தில்லியில் இருந்தபோது ஒரு வாடிக்கையாளர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைக்கு கூப்பிட்டனுப்பியிருந்தார். தினசரி 3 மணி நேரம் வந்து மொழிபெயர்ப்பு வேலைகளை செய்ய வேண்டும் என்றார். இப்போதைய நிலையில் நான் அன்றிருந்திருந்தால் பிரச்சினையே இருந்திராது. மேலே செல்லும் முன்னால் அதுபற்றி ஒரு சிறு டைவர்ஷன்.
இங்கு சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு ஜெர்மனில் மின்னஞ்சல்கள் வரும், அவற்றை நான் ஆன்லைனில் மொழி பெயர்க்க எனக்கு ஃபார்வோர்ட் செய்வார்கள். நான் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை மின்னஞ்சலாக சென்னை நிறுவனத்துக்கே அனுப்ப, அவர்கள் அதற்கான பதிலை ஆங்கிலத்தில் எனக்கு அனுப்ப, நான் அவற்றை ஜெர்மனுக்கு மொழிமாற்றி அவர்களுக்கு திருப்பியனுப்ப, அவர்களும் அதை ஜெர்மன் வாடிக்கையாளருக்கு அனுப்புவார்கள். ஒரு சுற்று முடிய ஓரிரு மணி நேரங்களே பிடிக்கும். அதில் எனது மொழிபெயர்ப்புக்கான நேரமோ சில நிமிடங்களே பிடிக்கும்.
இதில் எல்லோருக்குமே லாபம். ஜெர்மானியரை பொருத்தவரை அவர்கள் வேலை ஜெர்மன் மொழியிலேயே நடந்து விடுகிறது. அவர்களது இந்தியப் பிரதிநிதிக்கும் அவரது தகவல் தொடர்பு வேலை சுளுவாக முடிந்து விடுகிறது. எனக்கோ ரெகுலராக மொழிபெயர்ப்பு வேலைகள் அதுவும் சுலபமான வேலைகள் வருவதால் நானும் பணம் ஈட்டுகிறேன்.
இந்த ஏற்பாட்டுக்கு என்ன மாற்று இருக்கவியலும்? இந்திய நிறுவனம் ஒரு முழு நேர மொழிபெயர்ப்பாளரை தனது இடத்தில் வேலை செய்யுமாறு வைத்து கொள்ளலாம். ஜெர்மானியருக்கோ அதை நினைத்துக்கூட பார்க்கவியலாது, ஏனெனில் அந்த ஊர் சம்பளங்கள் மிக மிக அதிகம். அதே சமயம் இந்தியாவிலும் முழுநேர பணியாளருக்கு சம்பளம், டி.ஏ., விடுமுறை சம்பளம், வார விடுமுறைகள், மருத்துவ படிகள், எல்.டி.சி. ஆகிய செலவுகள் எல்லாம் வரும்.
எனக்கோ வீட்டிலிருந்தவாறே விளையாட்டாக வேலை செய்யலாம், இணையத்தில் மேயலாம், ஒரு கொம்பனும் என்னை கேள்வி கேட்க முடியாது.
டைவர்ஷன் முடிந்தது. மேலே சொன்னதெல்லாம் பின்னால் வரப்போகும் விஷயங்கள். அவற்றை நான் அச்சமயம் அறிந்திருக்கக்கூட முடியாது. அப்போது கணினியை எப்படி இயக்குவது என்று கூட நான் அறியேன் (அது தொண்ணூறுகளின் இறுதி காலம்). ஆகவே நேரிலே நிறுவனத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. நேர்காணலுக்கு என்னைத் தவிர வேறு பலரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் ஒரு டெஸ்ட் வைத்தனர். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பு. என்னுடன் போட்டி போட்ட பலர் இளைஞர்கள். அப்போதுதான் ஜே.என்.யூ.வில் எம்.ஏ. பிரெஞ்சு முடித்திருந்தனர்.
டெஸ்ட் பேப்பர்களை ஒரு ஜே.என்.யூ. பேராசிரியர் திருத்தியிருக்கிறார். எனது பேப்பரை மட்டும் தனியாக எடுத்துக்காட்டி, இவரது தரம் மிக உயர்ந்தது, மற்றவர்கள் பரவாயில்லை ரகமே எனக் கூறியிருக்கிறார். (இதை சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியரே பிற்காலத்தில் என்னை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்தபோது கூறினார்).
இப்போது நெகோசியேஷன். தினசரி 3 மணி நேரம் வருவதெல்லாம் கட்டுப்படியாகாது, ஏனெனில் நிறுவனம் எங்கள் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது, போக வரவே 4 மணி நேரம் பிடிக்கும். ஆகவே வாரத்துக்கு 3 நாட்கள் வருகிறேன் என்றேன். அவர்களும் சரி என்றார்கள். சராசரியாக மாதத்துக்கு 13 நாட்கள் நிச்சயமாக வேலை தரவேண்டும், இல்லாவிட்டால் அதற்கான தொகை தரவேண்டும். 13 நாட்களுக்கு மேல் ஒரு மாதத்தில் வேலை செய்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்னும் கணக்கில் எக்ஸ்ட்ரா தரவேண்டும் எனக் கூறி விட்டு, ஒரு மாதத்துக்கு 20,000 ரூபாய், எக்ஸ்ட்ரா நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் என கோட் செய்தேன்.
இப்போதுதான் தமாஷ் நடந்தது. நான் சொன்னதை கேட்டு திடுக்கிட்ட தலைமை அதிகாரி தங்கள் நிறுவனம் இலாப நோக்கற்ற அமைப்பு என்றும் ஆகவே நான் எனது டிமாண்டை குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். நானா அசருவேன். அவர்கள் என்னவாக இருந்தாலும் எனது வேலையின் சுமை அப்படியேதான் இருக்கும். நான் இலாப நோக்குடையவன் எனக் கூறினேன். தன்னால் அவ்வளவு பெரிய தொகையை சேங்ஷன் செய்யவியலாது எனக் கூற, அது அவர் பிரச்சினை என உறுதியாகக் கூறினேன்.
பிறகு ஒரே ஒரு கேள்வி கேட்டேன். டெஸ்ட் நடந்து இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டதே, ஏன் இந்த தாமதம் என்று. அதற்கு அவர் முந்தைய நாளன்றுதான் தான் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு வேலை சம்பந்தமாக சென்றிருந்த டூரிலிருந்து திரும்பியதாக கூறினார்.
அவர் தனது சொந்த செலவிலா அங்கெல்லாம் சென்றார் எனக் கேட்க, அதெப்படி சாத்தியம் என அவர் கேட்டார். இலாப நோக்கமற்ற அமைப்பால் அவரது ஐரோப்பிய டூரை தாங்க முடியுமா என கேட்க, அவற்றுக்கான பட்ஜெட் உண்டு என அவர் விடை கூறினார். அதே மாதிரி எனது சேவை வேண்டுமானால் நான் கேட்ட தொகைக்காக பட்ஜெட் போட்டுக் கொள்ளுமாறு கூறிவிட்டு விடை பெற்று வந்தேன்.
பிறகு அதே நிறுவனத்துக்கு வேலைகளை பீஸ் ரேட்டில் செய்தேன் (எனது சேவையை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை). அவை ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்னும் கணக்கில், அது வேறு விஷயம்.
எனக்கு முதலிலிருந்தே இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவற்றில் பலவற்றின் வரி ஏய்ப்புகள், கருப்புப் பணத்தை வெளுப்பாக்குவது ஆகிய விஷயங்களை பெர்ரி மேசன் நாவல்கள், மற்றும் ஏனைய பிற புத்தகங்களில் அறுபதுகளில் படித்ததின் பாதிப்பாகத்தான் அவற்றைப் பற்றிய எனது ஆடிட்ட்யூட் இருக்கிறது. என்னை பொருத்தவரை இம்மாதிரி இலாப நோக்கற்ற நிறுவனங்கள் are presumed guilty unless proven innocent beyond all reasonable doubt.
ப்ரோஸ்.காம் தலைவாசலில் பல வேலைக்கான விளம்பரங்களில் கொட்டேஷன்களை ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் கேட்கிறது என்று பார்த்தாலே அவற்றைத் தவிர்த்து விடுவேன். அவற்றில் பெரும்பான்மையான கேஸ்களில் அதில் நிர்வாகியாக வேலை செய்பவர்கள் கொழுத்த சம்பளம் எல்லாம் பெறுவார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தாங்கள் இலாப நோக்கமற்றவர்கள் என்பதற்கு அவர்கள் செய்யும் அலம்பல்கள் பார்க்க சகிக்காது.
அறுபதுகளில் இந்தியாவில் குறைந்த பட்ச போனஸ் 4 % என ரூல் வந்தபோது, அரசு நிறுவனங்களுக்கு மட்டும் முதலில் விலக்களித்திருக்கிறார்கள். காரணம்? அரசு நிறுவனஙகள் சமூக மேம்பாட்டு நோக்குடையவையாம், இலாப நோக்கு இல்லாதவையாம். அது சம்பந்தமாக கேஸ் கோர்ட்டுக்கு வந்தபோது ஜட்ஜ் அரசின் வாதத்தை ஏற்க மறுத்தார். இலாப நோக்கு என்பது ஒரு கமெர்ஷியல் நிறுவனத்துக்கு அவசியம், அது இல்லை என்று கூறுவது பொறுப்பற்றத்தனம் என்பதுதான் அதற்கு அவர் சொன்ன காரணம்.
ஆக நான் கூறவருவது இதுதான். எனது புது வாடிக்கையாளர் யாராவது தான் இலாப நோக்கற்ற நிறுவனம் என கூறினால், அவர்களுக்கு வேண்டுமென்றே அதிகமாக கோட் செய்வேன்.
இந்த அழகில், “Biggest comedy of IPL is... it's a "Taxfree charity organization" according to the Govt, despite there are thousands of Crores involved” என்று இட்லிவடை பதிவு ஒன்றில் ஒரு பின்னூட்டம் கூறுகிறது. ஏண்டாப்பா மயிராண்டிமார்களே, நீங்களா வரி விலக்கு பெற்ற அறக்கட்டளை அமைப்பு?
They are all presumed guilty, unless proven innocent!!!!!
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
39 comments:
Wonderful!
இப்படியெல்லாம் எழுதுவதை விடுத்து பார்வதி பரமேஸ்வரர்களை பற்றி எதற்கு அனாவசியமாக எழுதி...ழுதி...தீ...
ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோம். ஒரு பதிவின் எதிர்வினைகள் அதன் பின்னூட்டங்கள், அவை அதனால் ஈட்டப்படுபவை. பார்வதி பதிவுக்கு 200-க்கும் மேல் பின்னூட்டங்கள். இதுக்கு எவ்வளவு வரும்னு நினைக்கிறீங்க?
அன்புடன்,
டோண்டு ராகவன்
is IPL is registed under a trust?
பாத்து சார் இதை இதய பலஹீனமுள்ளவங்ககிட்ட சொல்லாதீங்க.
ரொம்ப சிம்பிள், டோண்டு!
அளவீடு தரத்தை பொறுத்தது;
எண்ணிக்கையை பொறுத்தது அல்ல.
ஒரு வரியை படித்தால் கூட நம் எண்ணங்கள் சிறிது பாதிக்கப்படவேண்டும்; அறிவு இம்மியளவாவது உயரவேண்டும்;
இரண்டும் இல்லாத பட்சத்தில் அது வேஸ்ட். நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் minimum 5 சதவீதம் internet இல் செலவு செய்கிறோம்.அதற்கு ஒரு நல்ல returns வேண்டாமா?
பொறுத்திருந்து பாப்போம்
@வலைஞன்
உங்கள் கருத்தோடு எனக்கு ஒப்புதல் இல்லை.
பார்வதி அம்மாள் விஷயத்தில் நான் சொன்னதைத்தான் அரசும் சிந்தித்திருக்கிறது என்பது வெள்ளிடைமலை. அதில் நான் சொன்ன கருத்து நான் நிஜமாகவே உணர்ந்து சொன்னது. தேவையற்ற செண்டிமெண்டுகளுக்கு இடம் தருவதுதான் மெலோட்ராமாவை உருவாக்குகிறது.
சிலருக்கு அது பிடிக்கலாம், எனக்கு பிடிக்காது. அப்பதிவின் விஷயத்தில் நான் உறுதியாகவே நிற்கிறேன் என மறுபடியும் கூறுகிறேன்.
நான் செய்தது தகவல் பரிமாற்றம். அதுவும் முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 23, 2010 10:50 AM
டோண்டு,
"உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்"
என்பது திருமறை.
நன்றி
சுபம்
நீங்கள் எந்த உலகை கூறுகிறீர்கள்? என்னுடைய பார்வை கோண்ம்தான் இந்தியாவில் அதிகம் உள்ளது என்பது உங்களுக்கு வேண்டுமானால் கசப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் எதார்த்தம்.
உண்மையில் அப்பெண்மணி இங்கு உள்ளே வர அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரை வைத்து பாலிடிக்ஸ் செய்பவர்களால் இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்திருப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எனக்கு முதலிலிருந்தே இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது.//
அய்யா "டோண்-டூ"
மா.சா.சுவாமிநாதன் பவுண்டேஷன், சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷன்,மெட்ராஸ் மியுசிக் அகாடமி, கலாஷேத்ரா - இதுகள பத்தின உங்க கருத்து இதுதானா?
எல்லாமேன்னாக்க எல்லாமேதான். கருத்தை மாற்றிக் கொள்ள அவற்றை பற்றி ஸ்டடியெல்லாம் செய்ய வேண்டியிருக்கும். தேவையின்றி ஏன் நான் அதையெல்லாம் செய்யணும்?
அந்த அமைப்புகள் எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் தந்தால் எனது மார்க்கெட் ரேட்டைத்தான் கோட் செய்வேன்.
ஏனெனில் நான் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு அல்ல அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sir,
What happened to your Q&A section?
Dondu Sir,
I completeley agree with you. I live next to a so-called NPO called "The Banyan" in Chennai which works on Mentally affected women. The organization obviously runs on funds collected from general public and is well supported by Cine actors like Kushboo, Revathy, Rohini and some more. Do you know where they organize their meetings and other functions? Normally in Taj Connemara...I am sure they do not get that free of cost anyway. I have attended one such meeting and stopped visiting their home any further...I completely agree with your thoughts.
@மெட்ராஸ்காரன்
நீங்கள் சொன்ன அமைப்பு பர்றி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவர்கள் என்னை மொழி பெயர்ப்பு வேலைக்கு கூப்பிட்டாலும், எனது செயல்பாடு நான் இப்பதிவில் சொன்ன மாதிரித்தான் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மெட்ராஸ்காரன் said...
//a so-called NPO called "The Banyan"//
மா.சா.சுவாமிநாதன் பவுண்டேஷன், சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷன்,மெட்ராஸ் மியுசிக் அகாடமி, கலாஷேத்ரா பவுண்டேஷன், Blue Cross, "The Banyan"
அய்யோ,
எல்லாம் ஒரே கலரா இருக்கே.
இதுக்கு பேர்தான் 'சொந்த வீட்டுக்கே சூனியம்' வச்சுக்கிறதா?
வரி அதிகம் கட்டும் தனி மனிதர்கள் வரிகளை அரசிடம் செலுத்தாமல் தன்னால் முடிந்த வரை சமூகத்துக்கு சேவை செய்யவே டிரஸ்ட், சொசைட்டி போன்ற அமைப்புகள் ஆரம்பிக்கப்படும். ஆனால் இந்தியாவில் எங்கும் விரவியிருக்கும் ஊழல் இதிலும் உள்ளே நுழைந்துவிடுகிறது.
இலாப நோக்கமற்ற என்றால் அவர்கள் நோக்கம் இலாபத்தை ஈட்டுவது அல்ல. ஆனால் வரும் இலாபத்தை அவர்கள் ஏற்காமல் இருப்பதில்லை. வரும் இலாபத்தை அவர்கள் பங்குதாரர்களுக்கு பிரித்துக்கொடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. வரும் இலாபத்தை அவர்கள் அவர்களின் அமைப்பை விரிவு படுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம்...இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். கேட்க சூப்பராக இருக்கும். ரொம்ப சொஃபெஸ்டிகேடட் நெட்வர்க் போல் இருக்கும். ஆனால்..இத்தகய காம்பிளிகேஷன்ஸ் எல்லாம் கடைசியில் வரியை எப்படி ஏய்ப்பது என்ற ஒரே கேள்விக்கான பல பக்க விடையாகவே இருக்கும்.
@அருள்
மறுபடியும் சொல்லறேன் என்னோட கருத்தை. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் பற்றி பெர்சனலாக எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசையில்லை. ஆனால் அம்மாதிரி அமைப்புகள் என்னிடம் மொழிபெயர்ப்பு வேலைகளுக்காக வந்தால் அவற்றிடம் அதுக்கான முழு காசையும் வசூல் செஞ்சுட்டுத்தான் மறு வேலை.
அம்மாதிரி அமைப்புகளில் வேலை செய்வதாக சொல்பவர்களையும் அதே மாதிரி சந்தேகத்துடனேயே பார்ப்பேன். அதுவும் சேவைக்காக செய்கிறேன் என்பவரிடம் காத தூரம் தள்ளியே நிற்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///“Biggest comedy of IPL is... it's a "Taxfree charity organization" according to the Govt, despite there are thousands of Crores involved”///
Why NOT someone like Mr. Traffic Ramasamy file a Public Interest Litigation Case?
ஆட்டையாம்பட்டி அம்பி
நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி , தங்களது வருமானத்தை வரி கட்டாமல் பாதுகாக்க “அகரம்” பவுண்டேஷன் என்று ஒன்றை ஆரம்பித்துள்ளார்களே இது பற்றி எதாவது சொல்லுங்களேன்.
“அகரம்” பவுண்டேஷன் நிஜமாகவே நல்ல அமைப்பாக இருக்கும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் சிவக்குமார் இருக்கிறார்.
ஆனாலும் அவர்களே என்னிடம் மொழிபெயர்ப்பு வேலைக்காக வந்தால் கூட எனது முழு சார்ஜையும் செய்வேன்.
நிஜமாகவே நல்ல அமைப்பிடமும் வசூல் செய்வேன்.
இலவசமாக வேண்டுமானால் செய்யலாம் (இது வரை செய்ததில்லை) ஆனால் சார்ஜிங் என்று வந்தால் முழுக்கவேதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Why NOT someone like Mr. Traffic Ramasamy file a Public Interest Litigation Case? //
ஏன் அவர் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
I too agree with you. Once people from UNESCO came to Chennai and the way they were spending for themselves I used to wonder what type of service they do.
NGO குறித்த தங்கள் கருத்து முழுக்க முழுக்க சரியே. நான் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பில் Administrator ஆகச்சேர்ந்து அங்கு மொழிபெயர்ப்புப் பணி செய்தேன். கணக்குப் பிரிவில் பணிபுரிந்த பெண் திடீரென்று பணியிலிருந்து விலகிவிட்டார்.நான் மத்திய அரசில் கணக்குப்பிரிவில் பணிசெய்து ஓய்வுபென்றவன் என்பதால் என்னை கணக்குப்பிரிவில் பணி புரியச்சொன்னார்கள். நானும் Tally கற்றுக்கொண்டு பணிபுரிய ஆரம்பித்தேன்.அப்போது சுனாமி தாக்கியதால் வெளிநாட்டிலிருந்து அந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வந்தது. அந்த NGOவின் Secretary கணவர் Team Leader அவரது மனைவி. இருவரும் சேர்ந்து அடித்தக்கொள்ளையைக்கண்டு மனம்வெறுத்து அந்த நிறுவனத்தை வி்ட்டு வெளியேறினேன். இதுபோல் தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளதாம்.
///Why NOT someone like Mr. Traffic Ramasamy file a Public Interest Litigation Case? //
ஏன் அவர் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன் ///
கரெக்டா சொன்னிங்க! சீனிவாசன் பெண்டெடுத்து விடுவான்!
அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பி
எது எப்படியாயினும் உங்கள் 'வேலைச்சுமை' குறையாது என்று ஒரு வார்த்தையை பிரயோகித்தீர்களே...மிகச்சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான வார்த்தை...அது மாஸ்டர் ஸ்ட்ரோக்.
இது மாதிரி அனுபவ பதிவுகளை நிறைய குடுங்களேன்..
சரி டொண்டு, நீங்கள் பில் கேட்ஸ் போல்,ரூபாய் 20000 கோடி, அல்லது கலைஞர் குடும்பத்தை விட 100 மடங்கு சொத்து செய்து விட்டீர்கள் (மொழி பெயர்ப்பு மூலமாக) என வைத்துக் கொள்வோம், அதிலிருந்து சில சில்லரைகளை வைத்து ஒரு `நான் பிராபிட் ட்ரஸ்ட்` - புற்றூநோய் ஆராய்ச்சி என வைத்துக் கொள்வோம் -செய்வீர்களா அல்லது யாருக்கும் ஒரு பைசாவும் கொடுக்க மாட்டேன் என்பீர்களா?
விஜயராகவன்
வாழ்க்கையின் அடிப்படையானவை எல்லாமே "நான் ப்ராஃபிட்" தான்.
அன்பு, பாசம், காதல், சுவாசிக்கும் காற்று, தாய்ப்பால், மழை, எல்லா சக்திக்கும் அடிப்படையான சூரிய ஒளி - அவ்வளவு ஏன்? மனித படைப்பே "நான் ப்ராஃபிட்" தான்.
//மெட்ராஸ்காரன் said...
//a so-called NPO called "The Banyan"//
மா.சா.சுவாமிநாதன் பவுண்டேஷன், சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷன்,மெட்ராஸ் மியுசிக் அகாடமி, கலாஷேத்ரா பவுண்டேஷன், Blue Cross, "The Banyan"
அய்யோ,
எல்லாம் ஒரே கலரா இருக்கே.
இதுக்கு பேர்தான் 'சொந்த வீட்டுக்கே சூனியம்' வச்சுக்கிறதா?//
Arul Sir,
Requesting you not to give a caste coating to the issue in discussion. :)
//சரி டொண்டு, நீங்கள் பில் கேட்ஸ் போல்,ரூபாய் 20000 கோடி, அல்லது கலைஞர் குடும்பத்தை விட 100 மடங்கு சொத்து செய்து விட்டீர்கள் (மொழி பெயர்ப்பு மூலமாக) என வைத்துக் கொள்வோம்,//
1. நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
2. 2000 கோடி மொழி பெயர்த்து சம்பாதிப்பதா?
3. என்ன விளையாடுகிறீர்களா?
4. பதிவை சரியாக படிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mr Dondu,
I fully agree with you. It is almost fashionable to say that people or organisations are not profit oriented to get discount from us, professionals who render undiluted service at market cost.
My advise to such people are to keep the charity angle to themselves and not to thrust such things on professionals like us.I have a victim many times on such flimsy sentiments. But , after one point I woke up to the reality.
By the way, can you guide me as to how to post in tamil?
Shankar
சரி, மொழி பெயர்ப்பை விடுங்கள். வேறு எந்த வியாபாரத்திலேயோ உங்களுக்கு பில் கேட்ஸ் அளவு பணம் வருகிறது. அதில் சிறிய அளவாவது வைத்து ஒரு லாப நோக்கற்ற ஃபௌண்டேஷன் வைக்க மாட்டீர்களா?
@வன்பாக்கம் விஜயராகவன்
அப்போது மூட் எப்படியிருக்கும் என இப்போதே எப்படிச் சொல்லிட முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பில் கேட்ஸும், வாரன் பஃபட்டும் சேர்ந்து $50 பில்லியன் கொடை கொடுத்து, அவை லாப நோக்கற்ற பரோபகார நிதியை ஏற்ப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் நாராயணமூர்த்தி , எல்லா இந்திய செவ்விலக்கியங்களையும் பிரசுரிக்கும் நோக்கத்துடன் 6 மில்லியன் $$ போன வாரம் கொடுத்துள்ளார்.
லாப நோக்கற்ற அமைப்புகளை சாடுவது சரியல்ல. எல்லா அமைப்புகளிலும் கயவர்களும், தண்டங்களும் வேலை செய்கின்றனர், அது வேற விஷயம்.
விஜயராகவன்
@வன்பாக்கம் விஜயராகவன்
பில் கேட்ஸ்/நாராயணமூர்த்தி ஆகியோர் இயங்கும் தளத்துக்கும் எனது தளத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இருக்கிறது.
அவர்களது அமைப்புகளுமே என்னிடம் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு வந்தால் முழுசாகவே சார்ஜ் செய்வேன். இது சம்பந்தமாக நான் மிகவும் தெளிவாகவே உள்ளேன்.
நான் தொழில்காரன், அப்படித்தான் இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
The point is not that, how wealthy you are compared to Narayana Murthy or BG or how you amass wealth. The point is some wealthy people part with part of their wealth and the Non Profit orgs run on that. It can also run on donations by anybody , inlcuding government. Most NPOs employ people at market rate. There are also voluntary organizations where people volunteer with their time without charging anything
It is quite possible they are doing very important work. So, you can't say 'presumed guilty till proved innocent'.
//So, you can't say 'presumed guilty till proved innocent'//
As far as I am concerned and as a practising translator for the past 35 years, I do say so and I meant it wholeheartedly.
Regards,
Dondu N. Raghavan
இந்த பதிவு அருமை சார்.
மேலும் வலைஞன் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன். பார்வதி அம்மாள் பற்றிய பதிவை படித்தவுடன் முதலில் டோண்டு ஏன் இப்படி எழுதினார் என்று தான் நினைத்தேன், ஆனால் ஒருமுறைக்கு இருமுறை படித்தால் நீங்கள் சொல்வது சரி என்றே பட்டது. எனினும் சில வார்த்தை ப்ரயோகங்களை கவனமாக கையாண்டு இருக்கலாமோ என்று தோன்றியது. உங்களுக்கு தெரியாதது இல்லை. வாழ்த்துக்கள்.
As a professional you can have a policy that you will not offer services for free for any organization.But why assume that all not for profit organizations are guilty until proven innocent.
I agree that all is not well with many such organizations but assuming that they are all guilty prima facie is illogical.Gates, Rockefellers,Fords had donated millions for public causes through foundations.Green Revolution was supported by Rockefeller and Ford Foundations.Today Gates Foundation is spending millions of dollars to find cures for diseases and to enhance access to health. Bill Gates is dong what the governments should be doing. .Narayanamurthy's family foundation is giving a grant to Harvard University for publishing translations from classical indian thought in many languages and the amount donated is about $5 million dollar. These will not any sense to you because the funders dont get any money back from these.Even if a person is in his last minutes i think you would give your bill for services first before asking him 'how are you' :).
// Anonymous said...
1. As a professional you can have a policy that you will not offer services for free for any organization.
2. But why assume that all not for profit organizations are guilty until proven innocent.//
1 is because of 2, period.
This has resulted in preventing me from falling for extraneous considerations and losing in my profession.
Regards,
Dondu N. Raghavan
உங்கள் கருத்து சரியே. non-profit org பிறர் பணத்தில் நன்றாகவே சுய லாபத்துக்கு பயன்படுத்துகிறார்கள். எனக்கும் தனிப்பட்ட கசப்பான அனுபவம் உண்டு.
http://www.virutcham.com
Post a Comment