இன்று செய்திகளில் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாகப்பட்டது, bjp.com என்ற பெயரில் ஒரு வலைத்தளம் திறக்கப்பட்டதாகவும் அதை க்ளிக் செய்தால் அது காங்கிரசின் பக்கத்துக்கு செல்வதாகவும் ஆகவே சைபர் கிரைம் குற்றம் என்னும் அடிப்படையில் பிஜேபி காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பபடப் போவதாகவும் செய்தியில் வந்தது.
இதில் போலி டோண்டு எங்கே வந்தான் என்றால் அதை சற்றே விளக்கமாக கூறவேண்டும். அதற்கு முன்னால் மெடா ரிடைரக்க்ஷன் என்னும் பதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் என் பெயரில் பிளாக்கர் கணக்கு துவங்கப்பட்டு அசிங்கப் பின்னுட்டங்கள் அப்பெயரில் வெளியிடப்பட்டன. என்னுடைய உடனடி எதிர்வினை எலிக்குட்டி சோதனையைப் பற்றிக் கூறுவதே. போலி ஆசாமி அவ்வாறு துவக்கிய பிளாக்கர் கணக்கில் ஒரு வலைப்பூவையும் துவக்கினான். அதை க்ளிக் செய்தால் அது மெடா ரீடைரக்ஷன் என்ற உத்தியைப் பயன்படுத்தி என்னுடைய வலைப்பூவுக்கு இட்டுச் சென்றது. இதை எப்படி முறியடிப்பது? அதில்தான் பிறந்தது என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் என்றப் பதிவு. சில நாட்களுக்கு புதுப்பதிவு ஒன்றும் போடாமல் இருந்ததில் மெடா ரீடைரக்ஷன் மூலம் என் வலைப்பூவுக்கு வந்தவர்களின் கவனம் இப்பதிவால் ஈர்க்கப்பட்டது. ஆகவே போலியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஓசைப்படாமல் மெடா ரீடைரக்ஷனை வாபஸ் பெற்றான்.
அதே மெடா ரிடைரக்ஷன் உத்தியைப் பயன்படுத்தியே பி.ஜே.பி. காம் தளத்தை க்ளிக் செய்து காங்கிரஸ் தளத்துக்கு வருமாறு செய்திருக்கிறார்கள். இதை காங்கிரஸ் செய்திருந்தால் அக்கட்சியினரைப் போல முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது. ஆகவே இது யாரோ விஷமியின் செயல் என்றுதான் எனக்குப் படுகிறது.
சமீபத்தில் 1989 லோக் சபா பொதுத் தேர்தலில் தெற்கு தில்லியில் எல்.கே. அத்வானி பிஜேபி வேட்பாளர். அப்போது எல்.கே. அத்வானி என்ற பெயருடைய சுயேச்சை வேட்பாளரை காங்கிரசார் தயார் செய்து அதே தெற்கு தில்லி தொகுதியில் நிற்க வைத்தனர். அவருக்கு அளிக்கப்பட்டது பனைமரச் சின்னம். போஸ்டரில் ஹிந்தியில் வந்த வாசகத்தின் தமிழாக்கம், “இப்போது நமது சின்னம் பனைமரம். பாரதீய ஜனதாவின் வேட்பாளர் எல்.கே. அத்வானி. இதில் சூட்சுமம் என்னவென்றால் பாரதீய ஜனதா என்று மொட்டையாக கூறினார் இந்திய மக்கள் என்றும் பொருள் கூறலாம். ஆனால் தேர்தல் சமயத்தில் பாரதீய ஜனதா என்றால் மக்கள் பி.ஜே.பி. என்றுதான் சாதாரணமாக பொருள் கொள்வார்கள். முடிவு என்னவாயிற்று? பாரதீய ஜனதாவின் எல்.கே. அத்வானிக்கு டிபாசிட் பறிபோயிற்று. அதாவது பனைமரச் சின்னம் கொண்டவருக்கு, ஹி ஹி ஹி.
பை தி வே இம்மாதிரி ட்ரிக் செய்வது பொதுவாகவே கட்சி அரசியலில் நடப்பது என்றுதான் நினைக்கிறேன். இதே ட்ரிக்கை பிஜேபி வேறு ஏதாவது தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பயன்படுத்தியிருந்தாலும் வியப்பதற்கில்லை என்பதையும் இப்போதே அருள் நோக்கில் கூறிவிடுகிறேன்.
போலி டோண்டு பற்றி பேசும்போது நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் எனது எலிக்குட்டி சோதனையை பயன்படுத்தத் தவறிய படித்த வலைப்பூ வாசகர்களை விட சாதாரண படிக்காத ஜனங்கள் தாமரைப் பூ சின்னம் பனைமரச் சின்னம் எனப்பார்த்து சுதாரித்து ஓட்டு போட்டு காங்கிரசின் சதியை முறியடித்ததைப் பார்க்கும்போது மூளைக்கும் படிப்புக்கும் ரொம்ப சம்பந்தமில்லை என்றுதான் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
22 hours ago
8 comments:
வக்கீல் நோட்டிஸ் அனுபிட்டாங்க
@LK
அவசரப்பட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன். அதைத்தான் அந்த விஷமியும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
மெடா ரிடைரக்ஷன் நடந்திருந்தால் அதை யார் செய்தது என்பதை கண்டுபிடித்திருக்க முடியும் என்று நம்ப்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் அப்பொழுது செக் செய்தபொழுது, அது காங்கிரஸ் கட்சியின் வெப்சைட்க்கு ரிடயரிக்ட் ஆனது. இப்பொழுது செக் செய்தால், அது http://www.bjp.com/parking.php?ses என்ற பேஜ் ஒபன் ஆகிறது. காங்கிரஸ் வெப்சைட்டுக்கு போகல. இந்த காரியத்தை செய்தவனுக்கு என்ன லாபமோ, ஒரு எளவும் தெரியல!
போலி டோண்டு தனி மனித லெவலில் செய்ததை காங்கிரஸ் தேசிய லெவலில் செய்கிறது. காங்கிரஸ் நம் தேசிய வியாதி.
யாரோ ஒரு பேராசை பிடித்த வலைஞர் பி.ஜே.பியிடம் காசு பார்க்க (தனது பேரில் பதிவு செய்யப்பட்ட ஒரு வலைத்தளத்தை நல்ல விலைக்கு விற்க) செய்த ஒரு காரியம் என்றே தோன்றுகிறது.
"இதை காங்கிரஸ் செய்திருந்தால் அக்கட்சியினரைப் போல முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது. ஆகவே இது யாரோ விஷமியின் செயல் என்றுதான் எனக்குப் படுகிறது." - டோண்டு சார்! என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆனா நல்ல நகைச்சுவையாக இருக்கிறது (உத்தேசம் அதுவல்ல என்று நினைக்கிறேன்)
"பை தி வே இம்மாதிரி ட்ரிக் செய்வது பொதுவாகவே கட்சி அரசியலில் நடப்பது என்றுதான் நினைக்கிறேன். இதே ட்ரிக்கை பிஜேபி வேறு ஏதாவது தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பயன்படுத்தியிருந்தாலும் வியப்பதற்கில்லை என்பதையும் இப்போதே அருள் நோக்கில் கூறிவிடுகிறேன்." - இது போன்ற பாத்திரங்களைத் தாங்கள் பொருட்படுத்துவது தங்களின் பொறுமையைக் காட்டுகிறது என்று கொள்ளலாமா அல்லது மொக்கை பதிவுக்கு கூட முதல் ஆளாக வந்து (மொக்கை)எதிர் கருத்திடும் அவரைப் பொருட்படுத்துவதைப் பார்க்கும்போது அவர் உங்களின் setup என்று கொள்ளலாமா என்று குழப்பமாக உள்ளது.
//...அவர் உங்களின் setup என்று கொள்ளலாமா என்று குழப்பமாக உள்ளது...//
I too had some doubt earlier. But seeing the continuos blabber, i have come to the conclusion, Dondu cannot do the imperfect thing (blabbering) perfectly and continuously.
:-)
திருத்தம் - "தாங்கள் பொருட்படுத்துவது தங்களின் பொறுமையைக் காட்டுகிறது என்று கொள்ளலாமா" - 'பெருந்தன்மையை' என்றுதான் தட்டச்சிட நினைத்தேன்; ஏனோ என்னையறியாமல் இங்குள்ளவாறு தட்டச்சிட்டு விட்டேன்.
Post a Comment