சேதுராமன்:
1. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை நல்லது தான் - வருண் மாதிரி வரும்போதே சூறாவளியாக வந்து தான் கெட்டதுமல்லாமல், கட்சிக்கும் கெட்ட பெயர் சேர்க்க வேண்டுமா?
பதில்: போன வாரமே நான் ஏற்கனவேயே கூறியபடி நாவடக்கமும் மிகவும் தேவை அரசியல்வாதிக்கு. யாகாவாராயினும் நாகாக்க என்பதை முக்கியமாக அவர்கள் மறக்கக் கூடாது. வருண் காந்தி இதை அறிவது முக்கியம். அதுவும் காங்கிரஸ் சார்பு செயல்பாட்டை உடைய தேர்தல் கமிஷன் இம்மாதிரி தருணத்துக்காகவே காத்திருக்கிறது என்பதையும் அவர் மறக்கக்கூடாது. இதற்கென்றே பேச்சை எழுதித் தருபவர்களது துணையை நாடியிருக்க வேண்டும்.
2. கிழங்களுக்கெல்லாம் இன்னம் அரசியல் ஆசை போகவில்லை போலிருக்கிறதே? ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஷெகாவத், இன்னமும் போட்டியிட ஆசைப் படுகிறார்களே - இது தேவைதானா? இன்னொன்று நேரு குடும்பத்தினருக்கு தாசானுதாசனாய் என் வாழ் நாள் பூராவும் உழைத்தேனே என்று புலம்புகிறாரே?
பதில்: அரசியலில் யாரும் யாருக்காகவும் விட்டுத் தரவெல்லாம் மாட்டார்கள். ஏன் அதை எதிர்ப்பார்க்க வேண்டும்?
3. ஐக்கிய முன்னணிக்குள்ளேயே புரசல் வந்திருக்கிறதே - ஷரத்பவார் பிரதமர் பதவிக்குப் போட்டி போடுவாரா? இவர் பிரதமராக வருவது நல்லதா?
பதில்: எல்லா அணிகளிலும் குழப்பம்தான். சான்ஸ் கிடைத்தால் ஷரத் பவார் என்ன, வேறு எந்த அரசியல் வாதியுமே போட்டியிடுவார். அதனால் நாட்டுக்கு நல்லது வருமா என்பது அவரது செயல்பாட்டை பொறுத்ததே.
4. தமிழ் நாட்டிலும், கூட்டணிகள் இன்னமும் பேரம் பேசுவதிலேயே இருக்கின்றனரே - விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையே இல்லை போலிருக்கிறதே?
பதில்: விட்டுக்கொடுப்பதா? சரியாப் போச்சு போங்க. யாரேனும் விட்டுக் கொடுப்பதுபோல வெறுமனே மயிரிழை சந்தேகம் வந்தாலும் போச்சு. சம்பந்தப்பட்ட கட்சிக்கு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள். சீட் தராமல் வெறுமனே இதயத்தில் இடம் தந்து விடுவார்கள்.
5. சஞ்சய்தத் போட்டியிடக்கூடாதென்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது உங்கள் கருத்து?
பதில்: சரியான தீர்ப்புதான். அது சரி ஒரு சிறு சந்தேகம். பை சான்ஸ் தண்டனையை கோர்ட் நிறுத்திவைத்தால் அவர் போட்டியிட வந்தால் அவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஏதேனும் அறிவுரை தருமா? அல்லது அதெல்லாம் வருண் காந்திக்கு மட்டுமே செல்லுமா?
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
18 hours ago
13 comments:
யாரேனும் விட்டுக் கொடுப்பதுபோல வெறுமனே மயிரிழை சந்தேகம் வந்தாலும் போச்சு. சம்பந்தப்பட்ட கட்சிக்கு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள். சீட் தராமல் வெறுமனே இதயத்தில் இடம் தந்து விடுவார்கள்.
***************
நான் சொன்னதை, நீங்கள் இப்போதும் மறக்காமல் சுட்டிக்காட்டியதை கண்டு
"என் கண்கள் பனித்தது
இதயம் கனத்தது"
வருண் காந்தி வெறும் பேச்சு தான் பேசினார் அதற்கே அவருக்குக் கொலை மிரட்டல், கொலை செய்ய ஆள் ரெடி என்றெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் பார்க்கும் போது அவர் பேசியதில் தப்பே இல்லை என்று தோன்றவில்லையா ?
வருண் காந்தி விஷயத்தால் நாட்டிற்கு என்ன நன்மை ?
மீடியாக்கள் ஏன் அவரை இவ்வளவு நாள் தலைப்புச் செய்தியாக்கியுள்ளனர் ?
1. டோண்டு சார் தங்கள் கணிப்பில் திமுக கூட்டணி எவ்வளவு சீட்ஸ் ? அதிமுக கூட்டணி எவ்வளவு சீட்ஸ் வெற்றி பெரும் ?
2. இஸ்ரேல் பற்றி தெரிந்துகொள்ள நல்ல புத்தகங்கள்
//காங்கிரஸ் சார்பு செயல்பாட்டை உடைய தேர்தல் கமிஷன் இம்மாதிரி தருணத்துக்காகவே காத்திருக்கிறது //
மீண்டும் ஒருமுறை சொல்லி கொள்கிறேன்! தேர்தல் ஆணையம் வருணின் மேல் தனிபட்ட காண்ட்டில் உள்ளே தூக்கி போட்டதாக தான் இருவாரங்களாக உங்கள் பதில் இருக்கிறது. நாவடக்கம் வேண்டும் என்பதை தவிர எங்கேயும் வருணை கண்டித்ததாக தெரியவில்லை.(கண்டிக்க நான் யாருங்கிறிங்களா)
வருண் பேசியது தற்பொழுது முழுதாக படிக்க கிடைக்கிறது. இந்துக்களுக்கு போக மீதி தான் மற்றவர்களுக்கு என்பது போல் அந்த பேச்சு இருக்கு!
அப்போ என்னை போல் நாத்திகர்கள் நாடு கடுத்தப்படுவார்களா?
//சரியான தீர்ப்புதான். அது சரி ஒரு சிறு சந்தேகம். பை சான்ஸ் தண்டனையை கோர்ட் நிறுத்திவைத்தால் அவர் போட்டியிட வந்தால் அவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஏதேனும் அறிவுரை தருமா? அல்லது அதெல்லாம் வருண் காந்திக்கு மட்டுமே செல்லுமா?//
ஆரம்பத்தில் சரியாக தானே ஆரம்பித்தீர்கள். தடை செய்தது சரி!
காரணம் அது ஒரு தவறான முன்ணுதாரணம் ஆகிவிடும்.
ஆனால் உங்களிடம் வருண் மற்றும் பி.ஜே.பியின் மேல் உள்ள பற்றே அதிகம் தெரிகிறது.
சோ கூட இதை ஏற்று கொள்ளமாட்டார்
கேள்விகள்
1. ஏழை பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் இல்லையா.
2. உங்கள் நண்பர் லக்கிலுக்கும் பார்ப்பனர் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டதே? அவர் ஏன் பார்ப்பனர்களை வசைபாடுகிறார்.
3. எதிர்காலத்தில் பார்ப்பனர்கள் பூணூலை துறப்பார்களா.
4. பார்ப்பனர்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கவில்லை.
5. நீங்கள் இந்த முறை யாருக்கு ஓட்டு போடும் எண்ணம். பாஜகவுக்கா.
//அப்போ என்னை போல் நாத்திகர்கள் நாடு கடுத்தப்படுவார்களா?//
கணெஷ். நீங்கள் நாத்திகர் என்பது நாத்திகர்களுக்கு தெரியுமா.
சூடான இடுகைகளில் உங்கள் பதிவுகள் வராததால் ஹிட்ஸ் குறைந்திருக்கிறதா.
நீங்கள், கோவி, செந்தழல், லக்கி ஆகியோரை நீக்கியபிறகு சூடான இடுகைகள் தரம் உயர்ந்துவிட்டதா.
உங்களுக்கு நமீதாவை பிடிக்குமா. நயந்தாராவை பிடிக்குமா. நமீதா இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா.
அருந்ததீ பட விமர்சனம் எழுதுவீர்களா?
ஐதராபாத்தில் பிராமணர்கள் மட்டுமே வசிக்ககூடிய பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டுவது சரியா>
1. போலி டோண்டு செத்துவிட்டானா?
2. உண்மைதமிழனுக்கு மிரட்டல் வந்ததே. அது போலியிடம் இருந்து வந்திருக்கலம் இல்லையா.
//கணெஷ். நீங்கள் நாத்திகர் என்பது நாத்திகர்களுக்கு தெரியுமா. //
ஹா ஹா ஹா
உங்கள் நகைச்சுவை உணர்வை ரசிக்கிறேன்.
ஏற்கனவே சொந்த பேரில் சொன்னதையே மதிக்கவில்லை. இப்படி சொன்னால் டென்ஷனாகி விடுவேனோ!
முதலில் அடையாளத்துடன் பேசி பழகுங்கள் அறிவை தொலைத்தவரே!
(முட்டாள் என்று கூறுவது தவறானதாகும்)
Post a Comment