சாதாரணமாக எடுத்து செல்லும் நோட்புக்கை மறந்ததால் போகும் வழியில் இருந்த உறவினர் வீட்டில் இறங்கி ஒரு நோட்புக் அங்கிருந்து எடுத்து கொண்டு பதிவர் சந்திப்பு நடக்கும் காந்திசிலைக்கு விரைந்தேன். எனது கார் அவ்விடத்தை அடையும் போது கிட்டத்தட்ட ஆறு மணி ஆகிவிட்டது.
மெரினா பீச்சில் உள்ள செர்வீஸ் ரோடை பிடித்து காந்தி சிலைக்கருகில் வர நினைத்தால் போலிசார் விடவில்லை. முந்தைய சிலைக்கருகிலேயே நிறுத்தி விட்டனர். அங்கிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் நடை. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இன்னொரு காரில் வந்து இறங்கிய பதிவர் சிவஞானம்ஜி அவர்கள் பாடுத்தான் திண்டாட்டம் ஆயிற்று. இவ்வளவு தூரம் தான் நடந்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது என கூறினார். மனிதர் சமீபத்தில்தான் ஆசுபத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கிறார். மெதுவாக அவர் கையை பிடித்து மீட்டிங் நடக்கும் இடத்துக்கு அழைத்து வந்தேன்.
சந்திப்பு ஏற்கனவேயே களை கட்டியிருந்தது. போன முறை செய்தது போல இம்முறையும் எனது நோட்புக்கை பாஸ் செய்து எல்லோரையும் அவரவர் பெயரை எழுதும்படி கேட்டு கொண்டேன்.
நோட்புக்கிலிருந்து பார்த்த பெயர்கள்: 1. கேபிள் சங்கர்; 2. காவேரி கணேஷ்; 3. மருத்துவர் ப்ரூனோ; 4. ஹசன் ராஜா (ஏற்கனவேயே பதிவர் சந்திப்பு பற்றி பதிவிட்டு விட்டார்); 5. இராமகி ஐயா; 6. நர்சிம்; 7. அக்னி பார்வை; 8. தமிழ் குரல்; 9. ஜாக்கி சேகர்; 10. செல்வமுத்து குப்புசாமி;
11. எஸ். பாலபாரதி; 12. சிவஞானம்ஜி; 13. வால்பையன்; 14. ரௌத்ரன்; 15. வினோத் (கார்க்கியின் நண்பர்); 16. கார்க்கி 17. ஆசிஃப் மீரான் (முக்கிய விருந்தினர்); 18. தண்டோரா; 19. பைத்தியக்காரன்; 20. ஜ்யோவ்ராம் சுந்தர்; 21. ரமேஷ் வைத்யா; 22. லக்கிலுக்; 23. செல்வேந்திரன்; 24. ஊர்சுற்றி (பேனாவை ஒரு தினுசாக பிடித்து எழுதினார். என்னவென்று கேட்டதற்கு, சிறுவயதில் நண்பனது செயலை நகலெடுத்ததே காரணம் என கூறினார். பை தி வே அவரது சுட்டி சரியானதுதானா என்பதை அவர் உறுதி செய்தால் நலம்); 25. அதிஷா 26. ஸ்ரீவத்சன் (ஸ்ரீ); 27. இளவஞ்சி; 28. நிசார்; 29. புதுகை அப்துல்லா; 30. கே. மாணிக்கராஜா; 31. வெய்யிலான்; 32. தேவராஜன் (வெய்யிலானின் நண்பர்); 33. தாமிரா (ஆதிமூல கிருஷ்ணன்); 34. ஆனந்தகுமார்;
யாராவது விட்டுப்போயிருந்தால் பின்னூட்டமிடவும், பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.
எல்லோரும் வழமைபோல சுய அறிமுகம் செய்து கொண்டோம். “இப்போது மொக்கையை ஆரம்பியுங்கள்” என பாலபாரதி கூறினார்.
பீச் மணலுக்கு நல்லவேளையாக கூட்டம் இடம் பெயரவில்லை. சிவஞானம்ஜியும் நானும் டி.பி.ஆர். ஜோசஃபை பார்த்து ரொம்ப நாளாயிற்று எனப் பேசிக்கொண்டோம். ஜாக்கி சேகரிடம் காசி தியேட்டரின் ஓனர் பற்றி விசாரித்தேன். பதிவர் பட்டறை தேவைதானா என ஊர்சுற்றி பாலபாரதியை கேட்டு வைக்க, மனிதர் அதன் அவசியத்தை விலாவாரியாக விளக்கினார். அவர் மேலும் பேசுகையில் முரசு அஞ்சல் என்பது கீமேன் என்னும் வெளி நாட்டு கம்பெனியின் சப்போர்ட்டுடன் இயங்குகிறது என்றும், அதிக காசு செலவழிகிறது என்றும் கூறினார். அந்த வகையில் NHM ம் சரி அழகி மென்பொருளும் சரி உள்ளூர் தயாரிப்பு என்ற தகவலையும் அவர் தந்தார்.
காவேரி கணேஷ் என்பவர் தான் சைனாவுக்கு வணிகத்தை விஸ்தரிக்க உத்தேசித்திருப்பதை கூற, இம்மாதிரி விஷயங்களில் சுகுராக செயல்படும் நான் ஜெர்மன், ஃபிரெஞ்ச் மொழித் தேவைகளுக்காக எனது கார்டை ப்ராம்ப்டாக கொடுத்தேன். சீன மொழிபெயர்ப்பாளர் பற்றி பேச்சு வரும்போது எங்கள் பேச்சு மா. சிவகுமார் பற்றி திரும்பியது. எதற்கும் எந்த சீன மொழி என்பதையும் (கேண்டனீஸ் அல்லது மேண்டரீன்) நிச்சயப்படுத்தி கொள்ளுமாறு ஆலோசனை தந்தேன்.
அக்னிபார்வையின் பின்னூட்டத்தைப் பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது. ஒரு பதிவருடன் எங்கே பிராமணன் சீரியல் பற்றி பேசினேன். அவர் பெயர் மறந்துவிட்டது. ஒரே மெலோட்ராமாவகப் போகும் மெகாசீரியல்கள் மத்தியில் இம்மாதிரி ஒரு புது காற்றுபோல வந்துள்ள இந்த சீரியல் பற்றி அவரிடம் சில தகவல்கள் தந்தேன். நேற்றைய (24.04.2009) ஹிந்து பத்திரிகையிலும் இந்த சீரியல் பற்றி ஒரு முழுபக்க கட்டுரை வந்துள்ளது பற்றி அவருக்கு எடுத்துரைத்தேன். ஒவ்வொரு எபிசோடிலும் சோவும் அவர் நண்பரும் வருவது மிகவும் புதுமையாக இருக்கிறது என அவர் சொன்னார். ஆனால் இதை அவர் ஏற்கனவேயே சமீபத்தில் 1972-ல் நான் பம்பாயில் வைத்து பார்த்த “சரஸ்வதியின் சபதம்” நாடகத்தில் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினேன். (பை தி வே அவ்வாறு என்னுடன் டிஸ்கஸ் செய்தது தானே என நண்பர் ஹஸன் ராஜா கூறியுள்ளார். நினைவுபடுத்தியதுக்கு நன்றி).
தமிழ்க்குரல் என்னும் பெயரில் அறிமுகமான நண்பர் ஈழத்தமிழர்களது துயரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அது பற்றி பேசிக்கொண்டிருந்தவர் திடீரென பார்ப்பனர்கள் ஈழத்தமிழ் நலத்திற்கு எதிரானவர்கள் என ஒரு ஒட்டுமொத்த ஸ்டேட்மெண்டை விட, நீங்கள் எதிர்ப்பார்த்ததுதான் நடந்தது. டோண்டு ராகவன் வீறுகொண்டெழுந்தான். நல்லவேளையாக வால்பையன் சரியான சமயத்தில் உள்ளே புகுந்து சமாளித்தார்.
இருட்டு பரவியதால் எல்லோரும் கலங்கரைவிளக்கத்தை தாண்டி இருக்கும் ஆஸ்தான டீக்கடைக்கு சென்றோம். ஜேஜே என கல்யாணக்கூடமாக இருந்தது. தமிழ்க்குரல் யாரும் ஓட்டுபோடாமல் இருப்பதே நலம் என அபிப்பிராயப்பட்டார். கருணாநிதி, விஜயகாந்த், ஜெயலலிதா ஆகிய யாவருமே அவருக்கு சரிப்படவில்லை. ரொம்பவுமே டென்ஷன் ஆன தமிழ்க்குரலை டைவர்ட் செய்யும் நல்ல எண்ணத்தில் இஸ்ரேல் பற்றி அவர் கருத்தை கேட்க, பக்கத்திலிருந்த வேறொரு பதிவர் ஓடத் தயாரானார். நல்லவேளையாக இஸ்ரேல் பற்றி தனக்கு ஒரு கருத்தும் இல்லை என கூறிவிட்டு தமிழ்குரல் எஸ்ஸானார். இஸ்ரேலுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. ஆக, டோண்டு ராகவனுக்கு இஸ்ரேல் புகழ் பாடும் ஒரு சான்ஸ் போயிற்று.
இதற்குள் மணி எட்டுக்கு மேல் ஆகிவிட, எனது கார் டிரைவருக்கு ஃபோன் செய்து வண்டியை கொண்டுவரச்சொன்னேன். போகும் வழியில் சூர்யாவில் கறிகாய் வாங்கி சென்றேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
17 hours ago
27 comments:
23 தேதி லீவு கொடுத்து, இன்னைக்கு(25 தேதி ) ஆபிஸ் வச்சிட்டாங்க. உங்கள எல்லாரையும் சந்திக்க முடியாம போச்சு... பல விஷயங்கள் பேசியிருப்பீங்க நினைச்சேன் :(
ஆயிரம் சொல்லுங்க உங்க டெடிக்கேஷன் யாராலயும் அடிச்சிக்க முடியாது,இந்த வயதிலியும் அந்த வேகம் , சின்ன அலட்சியம் கூட இல்லாததனம்
வாழ்த்துக்கள்
அன்புடன்/ஜாக்கிசேகர்
இன்று நடண்ட்ஹ பதிவர் சந்திப்பில் ஒரு சின்ன வருத்தம், உங்களிடம் எங்கே பிரமனன பற்றி பேசலாம் என் நினைத்தேன், எப்படியோ மிஸ்ஸாகிவிட்டது....
அடுத்த முறை சந்திக்கும் பொழுது விரிவாக பேசுவோம்...
@குகன் & ஜாக்கிசேகர்
முடிந்தவரை எல்லோருக்கும் சுட்டி கொடுக்க எண்ணினேன். கூகளில் பெயர்களை யூனிகோட் தமிழில் அடித்து தேடினால் சுலபமாக சுட்டிகள் கிடைக்கின்றன. அப்படியும் சிலரது சுட்டி கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் அதைத் தந்தால் சேர்த்து விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாம் வீட்டிற்கு சென்று சேரும் போது டோண்டு சார் பதிவு எழுதியிருப்பார் என்று பேசிக்கொண்டு தான் வந்தோம்
நினைத்தது சரிதான்
என்னைப் போல் எங்கோ இருந்து கொண்டு (நிறைய பேர் படிக்காத பதிவை எழிதிக் கொண்டு) இது போல் பதிவர்கள் சந்திப்பை படித்து மகிழ ஒரு வாய்ப்பு.இதில் எனக்கு மிகவும் பிடித்தது,எல்லோருக்கும் இருக்கும் தனித் தன்மை விடுபடாமல் கூடிப் பேசி மகிழ்வது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.உங்கள் எங்கே பிராமணன் தொடர் படிக்கிறேன். நன்றாக உள்ளது.தொடரட்டும் பணி.நான் துக்ளக்கில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன்.மலரும் நினைவுகள்.
நன்றி
பாஸ்கர்
thanks for sharing,your post is like live coverage.
அன்புள்ள ஐயா!
பதிவர் கூட்டம் பற்றி நீங்கள் எழுதுவது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் மும்பையில் உள்ளோமே என்று ஒரு வித ஏக்கம் உள்ளது. முக்கியமாக, உங்களைப் போன்ற அனுபவஸ்தர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. அவற்றை மிஸ் செய்கிறோமே என்று வருத்தமாக கூட உள்ளது.
மேலும் பல பதிவர் சந்திப்புகளை நடத்த வாழ்த்துக்கள்.
நன்றி.
உங்கள் பதிவை இன்று எதேeச்சையாக பார்க்கிறேன். ஞாநி பங்கு கொண்ட கிழக்கு பதிப்பக மொட்டைமாடிம்கூuட்டத்தில் நான் உங்களை ச்ந்தித்திருக்கிறேeன்...அதியமான்தான் அறிமுகப்படுத்தி வைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிவர் சந்திப்பு என்று ஒன்று நடந்ததா !! சென்னையிலா ?
ஏதேனும் வலைப்பதிவர் சந்திப்பு நடந்தால் அதை தெரிந்துகொள்வது எப்படி ?
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
//நோட்புக்கை மறந்ததால் போகும் வழியில் இருந்த உறவினர் வீட்டில் இறங்கி ஒரு நோட்புக் அங்கிருந்து எடுத்து கொண்டு //
உங்களால மட்டும் தான் ப்ளைட்ட எல்லா பக்கமும் இறங்கி ஏத்த முடியுது
//முந்தைய சிலைக்கருகிலேயே நிறுத்தி விட்டனர். அங்கிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் நடை. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. //
ஆமாம், பிரச்சனை எதிரில் வந்தவர்களுக்கு தான்!
//காவேரி கணேஷ் என்பவர் தான் சைனாவுக்கு வணிகத்தை விஸ்தரிக்க உத்தேசித்திருப்பதை கூற, இம்மாதிரி விஷயங்களில் சுகுராக செயல்படும் நான் ஜெர்மன், ஃபிரெஞ்ச் மொழித் தேவைகளுக்காக எனது கார்டை ப்ராம்ப்டாக கொடுத்தேன்//
இது புத்திசாலிஹனமாக நீங்கள் நினைத்து கொண்டாலும், உண்மையில் புத்திஆலிதனம் நீங்கள் சைனீஷ் கற்று கொள்வதே!
(அவரு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுகுள்ள பிரெஞ்ச் போயிட்டாரு)
//பார்ப்பனர்கள் ஈழத்தமிழ் நலத்திற்கு எதிரானவர்கள் என ஒரு ஒட்டுமொத்த ஸ்டேட்மெண்டை விட, நீங்கள் எதிர்ப்பார்த்ததுதான் நடந்தது. டோண்டு ராகவன் வீறுகொண்டெழுந்தான். நல்லவேளையாக வால்பையன் சரியான சமயத்தில் உள்ளே புகுந்து சமாளித்தார்.//
பார்பனரல்லாத பலரும் இந்த விசயத்தில் எனக்கென்ன வந்தது என்று தான் இருக்கிறார்கள்! அவர் ஒட்டு மொத்தமாக பார்பனர்கள் எல்லோரும் என்று சொல்லவும் எனக்கு எனக்கு கோபம் வந்தது!
என்னை பொறுத்தவரை பார்பனர்கள் பிறப்பாலே பெரிய புத்திசாலிகளெல்லாம் இல்லை, அவர்களும் என்னை போல சக மனிதர்கள், தேவையில்லாமல் தூக்கி தூக்கி பார்பனர்களுக்கு கிளை முளைத்துவிட்டது,
கண்டுக்காம விட்டா பார்பனர்கள் நான் பாப்பான் நான் பாப்பான்னு தனியா தான் கூவிகிடே இருக்கனும்,
சாதி ஒழிய பாடுபடும்
வால்பையன்
//(அவரு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுகுள்ள பிரெஞ்ச் போயிட்டாரு)//
இல்லை, தவறு. ஏற்கனவே ஐரோப்பாவுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. சீனாதான் புது முயற்சி.
மற்றப்படி நான் சீன மொழி கற்று மொழி பெயர்ப்பு செய்ய தேவையான உந்துதல் இல்லை, ஏனெனில் என் கைவசம் உள்ள 6 மொழிகளின் காம்பினேஷன்களிலேயே வேண வேலைகள் உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த வயதிலியும் அந்த வேகம் , சின்ன அலட்சியம் கூட இல்லாததனம்//
அச்சச்சோ, எனக்கு வயது 26 தானே!
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கண்டுக்காம விட்டா பார்பனர்கள் நான் பாப்பான் நான் பாப்பான்னு தனியா தான் கூவிகிடே இருக்கனும்,//
அதைத்தான் நானும் சொல்லறேன். ஆனா என்ன நடக்குதுன்னா, கண்டுக்கிட்டே இருந்து நீ பாப்பான்னு கரிச்சு கொட்ட்டறாங்க. அப்போல்லாம் ஆமாண்டா ஜாட்டான் அதுக்கென்ன இப்போன்னுதான் இந்த பாப்பான் கேட்டான், கேக்கறான், கேட்பான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,,எங்கெ ப்ராமணன் பற்றி விவாதித்தது நாந்தான்...
விரைந்து பதிவிட்டவன்,
ஹஸன் ராஜா.
நாடாருக்கும் தேவருக்கும் ஆகாது...வன்னியருக்கும்,தலித்துக்கும் ஆகாது..தூத்துக்குடி,நெல்லை,கமூதி,இராமனாதபுரம் ஆகிய இடங்களில் நடந்த ஜாதி கலவரங்களில் பார்ப்பானின் பங்கு இருக்கிறதா?அல்லது ஜாதி கலவரம் பார்ப்பனரால் மூட்டி விடபட்டிருக்கிறதா?ஆரியன்.கைபர் போலன் என்பதெல்லாம் புனைவுதான் என்று நிருப்பிக்கபட்டிருக்கிறது.
கன்னடம் தெலுங்கு இவற்றை தாய்மொழியாய் கொண்டவர்கள் எதுகை மோனை நடையில் உணர்ச்சியை எழுப்பும் வண்ணம் தமிழில் பிதற்றிதயால் தமிழனானார்கள்..கேட்டு விட்டு கைதட்டிய கூட்டம் மடையனானார்கள்...
இன்றும் இரட்டை டம்ளர் முறை உள்ள கிராமங்களில் அங்கிருக்கும் ஆதிக்க ஜாதியினரை ...(திருப்பி அடிக்கமாட்டான் (அது விவேகம்)என்ற ஒரே காரணத்திற்காக பார்ப்பானை இகழும்) இந்த வாய் சொல் வீரர்கள் தட்டி கேட்பார்களா?
டோண்டு சார்,
ஊர் சுற்றி...இணைப்பு தவறாக இருக்கிறது. ஊர் சுற்றி இதுதான் சரியான பதிவு. மாத்திடுங்களேன். நம்ம பதிவுக்கும் இரண்டு மூணுபேராவது வரட்டும். :))
@ஊர்சுற்றி
சுட்டியை சரி செய்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் வந்திருந்தாலும் பதிவர் சந்திப்புன்னாலே உங்கள் ரிப்போர்ட்டை படித்தால்தான் முழு திருப்தி வருது..நன்றி ராகவன்..!
உங்க பதிவுர் சந்திப்பு நல்லா இருந்தது அதை நான் மிஸ் செய்து விட்டேன் நான் அப்போது திருச்சி, எரகுடி, சேலம் என்று பயணத்தில் இருந்தேன்...
அக்னிப்பார்வையில் படித்தேன் பதிவர் சந்திப்பு பற்றி,நீங்களும் அழகாய் அதற்க்கு வந்தது முதல் சில விஷியங்களை பகிர்ந்து கொண்டிர்கள்
நன்றி நன்பா
அந்த பின்னூட்டம் அக்னிபார்வையிக்கு அனுப்பியது தவறாக உங்கள் பதிவுக்கு வந்து விட்டது... மண்ணிக்கவும்
இனி தொடர்ந்து வருகிறேன் உங்கள் பதிவுக்கு...
//நேற்றைய (24.04.2009) ஹிந்து பத்திரிகையிலும் இந்த சீரியல் பற்றி ஒரு முழுபக்க கட்டுரை வந்துள்ளது//
இந்த கட்டுரைக்கான லிங்க் தர முடியுமா?
சுவாரசியமாக இருக்கு
இலங்கைபதிவர்கள் இங்கு வரும்போது உங்களடன் ஒரு மீட்டிங் ஜோதில ஐக்யமாகலாமா?
உங்கள் பதிவின் மூலம் கூட்டத்துக்கு வந்திருந்த அனைவரின் பெயர்களையும் தெரிந்து கொண்டேன்.
@ராஜ சுப்ரமண்யம்
இங்கே பார்க்கவும் http://www.hindu.com/fr/2009/04/24/stories/2009042450530200.htm
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment