இதைத்தான் எனது ஆயிரமாவது பதிவாக இட எண்ணியிருந்தேன். ஆனால் முத்துராமன் அவர்களது உதவிக்கான கோரிக்கைப் பதிவின் அவசரம் அதிகம் ஆகவே அதையே 1000-வது பதிவாக இட்டு விட்டேன்.
எனது கார் காந்தி சிலையை அடைந்தபோது மணி கிட்டத்தட்ட மாலை 6 ஆகி விட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது ஏற்கனவேயே சிவப்பிரியன், ஸ்ரீ, தண்டோரா, பாஸ்கர், சிவராமன், வெங்கடரமணன், சினேகன் ஆகியோர் வந்திருந்தனர். பிறகு வந்தவர்கள் பாலபாரதி, காமேஷ், சிவகணேஷ், லக்கிலுக், விஸ்வநாதன் ஆகியோர்.
பிறகு எல்லோரும் அருகில் உள்ள புல்வெளிக்கு சென்று வட்டமாக அமர்ந்தோம். யாரும் முதல் வரிசையில் அமர்ந்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. முதலில் இருட்டாவதற்குள் அவரவர் சுய அறிமுகம் செய்து கொள்ளலாம் என பாலபாரதி கூற, அவ்வாறே செய்தோம்.
விஸ்வநாதன் என்பவர் தமிழ் காமிக்ஸ் உலகம் என்னும் வலைப்பூவை நடத்துவதாக அறிந்தேன். பேச்சு அப்படியே விக்கிபீடியாவுக்கு திரும்பியது. தமிழில் வரும் ஒவ்வொரு படத்துக்கும் முக்கியமான விவரங்களை கொடுத்தாலே பிற்காலத்தில் அதுவே ஒரு பெரிய ஆவணமாக உருவெடுக்கும் என பால பாரதி அபிப்பிராயப்பட்டார்.
திருநங்கைகளுக்குத்தான் இட ஒதுக்கீடு தேவை என்னும் எனது பதிவை நான் குறிப்பிட்டு பேச, செய்யலாமே என்பது போன்ற விட்டேற்றியான பதில்கள் வந்தன. பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்றதும் துள்ளி குதித்து ஆதரவு தெரிப்பவ்ர்கள் இதற்கு மட்டும் பம்முகின்றனர் என்பது இந்த சிறிய வட்டத்திலேயே பார்க்க முடிகிறது. அப்பதிவுக்கு பின்னூட்டமும் ஒன்றே ஒன்றுதான் வந்துள்ளது, அதுவும் அனானி ரூபத்தில். நாளையாவது ஏதாவது வருகிறதா என பார்க்கலாம். சற்று நேரம் கழித்து வந்த லாயர் சுந்தர்ராஜ் நான் பெண்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லையென ஒரு தோற்றம் இருப்பதாக தெரிவிக்க, நானோ தோற்றமா, கண்டிப்பாக நான் அதை ஆதரிக்கவில்லை என அவரிடம் தெளிவுபடுத்தினேன். திருநங்கைகள் விஷயத்தில் ஒரு சட்ட நிபுணராக அவரது பின்னூட்டம் கேட்டேன். போடுவதாக கூறினார். போடுகிறாரா என பார்ப்போம்.
சோவின் எங்கே பிராமணன் சீரியலை மிஸ் செய்யும் எபிசோடுகளை எனது பதிவில் பார்த்து கொள்வதாக ஒருவர் கூற, அவர் முக்கியமாக சம்பந்தப்பட்ட எபிசோடின் வீடியோவையும் நான் தந்திருக்கும் சுட்டிகள் மூலம் பார்ப்பது அதிக விசேஷமாக இருக்கும் என கூறினேன்.
சற்று நேரம் கழித்து அதிஷா, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், நர்சிம் ஆகியோர் வந்தனர். அதற்குள் போலீசாரும் வந்து நாங்கள் புல்வெளியில் அமரலாகாது என விரட்டிவிட நடைபாதைக்கு வந்தோம். பிறகு மெதுவாக வழமையான டீக்கடைக்கு சென்றோம். அங்கு ப்ரூனோ நேரடியாக வந்திருந்தார். தமிழ் குரலும் வந்தார். அங்காடித் தெரு திரைப்படத்துக்கு எதிர்வினையாக ப்ரூனோ இட்டப் பதிவு பற்றி பேச்சு வந்தது. உடனடி பணலாபம் இல்லாவிடினும் வக்கீல்களின் ஜூனியர்கள், உதவி இயக்குனர்கள், மளிகைக் கடைகளில் வேலைக்கு சேருபவர்கள் தங்களது எதிர்கால லாபத்தை கருத்தில் கொண்டுதான் கொத்தடிமை ரேஞ்சுக்கு பணிபுரிகின்றனர் என்ற பதிவின் கருத்து பற்றியும் பேசப்பட்டது. எது எப்படியாயினும் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற டெக்ஸ்டைல் கடைகளில் வேலை செய்பவர்கள் அவ்வாறெல்லாம் முன்னேற முடியாது என்றும் கூறப்பட்டது.
பல குழுக்களாக மொக்கை போட்டதில் மற்றவ்ர்கள் போட்ட மொக்கைகள் பற்றி கூற இயலவில்லை. நேரமும் எட்டை தாண்டிவிட, என் காரை செல்பேசி மூலம் பேசி வரவழைத்தேன். எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
23 hours ago
21 comments:
nice very fast post.
Sometimes it is more interesting to read the post about meet rather than attending the meet.
ஜோ அமலன் பன்னாண்டோ மாதிரி ஆட்கள் யாரும் கலந்துரையாடல்களுக்கு வருவதில்லையா ?
எனக்கு அது போன்ற ஆட்கள் வராதது ஏமாற்றமாக இருந்தது.
நேரில் எப்படி பேசுகிறார்கள் என்று பார்க்க ஆசை!
சமூக அக்கறையுள்ள, இன்றைய சூழலில் நாட்டுக்கு மிக அவசியமான பதிவு. நன்றி.
கோயஞ்சாமி.
அவசர வேலை காரணமாக இன்று சென்னை வருவது ரத்தாகிவிட்டது..உங்கள் பதிவிற்கு நன்றி
டோண்டு சார்,
ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நான் வர முடிந்தது... நான் வெளியூர் சென்று வந்தமையால் மிக தாமதமாக வந்தேன்...
நண்பர்கள் அனைவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
பதிவுக்கு நன்றி...
Hi Dondu,
Congrats!
Your story titled 'சென்னை பதிவர்கள் சந்திப்பு 10.04.2010' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th April 2010 04:28:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/222832
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Thanks Tamilish
Regards,
Dondu N. Raghavan
இந்த வகைக் கூட்டங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறுகின்றனவா? யார் யார் பங்கேற்கலாம்? தெரிந்துகொள்ளலாமா?
please give blog name of Sri Viswanathan thamizh comic ulagam so that a link can be given from my blog devoted for kids.
subbu rathinam
http://ceebrospark.blogspot.com
@சூரி
நீங்கள் கேபது இதுதான் என நினைக்கிறேன்.
http://tamilcomic.blogspot.com/
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த மாதிரி காந்தி சிலைபக்கத்திலே உட்கார்ந்து அரட்டையடிக்கிறவங்களைப் போலிசு வெறுமன்வே கிளப்பிமட்டும் விட்ரிக்கக்கூடாது. நேரா திருவல்லிக்கேணி லாக்கப்லே ஒரு ராத்திரி வச்சுட்டுத்தான் அனுப்ப்னும்.
பீச்சு, குடுமப குழந்தைகுட்ட்களோடு வரவங்களுக்கு மட்டும்தான்.
அரட்டைஅடிக்கனுமா வேறு எங்காவது போவ வேண்டியதுதானே?
நேற்று client meeting முடியவே ஒன்பது மணி ஆகிருச்சு அதனால் வர முடியாமல் போயிருச்சு சார். எனக்கென்னவோ பதிவு ரொம்ப சுருங்கி போனது போல் இருக்கு.
டோண்டு ராகவன் ஈக்கோலா உக்காரணும்னு அவசிய்மில்லா.
மண்ணைக்குவிச்சு அது மேல உக்காந்து மேட்டின்மையைக்காட்டலாம்.
அண்ணாச்சி சான்சை தவற விட்டுட்டாக.
பார்ப்பானா கொக்கா...நம்மகூட ஊத்தக்காரங்களை ஈக்கோலா உக்காரவுடுமோமா?
அடுத்தவாட்டி நான் சேர்கள் சான்ஸ்கிரீட்டு தெரிந்தவாக்கு மட்டும் ஸ்போன்சோர் பண்ணலாமுன்னு இருக்கேன்.
டேட்டு சொல்லுங்கோ
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ
என்ன ஆச்சு சார், கெட்-அப் சேஞ்சா ? ஒரு மீனவர், மீனை தூக்கிட்டு நிக்கிற மாதிரி ஒரு அழகனா படத்தை புரபைலுக்கு வச்சு இருந்தீங்களே அது எங்கே ?
தமிழ்லில் பார்கையில் உங்க பேரு ரொம்ப அழகா இருக்கு !!
பதிவர்கள் மேல் அப்படி என்ன கோபம் !! நீங்களும் பதிவர் தானே !! எங்க உங்க பதிவுகள் ?? புரொபைலை மூடிடீங்களே ஏங்க ??
டோண்டு சார்,
இதோ என்னுடைய வலை தள முகவரி:
தமிழ் காமிக்ஸ் உலகம்
//காரை செல்பேசி மூலம் பேசி வரவழைத்தேன்//
பெரிய ஆளு சார் நீங்க. டிரைவர் இல்லாமே புது டெக்னாலஜிய பயன்படுத்தி காரை இயக்குறீங்க போல :-)
பகிர்வுக்கு நன்றி சார்.நேற்று ஏன் கேணிக்கு வரல. தங்கள் வ்ருகையை எதிர்பார்த்தேன்.
காரை பீச்லே பார்க்கு பண்ண ஏன் விடுறா போலீசு?
அவாள் கார்னா தனி மதிப்பா?
இதிலே ஏதோ சதி இருக்கு.
//ஜோ அமலன் பன்னாண்டோ மாதிரி ஆட்கள் யாரும் கலந்துரையாடல்களுக்கு வருவதில்லையா ?
//
அந்த பன்னாண்டோ வந்தா நாறும். அது நேரா காசிமேட்ட்லெயிருந்து மீன் பாடில வரும். பதிவர் உலகமே மேட்டுக்குடு சமாச்சாரம்தானே. அல்லாரும் எந்திச்சு ஓடிடிவா.
ராகவன் கோபாலகிருஸ்ணா கபேக்கு போயிடுவா. அங்க காப்பி நன்னாயிருக்கு பேஷ்...பேஷ்.இன்னொரு கிருஸ்ணா கபே. அன்கேயும் நன்னாயிருக்கும். நல்ல டிகாசன் காப்பிதான் போடுவா. என்னைக்கண்டாலே அவாளுக்குத்தெரியும்.
இப்போயிருக்கா அந்த கடைகள். கோயிலாண்ட. இல்லெ மார்வாடி விழுங்கிட்டனா இராகவன்?
காலை, மாலை வேளைகளில் காபி குடித்த நாட்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை.
“... பழங்கதையாய்க் கனவாய்
மெல்ல போனதுவே”
- பட்டினத்துப்பிள்ளை
>>அதற்குள் போலீசாரும் வந்து நாங்கள் புல்வெளியில் அமரலாகாது என விரட்டிவிட ...
எழுத்துச் சுதந்திரத்திற்க்கு கடற்கரையிலும் 'தடாவா'?
இனிவரும் பதிவர் சந்திப்புகளுக்கு ஒரு விண்ணப்பம்:
கேம்கார்டர் பயன்படுத்தி ரெகார்ட் செய்து அந்த கோப்பினையும் பதிவுடன் இணைத்து விட்டால் சந்திப்பில் வர இயலாத பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தீபக் வாசுதேவன்!
/காம்கார்டர் வைத்து....!/
இப்போது லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்கிறார்களே அந்த ரேஞ்சுக்கு இருக்கும்!
பரவாயில்லையா?
:) :)
Post a Comment