பிரபாகரன் - தொடரும் மர்மங்கள், இன்னும் செய்ய வேண்டியவை என்ன?:
அவர் இருக்கிறார் என்கிறார்கள், இல்லை என்கிறார்கள். இன்னும் அறிக்கை போர்கள் விடாமல் நடக்கின்றன. இதுவரை நம்பகத்தன்மை கொண்ட பத்மநாதன் துரோகி என்கிறார் வைக்கோ. என்ன நடக்கிறது இங்கே? ஸ்ரீலங்கா அரசை பொருத்தவரை அவர் இறந்து விட்டார் எனக் கூறி விட்டது. போட்டோக்களையும் காட்டியது, உடலையும் எரித்து விட்டது. அதை பொருத்தவரை தீர்ந்தது விஷயம். அதே சமயம் புலிகள் தரப்பு இன்னும் ஒத்துக் கொள்ளாதது அவ்வரசுக்குத்தான் சாதகமாக முடியும்.
ஏனெனில் இதை வைத்து எஞ்சி இருக்கும் தமிழர்களை சந்தேகத்தின் பார்வையில் வைக்க இயலும். வீரம் பேசும் நேரம் இதுவல்ல. ஹிட்லர் இன்னும் இறக்கவில்லை, நேச நாடுகளுக்கு எதிராக இன்னும் கொரில்லா போராட்டம் நடத்தலாம் என்ற நோக்கில் ஒரு சிறுமுயற்சி நடந்ததாகவும் ஆனால் ஜெர்மானிய பொதுமக்கள் அதற்கு மசியாததால் அது சீக்கிரமே பிசுபிசுத்து போயிற்று என்றும் படித்திருக்கிறேன். இப்போது தேவை புனரமைப்பு முயற்சிகளே. ஸ்ரீலங்கா அரசு வெற்றி பெற்ற நிலையில் அதன் கடமை மிக அதிகம்.
அமெரிக்கா தனது மார்ஷல் திட்டத்தில் பழைய அச்சு நாடுகளையும் சேர்த்து கொண்டது ராஜதந்திரச் செயல். மேற்கு ஜெர்மனி நேட்டோவில் மிக பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்தது. அதுவே ரஷ்யா கிழக்கு ஜெர்மனியை சுரண்டி அதன் வளங்களை தன் நாட்டுக்கு கொண்டு போயிற்று. ஆகவே சோவியத் யூனியன் வீழ்ந்தபோது அதற்காக கிழக்கு ஜெர்மானியர் சொட்டுக் கண்ணீர் கூட வடிக்கவில்லை.
அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிந்ததும் தென் மாநில மிலிட்டரி கமாண்டர்களை லிங்கன் அரசு கௌரவமாகவே நடத்திற்று. இப்போது கூட தென் மாநிலங்களில் தெற்கில் உள் நாட்டு யுத்தத்தை நடத்தியவர்கள் பிறந்த நாள்/நினைவு நாள் ஆகியவை விடுமுறைகளாக அறிவிக்கப்படுகின்றன. அமெரிக்க வெளியுறவு மந்திரி அட்லாய் ஸ்டீவன்ஸன் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தாராம். அதில் ஓரிடத்தில் உங்கள் மூதாதையர் யாராவது அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனரா என கேள்வி இருந்ததாம். ஸ்டீவன்ஸன் சிறிதும் தயங்கவில்லையாம். “எனது தாய்வழி/தந்தைவழி பாட்டனார்கள் என்று உள்ளிட்டாராம். அதனால் அவருக்கு ஒரு பாதகமும் இல்லை என்பதுதான் நிஜம்.
வலைப்பூவில் விட்ஜட்டுகள் பொருத்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்:
இப்போதுதான் NTamil.com widget களை தத்தம் வலைப்பூவில் பொருத்தி கொண்டவர்கள் சந்தியில் நின்றார்கள். அவர்களது பக்கங்களுக்கு போனாலே அது மால்வேர் கொண்டது என கூகள் குரோமும் நெருப்பு நரியும் எச்சரிக்க, வேகவேகமாக அப்பக்கங்களை மூடினோம். இண்டெனெட் எக்ஸ்ப்ளோரரோ சுத்தம், வார்ணிங் எதுவும் தரவில்லை ஆகவே பலரது கணினிகள் பாதிக்கப்பட்டன. ஒவ்வொன்றாக வைரஸுடன் கூடிய வலைப்பூக்கள் திரும்பப் பெறாத அளவுக்கு மூடப்பட்டன. இப்போது ஒருமாதிரி அசௌகரியமான சமநிலை உருவாகியுள்ளது என நினைக்கிறேன். இதிலிருந்து நான் பெற்ற பாடங்கள் பின்வருமாறு:
1. குடுகுடுவென எல்லா விட்ஜட்டுகளையும் பொருத்தி கொள்ளலாகாது. 2. இணையத்தில் என்ன புது ஆஃபர் வந்தாலும் உடனே போய் விழக்கூடாது. 3. இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை பாவிக்கவே கூடாது. அது பாட்டுக்கு எங்காவது ஓரமாக கிடக்கட்டும். அதை சீந்தாதீர்கள். நமக்கு நெருப்பு நரி அல்லது கூகள் க்ரோம்தான் பாதுகாப்பானது. 4. அவ்வப்போது உலாவிகள் பாவிப்பதால் உருவாகும் தற்காலிக கோப்புகள், குக்கீஸ் ஆகியவற்றை அழித்துக் கொண்டே இருக்கவும். 5. மால்வேர்களை இனம்காண உதவும் Ad aware போன்ற கருவிகளை நிறுவி தினம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்து கொள்ளவும். 6. AVG போன்ற antivirus நிரலிகளை நிறுவி அவற்றை அப்டேட் செய்த வண்ணம் இருக்கவும். தினசரி ஒருமுறை முழு கணினியையும் ஸ்கேன் செய்ய வேண்டும்.
நான் மேலும் பாவிக்கும் முன்சாக்கிரதை நடவடிக்கைகள்:
போலி டோண்டுவால் பல தொல்லைகள். இருப்பினும் என்னை பலவிஷயங்களுக்கு தயார் செய்தது இந்த விவகாரமே. கூகள் டாக்கில் அவனது கூட்டாளி (தலையில் முக்காடு போட்ட ஒரு உருவம் அவரது ஐக்கான்) ஒருவர் அடிக்கடி ‘நட்பு கொள்ள விரும்பி’ வருவார். அவர் பெயரைப் பார்த்ததுமே முடியாது என டிக் செய்து விடுவேன். அப்படியும் ஐந்து முறைகள் வந்தார். அதே போல யாஹூ மெசெஞ்சரில் ஒருவன் தன்னை பிருந்தா என்னும் 13 வயது பெண் என சொல்லிக் கொண்டு வந்தான். என்னதான் செய்கிறான் என பார்த்தேன். “அப்பெண்ணின்” பேச்சு சற்றே விரசமான எல்லைக்கு சென்றது. பேசாமல் ஆஃப் செய்தேன்.
அமெரிக்காவில் இம்மாதிரி சிறுமிகள் பெயரில் பெண்போலீசார் சேட் செய்து சம்பந்தப்பட்ட ஆணை ஓரிடத்துக்கு வரச் செய்து விடுவார்கள். பிறகு என்ன சங்குதான். அங்கெல்லாம் இக்குற்றத்துக்கு தண்டனை பல ஆண்டுகள் பரோலே இல்லாத சிறை. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லையே என கூறலாம். யார் கண்டது, என்னை கன்னாபின்னாவென்று பேச செய்து விட்டு “பாரீர் டோண்டு ராக்வனின் யோகியதையை” என்று கூட பதிவுகள் ஏதேனும் போட்டிருக்கலாம். தேவையா அது எனக்கு? ஆகவே அந்த சேட்டில் ரொம்பவும் பொதுவான விஷயங்களை பேசினேன். அதற்கு எனது இந்த உள்ளுணர்வே காரணம்.
போலி டோண்டு விவகாரம் சம்பந்தமாக சைபர் கிரைமில் உதவி ஆய்வாளருடன் பேசியபோது அவரும் நான் இந்த நிகழ்ச்சியை கூறி எனது சந்தேகங்களை கூறியபோது அவை உண்மையாக இருக்கும் சாத்தியக் கூற்றை ஊர்ஜிதம் செய்தார். மின்னஞ்சலில் தெரியாதவர்கள் தரப்பிலிருந்து வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் அழிப்பதே உத்தமம். அப்ப்டியே திறந்தாலும் அட்டாச்மெண்ட் கோப்புகளை திறக்கவே கூடாது. அப்படி ஏதேனும் செய்து தொலைத்தால் உங்கள் கணினி வன்தகட்டில் உள்ள விஷயங்கள் மற்றவருக்கு போய் சேரும் அபாயம் உண்டு. முக்கியமாக phishing மின்னஞ்சல்களை அடையாளம் காண வேண்டும். திடீரென் நீங்கள் பல மில்லியன் பவுண்டுகள் லாட்டரியில் ஜெயித்ததாக மின்னஞ்சல் வந்தால் அதை தாட்சண்யமே இல்லாமல் அழிக்க வேண்டும்.
இப்போது என்ன ஆயிற்றென்றால் ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற சோஷல் நெட்வொர்க்குகள் எனக்கு அலர்ஜியாகி விட்டன. அவை சம்பந்தமான எந்த மின்னஞ்சல் வந்தாலும் அதை ஜிமெயில் ஆர்கைவ்சில் போட்டு விடுகிறேன், ஆளை விடுங்கள் என்று. ப்ரோஸ். காம் மூலம் வரும் தொடர்புகள் எனது மொழிபெயர்ப்பாளருக்கான தொழில்முறை வாழ்க்கைக்கு எதேஷ்டம். இருக்கவே இருக்கிறது எனது தமிழ் வலைப்பூ. மீதி எதுவும் இப்போதைக்கு தேவையில்லை என்று நிம்மதியாக இருக்கிறேன். தொடர்புகள் தேவை என்றால் வலைப்பதிவர் சந்திப்புகள் இருக்கவே இருக்கின்றன.
வால்பையன் மூலம் கற்ற ஒரு விஷயம்:
நேற்று வால்பையனிடமிருந்து ஒரு ஃபோன். Kerchiefக்கு ஸ்பெல்லிங் கேட்டார். சொன்னேன். அது பிரெஞ்சு வார்த்தையா என கேட்க, முதலில் இருக்கவே முடியாது என கூறினேன், ஏனெனில் பிரெஞ்சில் சாதாரணமாக் k யில் வார்த்தைகள் துவங்காது. பிறகு எதற்கும் பார்த்து விடுவோம் என கூகளிட்டால் அது couvre-chef (head cover) என்னும் பிரென்சு சொல்லின் மருவிய உருவமாம். தலையை மூடும் துணி என்று பொருள். மறுபடியும் அவரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். இதை நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் போடச் சொல்லி கேட்டு கொண்டார். போட்டு விட்டேன். ஓக்கேதானே வால்பையன்? என் பேத்திக்கு என் அன்பை தெரிவிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
7 hours ago
25 comments:
Itz not Natesan, Itz Padmanathan
Nakkheeeran also shows a malware! If Vikatan showed such malware, people started abusing it in tamil blogs and started blamming paappaan. But because of Nakkheeeran, nobody started specifying it as it is soothira pathirikkai.
//Itz not Natesan, Itz Padmanathan//
நன்றி, திருத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Itz not Natesan, Itz Padmanathan//
நன்றி, திருத்தி விட்டேன்.//
பத்மநாபன் இல்லை. பத்மநாதன். என்னத்த திருத்தினீங்களோ...
Ad aware எல்லாம் வைத்துக் கொண்டாலும் இதே பிரச்சினைதான். ஃப்ரீயா கொடுத்தா ஃபெனாயிலைக் கூட இரண்டு பாட்டில் வாங்கிக்கிருவோம். ஆனால் அதனால ஏதாவது ப்ராப்ளம் வந்தா எங்கப் போய் நிப்பீங்க? சரியான ஆண்ட்டி வைரஸ் இருந்தாலே பல பிரச்சினைகளை தடுத்துக் கொள்ளலாம்.
நீங்க ப்ளாக் மூலமா நெட்வொர்க்கின் பண்ணி போற வர்றவன்கிட்ட எல்லாம் அடி வாங்கற விட சோஷியல் நெட்வொர்க்கிங்கில் பலனும் அதிகம். அடியும் கம்மி. சரி விடுங்க. உங்களுக்கு சொல்லி விளங்க வைக்கிறது கஷ்டம்தான்.
//அட்லாய் ஸ்டீவன்ஸன் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தாராம்....//
ஆவ்வ்வ்வ்... எங்கியோ யாரோ எழுதினது எல்லாம் தூக்கிப் போட்டுகிட்டு வந்திரப்படாது. ஸ்டீவன்ஸன் எழுதிக் கொடுக்காட்டினாலும் மீடியா நோண்டி நொங்கெடுத்திருவாங்க. அதே போல அவரோட ஹிஸ்டரியும் பக்காவா இருக்கறதுனால அவர் தைரியமா எழுதிக் கொடுக்கலாம். நீங்களும் நானும் எழுதிக் கொடுத்தா கிரெடிட் கார்டு கூட கொடுக்க மாட்டான்.
//பத்மநாபன் இல்லை. பத்மநாதன்.//
மீண்டும் நன்றி.
//ஆவ்வ்வ்வ்... எங்கியோ யாரோ எழுதினது எல்லாம் தூக்கிப் போட்டுகிட்டு வந்திரப்படாது.//
பின்னே என்ன செய்வதாம். அதுக்காக அட்லாய் ஸ்டீவன்சன் படிவம் நிரப்பிய போது பக்கத்தில் இருந்து பேனா கொடுத்து உதவிக் கொண்டிருந்தால்தான் சரியாக இருந்திருக்கும் என்பதுதான் உங்கள் துணிபா? இது அமெரிக்கர்கள் உளநாட்டு யுத்தத்திற்கு பிறகு முன்னாள் விரோதிகளை சரியாக ட்ரீட் செய்து அவர்களையும் தேசீய நீரோட்டத்துக்கு கொண்டு வந்ததன் மகத்துவத்தைக் கூறவே குறிப்பிடப்பட்டது. மற்றப்படி அட்லாய் ஸ்டீவன்சன் டெமாக்ரடிக் கட்சியை சார்ந்தவர், ரிபப்ளிகன் கட்சி ஆதரவாளனான டோண்டு ராகவனுக்கு அதை மீறி அவர் மேல் அபிமானம் எல்லாம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் நல்லாதான் இருக்கு! அடிக்கடி வரேன், அப்புறம் ஒரு கண்டனம் உங்களுக்கு!
//வீரம் பேசும் நேரம் இதுவல்ல. ஹிட்லர் இன்னும் இறக்கவில்லை, நேச நாடுகளுக்கு எதிராக இன்னும் கொரில்லா போராட்டம் நடத்தலாம் என்ற நோக்கில் ஒரு சிறுமுயற்சி நடந்ததாகவும் ஆனால் ஜெர்மானிய பொதுமக்கள் அதற்கு மசியாததால் அது சீக்கிரமே பிசுபிசுத்து போயிற்று என்றும் படித்திருக்கிறேன். இப்போது தேவை புனரமைப்பு முயற்சிகளே. ஸ்ரீலங்கா அரசு வெற்றி பெற்ற நிலையில் அதன் கடமை மிக அதிகம்.//
// அமெரிக்கா தனது மார்ஷல் திட்டத்தில் பழைய அச்சு நாடுகளையும் சேர்த்து கொண்டது ராஜதந்திரச் செயல் //
ஈழ தமிழனுக்கு ராஜதந்திரம் மற்றும் அரசியல் பற்றியெல்லாம் சொல்றீங்களே....? நங்கநல்லூர்ல இருக்கும் எனது மனைவி வெயில் தாங்க முடியலன்னு சொன்னப்ப ்நான் நம்பல...!
//ஈழ தமிழனுக்கு ராஜதந்திரம் மற்றும் அரசியல் பற்றியெல்லாம் சொல்றீங்களே....?//
சரியா படியுங்க, ராஜதந்திரம் பற்றி சொல்வது ஸ்ரீலங்கா அரசுக்கு. தமிழர்களை அணைத்து செல்வதுதான் அந்த ராஜதந்திரச் செயல்.
நீங்கள் இருக்குமிடத்தில்தான் வெய்யில் அதிகம் போலும். :))
அன்புடன்,
டோண்டு ராகவன்
நங்கைநல்லூர் மட்டுமல்ல தமிழகம் முழுமைக்கும் வெயில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு மூத்தப் பதிவாளர் வீல்சேரில் கைகள் கட்டப்பட்டு மனோதத்துவ டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுவருவதாக பிரபலமான ஒரு பதிவாளர் எழுதியுள்ளார்.
ஆனால், மூத்தப் பதிவாளர் கண்ணியம் காக்கிறார்.
”குலைக்கும் நாயும், விலகும் மனிதரும்” என்று தோன்றுகிறது. சரிதானே?
படிக்க சுவாரசியம்!
Sorry to say this, but anyone involved with Eelam knows that there is a brand name to capitalize on!
No wonder Tamilnadu Politicians are not accepting the "end". They are bothering about their kin to accept plum, money making ministerial posts!
We should also not forget Veerappan episode and Nedumaran's involvement to secure release (money involved?) and Nakheeran Gopal's fierce writings... He might be talking some truth!
What I have heard is, there is forcible donation collection abroad, apart from double taxes at Srilanka, drug trafficking visa Thailand & Burma to European nations, human trafficking to help seek asylum in a good sympathetic "foreign" country,
Would all the relocated Tamils, return back to Srilanka if given autonomy? Now I feel that they will say that a separate state is the final acceptable solution.
What do you say on the above few points?
இந்த வாரக் கேள்விகள்:
1. என்ன ஆச்சு தமிழ் இந்துவிற்கு?
2. மிகச் சிறந்த முறையில் சென்று கொண்டிருந்த போகப் போகத் தெரியும் தொடரை திடீரென நிறுத்தி விட்டார்களே?
3.மற்றவர்களைப் போல் இந்துக்கள் ஏன் காரசாரமாக பதிவுகள் எழுதுவதில்லை?
4. காங்கிரசுககு ஆதரவாக பிளாக் ஆரம்பிக்கும் தொண்டர்கள் மத்தியில் எதிர்முகாமில் இவ்வாறு ஏன் இல்லை? (நல்ல காமெடி செய்வார் அந்த பதிவர்)
5. ரிப்ளிகன் கட்சி ஆதரவு என்பது சோ-வை இமிடேட் செய்ததா அல்லது தங்களுடைய சொந்த கருத்தா?
6. சென்ற தேர்தலில் அடல்ஜி இம்முறை லால்ஜி - அடுத்த தேர்தலில் யாரோ?
7. ஐபுவன் - இந்த வார்த்தை ஜெர்மனி என்பது தெரியும். அர்த்தம் வணக்கம் என்பதா காலை வணக்கம் என்பதா?
8. ப்ரோஸ். காம் வெப்-முகவரி என்ன?
9. சாமான்யர்களிடம் அடித்து பிடித்து வரி வசூல் செய்யும் வருமான வரித் துறை கந்து வட்டி ரௌடிகளை ஏன் கவனிப்பத்ல்லை?
10. மாமி நடிகையை விட அம்மா மிக கழகாகத் தெரிகிறாரே?
கீழ்க்கண்ட கேள்விகளின் காண்டக்ஸ்ட் புரியவில்லை:
//4. காங்கிரசுககு ஆதரவாக பிளாக் ஆரம்பிக்கும் தொண்டர்கள் மத்தியில் எதிர்முகாமில் இவ்வாறு ஏன் இல்லை? (நல்ல காமெடி செய்வார் அந்த பதிவர்)//
காண்டக்ஸ்ட் என்ன?
//7. ஐபுவன் - இந்த வார்த்தை ஜெர்மனி என்பது தெரியும். அர்த்தம் வணக்கம் என்பதா காலை வணக்கம் என்பதா?//
ஐபுவன் என்ற ஜெர்மன் வார்த்தை கேள்விப்பட்டதே இல்லை. ஒன்று செய்யுங்கள் அதை லத்தீன எழுத்தில் எழுதுங்கள். பிறகு பார்க்கிறேன்.
//10. மாமி நடிகையை விட அம்மா மிக கழகாகத் தெரிகிறாரே?//
யாரை சொல்கிறீர்கள்?
மீதி கேள்விகள் அடுத்த பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//10. மாமி நடிகையை விட அம்மா மிக கழகாகத் தெரிகிறாரே?//
யாரை சொல்கிறீர்கள்?
திரிஷா
சார்
விண்டோஸ் உபயோகித்தால் என்னதான் virus scanner, firewall, ad ware blocker உபயோகித்தாலும் எப்படியும் கொசு வையை தாண்டி உள்ளே வரும் நுளம்புவை போல தான்..
அதோடு நம்முடையை system processor , memoryகளை இந்த பாதுகாப்பு காவலர்கள் அக்கிரமித்து விடுவார்கள்..இதோட இலவசமாக வரும் AVG virus scanner கூட ஒரு விதத்தில் Ad ware தான்..
விண்டோஸை கடாசி விட்டு உபுண்டுக்கு மாறி பாருங்களேன்.. விண்டோஸ் osல் உபுண்டுவை நிறுவலாம்..
விண்டொஸ் போல os தனியாக வாங்கி அப்புறம் MS Officeக்கு தனியாக தண்டம் அழவேண்டிய கட்டாயம் இல்லை..
விண்டோஸில் இருக்கும் அனைத்து softwareகளும் இங்கு இலவசமாகவே கிடைக்கிறது.. உபயோகிக்கவும் எளிது..
வைரஸ் தொல்லை அறவே இல்லை..
ஒரு முறை இங்கு படித்து பாருங்கள்.
http://www.ubuntu.com/
விருப்பம் இருந்தால் சொல்லவும்.. நான் உங்களுக்கு உபுண்டு சிடி அனுப்பி வைக்கிறேன்
பிராபாகரன் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவரை தலைவனாக ஏற்று கொண்டவர்கள் பலர்..
சரியோ தவறோ 30 ஆண்டுகளாக தன் கொள்கையில் இருந்து மாறாமல் இருந்த அவரின் இறுதி சடங்குகள் , இறுதி மரியாதை கூட செய்ய விடாமல் அந்த மனிதனை மேலும் மேலும் அவமானபடுத்திகிறார்கள் என்றே தோன்ற்கிறது.
1. காங்கிரஸ் தொண்டனின் வெப் முகவரி http://thinkcongress.blogspot.com/
2. ஜெர்மனி பற்றிய கேள்வி தவறு என்னுடையது திருத்திக் கொள்கிறேன். (http://www.tamildict.com/tamilsearch.php?language=tamil இதைப் பார்த்து தெரிந்து கொண்டேன்)
3. ஒரே மாதிரி கேள்வி கேட்கக் கூடாது என்று மாமி நடிகையைப் பற்றி கேட்டேன்.
//ஐபுவன்//
Singalese word!
//3. ஒரே மாதிரி கேள்வி கேட்கக் கூடாது என்று மாமி நடிகையைப் பற்றி கேட்டேன்.//
இன்னும் மாமி நடிகை யார், அம்மா யார் என்பது புலப்படவில்லை. அருண் திரிஷா என்கிறார். அது சரி என்றால் அம்மா யார்?
ஐபுவன் சந்தேகம் தீர்ந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மாமி நடிகை - திரிஷா, அவருடைய அம்மா பற்றி கேட்டேன்.
//ஐபுவன் சந்தேகம் தீர்ந்தது.//
??
hello... hapi blogging... have a nice day! just visiting here....
FireFox has a bunch of quintessential add-ons.
At the least, disable all your JavaScript (and flash) using noScript/adblock and flashBlock. Block JavaScript/Flash from all websites and allow only the ones you want.
It will take a little while to get used to this, but worth it.
பத்மநாதன் பிரபாகரன் இறந்தார் என்கிற உண்மையைச் சொல்லியதற்காக அவரை தேச துரோகி என்கிறாரே வைகோ...
தேச துரோகத்தைப்பற்றிப் பேசுவதற்கெல்லாம் ஒரு யோக்கிதை வேண்டும். அது வைகோவுக்கு சுத்தமாக கிடையாது என்பது என் துணிபு.
//வால்பையன் மூலம் கற்ற ஒரு விஷயம்://
இது உங்களுக்கே ஓவரா தெரியலையா!
நானே தெரியாம தான உங்களை கேட்டேன்!
மேலும் பெரும்பாலனவர்களுக்கு கர்சிஃப்க்கு ஸ்பெல்லிங்க தெரியாததால தான் போட சொல்லி கேட்டு கொண்டேன்!
உங்க பேத்தி லீவு முடியாம ஊருக்கு திரும்ப மாட்டேன்னு ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கா!
@வால்பையன்
அப்படியில்லை வால்பையன், நீங்கள் இக்கேள்வியை கெட்கதிருந்தால் நான் கூகளிட்டு பார்த்திருக்க மாட்டேன்தானே.
பேத்தி செய்வதை நான் ஆமோதிக்கிறேன்! :))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment