[திங்கள் முதல் வியாழன் வரை நான் தொடர்பயணத்தில் இருக்கப் போவதால், இந்த வாரத்து பதில்களை திங்கள் காலையே முடித்து வரும் வியாழன் காலை 5 மணிக்கு வெளியாகுமாறு செட் செய்துள்ளேன். இது நண்பர்களின் தகவலுக்கு மட்டுமே. நான் திங்கள் காலை புறப்பட்டதற்கு பின் வரும் கேள்விகள் எனது டோண்டு பதில்கள் 30.04.2009 பதிவில் பதிலளிக்கப்படுவதற்காக மேலே எடுத்து செல்லப்படும்].
டி.வி. ராதாகிருஷ்னன்:
1. நிருமலன் என்ற பெயர் சிவனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று ஆயினும் வடமொழிச் சொல்லான அதற்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன? (நடராஜர் என்றால் நடனத்தின் அதிபதி; சுயம்புலிங்கம் என்றால் தானாக தோன்றிய லிங்கம் என்பது போன்ற சரியான அர்த்தம்)
பதில்: நிர்மலன் என்றால் மாசில்லாதவன் என்று தமிழில் பொருள். நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நாம் முயற்சி செய்து நீக்கினால் மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும்போது சீவன் சிவன் ஆகிறான் (எனது நண்பரும் சென்னை பல்கலைக்கழக் வைணவத்துறை முன்னாள் தலைவருமான டாக்டர் வி.கே.எஸ்.என். ராகவன் அளித்த இந்த விளக்கத்துக்கு நன்றி).
மெனக்கெட்டு:
1. 1971 ல் இருந்து மூன்றரைஆண்டுகள் பம்பாயில் அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில், 1981 – 2001 தில்லியில், தற்பொழுது சென்னையில். பல ஊர்கள் சென்றிருக்கிறீர்கள். எந்த ஊர் உங்களுக்குப் பிடித்தது? ஏன்?
பதில்: இது என்ன குழந்தைத்தனமான கேள்வி, சென்னையை மிஞ்சும் அளவுக்கு ஏதேனும் ஊர் உண்டா என்ன? டென்னிஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவர் டென்னிஸ் டோர்னமெண்டுகளில் கலந்து கொள்ள பல கண்டங்களுக்கு சென்றிருக்கிறாராம். எந்த ஊருக்கு சென்றாலும் அவர் செய்யும் முதல் வேலை அங்கிருந்து சென்னைக்கு ஷார்டஸ்ட் ரூட் என்னவென்பதை பார்த்து வைத்து கொள்வாராம். அவர் மாதிரித்தான் நானும்.
2. வெளிநாடு(கள்) சென்றதுண்டா? அதைப் பற்றி ஏதாவது?
பதில்: என்னைப் பற்றி இவ்வளவு புள்ளிவிவரங்கள் தெரிந்து வைத்துள்ள நீங்கள் என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது என்பதையும் அறிந்திருப்பீர்கள்தானே?
3. தென் திருப்பேரை எங்கிருக்கிறது? அதற்கு தங்களது தனிக்கவனம் வரக்காரணம்?
பதில்: திருச்செந்தூர்-திருநெல்வேலி பாதையில் திருச்செந்தூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் தென்திருப்பேரை உள்ளது. தாமிரபரணி கரையில் அழகு கொஞ்சும் கிராமம் அது. அவ்வூர் மக்கள் மற்றும் அவரை தரிசிக்க வரும் பக்தர்களின் உள்ளம் கவர் கள்வனாம் மகரநெடுங்குழைகாதனைக் காண ஆயிரம் கோடிக் கண் வேண்டும் என்றால் மிகையாகாது. தலப் புராணத்தின்படி வேதவித்துக்களின் வேதபாராயணம் மற்றும் குழந்தைகளின் விளையாடும் ஒலிகளைக் கேட்பதற்காக பகவான் கருடனிடம் சற்றே விலகி அமரும்படிக் கூறினாராம். இதைக் கூறுகையில் நம்மாழ்வார் எழுதுகிறார்:
"வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தி தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர் காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருந்த வேதவொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே"
அவனை நான் முதலில் கண்டது 2005-ல். அப்போதிலிருந்தே என் மனதைக் கவர்ந்தான் அவன்.
4. ‘இடிபோன்ற மௌனம்’ என்றால் என்ன?
பதில்: இதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும்.
ராமநாதனின் வீடு ரயில்வே லைனுக்கு பக்கத்தில். அதில் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு வண்டி செல்லும். அது ஒரு தொழிற்சாலை சைடிங். ஆகவேதான் இவ்வளவு குறைச்சலான போக்குவரத்து. அச்சமயம் ராமநாதனின் வீடே ஆடும். இருந்தாலும் அவனது தூக்கத்துக்கு ஒரு பங்கமும் இல்லை, ஏனெனில் பழகி விட்டது. அன்று ஒரு நாள் மட்டும் ரயில் வரவில்லை. ஒரே நிசப்தம். சரியாக இரவு 12 மணிக்கு ராமநாதன் அலறி புடைத்து எழுந்தான். "அது என்ன சப்தம்" என்று குழறினான். விஷயம் என்னவென்றால் அவனது உடல் அந்த சத்தத்துக்கு பழகி விட்டது. அன்று இல்லாமல் போனதை அவன் உடல் ஏற்றுக் கொள்ளாது அவனை எழுப்பி விட்டு விட்டது. சில சமயங்களில் பதில்களிலிருந்தும் உண்மையைக் கண்டறியலாம். பதில்கள் இல்லாமல் போவதிலிருந்தும் பல உண்மைகளை கண்டறியலாம். ஆக அம்மாதிரியான தருணங்களில் உண்மைகள்தான் இடிபோன்றவை. மௌனம் அவற்றுக்கு ஆகுபெயர் அவ்வளவே.
5. ‘ஜாட்டான்’ என்றால் என்ன?
பதில்: எடுபட்ட பயல், உபயோகமத்த பயல், வெத்துவேட்டு பயல், ஜாட்டான் என்றெல்லாம் சிலரைப் பற்றி பலர் கூறுவர்.
6. இதுவரை எவ்வளவு சினிமா (தியேட்டரில்) பார்த்திருப்பீர்கள்?
பதில்: அது இருக்கும் நூற்றுக்கணக்கில். யார் அதையெல்லாம் கணக்கில் வைத்து கொள்வது? நான் கடைசியாக கணக்கு வைத்துக் கொண்டது சமீபத்தில் 1964-ல், அந்த ஆண்டு 40 படங்கள்.
7. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் செய்வீர்களா?
பதில்: இது என்ன மெனக்கெட்டு ஒரு கொடுமையான கற்பனை? வால்பையன் மெரண்டிட்டாருல்ல.
8. ஆல் இண்டியா ரேடியோ வெளிநாட்டு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்புகள் செய்துள்ளீர்கள், ஜெயா டீவி நேர்காணலில் வந்துள்ளீர்கள், FM ரெயின்போ நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் எப்படி உணர்ந்தீர்கள்?
பதில்: ஃபிரெஞ்சு ஒலிபரப்பின்போது என் தந்தை இல்லையே இதையெல்லாம் பார்க்க என வருந்தினேன். அதுவும் ஒய் டூ கே பற்றிய செய்தி படிக்கும் விஷயத்தில் நான் செய்த சமயோசித மாற்றத்தை அவர் நிஜமாகவே ரசித்திருப்பார். ஜெயா டிவி நிகழ்ச்சிக்கும் மகிழ்ந்திருப்பார். முக்கியமாக அவர் ஸ்டைலிலேயே செயல்பட்டு துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்குகளை கவர் செய்வதை பாராட்டியிருப்பார். மொழி பெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காமில் என்னை நரசிம்மன் என்றுதான் அழைக்கின்றனர். அது என் தந்தையின் பெயர் எனக்கூறி அவர்களை திருத்துவதில்லை. ஏதோ எனது தந்தை இன்னமும் உயிருடன் எனக்குள்ளிருந்து செயல்பட்டு என்னை வழிநடத்துகிறார் என்ற எண்ணம் எனக்கு ஒருவித மனநிறைவையே தருகிறது.
9. முரளி மனோகர் தற்பொழுது என்ன செய்கிறார்?
பதில்: மீண்டும் ஒரு முறை “எங்கே பிராமணன்” பதிவை போடுவதாக அடம் பிடிக்கிறான். என்ன, அவனுக்கு இன்னொரு சான்ஸ் தரலாமா?
10. இந்த 63 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காரணம் என்ன?
மனத்தளவில் எனக்கு 26 வயதுதானே ஆகிறது. சில நாட்களுக்கு முன்னால்ஃபிக்சட் டெபாசிட் சம்பந்தமாக வங்கி ஆஃபீசர் சீனியர் சிடிசன்களுக்கான அதிக வட்டி பற்றி என்னிடம் கூற, நானோ அவர் வேறு யாருக்கோ கூறுகிறார் என நினைத்து சுற்றும் முற்றும் பார்க்க ஒரே சிரிப்புதான் போங்கள்.
வலைப்பதிவுகள் :
1. தமிழில் 740 க்கு மேற்பட்ட பதிவுகள் போட்டிருக்கிறீர்கள், புதிதாக வருபவர்களுக்கு என்ன ஆலோசனைகள் தருவீர்கள்?
பதில்: சமீபத்தில் 1978-ல் Diplôme supérieur ஃபிரெஞ்சு பரீட்சை எழுதிய போது எங்கள் ஆசிரியர் லாற்டே கூறியது நினைவுக்கு வருகிறது. ஒரு வாக்கியத்தை எடுத்து கொள்ள வேண்டும், அதன் எழுவாய், பயனிலை மற்றும் செயப்படு பொருளை சரியான வரிசையில் வைக்க வேண்டும். வேற்றுமை உருபுகளில் கவனம் தேவை. அந்த வாக்கியம் முடிந்ததும், அடுத்த வாக்கியத்துக்கு செல்ல வேண்டும், இப்படியே வாக்கியங்களை அமைத்தால் ஒரு கட்டுரை ஆகிவிடும். பிறகு அடுத்த கட்டுரையை எடுக்க வேண்டும். அது போல ஒவ்வொரு பதிவாக போட்டு கொண்டே வந்தால் கூடிய சீக்கிரம் 740 பதிவுகளை தாண்டலாம். நமக்கென்ன கவலை? கஷ்டமெல்லாம் படிப்பவர்களுக்குத்தானே, இஃகிஃகிஃகி.
2. சொந்த காசு கொடுத்து டொமைன் வாங்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்?
பதில்: எனது மொழி பெயர்ப்பு வெப்சைட்டுக்கு நான் ஆண்டுக்கு 3000 ரூபாய் தருகிறேன். இந்த வெப்சைட் இலவசமே. மற்றப்படி பிளாக்கர் பாவிப்பதால் வலைப்பூ உரலும் இலவசமே.
3. பதிவர் சந்திப்புக்கள் யாரால், எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது?
பதில்: நீங்கள் கூட சந்திப்புக்கு அழைப்பு விடுக்கலாம். நான் விட்டிருக்கிறேன். அவற்றில் ஒன்று பற்றி இங்கே பார்க்கலாம்.
4. திரட்டிகளில் இணைப்பது எப்படி?
பதில்: அந்தந்த திரட்டிகளிலேயே அதற்கான வழிமுறைகளை எளிமையாக கூறியுள்ளனர். அங்கே பார்த்து கொள்ளலாம்.
5. தமிழில் எழுத என்ன எழுத்துரு, மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் எது எளிதாக இருக்கும்?
பதில்: ஒருங்குறி எழுத்துக்கள். மென்பொருள் NHM தமிழ் எழுத்தி. என்னைப் பொருத்தவரை இது அபாரமாக இருக்கிறது. அழகி மென்பொருள் மற்றும் இகலப்பை ஆகியவையும் இருக்கவே இருக்கின்றன.
6. RSS, feeds, twitter என்றெல்லாம் சொல்கிறார்களே அதைப் பற்றி?
பதில்: சத்தியமாகவே எனக்கு அவை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.
7. தங்களது top 10 catagory ல் தங்களது favorite எது?
1. விவாத மேடை 221; 2. டோண்டுவின் அனுபவங்கள் 93; 3. பதிவர் வட்டம் 87; 4. அரசியல் 69; 5. டோண்டு பதில்கள் 62; 6. மொழிபெயர்ப்பு 52; 7. சோ 50; 8. தன்னம்பிக்கை 45; 9. மொக்கை 38; 10. பொருளாதாரம் 37
பதில்: தன்னம்பிக்கை
8. Google Adsense என்கிறார்களே, அப்படியெல்லாம் கூட வருமானம் வருமா?
பதில்: எனக்கு தெரிந்து ஓசை செல்லாவுக்குத்தான் வந்திருக்கிறது.
9. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானே அச்சுக்கு செல்லுமாறு பிளாக்கரில் முன்அமைவு செய்வது எப்படி?
பதில்: பதிவு போடும் பெட்டியின் கீழே இடது பக்கத்தில் Post Options என உள்ளது. அதை க்ளிக் செய்யவும். கீழே வலது பக்கத்தில் Post date and time என இரு தனி பெட்டிகள் திறக்கும். தேதிக்கு கீழே தேதியும், நேரத்துக்கு கீழே நேரமும் செட் செய்ய வேண்டும். சில நாட்களுக்கு பிறகு வருவது போல செட் செய்து பப்ளிஷ் பட்டனை அழுத்தினால், தீர்ந்தது வேலை. இவ்வாறுதான் எனது டோண்டு பதில்கள் பதிவு வியாழனன்று காலை 5 மணிக்கு கில்லி மாதிரி பப்ளிஷ் ஆகிறது. அந்த செட்டிங்கை நான் புதன் இரவிலேயே செய்து விட்டு தூங்கப் போய் விடுவேன். காலையில் 6 மணிவாக்கில் கண்விழித்து கணினியை ஆன்செய்து பிளாக்கரில் உள்நுழைந்து பார்த்தால் டோண்டு பதில்கள் பப்ளிஷ் ஆகியிருந்திருக்கும்.
10. பதிவுகளுக்கு கவர்ச்சிகரமாக பெயர் வைப்பது எப்படி? (உ.தா. “பணவீக்கத்தின் கொட்டைகளை பிடித்த ஹேயக்”)
பதில்: ஹேயக் விஷயத்தில் எனது இந்த ஆங்கில வலைப்பூவின் தலைப்புதான் தமிழில் லோகலைஸ் செய்யப்பட்டது. மற்றப்படி மனதைக் கவரும் வண்ணம் தலைப்பு வைப்பது என் மாதிரி மொழியையே வைத்து பிழைப்பவனுக்கு பெரிய விஷயமே அல்ல.
தேர்தல் :
1. தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்னமும் சினிமா கவர்ச்சி பயன்படுவது பற்றி?
பதில்: கசப்பு மருந்தை தர சர்க்கரை தருவார்கள், ருசியை மாற்ற. அது போலத்தான் இது. ஆனால் என்ன, பல சமயம் மருந்துக்கு பதில் விஷத்தைத் தந்து விடுகிறார்கள்.
2. தன் தலைவர் முதல்வராக நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தும் தொண்டர் பற்றி?
பதில்: அப்படிப்பட்ட முட்டாள்கள் பேசாமல் இருத்தலே நலம்.
3. வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்படும் கோடிக் கணக்கான சொத்துக்கள் பற்றி?
பதில்: அவற்றை ஒருமுறை பார்க்கும் நமக்கே கேறிட்டு வரும்போது, பாவம் வேட்பு மனு பெறும் அதிகாரி.
4. அரசியல் வாதிகளின் சுவிஸ் வங்கி கணக்குகள் பற்றி?
பதில்: அதையும் டிக்ளேர் செய்கிறார்களா என்ன?
5. அரசியல் வாதிகளின் மேல் செருப்பு வீச்சுக்கள் பற்றி?
பதில்: இவர்களுக்கெல்லாம் பெரியார் மாதிரி மனவுறுதி பெற்ற தலைவர்களே சரி. அவர் மேல் ஒரு செருப்பு விழ, இன்னொரு செருப்பும் வராதா எனப் பார்த்து, இரண்டையும் சேர்த்து எடுத்து வந்ததாகப் படித்திருக்கிறேன்.
6. தேர்தல் அறிக்கைகளில் இலவச அறிவிப்புகள் பற்றி?
பதில்; யார் அப்பன் வீட்டு துட்டை யார் இலவச அறிவிப்பாக தருவது என்ற விவஸ்தையேயில்லாது போயிற்றே.
7. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் கட்சிகள் பற்றி?
பதில்: எல்லா கட்சிகளுமே அதைத்தானே செய்கின்றன? ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்களே.
8. நக்ஸலைட்டுகள் தேர்தல் காலங்களில் மட்டும் உத்வேகம் பெறுவது பற்றி?
பதில்: அவர்களது சீன எஜமானர்கள் சொல்வதைத்தானே அவர்கள் கேட்க வேண்டும்?
9. நவீன முறை தேர்தலிலும் கள்ள ஓட்டு புகார் வருவது பற்றி?
பதில்: மனித மன்ம் விசித்திரமானது, எந்த நிலையிலும் மோசடி வேலைகளை செய்ய வழிகள் கண்டுபிடிக்கும்.
10. வாக்குச்சாவடி என்ற பெயர் ஏன்? ‘சாவடி!’ தவிர வேறு நல்ல தமிழ்ச்சொல் ஏதாவது?
பதில்: வாக்களிப்பு மையம்?
சந்துரு:
1) தடித்த வார்த்தையை பிரயோகிப்பவர்களுக்கு நிதானத்தையும் அதன் சிறப்புகளையும் விளக்கி ஒரு பதிவு இடுவீர்களா?
பதில்: தடித்த வார்த்தைகளை உபயோகிப்பவர் முதலில் எவ்வளவு சீண்டப்பட்டார் என்பதையும் பார்க்க வேண்டும். எது எப்படியாயினும் ஒவ்வொருவரும் தத்தம் செயலுக்கு பொறுப்பு. இன்னிலையில் நான் ஏன் அதையெல்லாம் வலியுறுத்தி பதிவிட வேண்டும்?
2) ஒரு பதிவர் (பெரியவர்)வெண்ணை என்றெல்லாம் எழுதுகிறாரே? (ஒரு அனானியை திட்டுகிறாராம்) அவரின் தரம் அவ்வளவுதானா?
பதில்: வெண்ணை மாதிரி நடப்பவனை வெண்ணை என்றுதான் கூறவேண்டும். இதில் பெரியவர் என்ன, சிறியவர் என்ன?
2அ) ஒருவன் குடித்து விட்டு உளறினால் அவனுடன் சண்டை போட நாமும் குடிப்பது போல இல்லையா?
பதில்: இது கேஸ் பை கேஸ் பார்க்க வேண்டிய விஷயம். பொதுவான கருத்தாக கூறவியலாது. இது சற்றே நீட்டிக்கப்பட்டு வேறு மாதிரி உருவெடுக்கும் அபாயம் உண்டு. இருவர் சண்டை போடும்போது, சுற்றிலும் இருப்பவர்கள் கட்டிப்பிடித்து தடுப்பது அவர்களில் பலவீனமாக இருப்பவனையே. அவனை அவர்கள் பிடிக்க பலமானவன் வந்து இன்னும் சில குத்துகள் விடுவான். நான் என்ன கூறுகிறேன் என்றால், முடிந்தால் இருவரையும் பிடி. இல்லாவிட்டால் வேடிக்கை பார்.
2ஆ) வயதுக்கு தகுந்த முதிர்ச்சியை ஏன் ஆண்டவன் எல்லாருக்கும் தருவதில்லை?
பதில்: வயதுக்கும் முதிர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? அவரவர் நடத்தைக்கு அவரவரே பொறுப்பு.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
14 comments:
அரசியல் வாதிகளின் மேல் செருப்பு வீச்சுக்கள் பற்றி?
பதில்: இவர்களுக்கெல்லாம் பெரியார் மாதிரி மனவுறுதி பெற்ற தலைவர்களே சரி. அவர் மேல் ஒரு செருப்பு விழ, இன்னொரு செருப்பும் வராதா எனப் பார்த்து, இரண்டையும் சேர்த்து எடுத்து வந்ததாகப் படித்திருக்கிறேன்
//
வேறு ஒரு பதிலை எதிர்ப்பார்த்தேன்
மக்கள் தங்கள் கோபத்தை சரியான தருணத்தில் காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு அரசியல் வாதிகளின் தரம் தாழ்ந்து விட்டது. நீங்கள் எழுதியிருப்பது என்னவோ அரசியல்வாதிகள் கண்ணியம் மிக்கவர்கள் என்பது போல் காட்டுகிறது
@ ராம்குமார்
இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக கூறிட இயலாது. சிதம்பரத்தின் மேல் எறியப்பட்ட செருப்பை ஜக்தீஷ் டைட்லரின் மேலோ அல்லது சஜ்ஜன் குமார் மீதோ எறியத் துணிந்திருப்பார்களா? சிதம்பரம் இதை கண்ணியமாக எதிர்க்கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இல்லையெனில் செய்த காரியத்துக்கு சாதாரண இபிகோ சட்டப்படியே சில ஆண்டுகள் சிறை தண்டனை நிச்சயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தற்பொழுது தேர்தல் சமயம் , அந்த பத்திரிகையாளர் மேல் கைவைத்தால் ஒட்டுமொத்த சீக்கிய சமுதாய ஓட்டுக்களையும் இழக்க வேண்டும் என்றுதான் அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுதான் நான் சொன்னேன் இப்பொழுது தான் மக்களுக்கு சரியான சந்தர்ப்பம் தங்கள் கோபத்தை வெளிகாட்ட , ஓட்டிற்காக நாய் வாலை நிமிர்த்த சொன்னால் கூட செய்வார்கள் நம் அரசியல்வாதிகள் , இதுவே நிறைய நாள் பதவி இருக்கும் என்றால் பல செருப்பு எறிந்தவர்கள் இப்பொழுது காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார்கள்.
//உள்ளம் கவர் கள்வனாம் மகரநெடுங்குழைகாதனைக் காண ஆயிரம் கோடிக் கண் வேண்டும்//
எங்கிட்ட ரெண்டு தான் இருக்கு!
அதனால அவரு என்னை பார்க்க வரும் போது பார்த்துகிறேன்!
‘ஜாட்டான்’ என்றால் என்ன?
பதில்: எடுபட்ட பயல், உபயோகமத்த பயல், வெத்துவேட்டு பயல், ஜாட்டான் என்றெல்லாம் சிலரைப் பற்றி பலர் கூறுவர்.//
இவர்கள் தேர்தல் நேரத்தில் கடவுளாக கருத்தப்படுவார்கள்!
என்ன பெரிய மனஉறுதி !
இப்போது மக்கள் ஒட்டு போட லஞ்சம் வாங்குகிறார்கள் !
இலவசம் வாங்க உயிரை விடுகிறார்கள் !
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !
நீதிமன்றத்தில் கூட இதெல்லாம் சகஜமப்பா !
இதில் புஷ் என்ன? பசாயத் என்ன ? சிதம்பரம் என்ன ? அத்வானி என்ன ?
மனசாட்சியை விட்டு விட்டால் எல்லாமே தமாஷ் தான் !
//முரளி மனோகர் தற்பொழுது என்ன செய்கிறார்?
பதில்: மீண்டும் ஒரு முறை “எங்கே பிராமணன்” பதிவை போடுவதாக அடம் பிடிக்கிறான். என்ன, அவனுக்கு இன்னொரு சான்ஸ் தரலாமா? //
கூடையில போட்டு மூடி வையுங்க!
@வால்பையன்
நீங்கள் கடவுளை நம்பாவிட்டால் என்ன, அவர் உங்களை நம்புகிறார், எல்லா நல்லவர்களையும் நம்புவது போல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எங் கோமணம் வீசுதடி ஒட்டாவாவிலே ஓ? அது நம்ம தமிழ் மணம் கமழுதடா தலைநகரினிலே? (பகுதி: 1)
- பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
எதிரியைப் பணிய வைக்க. நான்கு வழிமுறைகளை. படிமுறைகளை வேதங்கள் சொல்லி வைத்திருக்கின்றன, சாம. பேத. தான. தண்டம்?
flee-36
முதலில் சமாதானம் பேசுதல், அப்புறமாய். பேதம் பாராட்டி மிரட்டிப் பார்த்தல், சரி வராவிட்டால். கிஸ்தி. திரை. வரி. வட்டி மாதிரி திறை என்ற லஞ்ச தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருவது, எதுவுமே முடியாது போனால். தடியால் அடித்துக் கனிய வைக்க. தண்டனை கொடுக்க யுத்தம் செய்வது,
ஆனால் புலிகளுக்கோ எல்லாமே தலைகீழ். வழமை போல, முதலில் ஆயுதப் போராட்டம் தான் தீர்வு என்று தண்டத்தில் ஆரம்பித்தார்கள், அது சரிப்படுவதாகத் தெரியவில்லை என்றதும். ஐ,தே,க ஆட்சி அமைச்சர்களுக்கும் இராணுவத்தினருக்கும் லஞ்சம் கொடுத்து தகவல்களைப் பெற்று. தற்கொலைத் தாக்குதல் நடத்தி காரியம் சாதிக்கப் பார்த்துச் சரி வராமல். மகிந்த கொடுத்த எழுபது கோடி தானத்தை வாங்கி பதவியில் அமர்த்தினார்கள், அப்புறமாய் ஆப்பிழுத்து. சண்டை ஆரம்பித்ததும். பேதம் பாராட்டி. கிளிநொச்சிக்கு உள்ளுக்க வரவிட்டு அடி இருக்கு என்று மிரட்டிப் பார்த்தார்கள், கடைசியாக புதுமாத்தளனுக்கு வந்ததும். யுத்த நிறுத்தம் வேண்டும் என்று சமாதானம் பேசிப் பார்க்கிறார்கள்,
வெளிநாட்டுப் போராட்டமும் இப்படி ஏதோ ஒரு நான்காவது படி முறைக்கு வந்து விட்டது, முதல் கட்டமாக. சமஷ்டி தீர்வை நோக்கி பேச்சுவார்த்தை நடக்கும் காலத்தில். உலகெங்கும் ஈழம் தான் தீர்வு என்று பொங்குதமிழ் நடத்தினார்கள், (விலாசம்?), அப்புறம் தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில். புலிக்கொடியையும் தலைவரின் படத்தையும் ஒளித்து வைத்து விட்டு. அப்பாவி மக்களின் அழிவைக் காட்டி அனுதாபம் தேடி. கவனத்தை ஈர்த்தார்கள், (யாசகம்?), அது பயனளிக்காமல் போகவே. புலிக்கொடியைத் தூக்கி. கெரில்லா உடையுடன் வீரம் பேசி உரிமைப்போர் நடத்தினார்கள், (வாய்வீச்சு?) அதையும் யாரும் கண்டுக்காமல் போனதும். இறுதிப் போராட்டமாக கண்ணகி நீதி சொல்லு என்று நீதி தவறிய பாண்டியனைக் கொன்று மதுரையை அழித்தது போல. எங்களுக்கு ஒரு பதிலைச் சொல்லு, முடிவு வரும் வரைக்கும் போராட்டமும் உண்ணாநோன்பும் தொடரும் என்று எல்லை குறித்த இன்றைய இறுதிப் போருக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள், (உடன்கட்டை?)
நீதி கிடைக்காவிட்டால். நீதி தவறிய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணுக்கும். கனடிய ஷார்ப்பருக்கும் அவுஸ்திரேலிய கெவின் ரட்டுக்கும் என்ன நடக்கும். பாண்டியன் தலைநகர் மதுரை போல சர்வதேச தலைநகரங்களுக்கு என்ன நடக்கும் என்பதை நினைக்க வயிறு கலங்கும் அளவுக்கு நோர்வே இலங்கைத் தூதுவரக நடவடிக்கைகள் நடந்தேறியிருக்கின்றன,
ஊரைக் கெடுக்கும் கேள்விச்செவியர்கள்
மொழி தெரியாமலோ என்னவோ. புலன் பெயர்ந்த கூட்டம் படிப்பது தமிழ்ப் பேப்பர். இணையத் தளம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்க,,, இவர்கள் எதுவுமே படிப்பதில்லை. வானொலியை மட்டும் கேட்டு ஊரைக் கெடுக்கும் கேள்விச் செவியர்கள் என்ற உண்மை இப்போது தான் புலனாகியிருக்கிறது,
எரிவாயுத் தாக்குதலால் ஐயாயிரம் பேர் இறந்து விட்டார்கள் என்று வானொலிகள் முழங்கித் தள்ள. அவசரம் அவசரமாய் விசயம் அறிய. புலிகளின் இணையத் தளங்களுக்குப் போனால். அங்கே வழமை போல. யுத்தநிறுத்த வலயத்துக்குள் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலி என்ற எண்ணுக் கணக்கு மட்டுமே இருந்தது, ஆனால். வானொலி எங்கும் நேயர்கள் கொதித்துப் பொங்கிக் கொண்டிருந்தார்கள்,
ஏன் இந்தக் குழப்பம்? காரணமே வேறு? புதுக்குடியிருப்புப் போய். புதுமாத்தளனுக்குள் முடங்கிய ஈழத்துக்குள் தான் தலைவர் மக்கள் கவசத்துடன் பதுங்கியிருக்கிறார். அவரைக் காப்பாற்ற உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்காக. ஆளணி திரட்ட கிளப்பி விடப்பட்ட கதை தான் இந்த எரிவாயுத் தாக்குதல். ஐயாயிரம் பேர் கதை?
உலகெங்கும் நடந்த இந்த இறுதிப் போராட்டம் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக. உரிமைப்போர் போராட்டத்திலிருந்து உரிமைப் பேரணியாக டவுன்கிரேட் பண்ணப்பட்டிருக்கிறது,
வரலாற்றில் சில ஏடுகள்?
இன்றைக்கு தினசரி அழியும் மக்களுக்காகக் கண்ணீர் விட்டுக் கொண்டே. தாங்கள் மட்டும் தான். அழிவிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்று விரும்புவது போலவும். மற்றவர்கள் எல்லாம் மகிந்தவுடன் சேர்ந்து இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது போலவும் திட்டிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வரலாற்றிலிருந்து வழிகாட்ட வேண்டிய தேவை உண்டு,
கிழக்கு பிடிபட்டு கிளிநொச்சி வரும் வரைக்கும் உள்ளுக்க வரவிட்டு அடிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த இவர்களுக்கு மூதூரில் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டதோ. பூனகரி வரை மக்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாக்கப்பட்டதோ கண்ணுக்குத் தெரியவில்லை என்பதும். கல்மடுக் குளத்து வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னால் தான் இனப்படுகொலை கண்ணில் தெரிந்ததும் பற்றி தாயகத்தில் முன்பு குறிப்பிட்டிருக்கிறோம், அட. தலைவரல்லோ உதுக்குள்ள அம்பிட்டுப் போனார் என்ற உண்மை தெரிந்த பின்னால் தான் இந்த மக்கள் பற்றிய கவலையும் கண்ணீரும் ஆரம்பித்ததும். இதன் உண்மையான நோக்கமே தலைவரைக் காவாந்து பண்ணுவது தான். உண்மையாகவே அந்த மக்களைக் காப்பாற்றக் கூடிய திறன் புலன் பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்கள் புலிகள் மீது அழுத்தம் பிரயோகித்து மக்களை வெளியேற விடாவிட்டால். அந்த மக்களின் உயிர்களுக்கும் இரத்தத்திற்கும் புலன் பெயர்ந்தவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கியூறியஸ் முன்னரே தெரிவித்திருக்கிறான்,
முகமாலை முன்னரங்கில் எண்ணூறு மீட்டர் முன்னேற முடியாமல் இரண்டு தடவைகள் பெரும் பட்டாலியன்களை இழந்த இராணுவம். மன்னாரில் தொடங்கி பின்புறமாய் வந்து முகமாலையைப் பிடித்ததுமே. உண்மை நிலைமையைப் புரிந்து கொண்டவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் வெளியேறத் தொடங்கினர், தலைவரின் வழிநடத்தலை விட. எதிரியின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து. காலாகாலம் புலிகள் எதிரி என்று படம் காட்டிய சிங்கள இராணுவத்திடம் அடைக்கலம் தேடும் அவல நிலை ஏற்பட்டது, ஆனால் மக்கள் வெளியேறினால் தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த புலிகள் அதை முளையிலேயே கிள்ள முயன்று. வெளியேற முயன்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து. சிலரைக் கொன்றனர்
புலன் பெயர்ந்தவரைச் சுத்தும் புதினம் முதன் முதலாக செய்தி வெளியிட்டது, வெளியேற முயன்ற மக்கள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம்,
அப்பாவிச் சனத்தை ஆமி சுடுகுது என்று பொங்கிய புலன் பெயர்ந்தவர்கள். அந்த மக்கள் ஏன் புலிகளை விட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இடம் பெயர்கிறார்கள் என்று கேட்டதில்லை,
ஈழம் குறுகி முல்லைத்தீவுக்குள் முடங்க முடங்க,,, மரணம் நிச்சயம் என்ற நிலையில் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள. உயிராபத்துக்களுக்கு மத்தியிலும் அதிகளவில் வெளியேறத் தொடங்கினர், ஆனால் புலிகள் என்ன செய்தார்கள். அகதிகளோடு அகதிகளாக தற்கொலைதாரியை அனுப்பி இராணுவத்தைக் குறி வைத்த தாக்குதலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர், தமிழ் மக்களின் அழிவு குறித்து புலிகள் எந்தக் காலத்திலும் கவலைப்பட்டதில்லை. அத்துடன் அந்த மக்களின் அழிவிலும் லாபம் தேட புலிகள் வெட்கப்பட மாட்டார்கள் என்பது மட்டுமல்ல. தங்களுக்கு லாபம் கிடைக்க அந்த மக்களை தாங்களே அழிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதைக் காட்டியது அந்த தாக்குதல்,
ஊடகங்கள் தொலைக்காட்சி மூமாக அந்த அழிவின் படங்களையும் கதறியழும் பெற்றேரின் கண்ணீரையும் அவலக் குரலையும் காட்டிய பின்னாலும். இந்த புலன் பெயர்ந்தவர்கள் புலிகளை ஒரு வார்த்தை கேட்டதில்லை,
அரசு 48 மணிநேர யுத்த நிறுத்தம் அறிவித்து மக்களைப் புலிகள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் கேட்டுக் கொண்ட போது. மக்கள் புலிகளை விட்டுப் போக விரும்பவில்லை என்று நடேசன் வியாக்கியானம் சொன்னதை நம்பிய இந்த புலன் பெயர்ந்த கூட்டம் விளக்கம் எதுவும் கேட்டதில்லை,
அகதிகள் முகாமுக்கு வந்து சேர்ந்த மக்கள் எல்லாம் தப்ப முயற்சிக்கும் தங்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்துவது பற்றி குமுறியது பற்றி மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒன்ராறியோ தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவித்த போது. களத்திலிருந்து வந்த தகவல்படி. ஆழ ஊடுருவும் படையினர் தான் புலிகள் போல மாறு வேசம் போட்டு மக்களைக் கொல்கிறார்கள் என்று புலிவாலுப்பிள்ளை வியாக்கியானம் சொன்ன போது கூட. இன்று கண்ணீர் விடும் புலன் பெயர்ந்தவர்கள் ஒரு வார்த்தை கேட்டதில்லை,
கடற்புலிகள் மீது இராணுவம் தாக்கி அந்த வீடியோவை வெளியிட்ட போது. முல்லைத்தீவில் இருந்து வள்ளங்களில் புறப்பட்ட மக்கள் மீது இராணுவம் தாக்குதல்ழூ
என்று புலிகள் செய்தி வெளியிட்டபோது. மக்கள் தான் வெளியே போக விரும்பவில்லை. உங்களோடு தான் இருக்க விரும்புகிறார்கள் என்கிறீர்களே. அப்படியானால் இந்த மக்கள் யார்? என்று யாரும் கேட்கவில்லை,
யுத்தம் அகோரமடைந்து. தினசரி நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்படும் போது. சர்வதேச அமைப்புகளும் ஊடகங்களும் வன்னியில் பணியாற்றும் தொண்டர்களும் அதிகாரிகளும் புலிகள் யுத்தNனிய வலயத்திற்குள் வைத்து புலிகள் இராணுவம் மீது ஆட்டிலறித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று சொன்ன போதும். யாரும் எதுவும் கேட்டதில்லை, அதை நம்பவும் தயாராக இல்லை, இராணுவத்தோடு சேர்ந்து சென்ற அல் ஜசீரா நிருபர். ஆட்டிலறிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறியும் ரேடார்களை இராணுவம் வைத்திருக்கிறது. அவற்றைப் படம் பிடிக்க இராணுவம் அனுமதிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டதெல்லாம் இவர்களுக்கு தெரிய நியாயமில்லை, மக்கள் மத்தியிலிருந்து ஆட்டிலறிகளை ஏவுவதன் மூலம் இராணுவத்தை மக்களை அழிக்க வைத்து அதை வைத்துப் பிரசாரம் செய்து தங்களைக் காப்பாற்றும் புலிகளின் ஈனப் புத்தி பற்றி யாரும் கேட்டதில்லை,
உலகெங்கும் தலைநகர்களில் கூக்குரல்கள் தொடங்க. சரி. சர்வதேசம் தலையிட்டு. மக்களை வெளியேற்றப் போகிறது, இந்திய. அமெரிக்க கப்பல்கள் வரப் போகின்றன என்றதும். பிளேட்டை மாற்றி. சீசீ. வேண்டாம், மக்களை அவர்களின் பூர்வீக மண்ணிலிருந்து வெளியேற்றுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது, எங்களுக்குத் தேவை யுத்த நிறுத்தம் தான் என்று கூச்சல் போடத் தொடங்கிய போது தான் உங்கள் உண்மையான சுய்ருபமே வெளியில் வந்தது,
உங்கள் நோக்கம் அந்த மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்துவதல்ல. அந்த மக்களின் அழிவைக் காட்டி புலிகளைக் காவாந்து பண்ணுவது தான் என்ற உண்மை உலகுக்கு தெரிய வந்தது,
திருகுதாள வண்டவாளம்
மக்கள் வெளியேற விரும்பவில்லை. புலிகளோடேயே இருக்க விரும்புகிறார்கள் என்ற அண்டப்புழுகு காலியாகி. பல்லாயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக. இராணுவத்தையும் சிங்கள அரசையும் நம்பி வெளியே வரத் தொடங்க. அவர்களுக்கு தற்காலிக முகாம்களை அரசு அமைத்த போது. தங்களுடைய வண்ட வாளங்கள் வெளியே வந்து விடும் என்பதற்காக. மக்கள் வெளியேறும் உண்மையை மறைத்து கவனத்தை திசை திருப்ப. புதிய கதைகளை அவிழ்க்கத் தொடங்கினர்,
வந்த அகதிகள் பி,பி,சிக்கு அளித்த பேட்டியில் தாங்கள் புலிகளிடம் பட்ட அவலம் பற்றிக் குறிப்பிட்டதும். அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள முகாமில் உள்ளவர்கள் எப்படி உண்மையைச் சொல்ல முடியும் என்று குவியந்த போக்கஸ் செய்தார்கள்,
இளம் பெண்கள் கடத்திக் கற்பழிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். அனுரதபுரத்தில் புதைக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிகளின் கர்ப்பத்தைக் கலைக்க இராணுவம் வற்புறுத்துகிறது என்றெல்லாம் எந்த ஆதாரங்களும் இல்லாமல். வெறுமனே சிங்கள ஊடகங்கள் தெரிவிப்பு என்று கதை விடத் தொடங்கினார்கள், அப்போது கூட யாருமே. வெளியேற விரும்பாத மக்கள் எப்படி பல்லாயிரக்கணக்கில் வரக்கூடும் என்று கேட்டதில்லை,
மக்கள் முகாம்களில் அவலப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டதும். சர்வதேச தூதுவர்களைக் கூட்டி வந்து சுற்றிக் காட்டியதும் அவர்கள் முகாம்களின் நிலைவரங்கள் குறித்து திருப்தி தெரிவித்தால் விடுவார்களாh புலிப் பினாமிகள் தூதுவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக சில முகாம்களில் விசேட கவனிப்பு என்று தேசியக் கூட்டமைப்பின் டெலோ செல்வம் அறிக்கை விட்டார், அப்புறமாய். முகாம்களைப் பார்வையிட்ட வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் முகாம்களில் நல்ல வசதிகள் உள்ளன என்று சொன்னதும். அகதிகள் பக்கம் தலை வைத்தே படுக்காத தமிழ்த் தேசிய பா,உக்கள் சேர்ந்து அவரை மொத்தியும் மிரட்டியும் மௌனமாக்கினர்,
ஆக மொத்தத்தில். யார் சொல்லும் எந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் புலிகளைத் தவிர. (அவர்களின் தமிழக. புலன் பெயர்ந்த முகவர்கள் உட்பட) நீங்கள் நம்பும் வேறு யாரையாவது எங்களுக்குக் காட்ட முடியுமா
இன்று வரைக்கும் இத்தனை ஆயிரம் பேர் அகதிகளாக. புலிகளால் துப்பாக்கிச் சூடுகளுக்கும் தப்பி வந்து சேர்ந்திருக்கிறார்களே கொட்டும் மழையில் குழந்தைகளும் வயோதிபர்களுக்கும் மட்டுமன்றி. இளம் தந்தைகளும் நடுங்கிக் கொண்டு இராணுவத்தின் கையைப் பிடித்து தப்பும் காட்சிகளைக் காண்கிறோமே இந்த மக்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள் வானத்திலிருந்தா இல்லையே? மக்கள் போகவிரும்பவில்லை என்று நடேசன் சொன்ன அந்த புலிக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தானே,
எம்மவருக்கு இல்லாத இரக்கம். எதிரிக்கு இருக்கும் என்ற அற்ப நம்பிக்கையில் தானே? அந்த நம்பிக்கையில் தானே உயிரைப் பணயம் வைத்து கழுத்தளவு தண்ணீரில் குழந்தைகளையும் காயம் பட்டவர்களையும் தூக்கிக் கொண்டு கையில் தூக்கிய சிறுபையோடு வந்து சேர்ந்திருக்கிறார்கள், இதைக் கண்ட பின்பும். இல்லை. மக்கள் புலிகளோடு தான் இருக்க விரும்புகிறார்கள் என்று உங்களால் எப்படிக் கூச்சலிட முடிகிறது
உண்மை. புலிகளை விட்டு வெளியேற முடியாமல் ஒரு தொகையினர் இன்றும் அங்கே உள்ளார்கள், தலைவர்களின் குடும்பத்தினர். இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினர். புலிகளோடு தங்களை முழுமையாக அடையாளம் காட்டியதால் பழிவாங்கல் பற்றிய அச்சம் கொண்டவர்கள். மாவீரர் குடும்பத்தினர் எனப் பலர். பேய்க்கு வாழ்க்கைப் பட்டதால் புளியமரத்தில் ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்,
இந்தக் கட்டத்தில் அவர்கள் தவிர்ந்த. போக விரும்பிய மற்றவர்களைச் சுதந்திரமாகப் போவதைத் தடுப்பதற்காக. அவர்களைக் கொலை செய்யத் தயங்காத புலிகளை காவாந்து பண்ணுவதற்காக. அந்த மக்களின் உயிரிழப்பை பயன்படுத்துவது குறித்து உங்களுக்கு வெட்கம் எதுவும் இல்லையா?
அரசாங்கம் அகதிகளை ஐ,நா சாசனங்களின்படி அகதிகளுக்கு வழங்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் கவனிக்கவில்லை என்பது உண்மை தான், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திர நடமாட்டம்ழூ மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை தான், ஆனால் அரசாங்கம் சுதந்திரமாக வெளியேற விட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அகதிகளோடு வந்து சேர்ந்து நாடெங்கும் குண்டு வைத்து அந்த மக்களுக்கு இன்னமும் நாசம் பண்ணியிருப்பீhகள், இதையே காரணம் காட்டித் தானே அரசாங்கம் மக்களைத் தடுத்து வைத்திருக்கிறது,
இத்தனை துள்ளு துள்ளுகிறீர்ளே? அரசாங்கம் வந்த அகதிகளைக் கவனிக்காமல் மரங்களுக்கு கீழும் பாதையோரங்களிலும் படுக்க விட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு புறமுதுகிட்டு ஓடும்போது மிரட்டி அழைத்துச் சென்ற மக்களுக்கு நீங்கள் என்ன இடைத் தங்கல் முகாம்களா வழங்கிக் கவனித்தீர்கள்? மரங்களுக்கும் முட்பற்றைகளுக்கும் காடுகளுக்கும் இடையில் படுத்த மக்கள் உங்கள் மிரட்டலையும் மீறி தேவாரங்களுடனும் பக்திப்பாடல்களுடனும் வெள்ளைக்கொடியுடன். அடக்குமுறை இராணுவத்திற்கு உங்களை விட பகுத்தறிவும் இரக்கமும் இருக்கும் என்று நம்பி வந்து சேரவில்லையா?
சமாதான காலத்தில் மட்டும் என்னத்தைக் கிழித்தீர்கள் குடும்பத்தினரைப் பிணை வைத்துப் பாஸ் கொடுத்து மக்களை மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு தடை விதித்தது யார்? நீங்கள் தானே? அந்த மக்களை அன்று வெளியேற விட்டிருந்தால். தண்ணீர் வற்றிய மீன்கள் போல இன்று கருவாடாகியிருப்பீர்கள்,
இன்று அரசாங்கம் மீது சுமத்தும் அதே குற்றங்களை நீங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்திருக்கிறீர்கள், அது பற்றி உங்களுக்கு எந்த வெட்கமும் இருந்ததில்லை, இதற்குள் அரசாங்கத்தைக் குற்றம் சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, அதைச் சொல்வதற்கான உரிமை அகதிகளாக வந்து சேர்ந்த மக்களுக்கு மட்டும் தான் உண்டு,
தொடங்கியது உரிமைப்போர்?
இந்த லட்சணத்தில் வன்னிப்புலி எஜமானர்களும் அவர்களின் புலன் பெயர்ந்த ஏவல்நாய்களும் சேர்ந்து மக்களை ஒன்று திரட்டி இன்று உலகெங்கும் நடத்தும் போராட்டம் ஒரு கேலிக்கூத்தாகி விட்டது,
இஸ்ரேலியர்களும் எரித்திரியர்களும் சேர்பியர்களும். ஏன் முகாபேயும். முழு உலகும் தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகின்றன என்று குற்றம் சாட்டுவது போல. தமிழர் போராட்டத்தை அழிக்க சர்வதேசம் சதி செய்கிறது. புலிகளை அழிக்க மகிந்தவுடன் சேர்ந்து இந்தியா சதி செய்கிறது என்று நோர்வே. பிரிட்டன். ஐரோப்பிய ச்முகம். அமெரிக்கா. ஜப்பான். சீனா என்று முழு உலகும் தங்களை அழிக்கச் சதி செய்வதாக புலிகளும் அவர்களின் ஊடகங்களும் ஆய்வாளர்களும் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கின்றனர், ஏதோ சர்வதேச சதியினால் தான் தமிழீழம் கைக்கெட்டவில்லை. இல்லாவிட்டால் தலைவர் பகைவர் கூட்டத்தைப் பந்தாடி விட்டு. தமிழீழத்தை தங்கத் தாம்பாளத்தில் கொண்டு வந்து தனக்கு முடி சூடியிருப்பர் என்று இந்த ஊடக. ஆய்வாளக் கூட்டம் சுத்தத் தொடங்கி விட்டது,
தமிழர் உரிமைப் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கும் சர்வதேச சதி வலைப் பின்னலை உடைத்துக் கொண்டு தலைவர் பேச்சுவார்த்தையை விட்டு வெளியே வந்து விட்டார் என்று பீற்றிக் கொண்டவர்கள் இன்று மறுபுறத்தில். தலைநகர்கள் எங்கும் கவன ஈர்ப்பு. உண்ணாவிரதம். தீக்குளிப்பு என்று கூழ்முட்டை வீசுகிறார்கள், எதற்காக? சர்வதேசம் தலையிட்டு புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக?
நான்காவது இராணுவத்தை விரட்டினோம் என்று பீற்றியவர்கள் மறுபுறம். இன்று மகிந்த அரசுடன் சேர்ந்து புலிகளை அழிக்க இந்தியா சதி செய்கிறது என்று தமிழகம் எங்கும் தங்கள் கூலிக்கு மாரடிக்கும் கும்பலை வைத்துக் கொண்டு தீக்குளித்து ஒப்பாரி வைக்கிறார்கள், இந்தியாவுக்கு நாங்கள் தான் உண்மையான நண்பர்கள். புலிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று உலகின் இந்திய தூதுவரகங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், எதற்காக? இந்தியா ஆயுத வினியோகத்தை நிறுத்தி தங்களை காவாந்து பண்ண வேண்டும் என்பதற்காக?
புலிகளை இராணுவ ரீதியில் வெல்ல முடியாது. அவர்களோடு பேசித் தான் தீர்வு காண வேண்டும் என்று சொன்னதற்காக. கிளிநொச்சிக்கு அகாசியை வர விட வேண்டும். எரிக் சொல்கெய்மை வர விட வேண்டும் என்று கூச்சல் போட்டவர்கள் இன்று அவர்களைத் துரோகிகள் என்று கூழ்முட்டை எறிகிறார்கள், எதற்காகடூ தங்களை ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடையச் சொன்னதற்காக?
இந்த முரண்பாடுகள் உங்கள் தலையைச் சுற்றினால். உங்களுக்கு பகுத்தறிவு கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது என்று அர்த்தம்,
ஏன் இந்த முரண்பாடுகள் தேசியத் தலைவரால் தன்னைக் காப்பாற்ற முடியாது. வெளியார் தலையிட்டு இராணுவ மூர்க்கனை நிறுத்தினால் தான் தப்ப முடியும் என்ற உண்மை தெரிந்ததால் தான் தாங்கள் கேடயமாக்கிப் பலி கொடுக்கும் தமிழ் மக்களைக் காட்டி இன அழிப்பு நடக்கிறது என்று கூறி. அன்னியத் தலையீட்டை வேண்டி நிற்கிறார்கள்,
அப்போதும் என்ன சொல்கிறார்கள் பிரபாகரனே எங்கள் தலைவர். புலிகளே எங்கள் விடுதலைப் போராளிகள்?
தன்னைத் தானே காப்பாற்ற முடியாமல் தன் உயிரைப் பாதுகாக்க மக்களைப் பலி கொடுப்பவர் மக்களின் தலைவனாம், உயிர் காத்துக் கொள்ள வெளியேறும் மக்களை சுட்டுத் தள்ளும் புலிகள் விடுதலைப் போராளிகளாம்,
அதையும் யாருக்குச் சொல்கிறார்கள் புலிகள் மக்களை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்துகிறார்கள். அந்த மக்களின் குழந்தைகளை கட்டாயமாகப் படையி;ல் சேர்க்கிறர்கள். மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று சொன்ன சர்வதேச சமுகத்திற்கும் ஐ,நாவுக்கும்?
இந்த முரண்பாடுகள் புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு புரியாது என்பதில் புலிகளுக்கு அப்படியொரு நம்பிக்கை, சர்வதேச சதி என்றால். சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கேட்டு. துன்பத்தை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள், இந்தியா மகிந்தவுடன் சேர்ந்து சதி என்றால். இந்தியா புலிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள் என்று யாரும் வாய் திறக்க மாட்டார்கள்,
இன்னைக்கு பந்தாம் அதனால வெளியே கிளம்பி நாட்டு நடப்பு எப்படியிருக்குன்னு ஒரு பதிவு போட்டா எங்களுக்கு உதவியாய் இருக்கும் இல்லையா?
வெயிலு அதிகமா இருக்கும் குடை எடுத்துகிட்டு போங்க!
அருமையான கேள்விகளுக்கு அருசுவையான பதில்கள் டோண்டு சார்.
என் கேள்விகளுக்கு பதில் கொடுத்ததற்கு நன்றி.
அனைத்து பதில்களும் சூப்பர், மிகவும் ரசித்தேன்.
மாசற்ற: நிமலன் என்றே அழைக்கப்படுபவன் அல்லவா... வள்ளுவரும் மனத்துக்கண் "மாசிலன்" என்றே குறிபிடுகிறார். மாசில் வீணையும் என்று தானே பாடப்படுகிறது ஈசன் எந்தை இணையடி நீழல்!
சாவடி: நாற்பதாவது சம்ஸ்காரத்தின் வேலைகள் அல்லது "post evapourative care" நடக்கும் இடம்.
சத்திரம் - அபார[நல்ல] கார்யங்கள்;சாவடி-அபர கார்யங்கள்.
வெண்ணெய்:http://erodenagaraj.blogspot.com/2009/04/blog-post_11.html
டோண்டு பதில்கள் 30.04.2009 க்கு எனது கேள்வி.
ஜெயலலிதா வெற்றிக்காக இவ்வளவு துரம் தரம் தாழ்ந்து(புலிகளின் தனி ஈழத்துக்கு ஆதரவு) போவார் என்று நீங்கள் நினைத்திருந்தீர்களா?
Post a Comment