ஸ்டாலின் அழகிரி விவகாரம்
மேலே உள்ள கார்ட்டூன் 14.04.2010 தேதியிட்டு ஏழாம் தேதிக்கே கடைகளுக்கு வந்து விட்ட துக்ளக் பத்திரிகையின் அட்டைப்பட கார்ட்டூன். அதில் விஷயம் இருப்பது போலத்தான் எனக்கு படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, இந்திரா காந்தி ஆகியோரிடம் ஒரு பொதுத் தன்மை உண்டு. கட்சியை விட தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம்தான் அது. தனது கட்சியின் அடுத்த மட்டத் தலைவர்களுக்கிடையே தேவைக்கதிகமின்றி ஒற்றுமை வந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவர்களுக்கு முக்கியம். மகாபாரதத்தில் கூறப்படும் கணிக நீதியை ஏறக்குறைய மாற்றமேயின்றி அப்படியே பாவிப்பவ்ரகள் அவர்கள். அந்த நீதியின் சில அம்சங்கள் இதோ.
தண்டனை வழங்க எப்போதும் தயாராக இருக்கும் அரசனைக் கண்டு குடிமக்கள் அஞ்சுவார்கள். அதே போல எதிரிகளை ஒழிப்பதில் தாட்சண்யமேயின்றி நடந்து கொள்ள வேண்டும். எதிரி முழுமையாக அழிக்கப்படவேண்டும். எதிரி மிக பலவானாக இருந்தால் சமயம் பார்த்து அவனை கொல்ல வேண்டும். அதற்கு சாம, தான, பேத, தண்ட முறைகளை முறையாக பிரயோகிக்க வேண்டும். அம்முறையில் எதிரியை அழித்த பிறகு, அவர்கள் சாவுக்கு வருந்துவது போன்ற பாவனை செய்ய வேண்டும். அம்மாதிரி செய்தால் எதிரியின் நண்பர்கள் இவன் பக்கமே இருந்து விடுவார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எதிரிகள் என்பது உறவினர்களையும் சேர்த்து, உள் எதிரிகளையும் குறிக்கும். ஆக மனிதாபிமானம் என்பதை சுத்தமாக கண்பித்தலே கூடாது. இந்த ரீதியிலேயே இந்த கணிக நீதி கூறிக்கொண்டு செல்கிறது.
மேலோட்டமாக பார்க்கும்போது இவை அக்கிரமமாகத் தோன்றினாலும் பல நேரங்களில் அவை இன்றியமையானவை கூட. அதே கணிக நீதியானது சம்பந்தப்பட்ட அரசன் பிரஜைகளின் நலனுக்கு எந்த கெடுதலும் செய்யக்கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளது. மேலே சொன்ன செயல்பாடுகள் அரசவையில் உள்ளவர்களது பவர் பாலிடிக்ஸை கையாளத்தான் பயன்படுதல் வேண்டும்.
ஆனால் நம்மூர் தலைவர்கள் கணிகநீதியை பாவிக்கும்போது கொடுக்கும் முதல் காவு நாட்டின் நலனே. அந்த விஷயத்தில் கணிக நீதியையும் சரியாக செயல்படுத்தவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.
இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியானதும் செய்த முதல் காரியம் மாநிலங்களில் உள்ள உள்ளூர் தலைவர்களின் செல்வாக்கை அழித்ததே. முதல் இலக்கு காமராஜ்தான். அவரிடமிருந்து ஆரம்பித்து பல உள்ளூர் தலைவர்கள் செல்லாக்காசாக்கப்பட்டனர். இப்போது நிலைமை என்னவென்றால் எல்லாவற்றுக்கும் காங்கிரஸ்காரர்கள் டில்லியின் ஆணைக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இப்போது அழகிரி ஸ்டாலின் விவகாரத்தை கருணாநிதி எவ்வாறு கையாளுகிறார் என்பதை பார்ப்போம். அவரது பிரச்சினைகளுக்கு மூலகாரணமே அவரிடம் குவிந்த அபரிதமான செல்வமும் அரசியல் அதிகாரமும். கூடவே எல்லாவற்றையும் தனது வாரிசுகளுக்கே விட்டுச் செல்லவேண்டும் என்ற பேராசை வேறு. இதில் கட்சி நலன் என்பது கவனிக்கப்படவே இல்லை. ஆனால் அதே சமயம் தான் செயலாக இருக்கும்போதே அவற்றை வாரிசுகளுக்கு பங்கீடு செய்யவும் மனமில்லை. ஒரு பெண்டுலம் ரேஞ்சில் அவரது எண்ணங்கள் செல்கின்றன என நினைக்கிறேன். கணிக நீதியை அவர் வாரிசுகளுக்கிடையேயும் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டது போலத்தான் தோற்றம் வருகிறது.
மேலே குறிப்பிட்ட துக்ளக் இதழில் ஒரு கேள்வி பதிலைப் பார்க்கலாம்.
கேள்வி: “நீங்கள் எல்லாம் ஸ்டாலினை துணைமுதல்வர் என பாராட்டுகிறீர்கள். ஆனால் எனக்குத் துணையாக இருக்கின்ற அமைச்சர் என்றுதான் கருதுகிறேன்” - என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பற்றி?
பதில்: அவர் இப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசினால் என்னதான் செய்வது? இவரேதான் ஸ்டாலினை “துணை முதல்வர்” என அறிவித்தார். இவரேதான் இப்போது இப்படிப் பேசுகிறார்! வெற்றிகளைப் பெற்று வருகிற கட்சி என்பதால், தன்னைக் கேட்பார் இல்லை என்பது அவருக்குத் தெரிகிறது. இஷ்டத்திற்குப் பேசுகிறார். பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
அதே சமயம், எல்லா சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எழுதித் தந்துவிட்டு பிறகு சந்தியில் நின்றவர்கள் அனேகம். உதாரணத்துக்கு விசுவின் பல படங்கள் அதை தெளிவாகக் காட்டுகின்றன. அவற்றையெல்லாம் இவர் பார்த்திருக்க வேண்டும் அல்லது இவரே பல நிகழ்ச்சிகளை அந்த ரேஞ்சில் பார்த்திருக்க வேண்டும். சினிமா கதாசிரியர் அல்லவா, பார்க்காமலா இருந்திருப்பார்? நானே கூட இதையும் ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேனே.
சிலசமயம் இப்படி கூட சிந்தனைகள் போகலாம். “நான் இருக்கும்வரை அனுபவித்துவிட்டு போகிறேன். இருக்கவே இருக்கின்றன மானாட மயிலாட நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள், விருதுகள் வாங்குதல்/அளித்தல். என் காலம் முடிந்த பிறகு என்ன ஆனாலும் அது என்னை பாதிக்கவா போகிறது”?
ஆனால் அவரது சிந்தனைகளின் விளைவுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஏற்கனவேயே ஜெயலலிதா இம்மாதிரி சகட்டுமேனிக்கு கணிக நீதியை பாவித்ததால் அதிமுக கிட்டத்தட்ட அழும் ரேஞ்சுக்கு வந்து விட்டது. இப்போது திமுகவின் முறை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இரண்டுமே தற்காலத்தில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகள். மாற்று என எக்கட்சியை பார்ப்பது? கண்டிப்பாக மதிமுகாவோ, பாமகாவோ அல்லது விஜயகாந்தின் கட்சியோ இல்லை. பாஜகா ஏற்கனவேயே தமிழகத்தில் பூட்ட கேஸ். காங்கிரசுக்கோ எதிரிகள் கட்சியின் உள்ளேயே இருக்கின்றனர்.
இப்போது கூட கருணாநிதி சுதாரித்துக் கொள்ளாவிட்டால் அவருக்கு பிறகு கட்சி நிச்சயம் உடைய வாய்ப்புகள் அதிகமே. ஆனால் செய்வாரா?
அன்புடன்,
டோண்டு ராகவ
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
25 comments:
DMK thondarkal...poor thing...still trust their thalaivar
நவீன அவுரங்கசிப்
சரித்தரம் திரும்புகிறது.
விதி ஆரங்கசீபுக்கு ஆசி வழங்கியது.
டெல்லியை கைப்பற்றியவுடனேயே
ஷாஜகானை சிறைபிடித்தார்.
ஷாஜகான் எவ்வளவோ மன்றாடியும் அவரது ஒவ்வொரு வேண்டுதலையும் நிராகரித்தார்.
தனது மற்ற இரு சகோதரர்களான ஷா ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீராக முடிசூட்டிக்கொண்டார்
//ஆனால் அதே சமயம் தான் செயலாக இருக்கும்போதே அவற்றை வாரிசுகளுக்கு பங்கீடு செய்யவும் மனமில்லை.//
:)
அவரு அழகிரியை கிளப்பிவிடவில்லை என்றால் சோ இராமசாமி ஸ்டாலினுக்கு முதல்வர் பகுதி வகிக்க தகுதி இருக்கிறது என்று சொல்லப் போகிறாரா என்ன ?
சா'நக்கிய'தனம் அதிகாரத்திற்கு வரும் எல்லோராலும் முடியும். நீங்க சோ இராமசாமிதான் சாநக்கியர் என்று நினைத்துக் கொண்டிருங்கள்.
அடுத்தவாரிசு யார் என்பதை எதிரிகள் கைகாட்டினால் எதிர்ப்புகள் இல்லாது கூடுதல் பலமாக அமையும் என்பதை கருணாநிதி நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
//அவரு அழகிரியை கிளப்பிவிடவில்லை என்றால் சோ இராமசாமி ஸ்டாலினுக்கு முதல்வர் பகுதி வகிக்க தகுதி இருக்கிறது என்று
சொல்லப் போகிறாரா என்ன ?//
ஆம், சொல்லியிருக்கிறார், பல முறை.
ஸ்டாலின், கலைஞரின் மகன் என்ற கூடுதல் தகுதியை தவிர அவர் மற்ற எந்த எந்த விதத்திலும் தகுதியிலும் குறைந்தவரல்ல. கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சில சலுகைகள் அவருக்கு கிடைத்து இருக்கலாம், ஆனால் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் அல்லது இவருக்கு போய் இந்த பதவியா! என்று கேட்கும் அளவிற்கு இல்லாமல் அந்த பதவிக்கு தகுதியானவராகவே இருந்துள்ளார். கட்சியில் உள்ள மற்ற முக்கிய தலைவர்களுக்கு எவ்வாறு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதை போன்றே இவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
ஸ்டாலின் என்பவர் எதோ கடந்த ஐந்து வருடத்தில் கட்சியில் இணைந்து திடீரென இந்த பதவிக்கு வந்து விடவில்லை. 1970 களில் இருந்தே கட்சி பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு உள்ளார். கட்சி நடத்திய மிசா சட்டம் உட்பட போராட்டங்களில் கலந்து சிறைக்கு சென்றுள்ளார்.
கலைஞர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு இருக்கும் பலரும் ஸ்டாலின் மீது குற்றம் சாட்ட காரணத்தை தான் தேட வேண்டும்.
ஆகவே கலைஞரை எதிர்த்த "சோ" அவர்களே ஸ்டாலின் முதல்வர் ஆவதை வரவேற்றவர், ஸ்டாலினுக்கு முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று "துக்ளக்" பத்திரிகையில் கூறியவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
14.04.2010 தேதியிட்டு ஏழாம் தேதிக்கே
முதலில் எல்லாம் அந்த தேதிக்கு மட்டுமே வரும் இப்போது மாற்றிவிட்டார்களா?
//இப்போது கூட கருணாநிதி சுதாரித்துக் கொள்ளாவிட்டால் அவருக்கு பிறகு கட்சி நிச்சயம் உடைய வாய்ப்புகள் அதிகமே. ஆனால் செய்வாரா?//
தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது, இனி என்ன சுதாரித்தாலும் கட்சி உடைவது நிச்சயம்! அதே நேரம் சோ, தனது மேட்டிமைதனத்தை காட்ட இதை பயன்படுத்தி கொள்வது ஏன் என்று தான் தெரியவில்லை!, ஒருவேளை ஸ்டாலினுக்கும், கருணாநிதிக்கும் சண்டை மூட்டி விட எண்ணுகிறாரோ!?
@வால்பையன்
இதில் என்ன மேட்டிமைத்தனம் கண்டீர்கள்? சோ ஒரு பத்திரிகையாசிரியர். அதுவும் தமிழகத்தில் உள்ள சராசரி பத்திரிகையாளர்களைப் போல கவர்களை பெற செய்தி எழுதுவதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தமிழகத்தில் உள்ள சராசரி பத்திரிகையாளர்களைப் போல கவர்களை பெற செய்தி எழுதுவதில்லை//
NO COVERS .. TRUE but only TV SLOTS..
//ஆகவே கலைஞரை எதிர்த்த "சோ" அவர்களே ஸ்டாலின் முதல்வர் //
we know how CHO supported JJ , and then DMK thro Rajini, Again J .. !
CHO cant critize any politician
//we know how CHO supported JJ , and then DMK thro Rajini, Again J .. !
CHO cant critize any politician//
ஒவ்வொரு சமயத்திலும் சோ அரசியல் நிலவரத்தை தெளிவாக ஆராய்ந்து எது தேவையோ அதை ஆதரிப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல கருத்துள்ள கட்டுரை.
மேலும், பின்னூட்டங்களுக்கு நீங்கள் எழுது மறுப்பு/பதில் ஆகியவையும், நன்றாக உள்ளது.
கருணாநிதி யா கிண்டல் பண்ணி கார்டூன் போடறது சோவுக்கு அல்வா சாப்டர மாதிரி ஆச்சே .
கணிக நீதியை - கேட்கவே நல்லா இல்லை இந்த நீதி .. இப்படி பட்ட நீதிகள் தன் சாஸ்திரம் , வேதம் .. இத்யாதி இத்யாதி எதோ பெரிய விஷயம் மாதிரி கட்டி விட்டிருகாங்க.. !
//மேலோட்டமாக பார்க்கும்போது இவை அக்கிரமமாகத்// -- மேலோட்டம், கிழ்ஓட்டம் எப்படி பார்த்தாலும் சாஸ்திரம் , வேதம், கம்பம் , வியாசர் , பிள்ளையார் எழுதிய அணைத்து ரீல் கதைகளில் வருவது அக்கிரமமாக தன் இருக்கிறது.. என்ன செய்யா.
சோ - ஆடு நெனையுதுனு ஓநாய் அழுதுச்சாம்
//சோ ஒரு பத்திரிகையாசிரியர்//
இதையும் தாண்டி சோ ராமசாமி க்கு பல முகங்கள் உண்டு டோண்டு சார்.. !
பட அது உங்களுக்கு தெரிஞ்சிருக்க நியாயம் இல்லை :)
கேள்வி: துக்ளக் விலையேற்றத்தைப்பற்றிய அறிவிப்பிலும், தாங்கள் குழம்பியிருப்பதாக எனது நண்பர்கள் சிலர் கூறுகிறார்களே?
பதில்: குழப்புவது என்று பிறப்புரிமை. (துக்ளக், 1.12.1987, பக்கம் 9)
தனக்குபிறகு கட்சி எக்கேடு கெட்டு போனாலும் அதைப்பற்றி மு.க.விற்கு கவலை இல்லை.அதே சமயம் அழகிரியை எதிர்த்து ஆட்சிக்கு வருவதும் இயலாத காரியம்.(ஸ்டாலினுக்கு அந்த அளவு "சாமர்த்தியம்" போறாது).
மற்றொரு பக்கம் "திண்ணை" எப்போ காலியாகும் ன்னு wait பண்ற அம்மா வேறு!
ஆக மொத்தம் குழப்பம்தான் !!
இப்போதைக்கு இது பார்ப்பனர் சதி என்று அந்தக் கார்ட்டூனை வாயார வைது பிரச்சினையை ஓரளவு திசை திருப்பலாம்.நாளை முரசொலியில் அதுதான் வரும்!
தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு வேளை நல்ல காலம் பிறக்குமானால், கருணாநிதிக்கு பிறகு, சொத்து சண்டையில் திருடர்கள் முன்னேற்ற கழகம், அதாங்க தி.மு.க., சிக்கி, சின்னபின்னமாகிவிடலாம். யார் கண்டது? ஏற்கெனவே, ஜெயலலிதா அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகத்தை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணி வைத்திருக்கிறார். இரு கழகங்களும், பஸ்மாசுரன் சாபம் போல, தாங்களே தங்கள் தலையில் கை வைத்து எரிந்து போகும் நாள், சாதாரண தமிழ் மக்கள் அனைவரும் உண்மையிலேயே மகிழ்வுறும் நாளாக இருக்கும்.
பின்குறிப்பு: "சாதாரண" தமிழ் மக்கள் என்று கூறிவிட்டதால், it goes without saying, பெரும்பாலான தமிழ் வலைப்பதிவாளர்கள் இதில அடங்க மாட்டார்கள். அது சரி, தமிழ் வலைப்பதிவாளர்கள் என்றாலே "அடங்க மாட்டார்கள்" என்பது தெரியாதா என்று கேட்காதீர்கள்.
//அவரு அழகிரியை கிளப்பிவிடவில்லை என்றால் சோ இராமசாமி ஸ்டாலினுக்கு முதல்வர் பகுதி வகிக்க தகுதி இருக்கிறது என்று சொல்லப் போகிறாரா என்ன //
நீங்கள் இப்படி கேட்டு இருக்கக்கூடாது கோவி. அப்படியே சோ சொன்னாலும் அதை நான் சுயநினைவோடு படிப்பேனா என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரை / துக்ளக்கில் பலமுறை ஸ்டாலினை வாரிசு அரசியலாக பார்க்கக்கூடாது என்று எழுதப்பட்டுள்ளது. நான் சில வருடங்களாக துக்ளக் படிப்பதில்லை. நீங்கள் படித்ததே இல்லை என்று நினைக்கிறேன்.
//
நான் சில வருடங்களாக துக்ளக் படிப்பதில்லை. நீங்கள் படித்ததே இல்லை என்று நினைக்கிறேன்.
//
அவர்களெல்லாம் எதுவுமே படிப்பதில்லை. ஆனால் எல்லாம் படித்துக் கரைத்துக் குடித்து மோண்டது போலேயே பேசுவார்கள். இதெல்லாம் அவர் வலைப்பதிவையும் அவருக்கு சொம்பு தூக்கும் கூட்டம் எழுதும் கமெண்டுகளைப் படித்தாலே தெரியும்.
அன்பான நண்பர் திரு மணிகண்டன்,
சார்,நீங்க யாரைப்பார்த்து படிக்கவில்லையா என்று கேட்டீர்கள்? இது ஞாயமா?? இது தர்மமா??? அவரை பொறுத்த வரையில் வள்ளுவரும் அவருமே ஒன்றுதான்!!!
இதுல நீங்க வந்து.........
ரொம்ப வாய விட்டீங்கனா பாருங்க சார், நாளைக்கே ஒரு பதிவப்போடுவார்......
"தொடர்ந்து படித்தால் அறிவு வருமா, இல்லை தொடர்ந்து பிதற்றினால் அறிவு வருமா என்று!!!"
யாராவது ஏதாவது எழுதக்கூடாதே, உடனே வந்துடுவாரு அண்ணன் கருத்து சொல்ல!!! சரி சரி நமக்கு ஏன் வம்பு......
நன்றி
இது வாரிசு அரசியலில் இரண்டாம் பாகம். முதல் பாகம் சில ஆண்டுகளுக்கு முன் மதுரை தினகரன் அலுவலகத்தில் அரங்கேறியது.
கட்சித் தலைமை இப்போதே சுதாரித்து எழுந்து தவறுகளை திருத்திக் கொண்டு, ஓட்டைகளை நிரப்ப ஆவண செய்ய வேண்டும். இல்லையெனில் உதய சூரியன் அஸ்தமன சூரியன் ஆவதை விண்ணின் சூரியனும் தடுக்க முடியாது.
"தீர்க்கதரிசணம்"
கட்சித் தலைவர் போட்டி ஜனநாயக முறைப்படி நடக்காததாலும், மூத்த தலைவர்கள் சரியான முறையில் நடத்தப்படாததாலும், மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்ய வேண்டுமென்ற விருப்பத்தாலும்.. கட்சியிலிருந்து விலகி புதுக் கட்சி தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமானவர்களை கலந்தாலோசித்து.. "க.தி.மு.க." எனப் பெயர் வைத்துள்ளோம்.
இல்லை.. இல்லை. நான் யாரையும் வற்புறுத்தவில்லை. அவர்களாகவே தான் கட்சியில் இணைந்துள்ளனர். இது மக்களுக்கும் தெரியும்.
:P
கோவி கண்ணன் என்ன கமெண்டு போட்டாலும், அனானியாக வந்து அவர் பதிவில் மாற்றுக்கருத்தைச்சொல்பவரைத் திட்ட மாட்டார். ஹானஸ்ட்.
எல்லாமே தன் சொந்தப்பெயரிலும் பட்த்தையும் போட்டுத்தான்.
எல்லாரும் பகாசுரனைப்போல் தலையில் கைவைத்து அழிந்தவுடன் ஆர்தான் முதலமைச்சர்?
ஸ்டாலினைப்பற்றி சோவின் கருத்தும் சோவின் இரசிகர் டோண்டுவின் கருத்தும் சரியே. அவர்க்ளுக்க் என்ன மோட்டிவ் இருந்தாலும் கருத்தைத்தான் பார்க்கவேண்டும்.
ஸ்டாலினுக்கு பொதுமக்களிடையே நல்ல பெயர்.
கருணாநிதிக்கு பிறகு தமிழ்நாட்டை ஆளும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டு என்பது உண்மை...
ஏனெனில், அவர் திடீர் அரசியல்வாதி அல்ல... பல காலமாகவே கட்சியின் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்..
//கோவி கண்ணன் என்ன கமெண்டு போட்டாலும், அனானியாக வந்து அவர் பதிவில் மாற்றுக்கருத்தைச்சொல்பவரைத் திட்ட மாட்டார். ஹானஸ்ட்.//
அடப்பாவமே! , இம்புட்டு நல்லவரா நீங்க!. கலசலிங்கம் இன்னும் இவரை நீ கவனிக்கலையாப்பா! நல்லா கவனிச்சி இவருக்கு விவரத்தை எடுத்துச் சொல்லப்பா!.
Post a Comment