என்னுடைய கார் காந்தி சிலைக்கு பின்னால் செர்வீஸ் ரோடில் வந்து நின்றபோது மாலை சரியாக 06.30 மணி. பீச் ரோடில் அடையார் தரப்பிலிருந்து வரும்போது சத்யா ஸ்டூடியோ வரை மழையின் அடையாளமே இல்லை. பிறகு தூறல் ஆரம்பித்தது. காரை விட்டு இறங்கு முன் டிரைவரிடம் என் வாட்சை கழற்றிக் கொடுத்து விட்டு, கையில் இருந்த குறிப்பு எடுக்க வேண்டிய நோட்புத்தகத்தையும் காரிலேயே வைத்து விட்டு இறங்க வேண்டியிருந்தது. மழை அதற்குள் வலுத்திருந்தது.
சாதாரணமாக இம்மாதிரி நேரத்தில் நாங்கள் ஒதுங்கும் மரத்தடிக்கு சென்றால் ஒரு பதிவரையும் காணவில்லை. மரத்தை சுற்றி வந்ததில் பல மக்கள் நடுவே இருந்த ஒரு ஜோடி யாரையும் கண்டு கொள்ளாது சிலுமிஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். செல்லை எடுத்து லக்கிலுக்குக்கு ஃபோன் செய்ததில் அவர் இன்னொரு மரத்தின் கீழ் ஒரு பெரிய கும்பலே நிற்பதாகக் கூறினார். சுதாரித்து அம்மரத்தை நெருங்கும்போது எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
என்னை முதலில் அடையாளம் கண்டு கொண்டது குப்பன் யாஹூ. பிறகு வெங்கடரமணி என்பவர் தன் பெற்றோருடன் வந்து என்னிடம் பேசினார்.சோ பற்றி அவர்களுடன் சிறிது நேரம் பேசினேன். தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை சொல்லாமல் கொள்ளாமல் எடுத்தது பற்றியும் பேசினோம். சற்று நேரத்தில் சிவஞானம்ஜி தென்பட்டார். மறுபடியும் மழை வலுக்க, வெங்கடரமணி அப்படியே தன் பெற்றோருடன் வீடு நோக்கி நகர்ந்தார். அதற்குள் பாலபாரதி வந்து போலீஸார் நாங்கள் எல்லோரும் கும்பலாக நிற்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகக் கூறினார். ஆகவே மணலுக்கு செல்ல வேண்டியிருந்தது. நான் முதலில் எல்லோரும் அலையில் காலை நனைக்க போகிறார்கள் என நினைத்து சந்தோஷப்பட்டேன்.
சிவஞானம்ஜி அவர்களும் வீடு திரும்ப வேண்டியதாயிற்று, ஏனெனில் மழையில் அவரது hearing aid பழுதடையும் அபாயம் இருந்தது. பலரை என்னுடன் அலைகள் வரை வருமாறு கேட்க எல்லோருமே மறுத்து விட்டனர். பிறகு எல்லோரும் மணல் பரப்பில் ஒரு பெரிய வட்டமாக உட்ட்கார்ந்தோம்.
என் நினைவிலிருந்து அங்கிருந்தவர்கள் பின்வருமாறு. பாலபாரதி, லக்கிலுக், ஜோவ்ராம் சுந்தர், வளர்மதி, ஜிங்காரோ ஜமீன், சுரேஷ் கண்ணன், கும்கி, இராம.கி. அய்யா (இவரை நான் பார்க்கவில்லை, ஏனெனில் சுற்றி வெளிச்சம் போதவில்லை), ரவிஷங்கர், அதீஷா, ஆழியூரான், ஜிங்காரோ ஜமீன், நரசிம், பரிசல்காரன், சம்பத், அத்திரி ஆகியோர். விட்டுப் போனவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் அவர்கள் பெயர்களையும் பதிவில் சேர்த்து விடுகிறேன்.
சட்டக் கல்லூரி பிரச்சினை பற்றி வளர்மதி பேச ஆரம்பித்தார். டி.வி. காட்சிகளில் தலித் மாணவர்கள் திரும்பத் திரும்ப ஒரு தேவர் மாணவனை அடித்ததையே காட்டியதையும், அதற்கு முன்னால் தேவர் வகுப்பு மாணவர்கள் ஒரு தலித் மாணவரின் காதை அறுத்து அவர் பிற்பகல் ஒரு மணியளவிலேயே ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ததை எல்லாம் கூறாமல் மறைத்ததையும் எடுத்துரைத்தார். சண்டைக்கு மூல காரணமே தேவர் ஜயந்தி கொண்டாட்டத்தின்போது அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த தேவர் வகுப்பு மாணவர்கள் வெறுமனே சட்டக் கல்லூரி என போட்டு போஸ்டர் அடித்ததையும் தலித்கள் தட்டிக் கேட்டதாலேயே என்பதும் தெளிவாகக் கூறப்பட்டது. நடுவில் பாலபாரதி எல்லோருக்கும் சாக்கலேட் மற்றும் பிஸ்கெட் பேக்கட்டுகள் வினியோகம் செய்தார். இவை பாரி அரசுவின் உபயம் என அறிகிறேன். அவருக்கு என் நன்றி.
வளர்மதியை சுரேஷ் கண்ணன் "தலித் மாணவர்கள் குறித்து நீங்கள் சொன்ன பின்னணி சரி. ஆனால் அதையெல்லாம் சொல்லி இந்த வன்முறையை நீங்கள் நியாயப்படுத்த விரும்புகிறீர்களா? என்று கேள்வியெழுப்பினார். நர்சிம் இதில் போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்ததை பற்றியும் கேள்விகள் கேட்டார். போலீசாருக்கு இது சம்பந்தமாக மேலிடத்து அழுத்தங்களும் பேசப்பட்டன.
திடீரென அபி அப்பாவின் ஃபோன் மாயவரத்திலிருந்து வந்தது. தான் உடல் நலம் சரியில்லாததால் வர இயலவில்லை என அவர் கூறினார். அதை லக்கிலுக்கிடம் தெரிவிக்கச் சொன்னார். நானும் தெரிவித்து விட்டேன். மழை ரொம்பவும் வலுக்கவே அடுத்த செஷன் சாந்தோம் டீக்கடைக்கு சென்று வைத்து கொள்ள முடிவாயிற்று. அச்சமயம் சுகுணா திவாகர் வந்தார்.
ஒரு பதிவர் எனது பதிவின் கருத்துக்களுடன் அவருக்கு துளியும் உடன்பாடு இல்லையென வெளிப்படையாக கூறினார். அவர் பெயரை மறந்து விட்டேன். அவர் இப்பதிவின் பின்னூட்டத்தில் கூறினால் அதையும் சேர்த்து விடுகிறேன். தமிழ் ஈழத்தில் நடப்பதைப் பற்றிப் பேச நேரம் கிடைக்கவில்லை என இரு பதிவர்கள் வருத்தப்பட்டனர். அவர்கள் பெயர் தெரியாது.
இப்படியே பேசிக்கொண்டு வழமையான டீக்கடைக்கு சென்றோம். அங்கு பார்த்தவர்கள் ப்ரூனோ, அப்துல்லா, கேபிள் சங்கர், வெண்பூ.இந்த இடத்தில் நான்கைந்து குழுக்கள் பிரிந்து தனி சேனல்களில் பேசினர். நான் இருந்த குழுவில் லக்கிலுக்கும், கேபிள் சங்கரும் பல திரைப்படங்கள் பற்றி பேசினர். அது எப்படி லக்கிலுக் எல்லாப் படங்களையும் பார்க்க முடிகிறது என்று நான் அவரைக் கேட்டதற்கு அவர் தான் ஒரு சினிமா கம்பெனியில் இருப்பதால் ப்ரெவ்யூ காட்சிகள் பார்க்க முடிகிறது என்றார். மினிமம் காரண்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன என்பதை கேபிள் சங்கர் கூறினார். தனது திரை அனுபவங்களையும் சுவாரசியமாகக் கூறினார். ஜீ டிவி தமிழ் சேனல் இப்போதைக்கு எஸ்.சி.வி. ஒத்துழைக்காவிட்டால் நிறைய பேருக்கு தெரியாது என்றும், வடக்கில் அவர்கள் சன் டி,வி.யை வெறுப்பேற்றியதால் இங்கு சன் டி.வி பதில் மரியாதை செய்கிறதென்றும் கூறப்பட்டது.
மணி எட்டரை ஆகிய நிலையில் எனது கார் டிரைவருக்கு ஃபோன் செய்து டீக்கடைக்கு வரச் சொல்லி, எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன்.
எல்லோர் பெயரையும் குறித்து கொல்ள இயலவில்லை. மழையால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டன. இருந்தும் மீட்டிங்கிற்கு சென்றது மன நிறைவைத் தந்தது.
இது பற்றி சுரேஷ் கண்ணன் போட்ட பதிவு
அத்திரி அவர்கள் போட்ட பதிவிலிருந்து நான் இப்பதிவில் தவறவிட்டப் பதிவர்களின் பெயர்களை கூறுகிறேன். அகநாளிகை, குட்டிபிசாசு, யோசிப்பவர், அக்னிபார்வை, கார்க்கி (மூளைக்காரன்), கென்.
என்னுடன் கடலுக்கு வந்திருப்பீர்களா? அடுத்த முறை அதை நிறைவேற்றுவோம். கொட்டும் மழையில் குடை ஏதுமின்றி கடல் அலைகளில் காலை நனைத்து நிற்பது அருமையான அனுபவம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
19 hours ago
23 comments:
//ப்ரூனோ, அப்துல்லா, கேபிள் சங்கர், வெண்பூ, சஞ்சய். //
யோவ..சார்..... மப்பா.. சஞ்சய் அங்கெ எங்கய்யா வந்தாரு?
பி.கு:-
//வளர்மதியை சுரேஷ் கண்ணன் சில கேள்விகள் கேட்டர்.//
இரு தவறுகள்..
1. சுரேஷ் கண்னண் அல்ல. நர்சிம்.
2. கேட்டர் அல்ல கேட்டார்!
டோண்டு ஐயா நேற்றைய ,இன்றைய ,நாளய ஜாதிய மோதல்கள்,அத்துமீறல்கள்,பெரியண்ணத் தனங்கள் இவைகளை ஒழிக்க வேண்டு மென்றால் மாவட்டங்களில்,போக்குவரத்துக் கழகங்களில் பேர்களை எல்லோரும் ஏற்கும் வகையில் எளிய மூறையில் மாற்றியது போல் கடுமையான சட்டங்களை எதிர் கால அரசியல் லாபம் கருதாமல் செயலாக்கினால் நல்லது.
தென் மாவட்டங்களில் இந்த மோதல் வாடிக்கை யான நிகழ்ச்சி.
அரசியல் தலைவர்களும்,பத்திரிக்கை யாளர்களும் நிகழ்ச்சியில் நடை பெற்ற முழு சம்பவத்தில் தான் சார்ந்த ஜாதியை காப்பாற்றும் முயற்சியே நடை பெற்றுவருவது சரியில்லா நிலை.
இன்றைய உண்மை நிலவரம் பற்றி யாரும் பேசத் தயராயில்லை.
ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலும்,அதற்கு முன்னரும் ஜாதிகள் அவர்கள் பார்த்த தொழில் மூலம் ஏற்பட்டதாய் சரித்திரம் சொல்கிறது.
அது சமயம் முற்பட்ட் சமுகத்தினர் பிற ஜாதியினரை கொடுமைகள் செய்ததாகவும் ஒரு சில அரசியல் தலைவர்கள் ( இந்தப் சீரமைப்புப் பணியை தொடங்கி வைத்தது முன்னேறிய வகுப்புத் தலைவர்களும் உண்டு என்பர்)பிரச்சாரம் செய்து இன்றய சிறப்பு நிலக்கு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை.
அரசியல் கட்சிகளின் ஜாதிக் கணக்கீட்டு முறையில் தேர்தலை சந்திப்பது,வெற்றி பெற்ற பின்னர் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பது, ஒட்டுக்களை பெறவேண்டும் என தேசியத் தலைவர்களாம் அருள் கடல் பசும்பொன் மு.ராமலிங்கம்,கல்விக் கண் கொடுத்த காமராஜ், விடுதலை விரர் வ.உ.சி,போன்ற யெல்லோருக்கும் பொதுவான பெரியவர்களை , ஒரு ஜாதி(அவரவரது) சங்குக்குள் அடைத்து நவீன அகத்தியானாய் மாற முயற்சிப்பது,
தேவையில்லா வன்முறை மோதல்களை தோற்றுவிக்கிறது
பேர்களில் ஜாதி எனும் வால் யில்லை
தெருக்களில் ஜாதி எனும் கொம்பு யில்லை
மாவட்டங்களில் ஜாதி எனும் முள்கிரீடம்
இல்லை
ஆனால் மக்கள் மனதில்,உள்ளத்தில்,சிந்தனையில்,எண்ணத்தில்,கருத்தில்,செயலில்,எழுத்தில்,படிப்பில்,படைப்பில்,உடல் முழுதும் ஒடும் குருதியில்,நாடி நரம்புகளில்.அனைத்து செல்களிலும்
ஒய்யாரச் சிம்மாசனம் போட்டு மனிதகுலத்தை ஆட்டிபடைக்கும்
ஜாதி எனும் அரக்க சுபாவத்தை முழுமையாய்
அகற்றிடும் நாள் வந்திடவேண்டும் எனும் புனித வேள்வி தொடங்கட்டுமே.
ஒன்றே குலம்
ஒருவனேதேவன்
உண்மையாய் மாறட்டுமே!
//1. சுரேஷ் கண்னண் அல்ல. நர்சிம்//
இருவரும் கேள்வி கேட்டார்கள். இப்போது பதிவில் மாற்றியுள்ளேன்.
//யோவ..சார்..... மப்பா.. சஞ்சய் அங்கெ எங்கய்யா வந்தாரு?//
அப்போ அது முரளி கன்ணனாக இருக்க வேண்டும். அப்படித்தான் ஜிம்ஷாவின் கல்யாணத்தின்போது சஞ்சயை முரளி கண்ணனாக கன்ஃப்யூஸ் செய்து கொண்டேன். இப்போது ரிவர்சில் இருக்கும் போல.
//கேட்டர்//.
இது போன்று இன்னும் சில பிழைகள் இருந்தன. அவற்றையும் திருத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பேர்களில் ஜாதி எனும் வால் இல்லை, தெருக்களில் ஜாதி எனும் கொம்பு இல்லை, மாவட்டங்களில் ஜாதி எனும் முள்கிரீடம் இல்லை//
ரொம்பத்தான் ஆசைப்படுகிறீர்கள். மாற்று அடையாளங்கள் இல்லாது தெருக்களில் ஜாதிப்பெயர் எடுத்தது அரைவேக்காட்டுத்தனம். உதாரணத்துக்கு திருவல்லிக்கேணியில் வெங்கடாச்சல செட்டித் தெரு, வெங்கடாச்சல முதலித் தெரு, வெங்கடாச்சல நாயக்கன் தெரு ஆகிய மூன்றும் வெங்கடாச்சல தெருக்கள் ஆயின. பயங்கர குழப்பம் ஏற்பட்டது. வெங்கடாச்சல I. II, III தெரு என்று குறிப்பிட்டிருந்தாலும் குழப்பம் இருந்திராது. தமிழகத்தைப் பொருத்தவரை சாதிப் பெயர்களை கூறிக் கொள்ளக் கூடாது என்ற மாதிரி எல்லோரையும் ஃபோர்ஸ் செய்வது வெறுமனே பிரச்சினையை மேல்பூச்சு பூசி மறைக்க முயலுவதற்கு சமம். அம்மை கொப்புளங்களை உடைத்தால் அவை இன்னும் ஆக்ரோஷமாகக் கிளம்பும். அப்படியே விட்டால் வடுவாகப் போய் நின்றுவிடும்.
//அரசியல் தலைவர்களும்,பத்திரிக்கை யாளர்களும் நிகழ்ச்சியில் நடை பெற்ற முழு சம்பவத்தில் தான் சார்ந்த ஜாதியை காப்பாற்றும் முயற்சியே நடை பெற்றுவருவது சரியில்லா நிலை.//
அதுதான் யதார்த்தம். கீழ் வெண்மணியில் தலித்துகளை எரித்த கொடுமை நடந்த சமயம் அக்கொடுமை செய்தது ஒரு நாயுடு, பார்ப்பனரல்ல என்பதாலேயே பெரியார் அவர்களே அதை குறித்து சவ சவ என்று அறிக்கை தந்ததை மறந்தீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
திண்டாட்டமான ‘தேசியத் தலைவரின்’ 54வது அகவையும்வன்னியில் காணிகள் வாங்கும் வெளிநாட்டுத் தமிழரும்
- எஸ் மனோரஞ்சன் -
இmaaveerarந்த வருட மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கான ஆயத்தங்கள் வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர் தினத்தை சாட்டாக வைத்து தமது தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடுவதுதான், கார்த்திகை மாதத்தில் புலிகள் இயக்கத்தினதும் அதன் ஆதரவுப் பெருந்தகைகளினதும் வழமையான பணி. ஆனால் இந்த முறை நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டுள்ளது யுத்த கள நிலைமை. இன்றைய நிலைமையில் தலைவரும் அவரது சகபாடிகளும் முற்று முழுதாக திண்டாடிப் போயுள்ள நிலையில், மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் வெளிநாடுகளில் மட்டும்தான் நடத்தப்படலாம் என்னும் நிலைமை உருவாகியுள்ளது.
அப்படியானால் வன்னியில் இந்த முறை கொண்டாட்டங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? அது ஒரு புறமிருக்க புலித்தலைவரின் வரலாற்று புகழ் மிக்க மாவீரர் தின உரைக்கு என்ன நிகழப் போகின்றது? இம்முறை புலித்தலைவரின் உரைக்கு முகாரியைத் தவிர வேறு எந்த கருப்பொருளும் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. கடந்த வருட இறுதியில் இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ‘அடுத்தவருடம் பிரபாகரனால் தனது பிறந்த நாளை கொண்டாட முடியாது’ என்று கூறியிருந்ததை பலரும் மறந்தாலும், பிரபாகரனும் அவரது சகபாடிகளும் மறந்திருக்க முடியாது. சரத் பொன்சேகா சொன்னது போலவே இந்தவருடம் பிரபாகரனின் 54வது பிறந்த நாளை திண்டாட்டமாக மாற்றி விட்டதில் சரத் பொன்சேகாவிற்கு வெற்றிதான்.
இந்த திண்டாட்டம் பிரபாகரனுக்கும் அவரது சகபாடிகளுக்கும் பல வழிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது, வழமையாக மாவீரர் தினம் நெருங்க நெருங்க அவர் காட்டும் யுத்த வீறாப்பு கிழிந்து போய் எந்த வித நிபந்தனைகளும் இன்றி ‘ஐயோ நாங்கள் யுத்த நிறுத்தத்திற்கு தயார்’ என்று ஓலமிடும் நிலைமையை இலங்கை இராணுவத்தினரின் கெட்டித்தனமான படை நகர்வு ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது, எந்த இந்தியாவிடம் தாங்கள் மண்டியிட மாட்டோம் என்று புலிகள் முரண்டு பிடித்தார்களோ, இன்று அதே இந்தியாவிடம காலில் போய் அம்போவென விழ வேண்டிய நிலை. புலிகளின் தற்போதைய அரசியல் பொறுப்பாளரான பொலீஸ் நடேசன், புலிகள் மீதான தடையை நீக்குமாறு சோனியா காந்திற்கு கடிதம் எழுத வேண்டிய அவலநிலை. அது மட்டுமன்றி தமழத்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்இப்போது இந்தியாவில் நின்றுகொண்டு ‘நாங்கள் தனி நாடு கேட்கவில்லை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத்தான் கேட்கிறோம். யுத்த நிறுத்தம்தான் உடனடித் தேவை’ என்று ஒப்பாரி வைக்கவேண்டிய கையாலாகா நிலை.
மூன்றாவது, தமிழ் நாட்டில், நின்றவன் போனவன் வந்தவன் என எல்லோர் காலிலும் விழுந்து ‘எப்படியாவது யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்து விடுங்கள்’ என ஒப்பாரி வைக்க வேண்டிய நிலை. ஆனால் ஏதோ செய்யப்போய் என்னவாகவோ முடிந்த கதைபோல், கடைசியாக மூன்று கப்பல் உணவுப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்து, இலங்கை அரசாங்கம் வன்னிக்கு பொருட்களை அனுப்பும் செலவையும்அரசாங்கத்துக்கு குறைக்கும் முயற்சியாக தமிழ் நாட்டின் கோமாளிக்கூத்து முடிந்துபோன அவலம்.
நான்காவது, டெல்லிக்குச் சென்ற இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ அவரைத் தொடர்ந்து சென்ற ஜனாதிபதி மகிந்த இருவரும், ‘தமிழ் நாட்டு நிலைமையால் டெல்லிக்கு ஏற்பட்டிருக்கும் தலையிடியை நாங்கள் புரிந்துள்ளோம் என் டெல்லிக்கு ஆறுதல் கூறினர். ஆனால் வன்னி இராணுவ நடவடிக்கயை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளத்தான் போகிறோம்’ என திட்டவட்டமாகக் கூறி வந்திருப்பது,டெல்லி அரசாங்கமும் யுத்த நிறுத்தத்தைப் பற்றி எந்த வலியுறுத்தலும் செய்யாமல் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்பதோடு நின்றுவிட்ட நிலைமை.
ஐந்தாவது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தவிர வேறெந்த உலக நாடுகளோ, சர்வதேச சமூகத்தினரோ யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுங்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதமான அழுத்தங்களையும் கொடுக்காத நிலைமை.
இத்தனை நிலைமைகளும் ஏற்படுத்தியிருக்கும் திண்டாட்டங்களுக்கு மத்தியில் எப்படித்தான் புலித்தலைவரும் அவரது சகபாடிகளும் பிறந்த நாளைக் கொண்டாடுவது? மாவீரரர் தின உரையில் என்னத்தைத்தான் சொல்லுவது? வன்னியில் யுத்த சூழலுக்குள் அகப்பட்டு புலிகளினால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் மக்களிடம் போய், 54 பொங்கல் பானைகள் வைத்து பொங்குங்கள் என்றால், அவர்கள்தேய்ந்த விளக்குமாற்றையும் கிழிந்த செருப்பையும்தான் கையில் தூக்குவார்கள்.
இந்த முறை மாவீரரர் தினத்திற்கு சரத் பொன்சேகாவின் உரையைத்தான் உலகம் கேட்கப் போகின்றது. காரணம் இலங்கை அரசபடைகளுக்குத்தான் கொண்டாட்டத்துகான பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. மாவீரர் தினத்தன்று யாழ்பாணத்துக்கான கடலோரப் பாதையான மன்னார் பூநகரிப் பாதை திறப்பு பற்றி அரசாங்கம் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த இலக்கை நோக்கி சகலதையும் அரசாங்கம்நகர்த்திக் கொண்டிருக்கிறது.
அதுபோக இந்த முறை குமுழமுனையின் தெற்கே தண்ணிமுறிப்பு குளக்கட்டில் நிற்கும் இராணுவம் குமுழமுனையை முழுமையாகப் பிடித்தால், அடுத்து அலம்பில், செம்மலையை விட்டு ஓடி சகலதையும் சுருட்டிக்கொண்டு ஓடி முல்லைத்தீவுக்குள் போய் முடங்கிக் கொள்ளுவது எப்படி என்று சிந்திப்பதிலேயே தேசியத் தலைவருக்கும் அவரது கூட்டத்திற்கும் மாவீரர் மாதம் கழியப்போகின்றது.
முன்னேறுகிற இலங்கை இராணுவத்தை தடுத்து நிறுத்த பலாத்காரமாக பிடித்து முன்னால் விடுவதற்கு இள வயதுள்ளவர்கள் அடியோடு இல்லாத நிலைமை வன்னியில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் பிடித்து முன்னால் தள்ளிவிட்hலும், கூட்டமாக கொல்லப்படுகிறார்கள், அல்லது சரணடைந்து உள்ளேயிருக்கும் நிலைமைகளை விலாவாரியாக இராணுவத்தினரிடம் சொல்கிறார்கள், அல்லது பெருமளவில்காயப்பட்டு புலிகளுக்கே பெரும் சுமையாக வந்து சேர்கிறார்கள்.
தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட கோமாளிகள் கும்மாளத்தின் காரணமாக இந்திய அரசாங்கத்தின் மிதமிஞ்சிய அழுத்தத்தினால் யுத்த நிறுத்தம் வந்திருந்தால்கூட அதை வைத்து மாவீரர் தின உரையில் ஒரு சொதி வைத்திருக்கலாம். அதுவும் கெட்டுப்போய்விட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாட்டு கிளை ஆரம்பித்து வைத்த நகைச்சுவை நாடகம், பழம் பெரும் நடிகரான கருணாநிதியாலும் அவரதுசக நடிகர்களாலும் சோகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டது போல் எல்லாம் நிகழ்ந்தேறிவிட்டன.
ஆகக் குறைந்தது புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கினாலாவது, இந்தியாவில் போய் மீண்டும் ஒழிந்து கொள்ளுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என கனவுகண்ட புலித்தலைவருக்கு, தடை இன்னும் இரண்டு வருடம் நீடிக்கப்பட்ட செய்தியானது பேரிடியாக தலையில் இறங்கியிருக்கும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. தமிழ் நாட்டில் தாம் மேற்கொண்ட பணியின் வெற்றியோடு வன்னிக்குப்போய் மாவீரர்நிகழ்வில் பங்குபற்றி தலைவரிடம் பொற்கிளியைப் பரிசாக வாங்கும் பாக்கியம் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சில சில்லறை சினிமாக் காரர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது.
இதெல்லாம் இப்படியிருக்க மன்னார் மாவட்டத்திலும் வன்னியிலும் அல்லல்படும் மக்களிடம் காணிகளை மலிந்த விலையில் வாங்கிப்போடும் வேலையில வெளிநாட்டுத் தமிழர்கள் மிக உசாராக இறங்கியிருக்கிறார்கள். இதிலும் முன்னணியல் நிற்பவர்கள் கனேடியத்தமிழர்கள்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக புலிகள் அழிந்து போகப் போகிறார்கள் என்கின்ற முடிவுக்கு வெளிநாட்டுத்தமிழர்களும் வந்து விட்டதன் வெளிப்பாடே இதுவாகும்.
முன்னர் சமாதான காலகட்டத்தில் அவசர அவசரமாக சென்று யாழ்ப்பாணத்தில் இருந்த தமது காணிகளை விற்று கொழும்பில் வீடுகளை வாங்கி விட்டனர் இந்த வெளிநாட்டுத் தமிழர்கள். அதற்கு காரணம் ரணில் வடக்கு கிழக்கை புலிகளிடம் கையளித்தால் பின்னர் தமது காணிகள் சொத்துக்கள் புலிகளிடம் பறிபோய்விடும் என்ற அச்சமேயாகும்;. அப்படியானவர்கள் இப்போது வன்னியிலேயே காணிகளைவாங்குகிறார்கள் என்றால், புலிகள் இறுதி மூச்சை இழுக்கிறார்கள் என்று வெளிநாட்டுத் தமிழர்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
எது எவ்வாறாயினும் இம்முறை ஒட்டுமொத்தத்தில் தேசியத் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டமும் அதையொட்டி நிகழும் மாவீரர் நிகழ்வும் அந்தக் காலத்து தேவதாஸ் அல்லது துலாபாரம் போன்ற சோகப் படங்களின் கதைவசனங்கள் போல் இருக்கலாம் என்பதையே எதிர்பார்க்கலாம்.
நிகழ்ச்சியை முழுமையாக பதிவு செய்தமைக்கு நன்றி, மழை காரணமாகவே நான் சொல்லாமல் கொள்ளாமல் ஜூட் விட வேண்டியதாயிற்று.
உங்கள் பதிவு நேரில் இருந்து பார்த்த ஒரு என்னத்தை ஏற்படுத்தி உள்ளது, நன்றிகள்.
மேலும் எனக்கு இந்த தேவர் தேவேந்திர குல வெள்ளாளர் சண்டை பார்த்து பார்த்து கேட்டு கேட்டு புளித்து போன விஷயம். ( கொடியங்குளம், புளியம்பட்டி, கடம்பூர், பாளையம்கோட்டை அரிசி கடை இசக்கி பாண்டியன் கொலை, கராத்தே செலவின் நாடர், தடா ஜெயக்குமார் கைது, சங்கரன்கொயில் முன்னாள் சட்டமன்ற உறப்பினர் கோபலகிருஷ்ணன் தம்பி கை வெட்டு போன்ற சம்பங்களை மிக அருகில் இருந்து பார்த்தால் , கேட்டதால் ) இந்த ஜாதிய அரசியல் சண்டை நிகழ்வு அந்த ஆளவு சுவாரசியம் உள்ளதாக இல்லை. என்ன தென் தமிழ்நாட்டில் நாடார் இனமும் இந்த ஜாதிய சண்டையில் பங்கு எடுக்கும், இங்கு அது மிஸ்ஸிங்.
குப்பன்_யாஹூ
சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை குறித்து:
பலர் நினைப்பதுபோல இது தேவர்-தலித் பிரச்சினை இல்லை.
தனியாக சண்டைபோட சென்று அடிபட்டவர் திருவண்ணாமலையை சேர்ந்த வன்னியர்.
அடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த கிருத்துவர்கள்.
///
கீழ் வெண்மணியில் தலித்துகளை எரித்த கொடுமை நடந்த சமயம் அக்கொடுமை செய்தது ஒரு நாயுடு, பார்ப்பனரல்ல என்பதாலேயே பெரியார் அவர்களே அதை குறித்து சவ சவ என்று அறிக்கை தந்ததை மறந்தீர்களா
///
அந்த நில உரிமையாளன் நாயுடு என்பதால் பெரியார் கண்டிக்கவில்லை என்று சொல்லுகிறீரே, எங்க உக்காந்து யோசிச்சீங்க இத? அய்யா, சவ சவன்னு அறிக்கை விட்டது ஒரு நாயுடுவக் காப்பாத்துறதுக்காக இல்லை, அரும்பாடுபட்டு அமைஞ்ச தி.மு.க ஆட்சிக்கு சிக்கல் வரக்கூடாதேன்னு தான். கைல ஒரு ப்ளாக் இருக்குன்னு கண்டத வாந்தி எடுக்காதிங்க ஐயா....
//அந்த நில உரிமையாளன் நாயுடு என்பதால் பெரியார் கண்டிக்கவில்லை என்று சொல்லுகிறீரே, எங்க உக்காந்து யோசிச்சீங்க இத? அய்யா, சவ சவன்னு அறிக்கை விட்டது ஒரு நாயுடுவக் காப்பாத்துறதுக்காக இல்லை, அரும்பாடுபட்டு அமைஞ்ச தி.மு.க ஆட்சிக்கு சிக்கல் வரக்கூடாதேன்னு தான். கைல ஒரு ப்ளாக் இருக்குன்னு கண்டத வாந்தி எடுக்காதிங்க ஐயா....//
அபாரம் அனானி. முதற்கண் பெயரைச் சொல்ல பயந்து அனானியாக வந்துத்தான் இதைச் சொல்லணும்னு நினைத்த நீங்கள் உங்கள் பெரியாரின் பெயரை நல்லபடியாகவே காப்பாற்றுகிறீர்கள்.
ஆக, பெரியார் சவ சவ அறிக்கை கொடுத்ததை உண்மை என ஒத்து கொள்கிறீர்கள்.
அது என்ன அரும்பாடுபட்டு அமைஞ்ச திமுக ஆட்சி? அவ்வாறு அமைந்ததில் பெரியாரின் பங்கு என்ன? அதற்கான தேர்தலில் பெரியார் யார் பக்கம் நின்றார்? போனால் போகிறது என அண்ணா பின்னால் சேர்த்து கொண்டதால் மீசையில் மண் ஒட்டவில்லை என தி.க. தலைவர் தனது கட்சியின் பிழைப்பு பிரச்சினைக்காக அவர் நீட்டிய கரத்தை கூச்சம் ஏதுமின்றி உடனடியாக பற்றிக் கொண்டார்.
இன்னொரு விஷயம், திமுக ஆட்சியை விட தலித்துகளின் உயிர் அவருக்கு கிள்ளுக்கீரையானதுதானே நிஜம்.
நிலச்சுவான்தார் பார்ப்பனனாக இருந்தால் என்னவெல்லாம் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார் என நினைத்துப் பார்ப்பீர்களா?
என் கைல பிளாக் இருக்கு, தைரியமா என் பெயரைச் சொல்லி வாந்தியோ என்னவோ எடுத்து போகிறேன். அதை அனானியாக வந்த நீங்கள் இந்த இடத்தில் சொல்வது நகைப்புக்குரியதே.
டோண்டு ராகவன்
//Anonymous said...
சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை குறித்து:
பலர் நினைப்பதுபோல இது தேவர்-தலித் பிரச்சினை இல்லை.
தனியாக சண்டைபோட சென்று அடிபட்டவர் திருவண்ணாமலையை சேர்ந்த வன்னியர்.
அடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த கிருத்துவர்கள்.//
ithu ennasaar puthuk kathai
kadsiyil jaaaathiiich sandai mathch sandai enum pokkil selkirathe.
arsu aluvlakab paniyil ida othukkeedu(reservation policy) marrum pathaviyurvuch sulakiyaal ( promotions)oralavukku porulaahara vasathiyaay ullor avar vazhntha girama sakothrarkalaii ( relativies living in their village with poor income)mathippathillai enpathu unmaiyaa?
sattmethai annal ambethkaar kolakikku ithu ethirallavaa
avar nee muneriyathum un sakotharanaiyum kai pidiththu mele kondu varch sonnar allavaa
itharku ungkal pathilenna?
Well Said Dondu Sir. Thiravida kunjukal ippadiththan sappai kattu kattum. poonai kannai moodinaal ulakam irundu viduma enna!
Kuppukutty
http://in.youtube.com/watch?v=JqZlBygiVlg>
dondu sir watch this video. LTTE terror hands in london
லூசுப் பயலுகள் கூடித் தேத்தண்ணி குடிச்சாச்சு. காரில் போயி. ஏதாவது உருப்படியா பேசினீங்களா?
போதததுக்கு சம்மந்தமில்லாம வாற பின்னூட்டத்தை ஏன் பிரசுரிக்கணும்?
இங்கேயுமா? ஆண்டவா...
கண்டிப்பாக அடுத்தவாட்டி கடலில் கால் நனைக்கலாம்.
நன்றி ஐயா
மழையின் காரணமாய் உஙகளுடன் சரியாய் பேச முடியவில்லை.. மீண்டும் சந்திப்போம். டோண்டு சார்
//லூசுப் பயலுகள் கூடித் தேத்தண்ணி குடிச்சாச்சு. காரில் போயி. ஏதாவது உருப்படியா பேசினீங்களா?//
..
உலகின் முதல் மற்றும் கடைசி அறிவாளி சொல்கிறார். கேட்டுகொள்வோ. என்ன கொடுமை சார் இது
கறுப்பு ஒக்டோபர்
என்னை கேட்டால் ஜூலை கலவரத்தைவிட அக்டோபர் இன சுத்திகரிப்பு தான் இலங்கையில் நடந்த பெரிய அட்டூழியம் என்பேன் .
காரணம்
1) ஜூலை இல் தமிழ் மக்கட்கு சிங்களவர் உதவினர். ஆனால் அக்டோபர் இல் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு உதவவில்லை.
2) ஜூலை கலவரத்தை வைத்து தமிழ் மக்கள் பிழைத்து கொண்டார்கள். இல்லாவிட்டால் ஐரோப்பா கனவுகள் சாத்தியப்பட்டிருக்குமா? (அவர்கள்தான் இப்போதும் புலிகளை யுத்தத்துக்கு தூண்டிகொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. இன்று கூட வெளிநாட்டு கனவுகளுடந்தான் சுய காணாமல் போதல்கள் அரங்கேறுகின்றன) .
3)கொழும்பில் தொடர்ந்தேச்சயாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பகுதிகளை விட அதிக சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களை வேரோடு பிடுங்கி எறி ந்திருக்கிறார்கள். இன்று வரை அவல வாழ்கை அவர்களை துரத்துகிறது.
இன்று ஊர்வலம் போகும் தமிழ் நாடு அன்று துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? இது போதாதா முஸ்லிம்கள் வேறாக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்?
முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது அன்று அஷ்ரப் சொன்னது தான். தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்! நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.
நண்பர்களின் கருத்துகட்கு நன்றி!"சிங்கள ராணுவ உதவியோடு அவர்களை வெளியேற்றிவிட்டு மீளச் செல்லலாமே.." ஏன் அதை முஸ்லீம் இனவாதம் என்று பத்திரிகைகளில் தலைப்பிட்டு முஸ்லீம் விரோதத்தை இன்னும் கூர்மை படுத்தவா? மீண்டும் வன்முறைகளையும் இடப்பெயர்வுகளையும் எதிர்கொள்ள பிச்சைக்காரர்களாகவேனும் நிம்மதியாக வாழும் அப்பாவிகளை பகடை காய்களாக்கவா? யாழ்ப்பாண மீள்குடியேற்றத்துக்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதற்கு வெள்ளவத்தையில் நிரம்பி வழியும் தமிழர்களே சமகால சான்று. அத்துடன் மிக அண்மைய முதூர் வெளியேற்றமும், வெளியேற்றத்தை மறைமுகமாக நிர்பந்திதமையும் (குரங்கு பாஞ்சான் உட்பட) யாழ் மீள்குடியேற்றம் இப்போது சாத்தியமானதல்ல என்று கோடிட்டு காட்டுகின்றது. மற்றும் அது தொடர்பான கருத்தாடல்கள் இரு சமூக பிரபலங்களுடன் ஏராளமாய் "எரிமலை"யில் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் முஸ்லிம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேறல் தங்களுக்கு உவப்புக்குரியதில்லை என்று பெரும்பாலான தமிழ் பிரபலங்கள் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். (அவை தொடர்பான வீடியோ காட்சிகள் இப்போதும் என் கணனியில் பாதி இடத்தை பிடித்திருக்கின்றன) எல்லாளன் சங்கிலியன் படைகளின் மிரட்டல்களை அறிந்துகொள்ள அக்கால முஸ்லீம் பத்திரிகைகளை பாருங்கள். எனென்றால் தமிழ் ஊடகங்கள் புலிகளுக்கு கெட்ட பெயர் உண்டாகும் எந்த செய்தியையும் வெளியிடுவதில்லை என்பது நீங்கள் அறியாததொன்றல்ல. (ஏன் சிங்கள இனவாதம் முஸ்லிம்களை தாக்கும் போது கூட இரு குழுக்களுக்கிடையிலான மோதல் என்றே செய்தி வெளியிடுகின்றன!)(முஸ்லீம் சிங்கள பிரச்சினைகள் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட போதெல்லாம் சிங்கள இனவாதிகளை காத்துதவி புரிந்ததெல்லாம் அக்கால தமிழ் தலைமைகள் என்பதும் இன்னும் மறக்கமுடியாத வரலாற்று பாடம். )"விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பேந்தப் பேந்த முழித்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் நான். என்னைப்போலவே அத்தனை தமிழர்களும் இருந்தார்கள்..." யாழ்ப்பாண மக்கள் அறிவு கொழுந்துகள் என்ற நம்பிக்கையில் மரண அடி கொடுத்த வாக்கு மூலம் இது. சாந்தி ஆசைக்காக நான் இங்கு கருத்தாடவில்லை. இரு தசாப்தத்தை நெருங்கிவிட்ட யாழ் முஸ்லிகளின் பிரச்சினையில் இன்னும் தமிழ் மக்களின் பார்வை அன்றிருந்ததை விட பெரிதாக மாறவில்லை என்ற உண்மையின் வலிக்கிறது . அவ்வளவே. இக்கால பகுதியில் எல்லா வெகுஜன ஊடகங்களிலும் சொல்லப்பட்ட முஸ்லிம்களின் நியாயம் தமிழ் மக்கள் காதுகளில் கூட போட்டுக்கொள்ளவில்லை என்று புரிகிறது அல்லவா? விடிய விடிய ராமாயணம்...அத்துடன் அதைவிட பழைய ஜூலை இன்றும் பேசப்படும்போது அக்டோபர் மறக்கப்படும் என்று எதிர் பார்ப்பது எங்ஙனம் இயலும்? விடுதலை இயக்கங்களில் முக்கிய புள்ளிகளாக இருந்த முஸ்லீம் கள் பிற இயக்கத்தவர்களால் மட்டுமல்ல அதே இயக்கத்தவர்களால் கொல்லப்பட்ட உண்மை மறக்கடிக்க பட்டுவிட்டதா? இதேவேளை முஸ்லிம்களின் வலியை புரிந்த எல்லா தமிழர்களுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும். முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது "தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்!" நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்
http://nestdreams.blogspot.com/2008/10/blog-post_30.html
டோண்டு சார்,
அந்த கூட்டத்திற்கு நான் கூட வந்திருந்தேன்...
யாரிடமும் சுய அறிமுகம் செய்துகொள்ள அவகாசம் இல்லாமல் போனதற்கு மழை ஒரு காரணம்...
ஆனால் உங்களை அந்த வட்டமான அமர்வில் வளர்மதியை அவர் பேசியதையும் மேலும் பல தகவல்களையும் பதிவில்எழுத சொன்னதை கேட்டேன்...
தங்களின் இந்த பதிவு மழைக்கு சுக்கு காப்பி குடித்தது போல் இருந்தது....
அன்புடன்,
ஆர்.நாகப்பன்.
பதிவர் சந்திப்பு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!!
சந்திப்பு பற்றி டிச15, மாலை 6மணிக்கு தான் லக்கிலுக் பதிவிலிருந்து அறிந்தேன்.
(வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைத்ததன் பலன் :-) )
டோண்டு சார்,
அடுத்த முறை நிச்சயமா நான் கலந்துப்பேன், அப்ப நம்ம போய் அலைகளில் கால் நனைக்கலாம்
வரும் ஞாயிறு சந்திப்போமா?
@வால்பையன்
தாராளமாக சந்திக்கலாம். ஞாயிறு அன்று தொலை பேசவும். எங்கு சந்திப்பது என்பதை முடிவு செய்யலாம்.
அன்புடன்
டோண்டு ராகவன்
// வால்பையன் said...
வரும் ஞாயிறு சந்திப்போமா?
November 18, 2008 3:23 PM
dondu(#11168674346665545885) said...
@வால்பையன்
தாராளமாக சந்திக்கலாம். ஞாயிறு அன்று தொலை பேசவும். எங்கு சந்திப்பது என்பதை முடிவு செய்யலாம்.
அன்புடன்
டோண்டு ராகவன்
குரு சிஷ்ய சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
குருவுக்கு ஏத்த சிஷ்யன்
say our hats off to tailboy for his openhearted post recently published in his blog
http://valpaiyan.blogspot.com/2008/11/blog-post_14.html
//இருவரின் நலம் விரும்புவன் said.....//
ரொம்ப நன்றி நண்பரே!
Post a Comment