ஜூன் 5-ஆம் தேதி 2010 என்று நடந்த பதிவர் சந்திப்பு பற்றி நான் இட்ட இப்பதிவில் அதியமான அவர்களது பின்னூட்டம் ஒரு பதிவுக்கான விஷயங்களையே தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே அதை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிடுகிறேன். ஓவர் டு அதியமான்:
K.R.அதியமான் said...
வினவு குழுவை சேர்ந்த ‘தளபதி’ என்ற தோழரும் பதிவர் சந்திப்பிற்க்கு வந்திருந்தார். ஆனால் தான் ஒரு வாசகன் என்று மட்டும்தான் என்று தெரிவித்தார். அவர் வினவு குழுவை சேர்ந்தவர் என்பது, டீக்கடையில் அவருடன் சூடான விவாதம் செய்த போதுதான் தெரிந்தது. சில ஆண்டுகள் முன்பு இளம் கவிஞர் சங்கர ராமசுப்பிரமண்யன் எழுதிய ஒரு (ஈராக் போர் பற்றிய) கவிதையின் ‘அரசியல்’ பற்றி ‘விளக்கம்’ கேட்க அவருடைய வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, அவரை மிரட்டி ம.க.இ.க அலுவலகத்திற்க்கு ‘அழைத்து’ சென்ற விவகாரம் குறித்து சூடான விவாதம். நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும் கலந்து கொண்டார்.
தோழர் தளபதி அந்த அத்துமிறலை நியாயப்படுத்தினார். புதிய ஜனனாயகம் இதழில் திருமாவின் பொறுக்கி அரசியல் என்று எழுதியதற்க்காக, ’அறச்சீற்றம்’ அடைந்த வி.சிறுத்தைகள் சிலர் ம.க.இ.க அலுவலகத்தில் நுழைந்து ‘விளக்கம்’ கேட்டதை ஒப்பிட்டேன். அது தவறு என்றால், இவர்கள் ச.ர.சுப்பிரமண்யன் விசியத்தில் செய்ததும் தவறுதான். அல்லது இரண்டும் சரிதான். ஒன்றை மட்டும் நியாயப்படுத்த முடியாது என்றேன். இல்லை என்றார்.
மேலும் அ.மார்க்ஸின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அறிவுஜீவிகளின் ‘வெறுப்பு’ பற்றி பேசினார். செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன். அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். கவனிக்கவும். தடை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. கமிட்டி முடிவு செய்யும் என்றார். இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனனாயகம் பற்றிய கோட்பாடு.
சுகுணா திவாகர் உங்களின் உண்மையான ’தோழர்’. அவரை போய் இப்படி தாக்குதவது மூடத்தனம் என்றேன். மிக முக்கியமாக, அவர் வேலை செய்யும் பத்திர்க்கையின் பெயர் மற்றும் சுகுணாவின் இயற்பெயரை வேண்டுமென்றே உங்கள் பதிவில் சுட்டிக்காட்டி அவருக்கு வீண் பிரச்சனை செய்ய முயல்கிறீர்கள். இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்றேன். பைத்தியாரன் வேலை செய்யும் துறை பற்றி அவருக்கு ஒரு முறை பின்னூட்டம் இட்ட போது, வேண்டாம் என்று அவர் என்னை தடுத்தார். ஆனால் சுகுணாவிற்க்கு மட்டும்….
கிட்டதட்ட இரண்டு மணி நேரம் விவாதம். நேரமாகிவிட்டதால் விடை பெற்றேன்.
வினவு குழு ‘தோழர்’ ஒருவரை முதன் முறையாக நேரில் சந்தித்த ’பாக்கியம்’.
இவர் என்ன ’பெயரில்’ அங்கு ’பின்னூட்டம்’ இடுகிறவர் என்று யோசித்தபடியே வீடு திரும்பினேன்.
June 07, 2010 3:41 PM
வினவு/ம.க.இ.க கும்பலுக்கு நிஜமாகவே அதிகாரம் கிடைத்து ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? இதற்கெல்லாம் கற்பனையே தேவைடில்லை. கிழ்க்கு ஐரோப்பாவில் உள்ள பல தேசங்களில் கம்யூனிஸ்டுகள் சிறுபான்மையினராகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஆட்டை கடித்து எப்படியோ ஆட்சிக்கு வந்ததும் மீதி எல்லா கட்சிகளையும் அழித்ததே விதிவிலக்கில்லாமல் நடந்தது. அதாவது ஆட்சிக்கு வரும் வரையில் ஜனநாயகம் எல்லாம் பேசி அது தரும் சுதந்திரங்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள். பிறகு ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்துக்கு ஆப்புதான்.
என்ன வினவு/ம.க.இ.க அராஜக கும்பல் அதற்குக் கூட பொறுமை இன்றி இப்போதே அராஜகச் செயல்களை ஆரம்பிக்கிறார்கள்.
தளபதி வினவு என்ன பெயரில் பின்னூட்டமிடுகிறார் என அதியமான் கேட்கிறார். அவரது இந்தச் செயல்பாட்டை வைத்து அவர் என்ன பெயரில் பின்னூட்டமிட்டிருப்பார் என்பதையும் ஊகிக்க முயற்சிக்கலாமே நாம் எல்லோரும். ஆனால் அசிங்கமான பெயர்கள் வேண்டாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
15 hours ago
136 comments:
உங்கள் பதிவுக்கு பலம் சேர்க்க எனது பதிவையும் இங்கு இணைக்கிறேன்.
வினவின் விஷமப் பட்டியல்கள்
உண்மைகள் ஊர்க்கு தெரியட்டும்
அற/ர டிக்கெட்டு
போல் போட்,ஏழர,சின்னதாடி அங்கமுத்து போன்ற அழகான பெயர்களில் வலம் வருபவர் இவர் தானா?
டோண்டு அவர்களே,
வினவு groupukku நீங்கள் சளைத்தவர் அல்ல என்பதை மறுபடியும் நிருபிக்கின்றீர். அந்த குரூப் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள். அவர்களை
தனியாக அவர்கள் தொழிலை செய்ய விடுங்கள். வீணாக அவர்கள் வலையில் சிக்க வேண்டாம். எரிகிற கொள்ளியில் என்னை ஊற்றுவது போல மறுபடியும் செய்யவேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?
யாருமே அவர்களை சீண்ட வேண்டாம் என்று சொல்லுகிறேன். துட்டர்களை கண்டால் தூர போ என்று உமக்கு தெரியாதா? அவர்களுக்கு என்று ஒரு கூட்டம் அவர்களுக்குள்ளாகவே போற்றுக்கொளுவதும் பீற்றிக்கொல்ல்லுவதும் செய்கிறார்கள். நமக்கே ஏன் இந்த வேலை.
ஜாதி வெறி, அன்னதிக்க திமிர் என்று அவர்கள் திட்டினால் திட்டட்டும், தூற்றினால் தூற்றட்டும். இதெல்லாம் அவர்கள் செய்யும் சூது. மட்ட்ரவர்களை வலையில் சிக்கவைக்கும் கேவலமான பிழைப்பு. அரசியல் கூட்டம் ellam அரசியல்.
பதிவுலகின் சாபக்கேடு வினவு குரூப் என்று சொன்னால் தகும். அதைவிட
வலைவுலகின் மலக்குழி என்று சொன்னாலும் தகும். தயவு செய்து வேறு velaiyai பாருங்கள்.
வினவு தோழர்கள், கண்டதெற்கெல்லாம் ஜாதிய இழுத்து பேசும்போது எப்படிக் குமட்டிக்கொண்டு வருகிறதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல், நீங்கள் ஜாதியை சிலாகித்து எழுதும்போதும் வருகிறது.
ஐயகோ..., என்னதான் அள்ளிகொண்டுப்போகப் போகிறீர்களோ?
வினவினாலும், உம்மாலும் ஜாதி துவேசமில்லாதவர்கள் கூட கெட்டுப்போவர்களய்யா.
டோண்டு சார்!
கம்யூனிஸ்ட் கட்சியின், இயக்கங்களின் மிகச் சிறப்பான அம்சமே ஒரு தனிநபராகவோ, அல்லது ஒரு தலைவர் ஆணைப்படியோ என்றில்லாமல், ஒரு குழு விவாதம் என்று நடத்தி அப்புறம் எடுக்கப் படுவது.
கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்ற அடிப்படையில் இயங்குகிற தன்மை அது.வேறு பல காரணங்களினால்,அதில் எடுக்கப் படும் முடிவுகள் தவறாகப் போய் விடலாம். அதற்காக ஒரு கூடை செங்கல்லும் பிடரி என்று ஒட்டு மொத்தமாகவே குறை சொல்வது சரியில்லை என்பது என்னுடைய கருத்து.
இங்கே ஜனநாயக முறைப்படி, கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச் சொல்லப் படும் நாடுகளில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?
இன்றைக்கு போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. இருபத்திரண்டாயிரம் பேருக்கு மேல் செத்திருக்கிறார்கள், ஐந்து லட்சம்பேருக்கு மேல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள சட்ட முறைகளின் படி இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்க முடியாதாம்! இதைச் சொல்வதற்கே இருபத்தாறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
ருசிக்கா வழக்கில் ராதோருக்கு வழங்கப்பட்ட தண்டனை முதலில் வெறும் ஆறே மாத சிறை தண்டனை தான்! அதை எதிர்த்து அப்பீல் செய்த பிறகு தான் பதினெட்டு மாதங்களாக்கப் பட்டு தீர்ப்பு வந்தது! அதுவும் தானாக வரவில்லை! போராட்டங்கள் வலுத்த பிறகே வந்தது!
வினவு அல்லது ம க இ க இயக்கங்களின் செயல்பாடுகளில் குறைகள் தவறுகள் நிறைய இருக்கிறது அல்லது அவர்கள் செய்வது சரி என்பதைக் குறிப்பிட்ட விஷயத்தின் மீத அதன் தராதரத்தில் விமரிசித்தால் அது நியாயமாக இருக்கும்!
அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லையே என்பது இன்னொரு தரப்பும் அதே மாதிரி நடந்துகொள்ள அல்லது நியாயப் படுத்துவதாக ஆகி விடாது!
கொஞ்சம் நிதானம், ப்ளீஸ்!
//பதிவுலகின் சாபக்கேடு வினவு குரூப் என்று சொன்னால் தகும். அதைவிட
வலைவுலகின் மலக்குழி என்று சொன்னாலும் தகும். தயவு செய்து வேறு velaiyai பாருங்கள்//
&
//வினவு தோழர்கள், கண்டதெற்கெல்லாம் ஜாதிய இழுத்து பேசும்போது எப்படிக் குமட்டிக்கொண்டு வருகிறதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல், நீங்கள் ஜாதியை சிலாகித்து எழுதும்போதும் வருகிறது.//
I agree with these
பெயர்கள் பட்டியல் நீங்களே தந்தீங்கன்னா சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்" முறையில் விடையை அறிந்துகொள்ளலாம்.
for starters:
1. பிச்சைமணி
2. குசும்பன்
3. மாதவராஜ்
4. கும்மி
5. ஆடுமாடு
6. மொக்கை
7. அகாகி அக்காகியோவிச்
8. மாய்க்கான்
9. சேரிப்பையன்
10. அரடிக்கட்டு
11. தருதலை (அவனே வெச்சுகிட்டது தான்)
12. செங்கொடி
13. தோழர்
14. மூட்டூ
15. டவுசர்பாண்டி
16. கடப்பாரை கந்தன்
17. மா.சே
18. அனுகுண்டு
19. கேள்விக்குறி
20. சர்வாகன்
21. பூச்சாண்டி
22. போராட்டம்
23. கலகம்
24. casmalam (இந்த கெட்டகேட்டுக்கு இங்கிலீஸ் வேற)
25. மன்னாங்கட்டி
26. அறிவுடைநம்பி
27. பரட்டை
28. மரண அடி
29. ஆட்டையாம்பட்டி அம்பி
30. ஜாக்பாட் ஜெ
//
கம்யூனிஸ்ட் கட்சியின், இயக்கங்களின் மிகச் சிறப்பான அம்சமே ஒரு தனிநபராகவோ, அல்லது ஒரு தலைவர் ஆணைப்படியோ என்றில்லாமல், ஒரு குழு விவாதம் என்று நடத்தி அப்புறம் எடுக்கப் படுவது.
//
இதெல்லாம் புத்தகத்தில் எழுதியிருக்கும் கம்யூனிசம்.
நடைமுறை கம்யூனிசம் என்பது குழுவின் தலைவன் எடுக்கும் முடிவே குழு முடிவு. குழு அதிகாரத்திற்கு வந்தால் குழுத் தலைவன் தான் சர்வாதிகாரி.
இசுடாலின், போல்போட், மாவோ, முதல் நம்மூர் தகரடப்பா கமூனிச கன்றாவிகள் வரை இது தான் உண்மை.
////திடீரென யாரோ ஒருவர் டோண்டு ராகவன் ஏதேனும் ஒரு விஷயம் பற்றிப் பேசலாம் என வெள்ளந்தியாக கூறிவிட, அவனோ இதுதான் சாக்கு என்பது போல, இஸ்ரேலை பற்றிப் பேசலாமா என கேட்டு வைக்க பலர் எழுந்து ஓடத் தயாராயினர். அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவன் மேலே பொஏசவில்லை. இருப்பினும் ஒருவர் இஸ்ரேலுக்கு வந்த சமாதான கப்பலை இஸ்ரேல் தடுத்த விவகாரம் பற்றி கேட்டார். இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை என நான் கூறினேன். வந்தவர்களில் யாரேனும் மனித வெடிகுண்டாக இருந்தால் என்ன செய்வது என்பதுதான் என் கேள்வி.////
----சென்ற இடுகையின் இந்த ஈரமற்ற கல்நெஞ்ச கடும் விஷ வரிகளுக்கு இந்த வீணாப்போன விளங்காத வினவுகும்பல் எவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வளவோ மடங்கு மேல்....
இதையும் கொஞ்சம் படிங்களேன்:
மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?
http://kuzhali.blogspot.com/2009/08/blog-post_27.html
மகஇக சில கேள்விகள்?
http://kuzhali.blogspot.com/2007/07/blog-post.html
பிணங்கள் புரட்சி செய்யாது - தமிழீழம் - மகஇக நிலைப்பாடு
http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_13.html
குசும்பன், ஆடுமாடு மற்றும் மாதவராஜ் ஆகியோர் மதிப்புக்குரிய பதிவர்கள். அதிலும் மாதவராஜ் வங்கி ஊழியர்கள் ஒற்றுமைக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடும் சின்சியரான மனிதர். அவரைப் பற்றி மதிப்புக் குறைவாக பேசுவதை நான் கடுமையாகவே எதிர்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
இங்கே ஜனநாயக முறைப்படி, கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச் சொல்லப் படும் நாடுகளில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?
//
எல்லாமே நல்லாத்தான் வாழுது. கமூனிசம் உட்பட ஜனநாயக நாட்டில் வாழ முடியும்.
கமூனிசக் நாட்டில் ஜனநாயகம் உட்பட யாருமே வாழ முடியாமல் தான் நாட்டை விட்டு ஓடுகிறார்கள்.
தயவு செய்து கமூனிசத்திற்கு வக்காலத்து வாங்காதீர்கள்.
எப்படியும் படித்துவிட்டேன், இனி மற்றவரையும் படிக்வே இது.
அன்புள்ள வஜ்ரா!
எந்த ஒரு விஷயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு. கண்மூடித்தனமான எதிர்ப்பு வேண்டாமே என்பது தான் நான் மறுபடி சொல்ல விழைவது.
உங்களுடைய கம்யூனிச வெறுப்பை நான் அறிந்தே இருக்கிறேன். அது உங்களுடைய தனிப்பட்ட உரிமை.நான் வாழ்ந்து பார்த்தவன், என்னுடைய அனுபவங்களில் நான் தெரிந்து கொண்ட நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
நீங்கள் சொன்ன பேர்களெல்லாம் மறைந்து போனார்கள்! கிம் ஜோங் இல் என்று மாவோவின் நேரடி சீடன்-வாரிசாக, வட கொரியாவின் அதிபராக இருந்து கொண்டு, ஜப்பானையும், தென் கொரியாவையும் அலற வைத்துக் கொண்டிருக்கிற ஒரு கிறுக்கனைப் பற்றிக் கூட அறிந்து வைத்திருக்கிறேன். எல்லோருமே கிம் ஜோங் இல் அல்ல! கருத்து வித்தியாசங்களை நாகரீகமான முறையில் எடுத்து வைக்கவேண்டும் என்பது தான் என்னுடைய நிலை.
திரு அருள்!
ஏற்கெனெவே படித்தவை தான் என்றாலும், குழலி புருஷோத்தமனுடைய பதிவுகளின் பழைய பக்கங்களை இங்கே சுட்டியதற்கு நன்றி. வெறும் கண்மூடிய எதிர்ப்பை தாண்டி விஷயத்தோடு அந்தப் பதிவுகள் இன்றைக்கும் இருக்கின்றன.
டோண்டு சார்!
மாதவராஜ் வங்கி ஊழியர் இயக்கத்தில் அரும் பெரும் சேவை செய்து கொண்டிருப்பதால், இணையத்தில் கண்ட இடத்திலும் எச்சில் துப்பலாம் என்றாகிறதே!
அது சரி தானா?
மேலும் பல பல விசியங்கள் பற்றியும் பேசினோம். தோழர் ’தளபதி’ லீனா மணிகேகலை நடத்திய கூட்டத்தில் பெரும் கோசங்களை எழுப்பி ’புரட்சி’ செய்தவர் என்று நண்பர் லக்கிலுக் சொன்னார். பார்பதற்க்கு மிக அமைதியாக இருந்தார் !! அங்கு உண்மையில் நடந்ததை பற்றி விவாதம். நண்பர் அதிஷா சில விசியங்களை மிக தெளிவுபடுத்தினார். வினவு குழுவினரால் பேசப்பட்ட சில சொல்லாடல்களை நிறுபித்தார். முதலில் மறுத்த ‘தளபதி’ பின்னர் அப்படி சொல்லியிருந்தால், அவை தவறுதான் என்றார்....
வினவு குழுவின் இரட்டை வேடம் பற்றி எழுத்தாளர் ஷோபாசக்தி சமீபத்தில் எழுதிய பதிவு இது :
http://www.shobasakthi.com/shobasakthi/?p=697
ஆளில்லாத ஊரில் நரி நாட்டாமை
மேலும் பார்க்கவும் :
http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html
அதியமான்!
வினவு தளத்தின் பின்னூட்டங்களில் இருந்த கொச்சை வார்த்தைகளிலான பின்னூட்டங்களைத் தொகுத்து, முதலில் அந்தப் பதிவு இருந்ததைப் படித்தேன். அப்புறம் என்ன காரணத்தாலோ அந்தப் பகுதியை நீக்கிவிட்டார்!
நீ என்னுடைய நண்பனாக, எனக்கு சொரிந்து விடுகிறவனாக இல்லையானால், நீ என்னுடைய எதிரி தான் என்ற வகையில் வெளியான பதிவு அது!
வினவு தளத்தினர் அவரையும் லீனாவையும் எதிர்த்தார்கள், வசைபாடினார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே வந்த பதிவு அது.
அது ரொம்பப் பழசு!
இப்போ லேட்டஸ்டாக துப்பித் துப்பித் தொண்டை வறண்டு போனதாலோ, அல்லது திடீர் ஞானம் வந்ததாலோ இங்கே ஒருத்தர் "இது ஒரு படிப்பினை" என்று ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.
துப்பிய எச்சில் மட்டும் இன்னமும் ஈரம் காயாமல் நாறிக் கொண்டிருக்கிறது!
//அதாவது ஆட்சிக்கு வரும் வரையில் ஜனநாயகம் எல்லாம் பேசி அது தரும் சுதந்திரங்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள்.பிறகு ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்துக்கு ஆப்புதான்.//
எல்லோரும் அவசியம் கவனத்தில் எடுக்க வேண்டிய பொன் மொழி.
அன்பான நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி,
// கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்ற அடிப்படையில் இயங்குகிற தன்மை அது.வேறு பல காரணங்களினால்,அதில் எடுக்கப் படும் முடிவுகள் தவறாகப் போய் விடலாம். அதற்காக ஒரு கூடை செங்கல்லும் பிடரி என்று ஒட்டு மொத்தமாகவே குறை சொல்வது சரியில்லை என்பது என்னுடைய கருத்து// மிகத்தவாறன புரிதல் ஐயா! நீங்கள் கம்யூனிசத்தின், எழுச்சி, வளர்ச்சி, மற்றும் அழிவைப்பற்றி மேலோட்டமாகத்தான் படித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!
//எல்லோருமே கிம் ஜோங் இல் அல்ல! கருத்து வித்தியாசங்களை நாகரீகமான முறையில் எடுத்து வைக்கவேண்டும் என்பது தான் என்னுடைய நிலை.//
நான் ஒரு பட்டியல் தருகிறான் ஐய்யா, அவர்களெல்லாம் யாரென்று சொல்லுங்கள்?
ஸ்டாலின், பிலிக்ஸ் தேர்ஜின்ச்கீ, லாவறேண்டி பெரியா, கென்றிக் யகோடா, நிகொலை எஷோவ், சாய் பால் சென், என்விர் ஹோசா, நிகொலை சொவ்செச்ச்கூ இன்னும் பலர். இவர்கள் இல்லை என்றால் எழுபத்தி ஐந்து வருடங்கள் வாழ்ந்து மடிந்த கம்யூனிசம் எப்பொழுதோ மடிந்திருக்கும். அதாவது இவர்கள் இல்லை என்றால் நீங்கள் பார்த்த சரித்திர கம்யூனிசமே இல்லை எனலாம்! இவர்களெல்லாம் கடைந்தெடுத்த சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள், மற்றும் ஜனாயக மரபுகளை துச்சமாக மதித்தவர்கள்! லக்ஷக்கணக்கான மக்களை மேதித்தவர்கள்!
நீங்கள் சொல்லும் குணம் எவையும் இல்லாதவர்கள்! இதை நான் சொல்லவில்லை! இவர்களைப்பற்றிய ஆதார்வபூர்வமான ஆவணங்கள் முதல் அவர்கள் கையெழுத்து இட்ட எழுத்துகளும் உள்ளன! இவர்களைப்பற்றி முழுவதுமான தீர்கமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, இவர்கள் எப்படி வளர்ந்தார்கள், கூடவே கம்யூனிச முறையும் எப்படி வளர்ந்தது என்பது நிறுவப்பட்ட ஒன்றாகு ஆண்டுகள் பல ஆகிவிட்டன!
இந்தியா போன்ற சில நாடுகளில்தான் இதேல்லாம் படிக்காமல், கம்யூனிசம் என்றால் ஏதோ பெரிய இரட்ச்கம் செய்ய வந்த ஒரு மதம் போலவும், இந்த கொடுங்கோலர்கள் எல்லாம் கடவுள்கள் போலவும் ஒரு மாய வலையை பல காலமாக பின்னி விட்டார்கள்! உங்களை போன்ற விபரம் தெரிந்தவர்களும் இதை நம்புவதுதான் வருத்தமாக இருக்கிறது!
நீங்கள் சொல்லும் கிம் இல் சாங் மற்றும் அவரின் மகன் கிம் சாங் இல் போன்றவர்களுக்கும் நான் சொன்ன சரித்திரப்பெயர்களுக்கும் வித்தியாசம் ரொம்ப இல்லை! அவர்கள்தான் இவர்கள், இவர்கள்தான் அவர்கள்! எல்லாம் ஒரு ஜென்மங்கள்தான்! எல்லாம் செய்தது ஒன்றுதான்!
நன்றி
//
கண்மூடித்தனமான எதிர்ப்பு வேண்டாமே என்பது தான் நான் மறுபடி சொல்ல விழைவது.
//
நாஜிக்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது போல் தான் நீங்கள் சொல்வது எனக்குப் படுகிறது. மன்னித்துக்கொள்ளுங்கள். என்னைப்பொருத்தவரை நாஜிக்களும் கம்யூனிஸ்டுகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
நான் கண்மூடித்தனமாக எதிர்ப்பதாகவே இருக்கட்டும். அது என் கருத்து.
என்னைப்பொருத்தவரை கண்மூடித்தனமான எதிர்ப்புக்கு தகுதியானவர்கள் கம்யூனிஸ்டுகள், எந்த ஷேடாக இருந்தாலும் சரி. ஆழ்ந்த சிவப்பு முதல் ரோஸ் கலர் வரை (pinko). அவர்கள் கருத்துசுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்காதவர்கள்.
இன்று இந்தியா இருக்கும் நிலையில் நமக்குத் தேவை ஒரு மெக்கார்த்தே. We need to purge these commies, all shades of them.
//
இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை என நான் கூறினேன். வந்தவர்களில் யாரேனும் மனித வெடிகுண்டாக இருந்தால் என்ன செய்வது என்பதுதான் என் கேள்வி.////
----சென்ற இடுகையின் இந்த ஈரமற்ற கல்நெஞ்ச கடும் விஷ வரிகளுக்கு இந்த வீணாப்போன விளங்காத வினவுகும்பல் எவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வளவோ மடங்கு மேல்....
//
UFO என்கிற அனானி,
டோண்டு சொல்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
"அமைதிப்போராட்டம்" என்று கூறிக்கொடு வந்தவர்கள் ஏன் சோதனை செய்ய வந்த படைவீரர்களைத் தாக்கவேண்டும். அதுவும் கத்தி, சுத்தி எல்லாம் கொண்டு தாக்க வேண்டும் ?
ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வந்த கூட்டம் தான் அது. இஸ்ரேலின் உளவுத்துறை கோட்டை விட்டதால் சர்வதேச லெவலில் PR சொதப்பலில் இஸ்ரேல் விழுந்துவிட்டது.
மத்தியகிழக்கு அரசியலில் இதெல்லாம் சகஜம்.
அதில் ஈரம், பதம், தட்பவெப்பம் எல்லாம் அவர்களே அவர்களுக்குள் பார்த்துக்கொள்ளாத போது உங்கள் உள்ளத்தில் உதிரம் வடிவது (அல்லது அப்படி நடிப்பது) தான் ஏன் என்று இங்கு யாருக்கும் புரியவில்லை. கூடவே வினவு போன்ற தகரடப்பா கம்மூனிஸ்டுகளுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு வருவது இன்னும் கேவலமாக உள்ளது.
I have been saying this for years, instead of fighting with each on the issues, that cannot be resolved by any of the bloggers, please create a force, that can discuss the state of affairs of our State, Nation, People, and start something very small and modest to make a difference in real people's lives. There are so many initiatives that need your brains, small amounts of money, your time etc in India, contribute what you can and make a difference. Please.
Hi Dondu,
Congrats!
Your story titled 'வினவு கும்பலின் அடாவடி பழக்கங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th June 2010 08:35:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/271041
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Thanks Tamilish
Dondu N. Raghavan
நான் பிளாகர் ஐடியில வந்து போடுற மொத பின்னூட்டமே டோண்டு ராகவன்னுக்கு.. நல்ல துவக்கம் :-)
ஆனா ஒண்ணு, உங்களயெல்லாம் 24 மணிநேரமும் வினவ பத்தியே சிந்திக்க வச்சோம் பாத்தீங்கா, அது...!
14. மூட்டூ
30. ஜாக்பாட் ஜெ
இதுல அருமை அண்ணன் முட்டாஊ பேரும் நெத்தியடி முகம்மது பேரும் வந்தத அவங்க பாத்தாங்கன்னா புரண்டு புரண்டு அழப்போறாங்க
நான் 19. கேள்விக்குறி
நான் வினவு பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறுவதைக் காட்டிலும் வினவு எத்தனை பதிவுகளில் விடாமல் என்னை குறிப்பிடுகிறது என்பதுதான் சுவாரசியமான கேள்வி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சரி மேட்டருக்கு வருவோம்
@@@செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன். அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். கவனிக்கவும். தடை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. கமிட்டி முடிவு செய்யும் என்றார். இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனனாயகம் பற்றிய கோட்பாடு.@@@
நாசமாப் போச்சு.. இந்த ஒரு பதிலை வச்சு பாத்தாலே தெரியலியா அதியமான், அந்த தளபதி தோழருக்கும் வினவுக்கும் ஸ்னானப்பிராப்பதி கூட கிடையாதுன்னு... என்ன கேட்டா நான் என்ன சொல்லியிருப்பேன்னா, தடை செய்ய ஒரு தகுதி வேணும்.. அ.மாவுக்கோ, லீனாவுக்கோ, இல்ல நீங்க அடிக்கடி கேட்கும் 'அதியமான், தமிழ்மணி, நோ'வுக்கோ தடை செய்யும் அளவுக்கு என்ன தகுதியிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா???
@@@இதெல்லாம் புத்தகத்தில் எழுதியிருக்கும் கம்யூனிசம்.@@@
ஆங் இந்த ஆள்மாறாட்ட புலி வக்ரா பஞ்சருக்கு எல்லா கம்மீனிஸிட் கச்சிய பத்தியும் டீடெய்லா தெரியுமாம்... பிராகாஸ் பீட்ரூட் கூட தெனோம் இவரோட ஸ்கைபீல சேட் பண்ணி தான் கொளுகை முடிவு எடுக்கறாங்களாம்.. கேட்டுக்கங்கப்பா.....
வில் பி பேக் ஆஃப்டர் எ பிரேக்!
@@மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?@@
அருள்..அது என்னய்யா ஏஜென்டு.. உங்க ஜாதி கட்சி மாதிரி நாங்க சின்ன கொய்யா பெரிய கொய்யான்னு கூழ கும்புடு போடாம ''தோழர்'' அப்புடின்னு ஒரு நண்டு சிண்டு கூட அவர கூப்புடுதே அந்த காண்டா உமக்கு.. இருக்க வேண்டீதான.. அவரு செயிலுக்கு போயிருக்காரான்னு உங்க வன்னிய சாதி வெறியன் குழலிக்கு ஏன் வேர்த்து வடியுது??? எங்குளுது என்ன பச்சோந்தி மக்கள் கட்சியா மரம் வெட்டினவன், சாரயாம் காச்சினவன், கட்ட பஞ்சாயத்து, தண்டல், ரவுடி.... இப்படியாப்பட்ட கிரிமினல் வேல செஞ்சு ஜெயிலுக்கு போனவனுக்கெல்லாம் தேடித்தேடி சீட்டு கொடுக்க.. அவரு செயிலுக்கு போனாரு போவல அது எங்க கட்சி பிரச்சன.. உங்க பெரிய கொய்யாவுக்கு இப்ப கலைஞர் வச்ச ஆப்ப எப்படி எண்ண தடவி நீவி வெளியே எடுக்கலான்னு நீங்களும் குழலியும் ரூம் போட்டு சிந்திங்க... புரட்ச்ச்ச்ச்சி பண்ற வேலைய நாங்க பாத்துகுறோம்.
நாங்களும் சுட்டி குடுப்போம்ல
பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!
http://www.vinavu.com/2009/10/05/pmk-ramadas-chameleon/
எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !
http://www.vinavu.com/2009/06/17/ramadoss/
ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!
http://www.vinavu.com/2009/03/07/eelam27/
ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !
http://www.vinavu.com/2009/05/13/ramadoss-sells-blood/
@@நான் வினவு பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறுவதைக் காட்டிலும் வினவு எத்தனை பதிவுகளில் விடாமல் என்னை குறிப்பிடுகிறது என்பதுதான் சுவாரசியமான கேள்வி.@@
நீங்கன்னா நீங்க இல்ல, தெனோம் வினவ திட்டி 3 பதிவும் 300 பின்னூட்டமும் வருதில்ல அது!
அடுத்து இந்த லீனா விசயத்துல 'போய் லீனாவோட படுங்கடா'அப்புடின்னு ம.க.இ.க பெண்கள் சொன்னார்கள் அய்ய்ய்ய்யோ அம்ம்ம்ம்ம்மா என ஆடு புழுக்கை போடுவது போல கல்வெட்டு என்று ஒரு வெத்துவெட்டும் அருமை அண்ணன் அதியமானும் ஒவ்வொரு பதிவாய் போய் பின்னுட்டம் இட்டு வருகிறார்கள்... நான் அதை மறுக்கவில்லை
ஆமா! அவங்க சொன்னாங்க
(முதல் மரியாதை சிவாஜி பாணியல் படிக்கவும)
என்னம்மோ உங்க எளக்கியவியாதிங்கல்லாம் அன்னிக்கு ரொம்ம்ம்ப டீசன்டா நடந்துகிட்டமாதிரியும் இவங்க வலிய போய் திட்டுன மாதிரியும் கதை கட்டி விடரீங்களே...? லீனாவுக்காவ கூடின அந்த பயலுங்க வாடி போடி முன்டன்னு திட்டவும், அடிக்க பாஞ்சதயும் கமுக்கமா இவங்க மறைக்குறாங்களே??? ஏன்???
அங்க நடந்தது தெருச்சண்ட, சண்டைக்கு உரிய தர்மங்கள்ளதான் அது நடந்துச்சு.. (சண்டக்கு ஏதுய்யா தர்மம்)
நாங்களாவது அத்தோத விட்டோம்... இந்த அரிப்பெடுத்த அ.மார்க்கசு அப்பாலிக்கா எழுதறாரு.. அந்த பொம்பளைங்க அதிமுக பிரமுகருக்கு வப்பாட்டியாம் .. என்ன திமிரு இருக்கனும்.. இந்த அ.மாவுக்குத்தான் நம்ம அ.மான் சொம்பு தூக்குறாரு.. கேவலம் கேவலம்!
@@சுகுணா திவாகர் உங்களின் உண்மையான ’தோழர்’....@@
அப்படியா,, வர வர அதியமான் ஜோசியம் பாத்தே யார் உண்மையான தோழர்னு தெளிவா சொல்லிடுவார் போலி இருக்கே.. சார் சார் அப்படியே புரட்சி எப்ப வரும்னும் சொல்லுங்க சார்...
இந்து சுகுணா திவாகர் செஞ்ச பிராடுதனத்தை எவனாவது செய்வானா...
மொதல்ல இமெயில் ஹேக் செஞ்ச குத்தத்துக்கு அந்தாளையும்,அதுக்கு கம்பீட்டர் கொடுத்த ஆனந்த விகடனையும் கோர்டுக்கு இழுக்கனும்... சரி ஏன் சுகுணாவுக்கு இம்மாம் கோவம்..என்னிக்கும் வராத கோவம்... அவங்க பாசையில அறச் சீற்றம்...
அத தமிழச்சி சொல்றாங்க கேளுங்க.....
தோழர் சுகுணா திவாகர் கேள்வியெழுப்புகிறார். நல்லது கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
சோபாசக்தி சுகுணா திவாகருக்கு 1 லட்சம் கொடுத்ததாக செய்தி கிடைத்தபோது அதை ஆதாரமற்ற செய்தியாக அலட்சியப்படுத்தினோம். ஆனால் நம்பகமான இடத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அதை பொதுவில் வைக்க முடியுமா?
சோபா சக்தியோ புலம்புகிறார் நான் ஏன் தொழிலாளியை அடிக்கப்போகிறேன். நானே பிரான்சில் தட்டுக்கழுவும் தொழிலாளி. கடன்உடன் பட்டு இந்தியாவுக்கு வருகிறேன் என்று புலம்புகிறார். ஆனால் மாதம் ஒரு நாட்டுக்குச் சென்று வருபவர் பொதுவெளியில் உளறும் போது ஏன் இந்திய பயணத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்?
சரி அதை விடுங்கள்.
தோழர் சுகுணா நீங்கள் பணம் வாங்கியது உண்மையா?
நீங்கள் ஆனந்த விகடன் ஊடகத்தில் பணிபுரிகிறீர்கள். நாம் கேட்கும் கேள்விகள் வேறு சிக்கலை உங்களுக்கு கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக இத்துடன் விட்டு விடுகிறோம். இன்னொரு கேள்வி. இன்னொரு ஊடகத்துறையில் பணிபுரியும் பெண் மூலமாக சோபாசக்தி குறித்து விளாவாரியாக பேட்டி எடுக்கப்பட்டு நிர்வாகத்தினர் பார்வைக்கு சென்ற போது குப்பைக்கு அனுப்பப்பட்டது. அப்பெண் சோபா சக்தியோடு செக்ஸ் தொடர்பு உடையவர். இப்படிப்பட்ட செய்திகள் எல்லாம் தோழர் சுகுணா திவாகருக்கு தெரிந்திருந்தும் அதைக் குறித்து ஆராய்ச்சி செய்யாமல் வினவு தோழர்களை விம ர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் என்ன அரசியல் உள்ளது?
http://www.vinavu.com/2010/05/31/narsim-mullai/#comment-24214
ஆக பிரான்சுல தண்ணியடிச்சிட்டு குப்புற கிடக்கும் சோபா சகதி திடீர்ன்னு நரி நாட்டாமைன்னு எழுதவும் இஇந்தப்பக்கம் சுகுணா திடீர்னு முழிச்சுகிட்டு இமெயில் ஹாக் பண்றத்துக்கும், தமிழச்சியோட இந்த பின்னூட்டம் வந்த பின்னாடி திடீர்ன்னு கம்முனு இருக்கறதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு..
இப்போதைக்கு இவ்ளோதான்
@@@நண்பர் அதிஷா சில விசியங்களை மிக தெளிவுபடுத்தினார். வினவு குழுவினரால் பேசப்பட்ட சில சொல்லாடல்களை நிறுபித்தார். முதலில் மறுத்த ‘தளபதி’ பின்னர் அப்படி சொல்லியிருந்தால், அவை தவறுதான் என்றார்....@@@
அது என்ன சிதம்பர ரகசியமா, அந்த சொல்லாடல்களை இங்க பொதுவில் வையுங்கள் அப்புடி என்ன தவறு என்று பார்த்துவிடுவோம்....
// ஆனா ஒண்ணு, உங்களயெல்லாம் 24 மணிநேரமும் வினவ பத்தியே சிந்திக்க வச்சோம் பாத்தீங்கா, அது...!// நாறிப்போய் தெருவையே மூக்கைமூட செய்யும் குப்பைத்தொட்டி சொல்லியதாம், இதோ பார் என்னைப்பற்றியே எல்லோரும் நினைக்கிறார்கள் எப்பொழுதும் என்று!!
//அருள்..அது என்னய்யா ஏஜென்டு.. உங்க ஜாதி கட்சி மாதிரி நாங்க சின்ன கொய்யா பெரிய கொய்யான்னு கூழ கும்புடு போடாம ''தோழர்'' அப்புடின்னு ஒரு நண்டு// கொலைகார காம்ரேடுகளுக்கு சின்ன ஐயாவோ இல்லை கோய்யாவோ பரவாஇல்லை! குண்டு வெக்கரவனையும் அப்பாவிகளை சுடுரவனையும் காம்றேடுன்னு கூப்பிட்டா என்ன கன்றாவிகளுன்னு கூப்பிட்டா என்ன??
//உங்க வன்னிய சாதி வெறியன் குழலிக்கு ஏன் வேர்த்து வடியுது??? // வன்னியர்கள் இந்தியர்கள். இராமதாஸ் இந்தியர். அவர் மாவோவையோ மற்ற சில வாயில் பெயர் வராத அயோக்கியர்களையோ கும்பிடுவதாக நான் படித்ததில்லை!
//பச்சோந்தி மக்கள் கட்சியா மரம் வெட்டினவன், சாரயாம் காச்சினவன், கட்ட பஞ்சாயத்து, தண்டல், ரவுடி.... // மாவோ மக்கள் கட்சியைவிட இது பரவாஇல்லை! கட்டை பஞ்சாயத்தை பற்றி பேசுவது யார் பாருங்கள்?
//இப்படியாப்பட்ட கிரிமினல் வேல செஞ்சு ஜெயிலுக்கு போனவனுக்கெல்லாம் தேடித்தேடி சீட்டு கொடுக்க// அட சாமி, சீட்டுதாங்க கொடுக்க முடியும், வெற்றிய கொடுப்பது மக்கள். அது ஜனநாயகம்! நீங்க கிரிமினல்களுக்கு "புரட்சி" பட்டமே கொடுத்து அவனுக பெயரைச்சொல்லி இந்தியாவில வேற நாடகம் நடத்துறீங்க!
// புரட்ச்ச்ச்ச்சி பண்ற வேலைய நாங்க பாத்துகுறோம்.// புரட்சிக்கு முழு குத்தகை எடுத்த வினவு திட்டும் கம்பனி வாழ்க!!
// இப்போதைக்கு இவ்ளோதான்// சரி போய், கலகம், ஏழரை, எட்டரை எல்லோரையும் அனுப்புங்க!
(நண்பர் திரு டோண்டு, இந்த மாவோ விசுவாசிகள் அவர்கள் தளத்தில் என் பின்னூட்டங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆதலால் இங்கே வந்து உளரும் இவர்களை ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து எழுதுகிறேன்! )
டோண்டு சார்!
இப்போது No சொல்வது போலத்தான்,நரசிம்-முல்லை என்கிற இரு தனிநபர்களின் ஈகோ பிரச்சினை, ஆதரித்த/எதிர்த்த அல்லது தங்களுடைய சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்ளப் பின்னூட்டம் எழுதியவர்களால், அப்புறம் போன வருஷத்து வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு எச்சில் துப்ப ஆரம்பித்தவர்கள் என்று தொடர ஆரம்பித்தது.
இன்னமும் ஒரு முடியாத அக்கப் போராகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இது அவசியம் தானா?
//
இந்து சுகுணா திவாகர் செஞ்ச பிராடுதனத்தை எவனாவது செய்வானா...
மொதல்ல இமெயில் ஹேக் செஞ்ச குத்தத்துக்கு அந்தாளையும்,அதுக்கு கம்பீட்டர் கொடுத்த ஆனந்த விகடனையும் கோர்டுக்கு இழுக்கனும்... சரி ஏன் சுகுணாவுக்கு இம்மாம் கோவம்..என்னிக்கும் வராத கோவம்... அவங்க பாசையில அறச் சீற்றம்...//
கேள்விக்குறி சார், நித்யானந்தா மாட்டிக்கிட்ட உடனே இப்படித்தான் பேசினான், அது எப்படி என்னோட படுக்கையறையில புகுந்து கேமரா வைக்கலாம்னு, அவனோட சிஷ்ய கோடிகள் கூடி அதையேத்தான் சொன்னாங்க, சாமியோட படுக்கையறையில கேமரா வச்சது தப்பு, இத சன்டிவி ஒளிபரப்புனது தப்புன்னு, அப்புடித்தான் இருக்கு, சிவராமன் வினவு கூட்டனி மாட்டிக்கிட்டவுடனே, அடுத்தவங்களுக்கு அனுப்புன இமெயிலை சுகுனா பார்த்தது தப்புன்னு சொல்ற வினவு குழு அல்லது கும்பலோட சுண்டைக்காய் வாதம்.
// கேள்விக்குறி said...
நீங்கன்னா நீங்க இல்ல, தெனோம் வினவ திட்டி 3 பதிவும் 300 பின்னூட்டமும் வருதில்ல அது!//
சமாளிப்புலையே மிக மொக்கையோ மொக்கையான சமாளிப்பு அப்பு. இன்னம் உங்ககிட்ட நிறைய மொக்கைகள எதிர்பாக்குறோம்.
-மதுரைக்காரன்
//
ஆங் இந்த ஆள்மாறாட்ட புலி வக்ரா பஞ்சருக்கு எல்லா கம்மீனிஸிட் கச்சிய பத்தியும் டீடெய்லா தெரியுமாம்... பிராகாஸ் பீட்ரூட் கூட தெனோம் இவரோட ஸ்கைபீல சேட் பண்ணி தான் கொளுகை முடிவு எடுக்கறாங்களாம்.. கேட்டுக்கங்கப்பா.....
//
ஆள் மாறாட்ட புலியாம். யாரு நானா ?
தோடா...
அப்ப ஒனக்கு மட்டும் பிரகாஸ் பீட்ரூட், பிரகாஸ் முட்டகோஸ் எல்லாரும் வந்து தெனமும் ஸ்கைப்புல சொல்றாங்களாக்கும்.
நீயே ஒரு 10 ஆவது கட்ட, 20 ஆவது கட்ட தகரடப்பா தூக்கி. போயி கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டுல "அமேரிக்க ஏகாதிபத்தியத்துக்கு" எதிரா சில்ரை தேறுதான்னு பாரு போ. இங்க வந்து டைம் வேஸ்ட் பண்ணாதே.
பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் - இது போன்ற கட்சிகள் தாங்கள் எடுத்துக்கொண்ட கொள்கைகளில் ஏதோ சிலவற்றை சாதித்துள்ளன.
ஆனால், ம.க.இ.க.,வின் வாழ்நாள் சாதனை என்ன?
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்தின் துடிப்புள்ள இளைஞர்களை கவர்ந்து- அவர்களை அந்தப் பக்கமும் இல்லாமல், இந்தப்பக்கமும் இல்லாமல், எதற்கும் பயனற்றவர்களாக ஆக்கியதுதான் 'வினவு' கூட்டத்தின் சாதனை.
அதுதான் அவர்களின் உண்மையான இலக்கோ, என்னவோ?
@ கேள்விக்குறி,
//நான் பிளாகர் ஐடியில...//
வினவுக்கு ஆதரவாய் ஓட்டு குத்த/ எதிர்த்தவர்களுக்கு நெகடிவ் ஓட்டு குத்த, இதோ இன்னொரு புதிய பிளாக்கர்..! இனி வினாவுக்கு பதில் மற்ற பிலாக்குகளிலும் பதில் சொல்ல வந்துவிட்டது மேலும் ஒரு அல்லக்கை...
அந்த வினவு கும்பலின் ஓட்டு வலு உயர்கிறது....
இடது பக்க காலத்தை எடுக்கவைத்த- தமிழ்மணத்தில் நீங்கள் செய்த 'சமீபத்திய புரட்சி' வாழ்க....
அடுத்த புரட்சி, அவர்களின் ஓட்டுப்பட்டையையும் தூக்க வைப்பதுதானே...?
//உங்களயெல்லாம் 24 மணிநேரமும் வினவ பத்தியே சிந்திக்க வச்சோம் பாத்தீங்கா, அது...!//
பொதுவாய் செப்டிக் டேன்க்கை பற்றி எப்போதும் நினைப்பதில்லை. அது உடைந்து/நிரம்பி வழிந்து தெரு முழுதும் நாற்றம் குடலைப்புரட்டினால்... அதை சரி செய்யும் வரை எப்போதும் அதே நினைப்புதான். என்ன செய்ய...
வினவு கும்பல் மயான அமைதி காக்கிறதா இல்லை அங்கிட்டு இருந்து வரும் பின்னுட்டங்கள் வெளியிடும் தரத்தில் இல்லையா?
கும்பல் சேர்ந்து கத்திட்டா யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்கிற பழங்குடி கலக/கலவர மெண்டாலிட்டி தான் கம்யூனிசம் என்பதற்கு வினவு தளம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நோ என்பவர் வினவு பயோடேட்டா ஒன்றை எழுதியிருந்தார். அதைவிட சிறப்பாக வினவு தளத்தை யாரும் வர்ணிக்க முடியாது.
பெயர் : வினவு
இயற்பெயர் : ம.க.இ.க (மாவோ கடவுளை இந்த்தியாவில் காட்டும் கழகம்)
தலைவர் : வினவு என்ற ஏழரை என்ற, மரண அடி என்ற.....இன்னும் பல பல சீன மற்றும் ரஷ்ய பெயர்களை கொண்ட ஒருவர்!!
துணை தலைவர் : திரு கலகம் என்ற ஒருவர் என்று நினைக்கிறேன்! மிக கீழத்தரமாக எழுதும் அவர்தான் இதற்க்கு பொருத்தமானவராக இருப்பார் என்பதால்!
மேலும் துணை தலைவர்கள் : ஒரு பத்து பேரு, ஆனால் பல விதமான பேர்களில்!!
வயது : பலரை திட்டுவதற்கு நேரம் உள்ள வயது!
தொழில் : திட்டுவது!
பலம் : யாரும் இவர்களை சீரியஸ் ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள், ஒன்றும் நடக்காது என்ற புரிதல்
பலவீனம் : தமிழர்கள் மடையர்கள் இல்லை என்பது
நீண்ட கால சாதனைகள் : திட்டுவது, சாடுவது,குமபலாக கத்தி விட்டு, அடித்து துரத்தி விட்டோம் பார் என்று கதை விடும் கலையை பலருக்கு சொன்னவர்கள்!
சமீபத்திய சாதனைகள் : இன்னும் விடாமல் இதையே செய்வது!
நீண்ட கால எரிச்சல் : வினவா, அப்படினா என்ன??? மா கா ஈ கா வா??? என்னங்கே இது???
சமீபத்திய எரிச்சல் : மாவோவிச்டுகளை மதிய அரசு வேட்டை ஆடுவது!
மக்கள் : மடையர்கள், மாவோவை கொண்டாட தெரியாத மூடர்கள், ஸ்டாலினை ஆராதிக்காத பாசிச அடிவருடிகள்!
சொத்து மதிப்பு : அது சீனா காரர்களைதான் கேட்கவேண்டும்!
நண்பர்கள் : மாவோவை தெய்வம் என்று கும்பிடுபவர்கள்!
எதிரிகள் : பொது மக்கள்
ஆசை : மக்கள் விரோத மாவோ, ஸ்டாலின் ஆட்சிபோல இந்தியாவில் ஒன்றை நிறுவுவது!
நிராசை : அது எந்த ஜன்மத்திலும் நடக்காது என்று புரிந்து கொண்டது!
பாராட்டுக்குரியது : Binocular, Microscope, பூதக்கண்ணடி, compound eyes, infra red camera, vibration detector, seismograph, என்ற எதை வைத்து தேடினாலும், பார்த்தாலும் கிடைக்காதது!
பயம் : எல்லாம் சரி, இப்படி வெட்டியாக புரட்சி கீதம் பாடிக்கொண்டு இருந்தால் நாளைக்கு சோறுக்கு என்ன செய்ய என்ற உள்ளுணர்வு!
கோபம் : இவர்களுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன! தெருவில் இருக்கும் கல்லிற்கு கோபம் வந்தால் யாராவது கவலைபடுவார்களா??
காணமல் போனவை : நல்லவை ஏதாவது இருந்தால்தானே காணாமல் போகும்!
புதியவை : புது புது வசவுகள்!
கருத்து : பொய்க்கு உண்மை முலாம் பூசுவது!
டிஸ்கி : ஒரு நூறு பேரு நூறு முறை படித்து லட்சம் பார் என்று கும்மி அடிப்பது!
அருள்,
இன்னா இது நீயா எலுதீக்கிற மெய்யாலுமே என்னால நம்ப முடியலையே ....நீ எப்ப கண்ணு கட்சி மாறின....
கிருஷ்ணமூர்த்தி சார் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்!
பல சமூக பிரச்சனைகளுக்கு களம் இறங்கி பணியாற்றி கொண்டிருப்பவர்களை ஓரிரு காரணம் கூறி சமூக விரோதி போல் தோற்றமளிக்க செய்வது தவறு!
ம.க.இ.க ஒரு குழுமம் அவர்களது கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றுகிறார்கள், இதில் நீங்க என்ன தவறு கண்டீர்கள்!
வினவு குழு ம.க.இ.க 'ஆதரவாளர்கள்' என்று தான் அவர்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் அதாவது 'பைத்தியக்காரன்' போல. இவர்களே ம.க.இ.க வாக இருக்க வாய்ப்புக் குறைவு என நினைக்கிறேன்.
அதியமான் தான் உண்மையில் நேரில் விவாதம் செய்ய தயாராக இருக்கிறார். ஆனால் இதனால் எந்த பலனும் இருக்காது என நினைக்கிறேன். வேறு எதாவது பிரச்சனை வராமல் இருந்தால் நல்லது.
கேள்விக்குறி - இந்த பின்னூட்ட ஆட்டம் சுத்த போர். வினவின் மூன்றாவது பதிவிலிருந்து வாசகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் விஷயம் - இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே , நீங்க எதாவது செய்யக் கூடாதா ? உங்க செயல் திட்டத்தை வெளிப்படையாக சொல்லுங்களேன் என்று. இதுவரை நடக்கவில்லை. அர டிக்கேட் ஒரு முறைக் கேட்டார் 'கொள்கை'யை வெளியிடச் சொல்லி - அவருக்கே ஒன்னும் பதிலக் காணும். இது அழுகுனி ஆட்டம். அடுத்தவர் சீட்டைப் பார்த்துவிட்டு விளையாடுவதற்கு சமம். இப்படி ஒளிஞ்சு விளையாடுர ஆட்டம் போரடிக்குதுப்பா ! ஃபோன் போட்டாத்தான் கொள்கைய விளக்குவீங்களா ?
என் பேரு இருந்தாலே பின்னூட்டத்த வெளியிடமாட்டீங்க. ஆனா, அனானியோட பின்னூட்டத்துல என் பேரு இருக்குறத கவனிக்காம வெளியிட்டுட்டீங்க. எல்லாம் அந்த அனானிக்கே வெளிச்சம்!
// //வினவின் மூன்றாவது பதிவிலிருந்து வாசகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் விஷயம் - இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே , நீங்க எதாவது செய்யக் கூடாதா ? உங்க செயல் திட்டத்தை வெளிப்படையாக சொல்லுங்களேன்// //
நல்ல கேள்வி... ஆனால், நேரடியா 'கருப்பு & வெள்ளையா' பதில் கிடைக்கவே கிடக்காது.
"யாருமே நல்லவர் இல்லை - எவரையுமே நம்பாதீங்க" - என்பது ஒரு செயல் திட்டமா இருக்கமுடியுமா என்ன?
// பல சமூக பிரச்சனைகளுக்கு களம் இறங்கி பணியாற்றி கொண்டிருப்பவர்களை ஓரிரு காரணம் கூறி சமூக விரோதி போல் தோற்றமளிக்க செய்வது தவறு//
The Nationalsozialistische Volkswohlfahrt (NSV), meaning "National Socialist People's Welfare" என்ற ஒரு இயக்கம் ஜெர்மனியில் இருந்தது! இதுவும் களப்பணியாற்றி மக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லிக்கொண்டிருந்த ஒரு இயக்கம்!
ஜெர்மானிய வெள்ளை மக்களுக்கு மட்டும் சில நல்ல காரியங்களை செய்தது! இதில் உள்ளவர்கள் உண்டியல்களை குலுக்கிக்கொண்டு தெருத்தெருவாக வலம் வந்தனர். கிடைத்த பணத்தை மற்றும் பிற உபயோகமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து இல்லாதவர்களுக்கு (அதாவது வெள்ளை ஜெர்மானிய மக்களுக்கு மட்டும்) கொடுத்தனர்!
இந்த இயக்கத்தைப்பற்றியும், அவர்கள் செய்த "நல்ல காரியங்கள்" பற்றியும் ஆவணங்கள் உள்ளன!
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவர்கள் நாஜி இயக்கத்தின் ஒரு அங்கம் என்பதுதான்! அதாவது இட்லரின் கொலைகார பாசிச கும்பலின் ஒரு பகுதி! இருந்தும், உண்மையில் இந்த மாதிரி பணம் சேர்த்து இல்லாதவர்களுக்கு உதவும், களப்பணியாற்றும் ஒரு கும்பலாக இது செயல் பட்டது என்பது மறுக்க முடியாது!
நீங்கள் சொல்லும் லாஜிக் படி, ஏன் இவர்களையும் சமூக விரோதிகளாக பார்க்கவேண்டும்? அதற்க்கு பதில், என்ன இருந்தாலும், என்னதான் சிறிதளவு நன்மைகள் செய்தாலும், இந்த குழுவின் அடித்தளமாக அமைந்தது, கொலைகார நாஜி கும்பலின் சித்தாந்தங்களே! நாஜிகள் வேறு இவர்கள் வேறு இல்லை!
அதேபோல்தான் நம்ம நாட்டு மாவோ கும்பல்களும்! நல்லது செய்வதுபோல படம் காட்டினாலும், ஏதாவது கொஞ்சம் நல்லது செய்தாலும் (அப்படி ஒன்றும் செய்வதாக தெரியவில்லை) இவர்களின் அடித்தளம் கொலைகார கொள்கைகள் மட்டுமே!
அயோக்கிய ஹிட்லரின் நாசிகளை NSV செய்ததை வைத்து ஒருவர் பாராட்டினால் அது எவ்வளவு மடமையோ, அதே மடமை இந்த கும்பல்களை அவர்கள் செய்யும் கள-பணிகளுக்காக ஒருவர் பாராட்டுவதும்!
// ம.க.இ.க ஒரு குழுமம் அவர்களது கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றுகிறார்கள், இதில் நீங்க என்ன தவறு கண்டீர்கள்!// ஹிட்லரின் நாஜிகளும் ஒரு குழுமம், அவர்களின் கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றினார்கள், இதில் நீங்கள் என்ன தவறு கண்டீர்? இந்த கேள்வி எவ்வளவு வக்கிரமானதோ, அதே வக்கிரமானதுதான் உங்கள் கேள்வியும்!!
கொடூரங்களுக்கும் கயமைகளுக்கும் தங்கமுலாம் பூசுவது என்று ஒருவர் தீர்மானித்து விட்டால், எந்த ஒரு விளக்கமும் அவர் கேட்கமாட்டார் என்று முடிந்துவிடும்! கடவுள் சார்ந்த மதங்களுக்கு மட்டும் பொருந்துவது இல்லை இது! மாவோ சார்ந்த கம்யூனிச மதத்திற்கும் இது பொருந்தும்!
மதங்களையும் நம்பிக்கைகளையும் சாடும் நண்பர் திரு வால், இந்த ஒரு விடயத்தில் இவர் சாடுபவரின் வழிமுறையையே பின்பற்றுகிறார், ஞாயமும் தேடுகிறார்!
//
பல சமூக பிரச்சனைகளுக்கு களம் இறங்கி பணியாற்றி கொண்டிருப்பவர்களை ஓரிரு காரணம் கூறி சமூக விரோதி போல் தோற்றமளிக்க செய்வது தவறு!
//
சமூக விரோதிகளை சமூகவிரோதி என்று சொல்லாமல் வேறு எதாவது சொன்னால் தான் தவறு.
கம்யூனிஸ்டுகள் எந்த சமூகப்பிரச்சனைக்கும் களம் இறங்கிப் போராடி வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. பிரச்சனையை பெரிது படுத்தி ஆலைகளை இழுத்து மூடி கஞ்சிக்கு வழியில்லாமல் மக்களை மடையர்கள் ஆக்கி கொள்கையை கொண்டு மண்டையை நிரப்பப் பார்க்கும் வைரஸ்கள் அவர்கள். அவர்கள் அழிவில் தான் மனித சமுதாயம் வாழும்.
// ம.க.இ.க ஒரு குழுமம் அவர்களது கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றுகிறார்கள், இதில் நீங்க என்ன தவறு கண்டீர்கள்!// ஹிட்லரின் நாஜிகளும் ஒரு குழுமம், அவர்களின் கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றினார்கள், //
ம.க.இ.க வின் கொள்கை என்னவென்று தெரியுமா உங்களுக்கு? தெரியாமல் எப்படி நாஜிக்களுடன் ஒப்பிட முடிகிறது!?
நான் எந்த இசத்துக்கு ஆதரவாளன் என்று உங்களிடம் சொன்னேனா?
அவர்கள் நண்பர்கள் அவ்வளவே, டோண்டுவை போலவே!, கொள்கை அடிப்படையில் எதையும் விமர்சிக்கலாம், அவதூறு செய்யக்கூடாது!
//ம.க.இ.க வின் கொள்கை என்னவென்று தெரியுமா உங்களுக்கு? தெரியாமல் எப்படி நாஜிக்களுடன் ஒப்பிட முடிகிறது//
மாவோவின் படத்தை கொடியில் போட்டு, பச்சை குத்திக்கொண்டு, அவரின் பெயரை தங்கள் கட்சிக்கு வைத்திருக்கும் கூட்டத்தின் சார்புடையவர்கள், என்ன காந்தி அல்லது நேருவின் போதனைகள்படியா குழுமத்தை நடத்துவார்கள்?? மாவோதானே இவர்களுக்கு வழிகாட்டி! சாறு மஜும்தார் மற்றும் ஏனைய இந்திய மாவோ அடிமைகளின், அதாவது இவர்களின் இந்திய ஆதர்ச வீர்கள் எழுதியதை படித்திருக்கிறீர்களா?? அவர்கள் மாவோவை தவிர ஸ்டாலினை தவிர வேறு யாரையாவது தங்களின் வழிகாட்டி என்று கூறுகிறார்களா?? இவர்கள் கும்பிடும் மாவோவின் மற்றும் ஸ்டாலினின் கொலைகள் மற்றும் அழிப்புகள் உலகத்துக்கே வெட்டவெளிச்சம் ஆகி நாறிப்போன பின்னரும், இவர்களின் கொள்கைகளைப்பற்றி நீங்கள் பேசுவது, அதாவது மாவோவிசத்தை, ஸ்டாலினிநிசத்தை தவிர ஏதோஉள்ளது போல நீங்கள் பேசுவது மத-மறதிக்கு ஒப்பான ஒன்றாகும்! உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் நான் சொல்லுகிறேன் கேளுங்கள் - இவர்கள் மாவோவிஸ்டு! மாவோவின் வழிமுறைகளை பின்பற்றி ஆட்சி பிடித்து மற்றும் ஆட்சியை நடத்துவதுதான்
இவ்பர்களின் கொள்கை! அது எபேர்பட்ட வழிமுறை என்று உலகுக்கே தெரியும்!
நாசிகளின் கொள்கைகளை தெரியவேண்டுமென்றால், ஹிட்லரை தெரிந்தால் போதும், அதே போல இந்த கூட்டங்களை கொள்கைகளை தெரியவேண்டுமென்றால் மாவோவை பற்றி தெரிந்தால் போதும்!
//நான் எந்த இசத்துக்கு ஆதரவாளன் என்று உங்களிடம் சொன்னேனா// - நீங்கள் எந்த இசத்திற்கு வேண்டுமானாலும் ஆதரவு தாருங்கள்! அது உங்கள் உரிமை! ஆனால் கடவுள் / மதம் மறுப்பிற்கும், அதன் அபிமானிகளை நீங்கள் விமர்சனம் செய்வதற்கும் இருக்கும் கரணங்கள், நீங்கள் இந்த மாவோவிசத்திர்க்கு வக்காலத்து வாங்குவதை விமர்சனம் செய்வதற்கும் இருக்கிறது! நீங்கள் மதத்தைப்பற்றி (பரிணாமத்தை பற்றி) லாஜிக்காக மறுப்புகள் பேசாமல் இருந்திருந்தால் , உங்களின் இந்த சப்பை கட்டிர்க்கு நான் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டேன்! ஆனால் ஒரு இடத்தில் லாஜிக்கு பார்த்து, அதே புரிதல்களை வேறு இடத்தில் பதிக்க மாட்டேன் என்றால், அங்கேதான் இடிக்கிறது!!!
மாவோவின் கொள்கைகளில் பிடிப்பு ஏற்பட்டு அதனை கொள்கைகளாக கொண்டு ஒரு இயக்கம் நடத்துவது ஒன்றும் தவறில்லையே! மாவோ நாட்டில் இருப்பது போலவே இங்கும் அவர்கள் எதிர்பார்த்து செய்யும் சில செய்கைகள் முரண்பாடுகளாக இருக்கலாம், அதற்காக அவரது கொள்கைகளை தவறு என்று எப்படி சொல்ல முடியும்!
பெரியார் கொள்கைகளை கொண்டு தானே தமிழகத்தில் தி.க, தி.மு.க, அ.தி.மு.க இன்னபிற, அதையெல்லாம் விட ம.க.இ.க உங்களை எந்த வகையில் தொந்தரவு செய்துவிட்டது!
எனக்கும், ம.க.இ.க வுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உண்டு, ஆனால் அவர்களது களபணிகளுக்காக பாராட்டியே ஆக வேண்டும், லீனா விசயம் ஒன்றை மட்டும் வைத்து கொண்டு தட்டையாக யோசித்தால் நீங்கள் இன்னும் நாஜியிசத்தை தாண்டி வரவில்லை என்று தான் நினைக்க தோன்றும்!
தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மட்டும் வினவு, மகஇக,தவிர சிவப்பு, ரோஸ் இன்ன கலர்களைக் கூட வெறுப்பவர்களுக்கு ஒரே ஒரு விஷயம் தான் நான் சொல்ல விழைவது!
எந்த ஒரு விஷயமானாலும், அதனதன் தராதரத்தில், நியாயமாக விவாதம் செய்தீர்கள் என்றால், கொஞ்சம் பயனிருக்கும்!
நிறுவனப் படுத்தப் படுகிற எல்லாவற்றிலுமே நீங்கள் கண்டுபிடிக்கிற குறைகளை வெகு சுலபமாகக் கண்டறிந்து விடலாம்!
உதாரணத்திற்கு, எழுபத்தாறு சி ஆர் பி எப் வீரர்கள் பலியானார்கள் என்றவுடனேயே கண்டனூர் பானா சீனா, மாவோயிஸ்டுகளை அடக்க இன்னும் அதிகாரம் வேண்டும் என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு இன்னமும் நிற்கிறார்.
பானா சீனாவுக்கும் சரி, இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் சரி யூனியன் கார்பைட் கொலைகாரர்கள் கண்ணுக்குத் தெரியவே மாட்டேன் என்கிறார்கள்!அவர்கள் எல்லாம் ஆதரிக்கப் படவேண்டியவர்கள் என்ற நிலை எடுப்பது, கொலையை விடப் பெரும் கொடுமை இல்லையா?
மாவோயிஸ்டுகள் கொலைகாரர்கள் தான், சரி! காங்கிரஸ் அவர்களுக்கு எந்த விதத்தில் குறைந்துபோய் விட்டது?
1984 டிசம்பர் மாதத்தில் டில்லி, சுற்றுப்புறங்களில் காங்கிரஸ் ஏவிய குண்டர்கள் கூட்டம், சீக்கியர்களைத் தேடித் தேடிப் படுகொலை செய்து கொண்டிருந்தது.
அதே டிசம்பரில் தான் போபால் விஷவாயுக் கசிவினால், ஆயிரக்கணக்கான ஜனங்கள் மாண்டு கொண்டிருந்தார்கள். எண்ணிக்கை இருபத்தைந்தாயிரத்தைத் தொட்டு விட்டது. பாதிக்கப் பட்டவர்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல்!
அன்றைய மத்திய பிரதேச முதலமைச்சர், அர்ஜுன் சிங் தனி அக்கறை எடுத்துக் கொண்டு யூனியன் கார்பைட் வாரன் ஆண்டர்சனை, பத்திரமாகக் காப்பாற்றி அனுப்புகிறார்!
மேல்மட்டத்தில் இருந்து சிபிஐ வாரன் ஆண்டர்சன் விவகாரத்தில் ரொம்ப வேகம் காட்ட வேண்டாம் என்று கண்ஜாடை வருகிறது. இதைச் சொன்னவர் சிபிஐ டெபுடி டைரக்டர் ஆக இருந்த லால் என்பவர்!
காங்கிரசைக் கொலைகாரர்கள் கட்சி என்று சொல்ல மாட்டேன், கண்டிக்க மாட்டேன் என்கிறீர்களே! இது என்ன நியாயம்?
ஹிட்லர், ஸ்டாலின் எல்லாம் கொலைகாரர்கள்! ரொம்ப சரி!
அதே அளவுகோலை வைத்துக் கொஞ்சம் நியாயம் உள்ளூர்க் கொடூர முகங்களைப் பற்றிச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே ஏன்?
அங்கே தான் நீங்கள் பேச வருகிற சரித்திரங்கள், நியாயங்கள் எல்லாம் பொய்யாகி நிற்கிறது.
//ஹிட்லர், ஸ்டாலின் எல்லாம் கொலைகாரர்கள்! ரொம்ப சரி!
அதே அளவுகோலை வைத்துக் கொஞ்சம் நியாயம் உள்ளூர்க் கொடூர முகங்களைப் பற்றிச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே ஏன்? //
தவறு கிருஷ்ணமூர்த்தி காரு,இங்கு மஞ துண்டு,மரம் வெட்டி,டம்போ பிரதம மந்திரி யாவரும் விமர்சனத்துக்கு ஆவார்கள்.ஆனால் இந்த ம க இ க பொறிக்கி பசங்க மட்டும் மாவோயிஸ்டுக்கள் செய்யும் கொலை கொள்ளை,கஞ்சா கடத்தல்,போன்ற காரியங்களை கண்டுக்க மாட்டாங்க்;அது போலவே அவர்கள் வணங்கும் கடவுள்களான ஸ்டாலின்,மாவோ,போல் போட் போன்ற சொறி நாய்களை விமர்சன்ம் செய்தால் தாங்க மாட்டாங்க.ரொம்பவுமே கீழ்த்தரமான பசங்க ம க இ க;இந்த மூஞ்சிகளுக்கு ஓசி பிரியாணி தி மு க,பா ம க பன்னாடைகளே தேவலை.
மருது,
திமுக பாமக, காங்கிரஸ் பண்ணாடைகளே தேவலாம் என்பது உங்களது அபிப்பிராயமாக இருந்தால், அது உங்களுடையது மட்டுமே.
அந்தப்பன்னாடைகளை விட, வெறும் காகிதப் புரட்சியாவது செய்யலாம் என்று அலைகிறவர்கள் கொஞ்சம் தேவலை என்று நினைப்பவர்களும் இருக்கலாம் இல்லையா?
வெற்று விமரிசனங்கள், அங்கே இங்கே கொஞ்சம் பதிவுகள், சில கேலி நையாண்டிக் கார்டூன்கள் இந்தப் பன்னாடைகளைப் பற்றி வருவதே போதும் என்று நினைப்பவருக்கு வேறெப்படி விளக்க முடியும்?
எரிகிற கொள்ளியில் இந்தக் கொள்ளி என்ன, அந்தக் கொள்ளி என்ன என்று பொதுவாகப் பேசிவிட்டுப்போய் விட முடியாது.
வெறும் காகிதப் புரட்சி செய்பவர்கள் என்றால் நீங்கள் சொலவது கரெக்ட்.ஆனால் தீவிரவாதிகளான நக்சல் கும்பலை சேர்ந்தவர்கள் அல்லவா ம க் இ க,பு ஜ மு க,க க இ க போன்ற அமைப்புக்கள்.அதை எப்படி நியாயப் ப்டுத்த முடியும்.அவர்கள் செய்யும் கொலை கொள்ளை கொஞ்ச நஞ்சமா?
மருது!
வால்பையன் பதிவிலும் வேறு பல பதிவுகளிலும் நீங்கள் இடும் பின்னூட்டங்களைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
அனாமதேயமாக கேள்வி எழுப்புகிறவராக அல்லாமல், உங்கள் ஒரிஜினல் முகத்துடன், ப்ளாக்கர் அடையாளத்துடன் வாருங்கள், பதில் சொல்கிறேன்.
//ஆனால் அவர்களது களபணிகளுக்காக பாராட்டியே ஆக வேண்டும், லீனா விசயம் ஒன்றை மட்டும் வைத்து கொண்டு தட்டையாக யோசித்தால் நீங்கள் இன்னும் நாஜியிசத்தை தாண்டி வரவில்லை என்று தான் நினைக்க தோன்றும்//
அண்ணே ஒரே இடுகையை வைத்து தட்டையிலும் தட்டையாக யோசித்து சாதியையும் இன்னபிற ஆதிக்கத்தையும் தீர்மானிப்பதாக எப்படி அவர்களால் எழுத முடியும் அவர்களுக்கு மட்டும் தட்டை எல்லாம் மொட்டையாக தெரியுமா?
//
உதாரணத்திற்கு, எழுபத்தாறு சி ஆர் பி எப் வீரர்கள் பலியானார்கள் என்றவுடனேயே கண்டனூர் பானா சீனா, மாவோயிஸ்டுகளை அடக்க இன்னும் அதிகாரம் வேண்டும் என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு இன்னமும் நிற்கிறார்.
//
பானா சீனா அதிகாரம் கேட்டு நிற்கவும், அதை மறுக்கவும் இந்தியா என்ற பாவபூமியில் முடியும்.
1989ல் தியானன்மென் சதுக்கத்தில் பல்கலைக்கழக மாணவர்களை அடக்க ராணுவத்தை ஒருவர் அனுப்பவும் புன்னிய பூமியில் முடியும். அத்தகய அரசியல் கொள்கையெல்லாம் ஞாயமானது என்று வாதாடுபவர்கள் ஒருகாலத்தில் நாஜிக்களுக்கு வக்காலத்து வாங்கிய கையாலாகத கயவர்கள் போன்றோர், என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எனக்கில்லை.
அப்படிப்பட்ட கொள்கையைப் பரப்பும் களப்பணியாளர்களை (மகஇக) எல்லாம் எப்படி நடத்தவேண்டுமோ அப்படித்தான் நடத்துகிறோம். இதைவிட மதிப்பும் மரியாதையும் விவாதிக்க ஒரு தளமும் வடகொரியாவிலோ, சீனாவிலோ, கியூபாவிலோ, வெனிசூலாவிலோ கிடைக்காது. கிடைத்தால் அங்கேயோ போய்த் தொலையவேண்டியது தானே...ஏன் இங்க இருக்கணும் ?
வால்,
ஒரு கொள்கை உண்மையா பொய்யா என்று அறிய அறிவியல் விதிப்படி அது நிரூபிக்கப்படவேண்டும். அப்பொழுது தான் அந்தக் கொள்கை விதியாக மாறும்.
A hypothesis becomes a rule only after proven scientifically. Or Jut until the proof holds valid. If the proof fails, the hypothesis fails.
கடவுளை இப்படி நிரூபிக்கமுடியாது. ஆகவே அது வெறும் நம்பிக்கை மட்டுமே.
கம்யூனிசமும் இப்படித்தான். சோவியத், கிழக்கு ஜெர்மனி, கியூபா போன்ற நாடுகளில் பொய்த்து போய் விட்டது. பலர் அதை கைவிட்டும் விட்டனர். ஆனால் இன்னும் அதைப் பிடித்துத் தொங்குபவர்கள் என்னைப்பொருத்தவரை நம்பிக்கையாளர்கள் தான். பொய்த்துவிட்ட ஒரு கொள்கையை நம்புபவர்களுக்கும், சைவம், வைணவம், கிருத்துவம், இசுலாம் போன்ற நிரூபிக்கமுடியாத மதங்களை நம்புபவர்களும் ஒன்று தான்.
மதவாதிகளுக்கு ஒரு ஞாயம், கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு ஞாயம் எல்லாம் நீங்கள் பார்க்ககூடாது.
பஞ்சாயத்த ஆரம்பிச்ச அதியமானை இன்னும் காணோம்.. 3 நாளா வெய்யிடிங்...
@வால்பையன் = ஐயோ பாவம்
@ செப்டிக்டாங்கியை நினைத்துக் கொண்டிருப்பருக்கு ... செப்டிக்டாங்கி உடைந்து நாறிக்கொண்டிருப்பது
'உங்களுடைய'மலம்தான் என்பதை பணிவன்போடு நினைவுபடுத்துகிறேன்,
அடுத்த முறை வேறு உதாரணத்தை தேர்ந்தெடுக்கவும்
@ அனானி... உன் மூளையில இடி விழ,
இந்த மேட்டர்ல நர்சிம்தானேய்யா நித்தி... எப்பய்யா ரோல் மாறிச்சு
@ அருள் - பா.ம.க - வி.சி ஏதோ சிலவற்றை சாதித்துள்ளன....
பின்ன ஆளுங்கட்சி ரேஞ்சுக்கு கான்டிராக்ட்டும் அமவுன்டும் கிடைக்குமா.. ஏதோ கொஞ்சம் மிச்ச சொச்சம்தான் கிடைக்கும்.. இதுக்கே வருத்தப்பட்ட எப்படி
@பி.முரளி... உங்களுக்கு வினவோட கொள்கை என்னான்னு தெரியனுன்னா இங்க போங்க http://www.vinavu.com/we/
எனக்கு தெரிஞ்சு ரொம்ம்ம்ப நாளா அது தளமுகப்புலயேதான் இருக்கு
@ NO,மருது, வஜ்ரா... இந்த RSS அரடவுசருங்க இன்னாத்து இந்த குதி குதிச்சிகிட்டிருக்குன்னு புரியல..??
//வால்பையன் பதிவிலும் வேறு பல பதிவுகளிலும் நீங்கள் இடும் பின்னூட்டங்களைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.//
கிருஷ்ணமூர்த்தி காரு,
அடேங்கப்பா அப்படியா?உங்க கைல பிரம்பு இருக்கிறதா?நீங்க இப்ப ஸ்கூல் ஹெட் மாஸ்டரா?விட்டாக்க "stand up on the bench" ன்னு மிரட்டுவீங்க போலிருக்கிறதே.கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என்று வாத்தியார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போவது தானே?என்னமோ கண்டிஷன் எல்லாம் போடறீங்க.
@ வஜ்ரா
கம்யூனிசம் ஒரு நாட்டில் பொய்த்துவிட்டது என்ற காரணத்திற்காக நிராகரித்தால் தற்பொழுது உலகம் முழுவதும் விழுந்து கிடக்கும் முதலளித்துவ நாடுகளை என்னவென்று சொல்வது, கம்யூனிசம் என்ன சொன்னது, வேலைகேற்ற ஊதியம் பெற உனக்கு உரிமை உண்டு என்று தானே, அது ஏன் உங்களுக்கு புரிய மறுக்கிறது, தொழிற்சங்கங்கள் உரிமைக்காக போராடுகின்றனவா இல்லை முதலாளி வீட்டு படுக்கறையில் இடம் கேட்டு போராடுகின்றனவா!?
எனக்கு யாரும் உயந்தவனுமில்லை, எனக்கு யாரும் தாழ்ந்தவனுமில்லை, உழைப்பே உயர்வு தரும், இது நான் அறிந்த கம்யூனிச கொள்கை, இல்லை இது உன் நம்பிக்கை தான், உனக்கு மேல் பூனூல் போட்ட பாப்பான்கள் இருக்கிறார்கள் என்றால், ம.க.இ.க மாதிரி கொஞ்சம் கடினமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும்!
புரிஞ்சதுங்களா பெரியவரே!
//வால்பையன் = ஐயோ பாவம் //
அடி வாங்குகிற கல் தான் சிலையாகும்!
உங்களின் அனுதாபத்திற்கு நன்றி, தவறுகளிலுருந்து கற்று கொள்வது தவறல்லவே!
//
இந்து சுகுணா திவாகர் செஞ்ச பிராடுதனத்தை எவனாவது செய்வானா...
மொதல்ல இமெயில் ஹேக் செஞ்ச குத்தத்துக்கு அந்தாளையும்,அதுக்கு கம்பீட்டர் கொடுத்த ஆனந்த விகடனையும் கோர்டுக்கு இழுக்கனும்... சரி ஏன் சுகுணாவுக்கு இம்மாம் கோவம்..என்னிக்கும் வராத கோவம்... அவங்க பாசையில அறச் சீற்றம்...//
கேள்விக்குறி சார், நித்யானந்தா மாட்டிக்கிட்ட உடனே இப்படித்தான் பேசினான், அது எப்படி என்னோட படுக்கையறையில புகுந்து கேமரா வைக்கலாம்னு, அவனோட சிஷ்ய கோடிகள் கூடி அதையேத்தான் சொன்னாங்க, சாமியோட படுக்கையறையில கேமரா வச்சது தப்பு, இத சன்டிவி ஒளிபரப்புனது தப்புன்னு, அப்புடித்தான் இருக்கு, சிவராமன் வினவு கூட்டனி மாட்டிக்கிட்டவுடனே, அடுத்தவங்களுக்கு அனுப்புன இமெயிலை சுகுனா பார்த்தது தப்புன்னு சொல்ற வினவு குழு அல்லது கும்பலோட சுண்டைக்காய் வாதம்.
//@ அனானி... உன் மூளையில இடி விழ,
இந்த மேட்டர்ல நர்சிம்தானேய்யா நித்தி... எப்பய்யா ரோல் மாறிச்சு //
ங்கொய்யால கேள்விக்குறி, வினவு & கோவும், நித்தியும் எப்படி ஒரே டோன்ல புலம்புறாங்கன்னு தெளிவா போட்டுருக்கேன், ஒன்னுமே தெரியாத மாதிரி நர்சிம்தான் நித்தின்னும் தப்பான ஃபார்முலாவை தெனாவட்டா சொல்ற, உன்கிட்ட பேசுனதுக்கு என் தலையில இடிதான் விழனும்.
//
@ NO,மருது, வஜ்ரா... இந்த RSS அரடவுசருங்க இன்னாத்து இந்த குதி குதிச்சிகிட்டிருக்குன்னு புரியல..??
//
அவிங்க அரடவுசரா முழு டவுசரா என்பது இருக்கட்டும். ம.க.ஈ.கக்கா கழகத்து டவுசர் கிழிஞ்சு கோமணம் ஆயிகிட்டு இருக்கு என்பது தான் இந்தப் பதிவின் சப்ஜெக்ட்.
//
பஞ்சாயத்த ஆரம்பிச்ச அதியமானை இன்னும் காணோம்.. 3 நாளா வெய்யிடிங்...
//
வந்தாமட்டும் என்ன ஒழுங்க பதில் சொல்லிப் புடுங்கிருவியாக்கும் ?
-குறியருப்பவன்
//
@ செப்டிக்டாங்கியை நினைத்துக் கொண்டிருப்பருக்கு ... செப்டிக்டாங்கி உடைந்து நாறிக்கொண்டிருப்பது
'உங்களுடைய'மலம்தான் என்பதை பணிவன்போடு நினைவுபடுத்துகிறேன்,
அடுத்த முறை வேறு உதாரணத்தை தேர்ந்தெடுக்கவும்
//
அது எங்கள் மலம் என்றால் நீ யெல்லாம் அதில் உயிர்வாழும் நோய்க்கிருமி.
-குறியருப்பவன்
//கண்டிஷன் எல்லாம் போடறீங்க.//
@ மருத்து
வகுப்பு வரும் மாணவனுக்கு சொல்லி தருவது ஆசிரியரின் கடமை,
நான் போனிலேயே கேட்பேன் நீங்க சொல்லி கொடுங்க என்பதை நிராகரிப்பது ஆசிரியரின் உரிமை!
ஆசிரியரிடம் நடந்து கொள்ளும் முறையில் தான் ஒரு மாணவனின் பவுசு தெரியும்! உங்களை பற்றி நீங்கள் சொல்லாமலே அனைவரும் தெரிந்து விட்டதே!
//தவறுகளிலுருந்து கற்று கொள்வது தவறல்லவே//
தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளத் தவறுவது, தவறு தானே வால்பையன்.அதானல் தான் வால்பையன் = பாவம்(செய்பவன்)
//தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளத் தவறுவது, தவறு தானே//
அதை நீங்கள் சொல்ல நான் கேட்கும் கொடுமை, உண்மையில் நான் பாவம் தான்!
//உங்களை பற்றி நீங்கள் சொல்லாமலே அனைவரும் தெரிந்து விட்டதே//
ஆமாங்க, நீங்க நடத்துகிற சைக்கிள் கடை அரை டிக்கட்டுக்களின், ரெள்டியிசத்துக்கும்,அயோக்யத்தனத்துக்கும்,சொம்பு தூக்கினாத் தான் நல்ல மாண்வனா?நல்லதொரு ஸ்கூல் நடத்துறீங்க;அது ஸ்கூலா அல்லது கீழ்த்தரமான டஸ்மாக் கடையா?அதுக்கு ஒரு சூப்பர் ஹெட் மாஸ்டர் வேற.ஆமாம், உங்க ஸ்கூலில் ப்ரொஃபெஸ்ஸர் ஆஃப் ரெள்டியிஸம் யார்?ராஜபளையமா,பட்டியா?கும்மி வெறும் டம்மி தானா?
//
கம்யூனிசம் ஒரு நாட்டில் பொய்த்துவிட்டது என்ற காரணத்திற்காக நிராகரித்தால் தற்பொழுது உலகம் முழுவதும் விழுந்து கிடக்கும் முதலளித்துவ நாடுகளை என்னவென்று சொல்வது
//
நான் உலகம் உய்க்க ஒரேவழி முதலாளித்துவமே என்று எங்கும் வாதாடவில்லை.
ஆனால், உலகம் சீரழிய ஒரு சிறந்த வழி கம்யூனிஸம் என்று தான் சொல்கிறேன். அதை இங்கு நீங்கள் இன்னும் மறுக்கவேயில்லை.
//ஆனால், உலகம் சீரழிய ஒரு சிறந்த வழி கம்யூனிஸம் என்று தான் சொல்கிறேன். அதை இங்கு நீங்கள் இன்னும் மறுக்கவேயில்லை. //
கம்யூனிசத்தை பற்றிய என்னுடய புரிதலை சொல்லி விட்டேன், முதலாளி எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் கம்யூனிசத்தால் அவன் தான் அழிவான், ஊர் அழியாது!
//நீங்க நடத்துகிற சைக்கிள் கடை//
நான் ரவுடி மாணவன் தான், உம்மை போல் திருட்டு மாணவன் இல்லையே, நீர் எந்த கிளாஸ்?, உண்மையான பெயர் என்ன?, நீர் என்ன தான் படிக்க வந்தீர் என்று யாருக்காவது தெரியுமா!?
நான் தப்பு செய்தால் முகத்துடன் இருப்பதால் தண்டனை கூட வழங்க முடியும், நீர் அதற்கு பயந்து தானே இம்மாதிரியான திருட்டுதனத்துடன் வருகிறீர்!
உமக்கு நான் எவ்வளவோ பரவாயில்லை என்று என் பதில் நண்பர்களின் பின்னூட்டம் உமக்கு உணர்த்தியிருக்குமே!, நீர் ஆணாக வேணாம் விடு, மனிதனாக கூட இருக்க வேணாம் ஆனா கோழையாக இராதீரும், அது உம்மை பெற்றவர்களுக்கும் கேவலம், உம்மால் பெற பட்டவர்களுக்கும் கேவலம்.
// கம்யூனிசம் என்ன சொன்னது, வேலைகேற்ற ஊதியம் பெற உனக்கு உரிமை உண்டு என்று தானே, அது ஏன் உங்களுக்கு புரிய மறுக்கிறது,// மதங்கள் எல்லாம் அடிப்படையில் நல்லவையைத்தானே போதிக்கின்றன என்று பலர் உங்களிடம் சொல்லும்பொழுது, ஒரு நிலையிலிருந்து அதைப்பார்க்காமல், பல நிலைகளிலிருந்தும் மதத்தின் தன்ம்மைகளை பார்த்து, அதன் ஆக்கத்தின் கேடுகளையும் பார்த்து, நல்லவை மதங்கள் சொன்னாலும் அது போய் சேர்க்கும் இடம் நல்லது அல்ல, அதன் அகங்காரம் மற்றும் அழிப்பு கண்முன்னே தெரிகிறது என்று நீங்கள் பல பதிவுகளில் உறுமியது மறந்து விட்டதா?? அதே லாஜிக்கை இங்கே ஏன் தொடரவில்லை?? அதை வைத்துதான் நண்பரே சொல்கின்றேன் உங்களின் கூற்றுக்கள் மத பற்றாளனின் வீம்பான நிலைக்கு வந்துவிட்டது என்று!
// கம்யூனிசம் ஒரு நாட்டில் பொய்த்துவிட்டது என்ற காரணத்திற்காக நிராகரித்தால் தற்பொழுது உலகம் முழுவதும் விழுந்து கிடக்கும் முதலளித்துவ நாடுகளை என்னவென்று சொல்வது,// உங்களின் சமூக புரிதல், பொருளியல் சார்ந்த சமூக நிகழ்வு புரிதல்கள் தமிழகத்து அரசியலை தாண்டவில்லை என்பது புரிகிறது!
//எனக்கு யாரும் உயந்தவனுமில்லை, எனக்கு யாரும் தாழ்ந்தவனுமில்லை, உழைப்பே உயர்வு தரும், இது நான் அறிந்த கம்யூனிச கொள்கை// Selective picking of communists thoughts. அதாவது மத அடிப்படைவாதிகள் செய்வதுபோல, நால்லவை என்று நீங்கள் கருதும் ஒன்றை வைத்துக்கொண்டு மொத்தமே நல்லது என்று சொல்லும் நிலை. இதை நீங்கள் மத விடயத்தில் தவறென்று காலமெல்லாம் பிளாக் எழுதிவிட்டு, இந்த விடயத்தில் அதையே செய்தால், அதன் பெயர் Hypocrisy of the highest order!!!
//தொழிற்சங்கங்கள் உரிமைக்காக போராடுகின்றனவா// ஹா ஹா தொழிற்சங்கம்! ஸ்டாலினிசமும் மாவோவிசமும் தொழிலாளர்களை, விவசாயிகளை, சாமானியர்களை எப்படி நடத்தினார்கள் தெரியுமா??
//உனக்கு மேல் பூனூல் போட்ட பாப்பான்கள் இருக்கிறார்கள் என்றால், ம.க.இ.க மாதிரி // ..............நல்லா புரியுது சிலரின் நேர்மை!!
நண்பரே, பல சமூக சரித்திர / சமூக விடயங்களில் உங்களுடைய புரிதலை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது! சொல்லுவதற்கு மனிக்கவும், பலமுறை நீங்கள் உங்கள் எழுத்துகளில் "நான் ரொம்ப படித்தவனில்லை" என்று கூறியிருக்கிறீர்கள்! ஒன்று புரிந்து கொள்ளுங்கள். அது ஒரு Qualification இல்லை! விபரம் தெரியாதவர் பாவம் என்றால், விபரம் தெரியவேண்டாம் ஆனாலும் நான் தெரிந்ததை சொல்லுவேன் என்று சொல்லுபவர், அதை விட பரிதாபம்!
இதை நான் ஏன் கேள்விக்குறி போன்ற அரை லூசுகளிடம் சொல்லாமல் உங்களிடம் சொல்லுகின்றேன் என்றால், நீங்கள் வேடதாரி-அறிவிலிகளின் வட்டத்தை விட்டு மேலே வந்து எழுதுவதாக நான் நினைத்திருந்தேன். மற்றும் உங்களின் பதிவுகளில் அந்த நேர்மையான தன்மை மேலோங்கி இருந்ததால் உங்களின் புரிதல் பக்குவப்பட்டு இருப்பதாக நினைத்தேன்! ஆனால் சில கால எழுத்துகள், அதை கரைக்கின்றன! உங்களின் ஆக்கத்தைப்பற்றி, உங்களின் நோக்கின் வலுவைப்பற்றியும் சந்தேகிக்க வைக்கின்றன! அதாலால்தான் இந்த கடைசி வாதங்கள், as a last riposte to your wanton misconceptions!
@ வஜ்ரா!
மதமும், கடவுளும் மனிதனுக்கு நன்மை தரவே படைக்கபட்டது, கவனிக்க படைக்கபட்டது தான், அதன் மூலத்தை அறிய இருக்கும் ஆவலே பரிணாமத்தை பற்றிய தேடல்!
இதுவரை விடை தெரியாத கேள்விகளுக்கு கடவுள் தான் எல்லாம் என்ற பதில் மெட்டுமே உள்ளது, இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்திருந்தால் இன்று கணிணி முன் அமர்ந்திருக்க முடியாது, கடவுளின் தேவையை தூக்கி போட்டு மனிதத்தின் தேவையை உணர ஆசைப்படுகிறேன்! என்னளவில் நான் புரிந்து கொண்டதை பகிர்கிறேன், எனக்குள் இருக்கும் சமூக கோபம் கற்பனை பாத்திரமான கடவுளை திட்டுவதால் சாந்தமடைகிறது!
கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்லவில்லை, அதை வைத்து பணம் சம்பாரிப்பவனிடம் ஏமாறுபவன் தான் முட்டாள் என்கிறேன்!, எதையும் கேள்வி கேள் என்பது தவறா என்ன?
என் மேல் உங்களுக்கு இருக்கும் அபிப்பிரயத்திற்கு நன்றி!
மாவீரன் வால் பையரே,
தாங்கள் ஈன்றெடுத்த மாவீரன்/மாமேதை வால் பையன் ஸ்கூல் ஆஃப் ரெள்டியிஸம் நடத்துகிறான் என்று இறுமாந்திருக்கும் உங்கள் பெற்றோர் மேலும் பூரிப்படைய ஒரு யோசனை.நீங்களும் உங்கள் காலாட் படையும் ஏன் ஸ்ரீலங்காவுக்கு சென்று தமிழர்களின் உரிமைக்காக ரெள்டியிஸம் சாகசங்கள் புரிந்து தமிழர்களின் வாழ்வு செழிக்க வழி செய்யக் கூடாது?
ஆனால், போகும் போது மறக்காம உங்க ஸ்கூலின் விசிடிங் ப்ரொஃபெஸ்ஸ்ர் ஆஃப் ரெள்டியிஸம் பெரிய தாடியாரையும் அழைத்துப் போகவும்.சிங்கள புத்திஸ்ட்டுக்கள் பயந்து நடுங்கி தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி விடுவர்.
உங்க லெவலுக்கு இந்த மாதிரி பராக்ரம் செயல்கள் செய்வது தான் அழகு.அதை விட்டுவிட்டு வெறும் சைக்கிள் கடை என்றால் எப்படி.
அன்புத் தம்பி திரு.நோ,
நீர் தான் இந்த உலகத்திலேயே மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்.
வால்பையன் போன்றவர்களுக்கு அப்போதைய பித்ததுக்கு மருந்து தின்பது தான் தெரியும்.
எதிலும் தெளிவான நிலைப்பாடுகள் இவர்களிடம் இருக்காது. அவ்வவ்போது சும்மா ஏதாவது எழுதுவார்கள் அதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு இப்படியா சட்டைய கிழித்துக் கொள்வது.
அந்தப்புள்ள பாட்டுக்கு என்னமாவது எழுதிக்கிட்டு திரியட்டுமே, சும்மா ஏன் நோண்டி நொங்கு எடுக்கிறீர். அவருக்கு என்ன வச்சுகிட்டு வஞ்சனையா ?
அவரும் எத்தனை நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்.
நோ இனி வாலை நிமிர்த்துவதுக்கு சொல்லு ஒரு நோ.
Gmail Buzz-ல் படிச்சது:
வால்பையன் சொன்னது: எனக்கும், ம.க.இ.க வுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உண்டு, ஆனால் அவர்களது களபணிகளுக்காக பாராட்டியே ஆக வேண்டும்
குழலி கேட்பது: அடாடாடாடா எங்கே போனாலும் மகஇக களப்பணி களப்பணி என்று சொல்லிக்கொண்டு, யாராவது அவர்களின் களப்பணி லிஸ்ட் கொடுங்களேன் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அதைவிட பெரிய்ய்ய்ய லிஸ்ட் மத்த கட்சிகளுக்கு நான் தரேன்
//ப்ரொஃபெஸ்ஸ்ர் ஆஃப் ரெள்டியிஸம் பெரிய தாடியாரையும்//
சொந்த பேர்ல வராத, சம்பந்தமில்லாமல் வேறு ஒருவரையும் வம்புக்கு இழுக்கும் புறம்போக்கு கோழை நாய்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்பது என் எண்ணம், எமது களப்பணி பற்றி எனக்கு தெரியும், உன்னை போல் குரைத்து கொண்டே இருப்பது என் வேலை அல்ல!
உனக்கு இனி என்னிடமிருந்து எதற்கும் பதில் இல்லை!
வால்பையன் said...
// //நீர் ஆணாக வேணாம் விடு, மனிதனாக கூட இருக்க வேணாம் ஆனா கோழையாக இராதீரும், அது உம்மை பெற்றவர்களுக்கும் கேவலம், உம்மால் பெற பட்டவர்களுக்கும் கேவலம்// //
வால்பையனின் இந்த "நீர் ஆணாக வேணாம் விடு" என்கிற வார்த்தைக்கு யாராவது விளக்கம் கொடுங்களேன்... ப்ளீஸ்...
//வால்பையனின் இந்த "நீர் ஆணாக வேணாம் விடு" என்கிற வார்த்தைக்கு யாராவது விளக்கம் கொடுங்களேன்... ப்ளீஸ்... //
மருது என்ற பெயர் ஆண்பால் என்ற ஒரு எதிர்பார்ப்பு, இல்லை அது சும்மா புனை பெயர் தான் நான் ஆண் இல்லை என்பது அவரது கூற்றாக இருந்தால் சரி ஆணாக வேண்டாம், இல்லை மனிதனாக கூட இருக்க வேண்டாம் என்ற சொல்!
டிகே!
******
குழலி, ம.க.இ.க வை பா.ம.க வுடன் ஒப்பிட்டு பார்ப்பதிலேயே நேரம் கழிக்கிறார்!
வன்னியர்களுக்கு மட்டும் பாடுபடுவதாக பூச்சி காட்டும் அந்த சந்தர்வாத கட்சிக்கு ஈடு வைக்க கம்யூனிசம் இன்னும் கெட வில்லை!
கேள்விக்குறி said...
// //உங்களுக்கு வினவோட கொள்கை என்னான்னு தெரியனுன்னா இங்க போங்க http://www.vinavu.com/we/
எனக்கு தெரிஞ்சு ரொம்ம்ம்ப நாளா அது தளமுகப்புலயேதான் இருக்கு// //
மகஇக சில கேள்விகள்?
http://kuzhali.blogspot.com/2007/07/blog-post.html
எனும் பதிவில் 'குழலி' பின்வருவன குறித்த மகஇக'வின் நிலைபாட்டை கேட்டிருந்தார்.
1. இடஒதுக்கீட்டிற்கு எதிரான மகஇகவின் நிலைப்பாடு,
2. தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்,
3. தமிழீழ நிலைப்பாடு,
4. தமிழ் மொழி, தமிழ் இனம்,
5. திராவிட ஆரிய கருத்தாக்கம்
6. பார்ப்பனியத்தை எதிர்க்கும் கட்சிகளின் மீதான கடும் விமர்சனங்கள்
வினவோட கொள்கை'யில இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமான்னு http://www.vinavu.com/we/ தேடினா, ஒன்னும் காணுமே?
//
கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்லவில்லை, அதை வைத்து பணம் சம்பாரிப்பவனிடம் ஏமாறுபவன் தான் முட்டாள் என்கிறேன்!, எதையும் கேள்வி கேள் என்பது தவறா என்ன?
//
கம்யூனிசத்தையும் கேள்வி கேளுங்கள் என்று தான் சொல்கிறேன். கம்யூனிசம் என்றால் இது தான் என்று நீங்கள் நம்பிக்கிட்டு இருப்பதும், ஒருவர் கடவுள் என்றால் இது தான் என்று நம்பிகிட்டு இருப்பது ஒண்ணுதான். ரெண்டுமே நம்பிக்கை தான்.
//கம்யூனிசத்தையும் கேள்வி கேளுங்கள் என்று தான் சொல்கிறேன். கம்யூனிசம் என்றால் இது தான் என்று நீங்கள் நம்பிக்கிட்டு இருப்பதும், ஒருவர் கடவுள் என்றால் இது தான் என்று நம்பிகிட்டு இருப்பது ஒண்ணுதான். ரெண்டுமே நம்பிக்கை தான். //
நான் எதையும் படித்து அறிபவனல்ல, அந்த ஏட்டு சுரைக்காய் ஒன்றுக்கும் வேலைக்காகது என்று நன்கறிவேன்!, கம்யூனிசத்தை பற்றிய என் புரிதலை சொல்லியுள்ளேன், அதில் சிறிதும் அரசியல் நிலைபாடில்லை, அங்கே அரசியல் நுழையும் போது நிச்சயம் கேள்விகுள்ளாக்க பட வேண்டும்!
நான் கம்யூனிசவாதி அல்ல!
மனிதனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்!
நான் கடவுளை மறுக்கும் போதும், நம்பிக்கையாளர்களை குறை சொல்லு போதும் நீங்கள் தரும் விளக்கம் போல், கம்யூனிசத்திற்கான கேள்விக்கு விளக்கம் தர அவர்கள் தயாராக இருக்க வேண்டும்!
நான் ம.க.இ.க வின் களப்பணியை தான் பாராட்டினேனே தவிர முழுதுமாக ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை!, எது என் கொள்கைக்கான முரண்பாடு!,எதையும் கேள்வி கேள் என்பதே என் கொள்கை!
வால்பையன் said...
// //குழலி, ம.க.இ.க வை பா.ம.க வுடன் ஒப்பிட்டு பார்ப்பதிலேயே நேரம் கழிக்கிறார்!
வன்னியர்களுக்கு மட்டும் பாடுபடுவதாக பூச்சி காட்டும் அந்த சந்தர்வாத கட்சிக்கு ஈடு வைக்க கம்யூனிசம் இன்னும் கெட வில்லை!// //
அப்போ ம.க.இ.க'வும் கம்யூனிசமும் ஒன்னா?
அய்ய்ய்யையோ - மார்க்ஸ், லெனின், மாவோ எல்லாம் இப்போ உயிரோட இருந்திருந்தா இத அவங்களால தாங்க முடியுமா?
அருள் என்ன எப்பவும் வால் மாதிரி பேசுவ இன்னைக்கு வேற மாதிரி பேசுற.
ஆமா நீ நல்லவனா கெட்டவனா ???
வால் பையா,
உன் வேலை என்ன?தவக்களை,பாம்பு,பூரான் என்று பதிவு போடுவது;அதில் ராஜபாளையம்,கும்மி,பட்டி என்ற ஜந்துக்கள் ஆபாசமாக எழுத, சந்தோஷப்படுவது.வேறு என்ன?இந்த கேவலத்த "களப்பணி" என்றெல்லாம் சொலவ்து உனக்கே ஓவராக இல்லையா?
இதெல்லாம் களப்பணி என்றால்,வன்னிய ஜாதி வெறித் திலகம் வைத்தியர் அய்யாவின் வழித்தோன்றல் திரு அருள் செய்யும் அரும் பணிகளை(மரம் வெட்டுவது,பஸ் கொளுத்துவது,ரோடு பெயர்த்து எடுப்பது), என்னவென்று சொலவது?டபுள்,ட்ரிபிள் களப்பணி என்றா?என்னவோ போங்க.நீங்களும் உங்க களப் பணிகளும்.
//அப்போ ம.க.இ.க'வும் கம்யூனிசமும் ஒன்னா?
அய்ய்ய்யையோ - மார்க்ஸ், லெனின், மாவோ எல்லாம் இப்போ உயிரோட இருந்திருந்தா இத அவங்களால தாங்க முடியுமா? //
மார்க்ஸ், லெனின், மாவோ
இவுங்கெல்லாம் கிறிஸ்தவர்களா, இவுங்க எதை கொள்கையா கொண்டிருந்தாங்க, அருள் நீங்க எதோ பெரிய பதிவியில இருக்குறதா உங்க நண்பர் சொன்னாரு, என் மாதிரி கைநாட்டுக்கு தெரிஞ்சது கூட உங்களுக்கு தெரியல!
கோழை என்பது இருபாலருக்கும் பொது பெயர் தானே!
பெண் தைரியமற்றவளாக இருந்தால் கோழின்னு சொல்லனுமா!
ஒன்னும் புரியல, தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்!
//நான் ம.க.இ.க வின் களப்பணியை தான் பாராட்டினேனே தவிர முழுதுமாக ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை!, எது என் கொள்கைக்கான முரண்பாடு!,எதையும் கேள்வி கேள் என்பதே என் கொள்கை
நான் கம்யூனிசவாதி அல்ல!
மனிதனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்//
என் செல்லக்குட்டி நீ புகுந்து வெளையாடு கண்ணு.
தகரடப்பாவை தரையில் வச்சு தேய்க்கிறதுக்கு( சத்தம் காது அடைக்குதுடா கண்ணுக்குட்டி)பதிலா தோழர்கள் கையில் கொடுத்தால் உண்டியலாவது குலுக்குவார்கள்.
உன்னை மாதிரி புரிஞ்சு கிழிக்கிறதுக்கு இனி லோகத்தில ஒருத்தன் பொறந்து தான் வரனும்.
என் செல்லக்குட்டி என்னமா புரிஞ்சுடுது இதுக்கு...
உங்களுக்கு வாலும் இல்லை, நீங்கள் பையனும் (வளராதவன்) இல்லை. நீங்கள் ஒரு வளர்ந்த ஆள். பின்ன எதுக்கு வால்பையன் என்று பெயர் ?
எல்லாத்தையும் கேள்வி கேக்கணும்ல ?
கேள்வி மட்டும் தான் கேக்கணும், பதில் தேடக்கூடாது.
//உங்களுக்கு வாலும் இல்லை, நீங்கள் பையனும் (வளராதவன்) இல்லை. நீங்கள் ஒரு வளர்ந்த ஆள். பின்ன எதுக்கு வால்பையன் என்று பெயர் ?//
குழந்தையா இருந்தப்ப அருண்னு பெயர் வச்சாங்க, பெருசானவுடனே மாத்திக்க முடியுமா!?
டோண்டுவை சிறுவயதில் எப்படி டோண்டுன்னு அழைத்து அவரும் அந்த பெயர் வைத்தாரோ, அதே போல் என்னையும் வால்ன்னு அழைத்து அந்த பெயரை வைத்து கொண்டேன்!
குறும்புகாரன் என அர்த்தம் கொள்க!
ரவுண்டு கட்டிக் கும்மியடித்தீர்களே, என்ன முடிவுக்குத் தான் வந்தீர்கள்?
இருபத்தைந்தாயிரம் மக்கள் விஷவாயுவினால் மாண்டார்கள்.ஐந்து லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
வஜ்ரா என்கிற சங்கர மாணிக்கத்துக்கு அதைப்பற்றிக்கவலை இல்லை!
கம்மூநிசக் கம்மனாட்டிங்களை எதிர்ப்பது என்ற போர்வையில் வேறெதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை!
நான் இங்கே எவருக்கும் தனிப்பட்ட முறையில் வக்காலத்து வாங்கிக் கொண்டு வரவில்லை.என்னுடைய வக்காலத்து எல்லாம், ஆட்டையில் ஒரு ஒழுங்கு, நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான்!
'மக்கள்' கமிட்டி வந்தால் என்னவாகும் ? இப்போ இங்கு விழுந்து விழுந்து ஆதரவாக வாதாடுபவர்கள் தான் ஓசையில்லாமல் ஓரம் கட்டப்படுவார்கள். எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக 'நல்லபடி' கவனிக்கப்படுவார்கள்.
http://www.outlookindia.com/article.aspx?265655
Charu Mazumdar’s most original contribution—an “addition”—to Mao’s thoughts. Anyone who is appealing to Charu Mazumdar’s “vision” now either must be recommending these methods or does not know what one is talking about.
“The method of forming a guerrilla unit has to be wholly conspiratorial. No inkling… should be given out even in the meetings of the political units of the Party. This conspiracy should be between individuals on a person-to-person basis. The petty-bourgeois intellectual comrade must take the initiative in this respect... He should approach the poor peasant who, in his opinion, has the most revolutionary potentiality, and whisper in his ears: “Don’t you think it is a good thing to finish off such and such a jotedar?” ...We should not use any kind of firearms at this stage. ‘The guerrilla unit must rely wholly on choppers, spears, javelins and sickles... The guerrillas should come from different directions pretending…to be innocent persons and gather at a previously appointed place, wait for the enemy, and, when the opportune moment comes, spring at the enemy and kill him...The middle peasant cadre and the petty-bourgeois intellectual comrades should be removed (from the guerrilla unit) if possible. When guerrilla actions become more frequent we have to gradually bring in these willing fighters. In fact, a time will come when the battle cry will be: “He who has not dipped his hand in the blood of class enemies can hardly be called a communist”. (From Simeon 2010 above, emphasis added)
That’s his “vision”, take it or leave it...
கேள்விக்குறி -
அவா எல்லாம் எப்போது கொள்கையானது ?
// //மார்க்ஸ், லெனின், மாவோ
இவுங்கெல்லாம் கிறிஸ்தவர்களா, இவுங்க எதை கொள்கையா கொண்டிருந்தாங்க, அருள் நீங்க எதோ பெரிய பதிவியில இருக்குறதா உங்க நண்பர் சொன்னாரு, என் மாதிரி கைநாட்டுக்கு தெரிஞ்சது கூட உங்களுக்கு தெரியல!// //
நான் எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய பதவியில் இல்லை. (ரொம்ப முக்கியமா நானோ, என் குடும்பத்தில் எவருமோ - அரசு பதவி எதிலும் இல்லை - யாரும் இடஒதுக்கீட்டில் வந்தவன்னு திட்டிடாதீங்க.)
வால்பையன் ""குழலி, ம.க.இ.க வை பா.ம.க வுடன் ஒப்பிட்டு பார்ப்பதிலேயே நேரம் கழிக்கிறார்! வன்னியர்களுக்கு மட்டும் பாடுபடுவதாக பூச்சி காட்டும் அந்த சந்தர்வாத கட்சிக்கு ஈடு வைக்க கம்யூனிசம் இன்னும் கெட வில்லை!"" என்கிறீர்கள்.
இந்த இடத்தில் "பா.ம.க'வுக்கு ஈடுவைக்க ம.க.இ.க இன்னும் கெடவில்லை" என்று நீங்கள் சொல்லியிருந்தால் எனக்கு அதில் சொல்வதற்கு எதுவுமில்லை. ஏனெனில் ம.க.இ.க'வுடன் பா.ம.க'வை இணைவைத்து பேச என்னால் முடியாது.
ஆனால், "ம.க.இ.க" என்பதற்கு பதிலாக "கம்யூனிசம்" என்கிறீர்கள் - அப்படியானால் ம.க.இ.க'தான் கம்யூனிசமா? இதை உண்மையான கன்யூனிஸ்டால் -அப்படி யாராவது இருந்தால்- தாங்க முடியுமா ? என்பதுதான் என் கேள்வி.
//மார்க்ஸ், லெனின், மாவோ இவுங்கெல்லாம் கிறிஸ்தவர்களா// என்பதன்மூலம் நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை: டோண்டு கூட்டமும், வினவு கூட்டமும் - இரண்டும் ஒரே இலக்கில் செயல்படும் "பூணூல் கூட்டம்" தான் என்பது என்கருத்து. வெளித்தோற்றத்துக்கு இருவேறு துருவங்கள் போன்று தெரிந்தாலும் - இரண்டின் நோக்கமும் பார்ப்பன நலன் தான்.
ம.க.இ.க அடிப்படை கம்யூனிச கொள்கையுடயவர்கள் தான்!
பெயர் தான் வேறு!, மற்ற சாரிகளை அவர்கள் போலி கம்யூனிசவாதிகள் என திட்டும் போதே தெரிந்து கொள்ளலாம்!
அதிகாரத்தை மொத்தமாக கையில் எடுக்க நினைக்கும் எவரும் பார்பனியவாதிகள் தான், அதில் வன்னியரும் அடக்கம் என்பதை நினைவில் கொள்க நண்பரே!
//என்னைப் பொறுத்தவரை: டோண்டு கூட்டமும், வினவு கூட்டமும் - இரண்டும் ஒரே இலக்கில் செயல்படும் "பூணூல் கூட்டம்" தான் என்பது என்கருத்து. வெளித்தோற்றத்துக்கு இருவேறு துருவங்கள் போன்று தெரிந்தாலும் - இரண்டின் நோக்கமும் பார்ப்பன நலன் தான்.//
ரிப்பீட்டே...
கிருஷ்ணமூர்த்தி,
don't throw a red herring.
எனக்கு என்ன கவலை என்பதெல்லாம் இருக்கட்டும்.
இங்கே, முதலாளித்துவத்தைப் பற்றியோ அதுவும் அமேரிக்க முதலாளித்துவம் பற்றி யாரும் பேசவில்லை. கம்யூனிசக் கம்மினாட்டிக் கபோதி நாதாரி லுச்சாப்பசங்களைப் பற்றியும் அந்த நாய்களுக்கு யூஸ்ஃபுல் இடியட்களாக இருக்கும் வெட்டி ஆபிசர்களையும் பற்றித்தான் பேச்சு.
ரொம்ப அறிவாளி மாதிரிப் பேசுறதே உங்க முழுநேர ஹாபியாக இருக்கலாம். அதுக்காக மத்தவங்கள்ளாம் ஒண்ணும் லூசுப்பசங்க கிடையாது.
என்ன வால்பையரே,ரொம்ப நேரமா காணோம்?என்ன இருந்தாலும் இவ்வளவு தீவிரமாகவா களப்பணி ஆற்றுவது?உங்க தொண்டரடிப்பொடிகளான தண்ட சோத்து ராஜபாளையம்,கும்மி,பட்டி போன்றதுகளை களப்பணிக்கு அனுப்பிவிட்டு நீங்க சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.உங்க மீதிலுள்ள அக்கறையில் தான் இதை சொல்கிறேன்.
வால்பையன் said...
// //ம.க.இ.க அடிப்படை கம்யூனிச கொள்கையுடயவர்கள் தான்!...மற்ற சாரிகளை அவர்கள் போலி கம்யூனிசவாதிகள் என திட்டும் போதே தெரிந்து கொள்ளலாம்! // //
அற்புதமான விளக்கம்.
// //அதிகாரத்தை மொத்தமாக கையில் எடுக்க நினைக்கும் எவரும் பார்பனியவாதிகள் தான், அதில் வன்னியரும் அடக்கம் என்பதை நினைவில் கொள்க// //
மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா?
//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா//
அய்யா அருள் அய்யா,
மரம் வெட்டி,அருள் போன்ற வன்னிய ஆதிக்க சக்திகளுக்கு இணையான அதிகாரமும்,பணமும் எனக்கும் கொடுங்கய்யா.
//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா? //
இல்லை என்று நீங்கள் நினைப்பது தான் தவறு!
இங்கே ஒரு மருத்துவன் மருத்துவனாகவே பார்க்கபடுவான், சாதியின் அடிப்படையில் அல்ல!
உழைக்காமல் உயர்வு இல்லை, இல்லாதவர்கள் இருப்பவனிடம் பகிர்ந்து கொள்வது தவறில்லை, இருப்பவனும் இடஒதுக்கீடு என்ற பெயரில் அதிகாரம் பெற நினைப்பது, பார்பனன் கோவிலில் எடுக்கும் பிச்சைக்கு சமம் தான்!
உங்கள் தெருவில் எத்தனை தகுதியான குழந்தைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் என்று பாருங்கள், எத்தனை வன்னியன் இருக்கிறான் என்று தேடாதீர்கள், பிறகு மனிதத்தை தேட வேண்டி வரும்!
@வால்பையன்
சாதி அடிப்படையில் ஒன்றிணைந்து உரிமைக்கு போராடுவதைத் தவிர வன்னியர்கள் உரிமை பெற வேறு வழியில்லை என்பது என்னுடைய கருத்து.
என்னுடைய கருத்துக்காக என்னால் முடிந்ததை, மற்றவர்கள் பாதிப்படையா வண்ணம், நான் செய்வது என்னுடைய உரிமை.
உங்களுடைய கருத்து மாறுபட்டதாக இருக்குமானால்- உங்களுடைய கருத்துக்காக உங்களால் முடிந்ததை நீங்கள் செய்வதும் செய்யாததும் உங்களுடைய உரிமை.
வால்பையன் said...// //உழைக்காமல் உயர்வு இல்லை, இல்லாதவர்கள் இருப்பவனிடம் பகிர்ந்து கொள்வது தவறில்லை, இருப்பவனும் இடஒதுக்கீடு என்ற பெயரில் அதிகாரம் பெற நினைப்பது, பார்பனன் கோவிலில் எடுக்கும் பிச்சைக்கு சமம் தான்!// //
உங்களுடைய இந்த கருத்து, இடஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை குறித்தெல்லாம் நீங்கள் கொண்டிருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இதில் நான் சொல்வதற்கு எதுவுமில்லை. அது தேவையுமில்லை.
வால்பையன் said...
// //
//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா? //
இல்லை என்று நீங்கள் நினைப்பது தான் தவறு!//
// உங்கள் தெருவில் எத்தனை தகுதியான குழந்தைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் என்று பாருங்கள், எத்தனை வன்னியன் இருக்கிறான் என்று தேடாதீர்கள், பிறகு மனிதத்தை தேட வேண்டி வரும்!//
// //
பார்ப்பனீயமும், ஆதிக்க சாதிவெறியும் கோலோச்சும் இந்த நாட்டில் 'மனிதம்' என்று ஏதாவது இருக்கிறதா? சூத்திரனுடைய துன்பம் அவனுடைய பிறவிப் பயன் என்று தான் ஆதிக்க சாதியினர் நினைக்கின்றனர்.
சாதி அடிப்படையில் ஒன்றிணைவது குறித்து தந்தை பெரியாரின் கருத்து:
""எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச் சாதி மாநாடு கூடவேண்டியது அவசியமேற்பட்டு விட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை 'வகுப்பு மாநாடுகள்' என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூறமுடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்டவேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒருவகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வரையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல்தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே, தங்களை தாழ்ந்தவர்களெனக் கூறுவது சுயநலக் கூட்டத்தாரின் பொறுக்கமுடியாத கொடுஞ்செய்கை என்று உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் சமத்துவத்தை அடைவதற்கே முயற்சி செய்வார்கள்.""
தந்தை பெரியார், 5.10.1929 'திராவிடன்' தினசரி
//தந்தை பெரியார், 5.10.1929 'திராவிடன்' தினசரி //
அவ்ளோ தானா?
இன்னும் ஏன் மனுதர்மம் வரை போகவில்லை, பிறவி பயன் என்று தானே வன்னியரும், தாழ்த்தபட்டவர்களை நினைக்கிறீர்கள், நீரெல்லாம் அதை பேச தகுதியற்றவர் அய்யா! நீர் கற்காலத்தை விட்டே இன்னும் வரவிலை, உங்களிடம் போய் மனிதத்தை பற்றி பேசினால் நான் தான் முட்டிக்கனும்!.
ஒரு பெரிய போர்டுல நான் வன்னியன்னு எழுதி கழுத்துல தொங்கவிட்டுகோங்க, இல்லைனா நெத்தியில நான் வன்னியன்னு எழுதி ஒட்டிகோங்க!
நாடு விரைவில் முன்னேறும்!
//ஒரு பெரிய போர்டுல நான் வன்னியன்னு எழுதி கழுத்துல தொங்கவிட்டுகோங்க, இல்லைனா நெத்தியில நான் வன்னியன்னு எழுதி ஒட்டிகோங்க//
அதை விட "திராவிட வன்னிய் பார்ப்பனீயன்" ன்னு போர்ட் மாட்டிக்கிட்டா அடையாளம் பளிச்சென்று தெரியும்."இதோடா, ஆதிக்க சக்தி வருது பார்" என்று மக்களும் ஒதுங்கி போவாங்க.!
//அதை விட "திராவிட வன்னிய் பார்ப்பனீயன்"//
தவறு மருது அய்யா."திராவிடீய தமிழ் வன்னியன்" என்பது தான் மக்களை ஒடுக்கும் வன்னிய ஆதிக்க சக்தியின் ஜாதி அடையாளம்.
வால்பையன் said...
// //ஒரு பெரிய போர்டுல நான் வன்னியன்னு எழுதி கழுத்துல தொங்கவிட்டுகோங்க, இல்லைனா நெத்தியில நான் வன்னியன்னு எழுதி ஒட்டிகோங்க!// //
இப்படியெல்லாம் செய்யாம இருப்பதால - ஆதிக்க சாதியினர் BC/MBC/SC யினரை வாழட்டும்'னு விட்டுவிடப்போவதில்லை.
bala said...
// //தவறு மருது அய்யா."திராவிடீய தமிழ் வன்னியன்" என்பது தான் மக்களை ஒடுக்கும் வன்னிய ஆதிக்க சக்தியின் ஜாதி அடையாளம்.// //
வன்னியர்களை ஆதிக்க சக்தி என்று சொல்வது முழுப்பொய். இது ஒரு கோயபல்ஸ் பிரச்சாரம். ஒடுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்தான் தங்களது சாதிவெறியை மறைக்க, வன்னியர்கள் மீது விஷம் கக்குகின்றனர்.
//ஆதிக்க சாதியினர் BC/MBC/SC யினரை வாழட்டும்'னு விட்டுவிடப்போவதில்லை.//
தாழ்த்தபட்டவர்களுக்கு நீங்களே ஒரு ஆதிக்கசாதி என்பதை மறந்துவிட வேண்டாம்!
உங்கள் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி, வினவு பதிவில் வன்னியர்களின் ஆதிக்க சாதி திமிர் என்ற பதிவு என்பதை மறந்து விட வேண்டாம்!
பார்பனீயத்தின் அனைத்து கூறுகளும் உங்களிடம் இருக்கின்றன, கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வது நீங்கள் தான், அதாவது உங்கள் தவறை மறைத்து அடுத்தவரை குற்றம் சொல்வதன் மூலம் திசை திருப்புவதே பார்பனீயம்!
வால்பையன் said...
// //
பார்பனீயத்தின் அனைத்து கூறுகளும் உங்களிடம் இருக்கின்றன, கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வது நீங்கள் தான், அதாவது உங்கள் தவறை மறைத்து அடுத்தவரை குற்றம் சொல்வதன் மூலம் திசை திருப்புவதே பார்பனீயம்!
// //
வன்னியர்கள் மேல்சாதி, உயர்ந்த சாதி என்றெல்லாம் நான் கூறிக்கொள்ளவில்லை. பார்ப்பனீயத்தின் அனைத்து கூறுகளும் எங்களிடம் இருப்பதாக கூறுவதின் பொருள் விளங்கவில்லை.
பார்ப்பனர்கள் ஒரு சிற்பான்மைக்கூட்டம் - ஆனால் அதிகாரத்தின் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். வன்னியர்கள் ஒரு பெரும்பான்மைக்கூட்ட்ம். ஆனால் உரிய இடமோ, உரிமையோ எங்கும் இல்லை.
இரண்டையும் ஒன்றாக பேசுவது பார்வைக்கோளாறு.
""""பார்ப்பான் என்பது - 'மேல் சாதிக்காரன்' என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்சாதிக்காரன் என்பது பாடுபடாமல் இருந்து, ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டபட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கின்ற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும். பார்ப்பனர் மாத்திரமல்ல, சாதிமுறையே அடியோடு அழிந்துவிடும்.... எவனெவன் தன்னை மேல்சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்ளுகிறானோ அவனெல்லாம் சரீரத்தால் வேலை செய்யாமல் மற்றவர்கள் உழைப்பில் வாழ ஆசைப்படுகிறவன் என்றுதானே அர்த்தம்!""""
என்றார் தந்தை பெரியார் (குடியரசு 5.3.1933).
வன்னியர்கள் தலித்துகளைவிட உயர்ந்தவர்கள் என்பது எனது கருத்து அல்ல. பா.ம.க.வின் கருத்தும் அல்ல. வன்னியர்கள் அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழும் கூட்டமும் அல்ல.
வன்னியர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், வன்னியர்களுக்கு எதிரான ஆதிக்க சாதிவெறியர்களை எதிர்ப்பதும், அவர்களின் சதியை முறியடிப்பதும்தான் வன்னியர்களின் இன்றைய தேவை என்று நான் கருதுகிறேன்.
பார்ப்பான் என்பது சாதி அல்ல, அய்யர் அய்யங்கார் என்பது தான் சாதி!
பார்பனியம் என்பது வர்ணாசிர அடுக்கை குறிக்கவும் பயன்படுவது!
அதில் மேலே இருப்பது அய்யர், அய்யாங்கார் சாதி, அப்படியே படிப்படியாக மற்ற சாதிகள், அதில் எந்த படியில் சாதி பெயரில் அமர்ந்தாலும் அதுவும் பார்பனியமே அவர்களும் பார்பனர்களே!
தான் இன்ன சாதி என கூறி கொள்ளுதல் சந்தேகமில்லாமல் பார்பனர்களே! பெரியார் சொன்னாலும் என் கருத்து இது தான்!, பெரியாருக்கு தாழ்ந்த சாதி ஏன் என்ற கவலை, உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை, நீங்களெல்லாம் அவர் பெயரை பயன்படுத்தி கொள்வது காலக்கொடுமை!
உழைச்சா தான்யா சோறு!
வால்பையன் said...
// //பெரியாருக்கு தாழ்ந்த சாதி ஏன் என்ற கவலை, உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை, நீங்களெல்லாம் அவர் பெயரை பயன்படுத்தி கொள்வது காலக்கொடுமை!// //
"உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை" என்று நீங்கள் சொல்வது உண்மைதான்.
அப்படி ஒரு கவலைகொள்ளும் உரிமை, அதற்காக ஆனதை செய்யும் கடமை எனக்கு உண்டு.
இதற்காக பெரியார் பெயரை பயன்படுத்துவதில் எந்த கொடுமையும் இல்லை.
//
"உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை" என்று நீங்கள் சொல்வது உண்மைதான்.
அப்படி ஒரு கவலைகொள்ளும் உரிமை, அதற்காக ஆனதை செய்யும் கடமை எனக்கு உண்டு.
இதற்காக பெரியார் பெயரை பயன்படுத்துவதில் எந்த கொடுமையும் இல்லை. //
சுயசாதி அபிமானம் தான் பின் வெறியாக மாறுகிறது, இதுவே அல் கொய்தா, ஆர் எஸ் எஸ் க்கும் பொருந்தும், பெரியார் பேரை நாய் பேயெல்லாம் பயன்படுத்தும் போது நரிகள் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை தான்!
வால்பையன் said...
// //சுயசாதி அபிமானம் தான் பின் வெறியாக மாறுகிறது, இதுவே அல் கொய்தா, ஆர் எஸ் எஸ் க்கும் பொருந்தும், பெரியார் பேரை நாய் பேயெல்லாம் பயன்படுத்தும் போது நரிகள் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை தான்!// //
சுய மொழி அபிமானம் (மொழிப்பற்று), சுய இன அபிமானம் (இனப்பற்று), சுய தேச அபிமானம் (நாட்டுப்பற்று), சொந்த ஊர் பற்று ---- இதெல்லாம் கூடத்தான் பின்னால் வெறியாக மாறுகிறது.
எல்லா பற்றையும் விட்டுவிலகி 'மகான்'களாக வாழ்வோர் யாரேனும் இருந்தால் நல்லதுதான்.
‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!’ என்றுவாழ என்னால் இயலாது.
//‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!’ என்றுவாழ என்னால் இயலாது. //
பா.ம.க கிழிச்ச கிழி தான் ஊருக்கே தெரியுமே!
மொழி அழிந்தால் கலாச்சாரமே அழியும், சாதி அழிந்தால் என்ன அழியும், எப்படி உங்களால் கருணைகிழங்குக்கும், கக்கூஸுக்கும் இணை வைத்து பேச முடிகிறது!
நீங்க எப்பவுமே இப்படி தானா
இல்ல
இப்படி தான் எப்பவுமே வா!
// //சாதி அழிந்தால் என்ன அழியும்// //
சாதி எப்படி அழியும் அல்லது சாதியை எப்படி அழிப்பது? (சாதி இல்லை என்று மறுத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்பது பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதை.)
பா.ம.க, BSP, விடுதலை சிறுத்தைகள் எல்லாம் சாதி ஒழிப்பை இலக்காக கொண்ட கட்சிகள்தான்.
//
‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்'
//
சொந்த சாதிக்காரன்/சாதிக்காரி எல்லாம் சகோதரர்/சகோதரிகள் என்றால் யாரைத் தான் திருமணம் செய்து கொள்வது ?
பா.ம.க, BSP, விடுதலை சிறுத்தைகள் எல்லாம் சாதி ஒழிப்பை இலக்காக கொண்ட கட்சிகள்தான்.
(சாதி இல்லை என்று மறுத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்பது பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதை.)
தக்காளி, என்ன ஒரு முரண்பாடு, ஒரு சாதி கட்சி, சாதியை ஒழிக்க பாடுபடுதாம்!
பழைய ஈயம்பித்தளைக்கு பேரிச்சழம் கொடுப்போர் சங்கம்,
ரோட்டோரம் மரம் வெட்டுவோர் சங்கம்,
ஓட்டுக்கு காலில் விழுவோர் சங்கம்,
சுயமரியாதை என்னவிலை என கேட்போர் சங்கம்!
என ஆரம்பித்து, அதிலுள்ள உங்களை போல் மெம்பர்கள் அடுத்த சங்கத்து ஆட்களை பார்த்து என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா என கேட்டால் எப்படியிருக்குமோ, அப்படி தான் சாதி கட்சியும், பெருத்த காமெடி பீஸ்கள்!
குலத்தொழில் முறை சாதி அடிப்படையிலேயே கட்டமைக்கபடுகிறது, சாதி ஒழிந்தால் நீங்களே ,உங்கள் மகனோ சாக்கடை அள்ள செல்ல நேரிடும் என்ற பயம் உங்களை சாதியை காக்க வைக்கிறது, துப்புரவு தொழிலாளிகளாக வன்னியரை சேர சொல்லுங்கள், உங்களுக்கு சாதி வெறி இல்லை என்று ஒப்பு கொள்கிறேன்!
துப்புரவு தொழிலாளி நியாபகம் இருக்கட்டும், நாலு சூப்புர வைசர்களை காட்டி பூச்சி காட்ட கூடாது, இப்போ இருக்குறதை விட இன்னும் நாறிடும்!
Dont contend vinavu. Its number one publisher for publice and true tamilans.
வால்பையன் said...
// //தக்காளி, என்ன ஒரு முரண்பாடு, ஒரு சாதி கட்சி, சாதியை ஒழிக்க பாடுபடுதாம்!// //
ஒடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான இயக்கங்கள், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வகுப்புவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு - இவை எல்லாம் சாதி ஒழிப்பை நோக்கிய முற்போக்கான நடவடிக்கைகள்தான்.
எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறோம் என்பதை யாரேனும் புரிந்துகொள்ள/ஏற்க மறுத்தால் - அது ஒன்றும் கவலைக்குறிய நிகழ்வு அல்ல.
//ஒடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான இயக்கங்கள், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வகுப்புவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு - இவை எல்லாம் சாதி ஒழிப்பை நோக்கிய முற்போக்கான நடவடிக்கைகள்தான்.//
சாதிவாரியான கணகெடுப்பால் நிச்சயமாக விளிம்புநிலை மனிதர்களுக்கு நல்லது நடந்திருக்கும் என்றால் இன்று நாடு இப்படி இருந்திருக்காது, சரி இடபங்கீடு நல்லது தான், ஆனால் அதெல்லாம் யாருக்கு போகிறது.
குறைவான மக்கள் தொகை என்பதால் நரிகுறவர்களின் கல்வி ஒடுக்கப்படும், அதிக எண்ணிக்கையில் இருக்கோம் எங்களுக்கு அதிக பங்கீடு வேண்டும் என்று கேட்டு வாங்கி, கொழுத்தவனும், வலியவனும் அதை பிடுங்கி கொள்கிறான், ஏழை ஏழையாகவே இருக்கிறான், என் சாத் தலைவன் தலையனை வாங்கி தருவான் என்ற நம்பிக்கையில், அவன் ஒரு தக்காளி கூட வாங்கி தர மாட்டான் என்பது ஒருவருக்கும் தெரியாமல் போனது வருத்தம்!
அடிப்படை கல்விக்கே இங்கே தாளம் போடுது தமிழகம், அதற்கு ஒரு வழியும் காணோம், எங்கிருந்து சாதி ஒழிப்புக்கு முற்போக்குறிங்கன்னு தெரியல!
சாதி மக்களை ஒன்று கூட்டி நாங்கெல்லாம் பெரும்படை, சொறி, சிரங்கு என காட்டுவதை தவிர சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க போவதில்லை என்பதே உண்மை!, தலைவன் எதாவது செய்வான் என தோளில் தூக்கி செல்லும் தொண்டனுக்கு என் அனுதாபங்கள்!
//
Dont contend vinavu. Its number one publisher for publice and true tamilans.
//
rubbish.
but of course, like a true tamilan you have spoken your mind in english.
வினவு பதிவை ஒரு 1000 பேர் படிப்பார்கள். புதிய ஜனநாயகத்தின் சர்குலேஷனோ ஒரு 1 லட்சத்தைக்கூடத் தாண்டாது.
ஆறுகோடி தமிழர்களில் ஒரு லட்சம் கூட இல்லாதவர்கள் தான் "உண்மையான தமிழர்களாம்". அவிங்க சேர்ந்து செம்புரட்சி பண்ணப்போறாங்களாம்.
கே.கே.கே.நெ.வ
வால்பையன் said...
// //சாதி மக்களை ஒன்று கூட்டி நாங்கெல்லாம் பெரும்படை, சொறி, சிரங்கு என காட்டுவதை தவிர சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க போவதில்லை என்பதே உண்மை!, தலைவன் எதாவது செய்வான் என தோளில் தூக்கி செல்லும் தொண்டனுக்கு என் அனுதாபங்கள்!// //
மிகத்தவறான வாதம் இது.
மருத்துவர் இராமதாசு அவர்களால் வன்னியர்களுக்கு என்ன பலன்? தொல். திருமாவளவன் அவர்களால் தலித் மக்களுக்கு என்ன பலன்? - என்ற கேள்விக்கு 'ஒன்றுமே இல்லை' என்ற பதிலை எவராலும் அளிக்க முடியாது.
ஒரு மக்கள் கூட்டம் மனதளவில் தலை நிமிர்ந்து நடப்பது கூட மிகப்பெரிய பலம்தான்.
மருத்துவர் இராமதாசு அவர்களின் காலத்துக்கு முன்பு அரசு பதவிகள், அதிகார இடங்களில் இருந்த வன்னியர்கள் எத்தனை பேர், இன்று எத்தனை பேர். மருத்துவம் போன்ற உயர்கல்வி இடங்களில் முன்பு என்ன நிலை, இப்போது என்ன நிலை - என்றெல்லாம் ஆராய்ந்தால் விளக்கம் கிடைக்கும். சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க முடியுமா, முடியாதா - என்பதற்கும் விடை கிடைக்கும்.
அதாவது முன்பை விட, இப்போது நிலைமை தேவலாம் - ஆனால், உரிய பங்கு இன்னும் இல்லை என்பதே இன்றைய நிலை.
இந்தியா முழுவதுமே 'சாதி மக்களை ஒன்று கூட்டி' சாதிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. மண்டல் குழுவிற்கு முன்பு நாடாளுமன்றத்தில் இருந்த OBC MPக்கள் எண்ணிக்கை என்ன? இப்போதைய நிலை என்ன? லாலு, முலாயம், சரத் யாதவ், நித்தீஷ் குமார் என்கிற மாபெரும் தலைவர்கள் உருவாக காரணமே மண்டல்தான்.
1990களில் வி.பி. சிங் அவர்களால் வேலை வாய்ப்பில் OBC இடஒதுக்கீட்டை முழுமையாக கொண்டுவர முடியவில்லை. பல கட்சிகள் எதிர்த்தன. ஆனால், 2007இல் அர்ஜுன் சிங் அவர்கள் மிக எளிதாக கல்வியில் OBC இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். எல்லா கட்சிகளும் ஆதரித்தன. காரணம் - அன்று இல்லாத சாதி ஒற்றுமை இன்று இருந்ததுதான்.
சாதி மக்களை ஒன்று கூட்டுவதால்தான் - மகளிர் இட ஒதுக்கீடு பாதி கிணற்றில் நிற்கிறது.
சாதி மக்களை ஒன்று கூட்டுவதால்தான் - சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதனாலெல்லாம் என்ன பலன் என்று நீங்கள் கேட்கலாம்: கல்வியில் இடஒதுக்கீடு என்பது மட்டுமே, பல ஆயிரம் சாதிக்காரர்களை முன்பு இருந்திராத இடத்துக்கு இப்போது இட்டுச்செல்லும்.
சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க முடியாது என்பது ஆதாரமற்ற பேச்சு
தனி மனிதன் தலை நிமிர்ந்து நடப்பதற்கு எதற்கு சாதி!?
அவனை நீ இன்ன சாதி என்று ஊட்டு வளர்ப்பதால் தான், முன்னேறிய சமூகம் சாதியை துறந்து பிற்படுத்தபட்ட சமூகத்திற்கு வழி விடுவதே சரி, இல்லையென்றால் சாதி மனிதத்தை அழிக்கும்!
Post a Comment