5/16/2009

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 7

இந்த வரிசையில் உள்ள முந்தைய பதிவுகளை பார்க்க அதற்கான லேபலை சுட்டவும்.

ரொம்ப நாளைக்கு பிறகு இந்த விஷயத்தை மீண்டும் தொடுகிறேன். இப்போது நான் தொட நினைப்பது கழுத்து மட்டும் குறைகளை சுமந்து யார் சாதாரணமாக எதையும் சொன்னாலும் தன்னை தாக்குவதாக நினைத்து கொண்டு பிறாண்டுவது. They have a chip on their shoulders என்று அவர்களை பற்றி கூறுவார்கள். நீங்கள் அவர்களுடன் சாதாரணமாகவே பேச இயலாது.

அவர்களில் ஒரு வெர்ஷன் “உனக்கென்னப்பா, நீ பணக்காரன். எனக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாதப்பா, நான் ஏழை” என சீன் காட்டுவார்கள். அதுவும் அவர்களுடன் பயணம் செய்யும்போது இது மிக அதிகமாகவே வெளிப்படும். ஒரு நல்ல பொருளை பார்த்து நாம் வாங்கினால் இதை நாம் கேளாமலே அவர்கள் கூறுவார்கள். சில அசடுகள் அதற்காகவே நல்ல் பொருட்களை வாங்குவதை அவர்கள் இருக்கும்போது தவிர்ப்பார்கள். இங்குதான் நான் கூறுவேன், அவர்கள் உங்கள் உறவினர்கள், வேறு குடும்ப காரணங்களுக்காக தவிர்க்க முடியாதவர்கள் என்றில்லாத பட்சத்தில் அவர்களுடன் செல்வதை முழுமையாகவே தவிர்க்கவும். அப்படியே வந்தாலும் நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையை கவனியுங்கள். அவர்களது அனுமதி உங்களுக்கு தேவையில்லை.

ஒரு முறை நண்பன் குடும்பத்தினருடன் நாங்கள் வெளியூர் சென்றோம். அவனது மனைவியும் அவனும் இம்மாதிரியே தாங்கள் ஏழைகள் என்றெல்லாம் பேசி சீன் காட்டினர். முதலில் என்னை செலவு செய்ய சொல்லி, பிறகு தங்கள் பங்கை கொடுப்பதாக அவர்கள் சொன்னதை நம்பி செலவு செய்த பிறகு அப்பணத்தை வாங்க மாதக் கணக்காயிற்று. அடுத்த முறை நாங்கள் வெளியூர் சென்றபோது தனியாகவே எங்கள் குடும்பம் மட்டும் சென்றோம். நண்பன் விஷயம் தெரிந்து பிறகு என்னிடம் நானும் வந்திருப்பேனே, ஏன் சொல்லவில்லை என கேட்க, நான் அவனிடம் சீரியசாக முகத்தை வைத்து கொண்டு கூறினே, “வேண்டாம்பா, நீ ஏழை, உனக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாது” என்றேன். அவனுக்கு பயங்கர கோபம். இதுதான் தாங்கள் ஏழைகள் என புலம்புபவரிடம் உள்ள பிரச்சினை. மற்றவர்கள் அவர்களிடம் ஆம் நீங்கள் ஏழைகள்தான் என ஒத்து கொண்டால் அது மட்டும் ஏனோ பிடிப்பதேயில்லை.

chip on their shoulder காரர்களிடம் உள்ள வேறொரு பிரச்சினை என்னவென்றால், நீங்கள் என்ன சொன்னாலும் குற்றம் கண்டுபிடிப்பார்கள். அதே சமயம் அவர்கள் உங்களை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். அவ்வாறான நபர்களை சுத்தமாக ஒதுக்குவதே சிறந்த வழி. அப்படித்தான் ஒரு பதிவர் இட்ட பதிவுக்கு சாதாரணமான பின்னூட்டம் போட, அவர் அதை எப்படியெல்லாமோ திரித்து சீன் காட்டி, நான் சந்திக்க விரும்பாத நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே என எழுதினார். ரொம்ப சந்தோஷம், the feeling is quite mutual என எதிர்வினை தந்தது மனதுக்கு நிம்மதியை அளிக்கிறது. அப்பாடா தவிர்க்க வேண்டிய நபரை தவிர்க்க அவரே சான்ஸ் கொடுத்தாரே என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

குப்பன்.யாஹூ said...

As Peterdrucker says a good human being (manager) is the one who sees the plus points, abilities with another person, rather than who sees the deficiencies, negative points with another person.

as u said it is better to avoid negative attitude people.

நாஞ்சில் பிரதாப் said...

எப்படி இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் உங்ககிட்ட வந்து கரெக்டா மாட்டுறாய்ங்க... இல்லைனனா நீங்க அவிங்க கிட்ட மாட்டுறீங்க..

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள். மேலும் ஒரு வர்க்கம் உண்டு. தேவையில்லாமல் மெடிக்கல் அட்வைஸ் கொடுக்கும் வர்க்கம். அந்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.

நிகழ்காலத்தில்... said...

//நான் சந்திக்க விரும்பாத நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே என எழுதினார். ரொம்ப சந்தோஷம், the feeling is quite mutual என எதிர்வினை தந்தது மனதுக்கு நிம்மதியை அளிக்கிறது. அப்பாடா தவிர்க்க வேண்டிய நபரை தவிர்க்க அவரே சான்ஸ் கொடுத்தாரே என.//

நாம் சரியாக இருக்கும்போது, இதுபோல நமக்கு தேவையில்லாத நபர்கள்,செயல்கள் தானகவே விலகும். இது ஒரு நியதி.

வாழ்த்துக்கள்

சரவணகுமரன் said...

//”வேண்டாம்பா, நீ ஏழை, உனக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாது” என்றேன்//

ஆனாலும் இப்படி சொல்வது மூஞ்சில் அடித்த மாதிரி இருக்குமே?

Anonymous said...

//வேண்டாம்பா, நீ ஏழை, உனக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாது//

இது ரொம்ப நன்னா இருக்கே, மொக்கை கேசுகளிடம் பயன்படுத்தி பாக்கனும்...

dondu(#11168674346665545885) said...

@ராகவன் நைஜீரியா
நீங்கள் குறிப்பிட்டவர்கள் பற்றி நான் ஏற்கனவே தவிர்க்க வேண்டிய நபர்கள் - 4-ல் கூறியுள்ளேனே. பார்க்க http://dondu.blogspot.com/2007/01/4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@சரவணகுமரன்
அப்படி சொல்லவில்லை என்றால் உங்களை விடாது அறுத்து தள்ளிவிடுவார்களே. ந்மது மன அமைதிக்காக அவர்கள் ம்முகத்தில் அடித்தற்போல் பேசுவதே நல்லது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muhammad Ismail .H, PHD., said...

@ ராகவன் சார்,

மற்றும் ஒர் அனுபவப்பாடம். கண்டிப்பாக எனக்கு உபயோகம் ஆகும். ஏற்கனவே நீங்கள் சொன்ன அந்த 'அவசரமாக வேலையை முடிக்க சொல்லி உபத்திரவம் கொடுப்பவர்களிடம், அதற்கு இரட்டை கூலி கேட்க சொன்னதை நான் உபயோகப்படுத்தி பலனடைந்தேன்.

முன்பு எல்லாம் புதிதாக கணணி வாங்க என்னை அழைப்பவர்கள் முதலில் என்னை அழைத்து போய் அங்கே வைத்திருந்து பிறகு தான் மற்ற தொழிலாளிகளை அழைத்துக்கொண்டு வருவார்கள். எனக்கு அங்கு உடனே வேலை இல்லாவிட்டாலும் மற்றவர்களின் வேலை முடியும் வரை காத்திருந்து பிறகு எனது வேலையை ஆரம்பிப்பேன். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் எங்களுக்கு உடனே வேலை முடிக்க வேண்டும், பிறகு உங்களை பிடிக்க இயலாது என்பது தான். இதனால் மற்றவர்களிடம் கொடுத்த வாக்கை சரியாக நிறைவேற்ற இயலாமல் பெரும் அவதிபட்டேன்.

உங்களின் அந்த பதிவை படித்தபிறகு இந்த 'நேரந்தின்னிகளிடம்' இதை அப்ளை செய்தேன். என்ன ஆச்சரியம். உடனே தீர்வு கிடைத்துவிட்டது. காசு கூடுதலாக தரவேண்டும் என்றவுடன் மற்றவர்களிடம் வேலையை வாங்கிவிட்டு பிறகு என்னிடம் வருகிறார்கள். ஆதலால் தற்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கின்றது. அண்ணன் உண்மைத் தமிழனின் பதிவை விட பெரிதாக பின்னூட்டமே போட இயலுகின்றது. இதனால் எனது வருமானமும் குறையவில்லை. மாறாக கூடியது. இது தான் உண்மை. முன்னை விட நிம்மதியாகவும் உள்ளது. நம்மை போல் சுய தொழில் புரிவோர்க்கு அதுவோர் அருமையான பாடம். அனுபவத்தை பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் ராகவன் சார்.


@ அன்பின் சரவணகுமரன்,

//”வேண்டாம்பா, நீ ஏழை, உனக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாது” என்றேன்//

ஆனாலும் இப்படி சொல்வது மூஞ்சில் அடித்த மாதிரி இருக்குமே? //


இப்படி முகத்தில் அடித்தாற்போல சொல்லத்தெரியாமல் தான் நான் இவ்வளவு நாட்களாக அவதிப்பட்டேன். இப்படி நடப்பதால் சிலர் நம்மை முசுடு எனக்கூறலாம். ஆனால் பலர் நம்மை misuse பண்ண இயலாது. நம் நிம்மதி மிக முக்கியம்.

இனிமேல் எந்த உறவுகளுக்கும் ITZ சகோதரர்கள் கூறியது போல் "Strong Connection (or) Dis Connection. Avoid for all Loose Connection " தான். இதன் விளக்கத்தை எலக்ட்ரிகல் இஞ்சீனியர் டோண்டு ராகவனிடம் கேட்கவும்.


with care & love,

Muhammad Ismail .H, PHD,

dondu(#11168674346665545885) said...

@முகம்மது இஸ்மாயில்
நேர அடிப்படையில் சம்பளம் கேட்டு, அதுவும் நாம் வாடிக்கையாளர் அலுவலகத்தில் இருக்கும் முழுநேரத்துக்கும் மீட்டர் போட்டால் தானாகவே கதறிக் கொண்டு நமது நேரத்தை வீணாக்காது வழிக்கு வருவார்கள் என நான் சொன்னதை நீங்கள் நல்லபடியாக புரிந்து கொண்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி.

@சரவணகுமரன்
மின் இணைப்பு இருந்தால் முழுமையாக இருக்க வேண்டும், இல்லாவிட்டல் முழுக்க ஆஃப் செய்திருக்க வேண்டும். லூஸ் கனெக்‌ஷன் என்பது எப்போதுமே ஆபத்தானதே என்றுதான் இஸ்மாயில் கூறுகிறார். சரிதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muhammad Ismail .H, PHD., said...

@ ராகவன் சார்,

ஆமாம். நான் டபுள் சார்ஜ் என்றவுடன் அர்ஜென்ட் எல்லாம் ஆர்டினரி ஆகிவிட்டது. மீட்டரை மாற்றியவுடன் மேட்டர் சரியாகிவிட்டது.

விளக்கம் சரிதான். இது முழுமையான விளக்கம். மின்சாரம் இல்லாமல் மின்சார சாதனங்கள் இயங்காது. அது போலத்தான் மனிதர்களுக்கிடையே உள்ள தொடர்புகளும். சரியான தொடர்புகள் இன்றி மனிதர்களும் இயங்கவியலாது. ஆனால் மின் சாதனங்கள் இயங்க அத்தியாவசியமான அதே மின்சாரமானது விட்டு விட்டு அந்த சாதனத்தில் பாய்ந்தால் அந்த சாதனம் மிக விரைவில் பழுதடைந்துவிடும். அதே விதிதான் மனித உறவுகளுக்கும். அவர்களின் தேவைக்கேற்ப நம்மை உபயோகப்படுத்தும் இந்த உறவினர்கள் நமக்கு தேவையே இல்லை. அதனால் தான் சொன்னேன். தவிருங்கள் இந்த 'லூஸு'களின் தொடர்பை. என்ன விளக்கமாக புரிந்ததா?


ஞாயிற்றுகிழமையில் நான் போட்ட பின்னூட்டத்தை உடனே நீங்கள் மட்டுமே வெளியிடுகிறீர்கள்.ஆக நீங்களும் என்னைப்போல சொந்தகாசில் இணையத்தை உபயோகப்படுத்தி வருகிற ஆள்தான். மற்ற நபர்களைப்போல் அலுவலக வேலை நேரத்தில், அலுவலக காசில் இணையத்தில் மேய்ந்து பதிவு போடும் நபர் அல்ல. சரி, அவர்கள் இப்படி நேரத்தை வீணடித்தால் எப்படி வேலை நடக்கும் ? அவர்களை வேலைக்கு வைத்த முதலாளியின் கதி அதோ கதி தானா?


இந்த விஷயத்தை நீங்கள் தனிப்பதிவாக போட்டால் 'இணையப்புலி'களால் கடிபடுவது நிச்சயம். :-))))). பிறகு இந்த இணையப்புலிகளுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவர்கள் எல்லாம் விசைப்பலகையை வைத்து வீண்போரிடும் வெத்துவோட்டுகள். மொத்தமாக பத்து பேர் இருந்து கொண்டு லட்சம் பேர் போல படம் காட்டுவது. அதனால் தான் இணைய உலகிற்கு Cyber Space என்று பெயர் இதனால் தான் இவர்களின் கணிப்பை நம் மக்கள் தலைகுப்புற பொரட்டி போட்டு மண் கவ்வ வைத்தார்கள். நம்ம மோகன கிருஷ்ன குமாரே (லக்கிலுக்) தேர்தல் முடிவை நினைத்து பயந்து போய் தான் இருந்தார். அந்த அளவிற்கு இவர்கள் பண்ணிய Cyber Bullying அட்டகாசம் மிக அதிகம். இறைவன் நாடினால் இதற்கொரு தீர்வை நாங்கள் வெகுவிரைவில் கொண்டுவருவோம்.


with care & love,

Muhammad Ismail .H, PHD,
www.gnuismail.blogspot.com

வால்பையன் said...

//தாங்கள் ஏழைகள் என புலம்புபவரிடம் உள்ள பிரச்சினை. மற்றவர்கள் அவர்களிடம் ஆம் நீங்கள் ஏழைகள்தான் என ஒத்து கொண்டால் அது மட்டும் ஏனோ பிடிப்பதேயில்லை.//

இது உண்மை தான்!
நிறைய பேரை நானே பார்த்திருக்குறேன்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது