"புதிர்கள் புதிசு - 2" போட்டு பல நாளாச்சு. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, விடையளிக்கப்பட்டவைக்கு பதிலாய் சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.
இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.
1. உலகம் முற்றும் சுற்றினாலும் இது மட்டும் ஒரு மூலையிலேயே இருக்கும்.
2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> -->
3. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.
4. பேசினாலே இது கலைந்து விடும். அது என்ன?
5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.
6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட, அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் வேங்கை மாதிரி ஓடி விட்டார்.
7. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.
8. அபீதகுசலாம்பாளின் அன்னைக்கு மூன்று பெண்கள். ஒருத்தியின் பெயர் சித்திரை, இன்னொருத்தி வைகாசி. மூன்றாமவள் பெயர் என்னவாக இருக்கும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தாண்டு
-
புத்தாண்டில் வழக்கமான மலைத்தங்குமிடத்தில் இருப்பேன். (31 காலைமுதல் 1 மாலை
வரை) ஆர்வமிருக்கும் நண்பர்கள் வந்து என்னுடன் தங்கலாம். செலவுகளைப்
பகிர்ந்துகொள்ளு...
7 minutes ago
30 comments:
டக்கென்று தோன்றிய விடைகள்...
4. மெளனம்
6. சேரை தூக்கி கரகரெவென்று சுற்றினால் அவர் துரத்தாமல் என்ன செய்வாராம்?
7. ரயிலில் தீ பிடித்து, வெள்ளைக் கொடி காண்பித்து, தப்பிக்க கீழே குதித்தவர் செத்துவிட்டார்.
8. அபிதகுசலாம்பாளோட அம்மாவோட பொண்ணு பேரா?!
4. மெளனம் சரியான விடை
6. சேரை தூக்கி கரகரெவென்று சுற்றினால் அவர் துரத்தாமல் என்ன செய்வாராம்? தவறு. சேரை தொடவேயில்லை
7. ரயிலில் தீ பிடித்து, வெள்ளைக் கொடி காண்பித்து, தப்பிக்க கீழே குதித்தவர் செத்துவிட்டார். தவறு.
8. அபிதகுசலாம்பாளோட அம்மாவோட பொண்ணு பேரா?! சரியான விடை, மறைமுகமாகக் கூறியிருந்தாலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. மூலை
2. 12 -, 6 >
3. காரை பார்க் செய்து விட்டு வந்திருப்பார்.
5. காலணி புதுசு இல்லையா? கடிச்சிருக்கும்.
7-ம் கேள்வியில் ஒரு சந்தேகம். எந்த ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருக்கை இருக்கிறது?!
1. செருப்பு (ஷூ அல்லது காலணி)
1. மூலை - தவறு
2. 12 -, 6 > தவறு
3. காரை பார்க் செய்து விட்டு வந்திருப்பார். தவறு
5. காலணி புதுசு இல்லையா? கடிச்சிருக்கும். தவறு
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. செருப்பு (ஷூ அல்லது காலணி) தவறு, உலகம் சுற்றும் சமயத்தில் கூட இது மூலையில்தான் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
7-ம் கேள்வியில் ஒரு சந்தேகம். எந்த ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருக்கை இருக்கிறது?!
பழைய காலத்து 3-டையர் இரண்டாம் வகுப்புக்கான பெட்டியில், பெர்த் எண்கள் 73, 74 & 75 கதவுக்கருகில்தான் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"Dondu what happend to U?"
:)))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
10. மார்கழி
1. சட்டையின் பை ல் ( Shirt pocketல் ) இருக்கும் பாஸ்போர்ட்.
2. 6 முறை அந்தப்பக்கம் திரும்ப வேண்டும்.? :D
3. மோட்டலிலிருந்து மார்கெட் போக எண்ணி வெளியில் வருகிறார்க். கார் வரை வந்தவுடன் பர்ஸ் எடுக்க மறந்துவிட்டார் என்பது நினைவுக்கு வந்த் கார் ஹார்னை அழுத்துகிறார். மனைவி குழியலைரையில் இருப்பது அதற்குப் பின் தான் நினைவுக்கு வந்து ரூமுக்குத் திரும்புகிறார் ?
1. சட்டையின் பை ல் ( Shirt pocketல் ) இருக்கும் பாஸ்போர்ட். தவறான விடை. பாஸ்போர்ட் எப்போதுமே மூலையில் இருப்பதில்லை. அவ்வப்போது அது பரிசோதனைக்காக காட்டப்படுவது அவசியம்.
2. 6 முறை அந்தப்பக்கம் திரும்ப வேண்டும்.? :D தவறான விடை. உண்மையான விடை ரொம்ப போங்குத்தனமானது. மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி அடிக்கப்படும் சான்ஸ் உண்டு.
3. மோட்டலிலிருந்து மார்கெட் போக எண்ணி வெளியில் வருகிறார்க். கார் வரை வந்தவுடன் பர்ஸ் எடுக்க மறந்துவிட்டார் என்பது நினைவுக்கு வந்த் கார் ஹார்னை அழுத்துகிறார். மனைவி குழியலைரையில் இருப்பது அதற்குப் பின் தான் நினைவுக்கு வந்து ரூமுக்குத் திரும்புகிறார்? சுவாரசியமான கற்பனை. ஆனால் சரியில்லை.
டோண்டு ராகவன்
6) ஒவ்வொரு சுற்றுக்கும் நாள் கணக்கில் டைம் எடுத்தால் அவர் என்ன செய்வார்?
"6) ஒவ்வொரு சுற்றுக்கும் நாள் கணக்கில் டைம் எடுத்தால் அவர் என்ன செய்வார்?"
Bull's eye. டோண்டு ராகவன் முதல் இரண்டு தடவை சுற்றி விட்டு, மூன்றாவது சுற்று ஒரு வாரம் கழித்துத்தான் என்று கூறி விட்டான்.
பிறகு மான் போல அவன் அங்கிருந்து ஓடிவிட, ஜயராமன் அவனை ஆக்ரோஷத்துடன் துரத்திச் சென்றார்.
கேள்விகள் 1,2,3,5 மற்றும் 7 விடைக்காகக் காத்திருக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
2. போ..போ..போய்க்கிட்டே இரு:-D
3. தூக்கத்தில் நடக்கும் வியாதி?
2. போ..போ..போய்க்கிட்டே இரு:-D தவறு
3. தூக்கத்தில் நடக்கும் வியாதி? தவறு
அன்புடன்,
டோண்டு ராகவன்
2. Flying Arrow? தவறு
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. Corner (Moolai thaan) தவறு
2. Running track தவறு
8. அபீதகுசலாம்பா சரியான விடை. ஆனால் மாயவரத்தான் ஏறக்னவே கூறிவிட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
3. He goes to carpark to start the engine and horn. This is to avoid engine to start next day morning.
தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது corner பற்றி சொல்கிறீர்களா என்ன?
2. 'அம்பாரம்'? (ஆறு அம்புகள் இருக்கின்றனவே...)
3. தெரியவில்லை.
4. சொல்லிவிட்டார்கள் ஏற்கெனவே (ச்ச்சச! ஒரு சுலபமான கேள்வியைக் கூட விட்டு வைக்க மாட்டாங்கிறாங்களே)
5. புதிய காலனிகளுடன் அவர் வேலைக்கு செல்கிறார். அங்கே புதைகுழியில் சிக்கிக் கொள்கிறார். புதிய காலனி ஆதலால் அவரால் சுலபமாக காலை வெளியெடுக்க முடியவில்லை (பழக்கம் இல்லாததால்)... (எப்படியோ சமாளிச்சிட்டோம்...)
6. அருமையான கேள்வி. பதிலும் சொல்லிவிட்டார்கள்.
7. கதவுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி கையில் வெள்ளைக் கொடி கிடைக்கின்றது. ட்ரெயினில் வெள்ளைக் கொடி காண்பித்தால் என்ன அர்த்தம் என்று சரியாகத் தெரியவில்லை. அதனால் ஏதோ ஆபத்தை உணர்ந்த அவர் தப்பிக்க கதவைத் திறந்து குதிக்கின்றார். இறக்கின்றார்.
8. உண்ணாமுலை. மற்றப் பெண்களுக்கு தமிழ் பெயர்கள் (சித்திரை, வைகாசி) இருப்பதால் அபிதகுசலாம்பாள் பெயரும் தமிழில்தான் இருக்கவேண்டும். சரியா?
9. அவ்வளவுதானா? நல்லா creative-ஆ இருக்கு ஐயா கேள்விகள் எல்லாம். மிக்க நன்றி! மென்மேலும் பல புதிர்களை போடுங்கள். ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றோம்.
டோண்டு ஐயா...என்ன மாதிரி சின்ன பசங்க அறிவுக்கு புரியர விசயமா எதாச்சி எழுதுங்களேன்...ரொம்ப கஷ்டமாயிருக்கில்ல...
அப்படியே..என்னோட பதிவுக்கு கொஞ்சம் போனீங்கன்னா...அங்கன ஒரு உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை வெச்சிருக்கேன்...அதையும் கொஞ்சம் சிரமம் பாக்காம சென்ஞ்சி குடுன்ங்களேன்.
1. கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது corner பற்றி சொல்கிறீர்களா என்ன?
தவறு. அதுவும் உலகை சுற்றும் ஆனால் மூலையிலேயே இருக்கும். மேலும் அது பாஸ்போர்ட் அல்ல, ஏதாவது கார்னர் பற்றியும் குறிப்பிடவில்லை.
2. 'அம்பாரம்'? (ஆறு அம்புகள் இருக்கின்றனவே...) தவறான விடை. ஒரு க்ளூ, விடை போங்குத்தனமானது. மைதானம் முழுக்க துரத்தியடிக்கப்படும் அபாயம் உண்டு.
5. புதிய காலனிகளுடன் அவர் வேலைக்கு செல்கிறார். அங்கே புதைகுழியில் சிக்கிக் கொள்கிறார். புதிய காலனி ஆதலால் அவரால் சுலபமாக காலை வெளியெடுக்க முடியவில்லை (பழக்கம் இல்லாததால்)... (எப்படியோ சமாளிச்சிட்டோம்...) தவறு
7. கதவுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி கையில் வெள்ளைக் கொடி கிடைக்கின்றது. ட்ரெயினில் வெள்ளைக் கொடி காண்பித்தால் என்ன அர்த்தம் என்று சரியாகத் தெரியவில்லை. அதனால் ஏதோ ஆபத்தை உணர்ந்த அவர் தப்பிக்க கதவைத் திறந்து குதிக்கின்றார். இறக்கின்றார். தவறு
8. உண்ணாமுலை. மற்றப் பெண்களுக்கு தமிழ் பெயர்கள் (சித்திரை, வைகாசி) இருப்பதால் அபிதகுசலாம்பாள் பெயரும் தமிழில்தான் இருக்கவேண்டும். சரியா?
தவறான விடை. ஆனால் சரியான விடை ஏற்கனவே கூறியாகி விட்டது.
9. அவ்வளவுதானா? நல்லா creative-ஆ இருக்கு ஐயா கேள்விகள் எல்லாம். மிக்க நன்றி! மென்மேலும் பல புதிர்களை போடுங்கள். ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றோம்.
இப்போது ஒரு சிறு போட்டி. வலைப்பூவின் ஹிட் கவுண்டர் ஒரு லட்சத்தை எட்டவிருக்கிறது. அது எட்டியதும் நானே விடைகளைக் கூறுவேன். அதற்குள் இன்னும் எத்தனை கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதை பார்ப்போமே. இந்த முறை கேரி ஓவர் ஒன்றும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அப்படியே..என்னோட பதிவுக்கு கொஞ்சம் போனீங்கன்னா...அங்கன ஒரு உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை வெச்சிருக்கேன்...அதையும் கொஞ்சம் சிரமம் பாக்காம சென்ஞ்சி குடுங்களேன்."
செய்து பதிவும் போட்டாகி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹிட் கவுண்டர் லட்சத்துக்கு 24 தான் குறைவாக உள்ளது. யாராவது விடைகளை கூறிடுங்கப்பா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹிட் கவுண்டர் லட்சத்து நாற்பதைந்துக்கு வந்து விட்டது. எனது வாக்கை காப்பாற்றும் நேரமும் வந்து விட்டது.
1. தபால் உரையின் மேலிருக்கும் ஸ்டாம்ப்தான்.
2. இதன் பொருள்
<-- <-- <-- <-- <-- <-- க்கு எதிர்ப்பதமாகும்.
3. ராமமூர்த்திக்கு தான் தங்கிய மோட்டல் எண் மறந்துவிட்டது. ஆகவே கார் ஹாரனை அடிக்கிறார். அவர் மனைவி தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சுத்தமாகக் காது கேட்காது. ஆகவே ராமமூர்த்தி கார் ஹாரனை அமுக்கியதில் மற்ற எல்லா மோட்டல்காரர்களும் விழித்து கொண்டு லைட் போட, ராமமூர்த்தியின் மோட்டல் மட்டும் இருளில் ஆழ்ந்திருக்கிறது. ஆகவே அவரால் தனது மோட்டலுக்கு திரும்ப முடிகிறது.
5. பிரதீபா சர்கஸில் கத்தி எறிபவனுக்கு அசிஸ்டண்டாக பணியாற்றுகிறார். அதாவது பிரதீபா ஒரு பலகை முன்னால் நிற்க அவர் பக்கமாக கத்தி வீசப்படும். அவை அவர் தலைக்கு சற்று மேலேதான் பலகையில் தைத்துக் கொள்ளும். ஆனால் அன்று புது செருப்பின் உபயத்தால் அவர் வழக்கத்துக்கு மாறான அதிக உயரத்தில் இருக்க, கத்தி பட்டு இறக்கிறார்.
7. கிருஷ்ணமூர்த்தி ராவுக்கு கண் ஆப்பரேஷன் நடந்து முடிந்திருந்தது. அவர் கண்களை டாக்டர் வெள்ளைத் துணியால் கட்டியிருந்திருக்கிறார். பயணம் முடிந்ததும் அவர் கண் கட்டை அவிழ்க்கப் போவதாகப் பேச்சு. ரயில பெட்டியில் யாரும் இல்லை. துணைக்கு வந்த நபர் பக்கத்து கம்பார்ட்மெண்டுக்கு ஏதோ வேலையாக சென்றிருந்திருக்கிறார். அதற்குள் கிருஷ்ணமூர்த்தி ராவுக்கு நப்பாசை. கண்கட்டை அவரே அவிழ்த்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக ரயில் வண்டி அப்போது நீண்ட குகைக்குள் சென்று கொண்டிருந்தது. மின்சாரம வேறு் ஃபெயில் ஆகியிருந்தது. கண்கட்டை அவிழ்த்தவர் பார்த்தது இருட்டைத்தான். ஆகவே தனக்கு கண்பார்வை ஒரேயடியாகப் போய் விட்டது என எண்ணி அவர் கதவைத் திறந்து வெளியே குதித்து இறந்து விட்டார். கூட யாராவது இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
1. தபால் உரையின் மேலிருக்கும் ஸ்டாம்ப்தான்.
//
இதெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாடி கேட்டிருந்தா அழகா பதில் சொல்லியிருப்பாங்க. இந்த காலத்துல ஈ மெயிலைத்தட்டிவிடுவதனால் யாரும் snail mail பற்றி யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
//
3. ராமமூர்த்திக்கு தான் தங்கிய மோட்டல் எண் மறந்துவிட்டது. ஆகவே கார் ஹாரனை அடிக்கிறார். அவர் மனைவி தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சுத்தமாகக் காது கேட்காது. ஆகவே ராமமூர்த்தி கார் ஹாரனை அமுக்கியதில் மற்ற எல்லா மோட்டல்காரர்களும் விழித்து கொண்டு லைட் போட, ராமமூர்த்தியின் மோட்டல் மட்டும் இருளில் ஆழ்ந்திருக்கிறது. ஆகவே அவரால் தனது மோட்டலுக்கு திரும்ப முடிகிறது.
//
இதுக்கு நான் சொன்ன பதில் எவ்வள்வோ நல்லா இருந்துச்சு.
மேலுல் மோட்டல் full ஆக இருக்கணும் அப்பத்தான் இது ஒர்க் அவுட் ஆவும் !! எப்பவும் மோட்டல்கள் full ஆக இருப்பதில்லை.
மனைவிக்கு காது கேக்காது என்ற விஷயத்தை மறைமுகமாகக் கூட கேள்வியில் சொல்லவில்லை. அதேவேளையில் ராமமூர்த்தி மறதி உடையவர் என்பதை புரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் கேள்வியில் இருக்கின்றன.
//
2. இதன் பொருள்
<-- <-- <-- <-- <-- <-- க்கு எதிர்ப்பதமாகும்.
//
தவறான கேள்வி,
கேள்வி இதன் பொருள் என்ன என்பதற்கு பதிலாக இதன் எதிர்பதம் என்ன என்பதாக இருக்கவேண்டும்.
"இந்த காலத்துல ஈ மெயிலைத்தட்டிவிடுவதனால் யாரும் snail mail பற்றி யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன்."
சரியான விளக்கம்.
"மேலும், மோட்டல் full ஆக இருக்கணும் அப்பத்தான் இது ஒர்க் அவுட் ஆவும் !! எப்பவும் மோட்டல்கள் full ஆக இருப்பதில்லை.
மனைவிக்கு காது கேக்காது என்ற விஷயத்தை மறைமுகமாகக் கூட கேள்வியில் சொல்லவில்லை. அதேவேளையில் ராமமூர்த்தி மறதி உடையவர் என்பதை புரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் கேள்வியில் இருக்கின்றன".
நீங்கள் சொல்வதும் சரிதான். மோட்டல் ஃபுல்லாக இருந்தால்தான் இந்த யுக்தி வேலை செய்யும். அடுத்த முறை புதிர்கள் போடும்போது இன்னும் ஜாக்கிரதையாக இருப்பேன்.
"கேள்வி இதன் பொருள் என்ன என்பதற்கு பதிலாக இதன் எதிர்பதம் என்ன என்பதாக இருக்கவேண்டும்".
அவ்வாறு கூறியிருந்தால் அது கேள்வியே இல்லை. உடனே பதில் வந்திருக்கும். வேறு ஒரு க்ளூவும் இல்லாது எல்லாமே x ஆக இருக்கும்போது x-ஐ நீக்குவதுதான் கணக்கு போடுபவர்கள் முதலில் செய்வது. அதே போல பொருள் என்ன என்று கேட்கும்போது, இது என்ன பொருள் என்று கூறலாம் அதே சமயம் இதன் நேர் எதிர்ப்பதம் என்னவென்றும் கூறலாம். ப்ராசஸ் ஆஃப் எலிமினேஷன் என்று கூறுவார்கள். உதாரணத்துக்கு இந்த துணுக்கை பார்க்கலாம்.
- ராமுவின் வீடு எங்கிருக்கிறது?
- தபால் நிலையம் எதிரில்.
- அப்ப, தபால் நிலையம் எங்கிருக்கிறது?
- ராமு வீட்டுக்கு எதிரில்.
- ரெண்டும் எங்கேன்னாவது சொல்லுப்பா.
- ரெண்டும் ஒன்றுக்கொன்று எதிராக உள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் நேற்று நான் ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு ஆன்சைட் மொழிபெயர்ப்புக்கு சென்றிருந்தேன். அங்கு வைத்து ஜயராமன் துணுக்கை கேட்டு, எல்லோரும் முழிக்க, அதை நான் செய்தே காட்டினேன். ஒரே சிரிப்பு. நல்ல வேளை, கற்பனையில் ஜெயராமன் என்னை துரத்தியது போல அங்கு யாரும் செய்யவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// கிருஷ்ணமூர்த்தி ராவுக்கு கண் ஆப்பரேஷன் நடந்து முடிந்திருந்தது. அவர் கண்களை டாக்டர் வெள்ளைத் துணியால் கட்டியிருந்திருக்கிறார். பயணம் முடிந்ததும் அவர் கண் கட்டை அவிழ்க்கப் போவதாகப் பேச்சு. ரயில பெட்டியில் யாரும் இல்லை. துணைக்கு வந்த நபர் பக்கத்து கம்பார்ட்மெண்டுக்கு ஏதோ வேலையாக சென்றிருந்திருக்கிறார். அதற்குள் கிருஷ்ணமூர்த்தி ராவுக்கு நப்பாசை. கண்கட்டை அவரே அவிழ்த்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக ரயில் வண்டி அப்போது நீண்ட குகைக்குள் சென்று கொண்டிருந்தது. மின்சாரம வேறு் ஃபெயில் ஆகியிருந்தது. கண்கட்டை அவிழ்த்தவர் பார்த்தது இருட்டைத்தான். ஆகவே தனக்கு கண்பார்வை ஒரேயடியாகப் போய் விட்டது என எண்ணி அவர் கதவைத் திறந்து வெளியே குதித்து இறந்து விட்டார். கூட யாராவது இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
This is very much contradictory answer. How can Krishnamoorthy perfectly find the door of the train to suicide in such a dark which convinced him as a blind?
@கிரிதரன்
அடே அப்பா, இவ்வளவு அரதப்பழசான பதிவை தேடிப் பிடித்து அதுக்கு பின்னூட்டம் வேறா?
கதவுக்கருகில்தானே இருக்கை உள்ளது. கையால் தடவி கதவை கண்டுபிடிக்க இயலாதா? இதில் முரண் ஏதாவது இருந்தால் அந்த கிருஷ்ணமூர்த்தி ராவ்தான் சொல்ல வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Everthing is because of "Labels"
Post a Comment