போன வார பதில்களை (23.04.2009) நான் திங்களன்றே (20.04.2009) முடிவாக எழுதி அடுத்த வியாழனன்று வருமாறு செய்தேன். ஏனெனில் அப்போது வெளியூர் செல்ல வேண்டிய நிலை, வியாழனுக்குள் திரும்புவேனா என சொல்லவியலாத நிலை. அது மிகவும் சௌகரியமாக அமைந்தது. இந்த வாரம் அப்படி ஏதும் இல்லாவிட்டாலும், அதே மாதிரி திங்களன்றே செய்து வைத்து விட்டேன். இனிமேல் நான் ஒன்றும் செய்யாமல் போனாலும், ஒரேயடியாக இல்லாமலே போனாலும் பதில்கள் வரும் வியாழனன்று காலை 5 மணிக்கு பிரசுரமாகும். ஒரே ஒரு மாறுதல் என்னவென்றால், ஏதேனும் சேர்க்க வேண்டியிருந்தால் அதற்கும் தடை இராது. அவ்வாறு ஒவ்வொரு முறை செய்யும்போதும் அதை கடைசியில் நேரத்துடன் குறிப்பிடுவேன்.
எம்.கண்ணன்:
1. சில தினங்களுக்கு முன் மதுரையிலிருந்து போன் செய்த நண்பர், மதுரையில் இரண்டு கண்டெயினர் லாரிகளில் வைடமின் 'ப' வந்து இறங்கி நின்றுகொண்டிருப்பதாகவும், இது அங்குள்ள வருமானவரி அலுவலகத்திற்கும் தெரியும் என்றும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் ஆட்டம் கிளோஸ் என்பதால் மௌனமாக உள்ளனர் என்றார். ஒரு கண்டெயினரில் சுமாராக எவ்வளவு இருக்கும்? எங்கிருந்து வரும் இவ்வளவு?
பதில்: என்ன சார் இது? எனக்கெப்படி தெரியும்? முன்னே பின்னே கண்டைனரில் ரூபாயெல்லாம் நிரப்பி அனுப்பிய அனுபவம் எல்லாம் எனக்கு மட்டும் இருக்கிறதா என்ன? சரி கேட்டுவிட்டீர்கள். ஒரு ஆயிரம் ரூபாய் செக்ஷன் (ஒரு லட்சம் மதிப்புடையது) சில கன செண்டிமீட்டர்கள் (x) கொள்ளளவு எடுக்கும். ஒரு கண்டைனரின் கொள்ளளவு (Y) கன செண்டி மீட்டர்கள். ஆக கண்டைனரில் Y/x ஆயிரம் ரூபாய் செக்ஷன்கள், அதாவது அத்தனை லட்ச்ங்கள்.
2. நாகர்கோவில், நெல்லை, சங்கரன் கோவில், தூத்துக்குடி என எல்லா மேடைகளிலும் ஜெ. ஒரே பேப்பரையே திரும்பப்படித்து பேசுகிறாரே? அவருக்கே போரடிக்கவில்லையா? அதே வார்த்தைகள், சொற்றொடர்கள், கேள்விகள். மூச்சுக்கு முன்னூறு தடவை கருணாநிதி? ஏன் இந்தக் கத்தல் கத்துகிறார்? துளிக்கூட ஒரு நகைச்சுவையோ, மக்களை தொண்டர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பேச்சு இல்லையே?
பதில்: அதுதான் ஜெயலலிதாவின் பலவீனம். பேச்சு திறமை எதுவும் கிடையாது. நன்றாக ஆங்கிலம் அறிந்தவர் என்ற பெத்த பெருமையை வைத்திருக்கிறார் அவ்வளவே. ஆனால் அவற்றையும் ரசிக்கும் தொண்டர்களை வைத்திருக்கிறார். அதுதான் அவர் பலம். கூடவே தகவல்களை கோர்வையாகக் கூறுவார். தமிழில் எல்லாம் சீப்பாக விளையாட மாட்டார். அவையும் அவரது பலமே.
3. தயாநிதி மாறன் - வைரமுத்து - காபி வித் அனு - விஜய் டிவி பார்த்தீர்களா? மிகவும் இயல்பாகவும், நன்றாகவும் இருந்தது.
பதில்: நான் சாதாரணமாக விஜய் டிவி பார்ப்பதில்லை. ஆகவே இந்த நிகழ்ச்சியும் பார்க்கவில்லை. இனிமேல் பார்க்க முயற்சி செய்கிறேன்.
4. கவுதம் வாசுதேவ மேனன் - இவரின் 'வேட்டையாடு விளையாடு' படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. இவரை நம்பி எப்படி க்ளவுட் நயன் பிக்சர்ஸ் என அழகிரியின் மகன் தயாநிதி படக் கம்பெனியை ஆரம்பித்து படம் வெளியிட்டார்? வாரணம் ஆயிரம் - அதுவும் கிட்டத்தட்ட ஒரு மாதிரியான ஸ்லோ மூவிங் படம். சைக்கோத்தனம், மனப் பிறழ்வு, செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம் - இதைத்தான் இவரால் எடுக்க முடியுமா? சைக்கோத்தனமான த்ரில்லர் ஒன்று எடுக்கப் போகிறாராமே ?
பதில்: கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தையா குறிப்பிடுகிறீர்கள்? நான் பார்த்தேனே. எனக்கு பிடித்தது, ஆனால் மறுமுறை பார்க்க இயலாது. ரொம்பவுமே அதிகமாக வன்முறை. ஆனால் அதெல்லாம் பிடிக்கும் ஆட்கள் நிறைய இருக்கிறார்களே.
5. கருணாநிதியின் பிரபாகரன் பற்றிய பல்டி பற்றி தங்கள் கருத்து என்ன ? NDTVயில் பேட்டியில் அவர் சொன்னது முழுவதும் பதிவாகியிருக்கிறதே? ஒளிபரப்பினரே? பின்பு எப்படி பல்டி அடிக்கிறார்?
பதில்: எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் அவர் மட்டுமல்ல, எல்லா தமிழக அரசியல்வாதிகளுமே உள்ளனர். ஸ்ரீலங்கா நிகழ்வுகள் கொடூரமானவை. ஈழத் தமிழர்கள் நிலை பரிதாபத்துக்குரியதே. எல்லாம் சரிதான். ஆனால் அவை தமிழக தேர்தலில் வாக்காளர்களுக்கு முக்கிய இஷ்யூவாக இல்லை. அதை வெளிப்படையாக சொல்ல யாருக்கும் துணிவு இல்லை. அவ்வளவுதான் ஆளை விடுங்கள்.
6. காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம் பட நாயகி 'காஞ்சனா' பற்றி உங்கள் கருத்து - சுமார் 4 - 5 வரிகளில்? அவரின் தற்போதைய தோற்றத்தை ஜெயா டிவியில் பார்த்தீரா? (திரும்பிப் பார்க்கிறேன்)
பதில்: புதுமுகம் காஞ்சனா என சமீபத்தில் அவர் 1964-ல் வந்த காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானார். அப்போதிலிருந்தே அவர் நடித்த எல்லா படங்களையும் அவதானித்திருக்கிறேன். எனக்கு பிடித்த நடிகை. ஆனால் தன் குடும்பத்தினரால் வஞ்சிக்கப்பட்ட துரதிர்ஷ்டசாலி. பணத்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து கொள்ளத் தவறியதால் வந்த வினை. இப்போதைய தோற்றத்தில் கண்ணியமாகவே இருக்கிறார்.
7. தற்போதைய டாப் 10 வலைப்பதிவர்கள் யார் யார்? உங்கள் ரேட்டிங்கில்? ஏன்?
பதில்: இந்த ரேட்டிங்ஸ் எல்லாம் எனக்கு ஒத்து வராது ஸ்வாமி. மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு பிடித்த பிளாக்குகள் எனது ப்ளாக் ரோலில் உள்ளன.
8. சுஜாதாவின் இளவல் போல எழுதும் இரா.முருகனை விகடன், குமுதத்தில் ஏன் பயன் படுத்திக் கொள்வதில்லை? குங்குமத்தில் 'அற்ப விஷயம்' என்ற வாரப் பத்தி எழுதுகிறார்). லக்கிலுக் சொன்னது போல் இலக்கியவாதி என முத்திரை குத்திவிட்டனரோ?
பதில்: இக்கேள்விக்கு பதிலளிக்க இரா முருகன் அவர்களுடன் தொலைபேசினேன். சுஜாதா குமுதம் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது தான் எழுதியதாகவும், அவர் இறந்ததும் அவரைப் பற்றி எழுத குமுதம் ரிப்போர்டரில் கேட்டார்கள் எனவும் கூறினார். இப்போது ஸ்பெஷலாக ஏதும் அமையாததால் மட்டும் குமுதத்தில் தான் எழுதுவதில்லை என்றார். குங்குமத்தை பொருத்தவரை அவரது தொடர் 30 பகுதிக்குத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் இப்போது முடிந்து விட்டதாகவும் கூறினார். என்னைப் பொருத்தவரை, இதெல்லாம் சப்ளை அண்ட் டிமாண்ட், மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை ஆகியவற்றை பொருத்து உள்ளது. மற்றப்படி இரா முருகனின் எழுத்துக்கள் அபாரமாக உள்ளன. அவருக்கான டிமாண்ட் பல இடங்களில் அப்படியே உள்ளது.
9. எந்த நாளிதழின் தேர்தல் கவரேஜ் நன்றாக இருக்கிறது? த ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினகரன், தினமலர், தினமணி, தினத்தந்தி, மாலை மலர்? டைம்ஸ் ஆப் இண்டியா, டெக்கான் கிரோனிகிள்?
பதில்: நான் ஹிந்து மட்டும்தான் வாங்குகிறேன். அதையே சரியாக படிப்பதில்லை. ஆகவே இக்கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
10. சன் டிவியில் இன்னமும் ஜெயலலிதா பேச்செல்லாம் ஒளிபரப்புகிறார்களே? டபுள் கேமா?
பதில்: அப்படியா, எனக்கு தெரியவில்லையே. எது எப்படியானாலும் மாறன் சகோதரர்கள் மனத்தால் முகவிடமிருந்து பிரிந்தாகி விட்டது. இப்போது ஒட்டியது காரியத்துக்குத்தான். பழைய ஒற்றுமையின் பலம் இனி திரும்ப வராது.
கிருஷ்ணன்:
1. Do you read Justice Krishna Iyer's articles in The Hindu? If so, your comments on his writing style please.
பதில்: இல்லை ரெகுலராக படித்ததில்லை. படித்த அளவில் அவரது ஆங்கில நடை நன்றாகவே உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். 1975-ல் இந்திரா காந்தி பதவி இழப்பு வழக்கில் அவர் இந்திரா காந்திக்கு எதிரான தீர்ப்பை நிறுத்திவைத்து அவசர நிலையை இந்திரா கொண்டு வருவதற்கு ஒரு காரணமாகி விட்டார். அதற்கான விலை அடுத்த 19 மாதங்களுக்கு ஜனநாயக படுகொலை.
2. Can Chiranjeevi do a NTR in Andhra Pradesh this time?
பதில்: எல்லோருமே என்.டி.ஆர். அல்லது எம்.ஜி.ஆர் ஆகமுடியுமா?
3. Comedian Janakaraj is no longer seen on screen nowadays, any idea of his whereabouts?
பதில்: நான் விசாரித்த அளவில் அவருக்கு இப்போது மார்க்கெட் இல்லை என்றுதான் அறிகிறேன். பை தி வே, ஜனகராஜ் பற்றி பேசும்போது ஒரு டிராமாவில் எஸ்.வி.சேகர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
அதில் சேகரிடம், தான் மணக்க விரும்பும் பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை ஒருவன் கூறுவான். மூக்கு இந்த நடிகை போல, கண்கள் இந்த நடிகை போல என ஒரு லிஸ்டே அடுக்குவான். எஸ்.வி.சேகர் இதையெல்லாம் பொறுமையாக கேட்டு விட்டு, “ நீ சொல்லறதையெல்லாம் பொருத்தி பார்த்தால் லேசா ஜனகராஜுக்கு பொம்பளை வேஷம் போட்டா மாதிரி இருக்கு” என்று கூறுவார். அந்த நாடகத்தின் பெயரை மறந்து விட்டேன். யாரேனும் கூறினால் தன்யனாவேன்.
சேதுராமன்: (29.04.2009)
1. நடந்து கொண்டிருக்கும் கோடை நாடக விழாவில் உங்களுக்கு மிகவும் பிடித்தது (அ) மெரினா மேடையில் மு.க. (ஆ) மதுரையிலே இளவல் குழு (இ) ஜெ.ஜெ.அம்மா குழு (ஈ) தோட்டத்திலே மருத்துவரய்யா (உ) சிவகங்கை சிதம்பரம் குழு?
பதில்: இசுடாலினை விட்டு விட்டீர்களே. கோபித்து கொள்ள போகிறார். மற்றப்படி போட்டியெல்லாம் பலமாகவே உள்ளது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
2. க்வாட்ரோச்சிக்கு அடுத்தது 'பத்மஸ்ரீ' தானா? மனுஷனுக்கு சரியான மச்சம்!! தொட்டதெல்லாம் கரைந்து போகிறதே?
பதில்: செய்தாலும் செய்வார்கள். இத்தாலிக்காரர்கள் காலில் விழுந்து கிடக்கும் காங்கிரசார்கள் இருக்கும் வரை எது வேண்டுமானாலும் நடக்கும். இத்தனை பணத்தை முடக்கி வைத்ததற்கு அந்த மனிதருக்கு நஷ்ட ஈடு தந்தாலும் தருவார்கள்.
3. இந்திய சட்ட அமைச்சர் பாரத்வாஜ் பேசியதைக்கேட்டீர்களா? இந்தியா அட்டார்னி ஜெனரல் மிலான் பானர்ஜி கொடுத்த கருத்தின் பேரில் தான் இந்த நடவடிக்கை என்று! அட்டார்னி ஜெனரல்கள் யார் - அந்தந்த அரசுகளால் நியமிக்கப் பட்டவர்கள்தானே?
பதில்: தியரிட்டல்லாக அந்த பதவிக்கு அடானமி உண்டு.
4. சிறுபான்மைப் பிரதிநிதியொருவர், மு.க.வுக்கு மஞ்சத்துண்டு போர்த்தியதைக் கண்டீர்களா? ரிசர்வேஷனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?
பதில்: அதையெல்லாம் செய்து ரிசர்வேஷன் பெற்று, பின்னால் கட்சிக்கு ஆதரவு தருவார்கள். இதற்கு பெயர்தான் quid pro quo.
அனானி (30.04.2009, அதிகாலை 01.25-க்கு கேட்டவர்):
1. ஜெயலலிதா வெற்றிக்காக இவ்வளவு துரம் தரம் தாழ்ந்து(புலிகளின் தனி ஈழத்துக்கு ஆதரவு) போவார் என்று நீங்கள் நினைத்திருந்தீர்களா?
பதில்: ஜெயலலிதா ஒரு பக்கா அரசியல்வாதி. வேறென்ன அவரிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்?
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
17 comments:
பதில்கள் யதார்த்தமாக இருக்கின்றன. எனக்கு மகவும் பிடித்தது.
அன்புடன்,
சூடான இடுகையில் மீண்டும் இடம் பெற வாழ்த்துகள்
வெறும் அரசியல் கேள்வியா இருக்கே!
எனக்கு ஒண்ணுமே புரியலையே!
தேர்தல் ஜூரமோ ??? ஒரே அர்சியல்...
அது எஸ் வீ சேகரின் "யாமிருக்க பயம் ஏன்?" ஓய்
pl give mature answer . otherwise through it. i readed because of your age . the answer shows your immaturity and no knowlegde in subjects.
FOr டோண்டு பதில்கள்
ஸ்வாமின், என் மனம் கவர்ந்த எழுத்தாளர் மறைந்த திரு. ராஜேந்திர குமார் பத்தி எதாவது எழுதுங்கோ? ( "ங்கே" னு "மூஞ்சியெல்லாம் மூக்கு" எல்லாம் அவருடைய முத்திரை வார்த்தைகள் )
I would like to make the following announcement:
By the Grace and Divine Blessings of Lord Shri. Aamaruviappan and Thayar, the annual Chitra Powrnami Utsavam has been scheduled to be held on 9.5.2009 at Therazhundur. This has been organised by the hereditary trustee of this festival, Shri. S.R. Krishnaswamy son of Shri. Ramaswamy Iyengar of Rajagopalapuram. The devotees are requested to attend the festival and get the divine blessings of Perumal and Thayar.
----------------------------------------------
Contact address of Shri. S. R. Krishnaswamy
Flat 5, First floor, Akila Apartments,
Ranga Nagar,
2 Dr. V. Subramania Iyer Street,
Srirangam
Tiruchirappalli 620006.
Phone: 0431-2431664
9443905394
-----------------------------------
Namaskarams
Vijayalakshmi Raghavan
d/o Shri. S. R. Krishnaswamy
//Lord Shri. Aamaruviappan and Thayar, //
என்னான்னு முழுசா புரியல!
ஆனா ஒரு வாழும் மனிதரை கடவுளாக்கும் முயற்சி மாதிரி தெரியுது!
மனுஷ பயலுக்கு மனித உருவில் கடவுள் இருப்பது போல், அய்யங்காருக்கு ஒரு அய்யாங்காரு தான் கடவுளா ஆகனுமோ!
அப்ப மத்தவங்க எதுக்கு பார்ப்பனீய சாமிய கும்பிடனும்?
@வால்பையன்
இது தேரழுந்தூரில் சித்ரா பௌர்ணமி உத்சவத்துக்கான அறிவிப்பு அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//@வால்பையன்
இது தேரழுந்தூரில் சித்ரா பௌர்ணமி உத்சவத்துக்கான அறிவிப்பு அவ்வளவுதான்.//
அங்கே அருள் பலிக்க போவது யாரு?
வாழும் மனிதர்கள் பெயர் மாதிரி தெரிந்ததே!
அந்த ஊர் பெருமாள் ஆமருவியப்பன் என அழைக்கப்பட்டு செங்கமலவல்லித் தாயார் சமேதராக வணங்கப்படுகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அந்த ஊர் பெருமாள் ஆமருவியப்பன் என அழைக்கப்பட்டு செங்கமலவல்லித் தாயார் சமேதராக வணங்கப்படுகிறார். //
ஒரே பெருமாளுக்கு ஆயிரம் பெயர்!
ஆங்காங்கே சமேதார் வேற!
வெறும் அரசியல் கேள்வியா இருக்கே!
எனக்கு ஒண்ணுமே புரியலையே!.
@காடுவெட்டி
உங்க பேர் வால் பையனா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
@காடுவெட்டி
உங்க பேர் வால் பையனா?
//
இல்லீங்க காடுவெட்டி
வாக்காளர்களுக்கு பணம்: நரேஷ் குப்தா நடவடிக்கைமே 04,2009,00:11 IST (Dinamalar)
மதுரையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முற்படுவதாக வந்த தகவல்களின்படி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கலெக்டருக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உத்தரவிட்டார்.
500 ரூபாய் நோட்டுகள் கொண்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நள்ளிரவிலிருந்து தொடர்ந்து தொலைபேசி மூலம் புகார்கள் வந்தபடி இருந்தன. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நன்மாறனும், புகார் மனு அனுப்பியிருந்தார். தி.மு.க.,வினர் ஆயுதங்களுடன் சுற்றி வருவதாகவும், பணப் பட்டுவாடா நடப்பதாகவும் மாநகர போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நன்மாறன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, மதுரை மாவட்டக் கலெக்டரிடம், நரேஷ் குப்தா தொலைபேசியில் பேசினார். உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, 500 ரூபாய் கரன்சி கொண்ட ஏராளமான கவர்கள் கைப்பற்றப்பட்டன.
மதுரை தொகுதியில் மேலவளவு, கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, ஊமச்சிகுளம், சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலரும் கைது செய்யப்பட்டனர். சில வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐந்து இடங்களில், பணம் வைக்கப்பட்ட கவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
Post a Comment