பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் ஆடம் ஸ்மித்தின் பெயரை கேள்விப்படாது இருக்க முடியாது. பொருளாதாரம் என்றால் என்ன என்பதற்கு ஒரு definition கொடுத்தவர்களில் முதன்மையானவர் அவர். பொருளாதாரம் என்பது செல்வத்தை பற்றி ஆராய்வது ஆகும் (Economics is a science of wealth) என்று அவர் கூறியதாக சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் புகுமுக வகுப்பில் (P.U.C.) படித்தபோது அறிந்து கொண்டேன். இந்த டெஃபினிஷன் பணத்தை ஆராதனை செய்வது போல இருக்கிறது (worship of Mammon) என்று மற்றப்படி தாங்கள் மட்டும் பணக்காரர்களாக இருப்பதற்காக ஆட்டம் போட்ட மதகுருக்களும், அவர்களது சிஷ்யகோடிகளும் கூறினர். எது எப்படியானாலும் செல்வம் உற்பத்தி செய்யப்பட்டால்தான் எல்லோருக்கும் சோறு என்ற நிலைமை தானாகவே உருவாகி இப்போது ஆடம் ஸ்மித்தின் வார்த்தைகளை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக நண்பர் ஜெயகமல் அனுப்பிய இந்த கற்பனை நேர்க்காணல் மிகுந்த கவனத்துக்குரியது. இதை எழுதியது Atanu Dey என்பவர்.
அதானு கூறுகிறார், "சில நாட்களுக்கு முன்னால் நான் ஆடம் ஸ்மித் அவர்களுடைய ஆவியை நேர்க்காணல் கண்டேன். Dr Adam Smith (1723-1790), கிளாஸ்கோ பலகலைகழகத்தில் moral philosophy துறையின் பேராசிரியர் அவர் Fellow of the Royal Society of London and Edinburgh. மனித இயற்கையை கூர்ந்து கவனித்தவர் அவர். அவரது புத்தகமான “தேசங்களது செல்வங்கள் மற்றும் அவற்றின் தன்மைகள்” அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரம் அடைந்த அதே 1776-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாம் வசிக்கும் இவ்வுலகு அடைந்த பலமாறுதல்களுக்கு புத்தகம் வெளியான இந்த நிகழ்ச்சி, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த நிகழ்வு ஆகிய இரண்டில் எதற்கு முக்கியத்துவம் அதிகம் என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன".
இப்போது நேர்க்காணலுக்கு செல்வோம். (முதலில் அதை முழுமையாக மொழி பெயர்க்க எண்ணினேன். ஆனால் பதிவு மிகப்பெரியதாக போகிறது. நான் வேறு பிறகு எனது எண்ணங்களை கூற வேண்டும். ஆகவே நேர்க்காணலை சுருக்கி அதன் சாராம்சத்தைத் தருகிறேன்).
அதானு: பேராசிரியர் ஸ்மித், உங்கள் காலத்துக்கு பிறகு பல தேசங்களின் செல்வங்கள் அபரிதமாக பெருகியுள்ளன. சில தேசங்கள் விஷயத்தில் அவ்வாறு இல்லை. இந்த வேறுபாடுகளுக்கு அடிப்படை காரணமாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்?
ஆடம் ஸ்மித்: கடைசி ஓரிரு நூற்றாண்டுகளில் உலகம் நிஜமாகவே மாறியுள்ளது. இந்த மாறுதல்கள் வெவ்வேறு அளவுகளில் உலகின் வெவ்வேறு இடங்களில் பரவியதற்கு காரணத்தை ஒரு சொல்லில் கூறவேண்டுமானால் அதுதான்: சுதந்திரம். சுதந்திர சூழ்நிலையில் மனித மனம் செழித்தோங்குவது நிரந்தரமானது. அந்த சுதந்திரத்தை நல்ல முறையில் பாவித்த நாடுகள் முன்னேற்றம் அடைந்தன. மற்றவை அடையவில்லை.
அதானு: அப்படியானால் எல்லோருமே ஏன் இந்த சுதந்திரத்தை பாவிப்பதில்லை? அந்தக் கேள்வியை பிறகு பார்ப்போம். இந்தியாவின் அனுபவம் என்னை குழப்புகிறது. பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா 60 ஆண்டுகளுக்கும் முன்னமேயே 1947-ல் சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனாலும் அதன் முன்னேற்றம் மிகக்குறைவே. முக்கியமாக பொருளாதார முன்னேற்றம். இதன் காரணம் என்னவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
ஆடம் ஸ்மித்: அரசியல் சுதந்திரமும் முக்கியமே. ஆனால் சுதந்திரம் என்ற கோட்பாட்டில் அது ஒரு பகுதி மட்டுமே. எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுதந்திரம் என்பது தனிப்பட்ட மனிதர்கள், ஆகவே குழுக்கள் ஆகியோர் தங்களை முன்னேற்றி கொள்ள வாய்ப்பு அளிக்கிறது. இந்தியாவில் உள்ள இந்த பொருளாதார சுதந்திரம் இல்லை. அதுதான் அதனுடைய அரசியல் சுதந்திரத்தால் வந்திருக்கக் கூடிய லாபங்களை தடுத்தது. காலனியாட்சியின் போது அரசியல் சுதந்திரமும் இல்லை பொருளாதார சுதந்திரமும் இல்லை. சுதந்திர இந்தியாவிலோ பொருளாதார சுதந்திரம் இல்லை.
அதானு: காலனி ஆட்சி பற்றி மேலும் கூறுங்கள்.
ஆடம் ஸ்மித்: காலனியாட்சி என்பதும் செல்வத்தை தேடித்தான். அதற்கு இயற்கை வளங்களுடன் மக்கள் வளமும் வேண்டும். ஆக புது பிரதேசங்கள் மற்றும் அவற்றின் வளங்கள் மட்டும் போதாது. கூடவே அவற்றை கையாளும் மக்களும் வேண்டும். அவர்கள்தான் செல்வத்தை உற்பத்தி செய்ய இயலும். பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டு தனிப்பட்ட காலனி ஆட்சிகளை இங்கு ஒப்பிடலாம்: இந்தியாவில் வங்காளம், வட அமெரிக்காவில் மசாசுசெட்ஸ்.
மசாசுசெட்ஸில் இடமும் வளங்களும் தாராளம். ஆனால் மக்கள் தொகை மிகவும் குறைவு. ஆக, அங்கே மக்களை குடியேற்ற மெனக்கெட வேண்டியிருந்தது. அதை செய்ய அங்கு செல்பவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் தர வேண்டியிருந்தது. கொள்கைகள் முன்னேற்றத்தை அடிப்படையாக கொள்ள வேண்டியிருந்தது. அதை கொடுத்ததன் மூலம் குடியேறியவர்கள் செல்வத்தை பெருக்க சுதந்திரம் பெற்றனர்.
ஆனால் வங்காளத்திலோ வேணமட்டும் மக்கள் இருந்தனர். ஆகவே ஆங்கிலேயர்கள் அங்குள்ள வளத்தை எடுத்து கொள்வதிலேயே குறியாக இருந்தனர். அதனால்தான் பொருளாதார சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் உள்ளூர் மக்களுக்கு மறுத்தனர். ஆனால் ஒன்று கூறவேண்டும். இவ்வாறு செய்வது தங்க முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுப்பதற்குத்தான் சமம். அது ஒரு குறுகிய காலத் திட்டமாகத்தான் இருந்திருக்க முடியும். எல்லா செல்வங்களும் எடுக்கப்பட்டன. ஆனால் செல்வங்களை உருவாக்கும் மன நிலைமை இல்லை. ஒரு காலக் கட்டத்தில் செல்வங்களை இறைத்து எடுப்பது ரொம்ப காஸ்ட்லி ஆயிற்று. அந்த நிலையில் பிரிட்டன் காலனியாதிக்கத்தை முடித்து கொண்டு சென்றது.
அதானு: அப்படியானால் முதலில் பதவிக்கு வந்த சுதந்திர இந்திய அரசாங்கம் ஏன் நிலையை சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்து மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் தரவில்லை?
ஆடம் ஸ்மித்: காலனி அரசின் அத்தனை அமைப்புகளையும் அப்படியே பெற்று கொண்டது இந்திய அரசு. அரசியல் அதிகாரம் என்பது போதையளிக்கக் கூடியது. சுலபத்தில் அதை விட்டுவிட மனம் வராது. ஆட்சியாளர்கள் அந்த போதையில் ஆழ்ந்தனர். அப்படியே வண்டியை நடத்தி செல்வதில் அவர்கள் சௌகரியத்தை உணர்ந்தனர். அவர்களது சுயநலம் பொது நலத்தை வரவிடாது செய்து விட்டது. எல்லா மனிதருக்குள்ளும் சுயநலம் உண்டு.
அதானு: ஆனால் நீங்கள்தானே இதையும் கூறினீர்கள், தனிப்பட்டவரின் சுயநலமே பொது நலத்தையும் உருவாக்குகிறது. ஆனால் பொது நலம் என்று யாரும் தனிப்பட்ட முறையில் மெனக்கெடுவதில்லை. நீங்கள் எழுதியது: "கசாப்பு கடைக்காரன், பீர் தயார் செய்பவன், ரொட்டி சுடுபவன் ஆகியோரது தர்ம சிந்தனையால் நமது சாப்பாடு கிடைப்பதில்லை நம்மிடமிருந்து வரும் பணத்துக்காகத்தான் அவர்கள் தொழில் செய்கின்றனர். ஆக ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது முக்கியமாக தன்னலம் கருதியே. இந்த பொதுவாகக் காணப்படும் தன்னல எண்ணங்கள் சரியான பாதையில் திருப்ப முடியுமானால் பொதுநலம் தானே உருவாகும். அடுத்த வாரத்துக்குள் பலான அளவு பொது நலம் தேவை என்று யாரும் பிரதிக்ஞை எடுத்து வேலை செய்வதில்லை. அது சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாமல் கூட வந்து விடுகிறது. இவ்வாறு வரும் பொது முன்னேற்றம் பொது நலம் வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்து தீர்மானிப்பதால் வரும் பொது முன்னேற்றத்தைவிட பல மடங்கு அதிகம். அதுதான் பொருளாதார சுதந்திரத்தின் பலம். அதே போல அரசியல் சுதந்திரம் பெற்ற இந்திய அரசை நடத்தியவர்களுக்கும் சுயநலம் இருந்திருக்க வேண்டுமே. அது மட்டும் எப்படி தவறாகும்?
ஆடம் ஸ்மித்: இதுதான் சில அதிகார வர்க்கத்தினரின் சுயநலனுக்கும் பொதுவான பொருளாதார சுதந்திரத்தில் இயங்கும் நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் சுய நலனுக்கும் உள்ள வித்தியாசமே. அதிகார வர்க்கத்தினரிடம் மற்றவர்களை அடக்கும் அதிகாரம் உண்டு. மற்றவர்களின் பொருளாதார சுதந்திரத்தை கட்டுப்படுத்தி தாம் சொல்வதைப் போல அவர்களை செயல்புரிய வைக்கும் பவிஷும் உண்டு. ஆனால் பொருளாதார சுதந்திரத்தில் ஒரு சராசரி மனிதன் மற்றவர்களை அவ்வாறு அதிகாரத்தால் அடக்க இயலாது. மற்றவர்களிடமிருந்து பொருளாளாதர துணையை தனது நடவடிக்கையால்தான் கவர வேண்டியிருக்கும். அவ்வாறு தனக்கு உறுதுணையாக இருப்பது மற்றவர்களது நலனுக்கும் உரியது என்பதை விடாமல் நிரூபித்த வண்ணம் இருக்க வேண்டும். அவனைப் போலவே மற்றவர்களும் அதே நிலையில்தான் இருப்பார்கள். எல்லோருமே அவ்வாறு செயல்பட பொது நலம் தானே காப்பாற்றப்படுகிறது. அவ்வளவுதான் விஷயம்.
அதானு: பொருளாதார ஒத்துழைப்பு என்பது சந்தையில் நிலவும் போட்டி என்பதுடன் எப்படி ஒத்துப்போகிறது? ஆக நாம் போட்டியை ஆதரிக்க வேண்டுமா அல்லது ஒத்துழைப்பையா?
ஆடம் ஸ்மித்: போட்டி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய இரண்டுமே முக்கியம்தான். மக்கள் தங்களுக்குள் ரசனை, இயல்பான திறமை, உருவாக்கிக் கொண்ட திறமை ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் மிக மாறுபட்டவர்கள். ஒத்துழைப்பு மூலம் ஒருவரது திறமையால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராக உருவாக்குவதை விட அதிகமாக திறமைகளை பங்கு போடுவதில் அதிகமாக உற்பத்தி செய்ய இயலும். ஒருவனுடைய திறமை இன்னொருவனுக்கு தேவைப்படலாம். அதே போல அவனது திறமை இவனுக்கு தேவைப்படலாம். ஆக, அவற்றுக்கான விலை தருவது மூலம் மற்றவர் திறமையை நாமும் உபயோகித்து கொள்ள முடிகிறது. வெற்றிகரமான சமுதாயம் இம்மாதிரி திறமைகளை ஒருவர் இன்னொருவருக்காக ஒரு விலைக்கு அளிப்பதால்தான் உருவாகுகிறது.
பொருள்கள் மற்றும் சேவை உற்பத்தி ஒத்துழைப்பால் உருவாகுகிறது. இது நாணயத்தின் ஒரு பக்கம். அதன் மறுபக்கம்தான் சந்தையில் நடக்கும் வியாபாரம். அங்குதான் போட்டி மனப்பான்மை ஆட்சி செலுத்துகிறது.
அதானு: உற்பத்தி செய்ய ஒத்துழைப்பு அவசியமே. ஆனால் சந்தையில் உள்ள போட்டியால் எல்லோருக்கும் என்ன பயன்? அங்கும் ஒத்துழைப்பு இருப்பதுதானே நல்லது?
ஆடம் ஸ்மித்: சந்தைக்கு மக்கள் வருவதின் முக்கிய நோக்கமே பொருள்கள் மற்றும் சேவைகளை விற்க மற்றும் வாங்குவதற்குத்தான். விற்பனையாளர்களாக போட்டி போட்டு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விற்கிறார்கள். அவர்கள் வாங்குபவர்களாகவும் போட்டி போடுகிறார்கள். அதன் மூலம் எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குகிறார்கள். இதில் அளிப்பு மற்றும் தேவை ஆகிய இரண்டு விஷயங்கள் செயல் புரிகின்றன. அதன் மூலம் எவ்வளவு உற்பத்தி யார் செய்வது என்பது ஒருமாதிரியாக நிலை பெறுகிறது. அதன் மூலம் சமூகத்தில் குறிப்பிட்ட அளவுக்கே உள்ள வளங்கள் மிகச்சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்படுகிறன. பொருளாதார தளத்தில் செயல் புரிபவர்களது செயல்பாட்டை சந்தை இவ்வாறு நெறிபடுத்துகிறது. இங்கு மறக்கக்கூடாத முக்கிய விஷயம் என்னவென்றால் சந்தை என்பது ஒரு முகமில்லாத ஒரு தளம். ஆனால் அதில் நல்லபடியாக வர மற்றவர்களைப் பற்றிய நல்ல எண்ணமும் வேண்டும்.
அதானு: என்னது நல்ல எண்ணமா? பயங்கர போட்டி என்று கூறுங்கள், இதில் மற்றவர்களைப் பற்றி ஏன் எண்ண வேண்டும்?
ஆடம் ஸ்மித்: அப்படியில்லை, மற்றவர்களைப் பற்றி எண்ணம் இருந்தால் அவர்களது தேவைகளை அறிந்து அதற்கேற்ப தயாரிக்கலாம். அவர்களுக்கு பிடித்தமான முறையில் தயாரிப்பதும் முக்கியம். அப்போதுதான் உங்கள் பொருட்களை வெற்றிகரமாக விற்க இயலும்.
அதானு: ஆக பொருளாதாரம் செழிக்க ஆணைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் செயல்படுவதை விட பொருளாதார சுதந்திரத்தை மக்களுக்கு அளிப்பதே அதிக சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் என்ன தேவை என்பதை சந்தை தீர்மானிக்கிறது. இப்போது பொதுவிலிருந்து தனிப்பட்ட விஷயங்களுக்கு வருவோமா. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு என்னென்ன தடைகள் உள்ளன?
ஆடம் ஸ்மித்: நாம் விவாதித்த மாதிரி பொருளாதார சுதந்திரமே இந்தியாவுக்கு முக்கியம். அதில் தேவையான மூலப் பொருட்கள் உள்ளன, கூடவே மக்கள் பலமும் உண்டு. இயற்கை வளங்களுக்கும் குறைவில்லை. பொருளாதார சுதந்திரம் வந்தால் மக்கள் உற்பத்தி செய்ய இயலும். சுதந்திர மக்கள் வளர்ந்து தங்களால் இயன்ற முன்னேற்றத்தை எய்த முடியும்.
அதானு: பழைய வேட்டையாடி பொருட்களை சேமிக்கும் சமூகத்தில் சுதந்திரம் எல்லாம் இருந்தது. ஆனாலும் அந்த சமூகம் செழிப்பானதாகத் தெரியவில்லையே. என்ன காரணம்?
ஆடம் ஸ்மித்: அப்போது இருந்த பொது அறிவு கருவூலம் அவ்வளவாக விரிவாக இல்லை. அதுதான் நீங்கள் சொல்வதற்கு காரணம். அதன் வீச்சு அறிவு வளர்ச்சியால் ஆழப்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு தொழில் நுட்ப முன்னேற்றம் மூலம் சக்தியை பல மூலங்களிலிருந்து பெற்று உபயோகிக்க முடிகிறது. தொழில் நுட்பம்தான் அறிவு கருவூலம். அதை செயல் முறை ஆக்கத் தெரிவதுதான் know-how என்று கூறுகிறார்கள். பழைய வேட்டையாடி பொருட்களை சேமிக்கும் சமூகத்தில் அறிவு கையிருப்பு குறைவே.
அதானு: பல நூற்றாண்டுகளாக உலகின் பல பகுதிகளில் அபரிதமான அளவுக்கு அறிவு சேர்ந்துள்ளது என்பதை ஒத்து கொள்கிறேன். தகவல் மற்றும் தொடர்பு விஷயங்களில் புரட்சியே நடந்துள்ளது. அதற்கு உதாரணமே உலகளாவிய வலைத்தளம் இண்டெர்நெட் ஆகியவை. தகவல் பெறுவதற்கான விலையை அவை பெரும் அளவில் குறைத்துள்ளன. இருப்பினும் பொருளாதார வளர்ச்சி எட்டாக்கனியாகவே இருப்பது புதிராக உள்ளதே. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடை எது?
ஆடம் ஸ்மித்: அறிவுக் கருவூலத்தின் திறவுகோல் கையில் இருப்பது தேவைதான். ஆனால் அது மட்டும் போதாது. அதை ஒழுங்காக அறிந்து கொள்ள கல்வியறிவும் பரவலாக இருத்தல் வேண்டும். ஆகவே கல்வி பற்றாக்குறையும் பொருளாதார சுதந்திரம் தேவைக்களவு இல்லாமல் இருத்தலுமே இந்தியாவின் முன்னேற்றத்தை தடை செய்கின்றன.
அதானு: இந்தியாவின் தற்போதைய கல்வி நிலையை பற்றி நீங்கள் சரியாக அறியவில்லை என நினைக்கிறேன். தகவல் துறையில் இந்தியா வல்லரசாகக் கருதப்படுகிறதே. இந்தியாவில் படித்தவர் எண்ணிக்கையிலும் ஒரு குறைவும் இல்லையே.
ஆடம் ஸ்மித்: நானும் அதை அறிவேன். பலர் இந்தியாவில் உயர் கல்வி பெற்றுள்ளனர். ஆனால் இந்தியாவின் ஜனத்தொகையை ஒப்பிடும்போது இது போதவே போதாது. இந்தியாவின் கல்வி பயிற்சி பழைய முறையை அனுசரித்துள்ளது. செலவழிக்கும் தொகைக்கு ஏற்ப பயன் இல்லை. நூற்றுக்கு பத்து குழந்தைகளே பள்ளியிறுதி வகுப்பை தாண்டுகின்றனர். பட்டதாரிகளில் 25 சதவிகிதம்தான் வேலை பெறும் யோக்கியதை உடையவர்களாக உள்ளனர். இந்திய கல்விமுறையின் உண்மையான விலையே பல மனித வளங்கள் வீணாகப் போவதே.
நாட்டின் உயிர் அளிக்கும் குருதியே சரியாக வேலைசெய்யாத இந்தியக் கல்வி அமைப்பால் வீணாக்கப்படுகிறது. படித்தவர்கள் பற்றாக்குறையை விடுங்கள். பாதிக்கு மேற்பட்டவருக்கு எழுதப் படிக்கக்கூடத் தெரியாது. இந்தியாவின் அறுபது ஆண்டுகால சுதந்திர செயல்பாட்டிற்கு பிறகும் இவ்வாறு இருப்பது மன்னிக்க முடியாதது.கல்வி முறையை சரி செய்வதே இந்தியா எதிர்க்கொள்ள வேண்டிய முதல் பெரிய சவால்
அதானு: ஒரு நாட்டின் செல்வ வளத்துக்கு கல்வி அவ்வளவு முக்கியமானதா, ஏன்?
ஆடம் ஸ்மித்: ஏனெனில் மக்கள்தான் பொருளாதாரத்துக்கு திறவுகோல். அவர்கள்தான் நாட்டின் வளங்களை செல்வமாக மாற்ற வேண்டும். கல்வி கற்றவர்களது உற்பத்தித்திறன் அதிகம். அவர்கள்தான் செல்வத்தை பெருக்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான போதுமான நிதியுதவிகள் வழ்ங்கப்பட வேண்டும். இது சந்தை பொருளாதாரத்தின் மூலமே சாத்தியம். இதெல்லாம் கட்டளைகள் பிறப்பிப்பதன் மூலம் வராது. கல்வியின் மேல் அரசு கட்டுப்பாடுகள் அதன் தோல்விக்கு காரணம் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அது எப்படி என்பதை உங்களிடமே கண்டுபிடிக்குமாறு விடுகிறேன்
அதானு: புரிகிறது. ஆனால் ஒன்று மட்டும் புதிராக உள்ளது. முன்னேறிய நாடுகளில் நகர மக்களின் எண்ணிக்கையின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. இது எப்படி?
ஆடம் ஸ்மித்: நகரமயமாக்கம் என்பது பொருளாதார முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்கு காரணமாகஉள்ளது, கூடவே விளைவாகவும் உள்ளது. தத்தம் துறையில் திறமை வளர்த்து கொள்வதன் மூலம் வேலை பங்கீடு நல்லபடி நடக்கிறது. அவ்வாறு திறமை பெறும் முயற்சிக்கு கல்வி அவசியம். கல்வி கற்பவர்கள் பலர் ஓரிடத்தில் குவிய அக்கல்வியின் விலையும் குறைகிறது. ஆக இது சுதந்திர சூழ்நிலையில் இருக்கும் சமூகத்தில் தவிர்க்க முடியாதது. முக்கியமாக கட்டுமான வசதிகளும் சுலபமாக ஓரிடத்தில் அளிக்க முடிகிறது.
அதானு: எது எப்படியானாலும் அமெரிக்கா மட்டும் என்ன ஸ்பெஷல், அதில் மட்டும் இவ்வளவு முன்னேற்றம் எப்படி?
ஆடம் ஸ்மித்: ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பொருளாதார சுதந்திரம் உண்டு. சாதாரணமாக வாழ்வோ தாழ்வோ மக்கள் கையிலேயே இருந்தது. சுதந்திர மக்கள் அடிமைகளை விட அதிகம் உற்பத்தி செய்வர். ஏனெனில் முன்னவர்கள் தம் நலனுக்காக உழைக்கின்றனர். அமெரிக்காவின் அரசியல் சட்டமும் இதை ஊக்குவிக்கிறது. இந்த சுதந்திரம் இந்த அளவுக்கு மற்ற நாடுகளில் இல்லை.
மேலும் அமெரிக்கா பெரிய தேசம். மக்கள் தொகையும் குறைவு. ஆகவே எல்லாவற்றையும் பெரிய அளவில் செய்ய முடிந்தது. அதன் படித்த மக்கள் அளவும் அதிகம். கல்வியின் முக்கியத்துவத்தை அமெரிக்கா முதலிலேயே உணர்ந்து விட்டது. ஐரோப்பாவில் உள்ள பெரிய பல்கலை கழகங்களை அப்படியே காப்பியடிக்காது அவற்றை தனது தேவைக்கேற்ப அபிவிருத்தி செய்து கொண்டது. விளைவுகளை நீங்களே பார்க்கலாம்.
இதுவரை கூறாத இன்னும் ஒன்று உண்டு. அதுதான் சக்தி. அமெரிக்கா தன்னிடமுள்ள நிலக்கரி சக்தியை மேம்படுத்தி தொழில் துறைக்கு அளித்தது. அதற்கான தொழில் நுட்பத்தை முன்னமேயே தயார் செய்யாதிருந்தால் இது நடந்திருக்காது.
அதானு: நிலைமை இவ்வாறிருக்க, மற்ற தேசங்களும் வேவ்வேறு சக்தி மூலங்களை பார்த்து கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா? நிலக்கரி, எண்ணெய் வளங்கள் சீக்கிரம் தீர்ந்து விடும் அபாயம் இருக்கிறதே. மேலும் சுற்றுப்புற சூழலையும் அவை பாதிக்கின்றன. என்னதான் வழி?
ஆடம் ஸ்மித்: இந்தியாவும் அமெரிக்கா போலவே விலை கட்டுப்படியாகும் சக்தி மூலத்தை உருவாக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டும். சூரிய சக்தியை நாடுவது நலம்.
அதானு: ஆனால் இதற்கு நிறைய பணம் செலவாகுமே. கட்டி வருமா?
ஆடம் ஸ்மித்: இந்தியா அதை செய்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. ஒன்று அதை செய்யலாம், அல்லது இப்போதைப்போலவே நிலக்கரி, எண்ணெய் ஆகியவற்றை உபயோகித்து அவை தீர்ந்தவுடன் சந்தியில் நிற்கலாம். அப்போது வேறு நாடுகள் சூரிய சக்தியை எடுக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியிருக்கக்கூடும். அவற்றிடம் அதிக லைசன்ஸ் தொகை கட்டி நாமும் பிறகு அதை உபயோகிக்கலாம். ஆனால் அதன் விலை பலமடங்கு அதிகமானது. செலவும் தொடர்கதையாகவே போகும். ஆனால் இந்த முடிவு எடுக்க இந்தியாவுக்கு அரசியல் தைரியம் வேண்டும். அதனிடம் அது இருக்கிறதா?
அதானு: கடைசியில் என்னதான் கூறுகிறீர்கள்?
ஆடம் ஸ்மித்: இந்தியாவின் முதல் தேவை பொருளாதார சுதந்திரம். அதன் மக்கள் புது விஷயங்களை பாவிப்பதில் தீறமை வாய்ந்தவர்கள். அவர்களை செயலாற்ற விடுங்கள். கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்குங்கள்.
அரசின் வேலை நல்ல அரசை அளித்து, அபிவிருத்தி விஷயங்களில் ஒரு முத்தண்ணா போல நடந்து எல்லோருடைய சுயமுயற்சிகளையும் பாழாக்காமல் இருப்பது அவ்வளவே. பொருளாதாரத்தில் கட்டுப்பாடு என்பதை அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அவ்வளவே.
இந்தியாவின் இப்போதைய தேவை சக்திமூலத்தை அபிவிருத்தி செய்வதே. அதற்காக ஆராய்ச்சிகள் தேவை. அவற்றுக்கான நிதி ஒதுக்குவது அரசின் கடமை.
அதானு: நன்றி ஆடம் ஸ்மித். மேலே என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் யோசிக்கிறோம்.
இப்போது மீண்டும் டோண்டு ராகவன். இந்த நேர்க்காணல் சம்பந்தமாக எனக்கும் கூற சில விஷயங்கள் உள்ளன. ஆனால் இப்போதே பதிவு பெரிதாகிப் போய்விட்டது. ஆகவே அவற்றை அடுத்த பதிவில் கூறுகிறேன்.
ஜயகமலுக்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
4 hours ago
30 comments:
பதிவில் டைரக்டர் டச் தெரியுதே!
வால்பையன்
//பதிவில் டைரக்டர் டச் தெரியுதே!//
???????????
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவில் எனக்கு ஆடம் ஸ்மித் தெரியவில்லை நீங்கள் தான் தெரிகிறீர்கள்!
(ஒருவேளை உங்கள் இருவருக்கும் ஒத்த கருத்துக்களா)
வால்பையன்
mokkai pathivu dondu.
komanakrishnan
உண்மை கூற வேண்டுமானால் நானும் ஆடம் ஸ்மித்தின் புத்தகத்தை படித்ததில்லை.
அவர் பொருளாதார அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர். பொருளாதார மாணவர்கள் எல்லோருமே அவரை அறிவார்கள். அவர் வாழ்ந்த காலம் கி.பி. 1723-1790.
அன்புடன்,
டோண்டு ராகவன்
This is one of the very good post you have put in your blog.
Another jewel in your crown.
ஏதோ புரியர மாதிரி இருக்கு.உங்க கமெண்ட போடுங்க.
//mokkai pathivu dondu.
komanakrishnan
//
dondu avargale, ithu nan podavillai. nan mariyathai illaathu ezutha matten.
komanakrishnan
ஐயா ,
நமது மக்களில் பெரும் பாலோர் அடிமை புத்தியுடன் தான் இன்னும் வாழ்கிறார்கள்.என்ன சுதந்திரம் கொடுத்தாலும் அந்தக் கால எழுத்தர் (clerical attitude)புத்தி போகாது.அன்னை இந்திரா காந்தி அவர்களின் எமர்ஜன்சி ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக இருந்தது(ஆனால் எமர்ஜன்சி ஆட்சியில் அநியாங்கள் அதிகம்).நம்ம ஆட்களுக்கு கையில் சாட்டை இருந்தால் தான் ஒழுங்காக வேலை செய்கிறார்கள்.மேற்பார்வையாளர் கன்ணில் தெரியவில்லை யென்றல் நடக்கும் கதை நாடறியும்.
இப்போது உள்ள பணவீக்கம்,அபரித விலைவாசி உயர்வு,real estae boom (வரை முறை இல்லாமல்) இதற்கு காரணம் தனியார்மயம்,தராளமயம்,உலகமயம்
தான் காரணம் என இடதுசாரிகள் சொல்வது உண்மை ஆகிவிடும் போல் உள்ளதே.பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டல் உலகமெங்கும் உணவுக்காக புரட்சி எற்படும் என சமுக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது பற்றி தங்கள் மேலான கருத்து ?
ella panakkaarargalum thaangal serththa panaththil sirithu thokaiyai ezaigalukku koduththal avargalum munneruvargale?
komanakrishnan
//அன்னை இந்திரா காந்தி அவர்களின் எமர்ஜன்சி ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக இருந்தது//
இதுதான் முழு புசினிக்காய் தோட்டத்தை சோற்றில் மறைக்க பார்ப்பது..
எமெர்ஜென்சி நல்லா இருக்குதா... வேணும்னா உங்க ஊர்ல மட்டும் ஒரு எமெர்ஜென்சி ஆட்டை போட்டு பாக்கலாமா
//நம்ம ஆட்களுக்கு கையில் சாட்டை இருந்தால் தான் ஒழுங்காக வேலை செய்கிறார்கள்.மேற்பார்வையாளர் கன்ணில் தெரியவில்லை யென்றல் நடக்கும் கதை நாடறியும்.//
இங்க ஆபீஸ்ல எப்படி வேலை செய்யணும் என்பதை பற்றி பேசல ஐயா..
//அன்னை இந்திரா காந்தி அவர்களின் எமர்ஜன்சி ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக இருந்தது(ஆனால் எமர்ஜன்சி ஆட்சியில் அநியாங்கள் அதிகம்).நம்ம ஆட்களுக்கு கையில் சாட்டை இருந்தால் தான் ஒழுங்காக வேலை செய்கிறார்கள்.மேற்பார்வையாளர் கண்ணில் தெரியவில்லை யென்றல் நடக்கும் கதை நாடறியும்.//
நிஜமாகவே நமக்கு அடிமை புத்தி அதிகம்தான். இல்லையென்றால், தனது வடிக்கட்டின சுயநலத்துக்காக நாட்டின் ஜனநாயகத்தையே அடகு வைக்கத் துணிந்த ஹிட்லர் இந்திரா காந்தி உங்களுக்கு அன்னை இந்திராவாக தெரிகிறாரா? வெளங்கிடும்.
இந்திரா காலத்தில் எல்லாம் ஒழுங்காக இருந்தனவா? நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// ஐரோப்பாவில் உள்ள பெரிய பல்கலை கழகங்களை அப்படியே காப்பியடிக்காது அவற்றை தனது தேவைக்கேற்ப அபிவிருத்தி செய்து கொண்டது. விளைவுகளை நீங்களே பார்க்கலாம். //
a real hit on our face..
this is what ur institutions are following now..
but who is to bell the cat?
//ella panakkaarargalum thaangal serththa panaththil sirithu thokaiyai ezaigalukku koduththal avargalum munneruvargale?
komanakrishnan//
yaarum vendam endru sollavillaye.
blog padiththu comment podum alavukku unakku panam irukkumbothu, nee evvalo panam ezhaigalukku kodukkirai...
டோண்டு சார் வணக்கம்,
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு..? இங்க்லீஷ் படம் பார்கும்போது எல்லோரும் கை தட்டும்போதும் சிரிக்கும்போதும் நாமளும் அதையே செய்யனும்டா அப்படின்னு சொல்லி கொடுத்து வளர்திருக்காங்க என்னை..
உண்மைய சொன்னா எனக்கு ஒண்ணுமே புரியல ஏதோ பொருளாதாரத்தை பத்தி எழுதி இருக்கீங்கன்னு நெனக்கற அளவுக்குதான் நம்ம பொருளாதார அறிவு. சீரியஸ் பதிவுன்றதால அப்பாலிக்க வந்து கும்மி அடிக்கரன், கொஞ்சம் தகவல் பரிமாற்றமெல்லாம் முடியட்டும். ஒண்ணு மட்டும் சொல்லிக்கரன் நாம எவ்வளவுதான் நெம்ப படிச்சு அறிவை கன்னா பின்னானு வளர்துவச்சாலும் அமெரிககாரன் மாதிரி முன்னேறாம இருக்கோம்னா...
'Doing Business is the Business of American People'
சரவணன்
//உண்மைய சொன்னா எனக்கு ஒண்ணுமே புரியல ஏதோ பொருளாதாரத்தை பத்தி எழுதி இருக்கீங்கன்னு நெனக்கற அளவுக்குதான் நம்ம பொருளாதார அறிவு.//
சரவணன் சார்,
உங்களுக்கு புரியாத அளவுக்கு இதுல ஒண்ணுமில்லை. டோண்டு சார் மிக அருமையா, எளிமையா எழுதி கொடுத்திருக்கிறார்.
ஒரு வேளை நீங்க களைப்புடன் இருப்பதால் சற்று குழம்பி இருக்கல்லாம், விரிவான பதிவல்லவா..
mind பிரெஷ்'அ இருக்கும்போது இன்னும் ஒரு தடவை படிச்சு பாருங்க.. நல்லாவே புரியும்
வாழ்த்துக்கள்
//நிஜமாகவே நமக்கு அடிமை புத்தி அதிகம்தான். இல்லையென்றால், தனது வடிக்கட்டின சுயநலத்துக்காக நாட்டின் ஜனநாயகத்தையே அடகு வைக்கத் துணிந்த ஹிட்லர் இந்திரா காந்தி உங்களுக்கு அன்னை இந்திராவாக தெரிகிறாரா? வெளங்கிடும்.
இந்திரா காலத்தில் எல்லாம் ஒழுங்காக இருந்தனவா? நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும்.//
சரி முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா அம்மையார்(அன்னை இந்திரா,அன்னை ஜெயலலிதா,அன்னை ........ இப்படி அழைப்பது ( மகளிர் அரசியல் தலைவர்களை) நமது தமிழர் பண்பாடு. பண்பு பாராட்டுதலுக்கு பேர் பெற்ற டோண்டு ராகவன் சார் " ஹிட்லர்" பட்டம் தேவையா?
எமர்ஜன்சி காலகட்டத்தில் அநியாயங்கள்,பிடிக்காத அரசியல் தலைவர்களை "misa" வில் கைது செய்து அடைத்தது போன்ற கொடுமைகள் நடந்தன.மறுக்கவில்லை.
அதுவும் தி.மு.கா தலைவர்களையும்,தொண்டர்களையும் அரசியல் காரணத்திற்காக வன் கொடுமைகள் செய்த்தது.கண்டிக்கத்தக்கது.
ஆனாலும் அந்த கால கட்டத்தில்.
1.வேலை நிறுத்தங்கள் அறவே கிடையாது.
2.ரயில்கள் சரியான நேரத்திற்கு சென்று வந்தன(விபத்துகள் குறைவு)
3.அரசுப் பணியாளர்கள் ஒரு பய பக்தியுடன் (குறைவான லஞ்சத்துடன்)
சரியான நேரத்திற்கு ஒழுங்காக பணியாற்றினர்.
4விலைவாசிகள் கட்டுக்குள் இருந்தன
5.பாரளுமன்றம் பண்பு காத்தது.
6.பொதுத்துறை நிறுவனங்கள் நேரு அவர்களின் கனவை நனவாக்கியது.
7.பதுக்கல்,கள்ளகடத்தல் குறைந்திருந்தது
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் சொல்லவந்தது அமெரிக்கா போல் பொருளாதார சுதந்திரம் கொடுத்தால் நம்ம ஆளுகளுக்கு தலை கால் புரியாது. அதை சொல்வதற்காகத் தான் "எமர்ஜன்சி" காலகட்டத்தை உதாரணதிற்கு சொன்னேன்.
தவறு என்றால் பொருத்தருள்க.
தற்சமயம் வாணிபத்தில் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர நிலை (no permit,no price control, free trade,free export opportunity,level playing field.-10 வருடங்களுக்கு முன் இருந்த கடுமையான விதிகள் ஒரளவுக்கு தளர்த்தப் பட்டுள்ளது)
உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
இந்த காலகட்டத்தில் தான் (உதாரணத்திற்கு)
சிமிண்ட்,இரும்பு உற்பத்தியாளர்கள்,கூட்டணி அமைத்து கொண்டு விலைகளை தாறுமாறாக உயர்த்தியதை இந்த நாடறியும்.
நமது நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் கடுமையான வார்த்தைகளுக்கு பிறகு தான் ஒரளவுக்கு விண்முட்டிய விலைகளை குறைக்க இறங்கி வந்தனர்.(சாட்டைக்கு தான் நம்மாளு கொஞ்சம் பயப்படுவாருங்கோ!)
இவர்களுக்கு(வர்த்தக சூதாடிகள்,கொள்ளை லாபம் அடிப்போர்,பதுக்கல் காரர்கள்,வரி யேய்ப்போர்,கடத்தல் காரர்கள்,அரசியல் வியாபாரிகள்,தனியார் கல்வி கூடங்கள்,தனியார் தொலைபேசி நிறுவனங்கள்,தனியார் போக்குவரத்து,தனியார் தபால் சேவை .............etc) கட்டுபாடற்ற முழு பொருளாதார சுதந்திரம்( அமெரிக்காவில் உள்ளது போல்)கொடுத்தால் பாரத தேசத்தில் தினம் கூலியாக ரூபாய் 30 க்கு கீழ் பெற்றுக் கொண்டு வறுமையோடு போராடும் 30 கோடி மக்களின் நிலை என்னாகும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டுகிறேன்.
தற்சமயம் upper middle class,high class people இவர்களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது கணிசமாக என்பது மறுப்பதற்கில்லை.
ஆனால் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் நிலை?
அவர்களை(ஆதரவற்ற ஏழை எளியோரை) கொலைகார கழுகுகளுடமிருந்து காப்பாற்றவாவது கட்டுப்படுகளுடன் கூடிய பொருளாதார சுதந்திரம் தான் நமது பரந்த இந்தியாவின் உண்மையான வளர்ச்சிக்கு வழிகோலும்.
//கட்டுபாடற்ற முழு பொருளாதார சுதந்திரம்( அமெரிக்காவில் உள்ளது போல்)கொடுத்தால் பாரத தேசத்தில//
சார் நீங்க சொல்லற மாதிரி கட்டுபாடற்ற சுந்தந்திரம் என்று ஒன்னு கிடையவே கிடையாது.
பரி வணிகத்திலும், பொருளாதார சுந்தந்திரத்திலும் கட்டுப்பாடுகள் உள்ளன. இவை
1: போட்டி -
2: பொது சட்டம் மற்றும் குற்ற பிரிவு சட்டங்கள்
மேலும் படிக்க:
Don Boudreaux in Myths and Fallacies |
http://cafehayek.typepad.com/hayek/2004/11/fettered_by_unf.ஹ்த்ம்ல்
//பொருளாதார சுதந்திரம்( அமெரிக்காவில் உள்ளது போல்)கொடுத்தால் பாரத தேசத்தில் தினம் கூலியாக ரூபாய் 30 க்கு கீழ் பெற்றுக் கொண்டு வறுமையோடு போராடும் 30 கோடி மக்களின் நிலை என்னாகும//
பொருளாதார சுதந்திரம் கொடுத்தால் வாய்ப்புகள் பெருகும், வறுமையில் வாடும் மக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். பொருளாதார சுந்தந்திரம் இருக்கும் நாடுகளில் வறுமை குறைவாகவே உள்ளது, வாழ்க்கை தரம் அதிகமாக உள்ளது.
இந்திய, சிங்கப்பூர், தென் கொரியா எல்லாம் 1960'களில் ஏழை நாடுகளே. ஆனால் இப்போது பாருங்கள் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா வின் நிலைமை
2007 per-capita income in dollars
இந்தியா: $1,089
சிங்கப்பூர்: $48,900
தென் கொரியா: $24,600
1960'களில் ஒரே நிலைமையில் இருந்த நாடுகளில் எப்படி சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆபார வளர்ச்சி பெற்றது. அதற்கு காரணம் அந்த நாடுகளில் இருந்த பொருளாதார சுதந்திரமே.
//(ஆதரவற்ற ஏழை எளியோரை) கொலைகார கழுகுகளுடமிருந்து காப்பாற்றவாவது//
பொருளாதார கட்டுபாடுகளால் சில தொழில் அதிபர்கள், சில நிறுவனங்கள் போட்டியில் இருந்து தப்பிவிடுவர்.. அவர்களுக்கு மட்டும் நன்மை ஏற்ப்படும், பொது மக்களுக்கு நட்டமே.
பொருளாதார சுதந்திரம் கொடுத்தால் ஏழை மக்களுக்கு அதிக நன்மையே.
//1960'களில் ஒரே நிலைமையில் இருந்த நாடுகளில் எப்படி சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆபார வளர்ச்சி பெற்றது. அதற்கு காரணம் அந்த நாடுகளில் இருந்த பொருளாதார சுதந்திரமே//
please note the present condition in our India after implementation of new economy policy
மாத ஊதியம்
1600 ரூபாயை வறுமைக்கோடு என்று அறிவித்தால் நாட்டில் ஏழ்மையானவர்கள் ஏறத்தாழ
60% என்கிற நிலையை எட்டும். அதே வேளையில் 10லட்சம் டாலர் சொத்து மதிப்பு கொண்ட
பணக்காரகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதையும் அந்த கமிஷன்
சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கின்றவனிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்கு
கொடுப்பது தருமம். ஆனால் இங்கே இல்லாதவனிடம் இருந்து பிடுங்கி இருப்பவனுக்கு
கொடுத்து அவனை செல்வச்செழிப்பில் மிதக்க வைக்கும் மாபெரும் கொடுமையை அரசு
செய்து வருகின்றது என்பதை இது காட்டுகிறது. ஆகக்கூடி இந்திய அரசு புதிய
பொருளாதார கொள்கையை ஏற்ற பின்னர் ஏழ்மை அதிகரித்துள்ளதுடன் ஏழை பணக்கார
இடைவெளியும் அதிகரித்துள்ளது. சோஷலிச பொருளாதார காலத்தில் இந்த இடைவெளி
தொழில்களின் தேசியமயமாதல் காரணமாக குறைந்து வந்துள்ளது. ஏழ்மையும், வறட்சியும்
1947 ஆம் ஆண்டு நிலவ்ரத்துடன் ஒப்பிடும்போது 1990 பாதியாக
குறைக்கப்பட்டிருந்தது. ஏழைகள் பலர் கல்வி காரணமாக முன்னேற்றம்
பெறத்தொடங்கினர். ஆனால் புதிய பொருளாதார கொள்கையில் ஏழைகள் புதியதாக
உருவாகியுள்ளனர். இதுதான் இந்திய தேசம் வளர்கிறது(ஏழ்மையில்) என்று
சொல்லப்படுகிறதோ?
உங்களுக்கு தமிழ்மண கருவிப்பட்டையில் எப்பொது நெகட்டிவ் ஸ்டாரே குத்துகிறார்களே? அவர்களுக்கெல்லாம் எங்கே ஏன் எரிகிறது?
அடுத்த வார கேள்விகளில் சேர்த்துகொள்ளவும்
//மாத ஊதியம்
1600 ரூபாயை வறுமைக்கோடு என்று அறிவித்தால் நாட்டில் ஏழ்மையானவர்கள் ஏறத்தாழ
60% என்கிற நிலையை எட்டும். அதே வேளையில் 10லட்சம் டாலர் சொத்து மதிப்பு கொண்ட
பணக்காரகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதையும் அந்த கமிஷன்
சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கின்றவனிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்கு கொடுப்பது தருமம். ஆனால் இங்கே இல்லாதவனிடம் இருந்து பிடுங்கி இருப்பவனுக்கு
கொடுத்து அவனை செல்வச்செழிப்பில் மிதக்க வைக்கும் மாபெரும் கொடுமையை அரசு
செய்து வருகின்றது என்பதை இது காட்டுகிறது.//
அது எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்? ஒருவன் இங்கு பணக்காரனாவது அவனது உழைப்பாலேயே. யாருடைய சாப்பாட்டிலும் மண் அள்ளிப்போட்டல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். 1990-ல் ஏழைகள் அதிகம். பணக்காரர்களுக்கும் அவ்வளவாக சம்பளம் இல்லை. நாட்டின் வருமான வரிச்சட்டம் அம்மாதிரியானதாக இருந்தன. மேலும் 1970-களில் வருட ஆண்டு வருமானம் பத்து லட்சமாக இருந்தால் வருமான வரி மற்றும் சொத்துவரிக்கு பிறகு அவனிடம் எஞ்சியிருந்தது 35 ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே என்பதை அறிவீர்களா? பணக்காரர்களாக்கும் திறமை சோஷலிச அரசிடம் இல்லை, ஆனால் எல்லோரையும் போண்டியாக்கும் திட்டம் நன்றாகச் செயல்படுத்தப்பட்டது. ஆகவேதான் பண இடைவெளி குறைவாக இருந்தது போன்ற பிரமை.
ஆனால் இப்போது ஐ.டி.யில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவன் எந்த ஏழையின் சம்பளத்தை பறிக்கிறான் என்று நினைக்கிறீர்கள்?
உலகமயமாக்கம் வராதிருந்தால் நாடு போண்டியாயிருந்திருக்கும். நம்பாவிட்டால் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஜெர்மனியின் உதாரணங்களைப் பார்க்கவும். அவை உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன. சீனா உலகமயமாக்கலை ஏற்று கொண்டது; போடு போடென்று போடுகிறது. ரஷ்யாவிலும் 1991-ல் மக்கள் கிட்டத்தட்ட ஒரே ஏழ்மை நிலையில் இருந்தனர். இப்போது அங்கும் நிலைமை தலைகீழ்.
நான் ஏற்கனவே கூறியதுதான். உலக மயமாக்கம் நீனோ நானோ கிருஷ்ணமூர்த்தியோ கூறி நிற்காது. அது பாட்டுக்கு திருவாரூர் தேர் மாதிரி செல்லும். புத்திசாலி பிழைத்து கொள்வான். ஆண்டாண்டுதோறும் புரண்டுபுரண்டு அழுது ஒப்பாரி வைத்தாலும் மாண்டு போன அரசு வெள்ளையானை பராமரிப்பு திட்டங்கள் வெற்றி பெறாது.
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமையை யாரால் தடுக்க இயலும்? போய் நீங்களும் வல்லானாக இருக்க முயலுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். மனமிருந்தால் நிஜமாகவே முன்னுக்கு வர நினைப்பவருக்கு உதவி செய்யுங்கள். ஆனால் அது பிச்சையாக இருக்கக் கூடாது. அது சோம்பேறிகளைத்தான் வளர்க்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்களுக்கு தமிழ்மண கருவிப்பட்டையில் எப்பொது நெகட்டிவ் ஸ்டாரே குத்துகிறார்களே? அவர்களுக்கெல்லாம் எங்கே ஏன் எரிகிறது?//
எரிகிறது, குத்துகிறார்கள். அதையெல்லாம் லட்சியம் செய்யக்கூடாது. இதெல்லாம் கேள்வி பதில்களில் வேண்டாம். ஆகவே இங்கேயே இப்போதே பதிலளித்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஏழ்மையும், வறட்சியும்
1947 ஆம் ஆண்டு நிலவ்ரத்துடன் ஒப்பிடும்போது 1990 பாதியாக
குறைக்கப்பட்டிருந்தது.//
பச்ச பொய்...
நீங்க சொல்வதை கண்டால் சிரிப்புதான் வருகிறது.
1950 முதல் 1990 வரை வறுமை நிலவரத்தில் சிறிதளவே குறைவு இருந்தது.
நீங்க சொல்லும்படி பாதியாக எல்லாம் குறைக்க படவில்லை.
பார்க்க: 16ஆம் பக்கம்
http://scid.stanford.edu/pdf/credpr182.pdf
//வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமையை யாரால் தடுக்க இயலும்? போய் நீங்களும் வல்லானாக இருக்க முயலுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். மனமிருந்தால் நிஜமாகவே முன்னுக்கு வர நினைப்பவருக்கு உதவி செய்யுங்கள். ஆனால் அது பிச்சையாக இருக்கக் கூடாது. அது சோம்பேறிகளைத்தான் வளர்க்கும்.//
பொருளாதரா தராளமயமாகலுக்குப் பின்னர் வளர்ச்ச்யே இல்லை என்பது என் வாதம் அல்ல. அது எல்லாத் தரப்பினருக்கும்(குறிப்பாக அடிதட்டு மக்களுக்கு-முறை சார தொழிலாளருக்கு) பரவலாக்கப்படவில்லை.
பொதுவாக மேலை நாடுகளில் (குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நேர்மை(நம்மைவிட) வாழ்வு,நீதிமன்றங்களின் பாரபடசமற்ற போக்கு,இந்தியாவில் இருக்கும் அரசியல் நேர்மை இல்ல நிலை,ஜாதிய மோதலகள் இல்லா சூழ்நிலை,பிராந்திய மோதல்கள் மட்டுபடுத்தபட்ட நிலை,அரசியலில் தலைவர்கள் ஊழல் (சில சமயம் தனிமைத ஒழுக்கக் கேட்டிற்கு கூட)காரணமாக மக்களால் முழுவது தூக்கிஎறியயப்பட்ட நிகழ்ச்சிகள்,உண்மையான பத்திரிக்கை சுதந்திரம் அவ்ர்கள் கடைபிடிக்கும் கண்ணியம்,கட்டுப்பாடு(இப்போது சற்று குறந்திருந்த போதிலும்),தவறை ஒத்துகொள்ளும் மேலாண்மை பண்பு(இந்தியாவில் எல்லாமே அரசு சார்பு ,அரசு தரும் விளம்பரங்கள்,இன்னும் ஜாதியப் பாசங்கள்-பத்திரிக்கை உலகில்(ஏன் சின்னத் திரையிலும் கூட)அன்றாடம் உள்ள வாடிக்கைகள்)அவைகளையும் நமது இந்திய தேசத்தையும் ஒப்பிடுங்கள் சார்.
உதாரனத்திற்கு கடந்த 10 - 15 ஆண்டுகளில் நடைபெற்ற வாணிப நேர்மை மீறல்களில் நீங்கள் பாராட்டும் வல்லான் களின் சாதனை பாரிர்
-----------------------------
செல் தொலைபெசிச் சேவையில் தனியார் கம்பெனிகள் அரசு நிறுவனம்(BSNL/MTNL) அனுமதிக்கப் படுவதற்கு முன்னால் அவ்ர்கள் "வசுல் ராஜா" போல் செயல் பட்டது உங்களுக்கு தெரியாததல்ல(i/c callakku kUda 8 ரூபாய் கட்டனம்-அதுவும் அரசின் வசிதிகளை. உபயோகித்து கொண்டு).இப்போது நிலை என்னா(i/c call kku 10 paisaa அவர்கலள் தருவதாக விளப்பரம்).அவர்கள் அரசுக் கம்பெனியின் சேவைகளை(க்ட்டமைப்பு வசிதிகளை) பயன் படுத்டுவதில் தங்கள்(computer software facility) மூளையெல்லம் உபயோகப்படுத்தி அரசுக்கு 1000 க்கான கோடி கட்டாமல்,நீதிமன்றம் மூலம் "வல்லமை" காட்டுவது " BUSINESS ETHICS" க்குள் அடங்குமா?.
2.அஞ்சல் அலுவலகங்கள் கட்டமைப்பு பலவீனமடந்ததால் ,தனியார் கூரியர் ரூபாய் 8 க்கு அராம்பித்து இன்று ரூபாய் 20 வாங்குகிறனர்(பலத்த போட்டி இருந்தும்) இது வல்லான் செயல் தானா?
3.நஷ்டம் என்றதும் தனியார் பெட்ரோல் கம்பெனிகள் கடையை மூடி விட்டனவே.
"லாபம் என்றால் o.k ஆனால் மக்கள் ,நட்டு நலனைபற்றி எங்களுக்கு என்னா?
4.எந்த ஒரு வியாபரத்திலும் 10-20 % லாபம் என்றால் அது நேர்மயான வாணிபம் .ஏற்றுக் கொள்ளாலாம்.
ஆனால் இங்கே ந்டைபெறும் நிகழ்வுகள் ( அதீத லாப விகிதங்கள்)முழுவதும் சுயநால நோக்கோடு நேர்மைக்கு புறம்பாகா உள்ளது போல் தெரிகிறதே,இது நமக்கு நன்மை பயக்குமா?
5.வரும் காலம் பதில் சொல்லும்
//உதாரனத்திற்கு கடந்த 10 - 15 ஆண்டுகளில் நடைபெற்ற வாணிப நேர்மை மீறல்களில் நீங்கள் பாராட்டும் வல்லான் களின் சாதனை பாரீர்//
என்னமோ 1991-க்கு முன்னால் வாணிப அத்துமீறல்களே இல்லாதது போல பேசுகிறீர்கள்?
அப்போது அரசு அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்யும் லைசன்ஸை வாங்கி கொண்டு தங்களுக்கு போட்டியின்றி செய்து கொண்டனர். தரக்கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வின்றி வந்த கார்களை பற்றி கேள்விப் பட்டதில்லையா? டெலிஃபோன் தொடர்புகளை பெற எவ்வளவு பெரிய க்யூ இருந்தது என்பதை அறிவீர்களா? அதை வைத்து எவ்வளவு எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் பணம் பண்ணினார்கள் என்பது தெரியுமா?
இப்போது? ஓரளவுக்கு மேல் அடாவடி செய்தால் வாடிக்கையாளர்களால் புறக்கணிக்கப்படுவர். ரிலையன்ஸ் முதலில் 2002-ல் மொபைல் ஃபோன் வர்த்தகத்தில் நுழைந்தபோது ஏராளமான பணம் கேட்டனர். பின்தேதியிட்ட காசோலைகள் கேட்டனர். விளைவு, மக்கள் ஹட்ச் ஆகிய நிறுவனங்களுக்கு சென்றனர். நானும்தான். இப்போது ரிலையன்ஸ் கழுதை மாதிரி வழிக்கு வரவேண்டியிருந்தது. பி.எஸ்.என்.எல்.லையே எடுத்து கொள்ளுங்கள். சேவை சரியில்லை என்றால் லேண்ட் லைனையே திருப்பி தந்து விடுகின்றனர். அதற்கு முன்னால் எவ்வளவு ஆட்டம் போட்டனர்? ஓ.வை.டி. திட்டத்தில் 7000 கட்டியும் மூன்றாண்டுகள் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது தில்லியில். இப்போது அதெல்லாம் கெட்ட கனவு. அவ்வளவே.
//அது எல்லாத் தரப்பினருக்கும்(குறிப்பாக அடிதட்டு மக்களுக்கு-முறை சாரா தொழிலாளருக்கு) பரவலாக்கப்படவில்லை.//
அதற்கு என்ன பண்ணலாம்னு சொல்கிறீர்கள்? தொழிலாளரோ, முதலாளியோ தத்தம் நலனை நெருப்புபோல பார்த்து கொள்ள வேண்டும். பல ஏழைகளை பார்த்தால் ஏழ்மையிலேயே சௌகரியம் இருப்பதாக எண்ணி தங்களை முன்னேற்றி கொள்வதில் சோம்பேறித்தனம் காட்டுகின்றனர். அன்று வேலை செய்தோமா, கூலி வாங்கினோமா, தண்ணி போட்டோமா, ரஜனி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தோமா என்று உபயோகமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் சக்தியை தொலைக்கின்றனர். முன்னேறும் முனைப்பு உள்ளவன் எப்படியும் முன்னுக்கு வருவான்.
உலகமயமாக்கலும்மு முன்னாலும் அமைப்பு சாரா தொழிலாளிகள் ஒன்றும் சொர்க்க வாழ்க்கை வாழவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பல ஏழைகளை பார்த்தால் ஏழ்மையிலேயே சௌகரியம் இருப்பதாக எண்ணி தங்களை முன்னேற்றி கொள்வதில் சோம்பேறித்தனம் காட்டுகின்றனர்//
yezaigalukku vaaippu kodukkaamal panakkaarargele suruttikkondirunthaal yezaigal yenge irunthu munneruvathu?
komanakrishnan
//yezaigalukku vaaippu kodukkaamal//
தம்பி ஏழைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தடைகளை உருவாக்குவது அரசு மட்டும்தான்.
பெட்டி கடை போடணும் என்றாலும் பெர்மிட் வாங்கனும், லைசென்ஸ் வாங்கனும், லஞ்சம் கொடுக்காம E.B காரன் மின்சார இணைப்பு கொடுக்க மட்டன்...இப்படி 1008 முட்டு கட்டை போட்டது அரசுதான்.
இதைஎல்லாம் அரசு தளர்த்த வேண்டும், ஏழைகள் முன்னேற பொருளாதார சுதந்திரம் நிச்சயம் வேண்டும்.
Dear Dondu Narasimhan Raghavan sir,
(This draft was written on 16th May 2008, due to unfortunate reasons was not posted)
It is amazing great post in this modern Tamil Society on Economics that is tooooooo in Tamil language about Great stalwart Adam Smith Iron Law of WEALTH for this there are several reasons to say why, few is important to mention. As of my knowledge and being an Economics student (studied in Madras!) too in liberal it is dead graveyard to image about universities Economics departments both in TamilNadu and other States in India forget about the other parts of the world for a movement!@
No Economics Professor can explain as you did in this post in TamilNadu, it is indeed graveyard where these professions live most of the time, often in the so called classrooms, are not they? Thank you so much DEAR DONDU NARASIMHAN RAGHAVAN SIR!
I would like say an incidence which I encountered in 2007 in Delhi; I was called for interview for the post of Economist. There I could see some Economics professor from TamilNadu (Coimbatore) came for the interview and same post his number was just before mine.
After his interview was over, he came out and told me like this “how was the interview, I asked, it was very old questions, he replied, again I asked what was that question, he again replied, they were asking me about what is public good mean? How it forms an end to many?
I asked what you replied, he said, I did not to say a word! I asked why, he said, it was studied LONG LONG BACK! I DO NOT KNOW NOW WHAT IT MEANS! Such a strange I thought myself. Later I came to know he already got Ph.D. in Economics and now TEACHCING in COLLEGE! Such a dead man is class how can the student learn different ideas from deadhead?
Once again many thank DEAR DONDU NARASIMHAN RAGHAVAN SIR! Now my comments on the good and bad bloggers comments:
First: Mr (s) Valpaiyan, don’t (never) understand what is written in plain Tamil. What an absurdly statement “director touch is visible in the post” actually Valpaiyan mind is searching shape of words that translated rather the fact, the true liberal meanings which is many spiral to his own life in everyday business his mind is not musing that his fault.
In fact DONDU sir some time back told (http://dondu.blogspot.com/2008/04/blog-post.html) when the Anonymous said Valpaiyan is totally ignorant of English, better he should go for spoken English class, but the great DONDU sir informed in another comment saying h(s)e Valpaiyan is investing in stock market broker, it means that he must have heard the English, I doubt now, h(s)e may not be stock market broker h(s)e may be UDRAF market where h(s)e themselves hanging at strange! On numbers it constantly goes up and down. Other than the number he must not know what is a social lab of economics is.
If you don’t know, don’t comment, keep quite and try to learn till you get confident to comment.
Further it is devils to say Adam Smith is invisible but DONDU is visible, unsurprisingly yes Adam Smith said “It is invisible hand” that make the market to meet billions of individuals at a time to play game with the tool of ‘price mechanism’ that communicate to both buyers and sellers product value and behaviour to buy and sell.
Did Valpaiyan understand, I don’t think so
But still there is learning path………………
The below are some of the important paragraphs from Adam Smith Book (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations, Smith, Adam (1723-1790) Published: London: Methuen and Co., Ltd., ed. Edwin Cannan, 1904. Fifth edition. First published in 1776) to learn if h(s) e and other ready to learn!
“The annual*1 labour of every nation is the fund which originally supplies it with all the necessaries and conveniencies of life*2 which it annually consumes, and which consist always either in the immediate produce of that labour, or in what is purchased with that produce from other nations.
According therefore, as this produce, or what is purchased with it, bears a greater or smaller proportion to the number of those who are to consume it, the nation will be better or worse supplied with all the necessaries and conveniencies for which it has occasion.*3
But this proportion must in every nation be regulated by two different circumstances; first by the skill, dexterity, and judgment with which its labour is generally applied;*4 and, secondly, by the proportion between the number of those who are employed in useful labour, and that of those who are not so employed.*5 Whatever be the soil, climate, or extent of territory of any particular nation, the abundance or scantiness of its annual supply must, in that particular situation, depend upon those two circumstances.
………every individual who is able to work, is more or less employed in useful labour, and endeavours to provide, as well as he can, the necessaries and conveniencies of life, for himself, or*6 such of his family or tribe as are either too old, or too young, or too infirm to go a hunting and fishing. Such nations, however, are so miserably poor, that from mere want, they are frequently reduced, or, at least, think themselves reduced, to the necessity sometimes of directly destroying, and sometimes of abandoning their infants, their old people, and those afflicted with lingering diseases, to perish with hunger, or to be devoured by wild beasts. Among civilized and thriving nations, on the contrary, though a great number of people do not labour at all, many of whom consume the produce of ten times, frequently of a hundred times more labour than the greater part of those who work; yet the produce of the whole labour of the society is so great, that all are often abundantly supplied, and a workman, even of the lowest and poorest order, if he is frugal and industrious, may enjoy a greater share of the necessaries and conveniencies of life than it is possible for any savage to acquire.
http://www.econlib.org/library/Smith/smWN.html
Were there no public institutions for education, no system, no science would be taught for which there was not some demand, or which the circumstances of the times did not render it either necessary, or convenient, or at least fashionable, to learn. A private teacher could never find his account in teaching either an exploded and antiquated system of a science acknowledged to be useful, or a science universally believed to be a mere useless and pedantic heap of sophistry and nonsense. Such systems, such sciences, can subsist no-where, but in those incorporated societies for education whose prosperity and revenue are in a great measure independent of their reputation and altogether independent of their industry. Were there no public institutions for education, a gentleman, after going through with application and abilities the most complete course of education which the circumstances of the times were supposed to afford, could not come into the world completely ignorant of everything which is the common subject of conversation among gentlemen and men of the world.
There are many but my believed one is this
“The teachers had no jurisdiction over their pupils, nor any other authority besides that natural authority, which superior virtue and abilities never fail to procure from young people towards those who are entrusted with any part of their education”.
http://www.econlib.org/library/Smith/smWN.html
Chandrasekaran
சந்திரசேகர் அவர்களே,
இதில் எனது பங்கு வெறுமனே அடானுவை மொழிபெயர்த்தது. அவ்வளவே. அது நன்றாக இருந்தால் புகழ் முழுக்க அவருக்கே.
எனது பங்களிப்பு மொழிபெயர்ப்புடன் நிற்கிறது. கூடவே நான் பி.யு.சி. யில் படித்த கொஞ்சம் பொருளாதாரப் பாடங்கள், அவ்வளவே. நேர்க்காணலுக்கு வந்த அந்தப் பொருளாதாரப் பேராசியர் பேசியது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Can someone suggest me how to choose a best stock market broker? To my knowledge it is the share broker's advice that can keep your investment safe and profitable.. Do let me know if you have any details about how to select a good share market broker
Post a Comment