ஜெயமோகனின் சுவையாகி வருவது இடுகையின் பின்னூட்டம் ஒன்றிலிருந்து முதற்கண் சில வரிகள்:
“நான் என் அம்மாவின் சமையலே மிகுந்த ருசியானது என்று சொல்லிகொண்டிருன்தேன், என் மகன் பேச ஆரம்பித்த பின்பு என் மனைவியின் சமையலே மிகுந்த ருசி என்றான்”.
இதைப் படித்தவுடன் எனது நினைவுகள் சமீபத்தில் அறுபதுகளில் கல்கி அல்லது குமுதத்தில் வந்த ஒரு கதைக்கு சென்றன. அதன் தலைப்பே "அம்மாவின் சமையல்”தான். அதன் கதைச் சுருக்கம் பின்வருமாறு:
அகிலா (இக்கதாபாத்திரத்துக்கு நான் இங்கு பெயரளித்துள்ளேன், ஏனெனில் ஆக்சுவலாக என்ன பெயர் அக்கதையில் கொடுக்கப்பட்டது என்பது நினைவில் இல்லை) ஹோம் சயன்சில் எம்.ஏ. அவளுக்கு திருமணமாகிறது. அவளும் மிக சிரத்தையாக சுத்தமாக சமைக்க, அவள் கணவன் எல்லாவற்றையும் முழுங்கி விட்டு “என்னதான் இருந்தாலும் அம்மாவின் சமையல்போல வராது” என்கிறான். அகிலாவுக்கு அதில் மனக்குறை. ஆனால் அவள் மாமியாரோ திருப்தியாக சாப்பிடுகிறாள், “சமையல் பிரமாதம்” என்கிறாள். மாமியாரே அவ்வாறு சான்றிதழ் தந்ததில் அவளுக்கு சந்தோஷம்தான் என்றாலும், கணவன் கூறியது உறுத்துகிறது.
இதே மனக்குறையில் அவளுக்கு ஜுரமே வந்து விடுகிறது. ஆகவே அவள் மாமியாரே சமைக்கிறாள். அவ்வாறு சமைத்துக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக சமையலறை ஜன்னலைப் பார்க்க, அவளை இரு கண்கள் வெறித்தவாறு பார்க்கின்றன. நடுநடுங்கிப் போகிறாள். அவள் பார்ப்பதை உணர்ந்த அக்கண்களும் சரேலென விலகிக் காணாமல் போகின்றன. வேகமாக மாடிக்கு சென்றால், அவள் மருமகள் மூச்சுவாங்க படுத்திருக்கிறாள். “அம்மா நான் கீழேஎ வரவேயில்லை என சம்பந்தமில்லாமல் கூறுகிறாள்”.
சில நாட்கள் கழித்து குணமடைந்த பின்னால், அவளே சமையல் செய்ய ஆரம்பிக்க, இம்முறை கணவன் அம்மாவின் சமையல்போலவே இருக்கு என அவளை சிலாகிக்க, மாமியாருக்கோ சாப்பாடு குறைகிறது.
பிறகு ஒரு நாள் கணவன் எதேச்சையாக தன் மனைவி எழுதிய குறிப்பை படிக்கிறான். அதன் தலைப்பு அம்மாவின் சமையல் என இருக்கிறது. எல்லா உணவுப் பொருட்களுக்கும் போட வேண்டிய அளவுகள் அதில் உள்ளன. கடைசியில் எழுதப்பட்ட வரிகளே அவனது கவனத்தைக் கவர்கின்றன.
“ஆண்டவன் கொடுத்த கரங்கள் இருக்கும்போது கரண்டிகள் எதற்கு? புளி கரைக்க, புளிசாதம் பிசிய, அடுப்பில் ஏற்றும் முன்னால் குழம்புக்கு பொடி போட்டு கரைக்க எல்லாவர்றுக்குமே கைகளையே பயன்படுத்த வேண்டும்” என அவை கூறுகின்றன. யோசனையுடன் அவன் சமையறைக்கு வர, அவன் மனைவியும் அம்மாவும் பேசுவதை கவனிக்கிறான். அவன் அம்மா கூறுகிறாள். “என்னோட ஆத்துக்காரரும் அப்படித்தான் தன் அமாவின் சமையலே சிறந்தது என்று சொல்லி என்னை வெறுப்பேத்தினார். பிறகு என் மாமியார் சொல்லிக் கொடுத்ததுபடி செய்தேன்” என்றாள். அவள் மேலும் கூறுகிறாள், “அது ஒண்ணுமில்லை, நாம கையைத்தான் எல்லா கலக்கல் வேலைகளுக்கும் உபயோகப்படுத்துகிறோம், அதனால் சமைக்கப்பட்ட பதார்த்தங்களில் ஒருவித ஊசல் வாசனை வந்து விடும், அது இந்த ஆண்களுக்கு பிடித்துத் தொலைத்துவிடும், என் கணவரும் அப்படித்தான், உன் கணவனும் அப்படித்தான்”.
“ஐயோ சொல்லாதீர்கள் அம்மா, வயத்தைக் குமட்டுகிறது,” என மருமகள் கூற, கணவனுக்கு தலை சுற்றுகிறது.
இக்கதை பிளாட்தான் ஞாபகத்துக்கு வந்ததே தவிர, எழுதியவர் பெயர் என்ன என்பது நினைவுக்கு வரவில்லை. என் சித்திக்கு ஃபோன் போட்டு கேட்டேன். கதையின் பிளாட்டை கூறியதுமே அவருக்கும் அக்கதை தெரியும் என்றார். ஆனால் அவருக்கும் அக்கதையை எழுதியது யார் என்று தெரியவில்லை.
நானாகவே ஊகித்து அப்புசாமி சீதாபாட்டி புகழ் ஜ.ரா. சுந்தரேசனுக்கு ஃபோன் போட்டு கேட்டேன். அவரால் திட்டவட்டமாக சொல்லவியலவில்லை. இருந்தாலும் ஊசல் என்ற வார்த்தையை தான் அடிக்கடி பயன்படுத்துவதாகக் கூறினார். அவரிடமிருந்து ராகி ரங்கராஜனின் எண்ணை வாங்கி அவருக்கும் ஃபோன் போட்டேன். ஆனால் அவர் மனைவிதான் பேசினார். மதியத்துக்கு மேல் ஃபோன் செய்து பேசச் சொன்னார். எதற்கும் இப்பதிவையும் இங்கே போட்டு விடுகிறேன். உங்களில் யாருக்காவது அது யாருடைய கதை என்பது தெரிந்தால் சொல்லுங்கப்பு.
ஜரா சுந்தரேசனுக்கு ஃபோன் போட்டதில் வெகுநாட்களாக என்னைக் குடைந்து கொண்டிருந்த இன்னொரு கேள்விக்கு பதில் கிடைத்தது. சமீபத்தில் 1970-ல் பீச்சில் சுண்டல் வாங்கியபோது கிடைத்த காகிதத்தில் “புடலங்காய் கூட்டு” என்னும் தலைப்பில் வந்த கதையின் ஆரம்பம் மட்டும் கிடைத்தது. கதைக்கு ஓவியர் வர்ணம் அவர்கள் படம் போட்டிருந்தார். அக்கதையின் முடிவு தெரியாது. பதிவில் போட்டு இதே மாதிரி உங்களிடம் உதவி கோரலாம் என நினைத்தபோது, சுந்தரேசன் அவர்களே இந்த சந்தர்ப்பத்தில் கூறினார், தான் “புடலங்காய் கூட்டு” என்னும் தலைப்பில் கதை எழுதியதாகவும், அதிலும் இந்த ஊசல் விஷயம் வருகிறது என்று. வர்ணம் படம் போட்டதையும் அவர் ஊர்ஜிதம் செய்தார்.
ஆக, புடலங்காய் கூட்டின் புதிரும் தானாகவே தீர்ந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
18 comments:
உங்களுடைய இந்த இடுகைக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட
முடியவில்லை.... என்னவென்று பார்க்கவும்.
@சிவகுமார்
எனது இடுகைக்கு வந்தே அந்த ஓட்டை இப்போது போட இயலும். தமிழ்மண எனது பதிவை ஏற்க தாமதம் செய்தது. இப்போது ஏற்று விட்ய்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களுக்கு இருக்கிற ஆயிரம் வேலைகளுக்கு நடுவுல இதெல்லாம் எப்படி முடிகிறது?
அப்புறம் தொலைபேசி விசாரணை வேற - பாவம் சார் அவங்க!
//மாமியாரே அவ்வாறு சான்றிதழ் தந்ததில் அவளுக்கு சந்தோஷம்தான் என்றாலும், கணவன் கூறியது உறுத்துகிறது. // இந்த உறுத்தல் தானே பிரச்சனையே...
அப்புசாமி-சீதா பாட்டி புகழ் பாக்கியம் ராமசாமி தானே.
டோண்டு சார்!
ரா.கி.ர. எழுதியிருப்பதற்கான வாய்ப்புகளிருக்கும் என அவரது சிறுகதை தொகுப்புகளில் நூலகத்தில் தேடித் பார்த்தேன்...காணமுடியவில்லை!
பாக்கியம் ராமசாமி இயற்பெயர் ஜ.ரா.சுந்தரேசன் என்பது ரவி அவர்கள் பதிவில் படித்தது ஞாபகம் வந்துவிட்டது.
அப்புசாமி - சீதா பாட்டியோடு ,பாக்கியம் ராமசாமியின் பெயர்தான் வசமாக பதிந்துள்ளது.
சுவையான பதிவு !
என்னை பொறுத்த வரை, இது நம் குறை காணும் மனோபாவத்தில் வெளிப்பாடே என்று சொல்வேன்.
உணவகங்களில் சாப்பிடும் பொழுதும் இதே மாதிரிதான் நாம் புலம்புவோம்- வீடு சாப்பாடு போல இது இல்லை என்று.
உண்மையிலே மனைவியிடம் உள்ள நிறைகளை எல்லாம் காணமல் குறைகளை மட்டுமே காணும் நம் மனோபாவம்.
அதே போல அம்மா செய்த சமையல் சாப்பிடும் பொழுதும் நாம் சொல்லுவோம், என் மனைவி இன்னும் மிதமாக காரம், உப்பு போட்டு இருப்பார் என்று.
கரண்டியால் போடப்பப்டும், பிழியப்படும் புளியும், கையால புளியப்பப்டும் புளியும் ஒரே சுவை தான் தரும். நான் புளிந்தாலும் ஒரே சுவை நீங்கள் புளிந்தாலும் ஒரே சுவை. புளியமரத்தின் DNA வில் உள்ளது சுவை வேறுபாட்டின் ரகசியம்.
தமிழர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தாம்!
தமிழுக்கு "செம்மொழி அந்தஸ்து" கிடைக்க வேண்டுமே என்ற அவர்கள் நெடுநாளைய ஏக்கம் தீர்ந்த ஒரு மாதத்திற்குள் "புடலங்காய் கூட்டு" என்ற சிறுகதை யார் எழுதியது என்று பல வருடங்களாக அவர்கள் மனதை அரித்து வந்த கேள்விக்கும் விடை கிடைத்து விட்டது.
வாழ்க கலைஞர்!
வாழ்க டோண்டு!!
அநேகமான அந்தக் கதைக்குச் சொந்தக்காரர் ஹேமா ஆனந்ததீர்த்தனாக இருக்கலாம்.
இல்லை, பாமாகோபாலன்.
//அருள் said...
உங்களுக்கு இருக்கிற ஆயிரம் வேலைகளுக்கு நடுவுல இதெல்லாம் எப்படி முடிகிறது?
அப்புறம் தொலைபேசி விசாரணை வேற - பாவம் சார் அவங்க!//
ஆருயிர் வர வர உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் ரசனை தெரியவருது. இது தான் ஒரிஜனல் ஆருயிர் சொரூபம் என்கையில் நல்லாத்தானே இருக்கு.
ஏன் வீனா கட் அண்ட் பேஸ்ட் செய்து நடிக்கிறீர்கள். எங்களுக்கு தேவை ஒரிஜனல் ஆருயிர் தான்
Why RP Rajanayahem is not writing anything in his blog for past 7 months? Is he alive or dead? I used to like all his posts!! Infact I started reading his blog as you put in ur favourites...
/// Why RP Rajanayahem is not writing anything in his blog for past 7 months? Is he alive or dead? I used to like all his posts!! Infact I started reading his blog as you put in ur favourites
///
what kind of a sick man would ask if a person is dead or not if that person is not active in the web?
டோண்டு வைத்த புடலங்காய் கூட்டிலும் செட்டியார் போல் வந்து விட்டாரே அருள் படையாச்சி ?
the author of 'amma samayal' was late sri thumilan., if i remember correctly
//what kind of a sick man// - what an indecent man u r.. answering for questions which was not asked at u?
////what kind of a sick man// - what an indecent man u r.. answering for questions which was not asked at u?////
Sick man, proved.
//Sick man, proved.//RP R is not dead.. he is alive in the name of Anony... Proved
Post a Comment