நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரது இந்தப் பதிவை சுட்டுகிறேன்.
அதிலிருந்து சில வரிகள்.
அடுத்து, ஒரு தாழ்மையான வேண்டுகோள்!
முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.
அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே
அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
இதுவரை சேகரித்த தொகையின் ஒரு பகுதி, அறுவை சிகிச்சை தள்ளிப் போன காரணத்தால், பரிசோதனைகளுக்கும், டயாலிஸிஸுக்கும் செலவாகி விட்டது. இருந்தும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கைவசமுள்ளது, நம்பிக்கை அளிக்கிறது. மேலும், இரண்டரை லட்சம் தேவை என்பதாலேயே இந்த வேண்டுகோள்.
எழுத்தாளர் பாராவின் மனம் நெகிழவைக்கும் இவ்விடுகையையும் வாசிக்கவும்.
முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :
ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
அன்புடன் பாலா - balaji_ammu@yahoo.com
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.
முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com
அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.
முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.
நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம்.
அன்புடன்
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
14 comments:
எவரும் வேண்டிக் கொள்ளாமலேயே, என்னுடைய பதிவில் முத்துராமனுக்காக உதவிக் கரங்களை எதிர்நோக்கும் குறிப்பைப் பதிவாக அல்லாமல், சைட் பாரில் நிரந்தரமான அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறேன்!
தேவைப் படும் வரை அந்த செய்தி, அங்கேயே இருக்கும்.
பதிவுகளால், இப்படி ஒரு நல்ல காரியத்தைத் தனியாகவும் கூட்டாகவும் செய்ய முடிகிறது என்பதில் கொஞ்சம் ஆறுதல்!
திரு முத்துராமன் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகளோடு..!
expecting your post about bloggers meet on 10 apr10
thanks for this post.
முதல் தடைவையாக உங்கள் தளம் வந்துள்ளேன். முதலில் ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துகள். அதேநேரம் முத்துராமன் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
1000க்கு(ம்) வாழ்த்துகள் !
திரு முத்துராமன் விரைவில் குணமடைய நல்வாழ்த்துகள்.
ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துகள்
முத்துராமன் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
//1000//
வாழ்த்துக்கள்
//இது பற்றி இன்றைய பதிவர் மீட்டிங்கில் பேசலாம் என்றிருக்கிறேன். //
//பதிவு எண் ஆயிரம் பிழைத்துக் கிடந்தால் பதிவர் மீட்டிங் பற்றி இருக்கும். //
;))
முத்துராமன் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனைகள்.
1000வது பதிவிற்கு வாழ்த்துக்கள் டோண்டு சார்...
ஒரு நல்ல விஷயத்திற்காக உங்களின் 1000வது பதிவை ஒதுக்கியது பாராட்டத்தக்கது...
சிறு துளி பெருவெள்ளம் என்பது போல், தோழமை அனைவரும் இணைந்து முயற்சித்தால், பெரிய அளவிலான உதவி முத்துராமனை சென்றடையும்...
முத்துராமன் விரைவில் குணமடைய உங்கள் ஆயிரம் கண்டிப்பாக உதவும்
!!!!!!!!!!
/ப்ளாக்கில் நுழைந்த பொழுதே கெட்டவார்த்தை மன்னன் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை பார்த்தவன் நான்,//
http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post_31.html
1000 போஸ்ட் கண்ட அபூர்வ சிந்தாமணி சார் நீங்க.....வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமுடன்.
>>ஆயிரமாவது பதிவு
வாழ்த்துக்கள்!
Post a Comment