Disclaimer: This is a politically incorrect post.
சில விஷயங்களை செய்யும் முன்னால் அனேகம் முறை யோசிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு யோசிக்கும்போது எமோஷனல் எண்ணங்களை புறந்தள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் செய்த பிறகு சரி செய்வது என்பது நடக்காது. அவற்றில் ஒன்று இந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு. எப்படி யோசித்தாலும் அதை நியாயப்படுத்த முடியவில்லை.
ஆணோ பெண்ணோ அவரவர் செயல்பாட்டில்தான் அரசியலில் பிரகாசிக்க வேண்டும். பொதுவாக பெண்களுக்கு பல பொறுப்புகள் ஆகவே அவர்கள் பொதுவாக அரசியலில் இறங்கத் தயங்கலாம். அதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் அவை எல்லாவற்றையும் மீறி அவர்கள் அரசியலில் பிரகாசிப்பதும் நடக்கத்தானே செய்கிறது. யாரும் அவர்களை பெண்கள் என்பதற்காக தேர்தலில் நிற்கக்கூடாது எனச் சொல்லவில்லையே? இந்திரா காந்தி, ஜெயலலிதா, சுசேதா கிருபளானி, ராஜாத்தி குஞ்சிதபாதம், ஜோதி வெங்கடாச்சலம், அனந்தநாயகி, கௌரி தாமஸ் என அரசியல் வானவில்லில் பலரும் பல தளங்களிலிருந்து வந்திருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் இட ஒதுக்கீடு பெற்றா வந்தார்கள்?
விஷயம் என்னவென்றால் எல்லோருக்கும் இது தெரியும். ஆனால் சொல்லத்தான் தைரியம் இருக்காது. அதை பார்ப்பதற்கு முன்னால் இது விஷயமாக பலருக்கு சரியான புரிதல் இருக்கிறதா என்பதை பார்ப்போம். சிலருக்கு அது இல்லை. பெண்கள் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல்கள் என்னும் எனது பதிவில் நான் இவ்வாறு எழுதியுள்ளேன்.
செல்வராஜ் என்னும் பதிவர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதற்கு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைக்கிறார்.
“இந்திய அரசியல் சட்டத்தின்படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்? இது இருக்கின்ற உரிமையை தானாக கேட்டு குறைபதல்லாமல் வேறென்ன”!
“சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், நாளைய பெண்கள் சமூகத்திற்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாதபடியாகும். நிச்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம். அப்படி வரும்போது. இந்த முப்பதிமூன்று சதவிகிதம் என்பது அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக இருக்கும்”.
அவருக்கு நான் இட்ட பின்னூட்டம்:
“பெண்கள் கேட்கும் இட ஒதுக்கீட்டை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பஸ்களில் லேடீஸ் சீட் என தனியாக இருப்பது போலத்தான். அதாகப்பட்டது 33% தொகுதிகளில் அவர்கள் மட்டும்தான் நிற்க முடியும். அதனால் 67 % ஆண்கள் தொகுதிகளாகி விடாது. அவற்றிலும் பெண்கள் நிற்கலாம், தடை ஏதும் இல்லை.
பஸ்களில் பெண்கள் சீட்டில் ஆண்கள் உட்கார இயலாது, ஆனால் பொது சீட்டுகளிலும் பெண்கள் தாராளமாக உட்காரலாம். ஆண்கள் சீட் என்று ஒன்றும் கிடையாது”.
அவரது பதில்:
“வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராகவன்!
இப்போது 100% சதவிகித தொகுதிகளிலும் போட்டியிட உரிமையுள்ளதே பெண்களுக்கு”.
அப்போ அவரது புரிதலின்படி தலித்துகளுக்கும் மற்றவருக்கும் கூடத்தான் இட ஒதுக்கீடு தேவையில்லை. அட ஆண்டவா?
வேறென்ன செய்வது, பெருமூச்சு விடுவதை விட?
(அப்பதிவுக்கு போய் பார்த்தால் பின்னூட்டங்கள் எல்லாமே நீக்கப்பட்டுள்ளன என்பது வேறு விஷயம்).
சோ அவர்கள் ராஜ்ய சபாவில் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய ஒரே உறுப்பினர். மீதி எல்லோருமே ஆதரித்தார்களாம். ஆனால் பின்னால் என்ன நடந்ததென்றால் நீங்க கட்சி சார்பற்று இருக்கீங்க, நீங்க பேசிட்டீங்க, ஆனா நாங்க பேசமுடியல்லியே என கல்யாண பரிசு தங்கவேலு ரேஞ்சுக்கு அலுத்துக் கொண்டார்களாம்.
இவ்வளவு ஆண்டுகள் இது தொங்கலில் இருப்பதிலிருந்தே இதை புரிந்து கொள்ள முடிகிறது. வெளிப்படையாக எதிர்க்க முடியாதவர்கள் உள் ஒதுக்கீடு எல்லாம் கேட்கின்றனர். இதை ஆதரிக்கும் எந்தக் கட்சியுமே தங்கள் வேட்பாளர்களில் 33% பெண்களாக இருக்கும்படி கூட இதுவரை செய்யவில்லையே, அதிலிருந்தே இதற்கு மனப்பூர்வமான ஆதரவு இல்லையென்று தெரியவில்லையா?
ஆனால் இந்த எதிர்ப்பை ஒத்துக் கொள்ளத்தான் முடியவில்லை. ஒரு வேட்பாளராக இப்போதெல்லாம் எல்லோராலும் வர முடியாது. பல காரணிகள் ஆதரவாக இருந்தால்தான் வேட்பாளராகவே வரவியலும். அவர்றில் முக்கியமானது பணபலம். அப்படி பலத்துடன் வரும் வேட்பாளர் பெண்ணாக இருந்தால் அவரே தனது பலத்தில் வர வேண்டியதுதான். இட ஒதுக்கீடு எதற்கு? இந்த நியாயம் எல்லோருக்குமே தெரிந்தாலும் ஒத்துக் கொண்டால் தங்களை பெண்ணீயத்துக்கு விரோதிகள் என முத்திரை குத்தி விடுவார்களோ என்றுதான் கட்சிகள் பயப்படுகின்றன. இம்மாதிரி தற்காலிக சங்கடங்களை எதிர் நோக்க பயந்து மசோதாவை நிறைவேற்றினால் இதனால் கெடுதல்கள்தான் அதிகம் விளையும். அரசியல்வாதிகள் பெண்களை தங்கள் பினாமிகளாக வைத்துக் கொள்வதுதான் நடக்கும். அதுதான் பஞ்சாயத்துகளிலேயே பார்க்கிறோமே. பஞ்சாயத்து தலைவியின் கணவர்தானே மீட்டிங்குகளை நடத்துகிறார் பல இடங்களில்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
43 comments:
நான் வலையுலகத்தில் காலடி வைத்த நாள் முதலாய் உங்களது பதிவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பெண்கள் இடஒதுக்கீடு குறித்து நீங்கள் எழுதிய கருத்துக்களுக்கு மட்டும் எனது பின்னூட்டத்தை இட விரும்புகிறேன்.
இந்திய அரசியல் சட்டத்தின்படி டோண்டு ராகவனும், நீங்கள் குறிப்பிட்ட வலைப்பதிவர் செல்வராஜும், ஏன், சேட்டைக்காரனும் கூட தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், அதைச் செய்ய முடியாமல் இருப்பதற்கு, இங்குள்ள அரசியல்கட்சிகளின் தாக்கமே காரணம் என்பதையாவது ஒப்புக்கொள்ளுவீர்களா? ஆள்பலம்,பணபலம் இன்றி சுயேச்சையாகப் போட்டியிட்டு டெபாசிட் இழக்கிறவர்கள் எத்தனை?
இந்த ஒதுக்கீட்டின் மூலம், அரசியல் கட்சிகளே குறிப்பிட்ட இடங்களில் பெண்களை நிறுத்துவதால், ஒப்புக்குச் சப்பாணி போன்ற பெண் வேட்பாளர்கள் நிறைய வருவார்கள் என்ற ஒரு வாதத்திற்காகவே இந்தச் சட்டத்தைக் கிடப்பில் போட்டு வைப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்கிற மிகப்பெரிய துரோகம் ஆகாதா?
இருக்கிற அரசியல் சூழலை சீர்திருத்தி, பெண்களும் அதில் தங்கள் பங்களிப்பைத் தர ஏதுவான சட்டதிருத்தங்களைக் கொண்டுவரலாமே? அதற்கான முதற்படியாக இந்த இட ஒதுக்கீடு சட்டம் இருந்து விட்டுப்போகட்டுமே?
எதிர்மறையான சிந்தனைகளுடனேயே ஏன் ஒவ்வொரு பிரச்சினையையும் அணுக வேண்டும் என்பதே எனது கேள்வி!
// ஒப்புக்குச் சப்பாணி போன்ற பெண் வேட்பாளர்கள் நிறைய வருவார்கள் என்ற ஒரு வாதத்திற்காகவே இந்தச் சட்டத்தைக் கிடப்பில் போட்டு வைப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்கிற மிகப்பெரிய துரோகம் ஆகாதா?//
திறமை இல்லாதவர்கள் இட ஒதுக்கீடு காரணமாக வருவதால் சட்டசபைகளின் தரம் குறையாதா? ஏற்கனவே குறைந்த தரம்தான். அதுவும் குறைய வேண்டுமா?
Survival of the fittest தான் இங்கு சரியாக இருக்கும்.
ஒன்று நினைவிருக்கட்டும், சலுகைகளை புகுத்துவதை விட சரியில்லாத சலுகைகளை நீக்குவது மிகக் கடினம். ஆகவேதான் விவாதம் நன்றாக வெளிப்படையாக நடக்க வேண்டும். பொலிடிகல்லி கரெக்ட் என்றெல்லாம் இருந்தால் பேச வேண்டியவற்றை பேச முடியாது போய் தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று பேசிப் பேசித் தான் சில ஓட்டை சட்டங்களையும், 'சட்டரீதியான தீவிரவாதத்தையும்' (Legal Terrorism) வளர்த்து விட்டுள்ளனரே.
இப்போதாவது இந்த பெண்ணுரிமை குரல்கள், 'பொறுப்புள்ள பெண்ணுரிமை' என்று தங்கள் போக்கினை மாற்றிக் கொள்ளுமா?
//திறமை இல்லாதவர்கள் இட ஒதுக்கீடு காரணமாக வருவதால் சட்டசபைகளின் தரம் குறையாதா? ஏற்கனவே குறைந்த தரம்தான். அதுவும் குறைய வேண்டுமா?//
அதாவது, திறமையற்ற ஆண்களே ஆண்டாண்டு காலத்துக்கும் சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் இருந்தால் பரவாயில்லை. ஆனால், அந்தக் கூட்டத்தில் பெண்கள் வந்து விடக்கூடாது என்பதா இதை எதிர்ப்பவர்களின் வாதம்? இருக்கிற திறமையின்மையைப் போக்க முடியாது என்று வாதிட்டாலும், அதைக் குறைக்க என்ன வழிகள் என்று தேடலாமே?
//Survival of the fittest தான் இங்கு சரியாக இருக்கும்.//
survival of the fittest என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்து ஏற்பட்ட ஒரு வாழ்க்கைமுறை. அந்த fittest-டமிருந்து weakest-ஐ காப்பாற்ற வேண்டிய கடமை தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் சட்டத்துக்கும் இருக்கிறது. இதற்கு சமநோக்கு மிக மிக அவசியம். பாரபட்சங்களால் fittest இன்னும் பலசாலிகளாகவும், weakest மேலும் பலவீனர்களாகவுமே ஆவார்கள்.
இது தான் நடக்கும் என்றால், எவரும் எதிலும் நம்பிக்கை வைக்காமல், நடப்பது நடக்கட்டும் என்று அரசியல் பற்றி சிந்திப்பதையே நிறுத்தி விடுவார்கள்.
//அதாவது, திறமையற்ற ஆண்களே ஆண்டாண்டு காலத்துக்கும் சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் இருந்தால் பரவாயில்லை.//
ஏதோ ஒரு க்வாலிஃபிகேஷன் இல்லாது யாருமே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, சட்டசபைக்கு வரமுடியாது. அதை அவர்கள் சரியாக மக்கள் நலனுக்கு பிரயோகம் செய்வதில்லை என்பதுதான் நிஜம். பெண்கள் மட்டும் இதில் என்ன ஸ்பெஷல்?
பாலிடிக்ஸ் என்றாலே அடித்து ஆடுவதுதான். இங்கு போய் இட ஒதுக்கீடு என்றால் அடாவடிக்காரர்கள் மற்றும் அவர்களது பினாமி பெண்பதிவர்கள் வருவதுதான் அதிகம் நடக்கும்.
அதை இப்போதே ஊகிக்க முடிகிறது. மேலும் சலுகை என வந்த பிறகு அதை விலக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தேவையற்று லாபிகள்தான் அதிகரிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களது கணிப்பில் அடங்குகிற அடாவடி அரசுப்பணியிலும் இருக்கிறது. ஏன், எல்லாத்துறைகளிலும் இருக்கிறது? அதற்கெல்லாம் பெண் தகுதியுடையவள் ஆனால் சட்டசபைக்கோ, பாராளுமன்றத்துக்கோ போவதற்கான குவாலிஃபிகேஷன் இல்லை என்பது என்ன நியாயம் சார்? அடித்து விளையாடுவது என்பது என்பது லஞ்சம், ஊழல், பாரபட்சம் போன்ற பல மோசமான விஷயங்களால் உருவானது தானே?
ஒருவர் இதை பெண்ணியத்தோடு சம்பந்தப்படுத்தியிருக்கிறார். :-))
இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் பின்தங்கியே இருக்கிறோம். பொங்கிப்போடவும் பிள்ளை பெற்றுக்கொள்ளவும் தான் பெண்கள் என்ற மனப்பான்மையிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கிறோம்.
கேட்டால் இது அடித்து விளையாடுகிற விளையாட்டு என்ற சப்பைக்கட்டு வேறு!
அடித்து விளையாடுங்க! :-)))))))
நன்றி!!!!!
//ஆனால் சட்டசபைக்கோ, பாராளுமன்றத்துக்கோ போவதற்கான குவாலிஃபிகேஷன் இல்லை என்பது என்ன நியாயம் சார்? //
பார்லிமெண்டுக்கு செல்லும் பாதை போட்டிகள் நிறைந்தது. சிலருக்கு மட்டும் வெண்சாமரம் பிடிக்கத் தேவையில்லை என்றுதான் கூறுகிறேன்.
பெண்களுக்கு க்வாலிஃபிகேஷன் இல்லை என எங்கு கூறினேன்? தில்லுடன் களம் இறங்குவதில் ஆணென்ன பெண்ணென்ன? இந்திரா காந்தியின் மந்திரி சபையில் அவர் ஒருவரே ஆண் என அக்காலத்தில் கூறுவார்களே. படித்ததில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெண்கள் இடஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதை விடுங்க, அது வருவதால் உங்களுக்கு எதாவது பிரச்சனையா!?, பிரச்சனையில்லை என்ற பட்சத்தில் தேவையில்லை என்ற கருத்து எதுக்கு!?
டோண்டு இராகவனை வழி மொழிகிறேன்.
தைரியமான கருத்துக்கள்.
//இந்திரா காந்தி, ஜெயலலிதா, சுசேதா கிருபளானி, ராஜாத்தி குஞ்சிதபாதம், ஜோதி வெங்கடாச்சலம், அனந்தநாயகி, கௌரி தாமஸ்//
இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே இருப்பதால் தான் இட ஒதுக்கீடு தேவை என்று நினைக்கிறேன்....
//இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே இருப்பதால் தான் இட ஒதுக்கீடு தேவை என்று நினைக்கிறேன்....//
அரசியல் நிர்ணயச்சட்டம் வரையப்பட்டபோது தலித்துகள் பழங்குடியினர் ஆகியோர் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களை ஊக்குவித்து, முன்னால் கொண்டுவர வெறும் பத்தாண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அதுவும் மத்திய மாநில சட்டசபைகளில் சீட்டுகளுக்காகத் தரப்பட்டது. அது ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டு, இன்னும் வேலைகளுக்கும் இட ஒதுக்கீடு, பிரமோஷன்களுக்கும் இட ஒதுக்கீடு என்றெல்லாம் போய் அடையாளம் காண முடியாத வழியில் விரிவடைந்துள்ளது.
ஓட்டு அரசியலால் கிரீமி லேயரைக் கூட அமுல்படுத்த இயலவில்லை. ஒரு விஷயம் தெரியுமா? எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவரது பிள்ளைகளுக்கு படிப்புக்கு ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை. நடைமுறையில் சக மாணவர்களிடையே எத்தன எதிர்மறையான எண்ணங்களை இது உருவாக்குகிறது என்பதை அறிவீர்களா?
அதெல்லாம் விடுங்கள். பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு வருவோம். இதுவும் அதே மாதிரித்தானே திசை திருப்பப்படும்? அதிலும் அதன் தேவையே இல்லை என்றுதான் கூறுவேன். தலித்துகளை செய்தது மாதிரி பெண்களை யாரும் எப்போதும் முன்னுக்கு வரவிடாமல் செய்ததில்லை.
அவ்வளவாக பிரதிநிதுத்துவம் இல்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் மேலே சொன்னது போல அவர்களை யாரும் தடுக்கவில்லை.
இட ஒதுக்கீடு கொடுத்தால் டம்மி பீஸ்களை நிறுத்துவார்கள் அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அது வருவதால் உங்களுக்கு எதாவது பிரச்சனையா!?, பிரச்சனையில்லை என்ற பட்சத்தில் தேவையில்லை என்ற கருத்து எதுக்கு!?//
கண்டிப்பாக பிரச்சினைதான், இந்த நாட்டின் குடிமகன் என்னும் முறையில். தேவையின்றி தலைவலிகளை உருவாக்கப் போகிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்க இயலும். ஆதரிப்பவர்கள் கூட தங்கள் இமேஜ் போய் விடுமே என்ற பயத்தால்தான் ஆதரிக்கிறார்கள்.
ஆக, வெளிப்படையான விவாதமின்றி இதை அமலாக்க நினைக்கிறார்கள். அதனால்தான் இப்பதிவு.
அது சரி எனது இந்தப் பதிவால் உங்களுக்கு பிரச்சினையா? பிரச்சினையில்லை என்னும் பட்சத்தில் ஏன் இந்த பின்னூட்டம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெண்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்பதே என் கருத்து.அப்படி ஆனால் கட்சியில் உள்ள தலைவர்களின் மனைவிகள் அதற்க்கு நிறுத்தப்படுவார்கள். அவர்களும் தலையாட்டி பொம்மையாக தான் இருப்பார்கள்.
//பாரபட்சங்களால் fittest இன்னும் பலசாலிகளாகவும், weakest மேலும் பலவீனர்களாகவுமே ஆவார்கள்.//
சேட்டைகார நண்பரே,
உங்கள் இந்த கருத்து ஏற்புடையதே. அதனால் தான் பாரபட்ச்சம்பார்க்க வேண்டாம் என்று கூறுகிறார்
எந்த சட்டத்திலும் ஆரம்பத்தில் சிக்கல்கள் இருக்கும்.. அவைகளைப் போகப் போகக் களைந்து கொள்ளலாம்... இந்த சட்டம் இப்போது தேவை என்பதே என்னுடைய வாதம்.. பின்தங்கிய வர்க்கமாகவே அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. மேலே வரட்டும்.. பின்னர் இதில் திருத்தம் செய்து கொள்ளலாம்.. தற்போது இருக்கும் அரசியல் அமைப்பில் நாம் கண்டது என்ன...? இந்த மாற்றத்தை வரவேற்று தான் பார்ப்போமே... வால்பையன் கேட்டதைப் போல இதில் என்ன பிரச்சினை உங்களுக்கு உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை... அடிக்கடி நடத்தப்படும் விவாதங்களால் நேரம் வீணாகிறது என்று நீங்கள் சொன்னால் அது ஏற்புடையதல்ல..எல்லோருக்கும் பிழைக்க வழி உள்ளது, படிக்க திறமை உள்ளது.. SC, ST மாணவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை.....?
//இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் பின்தங்கியே இருக்கிறோம். பொங்கிப்போடவும் பிள்ளை பெற்றுக்கொள்ளவும் தான் பெண்கள் என்ற மனப்பான்மையிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கிறோம்.//
இட ஒதிக்கீடு கொடுத்தால் மட்டும் அடித்தட்டுப் பெண்களின் நிலை மாறுமா என்ன? அதற்கு சரியான வழியில் கல்வியறிவையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தவேண்டும்.
என்னைப்பொறுத்தவரை இந்த சட்டம் தேவையில்லாதது. அப்படியே கொடுப்பதன் மூலம் திறமையான நபர்களுக்குப் பதில் அரசியல்வாதிகளின் மனைவிகள்தான் பதவியைப் பிடிப்பார்கள். {இந்த விஷயத்தை நாம் நேரடியாக கண்கூடாகப் பார்க்கும் ஒரு உதாரணம், சுழற்சி முறையிலான கிராம பஞ்சாயத்துத் தேர்தல்} திறமையில்லாத (ஆண்ணோ,பெண்ணோ) ஒதிக்கீடு மூலம் தேர்ந்தெடுப்பதன் மூலம் நிர்வாகம் சீர் கேட்டு மீண்டும் இதைப் போல தேவையில்லாத சட்டத்தை அமல்படுத்தப்பார்ப்பார்கள்.
//இந்த சட்டம் இப்போது தேவை என்பதே என்னுடைய வாதம்//
தேவையே இல்லை என்பதே என் வாதம். இதே மாதிரி பல சட்டங்கள் வந்தபோது ஆரம்பத்தில் இப்படித்தான் பேசி கொண்டு வந்தார்கள். பிறகு அவை இன்னும் சிந்துபாத் கிழவனைப் போல நம் கழுத்தை சுற்றிக் கொண்டுள்ளன.
அரசியல் வேட்பாளராக வரவே பிரயத்தினங்கள் வேண்டும். பல லெவல்களிலும் பிரயத்தினங்கள் தேவை. அவை எல்லாவற்றையும் ஜெயித்து வர எல்லோருக்குமே லெவல் ப்ளேயிங் ஃபீல்ட் வேண்டும். தலித்துகளுக்கு வெறுமனே முதல் பத்தாண்டுகளுக்கு என கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு மேலும் ஐம்பது ஆண்டுகள் இருந்து விட்டது. இன்னும் இருக்கப் போகிறது. கிரீமி லேயரை எல்லோருமே அறிவர். இப்போது இது வேறு. அரசியல் தலைவர்களின் மனைவியர், துணை/இணை மனைவியர் ஆகியோரை அக்கொமெடேட் செய்யவே இது பயன்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பின்தங்கிய வர்க்கமாகவே அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. மேலே வரட்டும்.. பின்னர் இதில் திருத்தம் செய்து கொள்ளலாம்..//
அப்படி ஒதிக்கீடு கொடுக்கப்பட்டு திருத்தப்பட்டதாக பெரிய வரலாறுயில்லை. ஒதிக்கீட்டை திருத்துவதென்பது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பும். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் சாதி ஒதிக்கீடு வழங்கையிலே அதை குறிப்பிட்ட காலத்திகுப்பின் திரும்பப் பெறவேண்டும் என்றுதான் அம்பேத்கார் கூறினார். ஆனால் இன்றுவரை ஒட்டு வங்கிக்காக ஒதிக்கீட்டை திரும்பப்பெறமுடியாத நிலைதான் உள்ளது.
இந்த சட்டத்தை தவறாக உபயோகிப்பார்கள் என்பதில் எனக்கும் சந்தேகம் இல்லை.. என்ன செய்வது.. கொஞ்சம் பேருக்காவது உபயோகப் படட்டுமே.. ஏழைகளுக்குப் பயன்படும் பல நல்ல திட்டங்களில், பணக்காரப் பெருச்சாளிகள் மற்றும் கட்சிக் காரர்கள் தலையிட்டு அனுபவிப்பதில்லையா... அது போலத்தான்..
என்னத்தைச் சொல்ல....
//கொஞ்சம் பேருக்காவது உபயோகப் படட்டுமே.. ஏழைகளுக்குப் பயன்படும் பல நல்ல திட்டங்களில், பணக்காரப் பெருச்சாளிகள் மற்றும் கட்சிக் காரர்கள் தலையிட்டு அனுபவிப்பதில்லையா... அது போலத்தான்..//
அந்த கொஞ்சம் பேர் யார் என்பதுதான் இங்கே முக்கியமான கேள்வி.
அது சரி, யாராவது இதில் இட ஒதுக்கீடு பெற வேண்டுமானால் திருநங்கைகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். வேறு யாரும் இல்லை. அதை சொல்லிப் பாருங்கள், பெண்களும் அதை எதிர்த்து பொங்கி எழுவார்கள்
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதில் இட ஒதுக்கீடு பெற வேண்டுமானால் திருநங்கைகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். வேறு யாரும் இல்லை. அதை சொல்லிப் பாருங்கள், பெண்களும் அதை எதிர்த்து பொங்கி எழுவார்கள்//
100% உடன்படுகிறேன்!
சிறந்த நகைச்சுவைப் பதிவு டோண்டு சார்!
இப்படியே தொடருவதாக எண்ணும் உங்கள் எண்ணம் பலிக்குமா என்று எண்ணத் தோன்றுகிற தருணத்தில், உங்கள் எண்ணம் பழிக்கச் செய்கிறது என்பது உண்மை!
அரசியல்வாதிகள் மனைவிகளே முன் நிறுத்தப் படுவார்கள் என்ற தனது அனுபவம் வழியே புரிந்து வைத்திருப்பதால் தான் லல்லு அப்படி சீறினாரோ? "Signing the death certificate" என்று சோனியா முதல் அனைவரையும் சிரிக்க வைத்து comedy பண்ணினாரே மனிதர்
---------
33% ல் ஒரு சதவிகிதமாவது அல்லது கொஞ்சமோ கொஞ்சமாவது திரு நங்கைகளுக்கும் ஒதுக்கியிருக்கலாமோ? இனிமே அவங்கள்ள ஒருத்தர் கேள்வி எழுப்பி அது கணக்கில் எடுத்து பேச யாராவது வந்து எப்போ அதெல்லாம் அமுலுக்கு வந்து … ம்ம்ம் …
துரியோதனன் பார்வையில் பதிவுலகம், பொதுவாக ஊடகம் – 3 http://www.virutcham.com/?p=937
என்ற என் பதிவில் நான் பதிந்து வைத்திருப்பது.
//இட ஒதுக்கீடு காரணமாக வருவதால் சட்டசபைகளின் தரம் குறையாதா? ஏற்கனவே குறைந்த தரம்தான். அதுவும் குறைய வேண்டுமா?//
சட்டசபைகளின் தரம் என்பது தேவை இல்லாத வாதம். ஏனெனில் எம்.எல்.ஏ., எம்.பி., என்பது பிரதிநிதித்துவம்தான். மக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்து எடுக்க உரிமை உண்டு. தகுதி, திறமையை விட மக்களின் ஆதரவுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.
//ஓட்டு அரசியலால் கிரீமிலேயரைக் கூட அமுல்படுத்த இயலவில்லை. ஒரு விஷயம் தெரியுமா? எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவரது பிள்ளைகளுக்கு படிப்புக்கு ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை.//
கிரீமிலேயர் என்பதை முதலில் 'பொதுப்பட்டியலில்' அறிமுகபடுத்துவதுதான் சரியாக இருக்கும். ஆனால் அதை உயர்சாதியினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
படிப்புக்கு ஃபீஸ் என்பதே தவறு. படிப்பு எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.
33 % பெண்கள் இடஒதிக்கீடு என்பது கட்டாயம் பெண்கள் அரசியலில் புகுத்தப்படவேண்டும் என்ற நோக்கில்தான் அதனை விட்டு வேறு சிந்தனையில் இதனை அணுகுவது உங்களை போன்ற பெரியவர்களுக்கு அழகல்லவே. உதரனத்தர்க்கு 14 வயது வரை உள்ளவர்களுக்கு கட்டாய கல்வி திட்டம் கடந்த ஏப்ரல் ஒன்னாம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. அது எதானால் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்ற ஒரே நோக்கம். அதனை விட்டு விருப்பம் உள்ளவர்கள் படிக்கட்டும் என்றால் அது எவளவு முரணோ அவளவு முரண் நீங்கள் கூறும் இந்த வாதம். நீங்கள் கூறும் இந்த எதிர்வினை அனேகமாக அடுத்து உள்ஒதிக்கீடு கேட்டு வந்து விடுவார்கள் அதனால் பார்பனர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்ற நோக்கத்திலோ...?.
சோ கூட்டம் எப்பொழுதும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கூட்டம்......என்ன சொல்ல உங்கள் கூட்டத்தை பற்றி...வெட்கம், வேதனை. எதிலும் பார்பனிய சிந்தனை மேலோங்கி உங்கள் அடிமைபடுதப்படும் கோணல் புத்தியே அதிகம்.
ஒதுக்கீடு தேவையில்லை. இப்படித்தான் அரசுப்பணியில் சேரும்போது ஒதுக்கீடு கொடுத்துப் பின்னர் இந்திராகாந்தி காலத்தில் பதவி உயர்விற்கும் ஒதுக்கீடு வந்தது. பின்னர் துறைத்தேர்வு எழுதி பதவி உயர்வு பெறுவதிலும் அமல் படுத்தி 35 சதவீதம்கூட மதிப்பெண் பெறாதவர்களையும் கோட்டா நிறைவு செய்யவேண்டும் என்று கூறி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவுக்கும் கூத்தும் நடைபெறுகிறது.
எனவே இந்தத்தேவையில்லாத ஒதுக்கீட்டை கொண்டுவரவேண்டாம். கொண்டுவரவும் மாட்டார்கள்.ஏனென்றால் எல்லோரும் பெண்களுக்காகப்பாடுபடுவதாக நாடகம் ஆடுகிறார்கள்.
"பெண்கள் இடஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதை விடுங்க, அது வருவதால் உங்களுக்கு எதாவது பிரச்சனையா!?, பிரச்சனையில்லை என்ற பட்சத்தில் தேவையில்லை என்ற கருத்து எதுக்கு!?" - அடேடே என்ன ஒரு கருத்து?
வீரப்பன் எங்க வீட்டு கொல்லைலயோ, ஜெயலலிதா வீட்டுக் கொல்லைலயோ, விஜயகுமார் வீட்டுக் கொல்லைலயோ சந்தன மரம் வெட்டல. அப்புறம் எதுக்கு பாவம் அந்த ஜீவன கொன்னாய்ங்யளோ?
சட்டீஸ்காரில 75 பேர தீவிரவாதிகள் கொன்ன து கண்டிப்பா என்னைய பாதிக்கல. நான் சிவகங்கைகாரன், சிவகங்கையில வசிப்பவன். நான் அதப் பத்தி கவலைப் படத் தேவையில்லையோ?
//கிரீமிலேயர் என்பதை முதலில் 'பொதுப்பட்டியலில்' அறிமுகபடுத்துவதுதான் சரியாக இருக்கும். ஆனால் அதை உயர்சாதியினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். //
பொதுப்பட்டியல்காரர்களுக்கு ஒரு சலுகையுமே கிடையாது? அப்புறம் என்ன புடலங்காய் கிரீமி லேயர்?
//33 % பெண்கள் இடஒதிக்கீடு என்பது கட்டாயம் பெண்கள் அரசியலில் புகுத்தப்படவேண்டும் என்ற நோக்கில்தான் //
அப்படி வரும் பெண்கள் யார் என்பதுதான் இங்கு பேச்சு. அரசியல் த;லைவர்களின் இணை/துணை மனைவியர்தான் பெருமாப்லும் வருவார்கள், பொம்மைகளாக செயல்படுவர்.
//சட்டசபைகளின் தரம் என்பது தேவை இல்லாத வாதம். ஏனெனில் எம்.எல்.ஏ., எம்.பி., என்பது பிரதிநிதித்துவம்தான். மக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்து எடுக்க உரிமை உண்டு.//
அதில் போய் சில தொகுதிகளில் பெண்கள் மட்டும்தான் என கட்டுப்படுத்துவது மக்களின் சுதந்திரத்தில் தலையீடு ஆகாதா. அந்தந்த தொகுதியினர் தங்களுக்கு சிறந்தவரையே மெம்பர்களாக பெற விரும்புவர். அந்த தெரிவில் இது ஒரு லிமிட்டேஷன் தரவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்படியே தொடருவதாக எண்ணும் உங்கள் எண்ணம் பலிக்குமா என்று எண்ணத் தோன்றுகிற தருணத்தில், உங்கள் எண்ணம் பழிக்கச் செய்கிறது என்பது உண்மை!//
என்னுடையது நகைச்சுவையான பதிவோ இல்லையோ, உங்களுடைய இந்த பின்னூட்டம் சுத்தமா புரியாத குழப்பமால்ல இருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
nice,
good view.
already I have written about this
pls see http://mastanoli.blogspot.com/2010/03/33.html
ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நான்சொல்ல வில்லை அனானி அவர்களே..
வளரும்போது வழிவிடலாமே என்ற முனைப்பில் சொன்னேன்..
கண்டிப்பாக போது சிந்தனை இருக்க வேண்டும்..ஆனால் வீரப்பனையும் இந்த விஷயத்தையும் நீங்கள் நேரடியாக இணைத்தது எப்படிச் சரியாகும்...?ஒப்பீடு தராசு முள் போல் இருக்க வேண்டும்..
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது யார்?
இந்தியாவில் மகளிர் இடஒதுக்கீட்டை இரு பிரிவினர் எதிர்க்கின்றனர்.
1. மனுதர்மத்தை வெளிப்படையாக வலியுறுத்தும் சிலர் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தேவையில்லை, அது ஆபத்தானது என்கின்றனர். இதில் முதன்மையானவர் 'துக்ள்க்' சோ.
2. சூத்திரர்களுக்கு அதிகாரம் தேவை இல்லை என்போர் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இரண்டாவது கூட்டம். இதில் வெளிப்படையானது பி.ஜெ.பி., மறைமுகமாக எதிர்ப்போர் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.
மற்றபடி முலாயம், லாலு, மாயாவதி, மம்தா போன்ற யாரும் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. இவர்கள் எல்லோரும் "உள் ஒதுக்கீடு" தான் கேட்கின்றனர். உள்ஒதுக்கீடு என்பதும் பெண்களுக்காகவே கேட்கப்படுவதால், அதனை இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு என்பது திசைதிருப்பும் வாதமாகும்.
http://arulgreen.blogspot.com/2010/04/blog-post_10.html
//பொதுப்பட்டியல்காரர்களுக்கு ஒரு சலுகையுமே கிடையாது? அப்புறம் என்ன புடலங்காய் கிரீமி லேயர்?//
பொதுப்பட்டியல்காரர் என்போர் யார்? SC/ST/BC.,எல்லோரையும் உள்ளடக்கியதுதான் அது. ஆனாலும் அது உயர்சாதியினரின் சொத்து என்ற நினைப்புதான் இப்படி பேச வைக்கிறது.
இத்தனை காலமாக உயர்சாதியினர் அதிகாரமிக்க இடங்களையும், அதிக வருமானம் வரும் இடங்களையும் ஆக்கிரமிக்க விட்டு வைத்திருப்பதே, மற்றவர்களால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சலுகைதான். இன்னும் என்ன புடலங்காய் சலுகை?
//ஆனால் வீரப்பனையும் இந்த விஷயத்தையும் நீங்கள் நேரடியாக இணைத்தது எப்படிச் சரியாகும்...?ஒப்பீடு தராசு முள் போல் இருக்க வேண்டும்..// பிரகாஷ்! எப்படி என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை உங்களுக்கானதாய் எடுத்துக் கொண்டீர்கள் என்று தெரியவில்லை. எதற்கானது என்று நான் அதனை மேற்கோள் காட்டியே கூறியிருந்தேன். இது தான் நாம் விவாதிக்கும் இலட்சனம். "உனக்கு பிரச்சினை இல்லேன்னா பொத்திக்கிட்டு போக வேண்டியது தானே" என்பது போல வால்பையன் அவர்கள் கூறியிருந்த கருத்துக்கான பின்னூட்டம் அது. இதில் இரண்டு பிரச்சினைகளையும் நான் நேரடியாக சம்பந்தப்படுத்தவில்லை. நான் சட்டீஸ்காரைப் பற்றி கூட அதில் குறிப்பிட்டிருக்கிறேன்.
//"உனக்கு பிரச்சினை இல்லேன்னா பொத்திக்கிட்டு போக வேண்டியது தானே" என்பது போல வால்பையன் அவர்கள் கூறியிருந்த கருத்துக்கான பின்னூட்டம் அது.//
அன்பு அனானி அவர்களே.. தவறாக எண்ண வேண்டாம்.. நானும் வால் பையன் கருத்துகளை வழி மொழிந்திருந்தேன்.. எனவே அந்த பின்னூட்டத்தை எனக்கானதாக எடுத்துக் கொண்டேன்.. மன்னிக்கவும்..ஆனால் ""உனக்கு பிரச்சினை இல்லேன்னா பொத்திக்கிட்டு போக வேண்டியது" இந்த வரிகள் பின்னூட்டங்களிலிருந்து நீக்கப் பட்டு விட்டன என்று நினைக்கிறேன்..நல்லது தான்.. நான் விவாதிக்கும் இலட்சினத்தை மாற்றிக் கொள்கிறேன்.. உங்கள் அறிவுரைக்கு நன்றி..
//"உனக்கு பிரச்சினை இல்லேன்னா பொத்திக்கிட்டு போக வேண்டியது" இந்த வரிகள் பின்னூட்டங்களிலிருந்து நீக்கப் பட்டு விட்டன என்று நினைக்கிறேன்.//
வால்பையனது பின்னூட்டம் அப்படியே இருக்கிறது, ஆனால் அந்த வார்த்தைகளில் அல்ல. அப்பொருள் வரும் வார்த்தைகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஓ!
இப்படியெல்லாம் கூட ஒருவரின் கருத்தை திரிக்கலாமா!?
பொத்திகிட்டு போக சொல்வதென்றால் நேரடியாக சொல்வேன், மறைமுகமாக அல்ல!, புரியுதா அனானி!
//இதை ஆதரிக்கும் எந்தக் கட்சியுமே தங்கள் வேட்பாளர்களில் 33% பெண்களாக இருக்கும்படி கூட இதுவரை செய்யவில்லையே, அதிலிருந்தே இதற்கு மனப்பூர்வமான ஆதரவு இல்லையென்று தெரியவில்லையா?//
இதற்காகத்தான் சட்டம் தேவைபடுகிறது.. அனைவரும் மனப்பூர்வமான ஆதரவு தந்துவிட்டால் பின் சட்டம் தேவை இல்லையே டோண்டு சார்
//பஞ்சாயத்துகளிலேயே பார்க்கிறோமே. பஞ்சாயத்து தலைவியின் கணவர்தானே மீட்டிங்குகளை நடத்துகிறார் பல இடங்களில்!//
உண்மை தான் , ஆனால் பல பஞ்சாயத்துக்களில் மனைவிகளே மீட்டிங் நடத்துகிறார்கள்.. நிச்சயம் நிலைமை மாறும்.. !
கணவன் மீட்டிங் நடத்துவதால் இந்த சட்டம் வேண்டாம் என்று சொல்வது சரியான வாதமல்ல.
//அரசியல்வாதிகள் பெண்களை தங்கள் பினாமிகளாக வைத்துக் கொள்வதுதான் நடக்கும்.//
அரசியல் வாதிகள் தங்கள் பெயரில் நேரடியாக செய்தல் சரி என்று சொல்லுகிறீர்களா? இது இரு வேறு பிரச்சனை.. ஒன்றோடு ஒன்று தொடர்பில்லை..
உங்கள் திருநங்கை பதிவில் சொன்னது போல, திருநங்கைக்கு ஒதுக்கீடு கொடுத்தல், அங்கே பினாமி வராதா?
//
இதற்காகத்தான் சட்டம் தேவைபடுகிறது.. அனைவரும் மனப்பூர்வமான ஆதரவு தந்துவிட்டால் பின் சட்டம் தேவை இல்லையே டோண்டு சார்
//
முதலில் கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் இல்லாத கட்சிகள் (குடும்பக் கட்சிகள்) எப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்றும்...சட்டம் போட்டா ?
சட்டம் ஏற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?
பேப்பரில் பாவக்காய் என்று எழுதி நக்கினால் கசக்கும் என்று சொல்கிறீர்கள்...அதை நாம் நம்பணுமா ?
சட்டம் எல்லாம் ஏற்றுவதற்குப் பதில் முதலில் கட்சியில் அதைச் செய்யுங்கள். அது வேலை செய்யுதா...அதனால் நன்மை ஏற்படுதா என்று பார்த்துபின்னர் நாட்டு மக்களுக்கு சட்டம் போடுங்கள்.
இப்படித்தான் இடஒதுக்கீடு என்று சொல்லிக்கொண்டு கட்சியில் எல்லா தலமைப் பதவியையும் ஒரு குடும்பத்துக்கோ, இல்லை ஒரு சாதிக்கோ கொடுத்துவிட்டு, நாட்டுல எல்லாரும் இடஒதுக்கீடு கொடுக்கணும்ன்னு சட்டம் போட்டார்கள்...
நடப்பது என்ன?
எல்லா இடங்களிலும் இடஒதுக்கீடை அமுல் படுத்தவே முடியாமல் கோர்டு கேசு என்று இழுப்பறி...சட்டத்தால் இருக்கும் பண்புகளைக் காக்கத்தான் முடியும்...புதிய பண்புகளை எல்லாம் சட்டத்தால் கற்றுக்கொடுக்க முடியாது.
எல்லாவித இடஒதுக்கீட்டையும் எதிர்ப்பவன் நான்.
ஆனால், இட ஒதுக்கீடு இருக்கும் வரை அனுபவிக்கவும் செய்வேன்..எனக்கும் என் சந்ததியினருக்கும் இடஒதுக்கீட்டினால் பலன் உண்டு என்றால் அதை மறுப்பதற்கு நான் முட்டாள் அல்ல.
//பொதுப்பட்டியல்காரர் என்போர் யார்? SC/ST/BC.,எல்லோரையும் உள்ளடக்கியதுதான் அது. ஆனாலும் அது உயர்சாதியினரின் சொத்து என்ற நினைப்புதான் இப்படி பேச வைக்கிறது.//
சலுகைகள் ஏதும் இன்றி வெறுமனே திறமை மூலமே தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் பொது பட்டியலில் உள்ளனர். அங்கு முதலிலிருந்தே சலுகைகள் இல்லாததால் கிரீமி லேயர் என்ற பேச்சே வராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வஜ்ரா - ஏன் இந்த ஆவேசம்.
கட்சி கட்சி என்று எதோ நான் ஒரு கட்சிக்கு ஆதரவாக கருத்திட்டது போல் இப்படி ஒரு தாக்கு ஏன்? இந்த பதிவு குடும்ப
கட்சிகள் பற்றியதா
அல்லது பெண்கள் இட ஒதுக்கீடு பற்றியா என சந்தேகமே வந்து விட்டது எனக்கு :)
//சட்டம் ஏற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?//
பஞ்சாயத்துக்களில் எப்படிங்க இது சாத்தியமாயிற்று? ரிசர்வ் தொகுதி என்பது எப்படி சாத்தியமாயிற்று?.. 179 தொகுதிகள் பெண்களுக்கு என்று சட்டமாகி, தேர்தல் ஆணையம் இன்னின்ன தொகுதி பெண்களுக்கு என்று பிரித்துவிட்டால், கட்சிகள் அங்கே பெண்கள் தான் நிறுத்த வேண்டும்.. இப்படித்தானே உள்ளாட்சி அமைப்புகளில் நடந்தது.. !
டோண்டு சார் - திரு வஜ்ரா அவர்களுக்கு உங்கள் பதில்.. பெண்களுக்கு ஒதுக்கீடு என்பதில் மாற்று கருத்திருந்தாலும் . திரு வஜ்ராவின் கருத்துக்கு உங்கள் அனுபவத்தில் மூலம் என்ன பதில் தருவிர்கள் என ஆவலுடம் எதிர்பார்கிறேன்
//
வஜ்ரா - ஏன் இந்த ஆவேசம்.
கட்சி கட்சி என்று எதோ நான் ஒரு கட்சிக்கு ஆதரவாக கருத்திட்டது போல் இப்படி ஒரு தாக்கு ஏன்? இந்த பதிவு குடும்ப
கட்சிகள் பற்றியதா
அல்லது பெண்கள் இட ஒதுக்கீடு பற்றியா என சந்தேகமே வந்து விட்டது எனக்கு :)
//
முரளி ஐயா, நான் ஆவேசப்படவில்லை. நிதானமாகத்தான் இருக்கேன்.
நான் சொல்லவந்த கருத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. சட்டம் இயற்றுவது பெரிய விசயம் இல்லை. அதை நடைமுறைப்படுத்துவது தான் பெரிய விசயம். இதுவரை கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடுகளையே ஒழுங்காக நடைமுறைப்படுத்த முடியவில்லை. எதையுமே சட்டம் போட்டு force செய்வதனால் திருட்டுத்தனம் தான் வளருமே தவிர ஞாய உணர்ச்சியெல்லாம் வளராது. இதைத்தான் நான் சொல்லவந்தேன்.
இப்போதைக்கு இந்த பெண்கள் இடதுக்கீடு மசோத பற்றி மீரா சான்யால் கருத்தைப் பாருங்கள். அவர் மும்பை தொகுதி சுயேட்சை எம்.பி.
http://timesofindia.indiatimes.com/india/Can-and-able-without-reservations/articleshow/5705117.cms
Post a Comment