தலைப்புக்கு பின்னால் வருகிறேன்.
ஜெயமோகன் தனது மகள் மங்கலம், கம்பனும் காமமும் - 6 என்னும் இடுகையில் இவ்வாறு எழுதுகிறார்.
பண்டைய கோயில்களை கூட்டுக்குடும்பமாகப் பார்த்துச்செல்பவர்களைக் கவனித்தால் சிற்பங்களுக்கு முன்னால் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் வேடிக்கையாக இருக்கும். குடும்பத்தலைவர்கள் விசித்திரமான கடுகடுப்புடன் விலகிச்செல்வார்கள். பெண்கள் அவசர அவசரமாக குழந்தைகளை ஏதாவது சொல்லி அதட்டுவார்கள். இளம்பெண்கள் கழுத்தை இறுக்கமாக வைத்துக்கொள்வார்கள். அழகர்கோயில் கோபுரச்சிற்பத்தின் முன்னாலிருந்து குழந்தைகளை அதிவேகமாக ‘பத்தி’க் கொண்டுசெல்லும் அப்பா அம்மாக்களை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறேன்.
என் வாசகர் ஒருவர் சஞ்சலத்துடன் ‘மத்தகம்’ ‘ஊமைச்செந்நாய்’ இரு கதைகளையும் அஜிதன் வாசித்தானா என்று கேட்டிருந்தார். ‘ஏன், யானை பற்றிய கதை என்றால் அவன் முதலியே வாசித்துவிடுவானே” என்றேன். அவருக்கு ஒரு மௌனம். பின்னர் ”பையன்களுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியான கதை இல்லையோ?” என்றார். நான் அதைவிட நேரடியாகவே பல விஷயங்களை அவனிடம் பேசுவதுண்டு என்றேன். அவர் மேலும் ஆழ்ந்த அமைதியை அடைந்தார்.
அவருக்கு மூச்சே நின்று போயிருக்குமாக இருக்கும். நிற்க.
நமது சங்க இலக்கியங்களில் கள்வியல் பற்றி தாராளமாகவும் வெளிப்படையாகவுமே பேசுகிறார்கள். திருக்குறள் காமத்துப்பால் சொல்லாத விஷயங்களா? ஆனால் ஒன்று கவனித்தீர்களா? காமத்துப்பாலை எனக்கு அறிந்து தமிழ்பாடங்களில் வைக்கவில்லை. நான் பி.யு.சி. வரை தமிழ் படித்திருக்கிறேன். ஒரு வகுப்பிலும் காமத்துப்பால் இல்லவே இல்லை.
சர்வசாதாரணமாக புழங்கிய காமம் பற்றிய இலக்கியங்களை பிற்காலத்து கண்ணோட்டத்தில் லென்ஸ் வைது கண்டித்தவர்களில் அண்ணாதுரையும் ஒருவர். அவரது கம்பரசத்தில் இவ்வாறு எழுதுகிறார்:
"வெண்ணிலா தன்னொளி பரப்பிற்று; இராமனுடைய தூயமனம் போலவா - தசரதனுடைய வெண்கொற்றக் குடைபோலவா - அல்ல, அல்ல, காமம் மிக்கு ஒழுகிற்று என்ன என்று அறிவிக்கிறார் அரிதாசர், பளிச்செனப் புரியவேண்டும் என்பதற்காக, காமம் மிக்கு ஒழுகிற்று என்று கூறியதுடன் கள் வெள்ளம் புரண்டு வருவதுபோல என்றார்.
வெப்பம் கொண்டு இருபாலரும் விடுதி திரும்பினர் - அவர்களை நிலவு மகிழ்விக்க வந்தது - அந்த நிலவொளி எங்ஙனமிருந்ததென்றால், காமம் மிகவும் வெளிப்பட்டது போலவும், கள்வெள்ளமாக ஓடியது போலவுமிருந்தது, மதி நிறைந்தது, மதுக்குடம் தெரிகிறது. காமுற்ற இரு பாலரிடம் கட்குவளைகள்! உண்டாட்டுப் படலத்தில் முதற் பாடலே இது; அவர்கள் இனி உண்ணப் போவது என்ன, ஆடப் போவது எவ்விதம் என்பதை எடுத்துக்காட்டுவது போல, இனி அவர்கள் கள்ளைக்குடித்துவிட்டு காமக் கூத்தில் ஈடுபடப் போகிறார்களென்பதைச் சுட்டிக் காட்டியாகிவிட்டது - முதற்பாட்டிலேயே; அந்தக் கூத்து நடந்து தொலைக்குமட்டும் கவி, வேறு பொருள்பற்றிக் கூறிடலாகாது; இதை இனியும் காணவல்லேன் அல்லேன்; என்று கூறியபடி மதி எனும் மங்கை நல்லாள் மறைந்திடக் கண்டான், சுடுகிறேன் அவர் தமை என்று சூளுரைத்துமே கதிரவன் எழுந்தான் காணீர் - என்று ஒரே பாடலோடு முடிந்திடலாகாதா! நம்மைக் கூறுவர், சரியப்பா! காமச் சுவை இருக்கிறது என்று ஒரு வரியோடு விட்டுத் தொலைக்காமல், துளைத்துத் துளைத்துக் காட்டுவதா - என்று வெட்கத்தால் தாக்குண்டவர்கள். கம்பர் இந்த உண்டாட்டுப் படலத்தில் 67 பாடல்கள் பாடி இருக்கிறார். அவ்வளவும் ரவிவர்மா கை வண்ணத்தோடு வெளிவந்தால், உலக உல்லாசக்கூடக் கண்காட்சியில் முதலிடம் பெறும். அவ்வளவு ‘ரசம்’!!
மகளிர் கள்ளைக் குடிக்கும்போதே, வழி நடந்த களைப்புத் தீரவேண்டும் என்றோ, அலுத்து உறங்க வேண்டும் என்றோ எண்ணவில்லை! பஞ்சைகளன்றோ அவ்விதம் எண்ணுவர்! இவர்கள் கொஞ்சுமொழிப் பாவையர், எனவே, தங்களை ‘யுத்தத்துக்கு’த் தயாரித்துக் கொள்ளவே, குடிக்கிறார்கள்.
குடித்தார்கள், குடித்தார்கள் என்று குறை கூறாதே, அவர்கள் குடித்தது, தேன் அல்லது, மலரும் வாசனைப் பொருள்களும் சேர்ந்த சுவைமிகு பானம் - கள் அல்ல! என்று வாதாடிப் பார்க்கிறார்கள் சிலர்.
பைத்தியக்காரி! இது ஏதோ உடலுக்குக் கெடுதல் என்று எண்ணுகிறாள்! இது அவ்வளவும்! பிளட் (க்ஷடடிடின) டானிக்!" என்று, ‘இழந்த காதல்’ நாடகத்தில் ஒரு கட்டம் வரும்; அதுபோலச் சிலர், அயோத்தி அணங்குகள் போதை சாப்பிடவில்லை என்று கூறுவர்! உள்ளதை மறைக்க வெகு பாடுபடுகிறார்கள்!!
கண் சிவக்கிறது, நிலை தடுமாறுகிறது, ஒரு பொருள் மற்றொன்றாகத் தெரிகிறது, எதிரில் இருப்பது இன்னது என்று தெரியவில்லை, பாத்திரத்தில் பானம் இருப்பதும் தீர்ந்து போனதும் புரியவில்லை. நிலவுக்கும் கள்ளுக்கும் மாறுபாடு தெரியவில்லை. நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நாக்குக் குழறுகிறது. வார்த்தைகள் பொருளற்று உருள்கின்றன. காரணமற்றுச் சிரிப்பு, கைகொட்டி ஆடுவது - இது தேன் உண்டதின் இலட்சணமா!!
இவ்வளவு வருகிறது, கம்பர் கவிதையில் தெளிவாக, உண்டாட்டுப் படலத்தில்.
மலரணை! மலர் சூடிய மங்கையர்! மதுக்குடம் இப்படித்தான் ஆரம்பமாகிறது; உண்டாட்டுப் படலம் ஆறாம் பாடல். களவிப்போரில் நாம் தோற்றுவிடக் கூடாது, களித்திடவேண்டும் என்ற கருத்துடனேயே பருகுகிறார்கள் - பஞ்சை பராரிகள் அல்ல. எனவே புளித்துப்போன கள்ளை மண் பாண்டத்தில் வார்த்துக் குடிக்கவில்லை - பொற்கிண்ணத்தில் புதிய மதுவை ஊற்றிக் குடிக்கிறார்கள். உண்ட கள் காமத்தை மூட்டுகிறது! கவிதை 9. ஓமகுண்டத்திலே நெய்யை ஊற்றினதும் தீ மேலே எழுவது போல, உள்ளே மது சென்றதும், மூண்டு கிடந்த காமம் மேலே எழுகிறது.
வெம் காமம் கனலினை
கனற்றிக் காட்டிற்று
அண்ணாதுரை அவர்கள் தமிழை ஆழ்ந்து படித்தவர். கம்பராமாயணம் மட்டுமல்ல, ஏனைய நூல்களிலும் இம்மாதிரியான வர்ணனைகள் உண்டு என்பதை அறியாதவரல்ல. ஆனாலும் கம்பராமாயணத்தை மட்டும் தேர்ந்தெடுத்தது வேறு ஒரு அஜெண்டா காரணமாகத்தான்; அது இங்கே வேண்டாம்.
திடீரென நம்மூரில் என்ன நடந்தது, இவ்வாறு நமது புரிதல்களில் மாற்றம் வந்ததற்கு காரணம் என்ன என்று பார்ப்போம். இதெல்லாம் ஆங்கிலேயர்கள், கூடவே மிஷனரிகள் ஆகியோர் வந்த பிறகு மெதுவாக நடந்தேறியவை. இது பற்றிய ஒரு புரிதலை ஜெயமோகனின் மேலே குறிப்பிடப்பட்ட பதிவே தந்து விடுகிறது. அதிலிருந்து சில வரிகளை பார்ப்போம்:
நம் காவியங்களைப் பார்க்கும்போது வாழ்வு சிறந்திருந்தது என்று சொல்ல வருமிடங்களில் எல்லாம் காமம் சிறந்திருந்தது என்று சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். சமண, பௌத்த ஞானியரால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக சீவகசிந்தாமணி காமத்தைக் கொண்டாடும் ஒரு காப்பியம்.
ஒரு சமணர் அக்காப்பியத்தை எழுதியது பற்றி பலவகையான ஊகங்களும் கதைகளும் உள்ளன. எளிமையான விளக்கம் இதுதான், இக்காப்பியங்கள் அன்று பொதுசாபையில் வாசிக்கப்பட்டன. குறிப்பாக இரு பருவங்களில். நான்கு மாசம் நீளும் மழைக்காலத்திலும் நடவு தொடங்கும் இளவேனில் காலத்திலும். மழைக்காலம் என்பது பழங்காலத்தில் மரணத்தின் காலம்.நோயும் பட்டினியும் ஆட்சி செய்யும் பருவம். அப்போது மரணத்துக்கு எதிரான வாழ்க்கையின் அறைகூவலாக இந்தக் காமச்சித்தரிப்புகள் வாசிக்கப்பட்டன. இவற்றை வாசிக்கும் இடத்தில் நோயும் மரணமும் அண்டாது என்று நம்பபப்ட்டது
அதேபோல வயல்வேலைகள் தொடங்கும் நாட்களில் இந்நூல்கள் வாசிக்கப்படுவது நிலவளம் பெருகச்செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. சமீபகாலம் வரைக்கூட குமரிமாவட்டத்தில் ராமாயண மகாபாரதத்தில் காமச்சித்தரிப்பு கொண்ட பகுதிகளை மட்டும் சாவடிகள் படிக்கும் வழக்கம் இருந்தது. ஆகவே அந்த வழக்கத்தை ஒட்டி அந்நோக்கத்தை நிறைவேற்ற உருவானதே சீவகசிந்தாமணி. சீவகசிந்தாமணியை சமணர்கள் கூடி விழாவாக வாசித்ததை உ.வே.சா. பதிவுசெய்கிறார். குருத்து தென்னை ஓலையும் பூக்களும் மாந்தளிர்களும் தோரணம்கட்டி ஒரு ‘வளச்’ சடங்காகவே அந்த வாசிப்பு நிகழ்ந்தது என்கிறார்.
ஆகவேதான் வளம் என்று எங்கே சொல்லப்படுகிறதோ அங்கே உடனடியாக காமச்சித்தரிப்பு வந்துவிடுகிறது நம் காப்பியங்களில். சொல்லப்போனால் நிலவளம் செல்வ வளம் இரண்டும் காமம் சார்ந்த உவமைகள் வழியாகவே சொல்லப்படுகின்றம்ன. இதில் காளிதாசனும் கம்பனும் அதன் உச்சத்தையே தொடுகிறார்கள். காமம் என்பது ஒரு சமூகம் உயிர்ததும்பப் பொலிந்துகொண்டிருக்கிறது என்பதற்கான சான்று.
நம் ஆலயங்களில் காமச்சித்தரிப்புகள் நிறைந்திருப்பதற்குக் காரணம் இதுவே. அதிலும் குறிப்பாக கோயில்களில் உள்ள வசந்த மண்டபம், பலி மண்டபம் போன்றவற்றில் காமச்சிற்பங்கள் நிறையவே காணப்படும். மலர்மரங்களும் தேவர்களும் வனயட்சிகளும் காதலர்களுடன் இணைந்து காணப்படுகிறார்கள். மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ சிற்பங்களும், ஆந்திராவில் ராமப்பா கோயில் முகமண்டபச்சிற்பங்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மெல்ல மெல்ல நம் பண்பாட்டில் விக்டோரிய ஒழுக்கவியல் புகுத்தப்பட்டது. விக்டோரிய ஒழுக்கவியல் என்று பொதுவாகச்சொல்லப்படும் மனநிலையை வரலாற்று ரீதியாக இவ்வாறு விளக்கலாம். கிட்டத்தட்ட இந்து மரபில் உள்ளதுபோன்ற இயற்கைவழிபாட்டு மனநிலையே ஐரோப்பிய பாகன் மதங்களில் நிலவியது. வளச்சடங்குகள்[விருஷ்டியாசாரங்கள்] அவர்களிலும் பலவகையில் இருந்தன. அவற்றுக்கு எதிரான சக்தியாக ஆபிரஹாமிய மதமான கிறித்தவம் அங்கே பரவியது.
கிறித்தவத்தின் அடிப்படைக் கருதுகோளில் ஒன்று ‘ஆதிபாவம்’ என்பது. மனிதர்களை இறைவன் காமம் இல்லாத தூயவர்களாகப் படைத்தார் என்றும் அவர்கள் இறைவனால் விலக்கப்பட்ட கனியை உண்டு காமம் என்ற பாவ உணர்வை அடைந்தார்கள் என்றும் சொன்னது அது. காமத்தை ஒரு பெரும்பாவமாகப் பார்க்கும் நோக்கு கிறித்தவம் மூலம் ஐரோப்பாவில் வேரூன்றியது. காமத்தைக் கோண்டாடிய கிரேக்க ரோம பண்பாட்டுக்கூறுகளும் பிற பாகன் பண்பாட்டு அம்சங்களும் கடுமையாக ஒடுக்கி ஒழிக்கப்பட்டன.
பின்னர் கிறித்தவத்துக்குள் கடுமையான புலன்மறுப்பு கொண்ட பலவகையான இயக்கங்கள் உருவாயின. அவற்றின் மேலாதிக்கம் நிலவிய மத்திய காலகட்டம் என்பது ஒழுக்கம் என்பது ஒரு ரத்தவெறி கொண்ட தெய்வமாக மக்களை வேட்டையாடிய காலம் என்று சொல்லலாம். ஆனால் இக்காலகட்டத்தில் பாகன் பண்பாட்டின் பல கூறுகளை கிறித்தவமரபு உள்வாங்கிக் கொண்டது. காரணம் அவை ஆசாரங்களாகவும் கலைகளாகவும் மக்களிடையே வேரூன்றியிருந்தன. அவ்வாறு உள்வாங்கிக்கொள்வதன் மூலமே கிறித்தவம் ஐரோப்பாவெங்கும் முழுமையாக பரவ முடிந்தது.
எது எப்படியோ இப்போது செக்ஸ் என்பதே ஒரு கெட்ட வார்த்தையாக போய் விட்டது. ஜெயமோகனின் அப்பதிவுக்கு நான் இட்ட இப்பின்னூட்டத்தையும் பாருங்கள்.
விக்டோரியா மகாராணி காலத்துக்கு முன்னால்கூட இங்கிலாந்தில் பாலுறவுகளை ஆங்கிலேயர் எளிதாகவே நோக்கி வந்திருக்கின்றனர் என்று படித்துள்ளேன். பின்பு ஏன் விக்டோரியா மகாராணி காலத்தில் இவ்வாறு மாறியது?
விக்டோரியா என்னும் அப்பெண்மணி மகா அவலட்சணமான பெண். அவள் கணவன் ஆல்பர்ட் விதியே என்றுதான் அவளிடம் உறவு கொண்டிருக்க முடியும். மற்றப்படி ஆண்களின் ரசிக்கும் பார்வையை அப்பெண்மணி அறிந்திருக்க மாட்டாள். தனக்கு கிட்டாதது வேறு யாருக்கும் கிட்டக்கூடாது என்ற நல்லெண்ணமமே அவள் செக்ஸை வெறுத்ததற்கு காரணம்.
மேலும் அப்பெண்மணிக்கு ஹாஸ்யரசனை சுத்தமாக லேது. ஏதாவது ஜோக் சொன்னாலும் புரியாது, “எமக்கு இது ஹாஸ்யமாக ப்படவில்லை” (We are not amused) என்று கூறுவது அவள் வழக்கம்.
மொத்தத்தில் இந்த விஷயத்தில் அவள் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு பெரிய சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்பாடா, இப்பதிவின் டைட்டிலையும் ஜஸ்ட்ஃபை செய்தாகி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
26 comments:
எனக்கு ஒன்று புரியவில்லை!
ஜெயமோகன் அந்தப் பதிவை எழுதியது 2009 இல்! உங்களுடைய அந்தப் பின்னூட்டம் இந்த வருடம் மார்ச் முப்பதில்!
இந்தப் பதிவு வெளியிடப்பட்டிருப்பது அதற்கும் இரண்டு வாரங்கள் கழித்து!
உங்களுடைய அந்தப் பின்னூட்டத்தை நியாயப் படுத்துவதற்காக இந்தப் பதிவா அல்லது, அதில் கடைசியாகச் சொன்ன வார்த்தையைத் தலைப்பாக வைத்து ஒரு பதிவை எழுதிவிட்டு அதை நியாயப் படுத்தவா?
ஜெயமோகனின் பழைய பதிவுகள் அவ்வப்போது கோப்புகளிலிருந்து மேலே எழும்பி வரும். அம்மாதிரி வந்த அப்பழைய பதிவில் நான் பின்னூட்டம் இட்டேன். இன்று அவரது பதிவுகளில் வேறு ஏதோ சொல்லை (அஜிதன்) வைத்துதேட, இப்பதிவும் எனது பின்னூட்டமும் மீண்டும் வந்தன.
நான் சொன்னதுக்கு மேலே தோன்றிய எண்ணங்கள்தான் இப்போதைய எனது இடுகை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சில தகவல்களை அறிய முடிந்தது. நன்றி
விக்டோரிய ஒழுக்கவியலில் உள்ளார்ந்த ஹிப்பாக்கிரஸி பற்றி சொல்லியாக வேண்டும்.
விக்டோரிய ஒழுக்கவியல் என்றாலே ஒழுக்கங்கெட்டத்தனம் தான். ஊருக்கு முன்னால் நல்லவன் போல் நடித்துவிட்டு முக்காடு போட்டுக்கொண்டு வேசிவீட்டுக்குப் போவானே அவன் தான் விக்டோரிய ஒழுக்கவியலின் உன்னதமான எடுத்துக்காட்டு.
நம்மூரில் வந்து வெள்ளையர்கள் சிலைகளில் காமத்தைப்பார்த்து "இதென்ன ஒழுக்ககேடு" என்று காரித்துப்பிவிட்டு பல வைப்பாட்டிகளுடன்(mistress) வாழ்ந்துவந்த ஒழுக்கசீலர்கள்.
நீங்கள் சொல்வதை ஒருவகையில் ஒப்பு கொள்லலாம், ஆனால் சின்ன முரண்பாடு! ஆங்கிலேயரும் ஆபிரஹாம மதத்தை பின்பற்றினாலும், இந்தியாவில் முதல் ஆதிக்கம் செலுத்தியது இஸ்லாமிர்களே! அதே ஆபிரஹாம மதத்தையும், பிற்போக்குதனமும், பெண்ணனிடிமை தனமும் உள்ள இஸ்லாமும் ஏன் அவற்றிக்கு தடை விதித்திருக்க முடியாது என யோசிக்கிறேன்!
//நம்மூரில் வந்து வெள்ளையர்கள் சிலைகளில் காமத்தைப்பார்த்து "இதென்ன ஒழுக்ககேடு" என்று காரித்துப்பிவிட்டு பல வைப்பாட்டிகளுடன்(mistress) வாழ்ந்துவந்த ஒழுக்கசீலர்கள்.//
ஒழுக்கத்தை போதிக்க நினைப்பவன் நிச்சயம் அதை பாதுகாக்கவும் நினைப்பான்! ஆங்கிலேயர் சட்டமாக சிலவற்றை வைத்திருந்தாலும் நீங்கள் சொல்லும் ஒழுக்கத்தை அவர்கள் போதித்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன்! எனது கருத்தான இஸ்லாமிய ஆக்கிரமிப்பே இந்தியாவில் பிற்போக்கு ஒழுக்கங்களை போதித்தது என்பதை மறுக்கிறீர்களா!?
வால்,
முகலாய ஆட்சி மற்றும் அதற்கு முன்னரான இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொல்கிறார்கள்.
அனால் ஒன்று அவர்கள் நிச்சயம் ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு வீட்டுக்குள் வைப்பாட்டி வைக்கும் ஹிப்போகிரசி உள்ளவர்கள் அல்ல. ஊருக்கு நடுவிலேயே பெண்களை இழுத்துக்கொண்டு போய் கற்பழிக்கக்கூடியவர்கள். அதனாலேயே, தாலி, குழந்தைத் திருமணம், சதி போன்ற பெண்களுக்கெதிரான கொடுமைகள் வளர்ந்தன.
//ஊருக்கு நடுவிலேயே பெண்களை இழுத்துக்கொண்டு போய் கற்பழிக்கக்கூடியவர்கள். //
இலங்கை சென்ற அமைதிப்படை நியாபகம் வருகிறது! அதிகார துஸ்பிரயோகம் எல்லா பக்கமும் தானே இருக்கு! வலியவன் எளியவனை கிள்ளுகீரையாக நினைப்பது புதிதா என்ன?
//தாலி, குழந்தைத் திருமணம், சதி போன்ற பெண்களுக்கெதிரான கொடுமைகள் வளர்ந்தன. //
குழந்தை திருமணம் எல்லா சமூகத்திலும் இருந்ததிற்கான ஆதாரங்கள் உள்ளன! அதனால் அதை பொதுவான விளிப்புணர்வு அற்ற தனம் என்று பிரிக்கலாம்! ஆனால் சதி மற்றும் தாலி குறிப்பிட்ட சமூகம் தானே, அதை கொண்டு வந்தது யார்!?
//ஆனால் சதி மற்றும் தாலி குறிப்பிட்ட சமூகம் தானே, அதை கொண்டு வந்தது யார்!?//
ஒவ்வொரு சமூகத்துக்கு ஒரு அடையாளம். தாலி நமக்கு, பர்தா இசுலாமியருக்கு, கிறித்துவருக்கு கற்புக்கவசம் (சேஸ்டிடி பெல்ட்).
ஓர் இனத்தின் மேல் படையெடுக்கும்போது பெண்கள்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இது மனித இனத்தில் மட்டுமல்ல, கூட்டமாக வாழும் எல்லா விலங்கினங்களிடமும் உண்டு. இது ஒரு அறிவியல் உண்மை.
எந்தெந்த அடையாலம் என்பதை சமூகத்தின் காண்டெக்ஸ்ட் தீர்மானிக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போர் நடக்கும் இடங்களில் பெண்களின் பாதிப்பும் அதனால் உருவாகக் கூடிய தவறான சந்ததி குறித்தும் கீதையில் வருகிறதே. இதையும் தான் போரை தவிர்க்க விரும்புவதற்கு ஒரு முக்கியமான காரணமாக அர்ச்சுனன் முன் வைகிறானே
களவியல், ஒழுக்கம்-குடும்ப அமைப்பு இதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்படத் தானே செய்கிறது.
இந்த தலைப்புகளில் எழுதப் படும் விஷயங்கள் எதை முன் வைக்கிறது என்பது எனக்கு தெளிவாக புரிவதில்லை
வெள்ளைக்காரன் போய் 60 வருசத்துக்கு மேலே ஆச்சு.அவன் சொல்லிக்கொடுத்தான்; நாங்க கேட்டுக்கிட்டோம் என்று எத்தினி நாளுக்கு சொல்வீங்க?
இனி பழையபடி செக்ஸுக்குப் போங்க.
ஜெயமோகன் எழுதிய சமாச்சாரத்தை, சித்தூர் முருகேசன் நன்னா எழுதுவார்.
//இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொல்கிறார்கள்.
//
ஆரு சொன்னாங்க?
//ஓர் இனத்தின் மேல் படையெடுக்கும்போது பெண்கள்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இது மனித இனத்தில் மட்டுமல்ல, கூட்டமாக வாழும் எல்லா விலங்கினங்களிடமும் உண்டு. இது ஒரு அறிவியல் உண்மை.
எந்தெந்த அடையாலம் என்பதை சமூகத்தின் காண்டெக்ஸ்ட் தீர்மானிக்கிறது.//
குட் ரிப்ளை.
ஆனாலும், அந்த அடையாளங்களில் நல்லதுமுண்டு; தீய்துமுண்டு.
/அவன் சொல்லிக்கொடுத்தான்; நாங்க கேட்டுக்கிட்டோம் என்று எத்தினி நாளுக்கு சொல்வீங்க?/
துரைமார்கள் வகுத்துக் கொடுத்தபடியே காவல், சட்டம், நீதி அரசு, அரசியல், பாராளுமன்றம் இப்படி எல்லாவற்றிலுமே அவர்கள் விட்டும் போன எச்சங்கள் இருக்கும் வரை, அதைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்?
//
//இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொல்கிறார்கள்.
//
ஆரு சொன்னாங்க?
//
மனுசனுங்க தான் சொல்றாங்க. ஆனா பாருங்க நாயிங்க ஒத்துக்க மாட்டேனுதுங்க.
@jo
மற்றவர் தளத்தில் வந்து இவ்வளவு விமர்சனம் வைக்கும் நீங்கள் உங்கள் தளத்தில் நான் நேரடியாக வைத்த கேள்விக்கு தோளில் போட்டிருக்கும் மீன் போல் ஏன் இந்த நழுவல் ?
http://www.virutcham.com
Once upon a time even orgy was a norm of life. See english movie caligula (Rome emperor story) - warning movie is not xxx but xxxxxxxxxxxxxxxxxxxxx
//ஆனா பாருங்க நாயிங்க ஒத்துக்க மாட்டேனுதுங்க//
அது ஒத்துக்கிட்டா நாயிங்க் இல்ல. அல்லாட்டி நாயிங்க. விசேசமான நாயிங்க்.
சட்டம், நீதி, அரசியல், பாராளுமன்றம் - இவை இங்கிலீசுகாரன் சொல்லிக்கொடுத்ததை பாலோ பண்றோம்.
போனவாரம் ஒரு வக்கீல் டெல்லி கோர்ட்டு ஒன்றில் இந்தியில் வாதம் செய்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கொஞ்சம் கொஞமாக இங்கிலீசு போய்விடும் அங்கே.
அரசியல் அமைப்பு - டெமாக்ரசி. இது வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்தது. டெமாக்ரசி போனால் பாராளுமன்றம் இல்லை. ஒருவேளை போய்விட்டது.
அரசியல், நீதி, பாராளுமன்றம், சட்டம் இவையெல்லாம் மாறி விட்டால், இந்துமதத்தின் பழங்கால செக்ஸ் ஒரு கோயில் சமாச்சாரம் என்பதாக வந்து விடுமா?
நான் இடக்காக கேட்ட்தாக நினைக்க்வேண்டாம்.
என் கேள்வி: மதத்துக்கும் இவற்றின் மாற்றத்துக்கும் என்ன தொடர்பு?
ஏன் இவற்றை நீங்கள் மாற்ற முடியவில்லை?
வஜரா, உணமை என்னவென்றால், அக்காலத்தில் சொல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட செக்ஸ் சமாச்சர்ரத்தை எவ்வளுவுதான் ஜெய்மோகன் போன்ற இந்துத்வாவினர் முன்மொழிந்தாலும், நித்தியானந்த்த்தின் காமலீலைகளை இந்து.காம் எவ்வளவுதான் ஜஸ்டிபை பண்ணினாலும், இந்து மக்கள் அவற்றை இன்று ஏற்றுக்கொள்ளவில்லை. பலசிலைகள் இன்று மியுசிய்த்துக்குப் போய்விட்டன். அவ்வாறே இருப்பின் அவை உடைகள் உடுத்தப்பட்டு கண்ணியாமாகத்தான் வைக்கப்பட்டுள்ளன.
ம்யுசியத்துக்குப்போகாமால் இருந்தால், அவை ஹெரிட்டேஜ் சைட்களாக்கப்பட்டு ஏ.எஸ்.ஐயால் பராபரிக்க்ப்பட்டு டூரிஸ்டுகளுக்காக்கப்பட்டிருக்கின்றன. க்ஜுராஹவோ, ஹெலபீட், போன்றவை சில உதாரணங்கள். அவை மக்களால் ஒதுக்கப்பட்ட வழிபாட்டுத்தளங்கள்.
விருச்சம்
பதில் போட்டிருக்கிறேன். படிக்கவும்.
இங்கு நான் பின்னூட்டம்போடும் நோக்கம் ராக்வன் எவ்வளுவு தூரம் நேரடியாக எதிர்வினைகள் வைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளத்தான்.
வலைப்திவுகள் என் பொழுது போக்கு. என்னை எவ்வளவுதான் திட்டினாலும் நான் அதைப்பொருட்படுத்த மாட்டேன். வலைபதிவுகள் பலருக்கு வேடிக்கை. ஒரு பைசா பெறாத விடயம். எனக்கும்தான். இதில் ஏன் நான் உணர்ச்சிவசப்பட்வேண்டும்?
என்பதிவில் அனானி காமென்டர்கள் போடும் பின்னூட்டங்களப் படித்துக்களிக்கவும்.
ஒரு ஆள் அவருக்கு ஏழு பாசைகள் தெரியும் என எனக்குச் சொல்கிறார். அவருக்குத் தெரிந்தால் மற்றவருக்கு என்ன லாபம் தெரியாவிட்டால் என்ன நட்டம் என அவருக்கு புரியவில்லை. இப்படி பலர் இருக்கிறார்கள்.
//Once upon a time even orgy was a norm of life. See english movie caligula (Rome emperor story) - warning movie is not xxx but xxxxxxxxxxxxxxxxxxxxx
//
Since you wrote in English, let me reply in the same language to you, provided DR allows English in his blog. He has some aversion to English, or my English which is full of grammatical or other errors, according to him. Be that as it may; lets come to the point:
Time never stands still. Every cultural and religious aspect changes along with time. Religions like Islam resist such changes and pretend that time were warped for ever; and all that their Prophet told them is applicable for all time to come.
The Prophet is a historical figure, and he was not a God incarnate. He was a human, lived life like others. These truths are accepted by Muslims, and, indeed, to deny divinity to the Prophet is an Islamic creed accepted by all Muslims world wide.
After denying that, they do some somersault namely, there is immutability in the words uttered by a human being. They justify the immutability saying that, that which came from the mouth of Prophet are nothing but divine revelations that fell from heaven or Allah, the God.
What about Hindu religion? True, sex is part of it. Hindus do worship the genitalia of both male and female, in the form of lingam in yoni. They accept the Krishna leela. and so many puranic stories where their gods and goddesses or divine figures like munis indulge in sexual behavior.
But all came from the past. Hindu stop and stare, examine and accept or reject their legacy. Changes are made, or come into being as time passes, and are accepted, if necessary. Criticisms, however harsh, from whosoever they come, are not slandered as motivated campaign against it. Hindus accept valid criticism and make changes in their way of life in religion. That is why, I can write here on your religion boldly, without fear of my head being cut off. If someone styling himself as Hindu, threatens the critic with dire consequences, he should be one with Talibans and his place is Afghanistan. I wrote similar comment which was not allowed by raagavan for reasons unknown to me.
The matter of sex is one such thing that Hindus have come to reject. The puranic stories where sex was given important are not rejected; but ignored. It is my observation, which anyone here can deny or accept, that the acts of sex in the garb of a samiyar are not accepted by Hindus, however Jeyamohan or Hindu.com justify them citing the past, as they have done in the case of Nithyananatha. Hindus are united against the sexual misconduct of all saamiyaars. I wish any Hindu writing here contradicted me! Anyone please?
To say, as Jeyamohan said, that sex is a part of Hinduism is ok, provided you accept that it is no longer a valid creed in the religion.
Hindus have moved away from such past.
@Dondu
இந்த மாதிரி பதிவுகளின் நோக்கம் எனக்கும் புரியலை
@Jo
உங்கள் தளத்தில் பின்னூட்டத்திற்கு restriction போட்டுட்டீங்க போல
எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://www.virutcham.com
அய்யா!! ஆங்கில கொழுந்து, மறுபடியும் இங்கலீஷ்-ல வாந்தியா ??
//
இந்து மக்கள் அவற்றை இன்று ஏற்றுக்கொள்ளவில்லை. பலசிலைகள் இன்று மியுசிய்த்துக்குப் போய்விட்டன். அவ்வாறே இருப்பின் அவை உடைகள் உடுத்தப்பட்டு கண்ணியாமாகத்தான் வைக்கப்பட்டுள்ளன.
//
ஜோ.அ.ரா. ஃபெ,
இந்துமதத்தை மியூசியத்திற்கு அனுப்பும் நோக்கம் கொண்டு சிலர் செயல்படுவதை சில நல்ல மனிதர்கள் தடுக்கின்றனர். நல்லவர்கள் தோல்வியடைவதில் உங்களுக்குக் கிடைக்கும் சந்தோசத்தைப் பார்க்க நம்பியார் கையைக் கசக்கி சிரிப்பது போல் தோன்றுகிறது. நம்பியார்கள் எல்லாம் கன்னியத்தைப் பற்றி லெக்ச்சர் அடிப்பது தான் "விக்டோரிய ஒழுக்கவியல்"...
ayyaa annani
I madeit clear that my comments are not meant for you; but for the person who wrote about 'orgy...'etc
Vricham
I hve restricted it to only those with google account. You can postwith your ac.
Some have abused the open mode by posting personal abuses as anonoymous commentators. Now they cant
//என்பதிவில் அனானி காமென்டர்கள் போடும் பின்னூட்டங்களப் படித்துக்களிக்கவும்.
ஒரு ஆள் அவருக்கு ஏழு பாசைகள் தெரியும் என எனக்குச் சொல்கிறார். அவருக்குத் தெரிந்தால் மற்றவருக்கு என்ன லாபம் தெரியாவிட்டால் என்ன நட்டம் என அவருக்கு புரியவில்லை. இப்படி பலர் இருக்கிறார்கள்.//
ஆங்கிலத்தில் எழுத வேண்டாம் என வேண்டிக் கொண்டதுக்கு நீர் , உனக்கு ஆங்கிலம் தெரிமா ? அப்படின்நீர் அதுக்கு தான் என் புலமை பற்றி சொல்ல வேண்டி வந்தது. இங்க வந்து பச்ச புள்ளை மாதிரி எனக்கு தெரிந்தா என்ன தெயரியாட்டி என்ன என்று உதார் விடுகிறீர்.
ரேயான் பன்னாடோ , நேர்மை என்றால் என்ன விலை என்பவரா நீர் ????? உங்கள பார்த்து டேய்!! இந்த அவனாடா நீ !!!!!!! என்று கேட்கத் தோன்றுகிறது , உங்கள் வயதான பருவத்தை நிணைத்து கேட்கவில்லை
ஆல்பபெட் அனானி
தமிழ் ரசிகர் ஆல்பபெட் ஆணி ,
அவர் பேரை தயவு செய்து ஆங்கிலத்தில் உள்ளது போல் எழுதவும், படிக்கத் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு அடிக்கவும். நீங்க உங்க இஷ்டத்துக்கு ரேயான் பன்னாடை என்பது போல எல்லாம் எழுதக் கூடாது . ப்ளீஸ் நாகரிகமாக எழுதுங்கள்.
எனக்கு கூட அவர் எழுதுவது குப்பை என்று பிடிக்காது, இருந்தாலும் வயதான மனிதர் மேல் தனிமனித தாக்குதல் கூடாது.
ஆராவமுதன்
Post a Comment