன் பயிற்சி அளிப்பதாக கூறினார். நுழைவுத் தேர்வு உண்டு எனவும் தழ்த்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொது வகுப்பினர் என வெவ்வேறு கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் உண்டு என அவர் கூறினார்.
பிரபு என்பவர் தொழில்நுட்பபதிவுகள் போடுவர். அவர் சுதந்திர இலவச மென்பொருள் என்னும் வலைப்பூ பாவிப்பதாகவும் கூறினார். தனது வலைப்பூவில் உள்ள விஷயங்களை தமிழ் கம்ப்யூட்டர் என்னும் பத்திரிகை தன் அனுமதியின்றி சுட்டதாகக் கூற, அவரை நான் பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புமாறு ஆலோசனை கூறினேன்.
பிரபு தீவிர லினக்ஸ் ஆதரவாளர். எனக்கு இரு சி.டி.க்கள் தந்தார். எனது கணினி குரு முகுந்தனிடம் காட்டி விட்டு அவற்றை உபயோகிக்கலாம் என பார்க்கிறேன்.
இதற்குள் பாலபாரதி காந்திச் சிலையருகில் இருந்த தண்ணீரில்லா குளக்கரையிலிருந்து மணலுக்கு செல்லலாம் என ஆலோசனை கூறினார். அவ்வாறே மணலுக்கு சென்றதில் எனக்கு தரையில் உட்காருவதில் சிரமம் ஏற்பட்டது. பேசாமல் எழுந்து நின்று கொண்டேன். பிரபு எல்லோரும் சேர்ந்து பதிவர்கள் தினம் என ஒரு நாளை நிர்ணயித்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். பதிவர்களின் பலமே இம்மாதிரி நிறுவனமயமாக்கத்திலிருந்து விலகி நிற்பதே என நான் கூறினேன்.
சொந்தக் காசு கொடுத்து டொமைன் வாங்கிக் கொள்வதன் உபயோகம் பற்றி லக்கிலுக் பேசினார். அவருடைய வாசகர்கள் வருகை எண்ணிக்கை இரட்டிப்பாகியது எனவும் அவர் கூறினார்.
இதற்குள் இருட்ட ஆரம்பிக்க பதிவர்கள் இயல்பாகவே சிறுசிறு குழுக்களாகப் பிரிந்தனர். நான் சேர்ந்த குழுவில் சினிமா பற்றிய பல விவரங்கள் அலசப்பட்டன. ஆகா பதிவு போடலாம் என எண்ணுவதற்குள், என் முழியைப் பார்த்து இது நல்லதுக்கல்ல என தீர்மானித்த ஒரு பதிவர் எல்லாமே ஆஃப் தி ரிகார்ட் பேச்சுக்கள் எனக் கூறி எனது ஆசைத்தீயை புஸ்ஸென்று அணைத்தார். ராதாகிருஷ்ணனுடன் அவரது நாடகம் பற்றியும் பேசினேன். அவரது “மாண்புமிகு நந்திவர்மன்” நாடக விமரிசனத்தில் நான் எழுதிய ஒரு அனுமானத்தை அவர் உறுதி செய்தார்.
பிறகு லைட் ஹவுஸ் அருகில் இருக்கும் டீகடைக்கு சென்று மேலும் ஒரு மணி நேரம் பேச்சு. மருத்துவர் ப்ரூனோவுடன் பேசும்போது மருத்துவர்கள் விளம்பரம் செய்யத் தடை பற்றி அவர் சில விவரங்கள் சொன்னார். அக்கினிப் பார்வையிடம் எங்கே பிராமணன் மெகா சீரியலில் காட்டப்பட்ட நாடிச்சுவடி பற்றி பேசினேன். அவரும் சம்பந்தப்பட்ட எனது விமரிசனத்தை பார்த்து விட்டு தனது கருத்தை கூறுவதாகச் சொன்னார். கிளம்புவதற்கு சற்று முன்னால் பதிவர் இஸ்மாயில் ஃபோன் செய்தார், பதிவர் சந்திப்பு பற்றி விசாரித்தார்.
பிறகு ஒவ்வொருவராக விடை பெற்று செல்ல, நானும் இரவு 8.30-க்கு கிளம்பினேன். வீட்டுக்கு வந்து பதிவு போட ஆரம்பிக்கும்போது மணி 10.10.
பல குழுக்களாகப் பிரிந்ததால் எனது இந்த கவரேஜ் முழுமையானதல்ல. மற்றப் பதிவர்களும் தத்தம் தரப்பிலிருந்து பதிவுகள் போடுமாறு கேட்டு கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
17 comments:
நல்ல பதிவர் சந்திப்பாக இருந்ததாக நினைக்கின்றேன்.... மகிழ்ச்சி
சார் ஒரு அரை மணி முன்னமே இருந்து உங்க பதிவை திறந்து திறந்து ஏமாந்தேன்! இந்த தடவை கொஞ்சம் நீங்க லேட்டோ அல்லது நான் தான் ஆர்வ கோளாறோ????
சூப்பர்!
எனது பஸ் காந்தி சிலைக்கு அருகில் வரும்போது மணி மாலை 5.15 ஆகிவிட்டது. //
வழக்கமான கார் என்னாச்சு??? ரெசிஷனா??
:)
சுடச்சுட பதிவிற்கு நன்றி சார்.
என் பேரை விட்டுடிங்க..
பதிவிற்கு நன்றி.
நன்றி சார்.
அடடா, மீ த செகண்ட் ஆ !!!,
ராகவன் ஸார், உங்களின் அதிவேக பதிவிற்க்கு மிக்க நன்றி. இன்னும் கொஞ்சம் விஷயத்தோட இறைவன் நாடினால் பிறகு வருகின்றேன்.
சுடச் சுட பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள்.
மிக்க நன்றி.
நானும் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன் நீங்கள் நோட் புக்ல முகவரி வாங்கிய விபரம் எனக்கு தெரியாது, என்னை நான் அறிமுகம் செய்தேன் ஆனால் நீங்கள் அதனை பொருட்படுத்தவில்லை என நினைக்கிறேன்
@அபி அப்பா: வீடு வந்து சேரவே நேரம் ஆகிவிட்டதே, ஆகவே பதிவும் சற்று தாமதம்.
@வண்ணத்து பூச்சீயார் மற்றும் தும்பி: பெயரை இப்போது சேர்த்து விட்டேன். விட்டு போனதற்கு மன்னிக்கவும்.
@எம்.எம். அப்துல்லா: இப்போதெல்லாம் டனியாக வந்தால் பஸ்தான். அப்போதுதான் சென்னையின் முழு அனுபவமும் பெற முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
naanum vanthenunga...
ana en peyarai kanavillai...
nalla irukkanga padivu
@MayVee
உங்கள் பெயரையும் சேர்த்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார் நீங்கள் வாகனம் கொண்டு வராதது தெரிந்திருந்தால் நான் உங்களை டிராப் செய்திருப்பேன்...நன்றி
//ஈ.வே.ரா.வை பாதித்தவர்கள் பிராமணர்கள், ஈ.வே.ரா.வால் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்.//
http://www.tamilhindu.com/2009/04/subbu-column-19/
பிராமணர்கள் ஏன் வெறுக்க படுகிறார்கள்?
பொய் பிரச்சரம் மட்டும் தான் காரணமா ?
//
சொந்தக் காசு கொடுத்து டொமைன் வாங்கிக் கொள்வதன் உபயோகம் பற்றி லக்கிலுக் பேசினார். அவருடைய வாசகர்கள் வருகை எண்ணிக்கை இரட்டிப்பாகியது எனவும் அவர் கூறினார்.
//
இதற்கு என்ன செய்யவேண்டும். எவ்வளவு செலவாகும் என்று விசாரித்துச் சொல்ல முடியுமா?
சார், நானும் வந்தேன்.
சார்! நானும் வரணும்னு நெனச்சேன்!
நன்றி சார்.
Post a Comment