நண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய இந்த செய்தியை வைத்து எனது ஆங்கில வலைப்பூவில் ஒரு இடுகை இட்டேன். அவருக்கு என் நன்றி. இப்போது அதையே தமிழிலும் இடுவேன். செய்தி கீழே தடித்த சாய்வெழுத்துக்களில் தரப்பட்டுள்ளது. பிறகு வழக்க்ம் போல டோண்டு ராகவன் பேசுவான்.
நடிகர் எஸ்.வி.சேகர் தென்சென்னை மயிலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்.
தொகுதியில் அவர் விரிவாக செயல்பட்டு வருகிறார். தனது மொபைல் நம்பரை எல்லோரிடமும் தந்துள்ளார். அணுக எளியவர்.
சமீபத்தில் தான் கட்சியிலிருந்து ராஜினாமா செய்யப் போவதாக அவர் அறிவித்து சலசலப்பை உண்டாக்கினார். முதல்வர் கருணாநிதி அவர்களிடம் பார்ப்பனர்களுக்கு 7 சத விகிதம் இட ஒதுக்கீடு வேறு கேட்டுள்ளார்.
ரீடிஃப் காம்-ன் ஷோபா வாரியருடன் நடந்த நேர்காணலில் அவர் தான் அதிமுகவை விட்டு விலகும் காரணங்கள் பற்றி பேசியுள்ளார்.
கேள்வி: மத்தியில் பாராளுமன்ற தேர்தல் வரும் இன்னேரத்தில் உங்களது இந்த ராஜினாமா அறிக்கை ஏன்?
பதில்: இந்த முடிவை நேரமெல்லாம் பார்த்து நான் அறிவிக்கவில்லை. சில காலமாகவே என்னை கட்சி உறுப்பினர்கள் தவிர்த்து வந்துள்ளனர். பொறுத்தது போதும் என்னும் முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன். கட்சித் தலைவியிடமிருந்து எனக்கு ஆதரவு ஏதும் இல்லாத நிலைதான் முக்கியக் காரணம். இக்கட்சியில் ஜெயின் ஆதரவு இருந்தால் எல்லோரும் உங்களுடன் நட்பாக இருப்பார்கள். இல்லாவிட்டால் சங்குதான்.
கேள்வி: உங்களை எளிதாக அணுக முடிவதால் தொகுதி மக்கள் உங்களை விரும்புகின்ற்னர். உங்கள் தலைவிக்கு உங்கள் வேலையில் திருப்தி இல்லையா?
பதில்: அதெல்லாம் இங்கே கணக்கிலேயே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அடிமை விசுவாசம்தான் இங்கு ஏற்புடையது. அதே சமயம், நான் ஜெயலலிதாவை தலைவியாக ஏற்றுக் கொண்டதும் உண்மைதான்.
கேள்வி: உங்கள் இந்த முடிவு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் தூண்டப்பட்டதா?
பதில்: அப்படி என்று ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடவியலாது. பல தொடர் நிகழ்வுகள் நடந்தன. அதிமுகவில் நான் சேர்ந்தபோது நான் கேட்காமலேயே கட்சி எனக்கு தேர்தல் டிக்கெட் அளித்தது. அதற்கான செலவையும் கட்சி செய்தது. உண்மை கூறப்போனால் நான் அடிப்படையில் பாஜகவின் தீவிர ஆதரவாளன்.
கேள்வி: அப்படி என்றால் அங்கு போய் சேர்ந்திருக்கலாமே?
பதில்: இரு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். எனக்கு ஜெயலலிதவைத் தெரியும் அவருக்கும் என்னைத் தெரியும். ஆனால் பாஜகவின் மத்தியத் தலைவர்கள் வாஜ்பேயிக்கோ அல்லது அத்வானிக்கோ என்னைத் தெரியாது. தமிழக பாஜக தலைவர்கள்தான் எனக்குத் தெரியும்.
அதிமுக நல்ல கட்சிதான். ஆனால் அதன் மனப்பாங்கிற்கு நான் சரிப்பட்டு வரவில்லை. எனது பாப்புலாரிட்டியை கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என நினைத்தேன். ஆனால் கட்சியோ என்னை கட்சியின் அடையாளத்திலேயே கரையச் சொன்னது. அது என்னால் இயலாத காரியம் ஆயிற்று.
கேள்வி: அப்படி செய்யும்படி கட்சியிலிருந்து யாராவது உங்களிடம் கூறினார்களா?
பதில்: நான் கட்சிக்கும் அதன் தலைவிக்கும் விசுவாசமானவன். அதற்கு மேல் எனக்கு சீன் எல்லாம் காட்டத் தெரியாது. சொல்லப்போனால் நான் முழு அரசியல்வாதி என்றுகூட சொல்லிக் கொள்ள முடியாது. பல சமூக சேவைகள் நான் ஏற்கனவே செய்து வந்தவன் என்பதால் அவ்வாறு செயல்பட மேலும் உதவியாக இருக்கும் என எண்ணி அரசியலில் சேர்ந்தேன். தானம் செய்ய ஒரு ட்ரஸ்ட் நடத்தி வருகிறேன். ஆண்டுதோறும் இந்த விஷயமாக ஆண்டுக்கு 5-6 லட்சம் ரூபாய்கள் செலவாகின்றன. அனாதைப் பிணங்களை புதைக்கும் வேலைகளையும் செய்து வருகிறேன். ரெகுலராக ரத்ததானம் செய்கிறேன். ஆக தொழில்முறை அரசியல்வாதி நான் இல்லை என்பதே நிஜம்.
தலைவியின் கால்களில் விழும் பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. அவரும் என்னிடம் அதை எதிர்ப்பார்க்கவில்லை. என் மகளது திருமணத்து வருமாறு அவருக்கு அழைப்பு வைத்தேன். அதே போல எனது மகனின் முதல் படத்துக்கான பூஜைக்கும் அழைத்தேன். எதற்குமே அவர் வரவில்லைதான். ஆனால் இவையெல்லாம் தனிப்பட்ட விஷயங்கள்.
என் சகோதரனின் மனைவி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அந்த தோரணையில் அவர் முதன் மந்திரி கருணாநிதியை தந்து மகன் திருமணத்துக்கு அழைத்திருந்தார். வீட்டுக்கு பெரியவன் என்னும் முறையில் நான் அவரை மரியாதையுடன் வரவேற்றேன். இதுதான் பெரிய குற்றமென கூறப்பட்டது.
கேள்வி: ஜயலலிதாவுக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது?
பதில்: இந்த மாதிரி போட்டு கொடுக்கவென்றே ஒரு பெரிய குழுவே செயல்படுகிறது. 2006-ஆம் ஆண்டில் சர்வதேச திரைப்பட விழா கமிட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். அதற்கு வருமாறு தயாநிதி மாறனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் அவரும் ஒரே மேடையில் இருந்தது குற்றமாக பாவிக்கப்பட்டு, தலைவி எனது 5000-மாவது காட்சிக்கு வருகை தர மறுத்து விட்டார். இத்தனைக்கும் இவர் வரப்போவதை வேறு நான் ஏற்கனவே எல்லோருக்கும் கூறியிருந்தேன். அதே நாளில் நான் காட்சியின் வரிசை எண்ணை 5007 என மாற்றிவிட்டு நடத்தினேன்.
கட்சியில் தண்டனை இம்மாதிரித்தான் இருக்கும். என்னால் முழுமையாக கட்சியிடம் சரணடைய முடியாது. அதிமுகதான் எனது வாழ்க்கை என சொல்லிக்கொள்ள முடியாது. என் வாழ்வில் வேறு பல முக்கிய விஷயங்களும் உண்டு. எதிர்க்கட்சிக்காரர்களை சந்திப்பதே ப்ரிய குற்றம் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள இயலாது.
கேள்வி: உங்களை கூப்பிட்டு விளக்கம் கேட்கப்பட்டதா?
பதில்: இல்லை, கூப்பிடவில்லை. அவர்கள் செய்வது எல்லாம் உங்களை அலட்சியம் செய்வதே. இது 2006-லிருந்தே முழுமையாக நடக்கிறது
கேள்வி: தமிழக அரசியல்வாதிகளுக்கு முதிர்ச்சி இல்லை என நினைக்கிறீர்களா?
பதில்: சேச்சே, முதிர்ச்சியில்லை என்று சொல்லும் பட்சத்தில் ஏதோ குறைந்த அளவில் அது இருப்பதாகக்கூட பொருள் வரலாம். ஆகவே அப்படிக்கூட சொல்ல முடியாது. கட்சி வேறாக இருக்கலாம், கருத்துகள் மாறுபடலாம். அதற்காக மாற்று கருத்து உடையவர்கள் உங்கள் விரோதி அல்ல. அத்வானி மற்றும் சோனியா அருகருகே நின்று காமிராவுக்கு போஸ் தருவார்கள். அம்மாதிரி நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்காது.
கேள்வி: இப்போது பாஜகவில் சேரும் திட்டம் உண்டா?
பதில்: எஸ்.வி. சேகரை எந்த கட்சி ஏற்கும் என நினைக்கிறீர்கள்? ஆகவே நன்கு யோசித்துத்தான் ஒரு முடிவுக்கு வரவியலும். இனிமேல் சேரும் கட்சியில் நிரந்தரமாக இருக்க வேண்டும். உள்ளூரில் மட்டும் இருக்க விரும்பவில்லை. தில்லிக்கும் செல்ல வேண்டும்.
கேள்வி: அதிமுகவிலிருந்து விலகப் போகிறீர்களா?
பதில்: நிச்சயமாக. இப்போது முதல்வரிடம் பார்ப்பனர்களுக்கு 7 % இட ஒதுக்கீடு கேட்டு மனு தருவேன். (அதை அவர் மார்ச் 30-ஆம் தேதி தந்துவிட்டார்). அரசு ஒரு குழு அமைத்தவுடன் மயிலை சட்டமன்ற் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன். இடை தேர்தலில் சாதாரணமாக ஆளும் கட்சிதான் ஜெயிக்கும்.
கேள்வி: பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என ஏன் நினைக்கிறீர்கள்?
பதில்: ஏன் தரக்கூடாது? தமிழகத்தில் 69 சதவிகித மக்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. முற்பட்ட வகுப்பினரை தவிர்த்து 95 சதவிகித மக்களுக்கு ஏதேனும் ஒரு வகை இட ஒதுக்கீடு இருக்கிறது. இது என்ன நியாயம்? தமிழகத்தில் 40 லட்சம் பார்ப்பனர்கள் உண்டு. aரசு எல்லோருக்கும் சமமான அளவில் வாய்ப்புகள் தர வேண்டும். பல வழிகளில் பார்ப்பனரை நீக்கம் செய்து, அவமானப்படுத்தி ஓரம் கட்டுகின்றனர். 50-60 ஆண்டுகள் முன்னதாக நடந்த விஷயங்களுக்கெல்லாம் தண்டனை தந்து கொண்டிருக்கவியலாது.
கேள்வி: ராஜினாமா செய்வது பற்றி ஊடகங்களுடன் நீங்கள் இப்போது பேசிவரும் நிலையில் கட்சித் தலைவியிடமிருந்து ஏதேனும் எதிர்வினை?
பதில்: உங்களுக்கு அதிமுக பற்ரி தெரிந்தது அவ்வளவுதான். உங்களை அலட்சியம் செய்ய ஆரம்பித்தவுடன் நீங்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு கவலையில்லை.
சாதாரணமாக ஏதேனும் வழக்கு தங்களுக்கு எதிராக பதிவு செய்தால்தான் கட்சி மாறுவதெல்லாம் நடக்கும். என் மேல் ஒரு வழக்கு கூட கிடையாது - சைக்கிளில் டபிள்ஸ் போனதற்காகக் கூட என் மேல் குற்றப்பத்திரிகை இல்லை. கட்சி உறுப்பினர் என்ற பந்தாவில் நான் எந்த போக்குவரத்து விதைகளையும் மீறவில்லை. நான் முழுமையாக சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவன்.
விலக் தீர்மானித்ததும் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்புவேன். எனது முடிவு பற்றி எஸ்.எம்.எஸ் வாக்கெடுப்பு நடத்துவேன். எனக்கு ஓட்டு அளித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு எனது கடமை உண்டு. அவர்களுக்கு விஷயத்தை விளக்க பொது மீட்டிங் போடுவேன். அதில் எனது தன்னிலை விளக்கம் அளிப்பேன். இனிமேல் என்ன செய்யவிருக்கிறேன் என்பதையும் கூறுவேன்.
இப்போது மீண்டும் டோண்டு ராகவன். சேகர் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். தாமதமாக எடுத்த முடிவுதான், ஆனால் சரியான முடிவு. இவரைப் பற்றி நான் ஏற்கனவேயே இட்ட இடுகை பலே எஸ்.வி. சேகர் இதோ.
திராவிடக் கலாச்சாரத்தின்படி ஜயலலிதா, கருணாநிதி போன்ற ‘தலைவர்கள்’ காலில் எல்லாம் போய் இவர் விழவில்லை என்பதே பெரிய ஆறுதல் அளிக்கும் விஷயம்தான். தனது கௌரவத்தை விட்டுத் தரவில்லை. அந்த அளவில் அவர் தமிழகத்தின் சராசரி அக்மார்க் அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபடுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டு கேட்பது என்பது வேண்டாத வேலை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அள்ளிப்பற்றும் சுடர்
-
அன்புள்ள ஜெ, நான் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது
நீங்கள் கோவிட் தொற்று காலகட்டத்தில் எழுதிய 136 கதைகளைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தேன். ...
13 hours ago
12 comments:
//அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டு கேட்பது என்பது வேண்டாத வேலை.
//
S.V.சேகர் கேட்பது நியாயமான கேள்வி. அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு இருக்கும் போது பார்ப்பனர்க்கு மட்டும் ஏன் கூடாது. இதற்கு சரியான தீர்வு- இந்தியாவில் உள்ள அனைத்து ஜாதியினரும் எத்தனை விகிதாசாரத்தில் உள்ளனரோ, அதே விகிதாசாரத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க பட வேண்டும். அப்போது தான் பார்ப்பனருக்கு எதிராக அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமத்திலிருந்து பிராமனர்களை காக்க முடியும்.பிராமனர்களுக்கு, ஏன் அனைத்து ஜாதியினருக்கும் நியாமான பிரதினித்துவம் கிடைக்கும்.
”ஏன் ஓதுக்கீடு தரக்கூடாது என்று்” இட ஒதுக்கீட்டால் மெரிட் பாதிக்கப்படுவதாக புலம்பியவர்களிடம் கேளுங்களேன்.
நாராயண மூர்த்தி பல காரணங்கள் சொன்னாரே
he should join BSP.
//அடிமை விசுவாசம்தான் இங்கு ஏற்புடையது//
அங்கு மட்டும் அல்ல, போய் மனுக் கொடுத்து விட்டு வந்தாரே, அந்த இடத்திலும் கூடத்தான். உண்மையில், இந்த கலாச்சாரக் கருமாந்தரத்தை ஆரம்பித்து வைத்ததே, கழகங்கள் தான். முழு நேர அரசியல் வாதி இல்லாத சேகருக்குப் பாவம் எங்கே இது புரியப் போகிறது?!
//எஸ்.வி. சேகரை எந்த கட்சி ஏற்கும் என நினைக்கிறீர்கள்? ஆகவே நன்கு யோசித்துத்தான் ஒரு முடிவுக்கு வரவியலும். இனிமேல் சேரும் கட்சியில் நிரந்தரமாக இருக்க வேண்டும். உள்ளூரில் மட்டும் இருக்க விரும்பவில்லை. தில்லிக்கும் செல்ல வேண்டும்.//
இங்கேயே எஸ் வி சேகருடைய சாயம் வெளுத்துப் போகிறதே! காமெடியன்களை, இங்கே யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்! ஏனென்றால், அவர்களை இங்கே இருக்கிற முழு நேர அரசியல்வாதிகள் எல்லா நேரங்களிலுமே மிஞ்சிக்கொண்டிருப்பதால்!
//பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டு கேட்பது என்பது வேண்டாத வேலை.///
ஏன்னா... அவர் கேக்கறார்... குடுக்கறவா குடுப்பா... நீங்க இருக்கப் பட்டவா... வர்றத கெடுக்கறேளே... நியாயமா...?
- அம்பீஸ்வரன்
இப்பொழுது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒரு பிராமணரைத் திருமணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
பிராமணருக்கு 7% இட ஒதுக்கீடு, பிற்பட்ட வகுப்பினருக்கு 27% ஆகவே பிராமணருக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தது என்று சான்றிதழ் பெருவார்கள் இல்லையா ?
பிற்பட்ட சமூகத்தை அழித்து முழுமையான பிராமண சமூகமே இருக்கும் படி செய்யவே இந்த இடஒதுக்கீடு நாடகம்.
//திராவிடக் கலாச்சாரத்தின்படி ஜயலலிதா, கருணாநிதி போன்ற ‘தலைவர்கள்’ காலில் எல்லாம் போய் இவர் விழவில்லை என்பதே பெரிய ஆறுதல் அளிக்கும் விஷயம்தான். தனது கௌரவத்தை விட்டுத் தரவில்லை. அந்த அளவில் அவர் தமிழகத்தின் சராசரி அக்மார்க் அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபடுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டு கேட்பது என்பது வேண்டாத வேலை.//
:)
//அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டு கேட்பது என்பது வேண்டாத வேலை.//
ஏன்?
உங்கள் சாதியியும் மற்ற பிற்பட்ட சாதியுடன் இணைந்து விடும்! என்பதாலா?
பார்ப்பான் உயர்சாதிக்காரன் என்ற அடையாளம் மறைந்து விடும் என்பதாலா?
அல்லது வேறு எதாவது காரணம்!?
இதுக்குதான் சாதியே வேணாம்னு சொல்றது!
//இதுக்குதான் சாதியே வேணாம்னு சொல்றது!//
What is the point in barking at the wrong tree?
//
இதுக்குதான் சாதியே வேணாம்னு சொல்றது!
//
சாதி அடிப்படையில பிறப்பு முதல் இறப்பு வரை சலுகைகள் இருக்கும் வரை சாதி அழியாதுடா மடச்சாம்பிராணி.
வால்பையன் தனது ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். அதற்காக அவரை இவ்வாறு கூறுவது ஏற்கத் தக்கதல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டு கேட்பது என்பது வேண்டாத வேலை.//
டோண்டு சார் உங்கள் கருத்து மிக சரி .. நானும் வழி மொழிகிறேன் .. காரணம் இடஒதுகீடு முறையால் பாதிக்க பட்டவர்களுக்கு தான் புரியும் .
Post a Comment