ராஜு:
(1) Do you believe in Astrology and pariharams? Does it work? There is one Chennai jyotish promising results @ Rs 2000. Personally I have felt whatever he has told to date, has happened (5 years)...
பதில்: எங்கோ இருக்கும் கிரகங்கள் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க இயலும் என்பதுதான் எனக்குள் வெகு நாட்களாக இருக்கும் கேள்வி. அவற்றின் கதிரியக்கங்கள் வந்து தாக்குமாம். வாதத்துக்கு அப்படியே வைத்து கொண்டாலும் அது எந்த விதமாகத் தாக்கும் என்பதை கண்டறிந்தவர்கள் யார்? ஏதேனும் பரிசோதனை செய்து பார்த்தார்களாமா? சூரியனும் ஒரு பாதையில் நகர்கிறது. அது மூடிய பாதை என்பதையும் படித்துள்ளேன். ஆகவே சில ஆண்டுகள் வித்தியாசத்தில் அது பழைய இடத்தை அடையலாம். இது ஒரு சுழற்சி முறை என்று வைத்து கொள்ளலாம் என்பதே ஜோசியத்தின் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது மிக குழப்பமான அடிப்படை என்பதே என் குழம்பிய மனதுக்கு படுகிறது. அதே பழைய கேள்விதான் மீண்டும். இந்த பாதையில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சூரியனும் அதைச் சுற்றும் கிரகங்களும் தனிப்பட்ட மனிதர்களை எங்கனம் பாதிக்க இயலும்? அப்படியே பாதிப்பதாக வைத்து கொண்டாலும் அதை துல்லியமாக கணித்து சொல்வதாக கூறிக்கொள்ளும் ஜாதகத்தின் அடிப்படை ஞானம் எங்கிருந்து வந்தது? யாராவது எக்காலத்திலாவது அதை கண்டறிந்து குறித்து வைத்துள்ளார்களா?
பரிகாரங்கள்? பலர் கூறுகிறார்கள், ஜோசியம் என்பது பிற்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை கூறுகிறது என்று. அப்போது முன்கூட்டி நடவடிக்கை செய்து வைத்து கொண்டால் அவற்றின் விளைவுகளை குறைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்குத்தான் பரிகார பூஜைகள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவற்றின் அடிப்படை என்னவென்றால் மனதில் தன்னம்பிக்கை பெறுவதே.
மாமன் மகள் என்னும் படத்தில் ஜெமினி கணேசன் கோழையாக இருக்க, அவருடைய பாட்டி தனது கணவன் உபயோகித்தது என்று கூறி தாயத்து போன்ற ஒன்றை அவரிடம் தர, அவரும் தைரியம் பெற்று வெற்றியும் பெறுகிறார். கடைசியில்தான் பாட்டி அப்பொருள் தாத்தாவின் பொடி டப்பி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.
அதனால் என்ன, விளைவு என்னவோ நல்லதுதானே? ஆகவே, ஏதேனும் கோவில் பிரகாரங்களை குறிப்பிட்ட அளவுக்கு தினமும் சுற்றுங்கள் எனக் கூற அதை நம்பிக்கையுடன் நிறைவேற்றும்போது வாக்கிங் செய்த பலனும், அதனால் மூச்சுவிடுவது சீராகி, உடல் நலம் பெற்று தன்னம்பிக்கை வருவதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் தைரியம் ஏற்பட்டு வெற்றியும் அடையலாம். கோவில், கடவுள் எனக் கூறினால் அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்னும் மனோதத்துவக் காரணமே இங்கு ஆட்சி செய்கிறது.
அதைவிடுத்து ஆயிரக்கணக்கில் பூஜைக்காக பணம் கேட்டு அதையும் தந்தால், பணம் பெறும் ஜோசியரைத் தவிர யாருக்கும் பிரயோசனம் இல்லை. அதனால் வரும் தன்னம்பிக்கையை ஜோசியம் கேட்டவர் காலணா காசு செலவின்றி உள்ளூர் கோவிலை சுற்றி வந்தே பெற இயலும்.
நான் இவை பற்றி மேலும் எழுதியதை இப்பதிவில் பார்க்கவும்.
(2) What should Vijayakanth do to gain more popularity? Should he combine with other Cine stars like Karthik (Mukkulathor) and Sarathkumar (Nadar) and make a winning combination with his Nayakkar votes? Does BJP have a say?
பதில்: விஜயகாந்த் இதுவரை செய்ததே அவருக்கு போதுமானது. வரும் அசெம்பிளி தேர்தலில் கண்டிப்பாக அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளவே திமுகவும் அதிமுகவும் போட்டி போடும். எங்கு நல்ல வேட்டை கிடைக்கிறதோ அங்கே போய்க்கொள்ள வேண்டியதுதானே. கார்த்திக், சரத்குமார், பாஜக? சிரிப்பு மூட்டாதீர்கள்.
பொரியாளன்:
1. தேவை இல்லாமல் ஆண்களுக்கு ஏன் முலைக்காம்புகள் உள்ளன ? அப்படி இருக்கிறதென்றால் நாமும் ஒரு காலத்தில் குழந்தைக்கு பாலூட்டினோமா ? அல்லது ஒரு உடலில் இருந்து இரு உயிர்கள் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் உருவானதா ? ஒரு செல் உயிரி அமீபாவையும் இதனையும் எவ்வாறு இணைத்து பார்க்கலாம்?
பதில்: அப்படியில்லை. கரு உருவான முதல் சில வாரங்கள் வரை அதன் பால் நிர்ணயிக்கப்படுவதில்லை. எக்ஸ்.எக்ஸ்/ஒய்.ஒய் மற்றும் எக்ஸ்.ஒய் குரொமோசோம்கள் பாகுபாடு முதலிலேயே நிகழ்ந்து விட்டாலும் அச்செய்தி லேட்டாகத்தான் ட்ரிக்கர் ஆகிறது. ஆகவே அதுவரை கரு இரு பாலினருக்கான உறுப்புகளையும் வைத்திருக்கும். அவற்றில் முலைக்காம்புகளும் அடக்கம். ஆகவேதான் ஆண்களுக்கும் முலைக்காம்புகள் அமைகின்றன. இது ஒரு எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமே. மருத்துவர் புரூனோ இன்னும் சிறப்பாக விளக்குவார்.
அஸ்வினி:
1. சார், EVMல் எந்த அடிப்படையில் வேட்பாளர் பெயர் வரிசைப்படுததப்படுகிறது . உதா: தென்சென்னை தொகுதியில் அ இ அ தி மு க வேட்பாளர் பெயர் (ராஜேந்திரன்) முதலிலும் - கணேசன் பெயர் இரண்டாவதாகவும், பாரதி பெயர் மூன்றாவதாகவும் இருந்தது.alpahbetical வகையிலும், உதைக்கிறது.பிற வேட்பாள்ர் பெயர் தேடுவதற்க்குள் விடிந்துவிடும். மொத்தம் 42 பேர். இதற்கு எதேனும் அடிப்படை விதிகள் உள்ளதா? விளக்கவும். (அ) தெரிந்தவர் மூலம் கேட்டு விளக்கவும்.
பதில்: விளக்கம் ரொம்ப சுலபம். பெயரை இனிஷியலுடன் பார்க்க வேண்டும், அதுவும் விரிவாக்கிய நிலையில் இருக்க வேண்டும். நான் ராகவன், இனிஷியலுடன் சேர்த்து நரசிம்மன் ராகவன். ஆகவே என்னை நரசிம்மனுக்கான ஆங்கில எழுத்தின் அடிப்படையில்தான் வரிசைப் படுத்துவார்கள். அதுவே என் பெயரின் இனிஷியலில் ஊர்ப்பெயரும் இருந்தால், உதாரணத்துக்கு அழகியசிங்கபுரம், இப்போது என் பெயர் அழகியசிங்கபுரம் நரசிம்மன் ராகவன். என் பெயர் முதலில் வந்து விடும். என்ன சரிதானே?
சிவகுமார்:
1. நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து எங்கே பிராமணன் எவ்வாறு வேறுபடுகிறது? உதாரணங்கள்?
பதில்: 76 எபிசோடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை ஒரு சராசரி மெகா சீரியல் டைரக்டரால் 300 எபிசோடுகளுக்கு இழுக்கப்பட்டிருக்கும். பாகவதரின் மருமகள் கணவனின் கையெழுத்தைப் போட்டு மகனின் ஹாஸ்டல் வார்டனிடம் லெட்டர் கொடுத்த ஒரு நிகழ்ச்சியை பயங்கர கண்ணீர்க் காட்சிகளாக மாற்றியிருப்பார், சாதாரண தயாரிப்பாளர். பல எபிசோடுகள் அதிலேயே போயிருக்கும். அது இங்கு இரண்டு எபிசோடுகளில் சிறு பகுதிகளில் முடிக்கப்பட்டது. அசோக் காணாமல் போன காட்சியில் பல மிரகிள்ஸ் காட்சிகளைக் காட்டியிருந்திருக்கலாம். ஆனால் சோ அவ்வாறெல்லாம் செய்யவில்லை. எல்லாவற்றையும் ஒருவித தார்மிகப் பொறுப்போடு எடுத்து சென்றிருக்கிறார். அசோக்கை லௌகீக வாழ்க்கைக்கு கொண்டுவர உமா மேற்கொள்ளும் முயற்சிகள், அசோக் மற்றும் உமா பேசும் காட்சிகள் ஆகியவை துளிக்கூட விரசமின்றி எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். நாந்தான் ஒவ்வொரு எபிசோடையும் ரிவ்யூ செய்து அதன் வீடியோ லிங்கையும் தருகிறேனே. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நான் கூறியதை சோதித்து பார்க்கவும் இதுவே நல்ல தருணம். பை தி வே, 72 மற்றும் 73-ஆம் பகுதிகளுக்காக நான் எழுதிய பதிவின் சில வரிகளை இங்கே மீண்டும் தருவேன்.
“இந்த சீரியலில் ஒவ்வொரு காட்சியும் சிற்பியின் நேர்த்தியோடு செதுக்கப்பட்டு ஜொலிக்கிறது. வாடிக்கையாளரை அணுகும் முறை பற்றி பத்து பதிவுகள் போட்ட இந்த டோண்டு ராகவன், பணமின்றி எந்த வேலையும் செய்யலாகாது என எல்லோரிடமும் கூறி தானும் அதை கடைபிடிக்கும் இந்த டோண்டு ராகவன் முதன்முறையாக எந்த எதிர்பார்ப்புமின்றி, சுயவிருப்பத்துடன் மனதை ஈடுபடுத்தி செய்யும் முதல் முயற்சிதான் இந்தத் தொடர் பற்றிய பதிவுகள். இந்த பதிக்கும் வேலை தரும் மனத்திருப்தியே அவனுக்கு இதில் கிடைக்கும் சம்பளம் என்பதையும் அவன் மகிழ்ச்சியாகவே உணர்கிறான். அதற்கு ஈடில்லை எனவும் அவன் உணர்கிறான். சோ அவர்களின் இந்த மகாயாகத்தில் அவனால் இயன்ற சிறுபங்களிப்புதான் இது, அதாவது ராமகாரியத்தில் அணில் உதவியது போல என்பதையும் வலியுறுத்துகிறான்”.
2. யாரும் எதிர்பாராத முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது - இதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பதில்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேற்றியை எதிர்ப்பார்த்த எனக்கு இம்முடிவு எதிர்பாராததே.
3. இந்தியா முழுமையும் திருமங்கலமாக மாறி விட்டதா?
பதில்: பண வினியோகம் அம்மாதிரி ஒரே விதமாக நடந்தது என்றா நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டை சொல்லுங்கள், அதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம்.
4. நான்காவது முன்னணியும் தோற்று விட்டதே? லாலுவின் கொட்டம் இனியாவது அடங்குமா?
பதில்: மூன்றாம் அணியே சிங்கி அடிக்கும்போது நான்காவது அணி பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? ஆனால் ஒன்று. லாலுவை அப்படியெல்லாம் ஒதுக்கிவிட இயலாது.
5. கடைசியில் கருணாநிதியின் சாதுர்யம் வென்று விட்டதே?
பதில்: அதில் அவருக்கு நல்ல பயிற்சிதானே.
6. இனி ஈழ விடுதலை பற்றிய செய்திகள் என்ன ஆகும்?
பதில்: புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தெளிவு பிறக்கும், பிறக்க வேண்டும்.
7. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - இந்த தேசம் என்ன ஆகும்? காங்கிரஸ் மீண்டும் இந்தியாவின் நம்பிக்கையான கட்சி என்பது என்பது நிருபணமாகி உள்ளதே?
பதில்: அதே நேரத்தில் மிருகபல பெரும்பான்மை அதனிடம் இல்லை என்பதும் ஒரு நல்ல விஷயம். பொருளாதாரக் கொள்கைகளை பொருத்தவரையில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அதே நேரத்தில், இடது சாரிகள் இம்முறை மன்மோகன் சிங்கை பிளாக்மெயில் செய்ய இயலாது என்பதும் ஒரு பிளஸ் பாயிண்டுதானே.
8. பல கட்சி ஆட்சி முறை என்பது தவறான நடைமுறை தானே? எவ்வாறு இதை சீரமைக்கலாம்?
பதில்: இந்தியாவில் மத்தியில் 1989 வரை ஒரு கட்சிமுறை ஆட்சிதான் நடந்து வந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறைதான் நடந்து வந்துள்ளது. ஆனால் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி ஆட்சி நடந்து வந்துள்ளது. இதில் எது சரி, எது தவறு எனப்பார்ப்பது கடினமே. கேஸ் பை கேஸாகத்தான் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, சர்வதேச அளவில் இஸ்ரேலில் முதலிலிருந்தே கூட்டணி கட்சிகள் ஆட்சிதான். அதனால் என்ன குடி முழுகி விட்டது? இத்தாலியில் சில மாதங்களுக்கு ஒரு முறை அரசு சர்வ சாதாரணமாகக் கவிழ்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் பொருளாதார முன்னேற்றத்தில் குறைவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் காலை வாரும் முயற்சிகளில் இருந்ததால், அவர்களது தலையீடின்றி நிர்வாகம் அதிகாரிகள் மேற்பார்வையில் நன்றாகவே நடந்தது என்று கூட அங்கு ஒரு முறை கூறப்பட்டதாக எங்கள் இத்தலிய மொழி ஆசிரியர் கார்லோ புல்ட்ரீனி சமீபத்தில் 1987-ல் எங்களுக்கு வேடிக்கையாகக் கூறியுள்ளார்.
9. என் தேசத்தை கூறு போடுகின்ற எவரையும் எனக்கு பிடிப்பதில்லை (மத இன மொழி வாரியாக) என்னைப் பற்றி என்ன நினைக்கீறீர்கள்?
பதில்: நீங்கள் நல்ல மனிதர். தேசபக்தியுள்ளவர். ஆகவே பா.ஜ.க.வில் சேரவும்.
எம்.கண்ணன்
1. சூப்பரின்டெண்டென்ட் (Super-in-tendant) என்பதை ஏன் பலரும் சூப்ரண்டு என சொல்கின்றனர்? இந்த பதவியின் பெயர் எப்படி வந்தது?
பதில்: பலருக்கு தேவையான அளவு நாக்கு சுழலாது. ஆகவே அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். இதன் மூலம் intendant என்னும் பிரெஞ்சு சொல்லிலிருந்து வருகிறது. அதன் பிறகு ஒவ்வொரு தேசத்திலும் அது வெவ்வேறு நிலைகளில் உறைந்து போனது. அமெரிக்காவில் அபார்ட்மெண்ட் பிளாக்குகளில் பராமரிப்புக்கு பொறுப்பாக இருப்பவர்களை கூட சூப்பரின்டெண்டென்ட் என அழைக்கும் வழக்கம் உண்டு.
2. அரசு அதிகாரிகளின் hierarchyயில் எதற்கு இத்தனை துணை, இணை, கூடுதல் கமிஷனர் போன்ற பதவிகள்?
பதில்: அப்போதுதானே பலருக்கு பிரமோஷனே தரவியலும்?
3. பிரிடிஷார் வைத்திருந்த பதவிப் பட்டியலையே ஏன் இன்னும் வைத்துள்ளோம் ? இதற்கெல்லாம் Reform கமிஷன் வைத்து மாற்ற மாட்டார்களா?
பதில்: மாற்றத் தேவையிருந்தால் மாற்றலாம். மற்றப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக எல்லாம் யாரும் ரூம் போட்டு யோசிப்பதில்லை.
4. போலீஸ் துறையின் hierarchy கீழிருந்து மேலே வரை சொல்ல முடியுமா? எனக்குத் தெரிந்த வரை - கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் (ஏட்டு), சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி, துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், கமிஷனர், டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி?
பதில்: எனக்கு தெரிந்தவரை நான் இவ்வாறு வரிசைப்படுத்துவேன். கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் (ஏட்டு), சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், டி.எஸ்.பி, எஸ்.பி, கமிஷனர், டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி.
5. தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக பணி புரியும் போலிசுக்கு எவ்வளவு மாதச் சம்பளம் (தற்போது)? அதனால் தான் அவர்கள் கிம்பளம் வாங்குகிறார்களா?
பதில்: 10 மணி நேரமா, எந்த ஊரில் இருக்கிறீர்கள்? பலர் 36 மணி நேரம் கூட ரிலீவ் செய்யப்படாமல் டியூட்டி பார்க்கிறார்கள். அதையெல்லாவற்றையும் விட இந்த உபயோகமற்ற அரசியல்வியாதிகளுக்காக பாதுகாப்பு, பந்தோபஸ்து ஆகிய வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. அடிநிலை போலீஸ்காரர்கள் தத்தம் மேலதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலையும் செய்ய வேண்டியுள்ளது. இவையெல்லாமுமே அவர்தம் மனோபலத்தை குறைத்து கிம்பளம் வாங்கும் நிலைக்கு தள்ளிவிடுவதிலும் பங்காற்றுகின்றன.
6. அழகிரி அமைச்சராகிவிட்டால் மற்ற மாநிலங்களுக்கு ஏதேனும் செய்வாரா இல்லை குண்டு சட்டியான மதுரையிலேயே இன்னும் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பாரா?
பதில்: அவரது செயல்பாட்டை பார்த்தவுடந்தான் சொல்லவியலும். இப்போதே ஊகிக்க முடியாது.
7. தயாநிதி மாறனுக்கு பதவி கொடுக்காவிட்டால் மீண்டும் சன் டிவி, தினகரன் அம்மா புகழ் பாட ஆரம்பிக்குமா? ஒருவருடம் முன்பு தினகரனில் 'அழகிரி ரவுடி' என்றெல்லாம் எழுதிவிட்டு இன்று அவர் பக்கத்தில் பாராளுமன்றத்தில் அமர்ந்து மத்த எம்பிக்களின் இந்தி பேச்சுக்களை மொழிபெயர்ப்பு செய்யும் நிலை பற்றி தயாநிதி என்ன எண்ணுவார்?
பதில்: என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
8. டி.ஆர்.பாலு துணை சபாநாயகர் ஆகிவிட்டால் எப்படி வரும்படி பார்க்க முடியும்? தமிழ்நாட்டுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தியுள்ள அவருக்கு ஏன் பதவி கொடுக்க பிளான் இல்லை?
பதில்: துணைசபாநாயகராகவா ஆக்கப் போகிறார்கள்? அடப்பாவமே. அது சரி, என்னதான் இருந்தாலும் அவர் முகவின் குடும்ப உறுப்பினர் இல்லையே.
9. இனிமேல் ஜெ. வைகோ, ராமதாஸ் எல்லாம் - அண்ணன் எப்போ மறைவார் திண்ணை எப்போ காலியாகும் - என காத்திருக்கத்தான் வேண்டும் அல்லவா?
பதில்: தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அடுத்த அசெம்பிளி தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறலாம்.
10. இப்போதே ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி வழங்க கருணாநிதி ஏன் இன்னும் தயங்குகிறார்?
பதில்: சொத்தின் மீது தனது பிடியை தளர்த்த எந்த குடும்பத் தலைவருமே தயங்குவார். ஆகவே கருணாநிதி அவர்களை புரிந்து கொள்ள இயலுகிறது.
வஜ்ரா:
1. பிரபாகரனை 22 வருடம் அறிந்த கருணா பார்த்து இது பிரபாகரன் தான் என்று சொல்லியும் சிலர் இன்னும் இது ஸ்ரீலங்காவின் கபட நாடகம் என்கின்றனரே. ஏன்?
பதில்: அறிவுக்கும் இதயத்துக்கும் இடையில் போட்டியென்றால் ஜெயிப்பது அநேகமாக இதயமாகத்தான் இருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்ததையே ஒப்புக் கொள்ளாது பலர் இருந்திருக்கிறார்கள். ஹிட்லர் இன்னும் உயிருடன் இருந்ததாக ஒரு நம்பிக்கை இருந்ததாலேயே மேற்கு ஜெர்மனியின் அரசு ஹிட்லருக்கு எதிரான கைது வாரண்டை அப்படியே பல ஆண்டுகளுக்கு நிலுவையில் வைத்திருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசும் ராஜீவ் கொலை வழ்க்கிலிருந்து அவசரப்பட்டு பிரபாகரன் பெயரை விலக்கலாகாது என்பதுதான் எனக்கும் உசிதமாகப் படுகிறது. அதை பிரபாகரனின் மரணம் முழுமையாக நிரூபணம் ஆனபிறகே செய்ய வேண்டும்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
5 hours ago
44 comments:
//ராஜு:
(1) Do you believe in Astrology and pariharams? Does it work? There is one Chennai jyotish promising results @ Rs 2000. Personally I have felt whatever he has told to date, has happened (5 years)...
பதில்: எங்கோ இருக்கும் கிரகங்கள் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க இயலும் என்பதுதான் எனக்குள் வெகு நாட்களாக இருக்கும் கேள்வி. அவற்றின் கதிரியக்கங்கள் வந்து தாக்குமாம். வாதத்துக்கு அப்படியே வைத்து கொண்டாலும் அது எந்த விதமாகத் தாக்கும் என்பதை கண்டறிந்தவர்கள் யார்? ஏதேனும் பரிசோதனை செய்து பார்த்தார்களாமா? சூரியனும் ஒரு பாதையில் நகர்கிறது. அது மூடிய பாதை என்பதையும் படித்துள்ளேன். ஆகவே சில ஆண்டுகள் வித்தியாசத்தில் அது பழைய இடத்தை அடையலாம். இது ஒரு சுழற்சி முறை என்று வைத்து கொள்ளலாம் என்பதே ஜோசியத்தின் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது மிக குழப்பமான அடிப்படை என்பதே என் குழம்பிய மனதுக்கு படுகிறது. அதே பழைய கேள்விதான் மீண்டும். இந்த பாதையில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சூரியனும் அதைச் சுற்றும் கிரகங்களும் தனிப்பட்ட மனிதர்களை எங்கனம் பாதிக்க இயலும்? அப்படியே பாதிப்பதாக வைத்து கொண்டாலும் அதை துல்லியமாக கணித்து சொல்வதாக கூறிக்கொள்ளும் ஜாதகத்தின் அடிப்படை ஞானம் எங்கிருந்து வந்தது? யாராவது எக்காலத்திலாவது அதை கண்டறிந்து குறித்து வைத்துள்ளார்களா?
பரிகாரங்கள்? பலர் கூறுகிறார்கள், ஜோசியம் என்பது பிற்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை கூறுகிறது என்று. அப்போது முன்கூட்டி நடவடிக்கை செய்து வைத்து கொண்டால் அவற்றின் விளைவுகளை குறைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்குத்தான் பரிகார பூஜைகள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவற்றின் அடிப்படை என்னவென்றால் மனதில் தன்னம்பிக்கை பெறுவதே.
மாமன் மகள் என்னும் படத்தில் ஜெமினி கணேசன் கோழையாக இருக்க, அவருடைய பாட்டி தனது கணவன் உபயோகித்தது என்று கூறி தாயத்து போன்ற ஒன்றை அவரிடம் தர, அவரும் தைரியம் பெற்று வெற்றியும் பெறுகிறார். கடைசியில்தான் பாட்டி அப்பொருள் தாத்தாவின் பொடி டப்பி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.
அதனால் என்ன, விளைவு என்னவோ நல்லதுதானே? ஆகவே, ஏதேனும் கோவில் பிரகாரங்களை குறிப்பிட்ட அளவுக்கு தினமும் சுற்றுங்கள் எனக் கூற அதை நம்பிக்கையுடன் நிறைவேற்றும்போது வாக்கிங் செய்த பலனும், அதனால் மூச்சுவிடுவது சீராகி, உடல் நலம் பெற்று தன்னம்பிக்கை வருவதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் தைரியம் ஏற்பட்டு வெற்றியும் அடையலாம். கோவில், கடவுள் எனக் கூறினால் அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்னும் மனோதத்துவக் காரணமே இங்கு ஆட்சி செய்கிறது.
அதைவிடுத்து ஆயிரக்கணக்கில் பூஜைக்காக பணம் கேட்டு அதையும் தந்தால், பணம் பெறும் ஜோசியரைத் தவிர யாருக்கும் பிரயோசனம் இல்லை. அதனால் வரும் தன்னம்பிக்கையை ஜோசியம் கேட்டவர் காலணா காசு செலவின்றி உள்ளூர் கோவிலை சுற்றி வந்தே பெற இயலும்.
நான் இவை பற்றி மேலும் எழுதியதை இப்பதிவில் பார்க்கவும். //
கோவையை சார்ந்த திரு சுப்பையா வாத்யார் அவ்ர்களின் வலைப்பூவை பார்க்கவும்.
http://classroom2007.blogspot.com/
அதில் உங்கள் பிறந்த ஜாதகத்தை நீங்களே கணிக்கும் எளிய மென்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.பலன்களும் தரப் பட்டுள்ளன.
அதை பார்க்கவும்.
ஜோதிட ஸாஸ்திரம் விஞ்ஞான அடிப்படையில் பல உண்மைகள் சொல்லுவதை மறுக்கமுடியாது.
சுப்பையா சார் பல பிரபல ஜாதகங்களை ஆராய்ச்சி செய்து 200 மேல் பதிவுகள் தந்துள்ளார்கள்.
போலி ஜோதிடர்களும் உள்ளனர் என்பதும் உண்மை.
கடவுள் இல்லை என கடந்த 50 ஆண்டுகாலமாய் அரசியல் பண்ணிவரும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் வரும் போது ராகு காலம்,எமகண்டம்,நல்லநேரம்,சூலம்,தசாபுத்தி ,எண்கணிதம்,பெயர் பொருத்தம் பார்ப்பதுடன் ஜாதக் கட்டை தூக்கி கொண்டு அலைவதை பார்க்கும் போது
டோண்டு அவர்களின் இந்த புரட்சிகரமான பதில் அவரது முற்போக்கை பறைசாற்றுகிறதா?
//டோண்டு அவர்களின் இந்த புரட்சிகரமான பதில் அவரது முற்போக்கை பறைசாற்றுகிறதா?//
இதில் என்ன முற்போக்கு பிற்போக்கு என லேபல் செய்வது. சோதிடட்தின் மேல் உள்ள நம்பிக்கை எவ்வளவௌ புராதானமானதோ அதே அளவுக்கு புராதானமானது அதன் மேல் நம்பிக்கையின்மையும்.
எனக்கு நம்பிக்கையில்லை, சுப்பையா அவர்களுக்கு இருக்கிறது, அவ்வளவே. அவரவர் கருத்து அவரவருக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாரதீய ஜனதா ஒப்பேறhது போலிருக்கிறதே - அதில் போய் என்னை சேரச் சொல்கிறீர்களே?
மிகக் குறைவான எண்ணிக்கையில் எம்பிக்கள் இருந்த போதே சோனியா ஆடிய ஆட்டம் இப்போதுள்ள நிலையில் அதிகரிக்கும் என்றே நினைக்கிறேன். மேலும் உலகக் கோப்பை கால்பந்தில் இத்தாலி வெல்ல வேண்டும் என்று யாகம் செய்த இளைஞர் காங்கிரசின் பலர் தற்போதைய எம்பிக்கள்.
70 லட்சம் கோடி பணம் இனி இந்தியாவிற்கு வரவே வராது.
மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வாடிகனுக்கு குத்தகைக்கு விட்டு விடுவார் என்றே நினைக்கிறேன்.
ஜோதிடம் என்பது ஒரு அரிய கலை. சில தவறhவனர்களின் கைகளில் அது அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதைய நாடாளுமன்றம் ஒன்னரை ஆண்டுகளுக்குள் கவிழும் என்று தேர்தல் முடிவு வரும் போது சில ஜோதிடர்கள் கூறினார்கள். பார்க்கலாம்.
//இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வாடிகனுக்கு குத்தகைக்கு விட்டு விடுவார் என்றே நினைக்கிறேன்.//
அதைத் தடுப்பதற்காகவாவது பஜகவி சேர்ந்து பாடுபடுங்கள். மீதி எந்த கட்சியும் அதை தட்டிக்கேட்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வெவ்வேறு இடங்களில் இருக்கும் சூரியனும் அதைச் சுற்றும் கிரகங்களும் தனிப்பட்ட மனிதர்களை எங்கனம் பாதிக்க இயலும்?//
அலைபேசியில் பேசும் போதும், ரிமோட் உபயோகப்படுத்தும் போதும் கதிர்வீச்சு நம்மை பாதிக்கிறதாம்! இதற்கு யாராவது பலன் எழுதி வைத்திருக்கிறார்களா?
இருந்தால் சொல்லுங்கள்!
எனது அலைபேசி தயாரித்த வருடம் மாடல் பெயர் அனுப்புகிறேன்! அதை வைத்து ஜாதகம் கணிக்கலாம் அல்லவா?
//நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து எங்கே பிராமணன் எவ்வாறு வேறுபடுகிறது? உதாரணங்கள்?//
காதலியுடன் அமர்ந்திருந்தால் பல மணிகளும் சில நொடிகள் மாதிரி!
அடுப்பு மேல் அமர்ந்திருந்தால் சில நொடிகளும் பல கனங்கள் மாதிரி!
பிராமனம் இவருக்கு காதலி!
அப்புறம் எப்படி பதில் சொல்லுவார்!
//பதில்: நீங்கள் நல்ல மனிதர். தேசபக்தியுள்ளவர். ஆகவே பா.ஜ.க.வில் சேரவும்.//
ஹா ஹா ஹா
அப்ப எல்லையில இருக்குற ராணுவ வீரர்களை பா.ஜ.க வில் சேர்த்திரலாமா!
பா.ஜ.க ஒரு அப்பட்டமான மதவாத கட்சி என்பதால் தானே அதற்கு சுண்ணாம்பு தடவி விட்டார்கள் மக்கள்! இன்னும் அதை பிடித்து கொண்டிருக்கிறீர்கள்!
இனி மதவாதத்துக்கு இந்தியாவில் வேலையில்லை!
@வால்பையன்
மதவாதம் செய்வது பாஜக அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் இசுலாமியர் மனம் புண்படுவார்கள் என பூச்சி காண்பித்து, உண்மையில் அவர்களை அவமதிக்கும் காங்கிரஸ் போன்ற கட்சியினர்தான் மதவாதிகள்.
மற்றப்படி தேர்தல் தோல்வியெல்லாம் எல்லா கட்சிக்கும் வருவதுதான். இங்கு திமுக எப்படி வெற்றி பெற்றது என்பது எல்லோருக்குமே தெரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
//பதில்: நீங்கள் நல்ல மனிதர். தேசபக்தியுள்ளவர். ஆகவே பா.ஜ.க.வில் சேரவும்.//
ஹா ஹா ஹா
அப்ப எல்லையில இருக்குற ராணுவ வீரர்களை பா.ஜ.க வில் சேர்த்திரலாமா!
பா.ஜ.க ஒரு அப்பட்டமான மதவாத கட்சி என்பதால் தானே அதற்கு சுண்ணாம்பு தடவி விட்டார்கள் மக்கள்! இன்னும் அதை பிடித்து கொண்டிருக்கிறீர்கள்!
இனி மதவாதத்துக்கு இந்தியாவில் வேலையில்லை!
//
எல்லோருக்கும் பா.ஜ.க வைத்திட்டுவது மிகவும் எளிது.
ஏனென்றால் பா.ஜ.க உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் ஹிப்பாகிரடிக் கட்சி அல்ல.
வால்பையன் எப்போது தான் வளர்ந்த பையன் போல் பேசப்போகிறார் ?
//மதவாதம் செய்வது பாஜக அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் இசுலாமியர் மனம் புண்படுவார்கள் என பூச்சி காண்பித்து, உண்மையில் அவர்களை அவமதிக்கும் காங்கிரஸ் போன்ற கட்சியினர்தான் மதவாதிகள்.//
காங்கிரஸ் தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது என்பதை வேண்டுமானால் ஏற்று கொள்ளலாமே தவிர பா.ஜ.க மதவாத கட்சியல்ல என்பதை ஏற்று கொள்ளமுடியாது!
இந்தியாவில் இஸ்லாம் தீவிரவாதிகளுக்கு சமமாக இந்து தீவிரவாதிகள் இருக்கிறார்கள்! எல்லாத்தையும் போடனும்னா முதலில் மோடிய தான் போடனும்!
அனானிக்கு!
நான் வளர்ந்தேன்னு எப்போ சொன்னேன்! இன்னும் வளரவேயில்லையே!
Dondu Sir and புரட்சித் தமிழன் Thanks!
I also have a feeling that Vijayakanth will lean towards BJP in teh center, as lots of biz guys are supporting it, and money flow is very key in this world. If UPA+ combine can spend Rs 1000 crores in Tamilnadu + Pondi alone, imagine the money needed for India. (In effect, 2000 crores of black money would have come into Tamilnadu, and stimulated the economy!). Don't you think so?
Also //துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், டி.எஸ்.பி, எஸ்.பி, கமிஷனர்// are at the same level and varies on the dept. they are associated with. That is what my dad told me. He retired as SP. Also handled the Traffic Police Training Centre as its "Commissioner" for sometime!
//ஜோதிடம் என்பது ஒரு அரிய கலை. சில தவறhவனர்களின் கைகளில் அது அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதைய நாடாளுமன்றம் ஒன்னரை ஆண்டுகளுக்குள் கவிழும் என்று தேர்தல் முடிவு வரும் போது சில ஜோதிடர்கள் கூறினார்கள். பார்க்கலாம்.//
Dear Sivakumar, A close friend who does KP System analysis, has predicted the Head of the govt would change within 18 months, but without election, in a Yahoo group.
//பா.ஜ.க மதவாத கட்சியல்ல என்பதை ஏற்று கொள்ளமுடியாது!//
உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை. 2002-ல் நடந்த தேர்தலிலேயே இது பற்றி எல்லாம் பேசி விட்டார்கள். 2007-லும் பேசினார்கள். ஆனால் குஜராத் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதுவே 1984-ல் ராஜீவ் காந்தி செய்த அக்கிரமத்தை உடனேயே சௌகரியமாக மறந்தார்கள்.
மோடிக்கு எதிரான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க காங்கிரஸ் சார்புடைய ஆங்கில ஊடகத்தின் குற்றச்சாட்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குஜராத்தில் மோடி வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக மோடி எந்த தவறும் செய்யவில்லை என்ற அர்த்தம் ஆகாது!
குஜராத்தில் மெஜாரிடி இந்துகள் இருக்கும் போது மோடி ஜெயிக்காமல் ஜாடியா ஜெயிப்பார்!
அப்போதுமட்டுமல்ல! அதன்பிறகு மோடி வெற்றி பெற்ற பிறகு நடந்த ஊர்வலத்தில் கூட இஸ்லாமிய எதிப்பு வாசகங்கள் காணப்பட்டன!
1984-ல் ராஜி என செய்தார் என்று எனக்கு தெரியாது! அது எதுவாகினும் குற்றம் குற்றமே! நான் காங்கிரசை ஆதரித்து பேசவில்லை!
பா.ஜ.க வை எதிர்த்து பேசி கொண்டிருகிறேன்! ஒன்றை ஆதரித்தால் அதன் மாற்றுக்கு ஆதரவு என்று திராவிட குஞ்சுகள் மாதிரி நீங்களும் பேசாதிங்க!
நான் இஸ்லாமிய மதத்தை எந்த அளவுக்கு கேள்விக்குள்ளாக்குகிறேன் என்பதை நண்பர் அ.மு.செய்யது அவர்களின் பதிவில் பாருங்கள்!
அதை விட பல கேலி கூத்துகள் நிறைந்தது தான் இந்து மதம்! அதை கட்டி கொண்டு அழுவதை விட மனிதத்தை வளர்ப்போம் வாருங்கள்!
நேற்று மதக்கட்சி
இன்று சாதிகட்சி
நாளை?
மோடி தவறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். அது வரை அவர் அளிக்கும் ஊழலற்ற ஆட்சியை பார்ப்போம். அம்மாதிரி எல்லா மாநிலத்திலும் எதிர்பார்ப்போம்.
மற்றப்படி நான் உங்கள் மனதையோ நீங்கள் என் மனதையோ மாற்றவியலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மோடி தவறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். அது வரை அவர் அளிக்கும் ஊழலற்ற ஆட்சியை பார்ப்போம். அம்மாதிரி எல்லா மாநிலத்திலும் எதிர்பார்ப்போம்.//
தினகரன் மூன்று கொலைகளை பற்றி என்ன நினைக்கிறிங்க!
சட்டம் சாப்பாடு சாப்பிட போயிருந்ததா அப்போ!
ஆளுங்கட்சி இருக்கும் ஊரில் யார் நாட்டாமை என்று குழந்தைக்கும் தெரியுமே!
@வால்பையன்
அப்படீன்னா திமுகாவுக்கு ஓட்டே போடக்கூடாதுன்னு எங்காவது பதிவு எழுதியிருக்கீங்களா? எல்லோரும் திமுகவின் வேற்றியைத்தானே அனாலைஸ் செய்கின்றனர்.
மோடி அளவிற்கு ஊழலற்ற ஆட்சியையாவது திமுக தருகிறதா? ஆக நான் சொன்ன பாயிண்டுக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க.
மோடி அவர் மேல் வைத்த குற்றச்சாடுக்காக ஆதரிக்கப்படக் கூடாது அழகிரிக்கும் அது அப்ப்ளை ஆகணும். க்வாட்ரோக்கி செய்த ஊழலுக்கு துணைபோன இத்தாலிக்காரிக்கும் அப்ளை ஆகணும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் கருத்தில் நான் மாறுபடவில்லையே! மத்தியிலும் மாநிலத்திலும் பெருவாரியான அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கட்சிகளின் அராஜகம் முடிவுக்கு வரவேண்டுமானால் மாற்று வேண்டும் தான்!. அது கண்டிப்பாக பா.ஜ.க இல்லை என்பது உண்மை.
ட்ராபிக் ராமசாமிக்கு எத்தனை ஓட்டு விழுந்தது?
உருப்படுமா இந்த நாடு!?
@வால்பையன்
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இப்போது இருக்கும் செட்டப்பில் இப்போதைக்கு காங்கிரஸ் அல்லது பஜக மட்டுமே ஆட்சிக்கு வரவியலும்.
பஜகவில் இருப்பவர் எல்லோருமே முனிவர்கள் என கூறவில்லை. ஆனால் அதே சமயம் குஜராத் அரசின் ஊழலற்ற ஆட்சிமுறை இந்தியாவில் வேறு எங்கும் காணவியலாது. அதனாலேயே மோடி ஜெயித்துள்ளார்.
இப்போதைக்கு எனக்கு பெட்டர் ஆல்டெர்னேடிவாக தென்படுவது பஜக மட்டுமே. ஆனால் இப்போதுதான் எலெக்ஷன் முடிந்துள்ளது. காங்கிரசின் நிலையும் அதிக ஸ்டேபிளாக உள்ளது.
இடதுசாரிகள் பிளாக்மெயில் செய்யவியலாது. திமுகவுக்கும் முந்தைய அளவு பவர் இருக்காது. பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வால்!!
பலன் எழுதி வைத்திருக்கிறhர்கள். அதிக நேரம் செல்போனில் பேசினால் காது கேட்கும் திறன் குறைந்து விடுமாம். ஆண்மை குறையுமாம். பெண்களுக்கு கேன்சர் நோய் வர வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மனநோய் வரும். மேலும் சிலருக்கு மற்றவர்கள் சொல்வதே தவறhகத் தெரியும்
இனிமே மொபைல இடுப்பில் வைத்து நடக்காதீங்க!!
//அப்ப எல்லையில இருக்குற ராணுவ வீரர்களை பா.ஜ.க வில் சேர்த்திரலாமா!//
சேர்ந்து கொண்டே இருக்கிறhர்கள்
நாட்டின் வளர்ச்சி என்பது 1998ல் தான் தொடங்குகிறது. பொக்ரான் அணு சோதனைக்கு பிறகு நம் நாடு உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்றது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி - ஏனோ மக்கள் கவர்ச்சியையே நம்புகிறhர்கள்.
// குஜராத்தில் மோடி வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக மோடி எந்த தவறும் செய்யவில்லை என்ற அர்த்தம் ஆகாது! //
"மண்"மோகன் தவறு செய்து விட்டு தான் வெற்றி பெற்றிருக்கிறhர் என்கிறீர்களா?
//புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தெளிவு பிறக்கும் பிறக்க வேண்டும்.//
நிச்சியமாக நடக்கும். ஆனால் அதை முடிந்த அளவு குழப்ப தான் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரதாளர்கள் பெரிதும் முயல்கிறார்கள்.
//"மண்"மோகன் தவறு செய்து விட்டு தான் வெற்றி பெற்றிருக்கிறhர் என்கிறீர்களா? //
அப்ப இல்லைங்கிறிங்களா?
//1984-ல் ராஜி என செய்தார் என்று எனக்கு தெரியாது!//
இந்தப் பதிவைப் பார்த்தால் 1984-ல் ராஜீவ் செய்தது என்ன எனப் புரியும். பார்க்க: http://www.vinavu.com/2009/05/21/eelam4/
ஆனால் அதை இப்போது ஒருவருமே பேசுவதில்லை, ஆனால் மோடியை பற்றி மட்டும் பேசுவார்கள். அதைத்தான் நான் குறிப்பிட்டேன். அதே சமயம் மோடியின் ஊழலற்ற ஆட்சியை பர்றி மறந்தும் குறிப்பிட மாட்டார்கள். ஒரு வாதத்துக்கு நீங்கள் குஜராத் கலவரம் ப்ற்றி ஏற்றாலும், மோடி போல ராஜீவ் எங்கேனும் ஊழலற்ற ஆட்சி தந்தாரா என்பதை யாரேனும் கூறவியலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
1984 -ல் ராஜிவ்காந்தி என்ன செய்தார் என்று பேசுவதால் நாடும் நாட்டு மக்களும் திருந்தி விடுவார்கள் என்றால் ஏன் அதோடு நிற்கனும்!
ராஜராஜ சோழன்
அசோகன்
சந்திரகுப்தர்
ஷாஜகான்
அக்பர்
என்று எல்லோருடய சரி தவறுகளையும் வரிசைப்படுத்தலாமே!
உயிரோட இருக்குற மனுசன பத்தி பேசியே ஒன்னும் ஆகலையாம்!
செத்து போனவங்களை பற்றி பேசி என்னாவாகுறது!
@வால்பையன்
1984 சீக்கியக் கலவரமும் 2001 குஜராத் கலவரமும் ஒப்பிடத் தக்கவை. குஜராத் கலவரத்தில் முதல் நாளே மோடி மிலிட்டரியை அழைத்து அடுத்த நாளே அவர்கள் செயல்படத் துவங்கி விட்டார்கள். சீக்கியக் கலவரத்திலோ நான்கு நாட்களுக்கு மேல் தில்லி போலீசார் சீக்கியர்களை வேட்டையாடியதை நான் நேரடியாகவே தில்லியிலிருந்த போது பார்த்தவன். இந்திராவின் பூதவுடலைக் காண வருபவர்கள் ரத்தத்துக்கு பதில் ரத்தம் என்றெல்லாம் கோஷம் போட அனுமதிக்கப்பட்டதை டெலிவிஷனில் பார்த்தேன்.
இரண்டு கலவரங்களுக்கு பிறகும் மிகக் குறைந்த இடைவெளியில் தேர்தல்கள் வந்தன. 1984 தேர்தலில் தீவிரவாதிகள் என சர்தார்ஜிகளையே உருவகப்படுத்தி போஸ்டர்கள் எல்லாம் அடித்தனர். எலெக்ஷன் கமிஷன் அதை கண்டு கொள்ளவில்லை.
ஆனால் 2002 எலெக்சனில் தலைமை தேர்தல் கமிஷனர் வெளிப்படையாகவே தனது காங்கிரஸ் சார்பை காட்டி, மோடியை கோமாளி என்றெல்லாம் வெளிப்படையாக வர்ணித்தார். இந்த அழகில் பாஜக அப்போது மத்தியில் ஆளும் கட்சி. அவர் இவ்வாறு தனது சார்புநிலையை பறைசாற்றலாமா என ரிப்போர்டர்கள் கேட்டபோது, மைக் பக்கத்தில் இருந்ததை தான் கவனிக்கவில்லை என அசடு வழிந்தார். அப்படியும் மோடி மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பெற்று அவர் மூக்கை உடைத்தார்.
1989 எலெக்ஷன் போது 1984 கலவரம் பழங்கதை என காங்கிரசார் கூறினர். அவர்களே 2007-லும் 2001 கலவரம் பற்றி மீண்டும் எழுப்பினர். 2002 முதல் குஜராத்தில் ஒரு கலவரமும் நடக்கவில்லை, அந்த காலகட்டத்தில் அது பெற்ற பிரும்மாண்ட முன்னேற்றம் ஆகியவை சௌகரியமாக மறைக்கப்பட்டன. எலெக்ஷன் கமிஷன் இச்சமயமும் தனது விஷமத்தை தொடர்ந்தது பாற்றி நான் இட்ட இந்தப் பதிவை காணவும். பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post_23.html
ஆகவேதான் ராஜீவின் விஷயத்தையே எடுத்தேன். இப்போது அவர் இல்லை என்பதால் அப்போது அவர் செய்த தவறுகள் மறக்க முடியாது.
மோடி விஷயத்தில் எடுக்கப்பட்ட இரட்டை நிலைகள், அதுவும் முக்கியமாக எலெக்ஷன் கமிஷனின் பாரபட்ச நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்து காட்டுவதே எனது நோக்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மன்னிக்கனும்
ஒருத்தவ்ரை ஆதரிக்கனும்னு முடிவு பண்ணிட்டா அவரோட தவறுகள் நம்ம கண்ணுக்கு தெரியாது!
கண்மூடித்தனமா அவரை ஆதரிக்க ஆரம்பிச்சிருவோம்!
எச்சூழ்நிலையிலும் எனக்கு அந்த மாதிரி ஒரு நிலை வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான். மோடியை பற்றி உங்களுடய கருத்துகள் அனைத்தும் சோவுக்கு சித்தப்பா பையன் பேசுவது போல் தான் இருக்கிறது!
அரசியல் குளத்துல ராஜிவ் காந்தி ஒரு மட்டைனா மோடியும் ஒரு மட்டை தான்!
@வால்பையன்
நீங்களும் மன்னிக்கணும். ஒருத்தவ்ரை எதிர்க்கணும்னு முடிவு பண்ணிட்டா அவர் செய்த நல்ல விஷயங்கள் நம்ம கண்ணுக்கு தெரியாது!
கண்மூடித்தனமா அவரை எதிர்க்க ஆரம்பிச்சிருவோம்!
//எச்சூழ்நிலையிலும் எனக்கு அந்த மாதிரி ஒரு நிலை வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான்//
ஆனா கண்மூடித்தனமா எதிர்க்கிற நிலை மட்டும் தேவலையா?
மோடியை பற்றி உங்களுடய கருத்துகள் அனைத்தும் சோனியாவின் மருமகன் பேசுவது போல்தான் இருக்கிறது!
//அரசியல் குளத்துல ராஜிவ் காந்தி ஒரு மட்டைனா மோடியும் ஒரு மட்டை தான்//!
மோடி நல்லாட்சியாவது கொடுத்த மட்டை. ராஜீவ்/கருணாநிதி ஆகியோர் பற்றி அவ்வாறு சிறிதளவேனும் சொல்ல இயலுமா?
அந்த நல்லாட்சியையும் மீறி நீங்கள் பலமான அபிப்பிராயம் வைத்திருந்தால் அது மோடிக்கு மட்டும் ஏன் எதிராக இருக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி.
முதலில் மோடியின் கீழ் குஜராத் பெற்றுள்ள வளர்ச்சிகளை பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அவரளவுக்கு ஊழலற்ற ஆட்சியை இப்போது சமகாலத்தில் கொடுப்பது யார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மோடி என்ற தனிமனிதனுக்கு நான் எதிரியல்ல!
பா.ஜ.க என்ற மதவாத ச்க்திக்கு நான் எதிரி!
அதற்காக திரவிட கட்சிகளையோ, கம்யூனிஸ்டையோ ஆதரிக வேண்டிய அவசியமில்லையே!
மேலும் இது பட்டிமன்றமும் அல்ல!
என் பக்கம் நியாயமா உங்கள் பக்கம் நியாயமா என்று பார்க்க!
இந்துதுவா பற்றுதலை தாண்டிய ஒரு தேசிய பார்வை மோடிக்கு இருக்குமேயானல் அதை எதிர்க்க எந்த இந்தியனுக்காவது துணிவு இருக்குமா?
உங்கள் பதில் பின்னூட்டத்தை நான் ரசித்தேன்! முக்கியமாக ராஜிவ்காந்தியின் மருமகன்! எனக்கும் ஆசை தான் ஆனால் ஒருத்தன் முந்திட்டானே!
@வால்பையன்
ஊழலற்ற நல்லாட்சி என்பதுஉங்களுக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை. பத்திரிகை பிரச்சாரங்களை மட்டும் பிடித்து கொண்டு தொங்குவீர்கள்.
நல்லாட்சி பற்றிய கேள்விக்கு பதில் தராது இடைவிடத மௌனம் ஏன்?
பாஜக மதவாதக் கட்சி என்பதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இசுலாமியருக்கு எதிராகப் பார்க்கப்படும் என்ற வோட்டு அரசியல் செய்யும் காங்கிரஸ்தான் இசுலாமிய இனத்தை முற்றிலும் அவமதிக்கிறது என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை?
இங்கு இருப்பது இரு தெரிவுகள். காங்கிரசா பாஜகவா? நான் நல்லாட்சிக்கு முக்கியத்துவம் தருகிறேன். நீங்கள்? காங்கிரசின் மதவாத கொள்கை பற்றி உங்கள் கருத்து என்ன.
ஓக்கே வாக்கிங்கிற்கு செல்கிறேன். ஏதேனும் பதில் இருந்தால் வந்து மட்டுறுத்துகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
30 வருடங்கள் தன் எதோச்சாதிகாரப் போக்கால் நாட்டை சீரழித்தாலும், இறுதிக் காலத்திலாவது, சிறைகளில் இருந்தாவது ஒரு உண்மையான உரிமைப் போரை வழி நடத்தலாம் என்ற ஆகக்குறைந்த நல்லெண்ணமாவது பிரபாகரனின் உள்ளத்தில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம், இல்லை அப்படியாவது வெளியே போய் விட்டு ” நாம் சொன்னால் மக்கள் எதையும் நம்புவார்கள் ” பின்னர் வேறு எதையாவது கூறி சமாளித்துக்கொள்ளலாம், முதலில் தலை தப்பினால் போதும் என்றும் நினைத்திருக்கலாம்.
raba-soosaipraba-11இந்தப் பதிவை நீங்கள் படிக்கும் முன்னராகவே இது ஊகத்தில் அமையப் பெற்றிருக்கும் ஒரு பதிவென்பதை மனச்சாட்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆனாலும், இந்த ஊகங்களை நியாயப்படுத்தும் வலுவான காரணிகள் இருப்பதனால் சில வேளை இது வே உண்மையாகவும் கூட இருந்திருக்கலாம், உண்மைய ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் தொடர்ந்து படித்துப்பாருங்கள்.
அவர் இறக்கவே இல்லை என்பவர்களை தூக்கி வீசிவிட்டு எங்கே இறந்தார் என்பதிலிருந்து ஆரம்பிப்பது நல்லது எனப்படுகிறது.
அவரது மரணச் செய்தி வெளிவரும் வரை இறுதி நேரத்தில் நடந்தேறிய சில சம்பவங்களை மீள ஆராய்வதில் சில “உண்மைச்” செய்திகள் கிடைக்கலாம்.
இன்று விடுதலைப்புலிகளின் ஒரே குரல் பத்மநாதன் அல்லது என்று இன்டர்போலால் தேடப்படும் கே.பி ஆகும்.
ஏனெனில் அவரை மட்டும் தான் தன் இறுதிக்காலத்தில் பிரபாகரன் ஒரு புலிப்பிரதிநிதியாக அதுவும் சர்வதேசங்களோடு பேசவல்ல பிரதிநிதியாக அறிமுகப்படுத்தியிருந்தார், அதுவே விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் இறுதி நியமனமாகவும் இருந்தது.
பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தியை மறுத்திருக்கும் கே.பி, பிரபாகரனின் காலடி வரை இராணுவ சிப்பாய்களின் துப்பாக்கி ரவைகள் பாயும் தொலைவு வந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.
“எமது துப்பாக்கிகளை மெளனிக்க நாம் தயாராக இருக்கிறோம்” எனும் செவிடன் காதில் ஊதிய சங்கான அறிவிப்புத்தான் அது.
பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி தவிர, வேறு எந்த சர்வதேச ஊடகத்தையும் கவராத இந்த அறிவிப்பு வந்த அந்தக் கணமே, பிரபாகரனின் “இருப்பு” கேள்விக்குறியாக்கப்பட்டதை விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தவிர்ந்த அனைத்துலகமும் உணர்ந்துகொண்டது.
“தலைவரே இந்த ஆணையை” நேரடியாகக் கூறினார் என்று கே.பி வழங்கிய அந்த சாட்சியத்தில், தலைவருடன் நான்கு மணி நேரம் நான் தொலைபேசியில் உரையாடினேன் என்றும் கூறப்பட்ட போது, பிரபாகரன் தன் இறுதி நிலையை உணர்ந்த பின் தான் இந்தப் பேச்சு வார்த்தை நடந்திருக்கக்கூடும் என்பது தெளிவானது.
அப்படியானால், சர்வதேச அரங்கில் இதுவரை காலம் அனைத்துலக போலீசுக்கும் மண்ணைத் தூவி தமது ஆயுத மற்றும் கடத்தல் வியாபாரங்களை கச்சிதமாகப் பார்த்து வந்த கே.பியின் சர்வதேசத் தொடர்புகளின் மூலம் “எதையாவது” செய்து, இலங்கை இராணுவத்தினை பிரபாகரனை நெருங்காமற் செய்வது முழு நோக்கம் என்பதும் அப்பட்டமாகத் தெளிவாகியது.
கருணா கூட தான் பிரிந்து வந்த மறுநாள் பி.பிசி க்குப் பேட்டியளிக்கும் போது தான் தன் “தலைவரை” மதிப்பதாகவே கூறியிருந்தாலும், இந்த கே.பி “பிரபாகரன்” என்று பெயர் சொல்லியே இறுதி செவ்விகளில் விளித்திருந்ததை அந்த ஒலிப்பதிவுகளில் கேட்கலாம்.
எனவே, பிரபாகரனின் விடுதலைப் புலிகளின் “தலையாய” நிலையில் கே.பி இருந்திருப்பதும், கே.பியின் சர்வதேச வலைப்பின்னல் தொடர்புகள் இவர்களின் போராட்ட சூற்சுமத்தின் ஒரு பகுதி ஆளுமையைக் கொண்டிருந்திருப்பதுவும் கூட ஊகிக்கக் கூடிய ஒன்றாக மாறுகிறது.
சம நிலையில் வைத்து, புலிகளின் “இருப்பை” வைத்து அரசியல் வியாபராம் செய்யத் தேவையில்லை என்கிற நிலையை மிகக் கடுமையாக எடுத்த மஹிந்த அரசாங்கம், இந்த யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் பழைய சர்வதேச தலையீடுகளை முற்று முழுதாக நிராகரித்து, அவர்களை தமது எல்லைகளுக்கப்பாலும், அவர்கள் கூற்றுக்களை இலங்கையின் இறையாண்மைக்கு அப்பாலும் வெளியில் வைத்தே கையாண்டு வந்ததையும் அவதானிப்பதன் மூலம், இந்த வலைப்பின்னலின் ஆளுமையை இலங்கை அரசாங்கமும் நன்கு அறிந்திருந்திருக்கக் கூடும் என்கிற முடிவையும் எட்ட முடியும்.
கே.பி யின் குரல் சர்வதேசத்தை நோக்கி எழ முன்னராக அதே சர்வதேசத்தை நோக்கிய ஒரு கண்டணத்தையும் அவர் வெளியிட்டதாக தமிழ்நெட் வெளியிட்டிருந்தது.
கண்டனத்துக்குப் பின் தலையீடு எனும் வகையிலாவது இந்த வலைப்பின்னலை உள்ளே இழுத்து, தம் “விடுதலைப்போராட்ட” வியாபாரத்தை நடத்த இவர்கள் எடுத்த அடுத்த முயற்சியாகவே இறுதியாக வழங்கப்பட்ட “ஆயுதங்களை மெளனிக்கும்” செவ்வியும் அறிக்கையும் பார்க்கப்படவேண்டும்.
உயிர்மேல் ஆசையுள்ள பிரபாகரனும் இறுதி வரை முள்ளி வாய்க்காலில் தன் படை சூழக் காத்திருந்ததும் கே.பியின் சர்வதேச வலைப்பின்னலின் சக்தியை நம்பித்தானாக இருக்க வேண்டும்.
இறுதியாகத் தன் மனைவியையும்,பிள்ளையையும் நாட்டை வி்ட்டு அனுப்பும் வேலையை (அதுவும் நடந்திருந்தால்) பிரபாகரனுக்காக கே.பியும் அவரது சர்வதேசத் தொடர்புகளும் தான் செய்து கொடுத்திருக்க வேண்டும்.
எது எப்படியோ, இலங்கைக்கு வெளியே என்று வந்து விட்டால், விடுதலைப் புலிகள் எனும் இயக்கம் முன்னாள் கே.பி இன்னால் எஸ்.பியின் கைகளினாலேயே இயக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இறுதியாக கே.பியின் ஏற்பாட்டில் ஒரு “நாடகம்” அரங்கேறியிருக்க வேண்டும்.
இதை “நாடகம்” என்று குறிப்பிடுவதற்கும் சில காரணங்கள் உண்டு, அதில் பிரதான காரணம் பிரபாகரனின் இறந்த உடலம்.
கே.பியின் ஏற்பாட்டில் சில சர்வதேச சக்திகளின் துணையோடு இலங்கை இராணுவத்தோடு இறுதி நேரப் பேரம் ஒன்று நடந்தேறியிருப்பது மிகத் தெளிவாக கே.பியாலேயே கூறப்பட்டிருக்கிறது.
தமது தலைவர்கள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பித்த கே.பியின் அறிக்கையை புதினம் வெளியிட்டிருந்தது, அதில் இலங்கை இராணுவத்தின் 58வது படைப்பிரிவோடு பேசி, நடேசன்,புலித்தேவன் உட்பட ஒரு சிலர் வெள்ளைக்கொடியை ஏந்திக்கொண்டு வெளியில் வந்து சரணடைவதாக உடன்பட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தது.
எனினும், தற்போது அந்தத் தலையங்கத்தையும் உள்ளடக்கத்தையும் கொஞ்சம் மாற்றி.. ”தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று தமது இறுதி செய்தியாளரும் தொலைபேசியை துண்டித்துக்கொண்டார் என்று சொன்ன பின்னும் புதினம் செய்தியை எடிட் செய்திருக்கிறது.
http://www.puthinam.com/full.php?2b3WuZe0dQe4j0ecCI8B3b4kdFj4d3d5g3cc2HoT3d43cUX3b035Nm3e
அவர்கள் செய்தியை எவ்வாறு மாற்றியமைத்தாலும், ஒரு உண்மை மட்டும் இங்கே மிகத் தெளிவாகப் புலனாகிறது.
அதாவது, இறுதி நேரத்தில் சில சர்வதேச சக்திகளின் உதவி நாடப்பட்டிருக்கிறது என்பதுதான் அது.
அதைப் புதினம், அனைத்துலக சமூகத்திடமிருந்து இந்த சரணடைதலுக்கு சாதகமான சமிக்ஞைகளும் கிடைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறி (தற்போது) , “ஆம்” இந்த இறுதி நேர பேரம் நடந்தது உண்மை என்பதற்கு சாட்சியளிக்கிறது.
இதே வேளையில் தமிழ்நெட்டும் மிகவும் விரக்தி யடைந்த நிலையில் , Colombo ‘ended’ the battle with a massacre என்று மே மாதம் 18ம் திகதியும், மறு நாள் 19ம் திகதி War crime in the massacre of LTTE officials என்று தலைப்பிட்டு புதினத்தின் அதே செய்தியையும் வெளியிட்டிருந்தது.
இறுதி நேரப் பேரம் கே.பி தலைமையில் நடைபெற்றது உண்மெயென்றால் அது நடேசனையும், புலித் தேவனையும் காப்பாற்றுவதற்காக நடந்த பேரமாக இருந்திருக்கப் போவதே இல்லை.
அதன் முழுப் பின்னணியும் பிரபாகரனைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருந்திருக்கும்.
30 வருடங்கள் தன் எதோச்சாதிகாரப் போக்கால் நாட்டை சீரழித்தாலும், இறுதிக் காலத்திலாவது, சிறைகளில் இருந்தாவது ஒரு உண்மையான உரிமைப் போரை வழி நடத்தலாம் என்ற ஆகக்குறைந்த நல்லெண்ணமாவது பிரபாகரனின் உள்ளத்தில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம், இல்லை அப்படியாவது வெளியே போய் விட்டு ” நாம் சொன்னால் மக்கள் எதையும் நம்புவார்கள் ” பின்னர் வேறு எதையாவது கூறி சமாளித்துக்கொள்ளலாம், முதலில் தலை தப்பினால் போதும் என்றும் நினைத்திருக்கலாம்.
இரண்டுமே பிரபாகரனால் மட்டுமே சொல்லக்கூடிய உண்மை.
ஆனாலும், இந்தப் பேரத்தை நடத்திய கே.பிக்கு இதன் அடிப்படை நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.
30 வருட போராட்டமே பிரபாகரனைச் சுற்றி நடந்த போது, இறுதி நேர பேரம் பிரபாகரனின் நலனில் தான் முழு அக்கறை கொண்டிருந்திருக்கும்.
வெற்றிக்களிப்பில் எதிரியைச் சுற்றி வளைத்திருந்த இராணுவம் இதற்கு உடன்பட்டதா இல்லையா என்பது அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களின் வெளிப்பாடு.
கடந்த தடவை இந்திய இராணுவத்தால் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டபோது காப்பாற்றுவதற்கு ஒரு பிரேமதாசா இருந்தார், ஆனால் இந்தத் தடவை கே.பி யின் சர்வதேசத் தொடர்பைத் தவிர வேறு எதையுமே நாடிச்செல்ல முடியாத இறுக்கமான சூழ்நிலை என்பதால் கே.பி எதைச் செய்தாலும் அதில் தான் பிரபாகரனின் முடிவும் தங்கியிருந்தது.
இப்போதிருந்து இதை இரண்டு வகையாகப் பார்க்கலாம், ஆனாலும் முதலில் புலிகளுக்கு ஆதரவான கோணத்திலேயே இதைப் பார்ப்பதாயின், பிரபாகரனின் உடலத்திலிருந்து அதை ஆரம்பிக்க வேண்டும்.
இறுதி நேரத்தில் அங்கே நடந்தது என்ன ? எனும் ஊகத்திற்கு அவரது உடலம் சில சாட்சிகளைத் தருகிறது. அதில் பிரதானமானது அவரது தோற்றம்.
அரசாங்கம் வெளியிட்டிருக்கும் ஒளிப்பதிவுகள் மற்றும் நிழற்படங்களில் பிரபாகரனும் முன் பகுதியில் எந்த வொரு தாக்கத்தையும் காண முடியவில்லை.
அவரது கண் இமைக்குக் கீழ் இருந்து பாதம் வரை எந்த ஒரு சிறு துப்பாக்கிக் காயங்களோ அல்லது வேறு குண்டுச் சிதறல்களால் ஏற்பட்ட காயங்களோ,அடையாளங்களோ அடியோடு இல்லை.
எனவே, பிரபாகரன் தொலை தூரத்தில் இருந்து சுடப்படவில்லை என்று சாதாரணமாகவே இதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம்.
அப்படியானால், அவர் அருகில் கொண்டுவரப்பட்டிருக்கிறார் அல்லது அவருக்கு மிக அருகில் இராணுவம் இருந்திருக்கிறது.
இந்த நிலையில், இராணுவத்தின் ஒரு கூற்றை கவனிப்போமாயின்
“He was certainly not man enough to fight a single battle against army, but instead tried to save his life until the last moment,” என்றும் ..”Not for a single second did he he want to commit suicide, but tried to escape betraying his most loyal followers before a soldier shot him down”. என்றும் மிக உறுதியாகக் கூறப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் மேற்கூறிய பேரம் பேசுதலையும் தொடர்பு படுத்திப் பார்த்தால் ஆகக்குறைந்தது பிரபாகரனுக்கும் இராணுவத்துக்கும் இடையில் ஒரு Close Range தொடர்பு இறுதி நேரத்தில் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்ப முடிகிறது.
இந்த சந்திப்பு ஏதோ ஒரு வகையில் ஒரு முறுகல் நிலையைத் தோற்றுவித்திருக்கும் வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகிறது.
அது பேரங்களின் விளைவாகவே இருந்திருக்கும் சாத்தியம் அதிகமாகக்காணப்படுகிறது.
அதற்கான சில “அந்த நேர” ஊகங்களுகம் வலுவான காரணிகளாக அமைகிறது.
பிரதானமாக குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியின் பயணம் குறித்துக் கசிந்த செய்தியைப் பார்க்க வேண்டும், இந்தப் பக்கத்தில் இராணுவத்துடனான பேரம் நடந்துகொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு வகையில் இராணுவத்தினருக்கு நெருக்குதலைக் கொடுக்கும் நோக்கில் பிரபாகரனால் அல்லது பொட்டம்மானால் தீட்டப்பட்ட திட்டத்தின் படி, சுற்றி வளைத்திருக்கும் இராணுவத்தினரைத் தாண்டிச் செல்ல ஒரு வண்டி முயற்சித்திருக்கிறது.
இதன் போது, கலவரமடைந்த இந்த சந்திப்பு இறுதியில் மீண்டும் ஒரு சண்டையில் முடிந்திருக்கிறது.
மிரண்டு போன இராணுவத்தின் ஒரு பகுதி ஆம்புலன்ஸை முற்றாக அழிக்க, இப்படியான ஒரு இக்கட்டான நிலையில் இந்த அளவு ரிஸ்க் எடுத்து வெளியேற முயற்சிப்பதாக இருந்தால் அது பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து, தப்பிப் போக எத்தனித்த பிரபாகரன் வண்டியோடு சேர்த்து தாக்கியழிக்கப்பட்டார் என்கிற செய்தி பரவியிருக்க வேண்டும்.
இந்த செய்தியில் முழு உலகமும் கவனத்தைத் திருப்பியிருந்ததனால், இன்னொரு செய்தியை கவனிக்கத் தவறி விட்டது, அதாவது மே மாதம் 19ம் திகதி காலையிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறு அளவில் சண்டை நடந்தது என்பதாகும்.
பேரம் பேசுதல் நடைபெற்ற நேரம் காலை 5.45 என்று புதினம் தெரிவித்திருக்கிறது, எனவே அதற்கு முன்பாக இருளில் பல விடயங்கள் அங்கே நடைபெற்றிருக்கின்றன.
இப்போது சண்டை வெடித்ததனால் பிரிக்கப்பட்ட புலிகளின் இறுதி அணி சிறு சிறு குழுக்களாகவே இராணுவத்துக்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்.
அந்த சந்தர்ப்பங்களில் திக்குத் தெரியாமல் சிதறிப்போன புலித் தலைவர்களின் உடலங்களைத்தான் இராணுவம் இன்னும் தேடிக்கொண்டிருப்பதாகவும் கொள்ளலாம்.
எனினும், பிரபாகரனைப் பொறுத்தவரை இராணுவத்தின் பிரதான இலக்கு அவர் என்பதால் அவர் தனியாக மாட்டிக்கொண்டது போலத் தான் தெரிகிறது.
அதிலும் மிக மிக நெருக்கமாக இருந்து தலையின் பின் பகுதி குறி வைக்கப்பட்டிருக்கிறது, அதுவும் இராணுவம் காட்டிய படங்களைப் பார்க்கும் போது, தலையின் மேற்பகுதியில் தாக்குதல் நடந்ததுக்கான அறிகுறிகள் காணப்படுகிறது.
அவரது முகத்தை மக்களுக்குக் காட்டுவதற்காக வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்டு தாக்குதலை நடத்தி விட்டு, பின்னர் தண்ணீரில் வீசி, சில மணிநேரங்களின் பின்னர் எடுத்திருக்கவும் கூடும்.
அல்லது உண்மையிலேயே அந்த இறுதி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, தப்பிச் செல்ல முயன்ற பிரபாகரனின் தலையின் பின் பகுதி தாக்கப்பட்டிருக்கவும் கூடும்.
எதுவாகினும் பிரபாகரன் சுடப்பட்டதை விட பாரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியத்தையே அதிகமாக ஊகிக்க முடிகிறது.
“Not for a single second did he he want to commit suicide, but tried to escape betraying his most loyal followers before a soldier shot him down”
இராணுவக் கூற்றை வைத்துப் பார்க்கும் போது தன்னோடு இருந்த தமது விசுவாசிகளையும் விட்டு விட்டு பிரபாகரன் தப்ப முனைந்ததாகவும் இறுதி நேரம் வரைக்கும் தன் உயிரை மாய்க்க அவர் விரும்பவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது சாட்சியங்களால் நிரூபிக்கப்படக்கூடிய உண்மைக் கூற்றாக இல்லாவிடினும், இராணுவம் கூறுவது போன்று யாரோ ஒரு சிப்பாய் “இவர்தான் பிரபாகரனைக் கொன்றவர்” என்று அறிமுகப்படுத்தப்படப் போகிறார், அவரது விளக்கங்கள் மேலதிக ஊகங்களுக்கான விடைகளைத் தரலாம், ஆனாலும் அவற்றையும் நிரூபிக்க முடியாது.
எது எப்படியாகினும், இதில் நிரூபிக்கப்படக்கூடிய ஒரே உண்மை, இரு தரப்புத் தகவல்களும் பெருமளவு உடன்படும், இறுதி நேரப் பேரமாகும்.
இராணுவம் பிரபாகரனை நெருங்கியிருந்த சூழ்நிலையும், கே.பியின் சர்வதேச சமூகத்தினூடான பேரமும் ஏறத்தாழ உண்மையில் நடந்த சம்பவங்களாக இருப்பதனால், இதன் அடிப்படையில் இப்போது வரை வெளியாகியிருக்கும் விடயங்கள் இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் தொடர்பு படுத்தும் வலுவான காரணிகளாக இருக்கின்றன.
இலங்கை இராணுவம் தற்போது சூசையின் உடலம் மற்றும் வேறு சில புலிகள் இயக்கப் போராளிகளின் உடலங்களின் படங்களையும் வெளியிட்டிருக்கிறது, இதில் சூசையே மிக மோசமாக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது பிரபாகரன் இராணுவத்தின் மிக நெருங்கிய பிடியில் முழுமையாக அகப்பட்டது உறுதியாகிறது.
பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்புவோர் இது தொடர்பில் இப்போது அலட்டிக்கொள்ளத் தேவையில்லை, உங்கள் மனங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் நாளில் இதைப்பற்றி சிந்தித்துக்கொள்ளலாம்.
துரதிஷ்டவசமாக இதுதான் உண்மையில் நடந்திருக்கும் என்று வந்தால், பிரபாகரன் எனும் மனிதனின் உயிர்ப்பயம்,வீரம் போன்றன பெரும் கேள்விக்குறிகளாக்கப்படும்.
இன்னும் பிரபாகரனே சாகவில்லை அதற்குள் இப்படியொரு ஆய்வா என்று நினைத்தால் இது வெறும் “புலி எதிர்ப்பு” ஆய்வுதான், வேண்டுமானால் உண்மைகள் ஒரு நாள் உணரப்பட்டதும் வந்து எங்கள் ஊகங்கள் சரியாக இருந்ததா என்பதை சொல்லிச் செல்லுங்கள்.
புலிகளின் அனைத்துப் பினாமி ஊடகங்களும் இந்த நிமிடம் வரை பிரபாகரன் சாகவில்லை என்று காட்டுக்கத்தல் கத்தி, அவரது பழைய பழைய படங்களை வைத்து ஒப்பீடு நடத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர மிக அண்மையில் கடந்த நவம்பர் மாவீரர் தினத்தில் வெளிவந்த அவர் படங்களை ஒப்பீடு செய்ய அவர்களே பயப்படுகிறார்கள்.
எனினும், புலிப்பினாமிகள் அத்தனை பேரும் காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில், புலிகளின் பிரதான ஊடகங்களான தமிழ்நெட்டும், புதினமும் இதுவரை உத்தியோகபூர்வமான ஒரு மறுப்பறிக்கையைக் கூட வெளியிடவில்லை என்பது அனைத்து புலி ஆதரவாளர்களும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கே.பி சொன்னதாக புதினத்தில் இருக்கும் செய்தியும் இலங்கை இராணுவம் பிரபாகரனின் உயிரிழப்பை உறுதி செய்ய முன்னர் பதியப்பட்ட பதிவாகும்.
சுத்துமாத்துப் பினாமிகள் மட்டும் கத்திக்கொண்டிருக்க, சர்வதேசத்தினால் புலிகளின் ஊடகங்களாக மேற்கோள் காட்டப்பட்ட இவ்விரு ஊடகங்களும் மிகவும் அமைதியாக இருப்பதன் பின்னணியில் அவர்களுக்கும் கூட ஒரு “ஆசை” இருக்கலாம், அல்லது கே.பியின் அடுத்த ஈழத் திட்டத்திற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம்.
ஆனாலும் புதினத்தில் யாருக்கோ மனச்சாட்சி உறுத்துகிறது போலவும் இருக்கிறது, மே 20 திகதியிடப்பட்ட ஒரு பதிவின் தலைப்பு
துயரைப் பகிர்வோம்; அமைதியாக எங்களை நாங்களே தேற்றுவிப்போம்
[புதன்கிழமை, 20 மே 2009, 08:59 மு.ப]
என்று அமைந்திருக்கிறது, சூசகமாக சில கருத்துக்கள் அங்கே கசிய விடப்பட்டு, அதைக் கருத்துக்களம் எனும் பெயரில் மின்னஞ்சல் முகவரியிட்டு மக்களின் கருத்துக்காகவும் விடப்பட்டிருக்கிறது.
இது ஒரு சிறு மாற்றம், இந்த மாற்றம் நாளை ஒரு நாள் உண்மைகளைச் சொல்லும்.
அந்த உண்மைகள் வெளிவரும் வேளையில், இந்த இறுதி நேரப் “பேரம்” தொடர்பான பல விடயங்கள் வெளி வரும், அப்போது சில வேளைகளில் நமது ஊகங்களும் ஊர்ஜிதப்படுத்தப்படலாம்.
எனினும், உண்மைகளைப் பேசும் பக்குவத்தைப் இழந்து, பரப்புரை மருத்துவர்களிடம் விடுதலைப் போராட்டத்தை விற்றது முதல் இது வரை புலிகள் தப்பித்தவறியும் உண்மைகளை மக்கள் முன் நியாயமாக எடுத்துரைத்ததே இல்லை.
எனவே, பிரபாகரனைக் காலங்கடந்தாவது “மாவீரனாக்கும்” முயற்சிகளுக்காக பல கதைகள் புனையப்படும்.
இலங்கை இராணுவத்தின் இராணுவ வெற்றியானது, பிரபாகரன் இந்தத் தீவில் இறுதியாக ஒளிந்திருந்த கடைசி அங்குலத்தையும் மீட்டெடுத்த பின்னர் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, அவர் தலை முன்னால் இராணுவத் துப்பாக்கிகள் நீட்டப்பட்டது மறுக்க முடியாதது, ஆனாலும் அதையும் மறுத்து பல சூப்பர் மேன் கதைகளை எதிர்கால நலன்களை கருத்திற்கொண்டு இன்நாளின் புதிய தலைவர் முன்னெடுத்துச் செல்லும் சாத்தியமும் உண்டு.
ஒட்டு மொத்த புலிகள் இயக்கத்தின் தூண்களும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு கூண்டோடு அழிக்கப்பட்ட வரலாறு வரை அவர்களது விளக்கங்ள் மாறிச்செல்லலாம், இது புலிகள் ஆதரவு நிலையிலிருந்து பார்க்கக் கூடிய பார்வை.
ஆனால், ஒட்டுமொத்தத் தளபதிகளும் ஒரே இடத்தில் “குவிக்கப்பட்ட” யுத்த தீர்க்க தரிசனம் !? என்பதன் பின்னால் இதே விடயத்தை புலிகளுக்கு எதிரான போக்கிலிருந்தும் ஆராய ஆரம்பித்தால், அது ஏன் இவர்கள் ஒரே இடத்தில் “குவிக்கப்பட்டார்கள்” எனும் கேள்வி எழும்.
இலங்கையில் இறுதியாகப் போர் நடந்த அத்தனை நிலப்பகுதியும் இராணுவத்தினருக்கு புதிய இடங்களாக இருந்தாலும், புலிகளுக்கு இது பழகிப்போன நிலமாகும்.
இராணுவம் வரைபடங்களை வைத்து முன்னேறிக்கொண்டு சென்ற ஒவ்வொரு அங்குல நிலத்தையும் புலிகள் கால் நடையாகவும் பல காலங்கள் கடந்து சென்றிருப்பார்கள்.
அந்த அளவுக்கு தம் கட்டுப்பாட்டுப் பகுதியின் பூகோள அமைப்பை நன்கறிந்து வைத்திருந்த புலிகள், தம் கடற் பகுதிகள், தம்மிடம் இருக்கும் வசதிகள், தம்மால் முடிந்தது முடியாதது எது என்பதெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்த புலிகள், அவர்கள் ஆதரவாளர்களே சொல்லுவது போல் பின்வாங்கிப் பின்வாங்கித்தான் சென்றார்கள் என்றால் யாருடைய தூண்டுதலால் பின்வாங்கினார்கள்?
பின்வாங்கிப் பின்வாங்கிப் பின்னர் முள்ளி வாய்க்காலில் ஒட்டுமொத்தப் பெரும் தலைகளுடன் ஒரு இடத்தில் ஏன் குவிந்து கொண்டார்கள்? நாளை ஒரு விபரீதம் ஒன்று நடந்தால் முழுப் புலியும் கூண்டோடு அழிக்கப்பட்டுவிடுமே என்கிற சாதாரண அறிவு கூட இல்லாமலா புலனாய்வுப் பிரிவெல்லாம் வைத்திருந்தார்கள்.
சயனைட் வில்லைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வாழ்ந்த அனைத்துத் தளபதிகள், முக்கியஸ்தர்கள் சகிதம் ஒரு இடத்தில் குவிந்து, ஒரு கட்டத்தில் சயனைட்டெல்லாம் அடிக்க வேண்டாம் வெள்ளைக் கொடி பிடிப்போம் எனும் மன நிலைக்கு எதனால் கொண்டுவரப்பட்டார்கள்?
முள்ளிவாய்க்காலில் அவர்கள் காலடிக்கு இராணுவம் வரும் வரை பலிகொடுத்த ஆயிரமாயிரம் மக்கள்,போராளிகளின் தியாகங்களை எல்லாம் சாகடித்துவிட்டு இறுதியாகவும் இப்படிப் பேரம் பேசப்போன புலிகளின் உண்மையான தத்துவம் என்ன?
பேரம் பேசி உயிர்களை தப்ப வைத்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்ய, வாருங்கள் வந்து அமருங்கள் என்று பாய் விரித்து அத்தனை பேருக்கும் புதினம் சொன்னது போல வஞ்சகத் தாக்குதலைத்தான் இராணுவம் தன் யுத்த தந்திரமாகத்தான் செய்திருந்தாலும் “அந்த” நிலைக்கு அவர்கள் சென்றதன் காரணம் என்ன? உண்மையிலேயே அவர்கள் புலிகளா இல்லை பூனைகளா?
இல்லை “நான் உங்களை எல்லாம் காப்பாற்றுவேன்” என்று யாராவது அனைவரையும் ஒரு இடத்தில் குவித்து “காவு” கொடுத்தார்களா? அப்படியானால் அதில் அவருக்கு அல்லது அவர்களுக்கு என்ன இலாபம்? அதற்காக அவர்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன? என்று ஓராயிரம் தொடர் கேள்விகள், புலிகளுக்கு எதிரான நிலையிலிருந்து கேட்கப்படலாம்.
அத்தனைக்கும் உண்மை தெரிந்த பிரபாகரன் இப்போது உயிரோடு இல்லை, எனவே இந்த உண்மைகளும் மறைக்கப்பட்டு இன்னும் சில காலங்கள் புலி ஆதரவாளர்களி்ன் “உணர்வுகள்” பந்தாடப்படுவது உறுதி.
இரண்டில் எந்தப் பக்கம் பார்த்தாலும், பிரபாகரன் இராணுவத்தின் பிடியில் மிக இறுக்கமாக, மிகவும் நெருக்கமாக வைத்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியமாகத் தெரிகிறது.
ஆனாலும் சுய சிந்தனையுள்ளவர்களுக்கு, இனி வரப்போகும் இருபக்க “அறிக்கைகளும்” பல விடயங்களை தெரிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.
உணர்வோடு ஆரம்பித்து பல்லாயிரம் உயிர்களுக்கு உலை வைத்து, இறுதியில் நீரோடு கிளறப்பட்டு, மீண்டும் தண்ணீரில் முடிந்து விட்டது தனித் தமிழ் ஈழ விடுதலைச் சரித்திரம்.
அடுத்த அத்தியாயமாவது மக்கள் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும், அல்லல் படும் மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும்!
// சர்வதேச அளவில் இஸ்ரேலில் முதலிலிருந்தே கூட்டணி கட்சிகள் ஆட்சிதான். அதனால் என்ன குடி முழுகி விட்டது? இத்தாலியில் சில மாதங்களுக்கு ஒரு முறை அரசு சர்வ சாதாரணமாகக் கவிழ்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் பொருளாதார முன்னேற்றத்தில் குறைவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் காலை வாரும் முயற்சிகளில் இருந்ததால், அவர்களது தலையீடின்றி நிர்வாகம் அதிகாரிகள் மேற்பார்வையில் நன்றாகவே நடந்தது //
இத்தாலியிலோ இஸ்ரேலிலோ இது ஒகே. ஆனால் இங்கு, தேச பக்தி என்பது தனது சுயநலத்திற்கு பின் தான் மற்றவர்களுக்குத் தான் என்ற நிலையை அதிகாரிகள் எடுத்து ரொம்ப காலமாகிறது. நடுநிலை என்பது மருந்துக்குக் கூட கிடையாது. ஊழலும் காட்டு தர்பாரும் நடக்கும் இந்த நாட்டில் அரசு கவிழ்ந்தால் கவிழட்டும் என்று எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும்? சுதந்திரப் பேராராட்டத்தின் போது மக்கள் மந்தை மனப்பாண்மையோடு இருந்தார்கள். இப்போதுமா?
மீண்டும் கருணாநிதியின் நாடகம் ஆரம்பமாகி விட்டது.
”அஸ்வினி:1. சார், EVMல் எந்த அடிப்படையில் வேட்பாளர் பெயர் வரிசைப்படுததப்படுகிறது . உதா: தென்சென்னை தொகுதியில் அ இ அ தி மு க வேட்பாளர் பெயர் (ராஜேந்திரன்) முதலிலும் - கணேசன் பெயர் இரண்டாவதாகவும், பாரதி பெயர் மூன்றாவதாகவும் இருந்தது.alpahbetical வகையிலும், உதைக்கிறது.பிற வேட்பாள்ர் பெயர் தேடுவதற்க்குள் விடிந்துவிடும். மொத்தம் 42 பேர். இதற்கு எதேனும் அடிப்படை விதிகள் உள்ளதா? விளக்கவும். (அ) தெரிந்தவர் மூலம் கேட்டு விளக்கவும்.
பதில்: விளக்கம் ரொம்ப சுலபம். பெயரை இனிஷியலுடன் பார்க்க வேண்டும், அதுவும் விரிவாக்கிய நிலையில் இருக்க வேண்டும். நான் ராகவன், இனிஷியலுடன் சேர்த்து நரசிம்மன் ராகவன். ஆகவே என்னை நரசிம்மனுக்கான ஆங்கில எழுத்தின் அடிப்படையில்தான் வரிசைப் படுத்துவார்கள். அதுவே என் பெயரின் இனிஷியலில் ஊர்ப்பெயரும் இருந்தால், உதாரணத்துக்கு அழகியசிங்கபுரம், இப்போது என் பெயர் அழகியசிங்கபுரம் நரசிம்மன் ராகவன். என் பெயர் முதலில் வந்து விடும். என்ன சரிதானே?”
உங்கள் விடையை தயவுசெய்து சரிபார்க்கவும்.
http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/GE/3/PC3CANDIDATE.htm
I am still not convinced. Is there any difference between parities and independents?
@நடராஜன்
நான் அம்பேல்.
நான் ஓட்டளித்தது ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில். அதில் பாமக வின் மாம்பழச் சின்னமானது வாக்களிக்கும் யந்திரம் பேனலின் இரண்டாம் செங்குத்து வரிசையில்தான் வந்தது. நீங்கள் குறிப்பிடுவது போல கட்சி வேட்பாளர்கள் முதலில் சுயேச்சைகள் அப்புறம் என நான் பார்க்கவில்லை. முன்னெல்லாம் வாக்கு சீட்டுகள் தந்தபோது கூட ஆங்கில எழுத்துக்கள் வரிசையில்தான் பார்த்த ஞாபகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
BJP is patriotic, respects Indian culture, wants to protect the
nation.
congres is not patriotic, does not respect Indian culture, does not
have
real intention of protecting the nation.
People vote for congress. Why? because people are also like congress.
//
Comment in daily pioneer
முதலில் தேசிய கட்சிகள் அகவரிசை
அடுத்து மாநில கட்சிகள் அகரவரிசை
அடுத்து சுயேச்சை அகரவரிசை
கிரெடிட் கார்ட் கம்பெனிக்கும் எனக்கும் ஏற்பட்ட டிஸ்ப்யூட் ஒன்றில் ரூ 1000 கட்டுமாறு நிர்பந்திதது SBI வங்கி.
என் மீது தவறு இல்லை, நான் கட்ட முடியாது என்றேன்.
அவர்கள் சிபிலில் போடுவோம் என்றார்கள்.
ஆனதை பாத்துக்கோ என்றேன்...
ஆனால் பல ஆண்டுகள் கழித்து பல லட்சம் ரூபாய் கடன் பெறும்போது இந்த ஆயிரம் ரூபாய்க்கு பல கேள்விகள், பல தொல்லைகள்.
இந்த சிபில்லில் உள்ள எண்ட்ரியை எப்படி அழிப்பது என்று விசாரித்து சொல்லுங்கள்...
Geetha
Post a Comment