கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. பொதுவாய் மனிதன் தடுமாறுவது எப்போது? ஏன்?
பதில்: தடுமாறுவது மனிதனின் இயல்பு. டீஃபால்ட் நிலை என்று கூட கூறலாம். ஒரு செயலை செய்யும் தருணம் அவன் முன்னால் வைக்கப்பட்ட தெரிவுகள் எல்லாமே மோசமாகவோ அல்லது நன்றாகவோ இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் தடுமாற்றம் வரும்.
அவன் சபலத்துக்கு வாய்ப்பு வரும்போது தனது செய்கை பிறருக்கு தெரியாது என்று அவனுக்கு பட்டால் அப்போதும் நல்லொழுக்கத்திலிருந்து தடுமாறும் வாய்ப்பு உண்டு. இம்மாதிரி உதாரணங்கள் கூறிக்கொண்டே போகலாம். ஆக, தடுமாறுவதுதான் இயல்பு, அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
பதில்: செயற்கையாக எவ்வளவு திருமணங்கள் கட்டி நிறுத்தப்பட்டு வந்தன என்பதையே இது காட்டுகிறது. முக்கியமாக கொடுமைக்கார கணவனிடமிருந்து ஒரு பெண்ணுக்கு விடுதலை என்பது இத்தனை ஆண்டுக்காலம் குதிரைக் கொம்பாக இருந்திருக்கிறது. இப்போது பென்ணும் படித்து, பட்டம் பெற்று தன்காலில் நிற்கும் வலிமை பெற்றுவரும் இந்த நிலையில் அவர்கள் ஏன் வாளாவிருந்து கொடுமைகளை சகித்து கொள்ள வேண்டும்?
அதே சமயம் புதிதாக வந்த சுதந்திரம் அதை மிக அதிகமாக பயன்படுத்தத் தூண்டுகிறது. விவாகரத்து நடந்தபிறகு வரும் குழப்பங்கள் இப்போது உணரப்பட ஆரம்பித்துள்ளன. நாளடவில் ஒருவித சமநிலை வந்துவிடும் என நம்புவோம்.
3. தர்மம் செய்பவருக்கும், உண்மை பேசுபவருக்கும் இந்த காலத்தில் மதிப்பு எப்படி உள்ளது?
பதில்: பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதை உணராது சகட்டுமேனிக்கு வாரிவாரி வழங்குபவன் ஏமாளியாகக் கருதப்படுகிறான். உண்மை பேசுகிறேன் பேர்வழி என இங்கிதமின்றி பலரது ரகசியங்களை பொதுவில் போட்டு உடைப்பவன் மற்றவர்களால் விலக்கப்படுகிறான்.
4. வாழ்க்கையில் உயரும் போது, எதை அவசியம் மனிதன் கடைபிடிக்க வேண்டும்?
பதில்: உயரவேண்டும் என்னும் நோக்கத்தை மறக்காது இருக்க வேண்டும். திசைதிருப்பல்களுக்கு இடம் தரலாகாது. ஒரு இலக்கு முடிந்ததும், அடுத்த இலக்கு என்ன என்பதை பார்த்து சோம்பியிராது முன்னேற வேண்டும்.
5. பிரச்னைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா?
பதில்: சாத்தியமே இல்லை. அப்படியே பிரச்சினையே இல்லாமல் இருந்தாலும் அத்னால் முன்னேற்றம் ஏதும் இல்லைதானே?
6. காதலிக்கும் போது இருக்கிற கிளுகிளுப்பு கல்யாணத்திற்குப் பின் குறைவதேன்?
பதில்: காதலிக்கும்போது சேர்ந்து வாழ்வதில்லையே. அவரவர் வீட்டில்தானே இருக்கிறார்கள். ஆகவே சேர்ந்து வாழும் பிரச்சினை புரியப்போவதில்லை. கல்யாணத்துக்கு பின்னால்தான் ஒவ்வொரு பிரச்சினையாக முன்னுக்கு வருகின்றன. அப்புறம் ஏது கிளுகிளுப்பெல்லாம்?
7. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது. மக்கள் என்ன செய்தால் இது மாறும்?
பதில்: இடைவிடாத விழிப்புணர்வு மக்களிடம் வேண்டும். ஊழல் செய்தால் தண்டனை நிச்சயம் என்னும் நிலை வரவேண்டும். வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் சிறு சலுகைகளுக்காக நீங்கள் லஞ்சம் தராமல் இருக்கும் மனவுறுதி படைத்தவரா? இதை ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
8. குறைகளை சுட்டி காட்டி, நட்பை இழக்க நேரிடும் நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? விளக்கவும்?
பதில்: அப்படி ஏதும் எனக்கு இதுவரை நடக்கவில்லை. மற்றவருக்கு உபதேசம் செய்யும் தகுதி எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அடுத்தவர் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை நான் ஒதுங்கிவிடுவேன். அதேபோல எனது செயல்பாடு மற்றவருக்கு பிடிக்காமல் போய் நான் விலக்கப்பட்டதும் நடந்துள்ளது என்பதையும் கூறத்தான் வேண்டும்.
9. பொதுவாய் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடல் தொடர்பில்லாமல் நட்புடன் பழகமுடியுமா?
பதில்: கஷ்டம்தான். ஆனால் முயன்றால் முடியும். சுற்றிலிருப்பவர்கள் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதை யாரால் கூறமுடியும்?
10. குடும்பம் நடத்த இக்காலத்தில் எவ்வளவு பணம் தேவை ஒருமாததிற்கு?
பதில்: உங்கள் தேவைகளை பொறுத்துள்ளது. வருவாய்க்குள் செலவு, அல்லது செலவுக்கு மேல் வருவாய் வருமாறு பார்த்து கொள்வது. மற்றப்படி இவ்வளவுதான் செலவு ஆகும் என பொத்தாம்பொதுவாக கூற இயலாது.
11. கஷ்டங்களைக் குறைக்க என்ன வழிகளை கற்றுள்ளீர்கள்?
பதில்: கஷ்டங்களையே முன்னேற்றத்துக்கான தூண்டுகோல்களாக மாற்றிக் கொண்டால் என்ன? விளக்குகிறேன். பணக்கஷ்டம் வந்தால் அதை தீர்க்க பணம் சம்பாதிக்கும் வழிகளை ஆராய்வதே. ஒருவருடன் மனவேறுபாடு வந்தால் அவருடன் பேசித் தீர்க்கும் வழிகளை ஆராயலாமே. இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.
12. வாழ்க்கைக்கு வரையறுத்த நெறிமுறைகள் எவை எவை?
பதில்: எக்கச்சக்கமான அளவில் நீதி நூல்கள் நம்மிடம் வேறு எதற்காக உள்ளன. அவை எல்லாமே அனுபவங்களால் புடம் போடப்பட்டவை அல்லவா?
அப்படியும் குன்சாகக் கூறவேண்டுமானால் வாழு வாழவிடு என்னும் கோட்பாடு மிக முக்கியமானது. (அதே தலைப்பில் உள்ள அந்த பிரசித்தி பெற்ற புத்தகத்தைக் குறிப்பிடவில்லை).
13. உண்மையே பேசி கஷ்டப்படுவதைவிட, சமயத்திற்கு தகுந்தாற்போல பொய் பேசி வாழலாம் என எண்ணம் வலுக்கிறதே?
பதில்: உண்மையை எப்போதுமே கூறுதலும் நடக்காத காரியம்தானே. தேவையான அளவு பொய் பேசலாம், ஆனால் அதனால் யாருக்கும் தீமை வரக்கூடாது, முக்கியமாக மாட்டிக் கொள்ளக் கூடாது.
நீங்கள் சொல்லும் எண்ணம் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறது.
14. செய்யும் வேலையில் கடமை தவறாமல் பணியாற்றுபவர்கள் எங்கேயாவ்து உள்ளார்களா?எத்தனை விழுக்காடு?
பதில்: எந்தக் குழுவை எடுத்துக் கொண்டாலும் அதில் சிலர் கடமையே கண்ணாக இருப்பார்கள், சிலர் ஓபி அடிப்பார்கள். ஓபி அடிப்பவர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். விழுக்காடு எல்லாம் யார் பார்ப்பது? அது வேலைக்காகாது.
உதாரணம் என எடுத்துக் கொண்டால் எங்கள் ஐ.டி.பி.எல்-லில் வி.ஆர்.எஸ். என வந்ததும் நன்றாக தத்தம் கடமைகளை செய்து வந்தவர்கள்தான் முதலில் அதை பெற்று சென்றனர், ஏனெனில் அவர்களுக்கு வேறு நல்ல வேலைகள் காத்திருந்தன. ஓபி அடிப்பவர்கள்தான் மிஞ்சினார்கள். அதே சமயம் ஐ.டி.பி.எல்-லின் செயல்பாடும் குறையவே அது அவ்வளவு பெரிய பிரச்சினையாக இல்லை என்பதையும் கூறிடத்தான் வேண்டும்.
15. ஒரு முறைக்கு, நூறு முறை சிந்தித்து செய்த செயலும்கூட தோல்வி பெறுவது எதனால்?
பதில்: ஒரு மாறுதலுக்காக ஆயிரம் முறை சிந்தித்து பிறகு செயலாற்றப் பாருங்கள்.
16. டீன்-ஏஜ் பெண்களுக்கு, செக்ஸை விளக்கி கூறுவதால், அவள் தற்காத்து கொள்வாளா ? இல்லை?
பதில்: இந்த விஷயத்தில் அரைகுறை அறிவு மிக ஆபத்தானது. ஆகவே முழுமையான விளக்கம் அப்பெண்ணின் தாயாரோ பெரிய சகோதரியோதான் தரவேண்டும். ஆனால் அவர்களுக்கே முழுமையான அறிவு இருக்கிறதா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இடியாப்பச் சிக்கல்தான்.
17. உலகிலேயே மிகப் புனிதமான உன்னதமான பணி?
பதில்: “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என ஏற்கனவே பாரதியார் கூறிவிட்டாரே, படிக்கலையா? (எட்டு போடச் சொன்ன போலீஸ்காரருக்கு ஏழரை போட்டுக் காட்டுவதாகக் கூறி சாமி படத்தில் விவேக் அவரை ஸ்கூட்டரில் பின்னால் உட்கார வைத்து, கடைசியில் ரெட்டப் பாலத்தில் உன் கை விழுந்துதே எடுத்துக்கலையா என்று கேட்ட தொனியில் நான் கேட்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்).
பதில்: “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என ஏற்கனவே பாரதியார் கூறிவிட்டாரே, படிக்கலையா? (எட்டு போடச் சொன்ன போலீஸ்காரருக்கு ஏழரை போட்டுக் காட்டுவதாகக் கூறி சாமி படத்தில் விவேக் அவரை ஸ்கூட்டரில் பின்னால் உட்கார வைத்து, கடைசியில் ரெட்டப் பாலத்தில் உன் கை விழுந்துதே எடுத்துக்கலையா என்று கேட்ட தொனியில் நான் கேட்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்).
18. தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏழைகளா?
பதில்: தற்கொலைக்கான பஞ்சன்நாமா எழுதுகையில் தற்காலிக மூளைக்கோளாறால் செய்து கொண்ட தற்கொலை என இங்கிலாந்தில் குறிப்பிடுவார்கள். (Suicide while in a temporary state of unsound mind) என குறிப்பிடுவார்கள். அதே சட்டமுறையை பின்பற்றும் நம்மவர்களும் அவ்வாறுதான் கூறுவார்களாக இருக்கும். மற்றப்படி ஏழைகள்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என இல்லை.
19. வாழும் காலத்தில் சவுகரியமாக, சந்தோஷமாக வாழ வழிகள்?
பதில்: வேலியில் போகும் ஓணானை மடிமீது போட்டுக் கொள்ளாமல் இருந்தாலே பாதி வெற்றிதான்.
20. காதல் திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஓடு காலி என்ற பட்டத்தை இந்த சமூகம் கொடுப்பது நியாயமா?
பதில்: இது கேஸ் பை கேஸ் பார்க்க வேண்டிய விஷயம்.
பதில்: இது கேஸ் பை கேஸ் பார்க்க வேண்டிய விஷயம்.
21. வாங்கிய கடனை திரும்பக் கேட்பதை விரும்பவர் யார்?
பதில்: கேள்வி புரியவில்லையே. கொடுத்த கடனை திரும்பக் கேட்பவர்கள் உண்டு, வாங்கிய கடனை திரும்பக் கொடுப்பவர்கள் உண்டு. இதென்ன வாங்கிய கடனை திரும்பக் கேட்பவர்கள்?
பதில்: கேள்வி புரியவில்லையே. கொடுத்த கடனை திரும்பக் கேட்பவர்கள் உண்டு, வாங்கிய கடனை திரும்பக் கொடுப்பவர்கள் உண்டு. இதென்ன வாங்கிய கடனை திரும்பக் கேட்பவர்கள்?
ஓகோ, வாங்கிய கடன் அப்படியே இருக்க மேலும் கடன் கேட்பவரா? எங்கள் சி.பி.டபிள்யூ.டி பம்ப் ஆப்பரேட்டர் விஸ்வநாதனை பார்த்து விட்டீர்களா என்ன?
22. இந்த பூலோகத்தில் மிகவும் எளிதானது எது?
பதில்: பிறருக்கு ஆலோசனை கூறுவது
23. இந்த பூலோகத்தில் மிகவும் கடினமானது எது?
பதில்: பிறருக்கு ஆலோசனை கூறாமல் இருப்பது.
24. இன்பம் - துன்பம் எங்கே பிறக்கிறது?
பதில்: அவரவர் பார்வை கோணத்தில் பிறக்கிறது.
பதில்: அவரவர் பார்வை கோணத்தில் பிறக்கிறது.
25. பரம ஏழைக்கும், அதீத பணக்காரனுக்கும் வித்தியாசம்?
பதில்: அதுதான் கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. ஒற்றுமை என்னவென்றால் இருவருமே பணத்தின் அருமை அறிந்தவர்கள்.
பதில்: அதுதான் கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. ஒற்றுமை என்னவென்றால் இருவருமே பணத்தின் அருமை அறிந்தவர்கள்.
26. பொதுவாய் பேச்சில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?
பதில்: ஆண் எனச் சொன்னால், ஆண் வாசகாள் ஏத்துப்பாள். பெண்வாசகாள் ஒத்துக் கொள்ளமாட்டாள். அவாளோட பேசி ஜெயிக்க நம்மால் ஏலாது.
பதில்: ஆண் எனச் சொன்னால், ஆண் வாசகாள் ஏத்துப்பாள். பெண்வாசகாள் ஒத்துக் கொள்ளமாட்டாள். அவாளோட பேசி ஜெயிக்க நம்மால் ஏலாது.
27. கணவன் - மனைவி இருவரும் அரசாங்க வேலையில் இருந்தும் மாதக் கடைசியில் ?
பதில்: மாதக்கடைசியில் என்ன? பணக்கஷ்டமா? எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு போதாது, என்ன செய்யலாம்.
பதில்: மாதக்கடைசியில் என்ன? பணக்கஷ்டமா? எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு போதாது, என்ன செய்யலாம்.
28. திருமணத்திற்கு பின் வேலைக்கு போகும் பெண்ணின் மகிழ்ச்சி குறைகிறதா இல்லை?
பதில்: அது அவளை மணக்கும் ஆணின் மகிழ்ச்சி குறைகிறதா இல்லையா என்பதை பொருத்துள்ளது.
29. கொரியாவின் இமாலாய முன்னேற்றத்துக்கு காரணம் என்ன?
பதில்: தென் கொரியாவைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? சுதந்திரப் பொருளாதாரம்தான். முதன்முறையாக அறுபதுகளின் துவக்கத்தில் இனிமேல் இந்த நாட்டிற்கு அமெரிக்க பொருளாதார உதவி தேவையில்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன.
30. விளம்பரங்கள் இல்லாத பத்திரிகைகள்?
பதில்: எனக்குத் தெரிந்து திருமண பத்திரிகைகள்தான்.
31. தமிழ் நாட்டில் ஆண்களை விட, படிப்பில் பெண்கள் சிறந்து விளங்குவது எப்படி?
பதில்: தமிழ்நாடு என்றில்லை, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை.
32. மன அமைதிக்கு வழிகள்?
பதில்: பகவத் கீதை சொல்வதுதான். கடமையை செய், பலனை எதிர்பாராதே. முடியுமா எல்லோராலும்?
எம்.கண்ணன்
1. இண்டியன் ஸ்டைல் கழிவறையை ஏன் அமெரிக்காவில் இண்டியன் ஜான் எனவும் இந்தியாவில் அந்த பீங்கானை ஒரிசா கம்மோடு எனவும் சொல்லுகிறார்கள் ? ஒரிசாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ?
பதில்: எனக்கு தெரிந்து அதற்கு பம்பாய் கக்கூஸ் என்றுதான் பெயர். மற்றப்படி ஒரிசா இங்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை
1. இண்டியன் ஸ்டைல் கழிவறையை ஏன் அமெரிக்காவில் இண்டியன் ஜான் எனவும் இந்தியாவில் அந்த பீங்கானை ஒரிசா கம்மோடு எனவும் சொல்லுகிறார்கள் ? ஒரிசாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ?
பதில்: எனக்கு தெரிந்து அதற்கு பம்பாய் கக்கூஸ் என்றுதான் பெயர். மற்றப்படி ஒரிசா இங்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை
2. இரட்டையர்கள் தவிர லட்சுமணன் என்ற பெயரை பெரும்பாலும் நகரத்தார் சமூகத்தில் மாத்திரம் குழந்தைகளுக்கு வைக்கிறார்களே (வைத்தார்களே). லட்சுமணன் (லெட்சுமணன்) நகரத்தார் என்ன கனெக்ஷன்?
பதில்: ஐயர்களில் லட்சுமணன் எனப் பெயர் வைக்கிறார்களே. ஏ.லட்சுமணசாமி முதலியார் செட்டியார் இல்லையே. நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது.
பதில்: ஐயர்களில் லட்சுமணன் எனப் பெயர் வைக்கிறார்களே. ஏ.லட்சுமணசாமி முதலியார் செட்டியார் இல்லையே. நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது.
3. ஒருவர் இறந்த பிறகு, அவரது வலைப்பதிவுகள், மெயில் போன்றவை என்ன ஆகும் ? அதுவும் அவரது வீட்டாருக்கோ வாரிசுகளுக்கோ அவரது இணைய / மெயில்/blogger ஐடிக்கள், பாஸ்வர்டு தெரியாத நிலையில் ? பதியப்பட்ட பதிவுகளில் உள்ள content யாருக்குச் சொந்தம் ?
பதில்: வலைப்பதிவுகள், மெயில் ஆகியவர்றை வைத்து என்ன செய்வது? அவற்றில் உள்ள விஷயங்களுக்கான காப்புரிமை இறந்தவர்களின் வாரிசைத்தான் சாரும். அதில் எந்த குழப்பமும் இல்லை.
பதில்: வலைப்பதிவுகள், மெயில் ஆகியவர்றை வைத்து என்ன செய்வது? அவற்றில் உள்ள விஷயங்களுக்கான காப்புரிமை இறந்தவர்களின் வாரிசைத்தான் சாரும். அதில் எந்த குழப்பமும் இல்லை.
4. சில வாரங்களாக பலமான வெயிலால் குறைந்திருந்த பன்றிக்காய்ச்சல் பரவல் - மழை / குளிரால் மீண்டும் அதிகரிக்குமா? நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சலாமே ? (குஜராத்தில் மழை இல்லாத போதே) ரஷ்யாவிற்கு சென்று வந்ததாலா ?
பதில்: அவருக்கு எப்போது நோய்தொற்று ஏற்பட்டது என்பதுபற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பதில்: அவருக்கு எப்போது நோய்தொற்று ஏற்பட்டது என்பதுபற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
5. தேவர் நினைவு தினத்தன்று மாலை மரியாதை செய்வதால் மட்டும் அரசியல் கட்சிகளுக்கு தேவர் சமூக ஓட்டுக்கள் கிடைத்துவிடுமா? எந்த நம்பிக்கையில் எல்லா கட்சிகளும் சிலைகளுக்கு முன் வரிசையாக நிற்கின்றனர்?
பதில்: கலந்து கொள்வதால் ஓட்டு கிடைக்கும் என்பது நிச்சயமில்லைதான். ஆனால் அதே சமயம் கலந்து கொள்ளாவிட்டால் தேவர்கள் ஓட்டு கிடைக்காது என்பதும் நிச்சயமாயிற்றே. நீங்கள் கட்சித் தலைவராக இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?
பதில்: கலந்து கொள்வதால் ஓட்டு கிடைக்கும் என்பது நிச்சயமில்லைதான். ஆனால் அதே சமயம் கலந்து கொள்ளாவிட்டால் தேவர்கள் ஓட்டு கிடைக்காது என்பதும் நிச்சயமாயிற்றே. நீங்கள் கட்சித் தலைவராக இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?
6. தேவர் மகன் படம் வெற்றி அடைந்ததற்குக் காரணம் - திரைக்கதையா, வசனமா? கமல் மற்றும் சிவாஜியின் நடிப்பா ? இல்லை கதை தொட்ட ஜாதீய கருவா?
பதில்: முதற்கண் ஒன்று சொல்ல விரும்புவேன். தேவர் மகன் ஜாதீய கரு எதையும் தொடவில்லை. மற்றப்படி நீங்கள் சொன்ன மர்ற காரணிகள்தான் கதை வெற்றியடைய துணைபுரிந்தன.
7. இளையராஜாவின் எவர் கிரீன் பாடல்களை ஏன் இன்னும் யாரும் டிஜிட்டலில் மல்டி டிராக்கில் ரீ ரெக்கார்ட் செய்ய வில்லை? பழைய கர்நாடக இசை கச்சேரிகளை பலரும் டிஜிட்டலில் கொண்டு வருவதைப் போல ஏன் செய்யவில்லை?
பதில்: மன்னிக்கவும் டிஜிட்டலில் கொண்டுவருவது என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆகவே பின்னூட்டத்தில் வால்பையன் யாராவது கூறட்டும். நமக்கும் சங்கீதத்துக்கும் ரொம்ப தூரம்.
8. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் மனைவி தமிழ் ஐயங்காராமே ? இதற்காகவும் ஒரு போராட்டம் நடக்குமா?
பதில்: தெரியவில்லையே. இது ரொம்ப முக்கியமா?
பதில்: தெரியவில்லையே. இது ரொம்ப முக்கியமா?
9. வீரமணி தனது மகனை பொறுப்பில் கொண்டு வைத்திருப்பதைப் பற்றி பத்திரிக்கைகள் அதிகம் மூச்சுவிடக் காணோமே ? (ஒன்றிரண்டு தவிர)
பதில்: திராவிட கழகம் வீரமணியின் பிரைவேட் கம்பெனியாகி பலகாலம் ஆகிவிட்டது. இது என்ன அதிசயம்?
பதில்: திராவிட கழகம் வீரமணியின் பிரைவேட் கம்பெனியாகி பலகாலம் ஆகிவிட்டது. இது என்ன அதிசயம்?
10. கேள்வி பதில் பதிவுகள் போல வாரம் ஒரு நாள் பிரெஞ்சும், ஜெர்மனும் (வெவ்வேறு நாட்களில்) கற்றுக் கொடுங்களேன் - சின்ன சின்ன வார்த்தைப் பிரயோகங்கள், தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சொற்கள், ஜெர்மனி அல்லது பிரான்ஸ் செல்லும் தமிழ் மக்களுக்கு உபயோகமாக இருக்குமே ? உங்கள் பாணியில் கற்றுக் கொடுத்தால் எல்லோருக்கும் இலகுவாக புரியும் (இணையத்தில் படித்து கற்றுக் கொள்வதை விட). (நிச்சயம் உங்களுக்குப் போட்டியாக யாரும் மொழிமாற்ற வேலையில் இறங்கிவிடமாட்டார்கள் :-))
French / German for dummies என்பது போல சுமார் 25 பதிவுகள் பிரெஞ்சுக்கும் 25 பதிவுகள் ஜெர்மனிக்கும் போடலாம். அல்லது ஒரே பதிவில் - அதே தமிழ்/ஆங்கில சொற்களுக்கு பிரெஞ்சில் என்ன, ஜெர்மனில் என்ன என கட்டம் கட்டி சொல்லித் தரலாம்.
French / German for dummies என்பது போல சுமார் 25 பதிவுகள் பிரெஞ்சுக்கும் 25 பதிவுகள் ஜெர்மனிக்கும் போடலாம். அல்லது ஒரே பதிவில் - அதே தமிழ்/ஆங்கில சொற்களுக்கு பிரெஞ்சில் என்ன, ஜெர்மனில் என்ன என கட்டம் கட்டி சொல்லித் தரலாம்.
பதில்: ஆளைவிடுங்கள் சார். நமக்கும் சொல்லித் தருவதற்கும் ரொம்ப தூரம். அதற்கான பொறுமை என்னிடம் சுத்தமாக லேது.
ரமணா
1. அரசின் தொலைபேசி கொள்கையின்படி தனியார் கம்பெனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை (அரசுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம்-) கட்டாமல் உள்ளது போல் வரும் செய்திகள் பற்றி?
பதில்: எல்லாம் பெரிய இடத்து விவகாரம். அதனால்தானே கண்கள் இதயம் நனைந்தது, கண்கள் பனித்தன?
1. அரசின் தொலைபேசி கொள்கையின்படி தனியார் கம்பெனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை (அரசுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம்-) கட்டாமல் உள்ளது போல் வரும் செய்திகள் பற்றி?
பதில்: எல்லாம் பெரிய இடத்து விவகாரம். அதனால்தானே கண்கள் இதயம் நனைந்தது, கண்கள் பனித்தன?
2. தனியார்மயம்,தாராள மயம் எல்லாம் வல்லான் பொருள் குவிக்கும் பகல் கொள்ளைக்குத்தானா?
பதில்: தனியார்மயம், தாராளமயம் இல்லாதபோதே அம்பானிகள் இந்தியாவையே விலைக்கு வாங்கவில்லையா? எல்லா காலங்களிலும் இதுதான் நடக்கிறது. நான் சொன்னது சுதந்திர பொருளாதாரத்தில் வெளிப்படையான போட்டியில் பொருள் ஈட்டுபவர்கள் பற்றி. அதில் சலுகைகளுக்கு இடமில்லை. இப்போதைய பொருளாதார அமைப்பில் அதற்கான சாத்தியக் கூறுகளாவது உண்டு. சோஷலிச சமுதாயத்தில் அவையும் கிடையாது என்பதுதான் நிஜம்.
பதில்: தனியார்மயம், தாராளமயம் இல்லாதபோதே அம்பானிகள் இந்தியாவையே விலைக்கு வாங்கவில்லையா? எல்லா காலங்களிலும் இதுதான் நடக்கிறது. நான் சொன்னது சுதந்திர பொருளாதாரத்தில் வெளிப்படையான போட்டியில் பொருள் ஈட்டுபவர்கள் பற்றி. அதில் சலுகைகளுக்கு இடமில்லை. இப்போதைய பொருளாதார அமைப்பில் அதற்கான சாத்தியக் கூறுகளாவது உண்டு. சோஷலிச சமுதாயத்தில் அவையும் கிடையாது என்பதுதான் நிஜம்.
3. மத்திய, மாநில தலைவர்கள் மெளனம் என்ன சொல்கிறது?
பதில்: இதைத்தான் கள்ள மௌனம் என்பார்கள்.
பதில்: இதைத்தான் கள்ள மௌனம் என்பார்கள்.
4. கூட்டணி என்பதே கூட்டுக் கொள்ளை என்றாகிவிடும் போலுள்ளதே?
பதில்: அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. முறைவைத்து கொள்ளை அடிக்கிறார்களே.
பதில்: அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. முறைவைத்து கொள்ளை அடிக்கிறார்களே.
5. எல்லோரும் சேர்ந்து (சில சுயநல அரசியல் கட்சிகள், நியாயம் தவறும் சில முதலாளிகள், காலம் மாறியதை உணராத ஊழியர்களில் ஒரு பகுதியினர் கண்ணை மூடிக்கொண்டு வாழ்க எனக் கோஷம் போடும் முதலாளித்துவ ஜால்ராக்கள் அனைவரும் ) நல்லமுறையில் இயங்கும் அரசுத்துறைகளுக்கும் மங்களம் பாடிவிடுவார்கள் என வரும் செய்திகள்?
பதில்: நல்லமுறையில் இயங்கும் அரசுத்துறைகள்? எங்கே, எங்கே?
கந்தசாமி
அதிரடியாக உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டால் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்?
டிஸ்கி: கேள்விகள் வந்துவிட்டதால்தான் கூறுகிறேன். நான் வெளியில் இருப்பவன், எனக்கே தோன்றும்போது அவை சம்பந்தப்பட்டவர்களுக்கும் தோன்றாது இருக்குமா? ஆகவே நான் கூறுவது கும்மியடிப்பதற்குத்தான் சமம். இருப்பினும் அதையும் அடித்தால் போயிற்று.
அதிரடியாக உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டால் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்?
டிஸ்கி: கேள்விகள் வந்துவிட்டதால்தான் கூறுகிறேன். நான் வெளியில் இருப்பவன், எனக்கே தோன்றும்போது அவை சம்பந்தப்பட்டவர்களுக்கும் தோன்றாது இருக்குமா? ஆகவே நான் கூறுவது கும்மியடிப்பதற்குத்தான் சமம். இருப்பினும் அதையும் அடித்தால் போயிற்று.
1. கர்நாடக மாநில பிஜேபியில் நடக்கும் தள்ளுமுள்ளு?
பதில்: சண்டைபோடும் எல்லா கோஷ்டியினருக்கும் கன்னம் பழுக்க அறைகள் கொடுத்து முதலில் கட்சியை காப்பாற்றுங்களடா பசங்களா என்பேன்.
2. நக்சல் பிரச்சனை?
பதில்: வேரோடு அழிக்கப்படவேண்டியதுதான். அதே சமயம் அது உருவாகக் காரணமாக இருந்தவற்றையும் கவனித்து சரி செய்ய வேண்டும்.
3. முல்லைப் பெரியாற்றில் மற்றுமொரு அணை?
பதில்: நான் கேரள முதல் மந்திரியாக இருந்தால் ஆதரிப்பேன். தமிழக முதல் மந்திரியாக இருந்தால் எதிர்ப்பேன். வேறு என்ன செய்யவியலும்?
பதில்: நான் கேரள முதல் மந்திரியாக இருந்தால் ஆதரிப்பேன். தமிழக முதல் மந்திரியாக இருந்தால் எதிர்ப்பேன். வேறு என்ன செய்யவியலும்?
4. தொலைபேசித்துறை டெண்டர்/லைசென்ஸ்/கட்டணக் குறைப்பு விவகாரங்கள்?
பதில்: கட்டணக்குறைப்புகள் நுகர்வோருக்கு மாற்றித் தரும் வழிகளை உருவாக்குவேன்.
5. கலைஞர்-ராகுல் கண்ணாமூச்சி?
பதில்: அது சீரியசாகப் போய் திமுக காங்கிரஸ் கூட்டு முறிய ஏற்பாடு செய்வேன்.
6. ஸ்விஸ் வங்கி கறுப்புப் பண கசமுசா?
பதில்: எனக்கு நேரம் இருக்கையிலேயே அந்த கணக்குகள் விவரங்களை அரசுக்கு வருமாறு அவற்றைப் பெற முயற்சிப்பேன். ஏனெனில் எனக்கு அனத வங்கியில் கணக்கு ஏதும் இல்லை, ஹி ஹி.
பதில்: எனக்கு நேரம் இருக்கையிலேயே அந்த கணக்குகள் விவரங்களை அரசுக்கு வருமாறு அவற்றைப் பெற முயற்சிப்பேன். ஏனெனில் எனக்கு அனத வங்கியில் கணக்கு ஏதும் இல்லை, ஹி ஹி.
7. ஸ்டாலின் - அழகிரி பதவிப் போட்டி?
பதில்: இருவருக்கும் ஒரு பொது எதிரியை முன்னுக்கு கொண்டுவரும் வேலைகள் செய்வேன்.
பதில்: இருவருக்கும் ஒரு பொது எதிரியை முன்னுக்கு கொண்டுவரும் வேலைகள் செய்வேன்.
8. சன் டீவி-கலைஞர் டீவி புதுப்பட டீல்?
பதில்: ஜீடிவிக்கு ஏதேனும் சாதகம் செய்துவிடலாமா?
பதில்: ஜீடிவிக்கு ஏதேனும் சாதகம் செய்துவிடலாமா?
9. இலங்கை தமிழர் மறு வாழ்வு இந்தியாவில்?
பதில்: கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன். அகதிகள் இலங்கைக்கு திரும்ப ஏதுவான நிலையை கொண்டுவர பாடுபடுவேன்.
பதில்: கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன். அகதிகள் இலங்கைக்கு திரும்ப ஏதுவான நிலையை கொண்டுவர பாடுபடுவேன்.
10. சீனா/பாகிஸ்தான்/இலங்கை ராணுவ அத்துமீறல்கள்?
எஸ்.குமார்
1) வெண்ணை போன்ற வழுக்கும் இடையும், பந்துகிண்ணம் போன்ற வட்டமான அழகான மார்பும், கிறங்கடிக்கும் கண்களும், விஜய், ரஜினி, விக்ரம் என முன்னணி ஸ்டார்களுடன் நடித்திருந்தாலும் ஸ்ரேயா தமிழில் பெரிய அளவில் முன்னுக்கு வராததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள் ?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட லட்சணங்கள் இப்போதைய சினிமா கதாநாயகிகளுக்கு டீஃபால்ட் தகுதி. அவை மட்டும் போதுமா?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட லட்சணங்கள் இப்போதைய சினிமா கதாநாயகிகளுக்கு டீஃபால்ட் தகுதி. அவை மட்டும் போதுமா?
2) வீட்டு வசதி வாரிய நிலம் விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதே ? அவர் அவ்வளவு ஏழையா ? இல்லை நாட்டுக்கு ஏதேனும் தொண்டு புரிந்துள்ளாரா?
பதில்: என்ன, உண்மையாகவா? அப்படியிருந்தால் அதற்கு அவருக்கு ஒரு யோக்கியதையும் கிடையாது என்பதுதான் நிஜம்.
பதில்: என்ன, உண்மையாகவா? அப்படியிருந்தால் அதற்கு அவருக்கு ஒரு யோக்கியதையும் கிடையாது என்பதுதான் நிஜம்.
3) சமீபத்தில் சென்று வந்த கோயில் உலா பற்றிய விரிவான பதிவுகள் வருமா?
பதில்: இதில் முக்கியமானதே எனது மடிக்கணினியின் சாத்தியக்கூறுகளை நேரடியாகக் கண்டு கொண்டதுதான். அது பற்றி எழுதி விட்டேன், பின்னூட்டங்களில். மற்றப்படி வழக்கமான எல்லா உலாக்கள் போலத்தான் இதுவும் இருந்தது. தனியாக சொல்லும்படி ஒன்றும் இல்லை.
மீண்டும் அடுத்தவாரம் கேள்விகள் ஏதேனும் இருந்தால் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
64 comments:
1.இந்தியாவில் எப்படிப்பட்ட புரட்சி வந்தால் நல்லது நடக்கும்?
2. சமையல் நிகழ்ச்சிகள் பத்திரிக்கைகளிலும்,டிவிகளிலும் அதிகமாய் வருவது பற்றி?
3.தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை காதலிக்கும் மனிதன்?
4.தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை மணக்கும் அப்பாவி?
5.ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன எனும் போக்கு பரவலாய்?
6.இது வரை நடந்துள்ள விசாரணை கமிஷன்களில் சூப்பர் தமாசு எது?ஏன்?
7.சினிமாக்காரங்களைத் தேடி ஊரை விட்டு ஓடுவது குறைந்துள்ளதா?
8. ஜெயம் ரவியின் பேராண்மை ஆங்கிலப் படம் போலுள்ளது உங்கள் கருத்து?(பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்)
9.உப்புமா படங்களைக் கூட டீவிகளை வைத்துக்கொண்டு காசு பார்ப்பதில் யார் கெட்டி?
10.மதிய உணவிற்குப் பின் குட்டி தூக்கம் போடும் பழக்கம் உண்டா?
11.தேவைக்கு மேல் தன்னிடம் பணம், சொத்து உள்ளவர்கள் கூட நிம்மதியாய் இல்லையே?
12.கல்லூரி படிப்பெல்லாம் இனி வேலை வாய்ப்பிற்கு உதவாது என ஆகிவிடுமா?
13.வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கை எப்போது இனிக்கும்?
14.வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கை எப்போது கசக்கும்
15.கிரெடிட் கார்டுகளால் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு பின்,அவர்களின் இன்றைய நிலை?
16.மவுன விரதம் இருக்கும் பழக்கம் உண்டா?
சொந்த இனத்தின் கருவறுப்பினை பார்த்து துடிக்காது, அந்த இனத்தின் காப்பரங்களை கேவலமாக சில தளங்களில் பின்னூட்டும், நியாங்களை சொல்லாமல், விதண்டாவதாம் புரியும் உமக்கு கேள்விகளுக்கு பதில் எழுத என்ன அருகதை உண்டு? அவற்றிலேயே தெரிகின்றதே உமது பக்கச்சார்புகளும், தெளிவிலாத, உண்மையான தேடல்கள் அற்ற தன்மைகளும், குறிப்பட்ட சிலருக்கு ஆலவட்டம் பிடிக்கும் தன்மைகளும்.
உம்மைப்போன்றவர்களை டில்லிக்கே துரத்திவிடாமல் தமிழ்நாட்டில் வைத்திருப்பதுதான் தமிழன்விடும் பிழைகள்.
//நீங்கள் குறிப்பிட்ட லட்சணங்கள் இப்போதைய சினிமா கதாநாயகிகளுக்கு டீஃபால்ட் தகுதி.//
டீஃபால்ட் தகுதிகள் அப்போதைய நாயகிகளுக்கு அறவே கிடையாதா ?
அந்தக் காலத்தில மாமகளுக்கேல்லாம் பூஷ்டியா, நெல் குருது மாதிரி இருந்த தான் பிடிக்குமோ என்னவோ ?
இந்த கேள்வியையும் வால் அண்ணாவுக்கு ரீ டைரக்ட் செய்துவிட வேணாம் அப்போ எல்லாம் அவரு சின்னப் பையனா இருந்திருப்பார் விரவம் தெரிஞ்சிருக்காது.
குப்புக் குட்டி
//பொதுவாய் மனிதன் தடுமாறுவது எப்போது? ஏன்?//
தலைகால் புரியாமல் நடக்கும் போது!
ஏன்னு தெரியாது, ஓவரா மண்டையில வெயிட் ஏறிருச்சுன்னா அப்படித்தான்!
//அயல்நாடுகளுக்கு நிகராக நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துக்கள் எதை உணர்த்துகின்றன?//
தனிமனித சுதந்திரம் இந்தியாவிலும் வந்துருச்சுன்னு உணர்த்துது!
//தர்மம் செய்பவருக்கும், உண்மை பேசுபவருக்கும் இந்த காலத்தில் மதிப்பு எப்படி உள்ளது?//
தர்மம் செய்கிறவர், கொடுக்கின்ற காசுக்கு ஏற்றமாதிரி மதிப்பு!
உண்மை பேசுபவர் செல்லாக்காசு!
//வாழ்க்கையில் உயரும் போது, எதை அவசியம் மனிதன் கடைபிடிக்க வேண்டும்?//
கீழிருந்து தான் வந்தோம் என்பதை மறவாமல் இருந்தாலே போதும்!
//பிரச்னைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா?//
கீழ்பாக்கத்தில் நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்!, பிரச்சனையென்னவோ மற்றவர்களுக்கு தான்!
//காதலிக்கும் போது இருக்கிற கிளுகிளுப்பு கல்யாணத்திற்குப் பின் குறைவதேன்?//
இம்புட்டு தானா என்ற எண்ணமாக இருக்கலாம்!
//எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது. மக்கள் என்ன செய்தால் இது மாறும்?//
மக்கள் லஞ்சம் கொடுக்காமல், வாங்காமல் இருந்தால் மாறும்!
//குறைகளை சுட்டி காட்டி, நட்பை இழக்க நேரிடும் நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? விளக்கவும்?//
எதிலும் ஒரு நாசுக்குதனம் வேண்டும்!
//பொதுவாய் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடல் தொடர்பில்லாமல் நட்புடன் பழகமுடியுமா?//
நம்மை போலவே எல்லோரையும் நினைக்ககூடாது!
நண்பர்களாகவே இருக்கவும் செய்கிறார்கள்!
உடல் உறவு தேவையான இடத்தில் அது!
மன உறவு தேவையான இடத்தில் இது!
//குடும்பம் நடத்த இக்காலத்தில் எவ்வளவு பணம் தேவை ஒருமாததிற்கு?//
பழைய கேள்வி!
ஒருத்தர் கேட்டிருந்தார் மாதம் 4000 வருமானத்தில் குடும்பம் நடத்த முடியுமா என!
//கஷ்டங்களைக் குறைக்க என்ன வழிகளை கற்றுள்ளீர்கள்?//
எதையாவது கற்று கொண்டேயிருந்தால் கஷ்டமே தெரியாதே!
//வாழ்க்கைக்கு வரையறுத்த நெறிமுறைகள் எவை எவை?//
உங்களுக்கு எவை எவை தேவையோ அவை அவை!
//உண்மையே பேசி கஷ்டப்படுவதைவிட, சமயத்திற்கு தகுந்தாற்போல பொய் பேசி வாழலாம் என எண்ணம் வலுக்கிறதே?//
குற்ற உணர்வு இல்லாமல் இருந்தால் சரி!
நம்மால் ஒருவர் நன்மை அடையாவிட்டாலும் பரவாயில்லை, தீமை அடையாமல் இருப்பதே நன்று!
//செய்யும் வேலையில் கடமை தவறாமல் பணியாற்றுபவர்கள் எங்கேயாவ்து உள்ளார்களா?எத்தனை விழுக்காடு?//
சுய தொழில் செய்பவர்கள் எல்லோரும் அப்படித்தான்!
//ஒரு முறைக்கு, நூறு முறை சிந்தித்து செய்த செயலும்கூட தோல்வி பெறுவது எதனால்?//
நூற்றிஒன்றாவது சிந்தனையில் வழியிருந்திருக்கும்!
//டீன்-ஏஜ் பெண்களுக்கு, செக்ஸை விளக்கி கூறுவதால், அவள் தற்காத்து கொள்வாளா ? இல்லை?//
தற்பூர்த்தி செய்யவும் வாய்ப்புண்டு!
//உலகிலேயே மிகப் புனிதமான உன்னதமான பணி?//
எதுவும் செய்யாதிருத்தல்!
//தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏழைகளா?//
விடுதலை விரும்பிகள்!
//வாழும் காலத்தில் சவுகரியமாக, சந்தோஷமாக வாழ வழிகள்?//
சொர்க்கத்திலும் குறை காணும் இளைஞனில் மனது!
நரகத்தில் இன்பம் காணும் குழந்தையின் மனது!
//காதல் திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஓடு காலி என்ற பட்டத்தை இந்த சமூகம் கொடுப்பது நியாயமா?//
தப்பு, அவுங்க பஸ் பிடிச்சோ, ரயில் பிடிச்சோ தான் போயிருப்பாங்க!
இன்னொன்னு கவனிங்க, அடுத்த வருஷம் தம்பதி சகிதம் தலை தீபாவளிக்கு வருவார்கள்!
அதெல்லாம் கணநேர கோபத்தில் வருவது!
//வாங்கிய கடனை திரும்பக் கேட்பதை விரும்பவர் யார்?//
அவருக்கு வந்த சந்தேகம் தான் எனக்கும்!
கேள்வியே புரியல!
//இந்த பூலோகத்தில் மிகவும் எளிதானது எது?//
கேள்வி கேட்பது!
//இந்த பூலோகத்தில் மிகவும் கடினமானது எது?//
ரகசியத்தை மறைப்பது!
//இன்பம் - துன்பம் எங்கே பிறக்கிறது?//
ஒரே இடத்தில் தான்!
//பரம ஏழைக்கும், அதீத பணக்காரனுக்கும் வித்தியாசம்?//
பசிக்கு சாப்பிடுவதும், ருசிக்கு சாப்பிடுவதும்!
//பொதுவாய் பேச்சில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?//
ஆண் பெண்ணிடம்!
பெண் ஆணிடம்!
//கணவன் - மனைவி இருவரும் அரசாங்க வேலையில் இருந்தும் மாதக் கடைசியில் ?//
திட்டமிடாத வாழ்க்கை!
//திருமணத்திற்கு பின் வேலைக்கு போகும் பெண்ணின் மகிழ்ச்சி குறைகிறதா இல்லை?//
டோண்டு சார் பதிலே என்னதும்!
//கொரியாவின் இமாலாய முன்னேற்றத்துக்கு காரணம் என்ன?//
உழைப்பு, உழைப்பு, உழைப்பு!
//விளம்பரங்கள் இல்லாத பத்திரிகைகள்?//
பிழைக்க தெரியாதவர்கள்!
//தமிழ் நாட்டில் ஆண்களை விட, படிப்பில் பெண்கள் சிறந்து விளங்குவது எப்படி?//
ஆண்களுக்கு பல வேலை!
//இளையராஜாவின் எவர் கிரீன் பாடல்களை ஏன் இன்னும் யாரும் டிஜிட்டலில் மல்டி டிராக்கில் ரீ ரெக்கார்ட் செய்ய வில்லை? பழைய கர்நாடக இசை கச்சேரிகளை பலரும் டிஜிட்டலில் கொண்டு வருவதைப் போல ஏன் செய்யவில்லை?
பதில்: மன்னிக்கவும் டிஜிட்டலில் கொண்டுவருவது என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆகவே பின்னூட்டத்தில் வால்பையன் யாராவது கூறட்டும். நமக்கும் சங்கீதத்துக்கும் ரொம்ப தூரம்.//
எனக்கு மட்டும் தெரியுமாக்கும்!
துல்லியமான ஒலிசேர்க்கைகள் டிஜிடலில் கிடைக்கலாம் அதற்காக கேட்டிருப்பார்!
//மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் மனைவி தமிழ் ஐயங்காராமே ? இதற்காகவும் ஒரு போராட்டம் நடக்குமா?//
அவுங்க வீட்டு நாய்குட்டி என்ன சாதின்னு யாரும் ஆரய்ச்சி பண்ணலையா!?
//வீரமணி தனது மகனை பொறுப்பில் கொண்டு வைத்திருப்பதைப் பற்றி பத்திரிக்கைகள் அதிகம் மூச்சுவிடக் காணோமே ? (ஒன்றிரண்டு தவிர)//
வீரமணி ஆளுங்கட்சி நிழலில் இருப்பதால்!
//அரசின் தொலைபேசி கொள்கையின்படி தனியார் கம்பெனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை (அரசுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம்-) கட்டாமல் உள்ளது போல் வரும் செய்திகள் பற்றி?//
அரசுக்கு யானை போவது தெரியாது!
ஆனா ஒரு எறும்பு போயிறக்கூடாது!
//தனியார்மயம்,தாராள மயம் எல்லாம் வல்லான் பொருள் குவிக்கும் பகல் கொள்ளைக்குத்தானா?//
இரண்டிலுமே லாப நஷ்டங்கள் உண்டு!
அதே போல் குருட்டாம் போக்கில் எதையாவது பிடித்து தொங்குவதும் தவறு என்பது என் கருத்து!
சில முக்கிய துறைகள் அரசிடம் இருப்பதே நலம்!
//மத்திய, மாநில தலைவர்கள் மெளனம் என்ன சொல்கிறது?//
அடுத்த தேர்தல் சீக்கிரம்னு சொல்லுது!
//கூட்டணி என்பதே கூட்டுக் கொள்ளை என்றாகிவிடும் போலுள்ளதே?//
இது தெரிய இத்தனை நாளா!?
//நல்லமுறையில் இயங்கும் அரசுத்துறைகள்? எங்கே, எங்கே?//
இழுத்து மூடிய தனியார் துறைகள் உங்கள் கண்களுக்கு தெரியாதே!
//கர்நாடக மாநில பிஜேபியில் நடக்கும் தள்ளுமுள்ளு?//
எல்லாத்துக்கும் ஒரு பதவி!
முக்கியமா எவனும் கோவில் பக்கமே போகக்கூடாது!
//நக்சல் பிரச்சனை?//
பூனையை தூனில் கட்டிய கதை தெரியுமென்று நினைக்கிறேன்!
அது மாதிரி தான் நக்சல்களும், ஆரம்பத்தில் அதிகாரமையத்தை எதிர்க்க வேண்டியிருந்தது, இன்று தேவையேயில்லாமல் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள்!
போராட்டம் வேறு வழியிலும் நடத்தலாம்!
//முல்லைப் பெரியாற்றில் மற்றுமொரு அணை?
பதில்: நான் கேரள முதல் மந்திரியாக இருந்தால் ஆதரிப்பேன். தமிழக முதல் மந்திரியாக இருந்தால் எதிர்ப்பேன். வேறு என்ன செய்யவியலும்? //
ஒரு அரசியல்வாதிகுண்டான எல்லா தகுதியும் இருக்கு டோண்டுசாரிடம்!
//கலைஞர்-ராகுல் கண்ணாமூச்சி?
பதில்: அது சீரியசாகப் போய் திமுக காங்கிரஸ் கூட்டு முறிய ஏற்பாடு செய்வேன்.//
சான்சே இல்ல, அரசியல்வாதியே தான்!
//ஸ்விஸ் வங்கி கறுப்புப் பண கசமுசா?//
ஸ்வீஸ் பேங்க் கிளை இந்தியாவில் திறக்கப்படும்!
//ஸ்டாலின் - அழகிரி பதவிப் போட்டி?
பதில்: இருவருக்கும் ஒரு பொது எதிரியை முன்னுக்கு கொண்டுவரும் வேலைகள் செய்வேன். //
அடிக்கடி நிறுப்பிக்கிறாரே!
//சன் டீவி-கலைஞர் டீவி புதுப்பட டீல்?
பதில்: ஜீடிவிக்கு ஏதேனும் சாதகம் செய்துவிடலாமா?//
பெட்டி தந்தால் படபெட்டி!
//இலங்கை தமிழர் மறு வாழ்வு இந்தியாவில்?
பதில்: கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன். அகதிகள் இலங்கைக்கு திரும்ப ஏதுவான நிலையை கொண்டுவர பாடுபடுவேன்.//
பாருங்க! இவரு சொந்த இடத்தை கேட்டாமாதிரி தாவுறாரு!
//சீனா/பாகிஸ்தான்/இலங்கை ராணுவ அத்துமீறல்கள்?//
பெட்டக்ஸ்லயே அடிக்கனும்!
//வீட்டு வசதி வாரிய நிலம் விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதே ? அவர் அவ்வளவு ஏழையா ? இல்லை நாட்டுக்கு ஏதேனும் தொண்டு புரிந்துள்ளாரா?//
கட்சி ஆரம்பிக்கபோறேன்னு புரளியை கிளம்பிவிட்டாலேயே போதும் போலயே!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அடிச்சோமா!
எப்பூடி!
// சமுத்திரன். said...
சொந்த இனத்தின் கருவறுப்பினை பார்த்து துடிக்காது, அந்த இனத்தின் காப்பரங்களை கேவலமாக சில தளங்களில் பின்னூட்டும், நியாங்களை சொல்லாமல், விதண்டாவதாம் புரியும் உமக்கு கேள்விகளுக்கு பதில் எழுத என்ன அருகதை உண்டு? //
இந்த கேள்வியையெல்லாம் முதலில் ஆட்சியில் இருப்பவர்களை கேட்டுவிட்டு பின் வாங்க இந்த டோண்டுவிடம் கேட்க!
உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுத எந்த அருகதையும் தேவையில்லையோ!?
//டீஃபால்ட் தகுதிகள் அப்போதைய நாயகிகளுக்கு அறவே கிடையாதா ?
அந்தக் காலத்தில மாமகளுக்கேல்லாம் பூஷ்டியா, நெல் குருது மாதிரி இருந்த தான் பிடிக்குமோ என்னவோ ?
இந்த கேள்வியையும் வால் அண்ணாவுக்கு ரீ டைரக்ட் செய்துவிட வேணாம் அப்போ எல்லாம் அவரு சின்னப் பையனா இருந்திருப்பார் விரவம் தெரிஞ்சிருக்காது.//
பேசிக்கலி நான் ஒரு ஆண்டி டெரரிஸ்ட்!
அப்பவெல்லாம் இந்த அளவுக்கு பிட்னெஸ் மெயிண்டெயின் இல்லங்குறது உண்மை தான்!
ஆனால் சாவித்திரியின் ”பி(க)ன்னுக்கு” நான் பெரும் ரசிகன்!
பின்னூட்ட சுனாமி வாலுக்கு நன்றிகள் பல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதிரடியாக உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டால் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்?
1.தங்கத்தின் விலை உயர்வு உச்சத்தில்?
2.பருப்புவகைகளை பதுக்கி வைத்துள்ள வியாபாரிகளை அடக்க?
3.அம்பாணி சகோதரர்கள் சண்டை கோர்ட் வரை?
4.ஐடி துறையின் எழுச்சி?
5.இந்தியாவின் ஜிடிபி ஐ 9 % ஆக்க?
6.வறட்சியை போக்கி செழிப்பு செய்ய?
7.நதி நீர் இணைப்பு?
8.தீவிர வாதம் ஒழிய?
9.பாங்குகள் இணைப்பு?
10.பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு?
கந்தசாமி
பொதுவாக இந்தியர்களுக்கே பெருத்த மார்பகங்கள் உடைய நடிகைகளையே அதிகம் பிடிக்கும். தேவிகா, ஷீலா, தீபா, ஜயந்தி, டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி என்று பெயர்களை கூறிக்கொண்டே போகலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பொதுவாக இந்தியர்களுக்கே பெருத்த மார்பகங்கள் உடைய நடிகைகளையே அதிகம் பிடிக்கும். தேவிகா, ஷீலா, தீபா, ஜயந்தி, டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி என்று பெயர்களை கூறிக்கொண்டே போகலாம்.//
முரண்பாடுகள் உண்டு!
உங்களுக்கு பிடித்தம் முன்னுக்கு, எனக்கு பின்னுக்கு!
//
சமுத்திரன். said...
சொந்த இனத்தின் கருவறுப்பினை பார்த்து துடிக்காது, அந்த இனத்தின் காப்பரங்களை கேவலமாக சில தளங்களில் பின்னூட்டும், நியாங்களை சொல்லாமல், விதண்டாவதாம் புரியும் உமக்கு கேள்விகளுக்கு பதில் எழுத என்ன அருகதை உண்டு?
//
சமூத்திரன்,
தமிழக திராவிட கட்சிகள் மட்டும் 40 எம்.பிக்கள் கொண்டுள்ளார்கள். அவர்களில் ஒரு பார்ப்பானன் கூட கிடையாது. அத்துணை பேரும் திராவிட சிங்கங்கள். அவர்கள் கொடுக்கும் ஆதரவில் தான் மத்தியில் ஆட்சி நடக்கிறது.
அவர்கள் எல்லாம் "தொப்புள் கொடி உறவை" ஏன் இப்படி "கருவருத்துக்கொண்டார்கள்" என்று கேட்க உங்களுக்கு வக்கில்லையா இல்லை வாய் வரவில்லையா ?
nice post.
17.அறிவின் முதிர்ச்சியை காட்டுவது எது?
18.ஆண்கள் தினம் வருமா?
19.உலகில் ஓஹோ' வென்று வாழ்ந்த சிலர், வாழ்வின் கடைசி கட்டத்தில் சாப்பாட்டுக்கே கூட கஷ்டப்படும் நிலை ஏன்?
20.வாழ்க்கை தரம் உயர்வது வசதியாலா?பண்பாலா?
21.ஒரு சில டீன்-ஏஜ் பெண்கள் வழி மாறி செல்ல எது முக்கிய காரனம்?
22.இதை சீர் செய்வது எப்படி?
23.உங்கள் இளமை காலத்தில்(சமீபத்தில்)அழகான இளம் பெண்களிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுயது ?
24.ஆண்-பெண் சமம் வந்துவிட்டதா?
25.பொய் சொல்லாமல் வாழ முடியுமா?
26.அறுபது வயதிலும், 20 வயது இளம் ஜோடிகளை போல் வலம் வருபவர்?
27.கணவனால், மனத் துன்பத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு உங்கள் ஆலோசனைகள்?
28.பெண்களால் , மனத் துன்பத்துக்கு ஆளாகும் கணவன்களுக்கு ஆலோசனைகள்?
29. வாழ்க்கை வண்டியில் முன் சக்கரம் யார்?
30.திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவர்கள்( மனநிலை) ?
31.உங்களுக்கு நன்கு தெரிந்த சூப்பர் மாமியார் - மருமகள்(உதாரண ஸ்திரீகள்) யார்?
32. இந்த சென்னை மழையில் வாக்கிங் அனுபவம்?
32.
//
17.அறிவின் முதிர்ச்சியை காட்டுவது எது?
//
அறிவு முதிர்ந்து வளர்ந்து மண்டை முடியைத் தாண்டி வளர்ந்துவிடுவதால் ஏற்படுவது வழுக்கை.
//
29. வாழ்க்கை வண்டியில் முன் சக்கரம் யார்?
//
வாழ்க்கை நான்கு சக்கர வாகனம். ஆளுக்குத் தலா ஒரு முன் சக்கரமும், ஒரு பின் சக்கரமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பற்றி உங்கள் கருத்து என்ன ?
அதன் கலாச்சார தேசியவாதம் சரி . ஆனால் வடமொழி அல்ல்து ஹிந்தி மயமாக்கலில் அந்த அமைப்பு ஈடுபாடு கொண்டுள்ளதே ?
Post a Comment