எபிசோட் - 68 (15.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்பு வீட்டிலிருந்த சாமான்களை வீட்டுக்காரரின் ஆட்கள் வீட்டுக்கு வெளியே எடுத்து வீசுகிறார்கள். அவர் இடிந்து போய் உட்கார்ந்து அழுகிறார். சிங்காரம் ஆறுதல் சொல்கிறான்.
சுகமோ துக்கமோ சமமாக பாவிக்க வேண்டும் என சாத்திரம் கூறுகிறது, ஆனால் அதை படித்தும் இந்த பிராமணர் ஏன் அழுகிறார் என சோவின் நண்பர் கேட்கிறார்.
ஞானம் அதைத்தான் சொல்கிறது. ஆனால் அதற்காக, “ஐயா சாமான்களை தூக்கி வெளியே போட்டுட்டாங்க, ஜாலி” அப்படீன்னு அவர் சொல்லணும்னு எதிர்பார்க்கவும் முடியாதல்லவா? சற்று நேரம் கழித்து அவர் படித்த படிப்பு எல்லாமே அவருக்கு துணை வரும், சுதாரித்து கொண்டாலும் வியப்பதற்கில்லை. ஆனால் அப்போதைய சோகத்தின் தாக்கம் நிஜமே. அதை குறைத்து மதிப்பிட முடியாது என்கிறார் சோ. ஆனானப்பட்ட ராமனே சீதை காணவில்லை என்றும் கையறு நிலையில் பிரலாபிக்கிறான். நாமெல்லாம் எந்த மூலைக்கு என கேட்கிறார் சோ.
சிங்காரம் வேம்புவுக்கு ஆறுதல் அளித்து தன் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறுகிறான்.
பாகவதர் அவரது பள்ளி சினேகிதனை சந்திக்கிறார். அவர் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார். எல்லாம் ஷேர் மார்க்கெட்டில் தான் விளையாடி சம்பாதித்தது என அவர் கூற, பாகவதருக்கும் சபலம் தட்டுகிறது. அவரும் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட தீர்மானம் செய்கிறார்.
சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் பிரியா தன் மாமனாரிடமும் மாமியாரிடமும் பேசுகிறாள். கேட்டரர் மனைவி கேட்பது அடாவடி என தீர்மானிக்கப்படுகிறது. அவளிடம் தங்களுக்கு வைர நெக்லஸ் போடுவதெல்லாம் கட்டுப்படியாகாது என கூற பிரியா முடிவு செய்து, அவளுக்கு போன் செய்ய முயற்சிக்கும்போது ஆர்த்தி தடுக்கிறாள். பட்டாபி தன்னையே கல்யாணம் செய்து கொள்வதாய் வாக்கு தந்திருப்பதாகவும், அவசரப்பட வேண்டாம் எனறும் அவள் கூறுகிறாள். பிரியாவே நேரில் போய் கேட்டரர் வீட்டில் பேசுவது என முடிவு செய்யப்படுகிறது.
பாகவதர் ஷேர் மார்க்கெட்டில் இறங்க தனது பூர்வீக சொத்தான வீட்டை விற்க ஏற்பாடுகள் செய்கிறார். இந்த சீரியலில் இரண்டாம் முறையாக என் மனதுக்கு பிடிக்காத சீன் அது. முதல் சீன் பாகவதர் அதிக காசுக்கு ஆசைப்பட்டு கேசட் விஷயத்தில் ஏமாந்தது. இரண்டு சீனிலும் இவ்வாறு பாகவதர் இன்வால்வ் ஆகிறார்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
6 comments:
2010/4/16 Tamilish Support
Hi Dondu,
Congrats!
Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 68)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th April 2010 10:56:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/226582
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Thanks, Tamilish
Regards,
Dondu N. Raghavan
பின்னூட்டம் போடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்.
இந்த சீர்யலுக்கு ட்வி ரேட்டிங்க்ஸ் எப்படி? செல்வழிக்கப்பணம் போட்ட முதலுக்கு பங்கம் இல்லாமல் வருகிறதா?
என் ட்வுட் என்னாக்கா, இந்த சீரியலை பார்ப்பனர்க்ளே பார்க்கிறார்களா என்பதுதான்.
கண்டுபிடித்துச் சொன்னா டோண்டு ராக்வன் will be really a good PRO to Cho.
நான் ஏன் இதைச்சொல்றேன்னா, இந்த சப்ஜெக்ட் ‘பிராமணன் ஆர்?’ என்பதெல்லாம் சுத்த போர்.
தேவாரமும் திருவாசகமும் பாராயணம் பண்ணினால் சாப்பாடு வருமா என்று கேட்கும் காலத்தில் சோ, அவரின் பி.ஆர்.ஓ எல்லாரும் கற்பனைக்குதிரைகளை ஓட்டி வாழ்கிறார்கள்.
ஒருமுறை முக்கூராரிடம் (குறையொன்றுமில்லை புகழ்) கேட்ட கேள்வி:
இப்படி கடவுள், ஆன்மிக சமாச்சாரமெல்லாம் எழுதிகிறீர்கள். அப்படியென்றால், உங்கள் பைய்னை நன்றாக ஆன்மிகத்தில் (இங்கு ஆன்மிகம் என்பது திருமால் பக்தி) தோய்த்து வளர்த்திருப்பீர்கள் இல்லையா?
’அட போங்க...அவன் ஆன்மிகம் பக்கமே வர்ரதில்லே... என் புத்தகங்களையும் உபன்யாசங்களையும் மத்தவாதான் கவனிக்கிறா. அவன் ‘எனக்கு ஆயிரம் வேலையிருக்குன்னு’ போயிட்றான்.
இதிலிருந்து என்ன தெரிகிற்து?
ஏதாவது தெரிந்தால் விசயமே வேறு.
இல்லையா?
இங்கிலீசுக்குப்போவோமா?
In short, all that Cho has been saying - which you have been reproducing here - can be safely subsumed (categorised) under spirituality (Anmikam).
When you put anything under the pack of anmikam, the young and even the old, wont come near.
It requires a different mind-set. Today, we lack it.
As I wrote in your comments area some time back,
Brahmanan is an extinct species. We have already performed our last rites for him!!
@ஜோ அமலன் ராயன் ஃபெர்னாண்டோ
நீங்கள் சீரியலை சரியாக பார்க்கவில்லை எனத் தெரிகிறது. வர்ணரீதியான உண்மையான பிராமணன் நிஜமாகவே இருக்கிறானா என்னும் உங்களது சந்தேகங்கள், அதிலிருந்து பிறக்கும் ஆட்சேபணைகள் ஆகிய எல்லாமே முதல் பார்ட்டிலேயே ஹேண்டில் செய்யப்பட்டு முடிவடைந்து விட்டன. சமீபத்தில் எழுபதுகளில் வந்த நாவலிலும் அவை நன்றாக விளக்கப்பட்டுள்ளன.
ஆனால் இரண்டாம் பார்ட்டில் வரும் விஷயங்களின் ரேஞ்சே தனி. அசோக்காக வரும் வசிஷ்டர் நாரதரின் அறிவுரைக்கு ஏற்ப தனக்குள்ளிலிருந்தே எங்கே பிராமணனை தேடும் முயற்சியில் உள்ளார். இந்த முயற்சியில் ஈசன் அருள் அவ்வப்போது நாரதர் மூலமாக அசோக்குக்கு கிடைக்கிறது.
இல்லாவிட்டால் வேதபாடம் நடத்தும் அளவுக்கு அசோக் எப்படி நிபுணன் ஆக முடிந்திருக்கும் என நினைக்கிறீர்கள். பல அற்புதங்கள் காட்டப்பட்டுள்ளன என்பதை அறிவில் மிகவும் குறைந்த நானே கண்டு கொண்டேனே.
மேலே பாருங்கள். அப்படி இந்த சீரியல் வேஸ்ட் என நினைப்பவர்கள் ஒரு குடும்பத்தையே அழிக்க சபதம் செய்யும் வில்லிகள் நிறைந்த சீரியல்களுக்கு செல்லட்டுமே.
மற்றப்படி வேறு ஒன்றும் உங்களுக்கு சொல்ல என்னிடம் தற்சமயம் ஒன்றும் இல்லை.
மிக சுயநலம் மிக்க டோண்டு ராகவனே இங்கு மனமுவந்து தனது நேரத்தை செலவழிக்க வைக்கும் இந்த சீரியல் பிடிப்பவர்களுக்கு பிடித்தால் போதும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ஜோ
காந்தி தன மகனுக்காக அஹிம்சையை போதிக்கவில்லை. உலகுக்காக. யார் யாருக்கு புரிந்து கொள்ள வேண்டும் பயன்பட வேண்டுமோ என்று இருக்கிறதோ அது அவர்களுக்கு பயன்படும். வீட்டுக்கு மட்டும் செய்பவர்கள் சமுதாயத்துக்கு ஒரு விஷயத்தை கொண்டு வரமாட்டார்கள்.
extinct specicies ஆக்கி விட வேண்டும் என்ற அரசியல் சமூக பிரயத்தனங்கள் உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுப்பது போல் தெரிகிறது.
உங்கள் தளத்தில் நான் கேட்ட
"என் மதம் என் சாதி என்று சொன்னால் என்ன தவறு ?" என்ற கேள்வியை இப்போ என் தளத்தில் பதிவாக போட்டு விட்டேன். என்னிடம் google account மட்டுமே உள்ளது. அதனால் உங்கள் தளத்தில் என்னால் பின்னூட்டம் இட இயலாது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் http://www.virutcham.com/?p=1412 வந்து உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளலாம்
@Dondu
நீங்களும் உங்கள் கருத்தை கூறினால் மகிழ்ச்சி அடைவேன்
virutcham
ஜோ அமல் ராயர்,
கூகிள் அக்கவுண்ட், ஏன் பாங்க் கூட இல்லாத பரம எழைங்க நான்.
எங்களை மாதிரி ஆட்கள் உங்களோடு எப்படி விவாதித்து கருத்துக்களை கர ஏற்றுவது.
நீங்க அனானி அப்ஷனை மறுபடியும் துறக்காம விட்டாக்கூட பரவாயில்லை, லீவு போட்டுட்டு ஒரு தபா பதிவர் ஏற்று முட்டலுக்கு வாங்க சார்.(இங்கிலீஷ்-ல கூட பேசலாம்)
இவன்
ஏ.ஏ.யூ
(ஆல் ஈண்டியா அனானி யூனியன்)
விருச்சம்
கூகில் அக்கவுண்டு உள்ளவர்க்ள் என் பதிவில் பின்னூட்டமிடலாம்.
எனினும், நான் உங்கள் பதிவை பின்னூட்டமிடுகிறேன்.
கூகில் அக்கவுண்டு இல்லாத அனானிகள் extinct species கள். அவாளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இபபடிக்கு
ஜே.ஏ.எஃ.ஆர்
Post a Comment