12/15/2006

ஈவேரா அவர்கள் சிலை விவகாரம்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

சமீபத்தில் 1961-ல்ல் திரையிடப்பட்ட "பார்த்தால் பசிதீரும்" படத்தில் கவியரசு எழுதிய இந்தப் பாடல் கூறுவதை விடவா இந்த டோண்டு ராகவன் கூறிவிட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

44 comments:

வடுவூர் குமார் said...

நல்ல கருத்தாழம் மிக்க பாடல்.

dondu(#11168674346665545885) said...

நன்றி வடுவூர் குமார் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

நம்முடைய நாடு உண்மையான ஜனநாயக நாடு. நம்மில் பெரும்பாலோனோர் கடவுளை நம்புபவர்கள்.
ஆகவே பெரும்பான்மை மக்களின் எண்னத்திற்கேற்ப அந்த இடத்தில் சிலை அமையக்கூடாது.

dondu(#11168674346665545885) said...

சிலை அங்கு இருந்தால் இருந்து விட்டு போகட்டுமே. யாருக்கு என்ன நஷ்டம்? ஹிந்து மதம் இம்மாதிரி பலபேரை பார்த்துள்ளது. வென்றுள்ளது. அமைதி காத்தலே நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

டோண்டு அய்யா,

இந்த பாட்டு, அண்ணா அவர்கள், பெரியாரை நினைத்து பாடியா பாட்டா?

பாலா

dondu(#11168674346665545885) said...

"இந்த பாட்டு, அண்ணா அவர்கள், பெரியாரை நினைத்து பாடியா பாட்டா?"

இல்லை பாலா அவர்களே. இப்பாட்டு சிவாஜி கணேசன் தன் வாழ்க்கையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்த ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜாதேவி மற்றும் மாஸ்டர் கமலஹாசனை நினைத்து பாடிய பாடல் ஆகும். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
சிலை அங்கு இருந்தால் இருந்து விட்டு போகட்டுமே. யாருக்கு என்ன நஷ்டம்? ஹிந்து மதம் இம்மாதிரி பலபேரை பார்த்துள்ளது. வென்றுள்ளது. அமைதி காத்தலே நலம்.
//

இந்த explanation ரொம்பப் பழசு.

கையாலாகாத வெட்டி ஜம்பம் பேசுபவர்கள் இதை அதிகம் பயன் படுத்துவார்கள். (நிச்சயம் இங்கே யாரையும் குறிப்பிடவில்லை).

கோவில்களிலிருந்து எடுத்த பணம் அரசு கஜானாவுக்கு அனுப்புவது.

இந்தியமக்கள் வரிப்பணத்தில் அரபிய புனித யாத்திரை

இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களில் அடங்கி அடங்கி வாழ நாம் என்ன இன்னும் அன்னியர் ஆட்சியிலா இருக்கிறோம் ?

அன்று தான் நம்மிடம் power இல்லை. இந்து தர்மம் இன்னல்களைத் தாண்டி வாழும் என்று நம்பிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்றும் அதே பல்லவியைப் பாடவேண்டியதில்லை.

இழிவு படுத்தினால் தகுந்த பதிலடி கொடுக்க நிறையவே ஆள் இருக்கிறார்கள். நாம் இப்படி பயந்து பயந்து வாழத்தேவையில்லை.

dondu(#11168674346665545885) said...

இப்படி எடுத்துக் கொள்ளுங்கள் வஜ்ரா அவர்களே. ரங்கனை நோக்கி சிலை இருந்தால் ஆழ்வார், அவ்வாறு இல்லையென்றால் துவார பாலகர். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

மிகச் சரியான பதில் வஜ்ரா அவர்களே.

உங்களின் இந்தக் கருத்தை அப்படியே திசை திருப்பி அதனை சாதியத்தில் முடிப்பார்கள் பாருங்கள்.

dondu(#11168674346665545885) said...

"உங்களின் இந்தக் கருத்தை அப்படியே திசை திருப்பி அதனை சாதியத்தில் முடிப்பார்கள் பாருங்கள்."

அதற்கான ஆரம்பமாக ஒரு திட்டல் பின்னூட்டம் வந்தது. இதே திசை திருப்பலை தவிர்ப்பதற்காகவே அதை நான் அனுமதிக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

தலைப்புக்கும் பாட்டுக்கும் என்ன அர்த்தம் என்று யாரவது கோனார் நோட்ஸ் கொடுத்தால்தான் என்னை மாதிரி அப்பாவிகளுக்கு(மரமண்டைகளுக்கு)புரியும்போல

dondu(#11168674346665545885) said...

சிலையை (எந்தச் சிலையையுமே) கல்லாகப் பார்த்தால் அது கல்தான். அதை வேறு வகையாகப் பார்த்தால் வேறு வகைதான்.

சிற்பி ஒருவர் மரத்தில் மாமத யானையை தத்ரூபமாக செதுக்க, திருமூலார் கூறுகிறார்

"மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தில் மறைந்தது மாமத யானை" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

//மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தில் மறைந்தது மாமத யானை//

அய்யா, புல்லரிக்குதுய்யா!!!

வஜ்ரா said...

//
ரங்கனை நோக்கி சிலை இருந்தால் ஆழ்வார், அவ்வாறு இல்லையென்றால் துவார பாலகர். அவ்வளவே.
//

ஊருக்கு வெளியே கொண்டு போய் மக்கா பக்கம், ஜெரூசலம் பக்க, இல்ல வாடிகனைப்பார்த்து கூட வையுங்கள். இல்லை வைகுண்ட வாசலுக்கு எதிரில் நேராக ரோடு போட்டு 5 கிலோ மீட்டர் தள்ளி கூட வையுங்கள் (இந்த சாக்கில் ரோடாவது கிடைக்கும்!), யார் வேண்டாம் என்றது.

இந்துக்களை தொந்தரவு செய்யாதீர்கள். அவ்வளவே.

நாம் ஏன் பெரியாரைப் பற்றி "புதுப் புது அர்த்தங்கள்" எல்லாம் கற்பித்துக் கொண்டு வாழவேண்டும் ?

கார்மேகராஜா said...

///இழிவு படுத்தினால் தகுந்த பதிலடி கொடுக்க நிறையவே ஆள் இருக்கிறார்கள். நாம் இப்படி பயந்து பயந்து வாழத்தேவையில்லை///

இந்த வரிகள் எதை குறிக்கிறது என என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

இதுதான் பதிவை ஒரு பக்கமாக இழுக்கிறது.

dondu(#11168674346665545885) said...

நன்றி குறள் அவர்களே. கிரெடிட் முழுக்க திருமூலருக்கும், இப்பதிவுக்கான பாட்டையெழுதிய கவியரசு கண்ணதாசனுக்கும்தான். ஏதாவது குறை இருப்பின் அது போகட்டும் டோண்டு ராகவனுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வஜ்ரா அவர்களே,

ஈவேரா அவர்களை பற்றி நிறைய பேருக்குத் தெரியாத சில விஷயங்களைக் கூறுவேன்.

அவரிடம் தி.க.காரர் ஒருவர் தன் வீட்டில் உள்ள பிள்ளையார் சிலை பூசையில் இருப்பதாகவும், அதை எடுக்க தன் மனைவியும் தாயாரும் அனுமதிக்கவில்லை எனக் கூற, அவர் தொண்டரைப் பார்த்து சீறினார், "உம்மை யாரையா பூசையில் இருக்கும் சிலையை எடுக்கச் சொன்னது? கடையிலே போய் எட்டணா கொடுத்து ஒரு பிள்ளையார் பொம்மை வாங்கி அதை உடைச்சுக்கோ" என்று கூறினார்.

இன்னொன்றும் கூறுவேன், இது எனது தமிழ் ஐயா கூறியது: "எப்போதும் ராமன் பெயரையே கூறும் ஈவேரா நிச்சயம் சொர்க்கத்துக்குத்தான் போவார்". அது ராமபிரானின் கரையற்ற அருள்கடலின் மகிமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கார்மேகராஜா said...

///நம்முடைய நாடு உண்மையான ஜனநாயக நாடு. நம்மில் பெரும்பாலோனோர் கடவுளை நம்புபவர்கள்.
ஆகவே பெரும்பான்மை மக்களின் எண்னத்திற்கேற்ப அந்த இடத்தில் சிலை அமையக்கூடாது.///

குறள் உங்கள் கருத்து தவறாக உள்ளது என நினைக்கிறேன்.

பெரும்பான்மை என்று பார்த்தால் மற்றவரின் கருத்துக்கு உரிமையில்லையா?

கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால்
பெரியாரின் சிலை எங்கும் இருக்க வேண்டிய ஒன்றுதான்.

ஆனால் அவரது சிலையை வைத்து அரசியல் நடப்பது தான் வேதனையாக இருக்கிறது.

dondu(#11168674346665545885) said...

"இந்த வரிகள் எதை குறிக்கிறது என என்னால் தீர்மானிக்க முடியவில்லை."

புழு கூட கொட்டக் கொட்ட குளவியாகிறது. மான ரோஷமுள்ள மனிதனைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றால், ஈவேரா அவர்கள் சிலையிலும் அவன் இருப்பான் என்பதும் ஏற்கக் கூடிய வாதமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
"எப்போதும் ராமன் பெயரையே கூறும் ஈவேரா நிச்சயம் சொர்க்கத்துக்குத்தான் போவார்".
//

அவர் சொர்கத்தில் இருந்தாலும் நரகத்தில் இருந்தாலும் எனக்கு கவலையில்லை.

//
உம்மை யாரையா பூசையில் இருக்கும் சிலையை எடுக்கச் சொன்னது? கடையிலே போய் எட்டணா கொடுத்து ஒரு பிள்ளையார் பொம்மை வாங்கி அதை உடைச்சுக்கோ" என்று கூறினார்.
//

இந்த லாஜிக்கை அவர்கள் இன்றும் follow செய்யலாம்.

அவர்கள் சொந்தப் பணத்தில் ஒரு கோவில் கட்டி அதற்கு எதிரில் பெரியார் சிலை வைக்கலாம்.

dondu(#11168674346665545885) said...

"அவர்கள் சொந்தப் பணத்தில் ஒரு கோவில் கட்டி அதற்கு எதிரில் பெரியார் சிலை வைக்கலாம்."

:))))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

//பெரும்பான்மை என்று பார்த்தால் மற்றவரின் கருத்துக்கு உரிமையில்லையா//

கார்மேகராஜா அவர்களே, நான் உரிமையில்லை என்று சொல்லவில்லை.

கோவிலும் கோவிலைச் சுற்றியுள்ள இடங்களும் பக்தர்கள் புனிதத்தோடு மதிக்கும் இடங்கள். யாரும் சிறீரங்கத்தின் மற்ற இடங்களில் சிலை வைப்பதை எதிர்க்கவில்லை. கோவிலின் முன்பு வைப்பதைத்தானே வேண்டாம் என்கிறார்கள்.

இந்துக்கள் மாற்றுக் கருத்தை மதிப்பவர்களாகவே இருந்தாலும் அந்த இடத்தில் சிலை இருப்பது இந்துக்களின் மனதில் வருத்தம் உண்டாகிறது என்று தானே சொல்கிறார்கள்.

அந்த இடம் அரசு இடம் என்றாலும் ஆயிரக்கணக்கான இந்து மதநம்பிக்கை கொண்ட மக்கள் கூடும் இடம் அது. அந்த இடத்தில் சிலை என்பது அவர்களின் மனதைப் புண்படுத்துகிறது எனவே வேண்டாம் என்கிறார்கள்.

திரு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் இறை நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுதானே தலைவர் அவர்கள் குடும்பத்தை வழி நடத்துகிறார். அதே விதமான புரிதல்தான் இந்த விஷயத்திலும் வேண்டும் என்றேன் நான்.

dondu(#11168674346665545885) said...

"கோவிலும் கோவிலைச் சுற்றியுள்ள இடங்களும் பக்தர்கள் புனிதத்தோடு மதிக்கும் இடங்கள். யாரும் சிறீரங்கத்தின் மற்ற இடங்களில் சிலை வைப்பதை எதிர்க்கவில்லை."

ஸ்ரீரங்கத்தைப் பொருத்தவரை ஒரு சொலவடை உண்டு. "எங்கு சுத்தியும் ரங்கனைச் சேவி" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

dondu sir how to type 'ஸ்ரீ'?

bala said...

//அவர்கள் சொந்தப் பணத்தில் //

வஜ்ரா அய்யா,

எல்லார் பணத்தையும் தங்கள் சொந்த பணமாக கருதுவது/பிடுங்குவது, கழகக் கண்மணிகளின் கொள்கை. பொது சொத்து /எங்க சொத்து, அப்படீன்னு பாகுபாடு செய்யாத உத்தம புருஷர்கள்.

பாலா

dondu(#11168674346665545885) said...

ஸ்ரீ அடிப்பதற்கு இகலப்பை தேவைப்படும். sr அடித்தால் ஸ்ரீ வந்து விடும். உதாரணம்: srranggam --> ஸ்ரீரங்கம்.

இகலப்பை இல்லாது சுரதா பெட்டியை பாவித்தால் அது இயலாது என்றுதான் நினைக்கிறேன். சிறீ என்பதுடன் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். சுரதாவிலும் ஸ்ரீ அடிக்க முடிந்தால் யாரேனும் கூறட்டும். அவருக்கு என் முன் தேதியிட்ட நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"எல்லார் பணத்தையும் தங்கள் சொந்த பணமாக கருதுவது/பிடுங்குவது, கழகக் கண்மணிகளின் கொள்கை. பொது சொத்து /எங்க சொத்து, அப்படீன்னு பாகுபாடு செய்யாத உத்தம புருஷர்கள்."

"எந்தரோ மகானுபாவுலு, அந்தரிக்கி வந்தனமுலு"
(நன்றி: தியாகைய்யா)

bala said...

//அந்தரிக்கி வந்தனமுலு" //

டோண்டு அய்யா,

வந்தனமுலு காது..நாமமுலு..அதான் கழகக் கொள்கை.

பாலா

dondu(#11168674346665545885) said...

வந்தனமுலு என்றால் நமஸ்காரங்கள் என்று அர்த்தம். நான் அந்த மஹாபுருஷ மஹானுபாவர்களுக்கு கேலியாக நமஸ்காரம் செய்தேன். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

இங்கே "நமக்கு நாமே" திட்டம் ஏதாவது செயல்படுத்தப் படுகிறதா என்ன? :-)))))))))

Krishna (#24094743) said...

//மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தில் மறைந்தது மாமத யானை//

இது ஒரு அற்புதமான செய்யுள். ஒரு குழந்தை (உலகம் புரியாத வயதில்) மர யானை என்று அறியாமல் அதை உண்மையான யானை என்றெண்ணி பயந்ததாம். அதே சிலையை வளர்ந்த 'பகுத்தறியும்' திறனுள்ள ஒருவன் பார்த்து அது மரச்சிலை என்றுணர்ந்து அதன் கலை அழகை ரசித்தானாம். ஞானமின்றி குழந்தை சிலையை உண்மை என நினைத்தது - அதே போல் இன்றைய குஞ்சுகள் பெரியார் சிலையில் அவரையே கண்டு மிரண்டு போயுள்ளனர். அறிவு வளர்ந்த இந்துக்கள் இவர்கள் மானாவாரியாகப் 'போட்டு'த் தள்ளும் பிள்ளையார் சிலைகளை சிலைகளாக மட்டுமே பாவித்து அமைதி காத்து வருகின்றனர். ஹிந்து மதம் உயர்ந்த தத்துவத்தை அறியக் காட்டியுள்ள எண்ணற்ற வழிகளில் சிலை வழிபாடும் ஒரு வழி தான் என்பதை அறிந்து உயர்ந்த சிந்தனை உடைய ஹிந்துக்கள் அமைதியாகப் போராடுகிறார்கள். குஞ்சுகளால் பூணூல் அறுக்கப்பெற்ற பிராமணர்களிடமும் இத்தகைய உயர்ந்த ஞானமுள்ளதால் அவர்களும் விவேகிகளாகவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பாவம், குஞ்சுகள் அவர்கள் வாழ்நாள் முழுதும் ஒரு குழந்தையை ஒத்த 'அறிவுடனேயே' வாழ்ந்து, அழுகும் உடலையும், சதையையும் மட்டுமே சிந்தித்து, பேசி, பழகி, குஞ்சுகளாகவே போய்சேருவார்கள். இவர்களுடைய விதி அது. விதியை மாற்றும் 'மதி'யை வளர விடமாட்டார்கள் இவர்கள்!

dondu(#11168674346665545885) said...

"இங்கே "நமக்கு நாமே" திட்டம் ஏதாவது செயல்படுத்தப் படுகிறதா என்ன? :-)))))))))"

ஏன் ஒரமாக நிற்கிறீர்கள்? வாருங்கள் உள்ளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"விதியை மாற்றும் 'மதி'யை வளர விடமாட்டார்கள் இவர்கள்!"

இருந்தால்தானே. :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

கஞ்சா கருப்பு said...

"சிவாஜி கணேசன் தன் வாழ்க்கையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்த ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜாதேவி மற்றும் மாஸ்டர் கமலஹாசனை நினைத்து பாடிய பாடல் ஆகும். :)))"

:)))

ரொம்பத்தான் குசும்பு சார். சீரியஸா பேசிக்கிட்டிருக்கும்போது இம்மாதிரி விதூஷகத்தனமா ஏதாவது போட்டுடறீங்களே.

முகம்மது யூனுஸ்

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது யூனுஸ் அவர்களே, சீதோஷ்ண நிலை ரொம்ப வெப்பமானால் அவ்வப்போது குளிர வைக்க வேண்டியுள்ளது.

"உன்னைச் சொல்லி குற்றமில்லை,
என்னைச் சொல்லி குற்றமில்லை,
காலம் செய்த கோலமடி,
கடவுள் செய்த குற்றமடி"

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு,

மன்னிக்கணும். நீங்க இந்த பதிவுல எழுதினது சின்ஸியரா இல்லாத மாதிரி எனக்குப் படுது. நிஜம்மாவே பெரியார் சிலை அங்க இருக்கலாங்கறீங்களா?

இத நீங்க சொல்றீங்கன்னு நம்பவே முடியல்லியே.

முரளி மனோஹர்

Hariharan # 03985177737685368452 said...

டோண்டு சார்,

நேராக்ச் சொன்னாலே சுயமரியாதைச் சிங்கங்களான பகுத்தறிவுத் திலகங்களுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி!

இதுல சினிமாப் பாட்டு... அத்தேரிபாச்சா மாதிரி வெங்காயத்தின் சிலை வெங்காயத்தின் சிலைன்னு ஜபம் செய்தபடி இருக்கும் பகுத்தறிவுகள்.. சாவித்திரி...சாவித்திரின்னு தடம் பொறண்டு போய்விடும் அபாயம் இருக்கிறது!

வெங்காயத்தின் சிலை வேணுமான்னு
இந்தப் பதிவில் நானும் எனது கருத்தைச் சொல்லியிருக்கேன்!

dondu(#11168674346665545885) said...

"நிஜம்மாவே பெரியார் சிலை அங்க இருக்கலாங்கறீங்களா?"

அதுபாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டும். அதை எதுக்கு லட்சியம் செய்ய வேண்டும் என்பதுதான் என் பதிவின் நோக்கம்.

என்னைப் பொருத்தவரை அது வெறும் கல், ஈவேரா அவர்களின் சீடர்களைப் பொருத்தவரை அது பெரியார். அவ்வளவே.

ஆட்சேபம் தெரிவிக்கவேண்டுமானால் இது லா அண்ட் ஆர்டருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆட்சேபணை ஆக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜாஃபர் அலி கான் அவர்களே,

நீங்களும் ஏன் ஒரமாக நிற்கிறீர்கள்? வாருங்கள் உள்ளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//ஆட்சேபம் தெரிவிக்கவேண்டுமானால் இது லா அண்ட் ஆர்டருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆட்சேபணை ஆக இருக்கும்.//

டோண்டு அய்யா,

சரியான கருத்து. சட்டம் & ஒழுங்குமுறைக்கு தீங்கு என்பது ஒன்றே டெக்னிகலி கரெக்ட் என்ற ஆட்சேபணையா இருக்கமுடியும்.

ஆனால் நட்ட நடு ரோடில் ஒரு கோரமான சிலை, aesthetics அடிப்படையில் கொஞ்சம் ஆட்சேபத்துக்கு லாயக்கானதாக தோன்றுகிறது.

பாலா

dondu(#11168674346665545885) said...

"ஆனால் நட்ட நடு ரோடில் ஒரு கோரமான சிலை, aesthetics அடிப்படையில் கொஞ்சம் ஆட்சேபத்துக்கு லாயக்கானதாக தோன்றுகிறது."

ஈவேரா அவர்கள் என்ன அழகன் போட்டிக்கா நிற்கிறார்? ஏஸ்தெடிக்ஸ் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிப்பது ஓவர். என்னதான் இருந்தாலும் அவர் கொள்கைகளைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர உடல் தோற்றத்தையெல்லாம் கிண்டல் செய்யாதீர்கள் எனறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிப் பார்க்கப் போனால் அவர் தாடியுடன் ஒரு ரிஷி மாதிரித்தான் தோற்றமளிக்கிறார். நம்ம ம்யூஸ் அவர்களது வலைப்பூவில் பாருங்கள், களையாகத்தான் இருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//அப்படிப் பார்க்கப் போனால் அவர் தாடியுடன் ஒரு ரிஷி மாதிரித்தான் தோற்றமளிக்கிறார். நம்ம ம்யூஸ் அவர்களது வலைப்பூவில் பாருங்கள், களையாகத்தான் //

டோண்டு அய்யா,

களையாக இல்லை என்று சொல்லவில்லை.
இவங்க வைக்கிறதெல்லாம் poor quality சிலைகள்..ஏற்கெனவே மோசமான தெருக்களை இன்னும் நெருக்கமாகவும்/அசிங்கமாகவும் ஆக்கும் இந்த சிலைகள்..யாருடைய சிலைகளாகவும் இருந்தாலும் சரி..என்ற அடிப்படையில் சொன்னேனய்யா..
இது வெறும் சிமென்ட் சிலை என்று சொல்கிறார்கள்..இவங்க செய்யறது என்ன michael angelo வின் work of art போன்ற சிலைகளா?

பாலா

dondu(#11168674346665545885) said...

"களையாக இல்லை என்று சொல்லவில்லை.
இவங்க வைக்கிறதெல்லாம் poor quality சிலைகள்..ஏற்கெனவே மோசமான தெருக்களை இன்னும் நெருக்கமாகவும்/அசிங்கமாகவும் ஆக்கும் இந்த சிலைகள்..யாருடைய சிலைகளாகவும் இருந்தாலும் சரி..என்ற அடிப்படையில் சொன்னேனய்யா..
இது வெறும் சிமென்ட் சிலை என்று சொல்கிறார்கள்..இவங்க செய்யறது என்ன michael angelo வின் work of art போன்ற சிலைகளா?"

நீங்கள் மேலே கூறியதுடன் 100% ஒத்துப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது