இவ்வார குங்குமம் இதழில் (10.12.2006 தேதியிட்டது, Page 106) நம்ம சகபதிவர் செந்தழல் ரவி அவர்கள் செய்து வரும் பலருக்கு வேலை பெற்றுத் தரும் சேவையை பற்றி வந்துள்ளது. பல பதிவர்கள் இம்மாதிரி சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது. அவருடன் இன்று காலை தொலைபேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பெங்களூரில் குங்குமம் சற்றே லேட்டாக வருவதால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. He was pleasantly surprised.
இப்பத்தான் சில நாட்களுக்கு முன்னால் நம்ம பழூர் கார்த்தியை பற்றி இப்பதிவு போட்டேன்.
ஓராண்டுக்கும் மேலாக ஏழை மாணவ மணிகளுக்கு உதவி செய்யும் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல் ரவி மாதிரி இருப்பவர்களால் இக்கால இளைஞர் சமுதாயம் பீடு நடை போடுவது குறித்து இந்த அறுபது வயது சக இளைஞன் டோண்டு ராகவன் மிக மகிழ்ச்சி அடைகிறான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
28 comments:
நன்றி டோண்டு அவர்களே...
செந்தழல் ரவிக்கு நானும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலை குங்குமம் பார்த்தபோது ரவி பற்றிய செய்தி வந்திருந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
செந்தழல் ரவி மேன்மேலும் வளர உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
சார்.. குங்குமம் இப்பல்லாம் இப்படி உருப்படியான காரியம்லாம் கூட செய்யிதா.. சந்தோஷம்..
ரவிக்கு ஏற்கனவே ஒருமுறை வாழ்த்து சொல்லியாச்சு.. லக்கி லுக் பதிவில.. தினமலர்ல வந்தப்போ..
இப்ப மறுபடியும்.. அதுவும் இந்த வாரம் நட்சத்திர அந்தஸ்த்து கிடைச்சிருக்கற சமயத்துல..
வாழ்த்துக்கள் ரவி..
செந்தழல் ரவிக்கு நானும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
//சார்.. குங்குமம் இப்பல்லாம் இப்படி உருப்படியான காரியம்லாம் கூட செய்யிதா.. சந்தோஷம்..//
ஜோசப் சார்!
நக்கல் வேண்டாம். இப்போதைய குங்குமம் படிக்கிறீர்களா?
நீங்கள் செய்யும் நக்கல் இப்போதைய குங்குமத்தின் திறமையான ஆசிரியர் குழுவை (ராவ் - முன்னாள் ஆசிரியர், ஆ.வி, சாருப்ரபா சுந்தர், தமிழ்மகன், கவுதம், எம்.பி. உதயசூரியன்) சிறுமைப்படுத்துவதாக அமையும்.
விற்பனையிலும், வாசகர் எண்ணிக்கையிலும் (ஆதாரம் : National Readership Survey 2005) முதலிடம் வகிக்கும் ஒரு வாரப்பத்திரிகையின் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் சேறுவாரி வீசுவது சரியான செயல் அல்ல.
ரவிக்குப் பாராட்டுக்கள்... டோண்டுவுக்கு வாழ்த்துக்கள்... (இது போன்ற முயற்சிகள் எடுப்பதற்காக))
மிகச் சமீபத்தில்தான் இந்த 'டோண்டு' விவகாரம் பற்றி அறிந்தேன். I am a crawling kid in blogging.
கவலை வேண்டாம்... நாம் பலமைடைகிறோம்.
மாட்டாமலா போவார்... ??
// விற்பனையிலும், வாசகர் எண்ணிக்கையிலும் (ஆதாரம் : National Readership Survey 2005) முதலிடம் வகிக்கும் ஒரு வாரப்பத்திரிகையின் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் சேறுவாரி வீசுவது சரியான செயல் அல்ல. //
இலவசங்களால் மட்டுமே உயிர்வாழும் ஒரு குப்பை பத்திரிக்கைக்கு ஏன் இப்படி ஒரு தாங்குதல் , அதுவும் ஜோசப் சாரைபோய் கோபித்துக்கொண்டு ...
போய் பெட்டிகடைகளில் கேளுங்கள் குங்குமம் எப்படி விற்கிறதென்று . இலவச்ம் வரும் வாரம் மட்டும் முழுதும் விற்கிறது . ( எதையுமே லேசாக எடுத்துக்கொள்ள வெங்காயத்தார் உங்களுக்கு சொல்லித்தரவில்லையா லக்கிலூக் ?)
"இலவசம் வரும் வாரம் மட்டும் முழுதும் விற்கிறது."
100% சரி. பாவம் நாயர் புலிவாலை பிடித்த கதையாக பத்திரிகை அவஸ்தைப் படுகிறது. இனாம் தொடர்ச்சியாகத் தரவும் இயலவில்லை, அதை அப்படியே துறக்கவும் இயலவில்லை.
நான் வாங்குவது கூட தேவிபாலாவின் தொடர்கதைக்காகத்தான். சில சமயம் நம்ம் ரவி, பழூர் கார்த்தி ஆகியோரது மேட்டர்கள் மாட்டுகின்றன. அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//100% சரி. பாவம் நாயர் புலிவாலை பிடித்த கதையாக பத்திரிகை அவஸ்தைப் படுகிறது. //
அப்படியா டோண்டு சார்? உங்களுக்கு யார் சொன்னது?
நான் பணிபுரிவது பத்திரிகை விளம்பரத்துறையில்... எந்த பத்திரிகை எவ்வளவு விற்கிறது என்பதெல்லாம் எங்களுக்கு விரல் நுனியில்....
வெறும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் துக்ளக் படிக்கிறவர்களுக்கு ஒரு வெகுஜன பத்திரிகையின் வீச்சு தெரிய நியாயமில்லை தான்....
பின்குறிப்பு : குங்குமம் இலவசப் பரிசுகளை நிறுத்திய பின்பும் நெ.1 தான்... நான் ஆதாரப் பூர்வமான NRSஐ (National Readership survey)நம்புகிறேன். DRS (Dondu Readership Survey) எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை :-)))))
இந்த விஷயத்தில் இவ்வளவு பெரிய கும்மி ஆரம்பிக்கும் என்று நான் நினைக்கவில்லை...
பெங்களூரில் குங்குமம் கிடைக்கிறது...சிட்னியில் ஆர்பன் ரவி அண்ணா கடையில் அவர் படித்துக்கொண்டிருந்ததை ஒருமுறை பார்த்தேன்...
மற்றபடி எந்த பத்திரிக்கை எந்த அளவில் விற்கிறது என்பதையும் எது முன்னனி பத்திரிக்கை என்பதையும் இட்லிவடை கருத்துக்கணிப்பை வைத்து எந்த முன்முடிவுக்கும் நான் வரவில்லை...
யாராவது ஆதாரத்தோடு பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்...ஆனால் ஒரு விஷயம் ( அல்லது பத்திரிக்கை) தரமற்றதாயுள்ளது / இலவசங்களால் ஓடுகிறது என்று முழுவதும் விசாரித்து அறியாமல் சொல்வது - அதுவும் அனுபவம் வாய்ந்த பதிவர்கள் இதே பத்திரிக்கை / விளம்பர துறையில் இருப்பவர்களை சங்கடப்படுத்தத்தான் செய்யும்...
சரி நீங்கள் தான் பத்திரிக்கை ரேட்டிங்குகளை போடுங்களேன்...காத்திருக்கிறேன்...!!!
// நான் பணிபுரிவது பத்திரிகை விளம்பரத்துறையில்... எந்த பத்திரிகை எவ்வளவு விற்கிறது என்பதெல்லாம் எங்களுக்கு விரல் நுனியில்....//
நான் பத்திரிக்கை துறையில் எல்லாம் நுனிவிரல் வைப்பதில்லை சார் , ஆனால் ஆ.வி ,உயிர்மை இத்யாதிகள் வாங்கும் சராசர் வாசகன் , எனக்கும் எந்த பத்திக்கை எவ்வளவு விற்கிறது என்ற ஆர்வமுண்டு , எனவே வலிய விசாரிப்பதுமுண்டு .
குங்குமதுக்கு நெ 1 பட்டமளிக்கும் சர்வே மட்டுமே உங்களுக்கு உவப்பளிக்கும் , சரிதான் .
அண்ணா!
நல்லார் ஒருவர் உளரேனும் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!!!
மழை பெய்யுது தானே!
நானும் ரவியை வாழ்த்துகிறேன்...அவர் சேவையைப் போற்றுகிறேன்.
யோகன் பாரிஸ்
As per the corrected NRS 2005, the top 12 magazines in urban and rural markets combines are: India Today - Hindi (106.98 lakhs), Saras Salil (105.54 lakhs), India Today - English (62.54 lakhs), Kunkumam (55.71 lakhs), Kumudam (46.64 lakhs), Sarita (41.82 lakhs), Grihashobha (41.07 lakhs), Swati SVP (39.53 lakhs), Vanitha (38.32 lakhs), Malayala Manorama (29.47 lakhs), Meri Saheli (27.97 lakhs) and Anand Vikatan (27.41 lakhs).
2006 சர்க்குலேஷன் என்னன்னு அடுத்த வருஷம் சொல்றேன் :-)
நல்லா பாருங்க , நெற்றியில் ரத்தம் ( நன்றி :தலைவரு ) 55 லட்சம் வாசகர்கள் , ஆ.வி 27 லட்சம் வாசகர்கள் . தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ( கண்ணில் வெங்காயச்சாறு விடாதவர்களுக்கு ) உண்மை நிலவரம் தெரியும் . பத்திரிக்கை எவ்வளவு விற்கிறது என்பதையாவது ஒரு சுமாரான கணக்கு பார்த்து விடலாம் , 6 கோடியில் 55 லட்சம் பேரிடம் விசாரித்து தெரிந்து கொள்ள முடியுமா ? எவ்வளவு விற்கிறது என்று இன்னொரு சர்வேயும் உண்டே , அதையும் நேர்மையாக தாருங்கள் லக்கிலூக் .
"2006 சர்க்குலேஷன் என்னன்னு அடுத்த வருஷம் சொல்றேன் :-)"
மன்னிக்க வேண்டும் லக்கிலுக் அவர்களே. நீங்கள் குறிப்பிடுவது நேஷனல் ரீடர்ஷிப் சர்வே என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட அளவில் சர்வே செய்து ப்ரொஜக்ட் செய்வதுதான் அது. உதாரணத்துக்கு ஒரு பத்திரிகை வாங்கினால் அதை குடும்பத்தில் உள்ள எல்லோரும் படிப்பார்கள் என்ற முறையில் அனுமானிக்கப்படுகிறது. நம்ம டிபிஆர் ரேட்டிங் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
சாதாரணமாக விளம்பர ஏஜென்ஸீக்கள்தான் அந்த சர்வேயை அதிகம் பார்க்கும். நீங்கள் சொல்வது போல அது சர்குலேஷன் இல்லை.
இன்னொரு அமைப்பு Audit Bureau of Circulations. அதில்தான் உண்மையாக எவ்வளவு காப்பிகள் விற்றன, எவ்வளவு காப்பிகள் விற்பனையாகாமல் திரும்பி வந்தன என்றெல்லாம் போடுவார்கள். இந்த அமைப்பு ஒரு விஷயத்தில் குங்குமத்துடன் ஒத்துக் கொள்ளாது. இலவச பரிசுகள் கொடுத்தால் அந்தப் பத்திரிகையின் அந்த இஷ்யூ சுழற்சி கணக்கில் வராது.
நான் எல்லா பத்திரிகைகளையும் வாங்குவது வழக்கம். இப்போதுதான் படிப்படியாக வாங்கும் பத்திரிகைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வருகிறேன். அதில் முதலில் விட்டது தமிழன் எக்ஸ்பிரஸ், ஜூவி, கூதம் ரிப்போர்டர், நக்கீரன் ஆகியவை ஆகும். அடுத்து ஒன்றுக்கு தடா போடுவது என்றால் அது குங்குமத்துக்குத்தான். ஆனால் அதில் வரும் தொடர்கதைகள் மட்டுமே இப்போது என்னை நிறுத்தியுள்ளன. குங்குமம் இப்போதும் இலவச பரிசுகள் அவ்வப்போது தருகிறது. அப்போது மட்டும் சர்குலேஷன் கூடும். பரிசுகள் இல்லாத போது குறையும். இதை நான் பலமுறை நேரிடையாகவே பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் அவர்களே!
ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷனின் ஒரு பிரிவு தான் NRS சர்வேயும் எடுக்கிறது. எனவே NRSன் credibility மீது உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.
ABCயில் தினகரன் தமிழில் இரண்டாம் இடத்துக்கு வந்திருப்பதை கூட நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் எனத் தெரியும்.
As per ABC results AV leads the No. 1 Position, Kungkumam got 2nd and Kumudam got 3rd position.
///வெறும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் துக்ளக் படிக்கிறவர்களுக்கு ஒரு வெகுஜன பத்திரிகையின் வீச்சு தெரிய நியாயமில்லை தான்....///
உங்கள் கருத்துக்களே பொதுக்கருத்துக்கள் ஆகிவிடாது , குறைத்து சோ இருக்கும் வரைக்கும் அதன் வாசகர்கள் பெருகிக்கொண்டேதான் இருப்பர் , பெரிசுகள் வாங்கும் பத்திரிக்கையாக இருந்தது போய் இன்று இளைய தலைமுறையினரே அதன் பெரும்வாசகர்கள், சோவின் கருத்துக்களை ஒத்துகொள்பவர்கள் மட்டுமல்லாது எதிப்பவர்களும் ( உங்கள் பதிவுகளை நான் படிப்பது போல )அதன் தீவிர வாசகர்கள் .
///வெறும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் துக்ளக் படிக்கிறவர்களுக்கு ஒரு வெகுஜன பத்திரிகையின் வீச்சு தெரிய நியாயமில்லைதான்....///
தவறு. பேப்பர் கடைகளில் தீவிரமாக விற்பனை ஆகிறது துக்ளக். சற்று தாமதித்தால் பத்திரிகை கிடைக்காமல் போகும் சாத்தியக்கூறுகளும் உண்டு.
கிசு கிசு, தனிமனிதத் தாக்குதல், கவர்ச்சிப் படங்கள், அண்ணாச்சி, ஜீவஜோதி, சிவகாசி ஜயலக்ஷ்மி ஆகியோரின் லீலைகள் முதலியவை பற்றிய எந்த சம்பந்தமும் இல்லாத, முழுக்க முழுக்க அரசியல் எழுதும் ஒரே தமிழ் பத்திரிகை துக்ளக் மட்டுமே.
மற்ற தமிழ் பத்திரிகைகள் தரத்தில் அதற்கு அருகில் கூட வரமுடியாது. எது எப்படியானாலும் இங்கு பேச்சு குங்குமத்தைப் பற்றித்தான், ஆகவே துகளக்கை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ABCயில் தினகரன் தமிழில் இரண்டாம் இடத்துக்கு வந்திருப்பதை கூட நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் எனத் தெரியும்."
தினகரன் பத்திரிகை என்ன விலைக்கு விற்கிறது? நஷ்டமானாலும் பரவாயில்லை என்று அடிமாட்டு விலைக்கு விற்பதாகத்தானே தெரிகிறது? கோக்கோ கோலா பெப்சி செய்ததும் இதே யுக்திதான் என்பதும் சிந்திக்கத் தகுந்ததே.
"எனவே NRSன் credibility மீது உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்."
அவர்கள் தவறாக எடுக்கிறார்கள் என்று கூற வரவில்லை ஆனால் அவர்கள் கையாளும் முறை துல்லியமான நிலையைத் தராது என்பதே நான் கூறுவது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கிசு கிசு, தனிமனிதத் தாக்குதல், கவர்ச்சிப் படங்கள், அண்ணாச்சி, ஜீவஜோதி, சிவகாசி ஜயலக்ஷ்மி ஆகியோரின் லீலைகள் முதலியவை பற்றிய எந்த சம்பந்தமும் இல்லாத, முழுக்க முழுக்க அரசியல் எழுதும் ஒரே தமிழ் பத்திரிகை துக்ளக் மட்டுமே//
சார்!
பின் அட்டையில் ரெகுலராக போடப்படும் காளிமுத்து மருத்துவர் அவர்களின் சிட்டுக்குருவி லேகிய விளம்பரத்தை மறந்து விட்டீர்களே :-))))
அது விளம்பரம் லக்கிலுக் அவர்களே. ஒரு பத்திரிகை நிலைக்க விளம்பரங்கள் அவசியம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? ஏனெனில் நீங்கள் பணிபுரிவது பத்திரிகை விளம்பரத்துறையில்.
நான் பேசியது செய்திகளைப் பற்றியது. மேலும் காளிமுத்து குடும்பம் பலதலைமுறைகளாக உழைத்து வருகிறது. அவர்கள் மருந்துகளில் கேடு இருந்தால் இவ்வளவு ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியுமா?
விளம்பரத்தை நீங்கள் இழுத்ததால் நான் இன்னொன்றும் கூறுவேன். அரசுக்கு ஜால்ரா அடித்து துக்ளக் விளம்பரங்களுக்காக கெஞ்சாது. அதை மற்றப் பத்திரிகைகள் செய்யும். எக்கட்சியின் அரசு வரினும் துகளக் எதிர் கட்சிதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குங்குமத்தில் அடுத்து உங்கள் பெயர் வர ஆசையா ? சுலபம் , குங்குமம் நெ 1 என்று ஒரு பதிவு போடலாம் , அதை கவுதம் பார்க்காமல்ல போய்விடுவார் ? ஆனால் ஏன் பதிவு போட்டோமென்ற உண்மையை யாராவது பின்னூட்டினால் அது பிரசுரிக்க தகுந்ததல்ல , சரியா ?
லக்கிலூக் பதிவில் இந்த பின்னூட்டம் இட்டேன் , அது வெளியாகவே இல்லை .
/// ஓகே சார் , இந்த பதிவினால் உங்களுக்கு கிடைத்த பரிசு என்ன என்று அப்புறம் எனக்கு சொல்லுங்கள் ///
பரதரசு அவர்களே,
லக்கிலுக்குடன் எனக்கு கருத்து வேறுபாடு உண்டுதான். ஆனால் நீங்கள் சொல்வது உண்மையில்லை என்றுதான் நினைக்கிறேன்.
அவர் கலைஞரின் ஆதரவாளர் அவ்வளவே. அதனாலேயே குங்குமத்தை ஆதரிக்கிறார். வேறொன்றும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Congratulations Ravi
Congrats Ravi.
Krishnan
//குங்குமத்தில் அடுத்து உங்கள் பெயர் வர ஆசையா ? சுலபம் , குங்குமம் நெ 1 என்று ஒரு பதிவு போடலாம் , அதை கவுதம் பார்க்காமல்ல போய்விடுவார் ?//
லக்கியை விட்டுத் தள்ளுங்கள். கெளதமைப் பற்றி இப்படி எழுதியதற்கு எனது கண்டனங்கள்.
நீங்கள் கூறுவதும் சரிதான் மாயவரத்தான் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment