நண்பர் சந்திரசேகர் எனக்கு மோடியின் இந்த நேர்காணலை மின்னஞ்சல் செய்துள்ளார். பார்க்க நம்ம நரேந்திர மோடியுடன் ஒரு நேர்காணல். சந்திரசேகரனுக்கு மிக்க நன்றி. முதலில் நேர்காணலுக்கு செல்வோம். பிறகு இருக்கவே இருக்கிறது டோண்டு ராகவன் கருத்து கூறுவது. கேள்விகள் தடித்த சாய்வெழுத்துகளில் உள்ளன.
வழக்கம்போல இப்பதிவை முதலில் எனது ஆங்கில வலைப்பூவில் இட்டுள்ளேன்.
இப்போது நேர்காணல். அதற்கு முன்னால் ஒரு சிறு அறிமுகம்.
இன்னும் எவ்வளவு காலம்தான் மோடி குஜராத்திலேயே இருப்பார்? பிரதமராக ஆகும் ஆசை அவருக்கில்லையா? பாஜக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் மத்திய அரசில் பங்கு பெறுவாரா? 2002-ல் குஜராத்தை உலுக்கிய இசுலாமியர் எதிர்ப்புகளுக்கும் தீவிரவாதத்துக்கும் இடையே அவர் ஏதேனும் சம்பந்தத்தை உணர்கிறாரா?
Rediff.com சார்பாக சாய்சுரேஷ் சிவஸ்வாமியும் நிகில் லட்சுமணனும் மோடியை காந்திநகரில் அவரது அலுவலகத்தில் வைத்து நேர்காணல் செய்துள்ளனர். கீழே 70 நிமிடங்கள் நடந்த அதன் முதல் பகுதி தரப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கை விட அத்வானியே மேல் என எவ்வாறு நினைக்கிறீர்கள்?
இதற்கு பதில் மிகவும் எளிமையானது. மன்மோகன் சிங் ஒரு தலைவர் அல்ல. தான் தலைவர் அல்ல என்பதை அவரே ஒப்பு கொண்டுள்ளார். நாட்டை ஆள ஒரு தலைவரால்தான் முடியும், வெறும் ஏட்டறிவு பெற்றவர்களால் அது இயலாது. இந்திரா காந்தியின் படிப்பு என்பது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்றாலும் அவர் ஒரு தலைவர். பி.வி நரசிம்மராவும் தலைவர். நாட்டின் நாடியை பிடித்து பார்க்க முடிந்தவர்கள் மட்டுமே நாட்டை ஆளவியலும்.
லால் பகதூர் சாஸ்திரியால் நாட்டின் நாடியை நன்றாகவே பிடித்து பார்ர்க முடிந்தது. ஆகவேதான் குறைந்த ஆண்டுகளே ஆண்டாலும் அவர் தனது முத்திரையை பதித்து செல்ல முடிந்தது. அடல் பிஹாரி வாஜ்பேயியும் அப்படித்தான். மொராஜி தேசாயையும் மறக்கவியலாது. சந்திரசேகர், ஏன் தேவகௌடா கூடத்தான் இதில் அடங்குவர். நல்ல வேளையாக ஐ.கே.குஜ்ராலே இவ்வாறெல்லாம் தன்னைப் பற்றி கூறிக்கொள்வதில்லை. மன்மோகன் சிங்கை எடுத்துக் கொண்டால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் நாடு முழுவதுமாக ஒரு முறை கூட பயணம் செய்ததில்லை. அதே நேரத்தில் அத்வானி நாடு முழுவதையும் அறிந்தவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. அரசின் பல துறைகளில் மந்திரியாக இருந்து ஆட்சியனுபவம் பெற்றிருக்கிறார். மன்மோகனுக்கும் அத்வானிக்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் உண்டு.
அத்வானி படிப்படியாக வெவ்வேறு தளங்களில் செயல்பட்டு இப்போதைய நிலைக்கு வந்துள்ளவர்.
தற்சமயம் நாட்டில் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் 54 கோடி இருக்கின்றனர். அவர்களுக்கும் அத்வானிக்கும் ஒத்து போகுமா? அவர்களுக்கு நரேந்திர மோடி போன்ற தலைவர்தானே தேவை?
அப்படியே வயதை வைத்து பார்த்தாலும் அத்வானி மற்றும் மன்மோகன் சிங் இடையில் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லையே? மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு நான் காங்கிரசுக்கு நன்றி கூறத்தான் வேண்டும். இப்போது மக்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றாவதாக ஒரு தெரிவு வர இடம் இல்லை. அப்போது வயது ஒரு காரணியாக இருக்க முடியாது அல்லவா. இருவருமே வயதானவர்கள்தானே. என்ன பிரச்சினை?
நாட்டின் வருங்கால பிரதமராக உங்களை பலர் குறிப்பிடுகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
அப்படி யாரும் என்னிடம் சொல்லவில்லையே!
தொழிலதிர்பர்கள் உங்களை ஆதரித்து பேசியது...
அவர்கள் அறிக்கையை சரியாக படியுங்கள். யாரும் பிரதம மந்திரி என்றெல்லாம் சொல்லவில்லை.
rediff message board-களில் இந்திய அரசியல் பற்றி வரும் பல மன்ற இடுகைகளில் குறைந்த பட்சமாக 50 சதவிகித வாசகர்கள் நரேந்திர மோடி நாட்டுக்கு பிரதமராவதுதான் முக்கியத் தேவை என்று கூறுகின்றனர்..
அப்படியா, ஏதேனும் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இது நிகழ வேண்டும் என வைத்துள்ளார்களா? (சிரிக்கிறர்) அது பற்றியும் அவர்களிடம் கேளுங்களேன்.
காலம் உங்கள் கைகளில்தான் உள்ளது என்பது வெள்ளிடைமலை.
இல்லை, காலம் மக்கள் கைகளில்தான் உள்ளது.
எது எப்படியானாலும் இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் போகும் இடங்களிலெல்லாம் அத்வானிஜிதான் அடுத்த பிரதம மந்திரி என்கிறேன். எல்லோருமே மகிழ்ச்சியாக கரவொலி எழுப்புகிறார்கள். இதுதான் எனக்கு கேட்கிறது.
தேசீய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் ஏற்கப் போகும் பாத்திரம் என்ன?
நான் குஜராத்தின் முதல்வர். அப்பதவியிலிருந்து யாரும் என்னை தூக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் இன்னும் எவ்வளவு காலம்தான் குஜராத்திலேயே இருக்க போகிறீர்கள்? நீங்கள் ஏற்கனவே தில்லியில்தான் இருந்தீர்கள் அங்கிருந்துதானே குஜராத் சென்றீர்கள்...
இன்று மாலை எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி கூட நான் கவலைப்பட்டதில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் எனது நிகழ்ச்சி நிரலில் இல்லை.
நாட்டின் முன்னேற்றத்தை பற்றி காட்டப்படும் போஸ்டர்களில் உங்கள் படம்தானே இருக்கிறது.
அதென்ன போஸ்டர்களில் என் படம் இருக்கிறது என்கிறீர்கள், எனக்கு புரியவில்லையே. நான் கூலிக்காரன் மாதிரி உழைக்கிறேன். நான் விளம்பர மாடல் இல்லை. தினமும் 24 மணி நேர வேலை. 15 நிமிடம் கூட விடுமுறை எடுத்து கொண்டது இல்லை.
இந்தியா பற்றி உங்கள் கனவு என்ன??
இப்போது உலகம் இருக்கும் நிலையில் இந்தியா சக்திமிக்க நாடாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒன்றாக உழைத்தால் இந்த 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே உரியதாகும்
முன்னேற்றம் என்பது ஒட்டுமொத்தமாக வரவேண்டிய இயக்கம் என்பது எனது நம்பிக்கை. இந்தியாவின் 100 கோடி மக்களும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல விரும்ப வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். ஊடகங்களும் இதில் தமது பங்கை ஆற்ற வேண்டும். அப்துல் கலாம் அவர்களும் முன்னேற்றத்தில் ஊடகங்களின் பங்கேற்பின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்.
மேலாண்மைக்காக உங்கள் மந்திரச்சொல் என்ன?
சொல்லப்போனால் நான் நிர்வாகி எல்லாம் இல்லை. நான் வெறுமனே ஒரு ஒருங்கிணைப்பாளன். சிறுவயதிலிருந்தே நான் ஆர்.எஸ்.எஸ்-ல் ஈடுபட்டவன். ஆகவே மனித வள்ம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, குழுக்களாக எப்படி செயல்படுவது என்னும் விஷயங்கள் பற்றி நான் அறிவேன். இதில்தான் நான் பயிற்சி பெற்றேன். ஆகவேதான் முதல்வராக அமர்ந்ததும் என்னால் வெற்றிக்கனியை ருசிக்க முடிந்தது..
இதற்கு முன்னால் ஒரு மாநிலத்தை நிர்வகிக்க எந்தவித அனுபவமும் இல்லாத நீங்கள் உங்கள் மாநிலத்தை நடத்தி சென்றவிதம் மற்ற எல்லா முதல்வர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டதே. எல்லோருமே இன்னொரு மோடியாக விரும்புகிறார்கள்.
அப்படியெல்லாம் நான் சொல்லிக்கொள்வதில்லை. நரேந்திர மோடியாகிய என்னை பொருத்தவரை அது எனது கடமை. குஜராத் மக்களுக்கு எனது சேவை அளிக்கப்பட வேண்டும் அவ்வளவே. இந்த முயற்சியில் நான் ஏதேனும் புதிதாகக் கற்க வேண்டுமென்றால் அதையும் செய்து விட்டு போகிறேன். நான் வெறும் மாணவன் மட்டுமே
நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்து இணையத்தை மேய்ந்து அதில் உள்ள பத்திரிகைகளை படித்து, நாட்டில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்டு அதற்கேற்ப புதிது புதிதாக செயல்படுகிறீர்கள் என அறிகிறேன்...
உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் அரசியல் மாணாக்கன். ஆகவே இதெல்லாம் எனக்கு இயல்பாகவே வருகிறது. தில்லியில் பல ஆண்டுகள் இருந்த போதும் அதைத்தான் செய்தேன். எல்லா குஜராத்தி பத்திரிகைகளையும் இணையத்திலேயே மேய்ந்து விடுவேன். இப்போது குஜராத்துக்கு வந்ததும் தில்லி பேப்பர்களை படிக்கிறேன். அதற்காகத்தான் இணையத்தையே பாவிக்கிறேன்.
தகவலுக்கான பல வழிகள் ஒருவரிடம் இருக்கவேண்டும். அப்போதுதான் அவரால் அறிவார்ந்த முடிவுகள் எடுத்து, மக்களை வழிநடத்தவியலும், நிலைமையை அவதானிக்கவியலும். இதில் எனக்கு உதவி செய்வது இணையமே. மக்களுடன் எனக்கு தொடர்புகளை பெற்று தருகிறது. செல்பேசி எனக்கு தகவல்கள் தந்து மக்களுடன் என்னை இணைக்கிறது. ஆகவே என்னால் நல்ல முடிவுகள் எடுக்க முடிகிறது.
அரசியல் மாணாக்கராக வரப்போகும் தேர்தலை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
இதில் மூன்று குழுக்கள் உள்ளன. ஒன்று பாஜக தலைமையில் உள்ள தேசீய ஜனநாயக முன்னணி, இன்னொன்று காங்கிரசின் UPA. கடைசியாக இருப்பது UPA வை விட்டு விலகியவர்கள், இதுவரை ஒருவரையும் ஏற்று கொள்ளாதவர்கள், தங்களுக்கென்று எதையோ தேடுபவர்கள், அவரவர் பிரச்சினைகளுடன் உள்ளவர்கள் என பலர் கதம்பமாக ஒன்று சேர்ந்து அமைத்த மூன்றாம் அணி.
ஒரு பக்கம் குடும்ப அரசியல் செய்யும் காங்கிரசின் கொள்கையு, மற்றொரு பக்கம் பணபலமும் உள்ளன. இவற்றுக்கு மாற்றாக உள்ளது பாஜகவின் தேசீய கொள்கை. இது தவிர்க்க முடியாதது.
தேர்தல் நெருங்க நெருங்க சக்திகள் பிரியும், சில காங்கிரஸ் முகாமுக்கு, சில பாஜக தரப்புக்கு. மிஞ்சி இருப்பவை முக்கியம் அற்றவை. அவற்றால் ஒன்றும் நடக்காது.
நாட்டுக்கு பலமான அரசு தேவை. சக்திசாலியான, அனுபவம் மிக்க தலைவர் தேவை.
இக்காரணங்கள்... கூடவே இப்போதுள்ள அரசின் சொதப்பல்கள், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொய் வாக்குறுதிகள் ஆகியவையும் (கவனித்து முடிவு எடுக்கப்பட வேண்டியவை).
நாட்டின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாமல் போனதை கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் நிறைவேறாத அரசின் வாக்குறுதிகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
முதலில் சொன்னார்கள், ஒன்றரை கோடி பேருக்கு வேலை தருவோம் என. இப்போதென்னவோ ஐந்து லட்சம் பேருக்கு வேலை பறிபோகப் போவதாக கூறுகின்றனர். என்ன ஒரு முரண்பாடு! இதுன் சாதாரண பொதுமக்களுக்கான அரசு என கூறுகின்றனர். ஆனால் விலையேற்றத்தை அவர்களால் தடுக்கவியலவில்லை. வாஜ்பேயியின் அரசு விலகியபோது வெங்காயம் கிலோ எட்டு ரூபாய்க்கு விற்றது. இப்போது அது 16 ரூஒபாய். எரிவாயு சிலிண்டரின் விலை அப்போது 270 ரூபாய்கள், இப்போது அதன் விலை 370 ரூபாய்கள். இப்போதைய அரசின் தோல்விகள் சாதாரண பொது மக்களை பாதிக்கின்றன.
பாதுகாப்பு இன்னொரு பிரச்சினை பாகிஸ்தான் முழுமையாகவே தாலிபான்வசம் செல்ல உள்ளது. கராச்சிக்கு அது வந்து விட்டது. ஆகவே நம் மக்களுக்கு பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து என்ன செய்வது? இது போல பல காரணங்கள் உள்ளன, UPA-வையோ மன்மோகன் சிங்கையோ நிராகரிக்க.
கூட்டணி கட்சிகள் மூலம் ஆட்சி என்பது இங்கு சீக்கிரம் முடிவுக்கு வருமா?
கூட்டணி ஆட்சிகள் தொடரும். ஆனால் அதிலும் தேசீய கட்சி வலுவுள்ளதாகவும் பிராந்திய கட்சிகள் அவ்வலுவுக்கு வலு சேர்ப்பதாகவும் இருத்தல் நல்லது. இதுதான் மிகச்சிறந்த படிவமாக இருக்கும்.
அம்மாதிரி படிவத்தைத்தான் அடல்ஜி தந்தார். முதலில் காபினெட்டில் கூடி விவாதித்து பிறகு முடிவெடுப்பதுதான் சிறந்த மாடல்.
ஆனால் குஜராத் மற்றும் உ.பி.யில் மட்டும் நிலையான ஒரு கட்சி ஆட்சிமுறை அமைந்தது?
அது வேறு, இது வேறு. பிரதேசம் சார்ந்த விருப்பங்கள் அங்கு ஆட்சி செய்கின்றன. தேசீய கட்சிகள் இதை உணர வேண்டும். எல்லோரையும் அரவணைத்து செல வேண்டும். அப்போதுதான் சிறு மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும்.
நமது ஜனநாயகத்தின் குறைபாடுகள் என நீங்கள் எதை கருதுகிறீர்கள், அதற்காக என்ன செய்ய வேண்டும்
சுதந்திரத்துக்கு பிறகு நாம் உரிமைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளோம். கடமைகளை அலட்சியப்படுத்துகிறோம். இதை நாம் மாற்றுவதே நல்லது.
குஜராத்தையே எடுத்து கொள்வோம். நான் அரசு-மக்கள் கூட்டுமுயற்சியை ஆதரிப்பவன். மழைநீர் சேமிப்பு திட்டம் ஒரு நல்ல உதாரணம். இம்மாதிரி முயற்சிகளில் பொது மக்களையும் ஈடுபடுத்துகிறேன். கோடிக்கணக்கானவர் சேர்ந்து செய்யும் இக்காரியத்தால் மழைநீர் சேமிப்பு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் கடமை உணர்ச்சிகளை தூண்டியுள்ளேன். இதையே நாடு முழுவதற்கும் நீட்டிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
வெறுமனே ஓட்டு போடுவது மட்டுமே ஜனநாயகம் என நாம் நினைக்கிறோம். ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஐந்தாண்டு கால காண்ட்ராக்டில் அதனிடம் ஆட்சியை ஒப்படைக்கிறோம். ஐந்து ஆண்டுக்கு பிறகுதான் கணக்கு கேட்கிறோம். இம்முறையில் நாம் ஜனநாயகத்திடமிருந்து மிகக் குறைந்த அளவே பலன் பெறுகிறோம். அதற்கு மாறாக நாம் செய்யும் எல்லா விஷயங்களிலும் மக்களின் பங்கு இருக்க வேண்டும்.
ஒட்டு போட்டதும் மக்களும் அரசும் வேவ்வேறு பாதைகளில் போவது ஒத்துக் கொள்ளக்கூடியதல்ல. குஜராத் இதற்கு மாறாக என்ன செய்யலாம் எனக் காட்டியுள்ளது. எல்லாவற்றிலும் மக்களுக்கும் பங்கு இருக்க வேண்டும்.
மீண்டும் டோண்டு ராகவன். மோடி உண்மையாகவே மிக வெளிப்படையாக பேசி விட்டார். மோடி அத்வானி போன்ற தலைவர்கள்தான் நாட்டுக்கு தேவை. தேசீய ஜனநாயக கூட்டணிக்கு சந்தேகத்துக்கிடமின்றி மக்கள் வெற்றிக்கனியை தருவதுதான் நாட்டுக்கு நல்லது. நாட்டின் அரசை நடத்த தினசரி சில்லறைக் கட்சிகளின் தயவில் கப்பரை ஏந்திய நிலை போக வேண்டும். ஆனால் என்ன, அவர் பிரதமராவாரா என்ற கேள்விக்கு சிக்காமல் விலாங்கு மீனாக வழுக்கி சென்று விட்டார்.
இந்த நேர்காணலின் முதல் பகுதி மட்டும்தான் இது. இரண்டாம் பகுதி இன்னும் வரவில்லை. அது வந்ததும் இப்பதிவை இடலாம் என சில நாட்கள் காத்திருந்து, பிறகு அது வரும்போது வரட்டும் என இப்போது துணிந்தேன். அது தமிழ் புத்தாண்டு தினத்தில் நிகழ்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
எல்லோருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
12 comments:
கேள்விகள் கேட்பது - சங்கர பாண்டிய ராசா
1. புலிகளுக்கு பின் இலங்கை பிரச்சனை சரியாகி விடுமா
2. இலங்கை பிரச்சனை முக்கியமான தேர்தல் பிரச்சனையா?
3.பிரபாகரனின் உற்ற சகாக்கள் பல பேரை இலங்கை ராணுவம் அழித்து விட்டதே, இனி புலிகள் தலை எடுப்பது சாத்தியமா?
4. அமெரிக்காவில் சூப்பராக செட்டில் ஆனவர்கள் ஆன NRIகள் இந்தியாவை திட்டுவதே வேலையாக வைத்து இருக்கிறார்களே ( உதா- சொர்ணபாண்டி) இவர்கள் ஏதாவது மன நோயால் பாதிக்கபட்டு உள்ளனரா?
5. கருணாநிதிக்கு பார்பனர் ஓட்டு இந்த தேர்தலிலாவது விழுமா?
காலையிலேயே உங்களிடமிருந்து போன் வரும் என்று எதிர்பார்த்தேன்!
@வால்பையன்
இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒவ்வொரு குடிமகனுக்கும் விதித்துள்ள கடமையை எந்த அரசோ நீதிமன்றமோ அமல் படுத்துவதில்லை . கமையை செய்யாத குற்றத்திற்கு எந்த தண்டனையும் கிடையது. தனது ஓட்டை விற்று ஓட்டு வங்கி வரவாக மக்கள் தங்களை ஆக்கி கொண்டு விட்டார்களா?
//சுதந்திரத்துக்கு பிறகு நாம் உரிமைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளோம். கடமைகளை அலட்சியப்படுத்துகிறோம்.//
Article 51A Fundamental duties
It shall be the duty of every citizen of India -
(a) to abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem;
(b) to cherish and follow the noble ideals which inspired our national struggle for freedom;
(c) to uphold and protect the sovereignty, unity and integrity of India;
(d) to defend the country and render national service when called upon to do so;
(e) to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic and regional or sectional diversities; to renounce practices derogatory to the dignity of women;
(f) to value and preserve the rich heritage of our composite culture;
(g) to protect and improve the natural environment including forests, lakes, rivers and wild life, and to have compassion for living creatures;
(h) to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;
(i) to safeguard public property and to abjure violence;
(j) to strive towards excellence in all spheres of individual and collective activity so that the nation constantly rises to higher levels of endeavour and achievement.
‘’எல்.ரி;.ரி.;ரீ அமைப்பினர் யார் பேச்சையும் கேட்கமாட்டார்கள்’’- கொழும்பிலிருந்து நோர்வே தூதுவர் டோரா ஹெட்றம்.
11 APRIL 2009
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
இலங்கை இராணுவம்,புலிகளுக்கெதிரான தனது பிரமாண்டமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு வலயமென்ற பகுதிக்குள் அகப்பட்ட புலிகளின் மனிதக் கேடயங்களான தமிழ் மக்கள் தொகை.கிட்டத்தட்ட 80.000 என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
புலிகளுக்குப் பணம் கொடுத்து விட்டுத் தப்பி வர முடியாத எழை மக்கள். மாவீரர்hகளின் குடும்ப அங்கத்தவர்கள், புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என்று பல தரப்படடவர்கள் அங்கு அகப்பட்டுக்கொண்டு அன்றாடம் நூற்றுக்கணக்கில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை விடுவிக்கவேண்டிய பணியை மேற்கொண்டு வந்த பன்னாட்டுத் தமிழர் அடங்கிய உண்மையறியும் குழுவினரில் பெரும்பாலோர் தத்தம் நாடுகளுக்குத் திரும்பி விட்டார்கள்.
வந்திருந்த குழுவினரில் கொழும்பில் இன்னும் தங்கியிருக்கும் ஒருசிலர், போர்ச்சூழலில் உயிரிழந்து கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றப் பத்திரிகையாளர்கள் வேறு பல முக்கியதஸ்தர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகளுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை வைத்திருக்கும் நோர்வெ தூதுவihயும் சந்தித்து. புலிகளிடம் அவர்கள் பிடித்த வைத்திருக்கும் தமிழருக்கு உயிர்பிச்சை கொடுக்கச் சொல்லி வெண்டுகோள் விடுக்கும்படி கேட்டுக் கெஞ்சினார்கள்.
நாற்பத்து ஆறு வயதான நோர்வே தூதுவர் தனது வெளிநாட்டு அரசியல் பணியை இந்தியாவின் தூதுவராகப் பணியேற்றதுடன் தொடங்கியதாகக்கூறினார். அத்துடன் நோர்வே இராணுவ, பொருளாதார அனுபவங்களிலும் தேர்வு பெற்றிருக்கிறார்.
தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் பொருளாதார, சமுதாய, சாதி சமய அமைப்புக்களின் ஆளுமை சாதாண மக்களின் வாழ்க்கையில் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் என்பதை அவரின் பேச்சிலிருந்து அறிய முடிந்தது.
நோர்வே அரசு, இலங்கையில் அதிலும் முக்கியமாக யாழ்ப்பாண மக்களுடன் நீண்ட காலம் உறவுடையவர்கள். யாழ் மக்களை நன்கு புரிந்து கொண்டவர்கள். புலிகளால் நம்பப் பட்டவர்கள். இலங்கை அரசக்கும் புலிகளுக்கமிடையிலான பல பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கெடுத்தவர்கள். இன்றும். தமிழர்களின் நன் மதிப்பைப் பெற்றவர்கள்.
பங்குனி மாதம் பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை பின்னேரம் அவரின் வீட்டில் நடந்த சந்திப்பில் இன்றைய தமிழ் அகதிகள். இலங்கை அரசு, புலிகள் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள்.
‘’ புலிகளால் பிடித்த வைக்கப்பட்டு வைத்திருப்பதாகச் சொல்லப்படும் தமிழர்கள் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் இறந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கிறார்கள். இவர்களுக்குள் இருந்து கொண்டு புலிகள் இலங்கை இராணுவத்துககக எதிரான தாக்குதல்களை நடத்துகிறார்கள். இராணுவம் தனது பதிற்தாக்குதலை நடத்துகிறது இதனால் போர் புரியும் இரு பக்கத்தினராலும் மிகவம் கொடிய முறையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப் படுகிறார்கள்.
போர் புரியம் போது மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை இருவரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை, இது சர்வதேச போர் முறைகளுக்கு முரணானது. மக்களைப் போரற்ற இடத்திற்கு அனுப்ப இரு பகுதியினரும் கவனம் எடுக்க வேண்டும்,’’
கேள்வி: ‘இதுபற்றி நீங்களும் சர்வதேசமும் ஏதும் அழுத்தம் கொடுத்தீர்களா?’’
நோர்வே பதில்;: நாங்கள் எப்போதும் தமிழ்ப் பொது மக்களின் பாதுகாப்பில் மிகவும் கவனம் செலுத்துகிறோம். அதைத் தொடர்ந்தும் செய்வோம். இன்று அங்கு போர் புரியும் இரு பக்கத்தினருக்குமிடையில் அகப்பட்ட மக்கள் இருக்குமிடம் மக்கள் வாழ முடியாத இடம். அங்கு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் கிடைப்பதே கடினமாகவிருக்கிறது அதையிட்டு மட்டுமல்லாமல் அகப்பட்டுக்கொண்டு தவிக்கும் மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிக்குள் போர் நடத்துவது சர்வ தேசப் போர்மரபில் பாரிய குற்றம் என்று இரு பகுதிக்கும் சொல்லியிருக்கிறோம் ’’
கேள்வி:’’ வவுனியாவுக்கு வந்திருக்கும் அகதிகளைச் சந்தித்தபோது, தங்களைத் தப்ப விடாமல் புலிகள் தடுப்பதாகவும், பணம் கேட்பதாகவும் (தலா பத்தாயிரம்) சொன்னார்கள். பணம் கொடுக்க வழியின்றித் தவிக்கும் மக்களை, புலிகளடன் வாழ விரும்பாத மக்களை விடுவிக்கச் சொல்லி நீங்கள் கேட்கவில்லையா’?
புதில்: போரில் அகப்பட்ட அத்தனை தமிழ் மக்களின் நிலைபற்றி இலங்கையுடன் அக்கறையுள்ள பல நாடுகளுடன் தொடர்பு கொண்டேன் அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான் நோர்வே என்பன. மக்கள் வெளியெறவதற்காக.இரு தரப்பும் ஒரு கொஞ்ச நேர கால கட்ட இடைவெளி விடவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்றோம். புலிகள் யாரின் பேச்சையும் என்றும் கேட்டதில்லை.
தமிழர் பிரச்சினை தீர நாங்கள் எடுத்த முயற்சிகள் உங்களுக்கத் தெரியம். 2000ம் ஆண்டு புலிகள் . தாங்கள் இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று அறிவித்தபோத அதைச் செயற் படுத்த நாங்கள் முன்னின்றோம். 2002ல் புலிகளும் அரசம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய உதவினோம். 2003ல் ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்டு
மானில சுயாடசியமைப்பில் கையெழத்திட்டவர்கள் அந்த ஒப்பந்தத்தையே புலிகள் தா க்கி யெறிந்து விட்டார்கள் 2000. 2003. 2006 வரை இந்தத் தமிழ்ப் பிரச்சினைக்கு விடீவு தேடி எத்தனையோ சந்தர்ப்பங்களை எடுத்துக் கொடுத்தோம் அத்தனை முயற்சிகளையம் புலிகள் வீணாக்கி விட்டார்கள்.
2006ல் மாவிலாறு ஆற்றப் பிரச்சனை இன்றைய போராக மாறியிருக்கிறது. அதைத் தவிர்க்கவும் பாடுபட்டோம். ஆந்தப் போரின் தொடச்சியால் தமிழ் மக்கள்
இன்று மிகவம் கொடிய அழிவை எதிர் நோக்குகிறார்கள் காலம் கடந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தம் செய்யாது. புலிகளை அழித்துப் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து ஒழிப்பதாகக் கங்கணம் கட்டியிருக்கிறார்கள். போர்ச் சூழலுககுள் அகப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைத் தப்பிச் செல்லப் புலிகள் விடத் தயாரில்லை. ஆந்த மக்கள் தங்களுடன் வாழ விரும்புவதாகச் சொல்கிறார்கள். மக்களக்கு அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க சுதந்திரம் கொடுபட வேண்டும்.போர்ச்சூழலில் அகப்பட்ட. தமிழ் மக்களின் உயிரைக் காப்பற்றப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் புலிகளிடம் வெண்டுகோள் விடவேண்டும். இல்லாவிட்டால் மிக மிகக் கொடிய உயிரழிவுகளைத் தமிழர்கள் எதிர் நோக்கவேண்டி வரும்’
கேள்வி;: நாங்கள் வவனியா அகதி முகாமக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த பலர் தங்கள் அனுபவத்தைச் சொல்லும் போது ‘இன்று அங்கு (பாதுகாப்பு வலயத்துக்குள்) அகப்பட்டக்கொண்டவர்கள் நாளாந்த கூலி வேலை செய்த பிழைப்பவர்கள் பணம் கொடுத்துத் தப்பி வர வசதியற்றவாகள். தப்பி வரும் போது பலிகளின் அடி உதை துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாகிறார்கள் என்றும் புலிகள், இராணுவத்திடமிருந்து தப்புவதற்காகப் பாவிக்கப்படும்மணல் மூட்டைகளாகத் தங்களை நடது;தவுதாகவும் சொன்னார்கள்.; அத்துடன், புலிகளால் பிடித்து வைத்திருக்கப் பட்டிருக்கும் ஏழைத்தமிழர் பெரும்பாலோர் பொருளாதார ரீதியில் பின் தங்கிய ‘தலித்’ மக்கள் என்றும். வெளி நாடுகளிலிருந்து இவர்களுக்காகக் குரல் கொடுப்போர் அதிகமில்லை எனறும் இதனால்; இவர்கள் இந்த உயிர் அழிவை முகம் கொடுக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அதாவது. 1950-60களில் இலங்கை பரந்த நிலப் பங்கீடு செய்யப் பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து கணிசமான தொகையினரான எழைத் தலித் மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்று புலிகளால் கடத்தப் படும் குழந்தைகளும் போர்க் கேடயமாகப் பாவிக்கப் படுபவர்களும் பெரும்பாலான தலித் மக்கள் என்று சொல்லப் படுகிறது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
நோர்வே பதில்: (முகத்தில் அதிர்ச்சி, சோகம். தவிப்பு) வேளாளார் என்ற உயர் சாதியினர் வெளி நாடு சென்றவர்களில் பெரும் பான்மையினர் என்பது எனக்குத் தெரியும். பணம் கொடுக்க முடிந்தவர்கள் பலர் போரிலிருந்த தப்பி ஓடிவிட்டார்கள் என்றும் தெரியும். இது வரை புலிகளின் படையிலிருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்ச் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்த ஏழைகள் அதாவது கிழக்கிலிருந்து வந்து போராடியவர்கள டின்றும் தெரியும்.;. இன்று இந்தப் போரில் பலியாகும் பெரும்பாலான ஏழைத்தமிழ் மக்களின் சாதி அடிப் படையிலான தகவல் எனக்குத் தாங்க முடியாத துக்கத்தைத் தருகிறது. தயவு செய்து யாழ்ப்பாண. வன்னி வாழ் தமிழ் மக்களின் சமுதாயப் பிரிவுகள் பற்றிய தகவல்களை உடனடியாக எடுத்துத் தந்தால் உதவியாயிருக்கும்’’.
கேள்விகள்
1. வாதி, பிரதிவாதி இருவருக்கும் வழக்குகளில்
ஆஜராக முடியாதென்ற அடிப்படிக் கொள்கை
கூடத் தெரியாத அஞ்சலியை எப்படி முதலில்
நியமித்தார்கள்?
2. செருப்பு எறியும் பண்பு இந்தியக் கலாசாரத்திலும்
அதுவும் தேசீய காங்கிரஸ் சூரத் கூட்டத்திலும்,
இருந்திருக்கிறது என்பதைப் படித்தீர்களா?
(எஸ்.முத்தையா ஹிந்துவில் திங்கள் தோறும்
எழுதும் மதராஸ் மிஸ்செல்லனி 13-4-09)
3. அத்வானி, மன்மோஹன் பேச்சுக்கள் இடையே
ராஹுல் புகுந்து தனது ரத்தினக் கருத்துக்களைத்
தெரிவிப்பது சரியா? இதில் இவர் வருங்கால
பிரதமர் என்று வேறு கூறிக்கொள்கிறார்கள்?
@சேதுராமன்
அஞ்சலி விஷயம் என்னவ்ன்றே தெரியவில்லையே. சுட்டி தரவியலுமா? பின்புலன் ப்ளீஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@சேதுராமன்
ஓக்கே இப்போது புரிந்து விட்டது. இதைத்தானே கூறுகிறீர்கள்? http://www.deccanherald.com/DeccanHerald.com/Content/Apr152009/national20090415130379.asp?section=updatenews
நாளை டோண்டு பதில்களில் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
THERE was a display in the NDTV this afternoon, that the Bombay Court, applying the conflict of interest clause, has sacked Anjali as Advocate for Qasab, because she was also representing a witness in the same case. even when her name was suggested as Advocate for Qasab and there were violent objections by the Shivsena, there was a passing mention that she was representing a cop in that case.
Judge debars Anjali Waghmare from defending Kasab
April 15, 2009 13:09 IST
Last Updated: April 15, 2009 13:58 IST
The keenly awaited trial of Ajmal Kasab [Images], sole surviving terrorist involved in the 26/11 Mumbai [Images] attacks, was facing a further delay with the judge of the special court, M L Tahiliani, finding a conflict of interest in Anjali Waghmare [Images] defending Kasab.
Judge Tahiliani debarred Anjali since she had accepted the legal brief of Harishchandra Shrivardhankar, a surviving witness in the Cama Hospital [Images] attack on the night of November 26, 2008.
The court, set up to try Kasab and two other arrested accused in the Mumbai attacks case, is now consulting the prosecution regarding appointment of a new lawyer for Kasab.
Advocate K Lam, who had earlier expressed the desire to defend Kasab, had petitioned the court last week, saying
that Waghmare should not appear in this case, as she was representing one of the victims of the 26/11 attacks in a
compensation claim.
The court said Waghmare should have informed the court about this when she was appointed as Kasab's lawyer, and
removed her as his counsel.
© Copyright 2009 PTI. All rights reserved. Republication or redistribution of PTI content, including by framing or similar means, is expressly prohibited without the prior written consent.
Discuss | Share with friends | Print | Ask a question | Get latest news on your desktop
Pro வின் எதிர்பதம் Con என்றால்
Progress இன் எதிர்பதம் என்ன ?
மோடியை எதற்கெடுத்தாலும் திட்டும் CJP (citizens for justice and peace) என்ற அமைப்பு நிறுவி வேலை பார்க்கும் அம்மையார் டீஸ்டா செடல்வாத் ஒரு ஃபோர்ஜரி கேஸ் என்று சுப்ரீம் கோர்ட் அமைத்த SIT முடிவு செய்துள்ளது.
http://timesofindia.indiatimes.com/India/NGOs-spiced-up-Gujarat-riot-cases/articleshow/4396986.cms
Post a Comment