11/22/2008

கலைஞர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை

ஒரு படத்தில் (பெயர் தெரியவில்லை, யாரேனும் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்றி) கவுண்டமணி மற்றும் செந்தில் ஓடும் பஸ்ஸில் இருப்பார்கள். அப்போது கவுண்டமணி அவரை கரம் வைத்து தேடும் ரௌடியிடம் மாட்டிக் கொள்வார். அச்சமயம் பார்த்து போலிசார் சோதனைக்காக அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸில் ஏற அவர்களிடம் செந்தில் கவுண்டமணியை பிக்பாக்கெட் திருடர் என போட்டு கொடுப்பார். முதலில் மயங்கிய கவுண்டமணி, செந்திலின் ஜாடையை புரிந்து கொண்டு தான் பிக் பாக்கெட்காரதான் என ஒத்து கொண்டுவிடுவார். போலீசார் அவரையும் செந்திலையும் பஸ்ஸை விட்டு இறக்கியதில் அப்போதைக்கு கவுண்டமணி ரௌடியிடமிருந்து தப்பிப்பார்.

ஆனால் அந்தோ, அவர் தான் பிக்பாக்கெட் இல்லை எல்லாம் நடிப்புக்குத்தான் என்று கதறினாலும் போலீசார் அவரை முதுகில் நொங்கு நொங்கு என்று அடிப்பார்கள். அடிகளை கைவிரல்களில் எண்ணிய செந்தில் நான்கைந்து அடிகளுக்கு பிறகு போலீசாரிடம் “ சார், இவர் நிஜமான பிக்பாக்கெட் இல்லை, இவரை ஒரு ரௌடி கிட்டேயிருந்து காப்பாற்றத்தான் சும்மா லூலூலாயிக்குத்தான் சொன்னேன்” என்ற உண்மையைக் கூற, போலீசார் அவரையும் கன்னத்தில் அறைவார்கள்.

அந்த நேரம் பார்த்து ஒரு பெரியவர் வந்து போலீசாரிடம் தன்னிடம் வாடகைக்கு எடுக்கப்பட்ட போலீஸ் உடைகளை திரும்பத் தருமாறு கேட்பார். அதிர்ந்து போன கவுண்டமணி “அப்ப நீங்க நிஜ போலீஸ் இல்லையா” என்று அழாக்குறையாகக் கேட்க, அவர்கள் “சும்மா, லூலூலாயிக்காகத்தான் அப்படி நடிச்சோம்” என்று கூறிப் போவார்கள்.

“கல்லூரி மாணவர்களைத் தூண்டிவிட்டது ஜெயலலிதாதான் என்று தான் கூறியது சும்மா லூலூலாயிக்குத்தான் என்று கலைஞர் காமெடி செய்ததுதான் மேலே சொன்ன சீனை எனக்கு நினைவுபடுத்தியது. அவருக்கு என் நன்றி.

இப்படியே கலைஞர் கூறிக்கொண்டு போனால் என்ற கற்பனையில் ஜூனியர் விகடன் இறங்கியுள்ளது இந்த இதழில் (26.11.2008). கலைஞர் இவ்வாறு கூறினாலும் நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்!!!!!!!! நன்றி ஜூனியர் விகடன்!

“தம்பிகள் அமீர், சீமான் ஆகியோரை தமிழக போலீசார் சும்மா தமாஸுக்குத்தான் கைது செய்தார்கள். அந்த அளவுக்கு தமிழக போலீசாருக்கு தமிழ் உணர்வு அற்றுபோய்விடவில்லை”

“காடுவெட்டி குரு ஒரு பண்புமிக்க பேச்சாளர். கழகக் கண்மணிகளை கோபப்படுத்தியதாக நான் சும்மா லூலூலாயிக்குத்தான் சொன்னேன். அதை உண்மையென்று நம்பி போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளி விட்டார்கள்”

“மின்சாரக் கட்டணம் உயர்வு என்று சொல்லி அடுத்த நாளே அதை வாபஸ் பெற்றது, துணைநகரதிட்டத்தை அறிவித்த அதே வேகத்தில் கைவிட்டது, மரக்கானம் மற்றும் கடலூர் அனல் மிந்திட்டங்களை மறந்தது, தமிழக எம்பிக்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்வார்கள் என்று மத்திய அரசை மிரட்டியது... இப்படி விளையாட்டுக்காக பேசி நான் பல சாதனைகளை படைத்திருக்கிறேனே”!

“டி.கே. ரங்கராஜனை திட்டி நான் கவிதை எழுதியதாக சொல்கிறார்கள். தம்பி வைரமுத்துவை கேட்டுப்பாருங்கள். கவிதைக்கு பொய் அழகு. சும்மா கிண்டலுக்காகக்கூட இல்லை, உண்மையிலேயே விளையாட்டுக்காகத்தான் அதை எழுதினேன்”.

கருத்துடன்: வேல்ஸ், ஓவியத்துடன்: முத்து

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: படத்தின் பெயர் “சொக்கத் தங்கம்” என்று தகவல் அளித்த அத்திரிக்கு நன்றி.

52 comments:

அத்திரி said...

ஐயா அந்தப்படம் சொக்கத்தங்கம்.

Anonymous said...

லூலேலாயி எங்கள் இனமான சொத்து அல்லவா! அடைந்தால் திராவிடநாடு... ரூபாய்க்கு 3 படி அரிசி என்று பல லூலேலாயிகளை எடுத்துத்தானே நாங்கள் அரசியல் தொழில் நடத்திக்கொண்டு தமிழகத்தின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக - சாரி, கழகமாக - இருக்கிறோம். அது பொறுக்கவில்லையா உனக்கு! எங்களையா கேலி செய்கிறாய் பா*பதரே! வருகிறது ஆட்டோ, உஷார்!

மூக்கா

Anonymous said...

இந்தப் பதிவிற்கு எதிர் பதிவை நம்ம சிங்கம் தனது அல்லக்கைகள் சங்க வலைப்பூவில் எழுதியுள்ளது. கருணாநிதி 'பெருந்தன்மையுடன்' ஒப்புக்கொண்டாராம். அடப்பாவிகளா, 'உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி பேத்தா' திருட்டுப் பய பயந்து போய் ஒத்துக்கிறதுக்கு பேரு பெருந்தன்மையாடா? என்னங்கடா உங்க பெருந்தன்மை? புல்லரிக்க வைக்குதுடா. (விவேக் பாணியில் படிக்கவும்)

Anonymous said...

உங்களாலோ அல்லது நீங்கள் சொல்லி உங்கள் வீட்டாரே கேட்காததையோ ஊருக்கு உபதேசம் என்ற பெயரில் சொல்லுவீர்களா? (கருணாநிதி & கோவினரின் கடவுள் பக்திக்கும் இந்தக் கேள்விக்கும் சம்பந்தம் உண்டு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல)

Anonymous said...

1.மனைவி 2.துணைவி. 3.______?

Anonymous said...

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மட்டும் சாதிக் கலவரங்கள் அதிகமாக நடக்கிறாதே, ஏன்?

Anonymous said...

காமராசர் முதல்வராக இருந்த போது தானே (சமீபத்தில்) தேர்தலில் சீனிவாசனிடம் தோற்றுப் போனார்? கிழக்குப் பதிப்பக மு.க. புத்தகத்தில் முதல்வராக இருந்தவர் தேர்தலில் தோற்றுப் போனது ஜெ. மட்டும் தான் என்று எழுதியிருக்கிறார்களே?

Anonymous said...

கையாலாகாதவனுக்கு தானே கோபம் அதிகம் வரும்? (இதற்கும் கருணாநிதி அடிக்கடி பார்ப்பனர்கள் மீது கோபப்படுவதற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல)

Anonymous said...

சோ நேரடி அரசியலில் குதித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பாரா?

Anonymous said...

சோவுக்கு கொம்பு முளைத்தால் விகடன் லோகோவைப் போல் தான் இருப்பார். சரியா?

Anonymous said...

பா*பதரே! வருகிறது ஆட்டோ, உஷார்!


ha ! ha ! ha ! ha!

Anonymous said...

ஐ.டி. மோகம் குறைகிறதா?

dondu(#11168674346665545885) said...

//காமராசர் முதல்வராக இருந்த போது தானே (சமீபத்தில்) தேர்தலில் சீனிவாசனிடம் தோற்றுப் போனார்?//
தவறு. 1963-ல் காமராஜ் கட்சிப் பணிகளை ஏற்க முதன் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பக்தவசலம் முதல் மந்திரியானார். ஆக 1967-ல் காமராஜ் தோற்றபோது அவர் முதல் மந்திரியாக இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

R.Gopi said...

Manjal Kavignar (MK) Kettavarnu sollala

Aanaa, nallavaraa irundhaa nalla irundhu irukkumnu solla vandhen

Anonymous said...

வீரப்பன் இருந்திருந்தால் யாருக்கு ரொம்பவே லாபமாக இருந்திருக்கும்?

Anonymous said...

நயந்தாராவைப் பிடிக்குமா, த்ரிஷாவைப் பிடிக்குமா, இலியானாவைப் பிடிக்குமா?

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
//காமராசர் முதல்வராக இருந்த போது தானே (சமீபத்தில்) தேர்தலில் சீனிவாசனிடம் தோற்றுப் போனார்?//
தவறு. 1963-ல் காமராஜ் கட்சிப் பணிகளை ஏற்க முதன் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பக்தவசலம் முதல் மந்திரியானார். ஆக 1967-ல் காமராஜ் தோற்றபோது அவர் முதல் மந்திரியாக இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்


இலவசக் கல்வி மற்றும் இலவச மதிய உணவுத் திட்டம் தந்திட்ட வள்ளல்
காமராஜினால் இன்று பலர் நல்ல நிலையில் உள்ளனர்.

சாதி வித்யாசம் பாராமல் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கண் திறந்த அந்த போற்றுதலுக்குரிய மனித தெய்வத்தை விருதுநகரில் தோற்கடிக்க காரணமாய் இருந்தது மாணவ்ர்கள் என்பது வருத்தமான உண்மை.

இந்தி எதிர்ப்பு போரை சரியானமுறையில் சமாளிக்கத்தெரியாத
காங்கிரஸ் அரசை வீழ்த்த சபதம் கொண்ட மாணவர் சமுதாயம்
இந்தக் கொடும் பாதகத்தை செய்தது.

அன்றய எதிர் கட்சியினர் பெருந்தலைவர் காமராஜ்
மேல் கூறிய பெரிய குற்ற்ச்சாட்டுகள் சில
1.டி.வி.எஸ் சொகுசுக் காரில் (fly mouth)ஏழைப் பங்காளன் போராரு பாருங்கோ
2.வான்கோழி பிரியாணி சாப்பிடுகிறார்
3.அவரது ஜாதிக்கு சலுகை காட்டுகிறார்.


இவைகளையும் இன்றய அரசியல் தலைவர்களின் நிலைமையை பார்த்தால்


1967 -1971 - 1977 -காலகட்டத்தில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பால் மீண்டும் மக்க்ள் செல்வாக்கு கூடியது.ஆனால் அந்த மக்கள் சக்தி எனும் ஆதரவு அலை எம்.ஜி.ஆர் பக்கம் சென்று விட்டதால் அந்த மாமனிதர் மீண்டும் அரியணையில் ஏறாமல் இறைவனடி சேர்ந்தார்.

thenkasi said...

அதிகாலை 04.30 .வங்கக் கடலில் உள்ள டிப்ரசன் கருணைப் பார்வையால் சென்னையில் விட்டு விட்டு மழை.தெருவெங்கும் சிறு சிறு நீரோடைகள்.மேனியை தழுவிச் செல்லும் குளிர் காற்று.

சென்னை நங்க நல்லூர் புகழ் தமிழ்மண பிரபலபதிவரும் ,உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளருள் ஒருவரான பண்பாளர் டோண்டு அவர்களின் வீட்டு முன்னே ஒரு அசாதாரணா பரபரப்பு.

தமிழகத்தில் உள்ள அத்துணை தின/வார/மாத பத்திரிக்கை/சஞ்சிகைகளின் நிருபர்களும்/புகைப்பட காரர்களும்
வழி மேல் விழி வைத்தி காத்திருக்கின்றனர்.
சன்/ஜெயா/ராஜ்/கலைஞர்/மக்கள்/ஜீதமிழ்/விஜய் மற்றும் ஒரு சில லோக்கல் தொலைகாட்சியினரும் ஒளிபரப்பு வேனோடு குழுமியுள்ளனர்.

பொதுமக்களும் அங்காங்கே கூட்டம் கூட்டமாய் தங்களுக்குள் பரபரப்பாய் பேசிக் கொண்டு உள்ளனர்.

விசாரித்து பார்த்ததில் டோண்டு சார்-வால்பையன் சந்திப்பு-அதுவும் அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் நடைபெற உள்ளதால்தான் இப்படி .

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒரு முக்கிய அரசியல் விமர்சக
பத்திரிக்கையாளர் வரலாம் எனவும் சொல்லப்படுவாதாய் மக்கள் பேசிக்கொள்கிறார்களாம்.

அவ்ர்கள் விவாதிக்க இர்ப்பதாய் சொல்லப்படும் விஷயங்களில் சில:

இலங்கை தமிழ்ர் பிரச்சனை,அடுத்த தேர்தல் கூட்டனி,மத நல்லிணக்கம்,சாதி சச்சரவுகளை ஒழித்து பரஸ்பர நல்லுணர்வினை வளர்த்தல்,உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்காவில் அரசியல் மாற்றம்,ஆசியாநாடுகளின் பொருளாதார தேக்க நிலை,நதிநீர் பங்கீடு ,மாநில எல்லைத் தகராறு ,உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாடு,பனவீக்கவிகிதம்
V
V
V
V
V
V
V
V
V
V
v
v
v
v
v
சும்மா லூலூலாயிக்குத்தான்

Anonymous said...

வெள்ளிகிழைமை-க்கு
தென்காசிக்கு குற்றாலம் பக்கம் தானே, குற்றாலத்தில் குளிக்காத தென்காசிக் காரர்கள் இருப்பார்களா என்ன ?
குப்புக் குட்டி

Anonymous said...

**"சமீபத்தில்"என்பதை உங்கள் brand- ஆக வைத்திருகிறிர்கள் சரி ! அது என்ன முரளி மனோகர் உங்கள் மனசாட்சியா ?
++ தென்காசி படத்தில் வருகிற மாடு காமெடிக்கு இணையாக இப்போதைய விவேக் காமெடிகள் இருப்பதில்லையே ஏன் ?
++ஹிந்தி கஜினி பாடல்கள் கேடீர்களா?
++அவுட்லுக்-ல் வெளியான ஹிந்து தீவிரவாதம் கட்டுரை படித்தீர்களா?
**ஊர் சுற்றப பிடிக்குமா ? சமீபத்தில் சுற்றிய ஊர் பற்றிய தகவல், 1978 என்ற சமீபமாக இருவ்தாலும் பரவாயில்லை
++வானரம் ஆயிரத்தில் யார் நிலை ரொம்ப பரிதாபம் ?
++ தி.ஜா.ரா கதைகள் படித்திருக்கிறேர்களா?
++ எக்ஸ்பிரஸ் குருமூர்த்தியின் அலசல்கள் "சோ"அளவுக்கு சரியானதாக இருக்கிறதா?
++ஒருகாலத்தில் வங்காளம் வரிசையாக புரட்சிக்காரர்களையும் சிந்தனவாதிகளையும் தந்தது ( சுவாமி விவேகானந்தர், போஸ், தாகூர், அரவிந்தர் இப்படி...) ஆனால் இபோது ஏன் மம்தா போல ஆட்களைத் தருகிறது, ஏதேனும் manufacturing defect- ஆகிப போச்சா ?
++ சுவாமி விவேகானந்தர் மற்ற துறவிகள் போல ஆன்மிக வழிபாடுகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை (அந்த நிலையையும் கடந்தவர்) என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன ?
++கருப்பு வெள்ளை சபாபதி படம் பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில் தான் சன் டி.வியில் போட்டார்கள்.
++ டி எஸ் பாலையா, டி ஆர் ராமசந்திரனுக்கு இணையாக இப்போது யாரைஸ் சொல்லலாம்.
++ கோவை அன்னபூரனாவும் கெளரிசங்கரும் ஒன்றுதான், சென்னை கடைகளில் ஒரு நேரத்தை போல் ஒரு நேரம் காபியின் சுவை இருக்காது. ஆனால் எங்க அன்னபூரானாவில் எப்போதும் ஒரே சுவை அது தனி தான் போங்க
இவ்வளவு போதும்-நு நினைக்கிறேன் -குப்புக் குட்டி

Madhu Ramanujam said...

என்னத்தை சொல்ல. அவ்வளவு பொருப்பான ஒரு மனிதருக்கு ஓட்டளித்து நாம் முதல்வராக அமர வைத்துள்ளோம். இன்னும் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நம் இந்தியத் திருநாட்டின் தலையில் எழுதியுள்ளதோ. வாழ்க ஜனநாயகம்.

Anonymous said...

விடியலை எதிர்நோக்கி, மரணத்தின் வாயிலில் காத்திருக்கும் வன்னிமக்கள்!

வன்னியூரான்

வன்னியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும், புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இலங்கை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு எந்தப்பாதை வழியாக ஓடுவது என்பதுபற்றி திட்டம்தீட்டுவதிலும் அல்லது எப்பொழுது இலங்கை இராணுவம் இங்கு வந்து தம்மை விடுவிக்கும் என்று எதிபார்த்துக் காத்திருப்பதிலும்தான் நாட்களை ஓட்டிவருகின்றனர். ஏனெனில் அவ்வளவு தூரத்துக்கு புலிகள் எங்களதுவாழ்க்கையை சின்னாபின்னப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அமைதியாக வாழ்ந்த வன்னி மக்களின் வாழ்க்கையில் இடிவிழுந்தது போல, 1995ல் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட புலிகள் வந்து புகுந்தார்கள். அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கை பரிநாசம்தான்.

யாழ்ப்பாணத்து மக்கள் காணியை பூமியை விற்று சுட்டென்றாலும் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிடுவார்கள். மீதம்மிச்சமாக புலி இயக்கத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்களும், களமுனைக்கு போகாமல் புலிகளின் தலைவர்களாகவோ அல்லது புலிகளின் அரசியல் - கலாச்சார வேலைகளில் ஈடுபடுபவர்களாகவோ இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். புலிகளுக்கு வாய்ச்சது மட்டக்களப்பானும் வன்னியானும் தான். அதிலும் மட்டக்களப்பு புலிகள் 2004 ஆண்டில் புத்தியாக கருணா-பிள்ளையான் தலைமையில் விலகிச்சென்று தப்பிக்கொண்டார்கள். மிச்சமாக அகப்பட்டு கொண்டது வன்னிச்சனங்கள்தான். குஞ்சுகுருமான், குடும்பகாரர், கிழடுகள் என ஒருவர் மிச்சமில்லாமல் எல்லோரையும் புலிகள் போர்முனைக்கு கொண்டுசென்று பலியிட்டு வருகிறார்கள். இப்ப இங்கே வன்னியில் எல்லோருடைய வேலையும் காலையில் எழுந்து நிவாரணத்துக்காக சங்கக்கடையிலை கியூவிலை நிற்பதும், பின்னர்போர்களத்திலேயிருந்து பிரேதமாக வருகிறவர்களின் செத்தவீட்டுக்கு செல்வதும்தான். அதனால் தான் இந்த நரக வாழ்க்கையிலிருந்து எப்பொழுது இலங்கை இராணுவம் வந்து காப்பாற்றும் என்று வன்னிச்சனங்கள் நேராத கடவுளையெல்லாம் நேர்ந்து கொண்டு திரியுதுகள்.

இந்த உண்மையை சொல்லும்போது வெளிநாடுகளிலை இருக்கிற எங்கடை தமிழ் ஆட்களுக்கும், தமிழ்நாட்டிலை இருந்து சத்தம் போடுகிற அரசியல் -சினிமாகாரருக்கும் சிலவேளைகளில் நம்ப முடியாமல் இருக்கும். அவர்கள்நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் வன்னிச்சனங்களின் உண்மைநிலை. தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை இங்கே வந்து உண்மை நிலையை பார்க்கச்சொல்லி, மகிந்த ராஜபக்ச அழைத்த நேரம், அவர் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். கருணாநிதி வன்னியை வந்து பார்த்திருந்தார் என்றால், தமிழ்செல்வன் போன்றோருக்கு இரங்கல் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளால் வன்னிச்சனங்கள் படுகின்ற அவலத்தை வைத்து, கண்ணீரை வரவழைக்கிற மாதிரி இன்னொரு ‘பராசக்தி’ பட வசனம் நிச்சயம் எழுதியிருப்பார். புலிகள் ஒருபக்கத்தில் வன்னிச்சனங்களை வைத்து கசக்கி பிழிந்தாலும், இலங்கை இராணுவம் பரந்தனையும் கிளிநொச்சியையும் பிடித்த பின்னர் முல்லைத்தீவை நோக்கி வந்தால் என்னசெய்வது என்ற பயக்களையுடனும்தான் நடமாடுகிறார்கள். புலிகளுடனான இறுதியுத்தத்தில் தாங்களும் அதிகம் பாதிக்கப்படலாமென வன்னிச்சனங்களும் பயந்துகொண்டுதான் இருந்தனர். ஆனால் விசுவமடுவிலிருந்துஒட்டிசுட்டான்வரை பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த பிறகு, வன்னிச்சனங்களுக்கு ஓரளவு நிம்மதி.

அந்த அறிவிப்புக்கு பிறகு எல்லா சனங்களும் இப்ப அந்தப்பகுதிக்குள்ளே வந்து குவியத்தொடங்கிவிட்டுதுகள். ஆனால் முல்லைத்தீவு, பரந்தன், கிளிநொச்சி போன்ற சில இடங்களில் புலிகள் தங்களுடைய பாதுகாப்புக்காக, சனங்களை வெளியேறவிடாமல் புலிகள் மறித்துவைத்திருக்கிறார்கள். அதனால் அந்த இடங்களிலுள்ள புலிகளின் முகாம்களுக்கு விமானப்படை குண்டு போடும்போது, அநியாயமாக எமது மக்களில் சிலர் சாக நேரிடுகின்றது. மக்களை முதலிலேயே பாதுகாப்பான இடங்களுக்கு போகவிட்டிட்டு, புலிகளும் இராணுவமும் மகாபாரதப்போர் மாதிரி நேருக்குநேர் நின்று சண்டைபிடித்து தங்களுடைய வீரத்தைக் காடடியிருக்கலாம். புலிகள் வன்னிமக்களை தமது பாதுகாப்பு கேடயமாக வைத்திருப்பதால், தங்களை வெளியேற விடமாட்டார்கள் என்பது சனங்களுக்கு தெரியும். ஆனால் ஐக்கியநாட்டுச்சபையும் வெளிநாடுகளும் இந்தியாவும்புலிகளை வலியுறுத்தி, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு போகவைப்பார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. தமிழ்நாட்டுக் கட்சிகளாவது முயற்சிக்கும் என்றால் அவர்களும் வன்னி மக்களுக்கு உதவாமல் புலிகளின் பக்கம் நின்று கொண்டார்கள். இப்பொழுது வன்னிச்சனங்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்றில் வன்னியிலிருந்து மெதுவாகக் கழன்று இலங்கை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு ஓடவேண்டும் அல்லது இலங்கை இராணுவம் வந்து அவர்களை விடுவிக்க வேணும். ஆனால் இலங்கை இராணுவம் முன்னேற, முன்னேற புலிகள் மக்களையும் தமது பாதுகாப்புக்கு கொண்டு போகிறார்கள். இப்படியே போனால் இறுதியில் என்ன நடக்கப்போகிறதுஎன்பதுதான் மக்களின் கவலையாக இருக்கிறது.

1995ல் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது, புலிகள் வலிகாமம் மக்களை வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் கொண்டுபோனார்கள். இராணுவம் மிருசுவில் வரை முன்னேறியபோது, வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் தங்கிநின்ற சனங்கள், புலிகளின் தடையையும்மீறி பிய்ச்சுக்கொண்டு, கொடிகாமம் - நெல்லியடி வீதிக்கூடாகயாழ்ப்பாணத்துக்கு மீண்டும் திரும்பி குடியேறிவிட்டார்கள். அவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பிப்போனவர்களை வெருட்டி, ‘துரோகிகளே இருங்கோ, மீண்டும் யாழ்ப்பாணம் வந்து உங்களை கவனிக்கிறோம்’ என புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எச்சரிக்கை கவிதை எழுதினதுதான் மிச்சம். வன்னிக்கு அஞ்ஞாதவாசம் போன புலிகள் போனதுதான். திரும்ப வரவே இல்லை. இனிமேல் திரும்பிவரப்போவதுமில்லை.

1995ல் யாழ்ப்பாணத்து சனம் பிய்ச்சுக்கொண்டு போனதுமாதிரி, வன்னியிலும் இலங்கை இராணுவம் முன்னேறி வரும்போது, இங்குள்ள சனங்களும் பெருமெடுப்பில் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு பரவலாக நிலவுகிறது. ஏனெனில் இராணுவம் கிழக்கே குமுழமுனையிலிருந்தும், மேற்கே புளியங்குளம், மாங்குளம், பரந்தனிலிருந்தும், புலிகளின் கடைசிஇருப்பிடமான முல்லைத்தீவை நோக்கி முன்னேறும்போது, புலிகள் கிழக்குப்பக்க கடல்மார்க்கமாக தாய்லாந்துக்கோ அல்லது ஏதாவது ஆபிரிக்க நாடு ஒன்றுக்கோ தப்பி ஓடுவதைத்தவிர, புலிகளுக்கு வேறு வழியில்லை. அந்தநேரம் வன்னிமக்களுக்கும் இலங்கை இராணுவத்திடம் போவதைத்தவிர வேறுவழியில்லை. இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துப் போவதைப்போல, இப்பொழுதே சில வன்னிமக்கள்களவாக யாழ்ப்பாணம் செல்கிறார்கள். புலிகளுக்கு வேண்டிய மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களை சேர்ந்தவர்களை, புலிகளே வன்னியைவிட்டு வெளியேற அனுமதித்து வருகின்றனர். சில வசதியானவர்களிடம் புலிகளின் சில பொறுப்பாளர்கள் இலட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டும் வன்னியைவிட்டு வெளியேற ‘பாஸ்’ வழங்குகின்றனர்.

ஆனால் வன்னியிலுள்ள சனங்களுக்கு இன்னொரு பயமும் இருக்கின்றது. புலிகள் வன்னியைவிட்டு தப்பியோடுவதற்கு முன்னர், பொதுமக்களை கண்டபடி கொலைசெய்யக்கூடும் என்ற அச்சமும் சிலரிடம் நிலவுகின்றது. ஏனெனில் இப்படியான கொடுரமான இயக்கங்கள், உலகின் பல பாகங்களில் தமது இறுதி அழிவு நேரத்தில், இப்படியான அழிவு வேலைகளை செய்துள்ளார்கள். 1971ல் பங்களாதேசில் (அப்போது அது கிழக்குபாகிஸ்தான்) இந்திய இராணுவம் நுழைந்து தலைநகர் டாக்காவை விடுவித்த போது, அங்கு பாகிஸ்தானுக்காக போரிட்டுக் கொண்டிருந்த ‘ரசாக்கர்கள்’ என்ற குண்டர்படை, வங்கமக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துவிட்டுத்தான் வெளியேறிச்சென்றது. புலிகளும் தமது இறுதிக்கட்டத்தில் வன்னிச்சனங்களை கொன்றுவிட்டு, அதன் பழியை இலங்கை இராணுவத்தின் தலையில் போடக்கூடும் என்ற அச்சம்இங்கு சிலரிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

எனவே புலிகளை அவ்வாறு செய்துவிடாமல் தடுக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமையாகும். குறிப்பாக புலிகளுடன் நெருக்கமாக ஒட்டி உறவாடுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள், புலிகளுக்கு தகுந்த புத்திமதி சொல்லி, புலிகள் எங்களுக்கெதிரான விபரீத நடவடிக்கைகளில் இறங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வன்னி மக்கள் கடந்த 13வருடங்களில் தமது பிள்ளைகள், சொத்து, சுகங்கள் என எல்லாவற்றையும் புலிகளிடம் இழந்துவிட்டார்கள். மிகுதியாக எங்களிடம் இருப்பது உயிர் ஒன்றே. அதையாவது இழந்துவிடாமல் இருக்க உதவுமாறு அனைத்துலகத்திடம் வேண்டிநிற்கின்றோம்.
courtesy: thenee.com

Anonymous said...

'உண்மை' கண்டறியும் குழுன்னா என்னங்க?

Anonymous said...

வீராணம் குழாயில கொள்ளயடிச்சு நாறிடுச்சே. இன்னும் எதுக்காக அதையெல்லாம் அப்புறப் படுத்தாம ரோட்டோரத்திலே போட்டு வெச்சிருக்காங்க?

Anonymous said...

எந்த வெளிநாட்டுக்கு போக ஆசை? ஏன்?

Anonymous said...

இவ்வளவு பெரிய கோயில்களை அந்தக் காலத்திலேயே எப்படி கட்டினார்கள்?

Anonymous said...

பார்க்க நினைத்த்ய் கடைசி வரை பார்க்க முடியாமலேயே போன பிரபலம்?

Anonymous said...

இந்திய தேர்தல் முறை சரியானது தானா?

Anonymous said...

ஜு.வி. - நக்கீரன், விகடன் - குமுதம், சன் டி.வி. - கருணாநிதி டி.வி, ஜெயலலிதா - கருணாநிதி, அத்வானி - சோனியா

எது எது பிடிக்கும். ஏன்? பிடிக்காது என்றால் ஏன்?

Anonymous said...

ஏன்டா பதிவெழுத வந்தோம் என்று யோசித்தது உண்டா>?

Anonymous said...

ஜாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு தினமும் 'பார்ப்பான், பாப்பாத்தி' என்று எதிர்ப்பவர் எல்லோரையும் திட்டும் கருணாநிதியின் செயல்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

AnonyX

Anonymous said...

யாராவது தவறை சுட்டிக் காட்டினால் 'ஜெயலலிதா ஆட்சியில் நீ இந்தக் கேள்வியை கேட்டாயா?' என்று எதிர் கேள்வி கேட்கிறாரே? இவாறு கூறத்தான் இவரை நாற்காலியில் உட்கார வைத்தார்களா?
AnonyX

Anonymous said...

ரத்னா கபே இட்லி பிடிக்குமா, சாம்பார் பிடிக்குமா?

Anonymous said...

கேள்விகளை எடிட் செய்வது ஏன்? ஆட்டோ வரும் என்ற பயமா? 'அனானியாக' கேள்வி கேட்பதற்கு அதான் காரணம்!

Anonymous said...

ஐயர், ஐயங்கார் - ஆறு வித்தியாசம் ப்ளீஸ்.

Anonymous said...

ஜாங்கிரி, ஜிலேபி ரெண்டுக்கு என்ன வித்தியாசம்? ரொம்பப் பேரு ரெண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்கிறார்களே?

Anonymous said...

சமையலில் நீங்கள் எப்படி?உங்கள் கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளிக் கொணரும் ஐடியா ஏதாவது இருக்கிறதா?

Anonymous said...

அந்த ஆளு எவ்வளவு நூறாண்டுகள் ஆனாலும் மாற மாட்டாரு

Anonymous said...

samipaththil koyampaththur kubbuk kuutiyin kidikkiipidi kelvikaL
dondu saarai thinaradikkuthu
polirukke

வால்பையன் said...

கலக்குங்க

Anonymous said...

hicounter :310469.(0600 a.m of 25-11-2008)

It has crossed 10,000 in just 15 days.(ie: from 8-11-2008).
In this rate this time the 4,00,000 hits may be reached within 5 months.( 20,000 hits/month)

Congrats.

Anonymous said...

20,000 hits per month endral 5 monthskku eppadi 400,000 hits varum. Evanda avan un kanakku vaathiyaar?

Anonymous said...

//MuKa said... 20,000 hits per month endral 5 monthskku eppadi 400,000 hits varum. Evanda avan un kanakku vaathiyaar?
//

இந்த ஏரியாவுக்கு நீ புதுசா?

Anonymous said...

டோண்டு சார்,

அது எப்படி நீங்க சீரியஸான பதிவு போடும் போது மட்டும் நிறைய சப்பை பின்ணுட்டங்கள் வருகின்றன?

Anonymous said...

//Anonymous said...
hicounter :310469.(0600 a.m of 25-11-2008)

It has crossed 10,000 in just 15 days.(ie: from 8-11-2008).
In this rate this time the 4,00,000 hits may be reached within 5 months.( 20,000 hits/month)

Congrats.

November 25, 2008 6:04 AM


MuKa said...
20,000 hits per month endral 5 monthskku eppadi 400,000 hits varum. Evanda avan un kanakku vaathiyaar?

thaanai thalaivare


deatailed calculation sheet:

hicounter :310469

20,000 * 5 = 1,00,000

310469 + 1,00,000 = 4,10,469.

kutiti paarungka
muuuuuna kaaaaaaaaaaaana avrkale


kadisiyile
ithaiyum

சும்மா, லூலூலாயிக்காகத்தான்

appdinnu
selliruveenkala
gnanasooriyane

Anonymous said...

//Anonymous said...
//MuKa said... 20,000 hits per month endral 5 monthskku eppadi 400,000 hits varum. Evanda avan un kanakku vaathiyaar?
//

இந்த ஏரியாவுக்கு நீ புதுசா?


சார் அவர் பேரைப் பார்த்தீங்களா?

Anonymous said...

பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது -blogger vinavuin intha kurrassaatti patri ungal karuththu yenna dondu saar?

ரமணா said...

சந்தைப் பொருளாதார பிதாமகரான அமெரிக்கா வீட்டுக் கடன்,கடன் அட்டை,முறையற்ற பங்கு வர்த்தகம்
ஆகிய காரணிகளாலும் பேராசையாலும் பெரும் நஷ்டத்தில் முழி பிதுங்கும் பெரிய வங்கிகளை காப்பாற்றி கரை சேர்க்க மக்களின் வரிப் பணத்தை வாரி இறைக்கப் படுவது,

அ)இந்தியாவில் தேசியமயமாக்கப் பட்ட வங்கி விசயம் போலா?
ஆ)700-800 பில்லியன் டாலர் பண உதவிக்கும் பிறகும் நிலமை சரியானதாய் தெரியவில்லையே? ஏன்?
இ)மூறை கேடு செய் நஷ்டம் ஏற்பட்டால் அரசு காப்பாற்றும் என்ற எண்ணம் வந்துவிடாதா?
ஈ)தனியார் நிறுவனங்களில் செலவீனக் கட்டுப்பாடுகள்,சம்பள வெட்டு,ஆட்க்குறைப்பு,உற்பத்தி கூறைப்பு என நடவடிக்கைகள் தொடங்கிய பிறகும் அரசின் செல்லக் குழந்தைகளாம் பொதுத் துறை நிறுவன
பணியாளர்களுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வு.தேவையா?
உ) கச்சா எண்ணெய் விலை 147 லிருந்து 48 டாலருக்கு வந்த பிறகும் பெட்ரோல் விலை குறைப்பு பற்றி சாக்கு போக்கு சொல்லுவது?அடுக்குமா?
ஊ)தொலை தொடர்பு அமைச்சர் சொல்வது போல் செல்பேசி கட்டணங்கள் 20-40 பைசா என குறையுமானல் நல்லது தானே? பின் ஏன் அலைவரிசை ஏல விற்பனைபற்றி விவாதம்?

Sethu Raman said...

for Friday -- after the Mumbai terrorists attack, resulting in many deaths including ATS cops, should Shivraj Patil continue in office?

Anonymous said...

பார்பனர்களைப் பற்றியும், இந்துத் தீவிர வாதிகளைப் பற்றியும் எழுதிவரும் தமிழ் ஓவியா மும்பை தீவிர வாதத் தாக்குதலைப் பற்றி எழுதாதது ஏன்?

Anonymous said...

பார்ப்பனர்கள் சொட்டு நீலம் போடாமல், பொட்டி போடாமல் வேஷ்டி கட்டுவது எதனால்?

Anonymous said...

ஐயங்கார் ஆத்து புளியோதரை, ஐயர் ஆத்து மாவடு இவை மட்டும் சுவைமிகுந்திருப்பது ஏன்? தயாரிப்பின் ரகசியம் என்ன?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது