12/28/2006

என் புது முகம்

எதேச்சையாக இந்த பழைய பதிவைப் பார்த்தேன். மீள்பதிவு செய்தேன்.


தர்சன் அவர்களின் தங்கை என் வேண்டுகோளுக்கிணங்கி என் படத்தை சீர்படுத்தியிருக்கிறார். தர்சனுக்கு இந்த ரிக்வெஸ்டை வைத்ததும் அவர் நான்தான் கேட்கிறேனா அல்லது வேறு யாரோவா என்று சிறு குழப்பம் போல. எனக்கு தனி மின்னஞ்சலிட்டு கேட்டு தெளிவு செய்து கொண்டார். நான் மிகவும் ரசித்தேன் என் புது முகத்தை. நீங்களும் பாருங்கள். குழந்தைகள் பயந்து கொண்டால் கொழுமோர் காய்ச்சிக் கொடுக்கவும்.

தர்சனுக்கும் அவர் தங்கைக்கும் மிக்க நன்றி. அவர் என்னைப் பேயாக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

எல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

24 comments:

வெங்காயம் said...

தமிழ் சினிமாவிற்கு ஒரு வில்லன் கிடைத்துவிட்டார். புதுமுக இயக்குநர்கள் கவணிக்க...

Unknown said...

பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை :-))

வசந்தன்(Vasanthan) said...

ம்.
எனது கருத்தும் அதுதான். இடைக்காலப்படங்களில் வரும் வில்லன் மாதிரியிருக்கிறது. பொருத்தமான மேற்சட்டை.

enRenRum-anbudan.BALA said...

You are looking TERRIFIC (and TERRIFYING !!!) ;-)

dondu(#11168674346665545885) said...

எல்லோருக்கும் நன்றி. தர்சனுக்கும அவர தங்கைக்கும் மறுபடியும் நன்றி.
ஒரு தடவை தேங்காய் சீனுவாசன் அவர்கள் ஜாம்பஜார் பக்கம் மாறுவேடத்தில் வருவதாக குமுதம் போட்டிருந்தது. நான் அவரை கண்டுபிடிக்கப் போன போது பலர் என்னை தேங்காய் சீனுவசன் என்று நினைத்து விட்டனர். சமீபத்தில் 1979-ல்

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

சார்.. மெய்யாலுமே இங்கே மேலே போட்டிருக்கிறது தானே உங்க ஒரிஜினல் போட்டோ?! சைடிலே போட்டிருக்கிறது தானே தர்ஷன் உபயம்?!

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தான் அவர்களே,

இவ்வளவு கருமுடி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். த்ர்சன் அவர்கள் வார்த்தைகளில்:
வணக்கம் தங்களின் புகைப்படத்தை என் தங்கையிடம் நேற்று
கொடுத்துவிட்டேன். பக்கத்திலிருந்து நான் வேண்டி கொண்டதிற்கு இணங்க
பேயாக மாற்றாமல் பழையகால வில்லங்கள் போல் ஆக்கியிருக்கிறார். :-))
ம்........ உங்களுக்கு இன்னுமோர் முகம் உண்டுதான் போலும். :-))

(தங்களை பேயாக்க எனக்கு மனம் வரவில்லை. மன்னிக்கவும்)

எனக்கென்னவோ இப்படத்துக்கு மொட்டை போட்டிருந்தால் மொட்டைகோர அசோகன் மாதிரி இருந்திருப்பேன் என்று தோன்றுகிறது. இப்போது என்னவென்றால் வில்லன் கூட இல்லை, அவனுடைய தலைமை அடிஆள் போல தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

U.P.Tharsan said...

:-)) நன்றி தற்போதுதான் நான் இதைப்பார்த்தேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி தர்சன் அவர்களே

dondu(#11168674346665545885) said...

Dankeschön Anitha.

Mit freundlichen Grüßen,
Dondu Raghavan

துளசி கோபால் said...

என்னங்க டோண்டு,

அசப்புலே அப்படியே 'கொச்சின் ஹனீஃபா' மாதிரி இருக்கீங்களே!!!!

dondu(#11168674346665545885) said...

கொசின் ஹனிஃபா? மலையாள நடிகர்? அன்னியனில் நடித்தாரே அவரா?

இப்போதுதான் அவர் படத்தை கூகிளிட்டு பார்த்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

டோண்டு சார்,

வண்ணக்கிளி மனோகர் மாதிரி இருக்கிறது. :-)))

dondu(#11168674346665545885) said...

"வண்ணக்கிளி மனோகர் மாதிரி இருக்கிறது. :-))) "

ஆஹா கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க. கொச்சின் ஹனீஃபா, தேங்காய் சீனுவாசன், மொட்டை கோர அசோகன், இப்போ வண்ணக்கிளி "பூச்சி" மனோஹர்.:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

அறிஞர். அ said...

இன்னா இது சிறுபிள்ளத்தனமா இருக்கு!!!

dondu(#11168674346665545885) said...

"இன்னா இது சிறுபிள்ளத்தனமா இருக்கு!!!"

வயதால் அறுபது, எண்ணங்களால் இருபத்தைந்து என்று இருப்பவனிடமிருந்து இதெல்லாம் அவ்வப்போது எதிர்ப்பார்க்காமல் இருக்க முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mugunth/முகுந்த் said...

டோண்டு, இந்தப் பதிவின் தேதி ஏன் 31-டிசம்பர்-2006 என்று இருக்கிறது? எப்படி futureக்கு போய் எழுதினீர்.

இப்படி பின் தேதியிட்ட பதிவு எழுதியதால் என்னுடைய தமிழ்பதிவுகள் திரட்டியில் இரண்டு நாட்களாக உங்கள் பதிவு முதலாவதாக காட்டுகிறது. தயவு செய்து உங்கள் பதிவில் சரியானத் தேதியை இடுங்கள்.

(தற்காலிகமாக உங்கள் வலைப்பதிவை தமிழ்ப்பதிவுகள் தளத்திலிருந்து நீக்குகிறேன். உங்கள் தேதி சரியானவுடன் மீண்டும் இணைத்துவிடுகிறேன்.)

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் முகுந்த் அவர்களே. தேதி எவ்வாறு இப்படி தவறாகக் குறிப்பிட்டேன் என்பது புரியவில்லை. சரி செய்து விட்டேன். பார்க்கவும்.

இகலப்பை புகழ் முகுந்த் அவர்களுக்கு எல்லாவற்றுக்குமான மனமார நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் இத்தருணத்தைப் பயன்படுத்துகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mugunth/முகுந்த் said...

அய்யா, நன்றி, மீண்டும் உங்கள் பதிவு தமிழ்ப்பதிவுகள் தளத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.

அன்புடன்,
முகுந்த்

Madhu Ramanujam said...

நானும் பார்த்தேன் அந்தப் பதிவை .......... ........

டிபிஆர்.ஜோசப் said...

உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராகவன் சார்.

படத்தைப் பற்றி No comments!!

அன்புடன்,
ஜோசஃப்

dondu(#11168674346665545885) said...

நன்றி முகுந்த், மதுசூதனன் மற்றும் ஜோசஃப் அவர்களே.

ஜோசஃப் சார் நீங்க இந்த படத்தைப் பத்தை ஏற்கனவே கமெண்ட் கொடுத்தாச்சு, மென்பொருள் நிபுணர் விஜயகாந்த் பற்றிய பதிவிலே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சார் , வெயில் பட பசுபதி போலவே இருக்கீங்க . ( மத்தள கருப்பு கமண்ட் தேவையா? )

dondu(#11168674346665545885) said...

வாருங்க கரு.மூர்த்தி அவர்களே. இப்போ பசுபதியா? யாரு அந்த மும்பை எக்ஸ்பிரசுலே குதிரை வாயிலே கையைக் கொடுத்து முழிப்பாரே அவரா?

மத்தளராயன் கமெண்ட் காமெடி வேல்யூக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது