கோட்ஸே நல்லவனா கெட்டவனா என்பதை பின் வரும் பத்து கேள்விகளுக்கு பதிலளித்தப் பிறகு பார்க்கலாம்.
1. சிறையிலிருது தப்பித்த ஒரு கைதி ஒரு நேர்ப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறான். அப்போது தூரத்தில் அவன் ஓடும் திசைக்கு எதிரிலிருந்து ஒரு போலீஸ் கார் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவன் போலீஸ் காரை நோக்கியே ஓடி, நூறு அடி தூரத்தில் வண்டி இருக்கும்போது பாதைக்கு வலப்புறம் காட்டில் நுழைந்து தப்பிக்கிறான். ஏன்?
2. கோடைகால நடுவில் ஒரு பூங்காவின் நடுவில் ஒரு பிணம். உடல் எலும்பெல்லாம் முறிந்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் மரணம் கடும் குளிரால் ஏற்பட்டது எனத் தெரிய வருகிறது. விளக்கவும் (இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி).
3. கண்ணிழந்த ஒருவன் தன் பணம் எல்லாம் செலவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து பார்வை பெற்று வீடு திரும்ப ரயிலில் பயணம் செய்கிறான். அவன் பயணம் செல்லும் கம்பார்ட்மெண்டில் அன்றி வேறு எங்கு பயணம் செய்திருப்பினும் அவன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.
4. அழகிய பெண் நடக்கிறாள். பின்னணியில் ஒரு இசை. இசை நின்றது அவள் இறந்தாள். ஏன்?
5. அவனுக்கு ஒரு நாற்காலி கிடைக்காததால் இறந்தான். ஏன் இந்தக் கொடுமை?
6. வேலு நாயக்கர் ஒரு கடையில் 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்குகிறார். கடைக்கு வந்த அழகான ஃபிகரிடம் பேசிக்கொண்டே கடைக்காரன் அவருக்கு மீதி சில்லறையாக நூறு ரூபாய் கொடுக்கிறான். வேலு நாயக்கர் கூலாக அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டுகிறார். வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா?
7. ஒருவன் ஒரு சதுர வீடு கட்டுகிறான். அதனுள் நான்கு அபார்ட்மெண்டுகள். அதன் நான்கு பக்கங்களிலும் ஒரு கதவு, ஒவ்வொரு அபார்ட்மெண்டுக்கும். நான்கு குடித்தனக்காரர்கள். எல்லோருக்கும் வாசல் கதவு வடக்கு நோக்கியே உள்ளது. எப்படி?
8. மீன் தின்னும் சீல்கள் மிக புத்திசாலிகள். அவற்றை வைத்து விளையாட்டெல்லாம் காட்டுவார்கள். அம்மாதிரி ஒரு கேம் ஷோவில் சீல்கள் விளையாட வந்தன. பார்வையாளர்களை பார்த்ததும் எல்லாம் நீரில் மறுபடி குதித்து ஓடி விட்டன. ஏன்?
9. கமலஹாசன் ஒரு புது நண்பருடன் ஓர் அறையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார். சுற்றுமுற்றும் பார்த்த அவர் திடீரென ஆபத்தை உணருகிறார்? ஏன்?
10. தன் வீட்டிலேயே ஒரு பெண் ஆபத்தில் இருப்பதைப் பார்த்தும் டோண்டு ராகவன் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டான். ஏன் அவனுக்கு பயமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
16 hours ago
7 comments:
கடைசிக்கேள்விக்கு மட்டும் இதோ என் பதில்.
அந்தப் பெண் டோண்டுவின் 'மாமியார்'
5. அவன் தூக்குலே தொங்கறான். கீழே நாற்காலி இருந்திருந்தால் அதில் காலை வச்சுத்
தப்பி இருப்பான்.
இரண்டுமே தவறான விடைகள் துளசி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒண்ணே ஒண்ணுக்கு மத்திரம் இப்போ பதில் சொல்லறேன். ஏன்னா மத்தது தெரியலையே. :(
7. ஏன்னா அவன் வீடு கட்டினது வட துருவத்திலாச்சே.
மத்தது எல்லாம் அப்புறம்.
தவறான விடை இலவசக்கொத்தனார் அவர்களே. நன்றாக யோசிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மன்னிக்கவும். வடக்கு வடக்கு என்று பேசி வட துருவம் என்று எழுதிவிட்டேன். சரியான பதில் தென் துருவத்தில்தான் அந்த வீடு.
தென் துருவம் சரியான விடை இலவசக்கொத்தனார் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment