இதற்கு முந்தைய பதிவு இதோ.
போன பதிவுகளில் சுட்டிய சோ அவர்கள் புத்தகத்தில் குமரி அனந்தன் அவர்கள் எழுதியதிலிருந்து சில தகவல்கள்.
காமராஜ் அவர்கள் சொந்த உபயோகத்துக்காக டி.வி. சுந்தரம் ஐயங்கார் அவர்கள் அளித்த MDT 2727 என்ற கார் பல ஆண்டு காலம் உபயோகத்தில் இருந்து வந்திருக்கிறது. மிகுந்த வற்புறுத்தல் பேரிலேயே இக்காரை புது காருக்காக மாற்றிக் கொண்டார். அதன் உரிம எண் கூட 2727தான், ஆனால் வேறு வரிசையில்.
(இந்த சந்தர்ப்பத்தில் சில தலைவர்களின் சில எண்களுக்கான விருப்பத்தைப் பற்றி பல சுவையான செய்திகளை நான், டோண்டு ராகவன், படித்திருக்கிறேன். உதாரணத்துக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு "ஏழு" ராசியான எண். அவர் கார் நம்பர்கள் எல்லாம் 4777 என்று கூட்டு எண் 7 ஆக இருக்கும். என்ன புது வரிசை பதிவுகள் வந்தாலும் அந்த எண் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும். அவருக்காகவே மராட்டிய மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரை வாங்கினார்கள். அதன் எண் MGR 4777).
மறுபடியும் காமராஜ். 1967-ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவருக்கு முழங்காலில் அடிபட்டது. ஆகவே இனிமேல் வர இருக்கும் தேர்தல்களில் பயன் படுத்துவதற்கு அவருக்காக பல வசதிகளுடன் கூடிய ஒரு வேன் லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு முறை கூட ஏற அவர் மறுத்து விட்டார்.
குமரி அனந்தன் அவர்களது வேதனை நிரம்பிய வரிகள்: "வேனில் ஏறித் தேர்தல் பயணம் செய்வார் என்று எண்ணினோம். ஆனால் அவர் வான் ஏறி தேவருலகு சென்று விட்டார்."
குமரி அனந்தன் அவர்கள் மேலும் கூறுகிறார்.
காமராஜ் அவர்கள் போன இடத்தில் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த அமர்ந்து விட்ட பிறகும் அந்த வருவாய்த்துறை அதிகாரி, திரு. ராமதாஸ் என்பவர் நின்று கொண்டேயிருந்தார். அவரும் அமர்ந்தால்தான் தானும் சாப்பிட உட்காரப் போவதாக காமராஜ் அவர்கள் கண்டிப்பாகக் கூறிவிட, அவ்வாறே நடந்தது. இதன் பின்புலன் என்னவென்றால் அந்த ராமதாஸ் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவரை சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லையோ என தலைவர் காமராஜ் நினைத்து விட்டார்.
கும்பகோணத்தில் சக்கரவர்த்தி ஐயங்கார் பழைய தியாகி. காமராஜை சந்தித்தால் பாசத்தோடு வேர்க் கடலையை ஒரு காகிதத்தில் சுற்றிய பொட்டலமாகக் கொடுப்பார். காமராஜரும் அதை வாங்கிச் சுவைத்து மிக அன்னியோன்யமாக உரையாடுவார்.
அப்பக்கத்தில் சுற்றுப் பயணம் செய்யும் போது மாலைக்குப் பதிலாகவோ, பிற வகையிலோ தொண்டர்கள் அன்போடு அளிக்கும் பணத்தை வாங்கி சக்கரவர்த்தி ஐயங்காரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறுவார்.
மறுபடியும் டோண்டு ராகவன்.
இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
21 hours ago
14 comments:
இந்தப் பதிவையும் என் நைனாவுக்கு படிச்சு காட்டினேன். அவர் தன் பங்குக்கு சொன்னது:
"அப்படித்தான் ஒரு முறை பத்திரிகையாளர் சாவி, இன்னும் பல சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு போன இடத்துல சரியான ஏற்பாடு செய்யாததாலே கோபப்பட்டு தானும் சாப்பிட மறுத்துட்டார் பெரியவர் காமராஜர். அவசரம் அவசரமாக இவிங்களுக்கும் ஏற்பாடு செஞ்சதும்தான் அவரும் சாப்பிட்டாராம், கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில்.
பெரிய மனுசன்னா பெரிய மனுசந்தான்."
பஜ்ஜி
தேவலையே, கமெண்டு வந்துட்டுது போலே இருக்கே. எனக்கு ஒண்ணும் எர்ரர் மெஜேஜ் வரல்லியே. இப்போத்தான் நிம்மதியா இருக்கு.
பஜ்ஜி
நன்றி பஜ்ஜி அவர்களே. பின்னூட்டங்கள் வந்தது குறித்து மகிழ்ச்சி. ஆனால் உங்க ஃபோட்டோ ஏன் வரவில்லை என்று தெரியவில்லையே. இதுவும் பீட்டா பிளாக்கர் மற்றும் சாதா பிளாக்கர்களுக்கிடையிலான இன்னமும் தொடரும் சொதப்பலா?
பரவாயில்லை. என் கிட்டேதான் அதர் மற்றும் அனானி ஆப்ஷனில்லையே. ஆகவே உண்மையான பஜ்ஜிதான் பின்னூட்டம் இட்டார்னு தெரிந்து கொள்வதில் பிரச்சினை ஏதும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னவோ தெரியவில்லை, பிரகாஷ், நெப்போலியன் மற்றும் வடுவூர் குமார் ஆகிய்யொரது பின்னூட்டங்கள் ஏற்றுக் கொண்டாலும் பப்ளிஷ் ஆகமாட்டேன் என்கின்றன. ஆகவே அவற்றை நகலெடுத்து இங்கே ஒட்டுகிறேன்.
வடுவூர் குமார் has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 6":
எங்களை மாதிரி கொஞ்ச காலம் பின்னால் பிறந்தவர்களுக்கு தெரியாத தகவல்கள்.
நன்றி திரு ராகவன் சார்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by வடுவூர் குமார் to Dondus dos and donts at 12/09/2006 07:30:44 PM
Prakash to me
show details 5:40 pm (4 hours ago)
Prakash has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 6":
டோண்டு அவர்களே
உங்களின் காமராஜ் தொடரை தொடர்ந்து படிக்கிறேன்.
நிறைய புது விழயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
மிகவும் நன்றீ
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Prakash to Dondus dos and donts at 12/09/2006 05:40:53 PM
Reply Forward Invite Prakash to Gmail
Reply
Reply to all
Forward
Print
Add Nepolian to Contacts list
Delete this message
Report phishing
Show original
Message text garbled?
Nepolian to me
show details 5:53 pm (4 hours ago)
Nepolian has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 6":
//குமரி அனந்தன் அவர்களது வேதனை நிரம்பிய வரிகள்: "வேனில் ஏறித் தேர்தல் பயணம் செய்வார் என்று எண்ணினோம். ஆனால் அவர் வான் ஏறி தேவருலகு சென்று விட்டார்."
ஆம் ஐயா இது உண்மையே. காமராஜர் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருத்தால் தமிழ் நாட்டில் தலை எழுத்தையே மாற்றி இருப்பார்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Nepolian to Dondus dos and donts at 12/09/2006 05:53:23 PM
தேவலையே, பஜ்ஜியோட பின்னூட்டம் வந்துட்டதா? நானும் முயற்சி பண்ணி பாக்கறேன்.
நம்பர்ல என்னத்தான் இருக்குன்னு எல்லோரும் பாக்கறாங்களோ தெரியல்லே. என்னைப் பொருத்தவரைக்கும் நம்பருக்குன்னு எந்த பலனும் இல்லை. ஆனாக்க இதை நம்பறவங்க நெறையப் பேரு. அவங்களைப் பாத்தா எனக்கு சிரிப்பாத்தான் வருது.
கட்டபொம்மன்
நன்றி கட்டபொம்மன் அவர்களே. பஜ்ஜிக்கு வராத மாதிரி உங்க படமும் வரல்லையே.
ஆக, இன்னும் சொதப்பல் தொடர்கிறது என்றுதான் கூற வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"-அரசு தான் ஏழைகளுக்கு உதவ முடியும்."
புரிந்து கொள்ள சற்று சிக்கலான செய்தி. அரசு இல்லாமல் நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்பதும் உண்மையே. எல்லா விஷயங்களிலும் அரசு மூக்கை நுழைப்பது விரும்பத்தக்கது அல்ல என்றுதான் இங்கு நீங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் கட்டுப்பாடற்ற தனியார் துறையும் கேடானதே. இரண்டுக்கும் நடுவில் பேலன்ஸ்டாக இருப்பதே நல்லது.
"- சமுகத்தில் எந்த விஷயமானாலும் அரசு குறுக்கிடலாம்/தலையிடலாம் அது பெரும்பாலும் நன்மை விளைவிக்கும்."
இங்கு கூட நான் மேலே கூறியது பொருந்தும்.
மற்ற விஷயங்களில் உங்களுடன் முழுக்க ஒத்து போகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"நேரடியாக புரிந்து கொள்ள சற்று கடினமே. ஆனால் நான் அரசு வேண்டாம் என்று சொல்லவில்லையே. மேலும், கட்டுப்பாடற்ற தனியார் துறை வேண்டும் என்று நான் சொல்லவில்லை."
இப்ப எல்லாமே ஓக்கே. உங்கள் கருத்துக்களும் என் கருத்துக்களும் முழுக்க்க்வே இந்த விஷயத்தில் ஒத்து போகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
""வேனில் ஏறித் தேர்தல் பயணம் செய்வார் என்று எண்ணினோம். ஆனால் அவர் வான் ஏறி தேவருலகு சென்று விட்டார்.""
கண்ணீரை வரவழைத்த கவிதை ரேஞ்சுக்கான வரிகள்.
கிருஷ்ணன்
எனக்கும் அந்த வரிகள் படிக்கும்போது கண்களில் கண்ணீர் தளும்பியது கிருஷ்ணன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
One correction about car numbers.
(i am an ametuer numerologist).
MGR became CM on 4.7.77 ; hence all his cars had the number 4777.
(that he belived in astrology is
a different matter).
and Kamaraj plan of 63 was viewd as
a cunning plan to get rid of some
inconvenient leaders and non-socialists. His famous "paarkkalam"
was used to dodge many persons and issues. Pls read Rajinder Puri's
Ciris of Conscience, about 1969 split and the part played by all the players. Kamaraj was honest,
simple and a great leader, no doubt. But he was not innocnet. and he and other syndicate members thought (wrongly) that they can be the puppet masters for the puppet Indira !
And i have an excellent auto-biography of Kovai Ayyamuthu (born 1898), a freedom fighter and sisya of Rajaji ; he was freind and collegue of EVR Periyar, CS, Kamraj and many other leaders. he
couldn't get along with Kamaraj even before 1947 and he has recorded some frank observations..
and he wuit Congress to join Swathanthra in 1959..
Anbudan
athiyaman.blogspot.com
//MGR became CM on 4.7.77 ; hence all his cars had the number 4777.//
ஒரு வேளை 7 ராசிக்காகவே எம்.ஜி.ஆர். அவர்கள் 4.7.77 ல் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டிருப்பாரோ? நீங்கள் சொல்வது போல இருந்தால், அந்தத் தேதிக்கு முன்னால் வாங்கிய கார்களுக்கு அந்த நம்பர் இருந்திருக்கக் கூடாது. அதைப் பார்த்தாலே புரிந்து விடும், கோழிக்கு பிறகு முட்டையா அல்லது முட்டைக்குப் பிறகு கோழியா என்று.
//and Kamaraj plan of 63 was viewd as
a cunning plan to get rid of some
inconvenient leaders and non-socialists//
ஆம், முக்கியமாக மொரார்ஜி தேசாய். அதே போல ஆகட்டும் பார்க்கலாம் பற்றி நீங்கள் கூறுவதும் சரியே.
//But he was not innocnet. and he and other syndicate members thought (wrongly) that they can be the puppet masters for the puppet Indira !//
நானும் அதைத்தான் நேருவின் லெகசியின் ஒரு பதிவில் கூறியுள்ளேன்.
உங்கள் பின்னூட்டங்கள் மிக புதிய விஷயங்கள் தருகின்றன. மிக்க நன்றி. மேலும் பின்னூட்டங்களை மற்றப் பதிவுகளிலும் எதிர்ப்பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
athu sari kamarajar yaarale arasiyalikku vantharunu sollave illa.........?????
??
Post a Comment