நான் கூறவருவது நாயக நாயகி ஜோடி அல்ல. வெற்றி நடிகர்கள் இருவரது ஜோடி. இது ஒரு மீள்பதிவு. கமலுக்கு ஷெவாலியே விருது வருவதாக பேச்சு எழுந்துள்ள இந்தத் தருணத்தில் இந்தப் பதிவும் ரெலெவண்ட் ஆகிறது.
சில வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் ஏதாவது இரு நடிகர்கள் நன்குப் பேசப் படுவார்கள்.
பி. யூ. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர்.
முன்னவர் பின்னவரை விட அதிகத் திறமை வாய்ந்த நடிகர். இருந்தாலும் பின்னவருக்கு அதிக முகராசி (charisma?).
அடுத்த இருவர் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியார். அதே மேலே கூறப்பட்ட முன்னவர் பின்னவர் குணதிசயங்கள்.
இப்போது கமல் மற்றும் ரஜினி.
இப்போதைய நிலை சற்றே வித்தியாசமானது. ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு- கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும்.
சிவாஜியின் விஷயத்தில் எம்ஜியார் மாதிரித் தன்னை நல்லவனாக காண்பித்து கொள்ளச் செய்த முயற்சிகள் அனேகமாகச் சொதப்பலாயின. உதாரணம்: உத்தமன். ஆ கலே லக் ஜாவில் சஷி கபூர் மாதிரி லைட்டாக வர இயலவில்லை. ரொம்பவே பொறுமையைச் சோதித்தார். சிவாஜி தன் இயல்பிலிருந்துக் கொண்டு நடித்தப் படங்களே இன்றும் பேசப்படுகின்றன. உதாரணத்துக்கு கப்பலோட்டிய தமிழனில் அப்பாத்திரமாகவே மாறினீர்களா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு, இல்லை, அவ்வாறு நடிக்கத்தான் செய்தேன் என்று உண்மையாக கூறினார். திரும்பிப் பார் என்னும் படத்தில் முழு வில்லனாகவே வருவார். அதற்கெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.
அதே மாதிரி கமலும் ரஜினியைப் போல் ஸ்டைல் காண்பிக்க முயன்றால் தன் அடையாளத்தை இழப்பது நிச்சயம். அவ்வாறு செய்ய அவர் முயற்சிப்பதில்லை என்பது மனத்துக்கு ஆறுதலைத் தருகிறது. ரஜனி கூட கமல் மாதிரி இப்போதைய நிலையில் எல்லாவித ரோல்களையும் எடுக்க முயன்றால் தோல்விதான் கிடைக்கும். அவருக்கு இருக்கும் இமேஜை விட்டு வெளியே வர இயலாத நிலையிலேயே அவர் இருக்கிறார்.
இந்த இரட்டையர் ஜோடி எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பதில்லை. 1977-ல் எம்ஜியார் நடிப்பிலிருந்து ஓய்வுப் பெற்ற பின்புதான் கமல் ரஜினி ஜோடி வந்தது. இருவருமே இன்னும் களத்தில் இருப்பதால் இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
7 hours ago
26 comments:
அன்பு டோண்டு,
உங்கள் கருத்து முழுமையாக இல்லை என நினைக்கிறேன். ரஜினி-கமல் சகாப்தம் முடிந்து ரொம்ப நாள் ஆச்சு.
கமல் தன் நடிப்புத் திறமையால் ஏதோ இன்னும் பிழைத்துக் கொண்டிருக்கிறார். இருப்பார்.
ரஜினியோ 90 களிலேயே வருடத்திற்கு ஒரு படம் என குறைத்தார். இப்போதோ
சில வருடங்களுக்கு ஒரு படம் என ஆகிவிட்டது. அதுவும் இப்பவோ அப்பவோ என இழுத்துக் கொண்டே தான் போகிறது. ரஜினி படம் தான் இப்போதும் டாப் என ஒரு காக்கா கூட்டம் கத்திக் கொண்டுதான் இருக்கிறது.
அவரை வருடத்திற்கு ஒரு படம் எடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். யார் பார்க்கிறார்கள் என அப்போது தெரியவரும்.
ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு--- இது ஒரு நல்ல ஜோக். அவர், நல்ல ஜனரஞ்சக படங்களை கொடுத்தார். அதனால் நிறைய சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரானார். அவசரப்பட்டு சர்டிபிகிகேட்டெல்லாம் கொடுத்துடாதீங்க.
இன்றைய தேதியில் விஜய், அஜித், விக்ரம்,சூர்யா என பலரும் அந்த நிலையை அடைய முயன்று வருகிறார்கள்.
நான் ரஜினிக்கு நடிப்பு வரும் என்றுக் கூறியது எம்ஜியாருடன் ஒப்பிட்டுதான்.
அதாவது ஜோடிகளில் ஒருவர் நல்ல நடிகர் மற்றொருவர் முகராசி மற்றும் ஜனரஞ்சனைத் தன்மை உடையவர். இது சம்பந்தமாகத்தான் நான் ரஜினியின் திறமையைப் புகழ்ந்தது.
மிகக் குறைச்சலான அளவே இருந்தாலும் இன்னும் அவர் களத்தில்தான் இருக்கிறார். இன்னும் கமல் ரஜினி ஜோடி இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் அற்புத நடிகர்கள் ஆனாலும் இருவரும் கமல் ரேஞ்சில்தான் வருகிறார்கள்.
ரஜினி அளவுக்கு ஒரு ஜனரஞ்சக நடிகர் வந்தப் பிறகுதான் அடுத்த ஜோடியைப் பற்றிப் பேச முடியும் என்பது என்னுடையத் துணிபு.
விக்ரம் ரஜினி இடத்தையும் சூர்யா கமல் இடத்தையும் பிடித்தால் டபுள் ஓக்கேதான்.
அன்புடன்,
ராகவன்
Though comparing Kamal with Rajini is like apples and oranges, but I should respectfully point out that when Rajini came to the cine field, he was a good actor. 'Avarkal', 'Moondru Mudichu', '16 vayathinile' are some of the examples.
In '16 vayathinile' he overtook Kamal in some places in terms of acting. I can't think of any other actor in his place(though 99% of our tamil actors suck).
After he trapped himself in the image ring, his acting went down and now a days, his acting is stale and his advices are backwards etc. What a loss...
test
தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே அதிக சாதனைகளுக்கு சொந்தக்கார ஜோடி, ரஜினி - கமல் மட்டும்தான். அவரவருக்கு எது நன்றாக வரும் என்பதை தெரிந்து, பேசி வைத்துக்கொண்டு பிரிந்து பெரிய பெரிய சாதனைகளை செய்த ஜோடி. இன்ன பிற விஷயங்களை பற்றியெல்லாம் தனியாக, விரிவாக ஒரு பதிவு போடலாம்... கூடிய விரைவில்.
இப்பதிவை நான் புதுப்பிக்க இரு காரணங்கள். ஒன்று முதல் பின்னூட்டம் ரஜினி சகாப்தம் முடிந்தது என்றே எழுதியது. சந்திரமுகி அதைப் பொயாக்கி விட்டது. கமலும் சோடை போகவில்லை. மும்பை எக்ஸ்பிரசும் நன்றாகவே போயிற்று.
எம்.கே.டி. மற்றும் பி.யு. சின்னப்பாவைப் பற்றித் தெரியாது. எம்.ஜி.ஆர் சிவாஜி ஒரே ஒரு படத்தில்தான் இணௌந்து நடித்தனர். இப்போதைய ஜோடியோ பல படங்களில் ஒன்றாக நடித்தனர். வரும் காலத்திலும் ஏதாவது அம்மாதிரி செய்ய மாட்டார்களா என்ற ஆவல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Are u there Maayavaraththaan?
ராஜ் சந்திரா,
சூப்பர் ஸ்டாரை பற்றி விமர்சிப்பவர்கள் வழக்கமாக முடித்துவைப்பது போலவே நீங்களும் முடித்திருக்கிறீர்கள். மூன்றே வருடங்களில் தனது முதல் ஐம்பது படங்களில் ரஜினி காட்டியிருந்த வித்தியாசத்தை எந்த தமிழ் சினிமா நடிகர்களாலும் முடியவில்லை என்பதுதான் உண்மை. நூறு படங்களை தாண்டிய ரஜினி தன்னை மிகவும் விரும்பும் ரசிகர்களுக்கு மட்டுமே படத்தில் நடிக்க ஆரம்பித்ததும் ரஜினியின் முடிவிற்கு முன்பைவிட அதீத வரவேற்பு கிடைத்ததும் சரித்திரம் சொல்லும் உண்மை. திரும்ப திரும்ப அப்போது நன்றாக நடித்தார் இப்போது நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்வது காலம் காலமாய் புளித்துப் போன விமர்சனம். கருணாநிதி திரும்பவும் தண்டவாளத்தில் தலைவைக்கப்போகும் காலம் வரப்போவதில்லை; ஜெயலலிதா டூபீஸ் உடைகளில் திரும்பவும் சத்யா ஸ்டுடியோவில் ஆடிப்பாடபோவதில்லை; இருள்நீக்கி சுப்ரமணியன் கமண்டலத்தை தூக்கிக்கொண்டு திரும்பவும் குடகுமலை பக்கம் போகப்போவதில்லை; கருப்புச்சட்டைக்காரர்கள் திரும்பவும் பிள்ளையார் சிலையை உடைக்க கிளம்பப் போவதில்லை. அந்தக்காலம் வேறு; இந்தக்காலம் வேறு. யார் யாரிடமிருந்து மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை மட்டும் செய்து கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான் புத்திசாலித்தனம்.
ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்... சோடா ப்ளீஸ்!
"ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்... சோடா ப்ளீஸ்!"
இதோ உடைக்கிறேன் சோடா புஸ்ஸ்ஸ்! 23-ஆம் வட்டம் சார்பாக அண்ணனுக்கு ஒரு மலர் மாலை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராம்கி அவர்களே
ரொம்பவும் டென்ஷனாயிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இந்த விஷயத்தில் ரஜினிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்; இருந்தார்கள்-னு பார்க்கலாமில்லியா? அவரின் ஆரம்ப கால நடிப்பை ரசித்தவர்களால் நாளடைவில் வெறும் கமர்ஷியல் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் ஒரு நல்ல நடிகன் வீணடிக்கப்படுகிறானேங்கிற ஆதங்கத்தில் சொல்லப்படுவதே இந்த விமர்சனம். இத்தன நாள் கமர்ஷியல் சினிமாவின் அசைக்கமுடியாத ராஜான்னு நிருபிச்சாச்சு. இப்போ இருக்கிற நிலமயில அவர் இருக்கற வரைக்கும் அவர்தான் நிரந்தர சூப்பர்ஸ்டார். இந்த சமயத்தில் ஒரே மாதிரி சினிமாக்களுக்கு நடுவுல வித்தியாசமான சில முயற்சிகளும் அவர் செஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்கிற ஆசைதான் எல்லோருக்கும்.
டோண்டு சார், மன்னிக்கவும்
தமிழ்மணத்தில் அதிகப்படியான BRP ரேட்டிங்க்ஸ் கொண்ட உங்க பதிவுல இந்த மாதிரி ப்ளாக்கமெர்ஷியல்-களுக்கு தனிக் கட்டணமே போடலாம்னு ஒரு ஐடியா கொடுத்திட்டு, ஐடியாவுக்காக ஒரு ஓசி விளம்பரம் கொடுத்திக்கிறேன். :)
தமிழ் சினிமா பத்தி என் கருத்துக்கள். நேரமிருந்தா படிச்சு பாருங்க ப்ளீஸ்.
நன்றி
இராமநாதன்
ராமனாதன் அவர்களே, நீங்கள் சொன்னப் பதிவைப் படித்து பின்னூட்டமும் கொடுத்து விட்டேன். By the way, BRP-யின் விரிவாக்கம் என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
வருகை தந்ததற்கு நன்றி..
BRP-னெல்லாம் நிஜமா ஓண்ணுமில்ல. TRP-னு டிவில மிகவும் பார்க்கப்படுகின்ற நிகழ்ச்சிகளுக்கு ரேட்டிங்குகள் கொடுக்கறாமாதிரி, தமிழ் Blogs-இல் உங்கள் வலைப்பதிவுன்னு சொன்னேன்.
இராமநாதன்
நன்றி இராமனாதன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரஜினிம் கமலும் ஒண்ணு ; அறியாதவன் வாயிலே மண்ணு!!
"ரஜினிம் கமலும் ஒண்ணு ; அறியாதவன் வாயிலே மண்ணு!!"
இது என்ன ஸ்டேட்மெண்ட் சார்? அப்படியெல்லாம் இல்லை. நடிகர்களை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்த வேண்டாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"கருப்புச்சட்டைக்காரர்கள் திரும்பவும் பிள்ளையார் சிலையை உடைக்க கிளம்பப் போவதில்லை. அந்தக்காலம் வேறு; இந்தக்காலம் வேறு."
அப்பிடி இல்லே போலிருக்கே ராம்கி ஐயா. மறுபடி பிள்ளையாரெல்லாம் உடைக்க ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே. சரி அத்த வுடுங்க.
டோண்டு சார் சொல்றா மாதிரி ஒரு நேரத்துலே ஒரு ஜோடித்தான் போலிருக்கே.
பஜ்ஜி
ஆமாம் அன்பே சிவம் நடிகனெல்லாம் கடவுளாக முடியுமா என்ன?
கிருஷ்ணன்
//Are u there Maayavarathaan?
June 21, 2005 3:15 PM //
ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி என்ன இங்கே கூப்பிட்டிருக்கிறதை இன்னைக்கு தான் கவனித்தேன்.
மேலே முதல் பின்னூட்டமா, தன்னுடைய பெயருக்கு தகுந்த மாதிரியே கிறுக்குத் தனமா சொல்லியிருக்கிறவருக்கு பதில் சொல்லி நம்ம நேரத்தை வேஸ்ட் செய்யணுமா என்ன?
தலைவருக்கு நாளைக்கு பர்த்-டே.
வாழ்த்து சொல்லுங்க.
தேவலையே மாயவரத்தான் சார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க. எனிவே தலைவருக்கு என் தரப்பிலிருந்து வாழ்த்துக்களை அவர் சார்பில் நீங்கள் வாங்கிக் கொள்ளவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
{{நடிகர்களை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்த வேண்டாம்.}} -
ஆனா கடவுளை நடிகர்கள் ரேஞ்சுக்கு எரக்கலாம், அதுல எந்த தப்பும் இல்ல
"ஆனா கடவுளை நடிகர்கள் ரேஞ்சுக்கு எரக்கலாம், அதுல எந்த தப்பும் இல்ல."
அபுரி (புரியல்ல).
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு--- இது ஒரு நல்ல ஜோக்.//
ரஜினிகாந்தின் ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் அவரது மாறுபட்ட நடிப்பாற்றல் வெளிப்பட்டது....
இப்படிக்கு
கமல் வெறியன் லக்கிலுக்
ரஜனியின் நடிப்பை நான் ரசித்து பார்த்தது "தப்புத் தாளங்கள்" என்னும் படத்தில்.
நிஜமாகவே மனம் திருந்திய வில்லனைக் கொன்றவுடன் அவன் தன் தங்கையின் கணவன் என்பதை உணர்ந்து ரஜனி சிரித்துக் கொண்டே அது மெதுவாக அழுகையாக மாறும்போது தியேட்டரில் கரகோஷம். அதில் இந்த டோண்டு ராகவனும் பங்கு கொண்டான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu nee ennum adaingalaiya
டோண்டு அய்யா,
"துணிபு", "புரிதல்" இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.
மற்றபடி, நடிப்பில் ரஜனி அய்யா புரட்சி நடிகர் அளவுக்கு கேவலம் இல்லை என்ற உங்கள் கருத்து ஏற்க்க வேண்டிய கருத்து.புரட்சி நடிகரோடு ஒப்பிட்டால், ரஜனி அய்யாவுக்கு நடிகர் திலகம் பட்டம் தாரளமா கொடுக்கலாம்.ஆனால் ஒன்று, எவ்வாறு எம் ஜீ ஆர் அய்யா ,சிவாஜி அய்யாவை விட மக்கள் உணர்வை எடை போட்டதில் கில்லாடியோ,ரஜனி அய்யாவும், கமலை விட கில்லாடி தான் என்று தோன்றுகிறது.நடிப்பைப் பொருத்தவரை எனக்கு இன்னும் ஒரு வித்தியாசமான கருத்து உண்டு.நடிப்பில், மஞ்ச துண்டு அய்யாவை மிஞ்ச யாராலும் முடியாது என்பது தான் அது.கனவுக் காட்சியாக இருந்தாலும் சரி,உடன் பிறப்புக்காக குலுங்கி குலுங்கி அழும் காட்சியா இருந்தாலும் சரி,வில்லன் நடிப்பிலும் சரி ,உணர்ச்சிகரமா நடிப்பதில் இவரை விஞ்ச யாராலும் முடியாது.
பாலா
துணிபு என்பது யோசித்து ஏற்படுத்திக் கொண்ட ஒருவரது கருத்தாகும். புரிதல் வேறொன்றை குறிக்கும்.
//சரி ,உணர்ச்சிகரமா நடிப்பதில் இவரை விஞ்ச யாராலும் முடியாது.//
வைக்கோவை விடவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வைக்கோவை விடவா//
டோண்டு அய்யா,
ஆமாம்.வைகோ விட, என்பது தான் என் துணிபு.கைது செய்யப்பட்ட போது "அய்யோ கொல்றாங்களே" காட்சியப் பாத்து அசந்து போய்ட்டேங்கய்யா.
பாலா
Post a Comment