சாரி, எனக்கு பொய் சொல்ல வராது. எஸ்ராவின் உபபாண்டவத்தை படித்து விட்டு நொந்து போனேன். பேசாமல் நூலகத்தில் இரவல் வாங்கி படித்து விட்டு திரும்பத் தந்திருக்க வேண்டியது, தெரியாமல் விலை கொடுத்து வாங்கியதில் பணம் 180 ரூபாய் தண்டம். நல்ல வேளையாக டிஸ்கவரி புக் பேலசில் 10% கழிவு கொடுத்தனர், இல்லாவிட்டால் 200 ரூபாய்கள் அல்லவா பழுத்திருக்கும்?
மகாபாரதத்துடன் அதை கம்பேர் செய்யக் கூடாது என்கிறார்கள். ஆனால் எப்படி செய்யாமல் இருக்க முடியும்? மூல நூலிலிருந்துதானே எடுத்து இவர் தனது வெர்ஷனை தந்திருக்கிறார்? ஆகவே மலை போன்ற வியாச மகாபாரடத்துக்கும் மடு போன்ற உபபாண்டவத்தையும் கம்பேர் செய்வதை தவிர்க்க இயலாது.
வியாச பாரதத்தில் துரியன், சகுனி, துசாசனன், கர்ணன் ஆகியோரை தீய சக்திகள் பக்கம் இருப்பதாகக் காட்டியிருந்தாலும் வியாசர் அந்தந்த பாத்திரங்களுக்குறிய பெருமைகளையும் கூறாமல் இல்லை. கிருஷ்ணர், அருச்சுனன், யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் நல்ல சக்திகள் தரப்பில் இருப்பதாகக் காட்டினாலும் அவர்கள் தவறுகளையும் சாடாமல் இல்லை. மொத்தத்தில் ஒரு சமநிலை நிறைந்த நாவல். மனிதன் முழுக்க முழுக்க நல்லவனும் இல்லை, முழுக்க முழுக்க கெட்டவனும் இல்லை இரண்டும் கலந்தவனே அவன், அதுவும் ஒவ்வொரு மனிதனிலும் நன்மை தீமைகளின் கலவைகளின் விகிதங்கள் மாறிக் கொண்டே வந்துள்ளன என்றும், பிறகு எப்படி ஒட்டு மொத்தமாக ஒருவனை நல்லவனா அல்லது தீயவனா என்று கூறுவது என்பதையும் வியாசர் அழகாகக் கையாண்டுள்ளார்.
ஆனால் எஸ்ரா அவர்கள் அப்படியெல்லாம் மெனக்கெடவேயில்லை. துரியன் தரப்பை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் மட்டுமே அவருக்கு இருந்திருக்கிறது போன்ற தோற்றத்தை அவர் தருகிறார். அதை ஆரம்பத்திலிருந்தே செயலாக்குகிறார். அவரை பொருத்தவரை துரியன் செய்த ஒரே தவறு பாஞ்சாலியை துகிலுரித்தது மட்டுமே எனவும், அதுவும் பாஞ்சாலி அவனைப் பார்த்து கேலியாக சிரித்ததாலுமேயே என்று கூறுவதுபோலத்தான் அவரது வார்த்தைகள் செல்கின்றன.
வியாச பாரதத்தில் பாண்டவர்களின் ஒற்றுமையைப் போலவே கௌரவர்களுக்குள்ளேயும் இருக்கும் ஒற்றுமையும் எடுத்து கூறப்படுகிறது. ஆனால் எஸ்ரா அவர்களோ பாண்டவர்களுக்குள் ஒற்றுமையில்லாதது போன்ற தோற்றத்தைத் தர முயற்சிப்பதாகவே எனக்குப் படுகிறது. அரக்கு மாளிகையில் குந்தியும் பாண்டவர்களும் தப்பிக்கையில் வேடுவப்பெண்ணும் அவளது ஐந்து புத்திரர்களும் சகுனியின் கையாள் புரோசனனுடன் சேர்ந்து தீயில் மடிகின்றனர். அதற்கு குந்தியை குறைசொல்லும் எஸ்ரா சகுனி மற்றும் துரியனின் ஒரிஜினல் துரோகம் குறித்து இடிபோன்ற மௌனத்தையே தருகிறார். துரோணரை அசுவத்தாமன் என்ற யானை புரளி மூலம் கொன்றதை பேசும் அவர் துரோணர் அபிமன்யுவை கொன்றது குறித்து ஒன்றும் பேசுவதாகத் தெரியவில்லை. அதை போர் யுக்தி என்று கூறினாலும் கூறுவார் போல.
இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றை மீண்டும் மீண்டும் கூற வேண்டும். வியாச பாரதத்தையும் எஸ்ராவின் உபபாண்டவத்தையும் ஒப்பிடக் கூட இயலாது. அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
11 comments:
I should appreciate your honest comments.
Even though we all like Es Raa, we should review his writings in a honest manner. That way you are perfectly correct.
/'உப பாண்டவம் ' பற்றி என்ன எண்ணுகிறீர்கள் என்றார். அது முதிர்ச்சியற்ற ஒரு முயற்சி மட்டுமே என்றார் ரமேஷ். தனக்கும் அவ்வாறு தோன்றியதாகவும் ரமேஷ் என்ன சொல்கிறார் என்று அறியவே கேட்டதாகவும் திருஞானசம்பந்தம் சொன்னார். ரமேஷ் தன் கருத்துக்கு ஆதரவாகச் சொன்ன காரணங்கள் கீழ்கண்டவை. ஒன்று: ஒரு நாவல் அடிப்படையில் விசேஷமான ஒரு மொழிப்பிராந்தியம். உப பாண்டவம் முதிர்ச்சியில்லாத செயற்கையான மொழியில் அமைந்துள்ளது. பெளராணிக மரபிலும் நாட்டார் மரபிலும் மகாபாரதம் சில குறிப்பிட்ட வகை மொழிப் பதிவுகளை உண்டு பண்ணியுள்ளது அதற்கும் உபபாண்டவத்திற்கும் தொடர்பே இல்லை. ஸ்த்ரீ, கதாஸ்த்ரீகள் போன்ற சொல்லாட்சிகளை நெல்லை/கோயில்பட்டிகாரர்கள் பயன்படுத்த தடையே விதிக்க வேண்டும். இரண்டு: பொதுவாக ஐதீக புராணங்களை புதிய காலத்திற்கு ஏற்ப விரிவுபடுத்துவதே இலக்கியச் சவாலாக உள்ளது. உப பாண்டவம் மகாபாரதத்தில் உள்ளவற்றையே சுருக்கிச் சொல்கிறது. மூன்று: சில சம்பவங்களைச் சொல்லிவிட்டு மிகச் செயற்கையான நீதியோ கவித்துவ உபதேசமோ செய்து முடிகிறது. மகாபாரதத்தின் பல்வேறு தத்துவ உள்ளோட்டங்கள் கணக்கில் கொள்ளப்படவே இல்லை. நான்கு மகாபாரதம் கதை கூறல் முறைகளின் பெருந்தொகுப்பு, கலைக்களஞ்சியம் போல. அவற்றையெல்லாம் ஒற்றைக் கதைகூறலுக்குள் எளிமைப்படுத்துகிறது இந்நூல். இவற்றை ஏற்றுக்கொண்ட திருஞானசம்பந்தம் இத்துடன் இந்நாவல் தனித்தனி உதிரி சித்தரிப்புகளாக உள்ளது. இவற்றைத் தொகுக்கக் கூடிய அணுகுமுறையோ, கவித்துவமோ, கட்டுமானமோ கூட இல்லாமலிருக்கிறது என்றார்./
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60102113&format=html
திண்ணையில் ஜெயமோகன் 2001 இல் எழுதியது! நீங்கள் ஒன்பது வருஷம் லேட்!
அய்யா...உங்கள் கருத்து விமரிசனம் எல்லாம் சரி...ஆனால் அந்த ஆரம்பம்.."சாரி, எனக்கு பொய் சொல்ல வராது." என்று....
எனக்கு கூட இந்த மாதிரி படிச்சா பொய் சொல்ல வராது.....ஹஹ்ஹஹ்ஹா...நல்லா சிரிச்சேன்....
Hi Dondu,
Congrats!
Your story titled 'உபபாண்டவம் - மிகப்பெரிய ஏமாற்றம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th April 2010 01:42:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/223933
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Thanks Tamilish.
Regards,
Dondu N. Raghavan
//சாரி, எனக்கு பொய் சொல்ல வராது.//
Then, answer this question without deleting this comment.
What is your honest opinion on Rudhran?
டோண்டு சார்
உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.
நான் ஒரே மூச்சில் படித்த நாவல் அது. புதிய முறையில் கதை சொன்ன விதம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் இயல்பயையும் மாறுபட்ட கோணத்தில் நமக்குக் காட்டிய உத்தி, இறைதன்மை அற்று, இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று காட்டிய சம்பவங்கள் - Really i was stunned by this novel.
Good analysis
People like S. R. have to show their intellectual side by making a new ,dishonest version of epics.
I'd say any "remix "attempt shows a lack of originality/creativity.
You may read books in other languages-does anyone write different versions of Homer's epics?
This joke happen only with our epics
எனக்கும் உபபாண்டவம் மிக ஏமாற்றமளித்தது. ஒரு கதையை ஒருவர் ஒருவர் மெலும் விரித்து செல்லலாம் அல்லது அதில் கோடிட்டுக்காட்டப்பட்டதை மேற்கொண்டு விளக்க முற்படலாம். ஆனால் அக்கதையை போக்கை திருப்பி அது சொல்லவந்த கருத்துக்கு முரணாக மாற்றிவிடுதல் அக்கதைக்கும் அக் கதையை எழுதியவருக்கும் அக்கதையை கொண்டாடிவரும் சமூகத்திற்கும் செய்யும் துரோகம் ஆகும். குந்தியின் முதற்குழந்தை பிறப்பை ஒருவர் குந்தியின் அறியாத வயதில் நடந்த பாலியல் தவறு என்று ஒருவர் விரித்து எழுதினால் கூட அது கதையின் போக்கை மாற்றாது. ஆனால் குந்தி பாண்டுவிற்கு தெரியாமல் கள்ள உறவு வைத்திருந்தாள் என எழுதினால் அது கதைக்குச் செய்யும் அநீதியாகும். உபபாண்டவத்தில் பாண்டவர் அனைவரும் உள்ளத்தில் பகையை மறைத்து பொறாமையை கொண்டிருப்பதாய் காண்பிப்பது அக்கதையின் ஓட்டத்திற்கு எதிர்மறையானதாகும். இது திராவிடர்கழகத்தினர் இராமனை, வில்லனாகவும், இராவணனை தவறேதும் செய்யாத நல்லவனாகவும், மிகச் சிறந்த வீரன் இரணியனை அவன் மகனிடம் பெண்களைக்காட்டி மயக்கி சிங்கவேடம் போட்டு வந்து ஆரியர்கள் கொன்றதாகவும் காட்டும் இலக்கியமோசடியைப்போன்று உள்ளது. அந்த அளவிற்கான மோசடியாக நான் இந்த நாவலை கருதவில்லை. இருப்பினும் இந்நாவல் ம்காபாரத்த்திற்கு அநீதி இழைப்பதாகவே கருதுகிறேன்.
அவிங்களும் ஹோமரில் இல்லியட் போன்றவற்றை அடித்தளமாக வைத்து எழுதுகிறார்கள். விக்கிபீடியாவைப் பார்க்கவும்.
இதே கருத்து தான் என்னுடையதும்.
இந்த நாவலை படித்து, இதை போன்ற ஒரு கருத்தை தான் எஸ்ராவுக்கு மடல் செய்தேன். திருப்பி வாங்கி கட்டிக் கொண்டேன்.
இந்த நாவலின் நடை படிப்பதற்கு சிரமமாகவும், அதே சமயம் அதிலுள்ள பாத்திரங்களை இந்த அளவு மாறுபட்ட கோனத்தில் விவரித்திருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு, நான் என்னவோ அவரையும் அவருடைய வாசகர்களையும் கேவலப்படுத்தியதாக கடிந்து கொண்டார். இந்த நாவல் 3 மொழிகளில் மொழி பெயற்க பட்டதாகவும், இந்த நாவலை பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பதாகவும், இதை போன்ற நாவலை எனக்கு படிக்க தெரியவில்லை எனவும் பதில் வந்தது. :(
அவர் ஆனந்த விகடனில் எழுதும் அனுபவங்கள் மற்றும் உலக சினிமா விமர்சனம் போலவே மிக செயற்கையான மொழி , சிறுகதைகளில் அவர் ஸ்டார், நாவல் எல்லாம் சிறுபிள்ளை விவசாயம்.
( படத்தின் கதையை அப்படியே சொல்வது விமர்சனமல்ல என யாராவது அவருக்கு சொன்னால் பரவாயில்லை).
Post a Comment