4/19/2010

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

விடுதலைப் புலி பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மையாரை தமிழகத்துள் வரவிடாது பிளேனிலேயே திருப்பி அனுப்பிய விவகாரம் இங்கு பல எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்.

வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.

அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.

நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.

வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

248 comments:

«Oldest   ‹Older   201 – 248 of 248
Anonymous said...

ஒரு லாரில ஏத்துர கூட்டம் தான் இத்தனை ஆட்டம் போடுதுன்னுரீங்க..திரு. நோ. சரி சரி...உண்மையெல்லாம் இப்படி பொட்டுன்னு போட்டு ஒடைக்காதீங்க...மானம் போகுது. எதா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.

Unknown said...

NO. arivupoorvamana paarivai. 25-28 vayadhudaya 10 peridam nan ktan. prabhakarana pathi theriumanu.therium but enna matter-nu theriyadhunu solluranga. idhilirundhu ena therikiradhu.

ஸ்ரீ சரவணகுமார் said...

நண்பர்களே எத்தனை சொன்னாலும் உரைக்ககூடிய ஜன்மம் இல்லை இந்த டோண்டு. கால காலமாக தமிழர்கள் மீது இவர்களுக்கு இருக்க கூடிய வன்மத்தை உங்கள் ஒரு comment ஆல் மாற்றி விட முடியாது

Vishnupria said...

You are 100% correct!!
But its very sensitive matter !!

dondu(#11168674346665545885) said...

// கால காலமாக தமிழர்கள் மீது இவர்களுக்கு இருக்க கூடிய வன்மத்தை//

உங்க பார்ப்பன வெறுப்பு மட்டும் அப்படியே போதிசத்துவர் கொள்கை போன்று அன்பு வழியைச் சேர்ந்ததா என்ன? வந்துட்டாரு கொலம்பஸ்.

டோண்டு ராகவன்

வலைஞன் said...

NO வின் பதிவு நிதர்சனம் மற்றும் தெளிவாக உள்ளது.மேலும் சில உண்மைகள்.

ஈழப்ப்ரச்சினை வெடித்த ஆண்டு 1983-84.
சிங்கள அரசு நாஜிகளைபோல இனப்படுகொலையை ஆரம்பித்தது.ஆயிரக்கணக்கான தமிழ் இன மக்கள் தங்கள் சொத்து,சுகம் அனைத்தும் இழந்து அகதிகளாக ராமேஸ்வரம் வரலாயினர்.அச்சமயம் நம் முதல்வர் MGR.
இந்த நிலைமையினை கருணாநிதி மிக சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டார்.MGRக்கு தான் ஒரு மலையாளி என்ற உறுத்தல் எப்பொழுதும் உண்டு.இதை பெரிது படுத்திய மு.க, தமிழ் இனம் படுகொலை செய்யப்படும் போது,அதை MGR அரசு வேடிக்கை பார்க்கிறதே, என முதலைக் கண்ணீர் வடிக்க, நடுங்கிபோன MGR, out of the way சென்று, இலங்கை தமிழருக்கு, குறிப்பாக புலிகளுக்கு, உதவ ஆரம்பித்தார்.அப்போது பார்த்து, அனுபவம் இல்லாத ராஜீவ் பிரதமராக வந்தது, இன்னும் குழப்ப நிலையை அதிகரித்தது.பிறகு மேலும் தவறாக, அமைதிப்படை அனுப்பப்பட்டு நடந்த குளறுபடிகள் சரித்திரம்.
MGR க்குப் பிறகு வந்த மு.க புலிகளுக்கு பல விதத்தில் ஆதரவு அளித்து தமிழ்நாடே பயங்கர வாதிகளின் பாசறையாக மாறும் ஒரு நிலைக்கு எடுத்துச்சென்றார்.

நிலைமையின் தீவிரம் அறிந்த மைய அரசு, மாநில அரசை டிஸ்மிஸ் செய்து வர இருந்த பேராபத்தை ஓரளவு தடுத்தது.புலிகளின் சுய ரூபம் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட பிறகுதான் தமிழ் மக்களுக்கு தெரிந்தது.
சுய நலத்தைக் கருதி, கடைசி வரை புலிகளை ஆதரித்த மு.க, பிரபாகரன் மறைவிற்கு பிறகு தன் நிலையை மாற்றிக்கொண்டார்.இப்பொழுது பார்வதி அம்மாள் இங்கு வந்ததே தனக்கு தெரியாது என சொல்லி தப்பித்துக்கொண்டு விட்டார்.
எனக்கு என்ன வியப்பாக இருக்கிறது என்றால் ஒரு சாதாரண பதிவர் டோண்டு தன் கருத்தை வெளியிட்டதற்கு அவரது சாதியை அனாவசியமாக இழுத்து இவ்வளவு அநாகரீகமாக சண்டையிடும் சில பதிவர்கள்,மு.க பற்றி மௌனம் சாதிப்பது ஏன்?
ஒரு பதிவரின் கருத்துக்களை எவ்வளவு வேண்டுமானாலும் குறை கூறுங்கள்.(எனக்கும் டோண்டுவின் இந்த பதிவில் உடன்பாடு இல்லை)ஆனால் அவர் சார்ந்த இனத்தை இவ்வளவு கேவலமாக பழிப்பது என்ன நியாயம்?

பகை கொண்ட உள்ளம்,
துயரத்தின் இல்லம்!
தீராத கோபம்
யாருக்கு இலாபம்?

தமிழை மதித்து, தமிழ் பேசி, தமிழ் பண்பாடு பேணி வாழ்வோர், உலகில் எங்கு இருந்தாலும் அவர்கள் தமிழர்களே அல்லவா?

ஒரு புல்லுருவி தேவநாதன் அனைத்து பூசாரிகளையும் எப்படி பிரதிபலிப்பான்?(நல்லவேளையாக ராஜசேகரன் வேறு சாதிக்காரன் இல்லையேல் வலைதளத்தில் பூகம்பமே வந்திருக்கும்!).

முடிவாக நண்பர் டோண்டுவிற்கு ஒரு வேண்டுகோள்.உணர்வு சம்பந்தமான பதிவுகளை கண்ணாடிபோல் கையாளவும். நன்றி

Raj Chandra said...

I have read your sick theories earlier, but this one beats all of them.

Take care.
Rajesh

dondu(#11168674346665545885) said...

@ராஜ் சந்திரா
ஒன்று கூற வந்ததை ஜஸ்டிஃபை செய்யவும், இல்லாவிட்டால் பேசாமல் மௌனம் காக்கவும்.

டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

//ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கும் கருத்துன்னு ஒரு மண்ணும் கிடையாது. சுயசிந்தனை, நியாய உணர்வு என்பதெல்லாம் இவங்களுக்கு ரொம்ப தூரம். காலம் காலமா "தேய்ந்த ரெக்கார்டு" போல ஒரே விஷயத்தை வாந்தியெடுப்பதுதான் வேலை.
//

ஆர் எஸ் எஸ் காரனுக்கு கருத்து கொள்கை எல்லாம் கிடையாது சரிதான்.

இந்த தமிழ் மானம், தமிழ் உணர்வு, தமிழ் வீரம், தமிழ் கற்பு போன்றவைகளை திரு அருள் அவர்கள் தனிப் பதிவில் போட்டால் நானும் ஒரு தமிழன் ஆகலாம என யோசிப்பேன். தமிழ் ஒரு லாங்வேஜ் அதுவும் சிலோன் காரர்கள் வேறுமாதிரு பேசுகிறார்கள். இதுக்கு போய் இந்த பொய் ஆவேசம் கொண்டு குதித்து ஆடுகிறார்கள். ஒரு வேளை இதுதான் தமிழ் உணர்வோ

Raj Chandra said...

>>ஒன்று கூற வந்ததை ஜஸ்டிஃபை செய்யவும்,

Well...I thought my words "sick theory" justified about your pathetic post (?!). I think that is enough.

Thank you.

Rajesh

dondu(#11168674346665545885) said...

//Well...I thought my words "sick theory" justified about your pathetic post (?!). I think that is enough.//

நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை போய் பார்ப்பது நலம்.

பேசாமல் புதினங்களை விமரிசனம் செய்து காலத்தை கழிப்பது நலம்.

டோண்டு ராகவன்

Raj Chandra said...

>>நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை போய் பார்ப்பது நலம்.
- Now we are getting so personal...aren't we?!...anyway, thanks...Looks like you followed your psychiatrist's advice for your masochist behavior and vomiting your theories in your blog.

>>பேசாமல் புதினங்களை விமரிசனம் செய்து காலத்தை கழிப்பது நலம்.
-Sure. At least I read them cover to cover and write what I inferred. Not the way you provide your "half-baked" theories by giving preferences to the emotions rather than the facts.

Either way, I am out (have better things to do).

Thanks for your replies.
Rajesh

dondu(#11168674346665545885) said...

//Now we are getting so personal...aren't we?//
பெர்சனலாக வந்தது நீர்தான். அரைவேக்காடு என்று சொல்பவர் அதை ஜஸ்டிஃபை செய்ய துப்பில்லை.

//Either way, I am out//
Good riddance.

இந்த சம்பவத்தை பற்றி சொந்தமாக பதிவு போட துப்பில்லாதவர்கள் மற்றவர்கள் பதிவுக்கு வந்து வாந்தி எடுக்கிறார்கள்.

டோண்டு ராகவன்

Selva Kumar said...

India is a secular state. We allow many pakistani for treatment in India. Why we are not allow a 85 years old lady for treatment.

Compared to Pakistanis, Tamilans are terrorists.

அருள் said...

கால்கரி சிவா said...

//தமிழ் ஒரு லாங்வேஜ் அதுவும் சிலோன் காரர்கள் வேறுமாதிரு பேசுகிறார்கள். இதுக்கு போய் இந்த பொய் ஆவேசம் கொண்டு குதித்து ஆடுகிறார்கள். ஒரு வேளை இதுதான் தமிழ் உணர்வோ//

அடடா... இல்லாத செத்தமொழி சமஸ்கிருதத்துக்காக இன்னும் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யும் பார்ப்பன கூட்டம் இருக்கும் நாடு இது.

அந்த செத்தமொழி மொழிதான் தேவ பாஷைன்னு இன்னும் பேசும் கூட்டம் வாழ்கிற நாடு இது.

செத்தமொழி மொழிதான் கடவுளுக்கு புரியும்னு சொல்லி அப்பாவி தமிழன் கிட்ட பணம் புடுங்கி வயிறுவளர்க்கும் கூட்டம் இருக்கும் நாடு இது.

அம்மண குண்டிங்க நாட்டுல கோவணம் கட்டுறதும், பார்ப்பான் கிட்ட தமிழை பத்தி பேசுவதும் தப்புதான்.

Anonymous said...

//
இல்லாத செத்தமொழி சமஸ்கிருதத்துக்காக
//

இல்லாத மொழி எப்படி சாகும் ?

அருள் said...

//இல்லாத மொழி எப்படி சாகும் ?//

இல்லாத செத்தமொழி = செத்து(அழிந்து)ப்போனதால் இல்லாது போன மொழி சம்ஸ்கிருதம்.

உண்மையில், வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டி பொம்மை போல, ஆரிய பார்ப்பனர்களால் செயற்கையாக உருவக்கப்பட்ட மொழி அது. "சம்ஸ்கிருதம்" என்றாலே, "செய்யப்பட்டது" என்பதுதான் பொருள்.

ஆக, செயற்கையாக உயிர் கொடுக்க முயன்ற சம்ஸ்கிருதம் அல்ப ஆயுசிலேயே போய் சேர்ந்து விட்டது.
ஆனால், அதற்காக மக்கள் வரிப்பணத்தை இன்னும் செலவு செய்யும் பார்ப்பன திறமையை பாராட்டத்தான் வேண்டும்.

வஜ்ரா said...

அருள்,
உங்களுக்கு என்ன பிரச்சனை ?

பார்ப்பானர்களைப் பிடிக்காது, சமஸ்கிருதம் செத்துப்போச்சு, ஆர்.எஸ்.எஸ் சதி, எல்லாம் நீங்க நம்புறது...உங்களை மாதிரி ஒரு 10 பேர் இதே டோண்டுவிடம் வந்து இதே விஷயத்தை பேசித் தீர்த்துவிட்டனர். நீங்க பதினொண்ணாவது...அது உங்களுக்குத் தெரியுமா ?

இது ஒரு பப்ளிக் ஃபோரம். இங்கே உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அதே தான் மற்றவார்களுக்கு உள்ளது.

நீஙக்ள் சொல்லவேண்டியதை கோர்வையாக உங்கள் வலைப்பதிவிலேயே பதிவாக்குங்கள். சும்மா சும்மா இங்கே வந்து இப்படி உதிரியாக உங்கள் எனர்ஜியை வேஸ்ட் செய்யாதீர்கள்.

சாமக்கோடங்கி said...

சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குழந்தையுடன் இந்தியாவிற்கு வந்த தம்பதியினர், தங்கள் குழந்தை பிழைத்தவுடன் கண்ணீர் மல்க இந்தியாவிற்கு நன்றியளிக்கும் விதத்தில் பேட்டி அளித்தனர்.. இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.. நமது சிறப்பே மனிதாபிமானம் தான்.. வந்தாரை வாழ வைத்ததால் தான் இந்தியா அழிந்தது என்று சொன்னால் தவறு.. அதனால் தான் நாம் வாழ்கிறோம்.. செத்ததால் தான் கர்ணன் வாழ்கிறான்..

நீங்கள் அந்த மூதாட்டியை சுற்றி நடக்கவிருந்த நாடகத்தைப் பற்றிப் பேசினீர்.. நான் அந்த மூதாட்டியின் நிலையை மட்டுமே யோசிக்கிறேன்.. சிகிச்சை பெற்றுக் கொண்டு அவர் திரும்பி விடுவார்.. அரசியல் வியாதிகள் இதைக் கொண்டு கொஞ்ச காலம் அரசியல் பண்ணுவர்...

ஆனால் இப்போது சும்மா திருப்பியனுப்பியதன் மூலம் மனுதர்மம் இங்கே மண்ணில் புதைக்கப் பட்டதை உணர்கிறேன்..

உங்களின் இந்தப் பதிவில் எனக்கு உடன்பாடில்லை..

dondu(#11168674346665545885) said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
1. உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.

2. பார்வதி அம்மாளுக்கு முதலில் விசா கொடுத்ததே தவறு.

3. சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி செய்த சொதப்பல் அது. தடை செய்யப்பட்ட நபர்கள் லிஸ்டை அவர் சரியாக கவனிக்கவில்லை.

4. நான் சொன்ன சினோரியோக்களை அரசும் நினைத்திருக்கிறது.

5. அவரை ரகசியமாக கொண்டு வர அவரது ஆதரவாளர்கள் எண்ணீயதன் காரணங்கள் விஷமத்தனமானவை. என்னமோ தாங்கள் மட்டும் அக்கறை கொண்டவர்கள் போல காட்டும் முயற்சி.

6. ஒரு விசா சொதப்பல் ஆனது என்பதற்காக அரசு மேலும் மேலும் தவறுகள் செய்ய முடியாது.

7. ஆகவே அவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.

8. உள்ளே விட்டிருந்தால் இன்னும் பல டிராமாக்கள் புலிகள் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கும். அது இன்னும் பல தேவையற்ற சங்கடங்களை இந்தியாவில் உருவாக்கியிருக்கும்.

9. முதலிலிருந்தே ஓப்பனாக புலிகள் ஆதரவாளர்கள் நடந்து பார்வதி அம்மாள் வருவதை பிரகடனம் செய்திருந்தால் விசா மறுப்பு என்னும் நிலையிலேயே விஷயம் முடிந்திருக்கும்.

10. அதை வேண்டுமென்றே செய்யாது, அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த நினைத்துள்ளனர்.

11. ஆனால் அரசு அந்த வலையில் விழ மறுத்து விட்டது. அவரை விமானத்தை விட்டுக்கூட இறங்கவே விடவில்லை. வேண்டுமென்றே அவரை இந்த சங்கடமான நிலைக்கு உள்ளாக்கியவர்கள் அவரது ஆதரவாளர்கள் என எண்ணப்படுபவர்களே.

12. பாகிஸ்தானியர் விஷயத்தில் அவர்கள் ஒன்றும் தடை செய்யப்பட்ட லிஸ்டில் இல்லையே, அதுவும் முதலிலிருந்தே முறைப்படி விண்ணப்பங்கள் சமர்ப்பித்து அவற்றை சரியான வழிமுறைகளில் அனுப்பி அனுமதி வாங்கியுள்ளனர். அதையும் இதையும் கம்பேர் செய்ய முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமக்கோடங்கி said...

//தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.//

ஒரு தாய் தன் மகனை நினைத்துப் பேட்டி தருவதில் என்ன தவறு இருக்கிறது என்று கொஞ்சம் சொல்லவும்..

ஒரு தாயைப் பற்றி யார் வேண்டுமானாலும் இப்படி எழுதலாம் என்றால் நாமும் ஒவ்வொரு தாய்க்குப் பிறந்தவர் தானே...?

உங்கள் இந்த வரியில் நீங்கள் நியாயம் தவறி விட்டதாக உணர்கிறேன்.. இதற்க்கு நீங்கள் "நான் எழுதியது சரி" என்று பதிலளிக்கும் பட்சத்தில் அது உங்களின் மரியாதைக்கு ஒரு இழுக்கு.. நடுவுநிலை தவறாது பதில் சொல்லவும்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

சாமக்கோடங்கி said...

//பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்.//

அஹா.. இல்லைன்னா மட்டும் நமது வரிப்பணங்கள் நல்ல முறையில் மட்டுமே செயல்படுத்தப் படுகின்றன...

அரசு சார்பில் நடத்தப் படும் ஒவ்வொரு விழாவிற்கும் ஆகும் செலவு எவ்வளவென்று நான் சொல்லத் தேவை இல்லை...

இந்த வரியை நீங்க உபயோகப் படுத்தியது உங்க தரப்பை நியாயப் படுத்த நீங்க தனிப்பட்ட முறையில் செத்திக்கிட்ட ஒரு சாக்கு... அரசு கூட இதைப் பத்தி யோசித்து இருக்காது..

பிரகாஷ் (எ)சாமக்கோடங்கி

சாமக்கோடங்கி said...

//இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்//

நம் நாட்டில் குஷ்பு போன்ற நடிகைகளுக்குத் தான் கோவில்களும் சிலைகளும் எழுப்ப அனுமதி...

அடப்போங்க ஐயா.. உங்கள் கற்பனை அதீதமானது.. அப்படி நடந்தாலும் பெருவாரியான மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒருவர் அதற்குத் தகுதியானவர்தான் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா..? அது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன...?

dondu(#11168674346665545885) said...

//ஒரு தாய் தன் மகனை நினைத்துப் பேட்டி தருவதில் என்ன தவறு இருக்கிறது என்று கொஞ்சம் சொல்லவும்..//
அவ்வாறு பேட்டி தருவது தவறு என்று நான் எங்கே சொன்னேன் என்பதை நீங்கள் எடுத்துக் காட்டவும்.

நான் சொன்னது ஒரு சினேரியோ. புலி ஆதரவாளர்கள் அவரை அவ்வாறு பேட்டி தர வைத்திருப்பார்கள். அதனால் பல குழப்பங்கள் வரும்.

இதையெல்லாம் யோசித்துத்தான் அரசும் அவ்வாறு செய்துள்ளது. அதைத்தான் நானும் எழுதினேன்.

அப்படியே பார்வதி அம்மாளை உள்ளே விட்டிருந்தாலும் அது மேலும் குழப்பத்தை வரவழைத்திருக்கும் என்னும் எனது கருத்திலும் மாற்றமில்லை. அவருக்கும் மன உளைச்சல் அதிகரித்திருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அப்படி நடந்தாலும் பெருவாரியான மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒருவர் அதற்குத் தகுதியானவர்தான் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா..?//
கண்டிப்பாக மறுப்பேன். இதுவரை பார்வதி அம்மாளை பற்றி மட்டும் பேச்சு நடந்ததாலேயே சொல்லாமல் இருந்த விஷயங்களை சொல்ல உங்கள் இப்பின்னூட்டம் வாய்ப்பளித்தது.

நமது நாட்டின் பிரதமரையே போட்டுத் தள்ளி கூடவே ஐந்து பேரையும் போட்டுத் தள்ளிய புலிகளின் இந்தத் தலைவர் ஒளிந்து கொண்டிருந்த குற்றவாளி. மாட்டிக் கொண்டிருந்தால் தூக்கு மேடையில் உயிரை விட்டிருக்க வேண்டியவர்.

கண்டிப்பாக இந்தியாவின் பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அல்ல. அவர் இறந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரது கெட்டச் செயல்களை மறக்கவியலாது.

யாழ்ப்பாணத்திலிருந்து சில மணி நேரம் மட்டுமே அவகாசம் தரப்பட்டு, புலம் பெயர வைக்கப்பட்ட இசுலாமியர்களுக்கு இவர் செய்த கொடுமைகள் தெரியாதா? அவ்வாறு புலம் பெயர்ந்தபோது எவ்வளவு இசுலாமியத் தாய்மார்கள் பார்வதி அம்மாள் நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

ஒரு விதத்தில் பார்த்தால் புலிகளும் அவர்களது தலைவனும் செய்த இந்தப் பாபம் பிரபாகரனது அன்னை மேல் விடிந்திருக்கிறது என்று கூடக் கூறலாம்.

1991 வரை குன்சாக ஆதரவு தரும் மனநிலையில் இருந்த தமிழக மக்கள் ராஜீவ் கொலைக்கு அப்புறம் அப்படியே உல்டாவாக மனபாவம் கொண்டது இந்த மகானுபாவனின் கைங்கர்யத்தால்தான்.

அப்புறம் என்ன பேசுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அரசு கூட இதைப் பத்தி யோசித்து இருக்காது..//
அப்படியா, தேவலையே? அரசு என்ன செய்திருக்கும் என்பதை இவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறீர்களே? பேஷ் பேஷ்.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நான் எழுதிய இப்பதிவுக்காக ஆளாளுக்கு பார்ப்பனர்களை திட்டினார்களே, அதையெல்லாம் சரி என்பீர்களா? அல்லது சரியில்லை எனத் தோன்றியிருந்தால் அதை சம்பந்தப்பட்ட பதிவுகளில் சுட்டிக் காட்டி உள்ளீர்களா?

பை தி வே பார்வதி அம்மாள் விஷயத்தில் உங்கள் தரப்பிலிருந்து ஒன்றையும் காணோமே?

அன்புடன்
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமக்கோடங்கி said...

//அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நான் எழுதிய இப்பதிவுக்காக ஆளாளுக்கு பார்ப்பனர்களை திட்டினார்களே, அதையெல்லாம் சரி என்பீர்களா? அல்லது சரியில்லை எனத் தோன்றியிருந்தால் அதை சம்பந்தப்பட்ட பதிவுகளில் சுட்டிக் காட்டி உள்ளீர்களா?//

நான் ஒருதலை பட்சமாக நடப்பதில்லை ராகவன் ஐயா.. நான் இன்னும் பலரது தளங்களுக்கு செல்லவில்லை. உடன்பாடில்லாத பட்சத்தில் பண்புடன் எதிர்ப்பு தெரிவிப்பேன்.. கொச்சையாக எழுதும்போது எதுவும் விமர்சனம் செய்ய மாட்டேன்.. அது எனக்கு ஒத்து வராது.. அது கண்டனத்திற்குரியது.. இங்கே பண்புடன் அனைவரும் விவாதம் செய்யவே நான் வந்துள்ளேன்.. நான் எழுதியதில் எங்கேனும் வரம்பு மீறப் பட்டிருப்பின் சுட்டிக் காட்டவும். அப்புறம் என் வலைப் பக்கத்தில் இது போன்றவற்றை இன்னும் எழுதத் தொடங்கவில்லை.. இனிமேல் எழுதலாம்..

சாமக்கோடங்கி said...

//பை தி வே பார்வதி அம்மாள் விஷயத்தில் உங்கள் தரப்பிலிருந்து ஒன்றையும் காணோமே?//

தனிப்பட்ட உங்களைத் திட்ட எனக்கு ஆசையில்லை.. யாரையும் அப்படி வசையவும் மாட்டேன்..

உங்கள் கருத்துகளுக்கு என் பின்னூட்டத்தை நேரடியாக உங்கள் பதிவிலேயே போட்டு விட்டேன்..

உடன்பாடு இல்லை என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து விட்டேன்..

பார்வதி அம்மாவின் பிரச்சினையை இன்னும் நான் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மனிதம் மறுக்கப்பட்டதாகவே பார்க்கிறேன்.. இது என் கருத்து.. அது உங்களுடன் உடன்படாததால் எதிர்மறை வாக்கை உங்களுக்கு அளித்திருக்கிறேன்..

நன்றி..
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

அருள் said...

////கண்டிப்பாக இந்தியாவின் பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அல்ல.///

அய்யா டோண்-டூ, உண்மைதான். மாவீரன் பிரபாகரன் "இந்தியாவின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அல்லதான். ஆனால், "தமிழகத்தின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அவர்.

அம்மாவை திட்டினாலோ, அம்மாவுக்கு சிகிச்சை தரக்கூடாது என்றாலோ எந்த பிள்ளைக்கும் கோபம் வரத்தான் செய்யும். தமிழ் உணர்வுள்ள பல பேர் அவங்கள தன்னுடைய அம்மா போலதான் நினைகிறாங்க. இதுதான் டோண்-டூ கூட்டத்தின் எரிச்சலுக்கு காரணம்.

இரண்டாயிரம் வருடங்களா அடக்கி ஒடுக்கியும் - இன்னும் அடிமையாகாம எதிர்த்து நிற்கிறார்களே என்கிற இயலாமைதான் டோண்டுவை இப்படி எழுத வைகிறது.

டோண்-டூ கருத்து சுதந்திரம் என்ற பெயரில் "கருத்து பயங்கரவாதத்தை" செய்து வருகிறார். கருத்து சுதந்திரம் என்ற பேரில் அடுத்தவங்க மனச புண்படுத்துவதே இவங்க வேலையாபோச்சு.

பத்திரிகை உலகில ஒரு சோ, அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, வலைப்பூவில் ஒரு டொன்டு - இன்னும் எத்தனைகாலத்துக்குதான் ஒன் மேன் ஆர்மி ஓடும்? கட்டைல போறவரைக்கும்தான? ஓடட்டுமே.

dondu(#11168674346665545885) said...

//பை தி வே பார்வதி அம்மாள் விஷயத்தில் உங்கள் தரப்பிலிருந்து ஒன்றையும் காணோமே?//
நான் கேட்டது உங்கள் வலைப்பூவில் இது பற்றி ஏன் பதிவு போடவில்லை என்றுதான்.

மற்றப்படி நீங்கள் எனக்கு நெகட்டிவ் ஓட் போடாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஆனால், "தமிழகத்தின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அவர்.//

ஏனெனில் ராஜீவை கொன்றவர், இலங்கை இசுலாமியருக்கு தீங்கு விளைவித்தவர் அதனால்தானோ?

டோண்டு ராகவன்

அருள் said...

//ஆனால், "தமிழகத்தின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அவர்.//

////ஏனெனில் ராஜீவை கொன்றவர், இலங்கை இசுலாமியருக்கு தீங்கு விளைவித்தவர் அதனால்தானோ?////

ராஜீவை கொன்றவர் சுப்ரமணியன் சாமி + சந்திராசாமி கும்பல். ஆனால், ரொம்ப உஷாரா லண்டன்ல கொண்டுபோய் ஃபைல தொலைச்சீங்க...கூட்டு விசாரணைக்குழு போட்டு இன்னும் விசாரணையையே முடிக்க முடியல.

ராஜீவ் கொலைல பங்கேற்றவர் முன்னாள் ஈழப்போராளி என்பது தவிர வேறு என்ன ஆதாரம் இருக்கு.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் கதை என்ன? காந்தியை கொன்னீங்க. கொலை சதியின் மூளை சாவர்க்கருக்கு நாடாளுமன்றதுல படமே வச்சுட்டிங்க.

////இலங்கை இசுலாமியருக்கு தீங்கு விளைவித்தவர் அதனால்தானோ?////

இஸ்லாமியர்களை கொலை செய்யரது தமிழர்களோட வேலை இல்லை. ஏன்னா, அவங்களும் தமிழர்கள்தான்.

ஆனால், காந்தியை கொல்லும் போது கோட்ஸே "இஸ்மாயில்" என்ற பெயரை பச்சை குத்தி கலவரத்தை உண்டு பண்ண திட்டம் போட்டான். இராமனுக்கு கோயில் கட்டுவதாகக்கூறி அப்பாவி முஸ்லீம்களை கொன்னீங்க. மிகப்பெரிய இனப்படுகொலையை செய்த மோடி இன்னைக்கு முதலமைச்சர்.

மற்றவர்களை குற்றம் சொல்லுவதால் உங்கள் கூட்டதின் கொடூர முகத்தை மறைத்துவிட முடியாது.

dondu(#11168674346665545885) said...

இஸ்மாயில் என கோட்சே பச்சை குத்திக் கொடிருந்தான் தன் கைகளில் என்ற குற்றச்சாட்டு பச்சைப் பொய்.

காந்தியும் கோட்சேயும் என்னும் தலைப்பில் நான் இரு பதிவுகள் இட்டுள்ளேன், அங்கு இந்த விஷயத்தையும் நீங்கள் சொல்லும் மற்ற அவதூறுகளையும் நான் கையாண்டு பதில் கூறியுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_15.html

http://dondu.blogspot.com/2006/01/2.html

அதெல்லாம் இருக்கட்டும், பார்வதி அம்மாள் விவகாரம் குறித்து உங்கள் வலைப்பூவில் ஏன் ஒரு பதிவும் இல்லை? இங்கு வந்து பாப்பானை திட்ட மட்டும்தான் அது பற்றி பேச வந்துள்ளீர்களா?

உங்களைப் போன்ற பார்ப்பன வெறுப்பாளர்களுடன் எல்லாம் வாதம் செய்வதே வீண்.

போய் வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கவும்.

டோண்டு ராகவன்

அருள் said...

///காந்தியும் கோட்சேயும் என்னும் தலைப்பில் நான் இரு பதிவுகள் இட்டுள்ளேன்///

சரி, இதையும் படிச்சுக்கங்க:

http://urpudathathu.blogspot.com/2006/01/blog-post_16.html

///பார்வதி அம்மாள் விவகாரம் குறித்து உங்கள் வலைப்பூவில் ஏன் ஒரு பதிவும் இல்லை///

என்னுடைய வலைப்பூவில் எழுதுவதும், எழுதாததும் என்னோட விருப்பம்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் "கருத்து பயங்கரவாதத்தை" எதிர்ப்பதற்கு எனக்கு உரிமை உண்டு. அதை வெளியிடுவதும், வெளிடாததும் உங்க விருப்பம்.

"ப்ளாக்" எல்லாம் உங்களோட தனிச்சொத்து இல்லையே!

dondu(#11168674346665545885) said...

///பார்வதி அம்மாள் விவகாரம் குறித்து உங்கள் வலைப்பூவில் ஏன் ஒரு பதிவும் இல்லை

என்னுடைய வலைப்பூவில் எழுதுவதும், எழுதாததும் என்னோட விருப்பம்.//

அது, அதைத்தான் சொல்கிறேன். அந்த விவகாரம் உங்களுக்கு முக்கியமானதாக படவில்லை. எல்லா இடங்களிலும் பாப்பானை திட்டவே அதை பயன்படுத்துகிறீர்கள்.

இனிமேல் உங்கள் பின்னூட்டங்கள் இப்பதிவில் அனுமதிக்கப்பட மாட்டாது. வேறு எங்காவது போய் வாந்தி எடுக்கவும்.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//நான் ஒருதலை பட்சமாக நடப்பதில்லை ராகவன் ஐயா.. நான் இன்னும் பலரது தளங்களுக்கு செல்லவில்லை. உடன்பாடில்லாத பட்சத்தில் பண்புடன் எதிர்ப்பு தெரிவிப்பேன்.. கொச்சையாக எழுதும்போது எதுவும் விமர்சனம் செய்ய மாட்டேன்.. அது எனக்கு ஒத்து வராது.. அது கண்டனத்திற்குரியது.//

அப்படியா, அப்படியானால் உங்களது இன்றைய தேதியிட்ட பின்னூட்டம் இங்கே அது எதையும் குறிக்கவில்லையே, பார்க்க: http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html

முக்கியமாக உங்கள் பின்னூட்டத்திற்கு முந்தைய பின்னூட்டத்துக்கு ஒரு எதிர்வினையும் கூறியதாக தெரியவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Suresh Ram said...

தியாகி வாஞ்சிநாதனனின் விதவை பார்ப்பனத்தி என்பதற்காகவே விடுதலை பத்திரிகை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது ஆஷ்துரை கலெக்டர, கொன்றது ராஜத்துரோகம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று விடுதலை பத்திரிகை எழுதியது. 60 ஆண்டுகள் விதவை பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்தார்.

dondu(#11168674346665545885) said...

@பிரகாஷ்
உங்கள் மனதில் என்னதான் நினைத்திருக்கிறீர்கள். அந்த ஆட்சேபத்துக்குரிய பின்னூட்டத்துக்கு அங்கு ஆட்சேபம் தெரிவிக்க வக்கில்லை. இங்கு அதை அப்படியே கோட் செய்கிறீர்?

அதை என் பதிவிலும் போட வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணம் உமக்கு. இங்கே வந்து அதை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ஆயிற்றா? எவனாவது காதில் பூ வைத்தவன் இருப்பான், அவனிடம் போய் சொல்லிக்கொள்.

பெரிய பிடுங்கி மாதிரி “நான் ஒருதலை பட்சமாக நடப்பதில்லை ராகவன் ஐயா.. நான் இன்னும் பலரது தளங்களுக்கு செல்லவில்லை” என்கிறீர்கள், ஆனால் போனால் அங்கு சரியாகச் சொல்ல துப்பில்லை.

உமது இரட்டை வேஷ நிலையை வெறுக்கிறேன்.

வன்மத்துடன் அப்பின்னூட்டத்தை கோட் செய்ததால் உமது இப்பின்னூட்டத்தை வெளியிடவில்லை. இனிமேல் உமது பின்னூட்டங்கள் இப்பதிவுக்கு தேவையில்லை, வந்தாலும் அவை மட்டுறுத்தப்படாது.

டோண்டு ராகவன்

Anonymous said...

//
தியாகி வாஞ்சிநாதனனின் விதவை பார்ப்பனத்தி என்பதற்காகவே விடுதலை பத்திரிகை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது ஆஷ்துரை கலெக்டர, கொன்றது ராஜத்துரோகம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று விடுதலை பத்திரிகை எழுதியது. 60 ஆண்டுகள் விதவை பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்தார்.
//

பார்ப்பானத்திக்கு பென்சன் தரக்கூடாது என்று சொன்னது கூட ஓ.கே....ஜாதி துவேசத்தைப் பேசுபவர்கள்...திருந்தக்கூடும் என்று சொல்லலாம்.

ஆஷ்துரையைக் கொன்றது ராஜதுரோகம் என்பது தான் பெரிய பிரச்சனை.
ஏந்த ராஜாவுக்கு துரோகம் என்று அவர்கள் விளக்கவேண்டும்..வெள்ளையனுக்கு சொம்பு தூக்கிப் பழக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று நாடாளுகிறார்களா ?

Anonymous said...

//@ஜோ அமலன் ராயென் ஃபெர்னாண்டோ
வஜ்ரா என்பவரை பெர்சனலாகவே பல பதிவர்களுக்கு தெரியும். இஸ்ரேலில் இருந்தவர். அவருடன் நானும் போனில் பேசியுள்ளேன்.

ஆனால் உம்மைப் பற்றி அவ்வாறு சொல்லவியலாது. ஆனால் எனக்கென்னவோ நீங்கள் எழுதும் ஸ்டைலை பார்த்தால் ஆதிசேஷன் என்னும் ஒரு பதிவர் நினைவுக்கு வருகிறார்.

ஆக, ஆனாமத்து உண்மையிலேயே நீங்கள்தான். பிளாக்கராக இருந்தாலும் வெரிஃபை செய்யப்படாத நபர்.

டோண்டு ராகவன்//

எனக்கு ஒன்னே ஒன்னு புரியல.

இங்கே எதற்கு வந்திருக்கிறோம் ? கருத்துகளை ஒட்டியும் வெட்டியும் பேசத்தான்.

நீங்கள் எதற்கு எழுதி, பொதுவிடத்தில் வைக்கிறீர்கள்? மற்றவர்கள் நீங்கள் எழுதியதைப் படித்து என்ன நினைக்கிறார்கள் என்ற ஆவலால்தான்.

அவர்களின் bio data உங்களுக்கு எதற்கு உதவும்?

ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான். உங்களை தனிநபர் விமர்சனத்தை செய்ய, பொறுக்கமாட்டாமல் நீங்கள் போலிஸ் கம்ப்ளெயின் கொடுக்க மட்டுமே!

மற்றபடி,உங்களுக்கு எதைச்சொல்ல விருபமோ, அதை மறுத்துப்பேச மாற்றாருக்கு விருப்பம். இருவருக்கும் உரிமை கொடுப்பத்துதான் நல்ல பொதுவிட இலக்கணம்.

அப்படி இல்லயென்றால், நீங்கள், வெறும் கூகுல் அக்கவுண்டு பத்தாது. உங்கள் bio data தெளிவாகக் கொடுத்தபின்னேதான் எழுதவும் என முன்னெச்சரிக்கை கொடுக்கலாமே...?

dondu(#11168674346665545885) said...

//அவர்களின் bio data உங்களுக்கு எதற்கு உதவும்?//
வஜ்ரா அனானியாகவே பின்னூட்டமிடலாம் என்னும் பொருள்பட பேசியது நீங்கள். அவ்வாறில்லை அவரை தனிப்பட்ட முறையில் இங்கு அறிந்தவர்கள் உண்டு (நானும் அதில் உண்டு.

ஆகெவே நீங்கள்தான் மர்மமான நபர் என நான் கூறலானேன்.

நீங்களும் மற்றவர்களது பயோடேட்டாக்கள் பற்றி கவலை கொள்ள வேண்டாம். வஜ்ராவை பார்ப்பனர் என தேவையின்றி ஏன் கூறவேண்டும்?

டோண்டு ராகவன்

venkatrahman said...

வன்மையாகக் கண்டிக்கத் தக்கது கருணாநிதியின் இப்பாராமுகச் செயல்.வெட்கப்படுகிறேன் தமிழ்நாட்டில் பிறந்தோமே என்று.

ஜோதிஜி said...

ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் குறித்து தீட்சீத் புத்தகம் கூட படிக்கவில்லையா?

ஜோதிஜி said...

புலிகளை நான் தீய சக்தியாகவே பார்க்கிறேன். அவர்களை என்கரேஜ் செய்யக் கூடிய எந்த விஷயமும் எனக்கு ஒப்புதல் இல்லை.


இத்தனை தூரம் உங்கள் கருத்தில் பிடிவாதமாக இருக்க நீங்கள் உணர்ந்த கேட்ட பார்த்தவற்றை ஒரு இடுகையாக இடுங்கள்.

எதனால் இந்த அளவிற்கு உங்கள் மனத்தில் இப்படி ஒரு கருத்து வந்தது என்பதை புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

dondu(#11168674346665545885) said...

@ஜோதிஜி
1. புலிகள் முடிந்து போன கதை.

2. அவர்கள் பற்றி பேச எல்லாம் எனக்கு நேரம் இல்லை.

3. அதே சமயம் அவர்களை பின்வாசல் வழியாக உள்ளே நுழைக்கும் எந்த முயற்சியையும் நான் எதிர்ப்பேன்.

4. ஆகவே இந்தப் பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Suresh Ram said...

பார்வதியம்மாளின் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
. மனிதம் அறக்கட்டளையின் அமைப்பாளர் அக்னி சுப்பிரமணியன் என்பவர் மூலம் வந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கடிதம் தமிழுணர்வாளர் சுப.வீரபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுய நினைவு பாதித்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதியம்மாளால் இப்படி ஒரு கடிதத்தை சுய நினைவோடு எப்படி எழுத முடியும்? பார்வதியம்மாள் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கடிதத்தின் படி விசா விண்ணப்பித்தால் அதற்கான நேர்முகத்திற்கு அவரே செல்வாரா? அவரால் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலுமா? என்பதெல்லாம் இக்கடித்ததின் பின்னால் எழும் கேள்விகள். ஒரு வயதான சுயநினைவு சரியாக இல்லாத அம்மாள் தனது கைப்படக் கடிதம் எழுதவேண்டுமென்றால் இதை விட வக்கிரமும், ஆபாசமும் என்ன இருக்கிறது?

http://www.vinavu.com/2010/04/30/parvathi-karuna/

dondu(#11168674346665545885) said...

டோமர் பட்டாபட்டியின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் போட்டுள்ளேன், பார்க்க: http://pattapatti.blogspot.com/2010/05/blog-post_09.html

நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளது அதர் ஆப்ஷனில் வந்து இன்னொருவர் பெயரில் அவரது உரல்/பிளாக்கர் நம்பரை பயன்படுத்திப் போடுவது. அது மிகவும் அபாயகரமான ஆப்ஷன் என்பதை நான் பல இடங்களில் பல முறை கூறியுள்ளேன்.

இங்கு அதை சாடி அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீக்கியதற்கு பாராட்டுகள்.

ஆனால் உங்களது இந்தப் பதிவில் நீங்களும் அதே தவற்றைத்தானே செய்தீர்கள்? பார்க்க: http://pattapatti.blogspot.com/2010/04/vs.html

நான் பலமுறை அதை வேறு இடங்களில் - முக்கியமாக தண்டோராவின் பதிவில், பார்க்க: http://www.thandora.in/2010/04/blog-post_21.html காட்டினாலும் அதற்கான நேரான பதிலைக் கூறாது தமிலிஷிலிருந்து எனக்கு வந்த ஆட்டோ-ட்ரிக்கர் செய்தியை வைத்து கேலி பேசிக் கொண்டிருந்தீர்கள்.

இப்பின்னூட்டத்தை இடும் முன்னால் எதற்கும் இருக்கட்டும் என உங்கள் டோமர் பதிவையும் போய் பார்த்தேன், அங்கு அந்த என் பெயரில் வந்த அதர் ஆப்ஷன் பின்னூட்டங்கள் அப்படியே உள்ளன.

இப்போது உங்கள் ஆட்கள் பாதிக்கப்படும்போது இப்பதிவை போடுவது நகைப்புக்குரியதே.

நீங்கள் இப்பின்னூட்டத்தை போட மறுத்தாலும் மறுக்கலாம். ஆகவே எதற்கும் இருக்கட்டும் என இதையே
எனது பார்வதி அம்மாள் பற்றிய ப்திவிலும் 248-ஆவது பின்னூட்டமாக போட்டு வைக்கிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html
டோண்டு ராகவன்

அருள் said...

@annamalai

இனவெறி சாதிவெறி பிடித்த பார்ப்பனக் கூட்டம் மட்டும்தான் இந்தியாவா? மிஸ்டர் அண்ணாமலை.

"விடுதலைப்புலிகளுக்கு காட்டும் சிறு தயவு கூட இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பேராபத்து" என்று உதார் விடுகிறீர்களே... தெரியாமல் தான் கேட்கிறேன் - உங்களது உடன்பிறந்த சகோதரன் ராசபட்சே தான் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகக் கூறுகிறாரே, அப்புறம் எப்படி பார்ப்பானின் நாட்டுக்கு பேராபத்து வரும்?

ஆளே இல்லை என்று சொல்லிவிட்டு பிறகு இல்லாதவர் நிழலைப் பார்த்து எதற்காக நடுங்குகிறீர்கள்?

எதிரிகள் இல்லாது செத்து ஒழிந்தால் கூட - அவர்களது எலும்பைத் தோண்டி எடுத்து அதிலும் இரத்தம் வராதா என்று நக்கிப்பார்க்கும் வெறி பிடித்தக்கூட்டமா, உங்கள் பார்ப்பனக்கூட்டம்?

«Oldest ‹Older   201 – 248 of 248   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது