9/30/2008

முத்துசாமி தீட்சிதர், அசோகமித்திரன் மற்றும் சிச்சுவேஷன் பாடல்கள்

தற்சமயம் நண்பர் இரா. முருகனால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை படித்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்பதிவு அப்புத்தகத்தின் மதிப்புரை அல்ல. அது பற்றி பிறகு எழுதுவேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பத்தி, அது கிளறி விட்ட எனது நினைவுகள் ஆகியவைதான் இப்பதிவு. அப்பத்தியைப் பார்ப்போமா?

"என்னளவிலே சாகித்யம்னா கவிதை... சங்கீதம்னா இசை... அம்புட்டுத்தான்... முத்துசாமி தீட்சிதர் கிருதி எல்லாம் அவசரத்துக்கு பிடிச்ச கொழுக்கட்டை.ஏதாவது ஊருக்குப் போக வேண்டியது. அங்கே நிச்சயம் கோவில் இருக்கும். உடனே பாடு. இந்த ஊர்... இந்த திசையில் இருக்கு... அம்பாள் பெயர் அது. இத்தனை கை... இந்தக் கையிலே இந்த ஆயுதம். இந்தப் பூ... இந்த நிற உடுப்பு... இந்த ராட்சஸனை வதம் பண்ணினாள். இவளைப் பூஜித்தால் இந்த தோஷம் போகும். இப்படி அடுக்கி குருகுஹான்னு சாப்பா வச்சு முடிச்சுட்டு அடுத்த ஊருக்கு கிளம்பிடுவார்."

அதாவது அவரது கிருதிகளின் ஒரு மேக்ரோ கண்ணோட்டம்தான் அது. என்ன, ஒரே ஒரு விஷயம் விட்டு விட்டார். எல்லா கிருதிகளுக்கும் அவரே ராகம் போட்டிருப்பார், அந்த ராகத்தின் பெயரும் கிருதியில் வந்து விடும். அப்படித்தான் "மாயே" என ஆரம்பிக்கும் கிருதி தரங்கிணி ராகம் என தெரிந்து கொள்ளலாம். மற்றப்படி இதை விட சுருக்கமாக யாரும் எழுத இயலாது. இதைப் போலவே ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களுக்கும் இம்முறையிலேயே பாட்டு போட்டிருப்பார்களோ? உதாரணத்துக்கு திருமங்கை ஆழ்வார் திருவல்லிக்கேணி வந்த சமயம் கோவில் தல புராணத்தை அறிந்து பாடல்கள் இயற்றியிருப்பார் என கொள்ளலாமோ?

மேலே சொன்ன பத்தியை எனது மைத்துனியிடம் படித்து காட்டியபோது, சென்னை தொலைக்காட்சியில் தயாரிப்பளராக பணி புரியும் அவர் தீட்சிதர் பற்றி மேலும் கூறினார். அவர் சென்னையில்தான் வாசம் செய்தாராம், பத்தொன்பதாம் நூற்றாண்டில். வெள்ளையர்களுடன் ஏற்பட்ட பழக்கம் ஆங்கில இசையின் தாக்கமும் அவருக்கு ஏற்பட்டதாம். அவர் போட்ட இங்கிலீஷ் நோட்ஸ்களைத்தான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் வாசிக்க, வெள்ளையர்கள் நடனம் ஆடுவதாக காட்சி அப்படத்தில் அமைத்திருப்பார்கள். கூர்ந்து கவனித்தால் சி.ஐ.டி. சகுந்தலா குரூப் டான்சர்களில் ஒருவராக வந்திருப்பதை பார்க்கலாம். அப்பாடல் கீழே.



சரி, அதை இப்போதைக்கு விடுங்கள். முத்துசாமி தீட்சிதர் பற்றியும் இப்பதிவு இல்லை. "பின்னே எதை பற்றி எழுத நினைத்துள்ளாய் என்பதை சொல்லித் தொலை" என சலிப்புடன் கூறுவது முரளி மனோஹர். சொல்லாமலா போகிறேன், சொல்வேன்.

அதாவது சிச்சுவேஷனுக்கு தகுந்து பாடல்கள் இயற்றுவது என்பதுதான். இயக்குனர் பாடலாசிரியருக்கு சிச்சுவேஷனைக் கூற கவிஞரும் விறுவிறுவென வரிகளை எழுதித் தர, இது சரியில்லை எனக்கூற உடனேயே வேறு சில வரிகளை எழுதித் தர என தமாஷாக பொழுது போகும். சில சமயங்களில் வரிகள் ரொம்ப யதார்த்தமாக தாங்களே வந்து புகும். உதாரணத்துக்கு சமீபத்தில் 1970-ல் வந்த ஆன் மிலோ சஜ்னா என்னும் படத்தில், மியூசிக் டைரக்டர் கவிஞரிடம் “ஓக்கே, இப்போது செல்கிறேன்” எனக் கூற, அவர் பதிலுக்கு “பிறகு எப்போது சந்திக்கலாம்” என யதார்த்தமாகக் கேட்க அதற்கு பின்னால் வந்த வார்த்தை பரிமாற்றங்களே அந்த சிச்சுவேஷனுக்கு பாடலாக வந்தது என்பதை அக்கால ரேடியோ பேட்டி ஒன்றில் கேட்டிருக்கிறேன். அதுதான் அச்சா தோ ஹம் சல்தே ஹைன் என்னும் பாடல். ராஜேஷ் கன்னாவும் ஆஷா பரேக்கும் விடை கூறி பிரியும் காட்சியில் சேர்த்தார்கள். அப்பாடலில் வந்த வரிகள் தானாகவே வந்து விழுந்தனவாம். அப்பாடலையும் கீழே பார்த்து விடுங்களேன்.



அதே சமயம் சில பாடல் சிச்சுவேஷன்கள் பலமடங்குக்கு வேலை வாங்கும். ஜெமினி கதை இலாக்காவில் வாசனுக்கு வலதுகையாக செயல்பட்டவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். தில்லானா மோகனாம்பாள் கதையை அவர்தான் விகடனில் தொடர் கதையாக எழுதியவர். அவரைப் பற்றி அசோக மித்திரன் அவர்கள் ஒரு இடத்தில் இப்படி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

வாசன் ஒரு சிச்சுவேஷனை விவரிக்கிறார். அதாகப்பட்டது ஒரு எலி ஒன்று புலியை கொன்று விட்டதாம். ஆகவே புலிக்குட்டிகள் அனாதைகளாகப் போக அந்த எலியே அவற்றை எடுத்து வளர்த்ததாம். இந்த சிச்சுவேஷனை கூறி, அந்த எலி அப்புலிக் குட்டிகளை எவ்வாறு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் என கேட்க, கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் நான்கு வெர்ஷன்களில் பாடல் தருவாராம்.

நிஜமாகவே சினிமாவுக்கு பாட்டு எழுதறதுங்கிறது கஷ்டம்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/27/2008

"அமெரிக்க காங்கிரஸ் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தரவேண்டும்", என்று கூறுவது யார்?

அமெரிக்க காங்கிரஸ் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தரவேண்டும் என்று கூறுவது ஜெஃப் இம்மெல்ட், General Electric Co.-வின் தலைமை அதிகாரி. அவர் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போமா? அது பற்றிய எனது ஆங்கில பதிவிலிருந்து இங்கு மொழி பெயர்க்கிறேன். அது சாய்வெழுத்துக்களில் உள்ளது. இதில் நான் என்று வருவது அவர்தான். ஓவர் டு ஜெஃப் இம்மெல்ட்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு முயற்சிக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் அமெரிக்க காங்கிரஸ் பல ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும் நிலையில் உள்ளது. அத்துடன் சுற்றுப்புற சூழலை பாழாக்காத தொழில் நுட்பம் மூலம் மின்சக்தியையும் உருவாக்க்கி இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் காரணமாக இருக்கலாம். மேலும், ஒரு முக்கிய ஜனநாயக நாட்டுடன் அமெரிக்காவின் நட்பையும் பலப்படுத்தலாம்.

இப்போது சந்தை மற்றும் பொருளாதாரங்களின் நிலையற்ற தன்மை தாண்டவமாடும் இந்த நிலையில் அவற்றை எதிர்கொள்ள இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஆகவே காங்கிரஸ் காலம் கடத்தாது ஒப்பந்தத்துக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்தியாவின் அதிகரித்து வரும் மின்சக்தியின் தேவைக்கான ஏற்பாடுகளை செய்வது தற்சமயம் மிக முக்கியம். மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆகவே அதன் மின் தேவைகள் மிகவும் பெரிய அளவில் அதிகரிக்கும். இதை சரியான முறையில் கையாளாவிடில் எண்ணெய், கரி ஆகிய வளங்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு எண்ணெய் விலை உயர்வு, உலகலஇல் வெப்பமாதல் ஆகிய விளைவுகள் ஏற்படும்.

இந்தியாவும் சரி சர்வதேச அணுசக்தி அளிப்பவர்களும் (NSG) சரி, இதை நன்கு உணர்ந்துள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் NSG சுமார் 34 ஆண்டுகளாக இந்தியாவுடன் அணுசக்தி செய்வதற்கு விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. அதன் மூலம் உலகில் உள்ள பல நாடுகளிடமிருந்து இந்தியா அணுசக்தி பெற வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவை பொருத்தவரை அதனுடைய காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் இந்த தடை நீக்கம் பொருளற்றது. அது கிடைக்காத பட்சத்தில் இந்தியா மற்றவரிடமிருந்து அணுசக்தி சம்பந்தமாக உதவி பெறுவதை ஓரமாக அமர்ந்து வாயில் விரலை வைத்து கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர அமெரிக்கா வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.

அணு உலை கட்டுமானங்கள்

இந்த ஒப்பந்தம் அமெரிக்க இந்திய உறவுக்கு நல்லது. உலகளவில் மின் உற்பத்தி, அமெரிக்காவில் உருவாகும் வேலை வாய்ப்புகள் ஆகியவையும் இதனால் ஏற்றம் பெறும். பல ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்புடைய அணு உலை தொழில் நுட்பம் வழங்கப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 அணு உலைகள் சொந்தமாகவோ அயல் நாட்டு உதவியாலோ இந்தியாவில் கட்டப்பட உள்ளன.

இந்த தொழில்நுட்பத்தை அளிக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி என்னும் முறையில் நான் இந்தியாவின் எதிர்காலத்தை உறுதி செய்யும் கட்டுமானங்களுக்கு தேவையான ஆள்பலத்தை உண்டாக்க விரும்புவேன். அம்மாதிரி செய்ய விடாது அமெரிக்க கம்பெனிகளை தடுப்பது புத்திசாலித்தனம் இல்லை.

இந்த ஒப்பந்தத்துக்கு காங்கிரஸ் தராவிடில் மேலே சொன்னதுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக அமெரிக்க இந்திய வணிகத்தின் வீச்சை விரிவுபடுத்த இயலாது போகும்.

சோபிக்காத வணிகம்

பல ஆண்டுகளாக அமெரிக்க இந்திய வணிகம் ஏனோதானோ என்று இருந்து வந்துளது. 2000-ல் அதன் அளவு சுமார் 14 billion டாலர்கள். ஐயர்லாந்து, வெனெஜுலா ஆகிய சிறிய நாடுகளுடன் இதை விட அதிகம் இருந்தது. அதன் பிறகு அமெரிக்க இந்திய அரசுகளின் முயற்சியால் வணிக அளவு மும்மடங்காயிற்று. ஆனால் இன்னமும் இது உலகின் மிக அதிக பொருளாதார துடிப்புடைய அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிலையை நோக்குகையில் மிகவும் குறைவுதான்.

அணுசக்தி மூலம் இந்தியாவின் மின்சாரம் மற்றும் பல பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். ஆகவே இந்த வணிக ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட தொழில் பிரிவுக்கு அப்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மூலம் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையில் பொருளாதார மற்றும் ராஜரீக உறவுகள் பலப்படும். அதே சமயம் இதை ஏற்காவிட்டால் இந்தியாவில் அமெரிக்காவின் இந்த முயற்சிகளால் உருவாகிய நல்லெண்ணம் பாதிக்கப்படும்.

அமெரிக்க அரசு மற்றும் காங்கிரஸ் இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளது பாராட்டத்தக்கதே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் காங்கிரஸ்தான் இந்த விஷயத்தில் இந்தியாவுடனான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பெரிய ஆதரவை தந்தது என்பதை இங்கு நாம் மறக்கலாகாது. இப்போது காங்கிரஸ் மேலே செயல்பட்டு சீக்கிரமே ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிலையில் உள்ளது. இந்த அபூர்வமான சந்தர்ப்பத்தை அது இழக்கலாகாது.


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். சாதுர்யமாக செயல்பட்டு NSG-யின் ஒப்புதலை பெற்றதற்கு பிரதமருக்கு பாராட்டுகள். இப்போது நிலைமை என்னவென்றால் காங்கிரஸ் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் இந்தியா மற்ற அணுசக்தி நாடுகளை அணுகுவதில் எந்தத் தடையுமில்லை. இப்போதைக்கு இதற்கு ஒப்புதல் அளிப்பதே அமெரிக்க நலனுக்கு உகந்தது என்ற நிலை வந்துள்ளது. அப்போதுதான் அது இந்தியாவின் இந்த செயல்பாட்டில் அதிக அளவில் ஈடுபட்டு லாபம் ஈட்ட இயலும் என்றாகிவிட்டது. செயல்பட வேண்டியது அதன் முறை.

எது எப்படியோ நாம் தற்போது இந்தியாவை பற்றி கவலைப்படுவோம். அமெரிக்கா ஆதரித்தால் அதற்கு நல்லது. இல்லாவிடில் மற்ற நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவதை அது வேடிக்கை பார்க்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/26/2008

டோண்டு பதில்கள் 26.09.2008

வால்பையன்:
1. சுவாரசியமான கேள்வி கேட்க தகுதிகள் வேண்டுமா?
பதில்: கண்டிப்பாக வேண்டும். பல விஷயங்கள் அறிந்திருக்க வேண்டும். யாரை கேள்வி கேட்கிறோமோ அவர்தம் நிறை குறைகளையும் அறிய வேண்டும். அவர்களது சக்தியையும் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் மொழிபெயர்ப்பு தொழிலை பற்றிக் கேட்டால் பதில் சுவாரசியமாக தர இயலும். என்னைப் போய் ஜாவா ப்ரொக்ராம்மிங் பற்றி கேட்டால் என்ன கிடைக்கும்? சற்றே திருதிருவென முழிப்பேனாக இருக்கும். பொதுவான விஷயங்களை பற்றி கேட்டால் எனக்கு தெரிந்ததை கூறுவேன். தெரியாததை புதிதாக கற்றும் கூறலாம்.

2. //அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அம்சமான பிகரைப் பார்க்கலாம்.// உங்கள் வயது எட்டி பார்க்கிறது, அந்த கிழவி உங்களுக்கு பிகரா?
பதில்: 44 வயதெல்லாம் ஒரு வயதா? உடம்பை என்ன ட்ரிம்மாக வைத்து கொண்டிருக்கிறார் அவர் என்பதைப் பாருங்கள். அவரைப் போய் கிழவி என்று கூறுவது அநீதி. 62 வயதாவ்தில் ஒரு சௌகரியம் இதுதான். 44-ம், 34-ம், 24-ம் எல்லாமே ஃபிகர்கள்தான். நல்ல wide சாய்ஸ் இல்லையா?

3. பிரவுசரில் உலாவும் போது பாப்அப்பாக பிட்டு பட சைட் வந்தால் பார்பீர்களா?
இல்லை க்ளோஸ் பண்ணி விடுவீர்களா? (நீங்க தான் எது வேண்டுமானாலும் கேக்கலாம்னு சொல்லிருக்கிங்க)

பதில்: பிட்டு பட சைட்டில் ஒரு அபாயம் உண்டு. அதுதான் வைரஸ்களுக்கான முக்கிய இருப்பிடம். அப்படி இல்லை என்னும் பிட்டு பட சைட்டுகளை பார்ப்பதில் என்ன ஆட்சேபணை? ஆனால் அதை எப்படி நிச்சயமாக தெரிந்து கொள்வது என்பதுதான் 64000 டாலருக்கான கேள்வி.

4. என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: தேவன் அவர்கள் எழுதிய சி.ஐ.டி. சந்துருவை படித்து கொண்டிருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்துக்கு சாரு நிவேதிதா மீட்டிங்கிற்கு போன போது வாங்கியது. கடைசி அத்தியாயம் மிஸ்ஸிங். பைண்டிங்கில் கோட்டை விட்டு விட்டார்கள் என நினைக்கிறேன். பத்ரி அவர்களுக்கு ஃபோன் செய்தேன். அவரும் நல்ல பிரதி தருவதாக கூறினார். இன்று (வியாழன்) எனக்கு மெனக்கெட்டு ஃபோன் செய்து வந்து வேறு பிரதி வாங்கி கொள்ளும்படி அன்புடன் கூறினார். நானும் சென்று மாற்றிக் கொண்டு வந்தேன். நான் திருப்பியளித்த பிரதியை உடனேயே பிழையானது என கட்டம் கட்டி தனியாக வைத்து விட்டார்கள். போன இடத்தில் இரா. முருகன் சிறுகதைகள் தொகுப்பையும் வாங்கினேன். அடுத்தது அதைத்தான் படிக்க வேண்டும். பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு மறுபடியும் புத்தகம் படிக்கும் வழக்கம் வர ஆரம்பித்துள்ளது. (மற்றப்படி போன இடத்தில் எழுத்தாளர் லா.சா. ராமாமிர்தம் அவர்களது புதல்வரை சந்தித்தது கூடுதல் போனஸ்.

5. இந்திய வங்கிகள் திவாலாகும் வாய்ப்புள்ளதா?
பதில்: அப்படி எல்லாம் ஆகாது என்றுதான் நினைக்கிறேன். நம்மூர் வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள ரொக்கம்:கையிருப்பு விகிதம் மிக அதிகம். ரூபாயை அன்னியச் செலாவணியாக மாற்றுவதில் இருக்கும் கட்டுப்பாடுகளால் நமது கரென்சிகளுக்கு அவ்வளவாக பாதிப்பு இருக்காது என்றுதான் எண்ணுகிறேன். இது பற்றி பொருளாதார நிபுணர்கள் இன்னும் விஸ்தாரமாக கூறுவார்கள். நான் பொருளாதார ஆர்வலன் மட்டுமே.

6. உங்கள் ஆசை அமெரிக்கா பொருளாதாரத்தில் மண்ணை கவ்வுகிறதே! உங்கள் கருத்து?
பதில்: அமெரிக்கா உலகுக்கே சுதந்திர பொருளாதாரம் கற்று கொடுத்தது. அதுவே தனது சொந்த பாடங்களை மறந்துதான் வினை. யாராய் இருந்தால் என்ன, சொதப்பினால் சங்குதான். வரவு எட்டணா, செலவு பத்ததணா, அதிகம் ரெண்டணா என்று இருந்தால் கடைசியில் துந்தணா என்று அக்காலத்திலேயே கூறிவிட்டனர். அமெரிக்கா செய்த முக்கியத் தவறே சேமிப்பிற்கு மிக மிஞ்சிய அளவில் செலவு செய்ததேயாகும். கிரெடிட் கார்டுகளால் திவாலானது பற்றி அறுபதுகளிலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டன. சுயக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். கடனை திருப்பித் தரும் சக்தி இல்லாதவர்களுக்கெல்லாம் நம்மூரில் செய்வது போலவே துரத்தி துரத்தி கடன் தரப்பட்டது. அமெரிக்க அரசே பொறுப்பற்று கடன் வாங்கியது. திவாலான பாங்குகளை அரசுமயமாக்கி இந்தியாவின் சோஷலிச அரசு அறுபதுகளில் செய்த தவற்றையே அதுவும் செய்கிறது என்பதை பார்க்கும்போது திகைப்பாகவே உள்ளது. எப்படி மீண்டு வருவார்கள் என்பதை கவலையுடன் நோக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் வெற்றி பெறாவிட்டால் இந்தியா உட்பட மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் என அஞ்சுகிறேன்.

7. நீண்ட கால முதலீட்டிற்கு நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்?
பதில்: ஒரு சொந்த வீடு இருப்பது மிக அவசியம். அதை குறி வைத்து சேமிப்பது நல்லது. பிறகு வீட்டை வாங்குவது அல்லது கட்டுவது என்பது நீண்ட கால முதலீட்டில் மிக முக்கியம். அடுத்த முன்னுரிமை கையில் தேவையான பணம் திரட்டும் முறையில் சேமிப்பு முதலீடு செய்யப்பட வேண்டும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை பலர் லாபகரமானதில்லை என ஒதுக்கினாலும் இந்த விஷயத்தில் அவை உபயோகமானவை என்பது எனது கருத்து. பிறகு தங்கம் வாங்கலாம். எல்லாம் உங்கள் சேமிப்புத் திறனை அடிப்படையாக கொண்டவை. பிறகு வருவன கம்பெனி பங்கு பத்திரங்கள். அதற்கெல்லாம் மிகுந்த அறிவு தேவைப்படும். எனக்கு அது இல்லை, ஆகவே நான் அவற்றின் பக்கமே போகவில்லை.
சேமிப்பை பற்றி பேசும்போது நான் வேறு தருணத்தில் எழுதிய வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.
எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.
இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.


ராஜா:
1. ஹிந்தி படம் "ஒரு புதன்கிழமை" A Wednesday பார்த்து விட்டீர்களா? பட இறுதியில் நஸீருத்தீன் ஷா பேசும் சொற்பொழிவு எப்படி?
இல்லை. இன்னும் பார்க்கவில்லை. அனுபம் கேரும் நஸ்ருதீன்ஷாவும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் என கேள்விப்பட்டேன். கச்சிதமாக ஒன்றரை மணி நேரத்தில் முடிவடையும் படம் என்று வேறு கூறப்படுகிறது. வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் பார்க்கிறேன். (அமிதாப் பச்சன் என பிழையாக எழுதியிருந்ததை திருத்திய அனானிக்கு நன்றி)

Arun as Butterfly:
1.இந்திராவின் எமர்ஜென்சி காலம் தொடர்பாக பல்வேறு செய்திகள். எம்ர்ஜென்சி காலம் தொடர்பாக உங்களின் கருத்து என்ன? (விரிவாக தனி பதிவாக சொன்னால் மிக்க நலம்) :).
பதில்: நீங்கள் விரும்பியபடியே பதிவு ஏற்கனவேயே போட்டுள்ளேனே. அதை இங்கேயே மறுபடியும் தருவேன்.
ஜூன் 12, வருடம் 1975. இந்திரா காந்தி தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து அவருடன் போட்டியிட்ட ராஜ் நாராயண் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். அதன் தீர்ப்பு வந்து நாட்டையே தலைகீழாக்கியது. வழக்கை விசாரித்த நீதியரசர் சின்ஹா அவர்கள் இந்திரா காந்தி பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்து அவர் வெற்றி செல்லாது என்று அறிவித்தார். அது மட்டுமின்றி அவர் ஆறு வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று வேறு தீர்ப்பு கொடுத்து வைத்து விட்டார்.
இந்திரா காந்தி இந்தத் தீர்ப்பை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. ஏன், அவருக்கு எதிராக கேஸ் போட்ட ராஜ் நாராயணனே எதிர்ப்பார்க்கவில்லை. அடுத்த நாள் நாடே திகைத்து போனது. தீர்ப்பு நடைமுறைக்கு வர நீதிபதி சில நாட்கள் அவகாசம் அளித்தார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிர் வினையாய் பல அடாவடி காரியங்களை இந்திரா காந்தியும் அவர் ஜால்ராக்களும் நிகழ்த்தினர். பல கூலிப்படைகள் பணம் கொடுத்து லாரிகளில் வரவழைக்கப்பட்டு இந்திரா காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பச் செய்யப்பட்டனர்.
அச்சமயம் விடுமுறைக் கால நீதிபதியாக இருந்த கிருஷ்ண ஐயர் அவர்களிடம் இந்திரா காந்தியின் மேல் முறையீடு வந்தது. அவர் அலஹாபாத் தீர்ப்பை சில ஷரத்துகளின் அடிப்படையில் ஜூன் 24-ஆம் தேதி நிறுத்தி வைத்தார். அதன்படி இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் ஆனால் சபையில் ஓட்டெடுப்புகளில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது. இது காரியத்துக்காகாது என்று இந்திரா காந்தி செயல்பட்டு June 25 அன்று அவசர நிலை பிரகடனம் செய்தார்.
இந்திரா காந்தியின் நிலையை பலப்படுத்த தேர்தல் விதிகள் மாற்றப்பட்டன. அரசியல் நிர்ணயச் சட்டம் 39-வது முறையாக திருத்தப்பட்டது. அதில் பிரதம மந்திரி மற்றும் சபாநாயகரின் தேர்தல் வழக்குகளுக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டன. அதாவது அந்த வழக்குகள் நடத்துவது கடினமாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்திராவின் தேர்தல் வழக்கும் இதன் கீழ் சேர்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சுப்ரீம் கோர்ட் இந்த திருத்தத்தை சட்ட விரோதம் என்று தள்ளுபடி செய்தது.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதால் அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 தொங்கலில் வைக்கப்பட்டன. பல மாநிலங்களில் பலர் காவலில் வைக்கப்பட, பல ஆள் கொணர்வு கோரிக்கைகள் பல உயர் நீதி மன்றங்களுக்கு முன்னால் வந்தன. அங்கெல்லாம் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வர, விஷயம் உச்ச நீதி மன்றத்திற்கு முன்னால் வந்தது. அந்த நீதி மன்றமோ 4:1 விகிதத்தில் அவசர நிலையின் கீழ் சட்டப் பிரிவு 21 செயல்படாததால் அடிப்படை உரிமைகள் எதுவும் தற்சமயம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. மனித உரிமை செல்லாக்காசாகியது. இதை எதிர்த்து மைனாரிடி தீர்ப்பை அளித்த நீதிபதி கன்னா அவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
இந்தப் பெரும்பான்மை தீர்ப்பு நாட்டிலும் சட்ட வல்லுனர்களிடத்திலும் பெரிய நிராசையை உண்டாக்கியது. 1976-ல் அ.நி.ச. வின் 42-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது பல அடாவடி காரியங்களுக்கு வழி வகுத்தது.
நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் நிலையில் மட்டும் வந்திருக்க வேண்டிய அவசர நிலை சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இந்திரா காந்தியின் நலனைக் காக்கவே கொண்டுவரப்பட்டது. நாடு முழுக்க உறக்கத்தில் இருந்த நடுநிசியில் இது நுழைக்கப்பட்டது. அடுத்த 19 மாதங்களுக்கு நாடு இருட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. தனிமனித உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர்.
அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.
இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.
அவசர நிலை கொடுமைகள் நல்ல வேளையாக தெற்கில் அவ்வளவாக இல்லை. ஆனால் வட இந்திய மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு மானாவாரியாக அகப்பட்டவர்களையெல்லாம் உட்படுத்தினர். கைதான பலரும் தடயம் இன்றி மறைந்தனர். இந்திராதான் இந்தியா என்று பரூவா என்னும் கோமாளி திருவாய் மலர்ந்தருளினார். தேர்தல்களே நாட்டுக்குத் தேவையில்லை, அன்னிய மொழிகளை படிப்பது தேசவிரோதம் என்றெல்லாம் கூறி சஞ்சய் காந்தி தமாஷ் செய்தார். பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார். அவசர நிலை இருந்த 19 மாதங்களிலும் அவர் வெறுமனே இந்திரா காந்தி என்றுதான் எழுதினாரே தெரிய பிரதமர் இந்திரா காந்தி என்று எழுதவேயில்லை. (நானும் இப்பதிவில் அவ்வாறே செய்திருக்கிறேன் என்பதை கவனிக்க).
1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.
சிலர் கூறலாம், அவசர நிலை காரணமாக ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு ஓடின, விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன என்று. இருக்கலாம், ஆனால் இந்திரா காந்தியின் கெட்ட எண்ணத்திற்கு அவையெல்லாம் ஈடாகாது.
1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.
இதில் நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கண்டறிந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜெர்மன் இதழ் வீட்டிற்கு வரும். திசம்பர் 1975 இதழில் "Diktatorin Indira Gandhi" (சர்வாதிகாரி இந்திரா காந்தி) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. தணிக்கையதிகாரிகளுக்கு ஜெர்மன் தெரியாதது சௌகரியமாகப் போயிற்று.
தேர்தல் வந்தது. இந்திரா காந்திக்கு சரியான தோல்வி. அவரும் அவர் பிள்ளை சஞ்சயும் தேர்தலில் மண்ணைக் கவ்வினர். அப்போதுதான் பத்திரிகைத் தணிக்கை தனக்கே பாதகமாக முடிந்ததை இந்திரா காந்தி அவர்கள் கண்டு நொந்து போனார். அதாவது பத்திரிகைகள் சுதந்திரமாக இல்லாது போனதால் வசவசவென்று உப்புசப்பில்லாத செய்திகள் வர, உண்மை நிலை மறைக்கப்பட, நாட்டின் நாடியை பார்க்க அரசு தவறியது. என்னமோ அப்போது தேர்தல் வைத்து பெரிய மெஜாரிடியை வைத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம் என்று மனப்பால் குடித்துத்தான் அவர் தேர்தலையே அறிவித்தார். பிளாங்கியும் அடித்தார்.
தேர்தலில் தோற்றதும் இந்திரா காந்தி புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். ஜனாதிபதியிடம் ராஜினாமா தரும் முன்னால் அவசரநிலையையும் நீக்குமாறு சிபாரிசு செய்தார். அது அப்படியே இருந்தால் தான் உடனேயே கம்பியெண்ணவேண்டும் என்று அவர் பயந்ததே அதன் முக்கியக் காரணம். மற்றப்படி வேறு நல்லெண்ணம் எல்லாம் இல்லை.
அவசர நிலையை அவசர அவசரமாக வலது கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க, இடது கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்து நாட்டுக்கு நல்லது செய்தனர் என்பது ஆறுதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு பின்னால் இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். ஆனால் மறுபடியும் அவசர நிலையை கொண்டுவர அவருக்கோ மற்ற யாருக்குமோ முடியாதபடி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன.


2.அமெரிக்கா பொருளாதார விழ்ச்சியால் இங்கு இந்தியாவில் பல பேர் வேலை இழக்கிறார்களே?

பதில்: என்ன செய்வது? அமெரிக்காவை சார்ந்து இங்கு பல செயல்பாடுகள் உள்ளனவே. முக்கியமாக அவுட்சோர்சிங் முறையில் இங்கு வரும் வேலைகள். கால் செண்டர்கள் ஆகியவை நிச்சயமாக பாதிக்கப்படும் அபாயம் உண்டு. ஐரோப்பாவும் பாதிக்கப்படும். ஆகவே அதன் மூலமாகவும் இந்தியா உடனடி நிவாரணம் எதையும் எதிர்ப்பார்க்க இயலாது என்பதே கசப்பான உண்மை.

3. என்னதான் கம்யூனிச கொள்கை தொடர்பாக விமர்சித்தாலும்..இப்படி ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வரும் அவல நிலைக்கு கம்யூனிச கொள்கை மாற்றுதானே??
பதில்: அதற்குள் கம்யூனிசம் செய்த அலங்கோலங்கள் மறந்து விட்டனவா? அது செய்த கூத்தில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஜெர்மனி நாடுகளே உலக வரைபடத்திலிருந்து மறைந்தனவே. சுதந்திர பொருளாதார கொள்கை தரும் பாடங்களை மறந்தால் இப்படித்தான் நடக்கும். குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக அவற்றை காற்றில் பறக்க விட்டனர் பலர். அதற்கெல்லாம் கண்டிப்பாக விளைவுகள் இல்லாது போகுமா?

4. லாபம் வரும் போது முதலாளிக்கு நஷ்டம் வரும் போது அது தொழிலாளிக்கு என்ற அந்த கண்ணோட்டம் சரியா?
பதில்: இதில் என்ன கண்ணோட்டம் எல்லாம் பாழாய்ப் போகிறது. முதலாளி திவாலானால் தொழிலாளிக்கு வேலை போகும். சம்பளவெட்டுகளுடன் இன்னும் சற்று காலம் உழைத்து நிலைமையை சீராக்கலாம் என்ற வாய்ப்பு வந்தால் அதை பிடித்து கொள்வதுதான் இப்போதைக்கு செய்யக்கூடிய செயல். அதற்கு மறுத்தால் கம்பெனியே மூடப்பட்டு முதலுக்கே மோசம் வரலாம் அல்லவா? இதை தொழிலாள்ர்களும் உணர்ந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

3. சென்னையில் இனி வரும் மாதங்களில் வாங்க ஆள் கிடைக்காமல் ரியல் எஸ்டேட் தள்ளாடும் என்று சொல்கிறார்களே அது உண்மையா?
பதில்: ரியல் எஸ்டேட் விலைகள் விழும் ஆனால் அந்த விலைகளுக்கும் வாங்குவதற்கு ஆள் இருக்காது என்கிறீர்கள் அல்லவா? ரியல் எஸ்டேட்டையே வெறுமனே முதலீடாக கருதி சகட்டுமேனிக்கு வாங்கி வளைத்து போடுவது கட்டுப்படலாம் என நினைக்கிறேன். பல நிலங்கள் மேல் கட்டுமானங்கள் இல்லாமல் அப்படியே இருக்கும் எனவும் அஞ்சுகிறேன்.

4. இந்தியாவுக்கு இலங்கை அரசு விடுதலைபுலிகள் இதில் யார் நண்பன் யார் எதிரி?
பதில்: இலங்கை அரசுடன் ராஜரீக முறையில் நடந்து கொள்ள முடியும். புலிகளிடம் அது இயலாது. புலிகளை ஆதரித்தால் அவர்கள் இந்தியாவில் பிரிவினைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை வரவழைக்கும் சாத்தியக்கூறு மிகவும் பலமாகவே உள்ளது. இந்தியாவை பொருத்தவரை எதிரியோ நண்பனோ நிரந்தரம் இல்லை, அதன் நலனே முக்கியம்.

5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம். மம்தாவின் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?
பதில்: மேற்கு வங்கத்திற்கு பெரிய கெடுதலை செய்துள்ளார் மம்தா. டாடா நானோ திட்டத்தை தம்மிடம் வரவழைக்க மற்ற மானிலங்களுக்கிடையே பலத்த போட்டி. டாட்டாவுக்கே இந்த கதி என்றால் மற்ற தொழிலதிபர்களும் மேற்கு வங்கத்திற்கு செல்ல பயப்படுவார்களே. ஆகவே கண்ணுக்கு தெரியாத நஷ்டங்கள் பல அம்மாநிலத்துக்கு இந்த அம்மையாரின் தயவால் வந்து விட்டது.


அடுத்த வாரம் பார்ப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/25/2008

ரொம்ப நாட்களுக்கு பிறகு வானொலி நிகழ்ச்சி கேட்டேன்

அறுபது எழுபதுகளில் வானொலி நிகழ்ச்சிகளை கேட்காதவர்களே கிடையாது என்ற நிலை இருந்தது. அச்சமயத்தில் தற்போது கிட்டத்தட்ட ஒருவரும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதில்லை என்னும் நிலையை கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை.

எங்கள் வீட்டில் வானொலி கேட்டே பல ஆண்டுகள் ஆகின்றன. எல்லாவற்றையும் தொலைகாட்சி ஆக்கிரமித்து கொண்டது. தில்லியில் இருந்த சமயம் ஆல் இண்டியா ரேடியோவின் வெளிநாட்டு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்புகள் செய்துள்ளேன். யாரும் அவற்றை கேட்டு அதிகம் கடிதம் எழுதியதில்லை. நேயர் கடிதங்கள் நிகழ்ச்சியில் பல முறை ஒரே ஒரு கடிதம் எங்காவது ஆப்பிரிக்காவிலிருந்து வரலாம். பல சமயம் கடிதமே லேது என்ற நிலைதான். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போன்ற உணர்ச்சியை தவிர்க்க இயலாது. அதை பிரதிபலிக்கும் வகையில் ஆல் இண்டியா ரேடியோ கட்டடமே வெறிச்சோடி கிடக்கும். (ஆனால் நான் அங்கு ஒலிபரப்பிய நேரம் விடியற்காலை 1.15 முதல் 2.00 மணி வரைதான். அதனால் கூட இருக்கலாம். ஆனால் நேயர் கடிதங்களே வராதது நிலைமையை சரியாகவே காட்டியது).

சரி அதெல்லாம் இப்போ எதுக்கு சொல்றே எனக்கேட்டு கண்களை உருட்டுகிறான் முரளி மனோஹர். விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

திடீரென நேற்று மாலை ஆல் இண்டியா ரேடியோ எஃப்.எம். ரெயின்போ நிகழ்ச்சி தயாரிப்பவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த நாள் (அதாவது 25.09.2008 அன்று) காலை 8 முதல் 9 மணி வரை ஒரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலுமா என அவர் கேட்டார். தமிழகத்தில் தமிழ் பேசுவது அருகி வருகிறது என்பது பற்றி ஒரு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சி அது. (அவருக்கு என் நம்பரை கொடுத்தது சகபதிவர் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள். அவருக்கு முதற்கண் நன்றி). நானும் ஒப்புதல் தெரிவித்தேன். ஆல் இண்டியா ரேடியோ ரெயின்போ எஃப்.எம் நிகழ்ச்சி எல்லாம் சரிதான். ஆனால் அதை கேட்க ரேடியோ இல்லையே. என்ன செய்வது? என் வீட்டம்மா உள்ளேயிருந்து அவர் சகோதரி அவருக்கு அன்பளிப்பாக தந்த ஒரு ட்ரான்சிஸ்டர் ரேடியோவை தேடி எடுத்தார். அவசர அவசரமாக பேட்டரி செல்கள் போட்டேன்.

காலை 8.10 வாக்கில் தயாரிப்பாளரிடமிருந்து ஃபோன். இன்னும் மூன்று நிமிடத்தில் எனது முறை வரும் என்றும் தொடர்பை வெட்டாமல் வைத்திருக்குமாறு கூறினார். நிகழ்ச்சி 8 மணிக்கு ஆரம்பித்து விட்டிருந்தது. முதலில் பாலா அவ்ர்களை கேள்வி கேட்கப்போவதாக கூறியிருந்ததால் ஆவலுடன் கேட்டேன் ஆனால் வரவில்லை. ஒலிபரப்பு பல இடையூறுகளால் தெளிவாக இல்லை. நானும் செல்பேசியை எடுத்து கொண்டு மொட்டைமாடிக்கு சென்றேன். தொடர்பு இருந்ததால் ரேடியோ நிகழ்ச்சியை செல்லில் கேட்க முடிந்தது. சொன்னது போலவே கேள்வி கேட்கப்பட்டது. அதாகப்பட்டது தமிழ் நாட்டில் பேச்சுத் தமிழ் உள்ளது. அப்படியே பேசுபவர்களும் ஆங்கில சொற்களையே அதிகம் கையாளுகின்றனர். இந்த நிலை பற்றி என் கருத்து என்ன? எனது பின்னணியையும் முதலில் அவர் கூறிவிட்டிருந்தார். அதில் நங்கநல்லூரில் வசிக்கும் டோண்டு ராகவனுக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதும் அடங்கும்.

கொடுக்கப்பட்ட நேரம் ஒன்றரை நிமிடங்கள். நான் கூறிய விஷயங்கள். முதற்கண் தமிழகத்தில் சிரிக்காமல் செந்தமிழ் பேசுபவர்கள் குறைவு. உதாரணத்துக்கு எழுபதுகளில் ஒன்பதாம் எண் பேருந்தில் பணிபுரிந்த ஒரு நடத்துனர் செந்தமிழிலேயே பேசுவார். படிக்கட்டில் தொற்றி நிற்பவர்களிடம் (முக்கியமாக ஃபிகர்களை பிராக்கெட் போடும் ரோமியோக்கள்) “ஏனய்யா தேனடை போல படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள்”? எனக் கேட்பார். அவர் பேசுவதை கேட்டு சிரித்தவர்களே அதிகம். அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படாமல் கடமை ஆற்றுவார். ஆனால் அவரைப் போன்றவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

நிகழ்ச்சி தயாரிப்பாளர் இப்போது கூறியது, செந்தமிழ்தான் வேண்டும் என்றில்லை, சாதாரணத் தமிழே போதுமே என்று. அதற்கு எனது பதில் செந்தமிழை குறிவைத்து பேசினால்தான் முழு வெற்றியில்லாவிடினும் சாதாரணத் தமிழாவது மிஞ்சும் என்பதே. யாமறிந்த ஆறு மொழிகளில் தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்பதையும் கூறிவிட்டு நான் மேலே கூறியதாவது.

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை துரதிர்ஷ்டவசமாக வந்து விட்டது. மேலும் தமிழாசிரியர்கள் தாங்கள் திருத்தும் விடைத்தாள்களில் மதிப்பெண்கள் தருவதில் கஞ்சத்தனம் காட்டியே பல மாணவர்களை வேறு மொழிகளுக்கு துரத்தி விட்டனர். இப்போது நிலைமை என்னவென்றால் தமிழகத்திலேயே எனக்கு ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புகள் வேலைகள் அதிகம் வருகின்ரன. இந்த நிலையை நான் தில்லியில் இருந்தபோது கற்பனைகூட செய்ததில்லை. துபாஷி வேலை செய்யும் வாய்ப்பும் வந்தது. தற்போதைய இளைஞர்களில் நல்ல தமிழ் எழுதுபவர்கள் அருகி விட்டனர். பேசுவது பற்றி கேட்கவே வேண்டாம்.

இதற்குள் எனக்கு அளிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் எனக்கு நன்றி கூறி பேட்டியை முடித்தார் தயாரிப்பாளர். நிகழ்ச்சியை மேலே நானும் கேட்கவில்லை, ஏனெனில் ஒரே இடையூறுகள். எனக்கு பிறகு பாலா பேசியிருக்கிறார். அதையும் கோட்டை விட்டேன். சில நிமிடங்களில் அண்ணா கண்ணன் அவர்களிடமிருந்து பேட்டி நன்றாக இருந்ததாக குறுஞ்செய்தி வந்தது. பாலாவும் பேசினார்.

பொதுவான சில கருத்துக்கள் இங்கு கூற ஆசைப்படுவேன். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது ஒரு கசப்பான ஆனால் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மையே. இந்த நிலை ஏன் என்பதை பார்ப்போம்.

முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே. நான் 1962-ல் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது இருந்த நிலையைக் கூறுவேன். ஒன்பதாம் வகுப்புவரை தமிழிலேயே படித்து வந்த நான் பத்தாம் வகுப்பில் பொறியியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டபோது ஆங்கில மீடியத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பொறியியல் பாடங்களுக்கேற்ற தமிழ் பாட நூல்கள் இல்லை என்பதுதான் காரணம். பொறியியல் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட காம்போசிட் கணிதத்தை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டியிருந்தது. இதற்கும் அதுவே காரணம்.

இன்னுமொரு காரணம் ஏற்கனவேயே மேலே சொன்ன மதிப்பெண்கள் அளிக்கும் முறை. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழில் 60 மதிப்பெண்கள் போட்டாலே விசேஷம் என்ற நிலை. ஆனால் வடமொழி எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சுலபம். பிற்காலத்தில் இந்த சாதகமான தன்மை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பாடங்களுக்கும் வந்தது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். அவற்றின் மூலம் நல்ல கோர்ஸுகளில் இடம் கிடைத்தால் போதும். இது பற்றி பிறகு. ஆனால் தமிழில் இம்மாதிரி ஆகாது, ஏனெனில் அது நமது தாய்மொழி.

இப்போது நாம் தமிழைப் பார்ப்போம். யுத்தகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாயமாக சாய்சில் இருக்க வேண்டும். தமிழில் மதிப்பெண்கள் வழங்குவதில் தாராளம் காட்டப்பட வேண்டும். தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும்.

தமிழாசிரியர்களும் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக வரவேண்டும். இது முக்கியம். பதவி வந்தாலே மரியாதையும் வரும்.

மற்றப்படி தமிழ் மீடியத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிலையில் ப்ராக்டிகல் இல்லைதான். படிப்பதற்கு தேவையான அளவில் மாணாக்கர்கள் வர வேண்டும், பாட நூல்கள் பல தமிழில் வேண்டும், இத்யாதி, இத்யாதி.

கோல்ட் வார் என்று கூறப்படும் நெருக்கடி நிலை அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது. ஜெர்மனி இரண்டாக பிளந்து கிழக்கு ஜெர்மனி ரஷ்யா பக்கத்திலும் மேற்கு ஜெர்மனி அமெரிக்கா பக்கமாகவும் இருந்தன. அப்போது நடந்ததாக ஒரு நிகழ்ச்சியை வேடிக்கையாகக் கூறுவார்கள். இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை பட்டனராம். அதாவது மேற்கு ஜெர்மனிக்காரர்கள் ஆங்கிலத்திலும் கிழக்கு ஜெர்மானியர் ரஷ்யனிலும் பேசினார்களாம். அம்மாதிரி நிலை ஒன்றுமில்லாமலேயே இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசுவது என்ன கண்றாவி!

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/21/2008

சாரு நிவேதிதாவுடன் கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சந்திப்பு


நேற்று மாலை (20.09.2008) கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சாரு நிவேதிதா பங்கு பெறும் கலந்துரையாடல் பற்றிய பதிவை பார்த்து விட்டு அங்கு செல்லும்போது மணி சரியாக மாலை 05.15. "கிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று அப்பதிவில் கூறப்பட்டதை மனதில் வைத்து மூன்று மாடிகள் லிஃப்ட் இல்லாமல் ஏறினால் அங்கு அச்சமயம் பா. ராகவன் மட்டும் இருந்தார். என்னை வரவேற்ற பா. ராகவன் மைக் டெஸ்டிங் செய்யும் தோரணையில் டோண்டு ராகவனை வரவேற்பதாக மைக்கில் கூறினார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். முதலில் வந்தது ஐக்காரஸ் பிரகாஷ். பிறகு நாராயணன், ஹரன் பிரசன்னா. சற்று நேரத்தில் லக்கிலுக்கும் வந்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த பொன். மகாலிங்கம் என்னும் பத்திரிகையாளர் (இவர் ரேடியோ சிங்கப்பூரில் பணி புரிகிறார்), நவியா மார்க்கெட்ஸ் லிமிட்டடின் வைஸ் பிரெசிடெண்ட் வள்ளியப்பன் ஆகியோரிடம் கார்டு பரிமாறிக்கொண்டேன்.

பத்ரி அவர்கள் மிக மிக சுருக்கமாக துவக்க உரையைக் கூறி மைக்கை சாருவிடம் தந்தார். சாரு பேசும்போது எல்லோரும் தங்களுக்கு பேசவராது என்ற டிஸ்கியை முதலில் போட்டு விட்டு பிறகு தங்கு தடையின்றி பேசுவதாகவும், ஆனால் தனக்கு நிஜமாகவே பேச வராது என்று கூறிவிட்டு, மேலே கூறப்பட்ட டிஸ்கிதான் அவரது விஷயத்திலும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நன்றாகவே பேச ஆரம்பித்தார்.

இணையத்தின் உபயத்தால் பலர் எழுத வந்துள்ளதை சுட்டிக் காட்டினார். ஆனால் வருபவர்கள் ஜஸ்ட் லைக் தட் எழுதுபவர்களாகவே இருக்கிறார்கள் என்றும். உடனேயே சிறுகதை, கவிதை ஆகியவற்றை போட முயற்சிப்பதாகவும் கூறினார். அதெல்லாம் செய்வதற்கு முன்னால் நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும் என்றும் படிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவரது முக்கிய கம்ப்ளைண்ட் என்னவென்றால் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை என்பதே. ஒரு சராசரி மலையாள எழுத்தாளருக்கோ, வங்காள எழுத்தாளருக்கோ இந்த பிரச்சினை இல்லை என்றும் கூறினார். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதையும் கோடி காட்டினார். இர்ண்டு பஞ்சாபியரோ, மலையாளியோ தங்களுக்குள் தத்தம் தாய்மொழியில் பேச தயங்காத போது, தமிழர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசும் அவலத்தையும் சுட்டிக் காட்டினார். நல்ல தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

சுருக்கமாகவே பேசிய பிறகு அவர் கேள்விகளுக்கு நேரம் தந்தார். முதல் கேள்வி கேட்டது அடியேன். மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லையென்றும் அதற்கு முதலில் மூல ஆசிரியரின் அனுமதி வேண்டும் என்றும், அப்படியே மொழிபெயர்த்தாலும் அதற்கான சன்மானம் அவ்வளவாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினேன். காலஞ்சென்ற சமுத்திரம் அவர்கள் என்னை தொலைபேசியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்பு கொண்டு அவரது "அடுக்கு மல்லி" நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கூறியதை நான் இதற்கு மேற்கோளாகக் காட்டினேன். நான் கேட்ட தொகைக்கு சிறிதும் சம்பந்தமில்லாது அதன் மொழிபெயர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை இருந்ததால் அதை நான் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் கூறினேன். நான் கூறியதை சாருவும் ஒத்து கொண்டார். இருப்பினும் மொழிபெயர்ப்புகளின் அவசியத்தை மறுபடி வலியுறுத்தினார். இன்னொருவர் எழுந்து புனைக்கதை இல்லாத எழுத்துக்களை பற்றி கேள்வி கேட்டார். அவையும் முக்கியமே என சாரு கூறினார்.

தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்தது ஒருபக்கமிருக்க ஆங்கிலமும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை என்பதை ஒருவர் கூற அதையும் சாரு ஆமோதித்தார். இந்த நிலைக்கு முக்கியக் காரணமே ஆங்கில கான்வெண்டு பள்ளிகளை ஒரு குடிசைத் தொழில் ரேஞ்சுக்கு தெருவுக்கு தெரு கொண்டு வந்ததுதான் என்றார். ஆங்கில மொழியை போதிப்பது சரியான தரத்தில் இல்லை என்பதையும் அவர் கூறினார்.

அவர் ஸ்பானிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களை பற்றி கூறி அவற்றை ஆங்கில மொழியாக்கத்தில்தான் படித்ததாகக் கூறினார். இவ்வளவு பேசும் இவர் நிஜமாகவே பிரெஞ்சு கற்று தேர்ந்திருந்தால் சம்பந்தப்பட்ட புத்தகங்களை பிரெஞ்சிலேயே படித்து மகிழ்ந்திருக்கலாம் என்ற எனது ஆதங்கத்தை நான் அவரிடம் கூற அவர் தனக்கு வேற்று மொழி கற்று கொள்வதில் ஒரு விதமான மெண்டல் பிளாக் இருப்பதாகக் கூறினார். இது நிஜமாகவே துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் என்ன செய்ய அதுதான் வாழ்க்கை. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி பேசப்படும் நாடுகளில் அனாயாசமாக சென்று வர இயலும் எனக்கு வெளிநாடுகளுக்கு செல்வதில் எவ்வித ஆர்வமும் இல்லை என்பதும் நகை முரண்தானே.

கமகமவென மணத்துடன் சமோசாக்கள் மற்றும் சுவையான தேநீர் வழங்கப்பட்டன. கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் சில புத்தகங்கள் சாருவுக்கு தரப்பட்டன. மீட்டிங் முடிந்ததும் கீழே உள்ள புத்தகக் கடைக்கு சென்று நான் தேவன் அவர்கள் எழுதிய "சி.ஐ.டி. சந்துரு" மற்றும் லிவிங் ஸ்மைல் எழுதிய "நான் வித்யா" புத்தகங்களையும் வாங்கினேன்.

மீட்டிங் சமயத்தில் குறிப்புகள் எடுத்து கொள்ளாததால் இப்பதிவை நினைவிலிருந்து எழுத வேண்டிய கட்டாயம். இன்று காலை பத்ரிக்கு போன் செய்து அவர் எடுத்த புகைபடத்தை அனுப்புமாறு கேட்டு கொள்ள அவரும் அனுப்பியுள்ளார். அதுதான் பதிவின் ஆரம்பத்தில் உள்ள படம். அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை:
சாரு அவர்கள் தனது தளத்தை கட்டணத் தளமாக மாற்றவிருப்பதாக அதில் கூறியிருந்தார். அது பற்றி கேட்டதற்கு ஆனானப்பட்ட சுஜாதாவுக்கே அம்பலம் பே சைட்டில் 14 உறுப்பினர்கள்தான் என்ற தகவல் வந்ததாகவும் ஆகவே அந்த எண்ணத்தையே தான் விட்டுவிட்டதாகவும் சிரித்தவன்ணம் கூறினார்.

9/20/2008

மனம் போன போக்கில் ஒரு மொக்கைப் பதிவு

"உன் முகத்தைக் காட்டு, விதிகளை நான் சொல்கிறேன்" என்ற சொலவடையை ஐ.டி.பி.எல். லில் நான் வேலை செய்தபோது சர்வ சாதாரணமாகக் கூறுவார்கள். விளக்குகிறேன். நிர்வாகத்தின் செல்லப் பிள்ளைகளாக இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியும் ஒரே விதி அமலாக்கப்படும். சிலர் ரெகுலராக லேட்டாக வந்தால் கூட கண்டு கொள்ளமாட்டார்கள். அதே சமயம் சாதாரணமாக சரியான நேரத்துக்கு வந்து விட்டு ஒரே ஒரு நாள் லேட்டாக வந்தாலும் வறுத்தெடுத்து விடுவார்கள்.

ஒரு ராப்பிச்சைக்காரன் இருந்தான். அவனுக்கு எந்த வீட்டிலும் பிச்சை போட மாட்டார்கள், ஒரே ஒரு வீட்டைத் தவிர. அன்றிரவு அந்த வீட்டம்மா வந்து பிச்சை போட சற்றே லேட்டாகி விட்டது. பிச்சைக்காரன் சொல்கிறான், “பிச்சை போடாத மகராசிகள்தான் போடவில்லை, போடற முண்டச்சி ஏண்டி நீ லேட்டா வந்தே”? என்று கேட்டானாம். நல்லத்துக்கு காலமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?

இதெல்லாம் விடுங்கள். வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ அலங்கோலங்கள் நடைபெறுகின்றன. அண்ணா நூற்றாண்டு விழாவுக்காக 1405 பேரை விடுதலை செய்தார்கள். அது என்ன கணக்கு? அதை எதிர்த்து ரிட் பெட்டிஷன் சுப்பிரமணிய சாமி போட, அந்த கேசில் அரசு செய்தது சரியில்லை என தீர்ப்பு வந்தால் அத்தனை பேரையும் மறுபடி கைது செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டது நீதிமன்றம். இது என்னவென்றே புரியவில்லை. சட்டுபூட்டென்று விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய கேஸ் இல்லையா இது? திரும்ப 1405 பேரை அரஸ்ட் செய்ய வேண்டுமென்றால் நடக்கும் காரியமா அது? சுத்தமாக எனக்கு புரியவில்லை.

இது பற்றி ரியாலிடி செக் என்னும் வலைப்பதிவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

"1405 life prisoners to be released in Tamilnadu
Posted in Uncategorized by realitycheck on the September 14, 2008
Remember the media coverage of Afzal Guru. Remember the socialites who were on TV yelling against the death penalty. This news from Tamilnadu is sure to send them sulking into characteristic hibernation.

The ruling party’s founder Mr C.N.Annathurai’s 100th birthday celebrations are being kicked off in the state. As part of the celebrations, 1405 prisoners serving life terms (I assume mostly murder) are being released. Can we call them hardcore criminals ? I think so. They may want to pick roses for a living but they are hardcore enough to have been awarded a life term. Families have been destroyed by their actions. Wives lost husbands, kids lost fathers.

The two categories are :

1. All those serving life terms who have completed 7 years (subject to some checks like good behaviour)

2. All those over 60 are free if they have served five years

Remember, a life term is usually awarded for murder.

The idea is that these prisoners should not be neglected by the society and stigmatised for their past forever. Our Correctional Wing along with NGOs and Prison Ministry of India is working out various ways to resettle them in the society,” said DGP R Nataraj, who initiated the programme.

Forever. What a nice word ? Does ‘rest of your life‘ mean the same thing, or are we misreading it ? Kids have lost their dads forever, haven’t they ? What about them ?

While many have expressed a desire to own a taxi or an autorickshaw, a few have asked for sewing machines and fishing nets. One man wanted to open a flower shop. “For such cases we are trying to arrange bank loans to help them start their own small-scale units,” said Nataraj. The sewing machines and fishing nets will be given on the day of their release.

So, people who commit heinous crimes like murder will be given bank loans for taxis and autos. Is this facility available to non-criminals as well ?

V Kannadasan, Special Public Prosecutor for Human Rights said, “Human Rights concepts are growing everywhere and these prisoners also have a right to life, which if denied, will lead them back to crimes. So this opportunity to reform must be given to them.”

All quotes from expressbuzz

Human Rights Sir, I have a stupid question. How can it “lead them back to crimes” if they are in jail ?

This is a slap on the faces of the victims families. Their consent has clearly NOT been obtained.

This is moment of shame for the media because no TV channel will discuss this.

Another moment of humiliation for the judicial system.

There is a case against it by in the Supreme Court by the relentless Subramanian Swamy. The Supreme Court had earlier stayed the released of 1500 hardcore criminals by the YS Reddy government.

But AP is AP, TN is TN, Bengal is Bengal, Kerala is Kerala.
Until then, no one in India has the right to talk about Afzal Guru".

இப்போது என்னவாயிற்று என்றால், ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்களுக்கும் இந்த வசதியை நீடிக்க வேண்டுமாம். தூக்கு தண்டனை பெற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமாம். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

ஒரு கொலை நடந்து கேஸ் எல்லாம் முடிந்து தூக்கு தண்டனை அளித்தால் அதை நிறைவேற்றுவதில் தேவையற்ற தாமதங்கள். இப்படித்தான் விஷ ஊசி வழக்கில் பத்தாண்டுகள் ஆகிவிட்டதை சாக்காக காட்டி முக்கிய குற்றவாளி வைத்தீஸ்வரன் தூக்கிலிருந்து தப்பிக்க முடிந்தது. அந்த பத்தாண்டுகள் தாமதத்துக்கும் அவன் செய்த அப்பீல்களே காரணம் என்பதை வசதியாக மறந்து விட்டனர். இம்மாதிரி கேசுகளில் எவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்கப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் நலமாக இருக்கும். மக்ஃபூல் பட் என்னும் தீவிரவாதியை தூக்கில் போடுவதை தேவையின்றி தாமதப்படுத்தியதில் அவனது கூட்டாளிகள் இந்திய தூதரக அதிகாரி மாத்ரே என்பவரை பயணக் கைதியாக்கிக் கொன்றனர். பிறகு மக்ஃபூலும் தூக்கிலிடப்பட்டான். இந்த எழவு காரியத்தை முன்னாலேயே செய்து தொலைக்காமல் என்ன கழட்டினார்கள் என்று தெரியவில்லை. மாத்ரே சாகாமல் இருந்திருப்பார் அல்லவா?

1991-l நடந்த ராஜீவ் காந்தி கொலைக்காக தூக்கு தண்டனை பெற்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சோனியா காந்தி கூறியதால் தூக்கு தண்டனையிலிருந்து தப்பியுள்ளாராம். நான் கேட்கிறேன், சோனியாவின் கணவர் மட்டும்தான் மரணமடைந்தாரா? கூட பலர் மரணமடையவில்லையா? அவர்கள் உறவினரது ஒப்புதல் பெறப்பட்டதா? அதே போல பிரியங்கா காந்தி நளினியை பார்க்க அனுமதிக்கப்பட்டதில் எல்லாவிதமான விதிகளும் மீறப்பட்டுள்ளன. சாதாரண நிலையில் உள்ள மக்களுக்கு இச்சலுகைகள் வழ்ங்கப்படுமா?

அதனால்தான் கூறினேன், "உன் முகத்தைக் காட்டு, விதிகளை நான் சொல்கிறேன்" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/19/2008

டோண்டு பதில்கள் 19.09.2008

டோண்டு பதில்கள் 12.09.2008 பதிவு வராததற்கு ஒரே காரணம் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்பதே. ஆக 28 வாரங்களாக விடாது வந்த தொடர் போன வாரம் முடிவுக்கு வந்தது. நானும் இதை ஏற்று கொண்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்தேன். இன்று காலை கணினியைத் திறந்தால் திடீரென மறுபடியும் கேள்விகள். நேற்று இரவு நான் கணினியை மூடிய பின்பு வந்துள்ளன. இன்றுதான் பார்த்தேன். ஆகவே இந்த வாரம் பதில்கள் வந்துள்ளன. அடுத்த வாரம் பதில்கள் வருமா என்றால் தெரியாது. கேள்விகள் வந்தால் வரும். பார்க்கலாம். இப்போது கேள்விகளுக்கு போகலாம்.

அவனும் அவளும்:
1) கேள்வி கேட்க ஒரு தகுதி தேவையா?
பதில்: பதில் சொல்லவே தகுதி என்று ஒன்றும் பெரிசாகத் தேவையில்லாதபோது, கேள்வி கேட்க மட்டும் என்ன தேவையாக இருந்துவிடப் போகிறது? சுவாரசியமான பதிலை வரவழைக்கும் கேள்வியாக இருந்தால் விசேஷம்.

2) சாரா பாலின் ஐஸ்வர்யா ராய் ஜாடையில் இருக்கிறாரா?
பதில்: அப்படீங்கறீங்க? கீழே போட்டோக்களை பார்க்கலாமா?


அட ஆமாம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆக ரிபப்ளிகன் பார்ட்டி வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அம்சமான பிகரைப் பார்க்கலாம். இம்மாதிரி முக ஜாடைகள் பார்ப்பது எனக்கும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இல்லஸ்டிரேட்டட் வீக்லி என நினைக்கிறேன். அதில்தான் பிறக்கும்போதே பிரிக்கப்பட்டவர்கள் என இம்மாதிரி ஜோடி ஜோடியாக படம் போடுவார்கள். உதாரணத்துக்கு வி.பி. சிங் டி.வி. சீரியல் நடிகர் புனியாத் புகழ் ஆலோக் நாத். 1989 லோக் சபா எலெக்‌ஷன் சமயம் இந்த உருவ ஒற்றுமை காரணமாக அவரது தொடர்கள் ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டன. ஏனெனில் அது வி.சிங்குக்கு ஆதரவாகப் போய் விடுமாம். மற்ற உதாரணங்களை பார்க்க வேண்டுமானால் எனக்கென்னவோ பிரேமானந்தாவும் செந்திலும் ஒரே ஜாடையில் இருப்பதாகத் தோன்றுகிறது.




அதே போல அதிமுகாவைச் சேர்ந்த பாலா பழனூர் (சில நாட்கள் சரண்சிங் மந்திரி சபையில் இருந்தார்) கபில் தேவும் ஒரே ஜாடை. இது பற்றி அரசு கேள்வி பதில்களில் கேட்கப்பட்டது. தேவயானியை பார்த்தால் பழைய நடிகை அஞ்சலிதேவி ஞாபகம் வருகிறது. இதே மாதிரி அரசு கேள்வி பதிலில் ஒருவர் நடிகை மும்தாஜுக்கும் (?) அஞ்சலிதேவிக்கும் ஒரே ஜாடை இருப்பதாகக் கூற, அதற்கு அரசு அந்த வாசகரது அபிமான நடிகையாக மும்தாஜ் இருந்தால், அஞ்சலிதேவி அவரது தாத்தாவின் கனவுக்கன்னியாக இருந்திருப்பார் என கூறினார்.

3) வரும் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வெல்லுமா? உங்களுடைய ஊகம் என்ன?
பதில்: பூவா தலையா போட்டு பார்த்து விடுவோமா? சீரியசாக, Cricket is a game of glorious uncertainties. ஃபாலோ ஆன் வாங்கிய இந்தியா மேட்சையே ஜெயித்தது கூட நடந்துள்ளது.
இது பற்றிய கேள்விக்கு நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அளித்த பதில் பின்வருமாறு.
"நீங்கள் குறிப்பிடுவது இந்தியா vs ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன். 2001-இல் நடந்தது. இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, பின்னர் லஷ்மணும் (281), டிராவிட்டும்(180) ஜோடி சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியதில், கல்கத்தாவில் ஸ்டீவ் வா தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி மண்ணைக் கவ்வியது. அவர்களது தொடர் (16 போட்டிகள்) வெற்றியும் முடிவுக்கு வந்தது. அவர்களது 'Invincibility' ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
1981-இல் ஹெடிங்க்லியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆட்டம் ஒரு Real Classic. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் எடுத்தது. மைக் பிரயர்லி (இவரை தலைமைப் பண்பு, ஸ்லிப் ஃபீல்டிங் ஆகியவற்றிற்காகவே அணியில் வைத்திருந்தனர் என்றால் அது மிகையில்லை!) தலைமை தாங்கிய இங்கிலாந்து அணி 174 ரன்கள் எடுத்து follow-on வழங்கப்பட்டு, இரண்டாவது இன்னிங்க்ஸிலும் 135-7 என்ற மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது, இயன் பாத்தம், வால் முடிவாட்டக்காரர்களோடு (Tailenders:)) கூட்டு சேர்ந்து ஒரு காட்டு காட்டியதில், இங்கிலாந்து 356 ரன்கள் குவித்து (பாத்தம் 149 நாட் அவுட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 130 ரன்களை நிர்ணயித்தது. பின்னர், ஆஸ்திரேலிய அணி பாப் வில்லிஸின் (8-43) வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 111-க்கு (இதை நெல்சன் என்று அழைப்பர்! அதாவது, அதிர்ஷ்டமில்லா எண்!) சுருண்டு, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது வரலாறு !
இதற்கு முன்னர், 1894-85 Ashes-இல், ஸிட்னியில் நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 586 ரன்கள் குவித்த பிறகு, இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தது. Follow-on செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து, திடமாக ஆடி, 437 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 177 ரன்களே ! நான்காவது நாள் முடிவில், ஆஸ்திரேலியா 113-2 என்ற ஸ்கோரில் Driver's seatஇல் இருந்ததென்னவோ நிஜம் ! இரவு பெய்த மழையின் காரணமாக, இறுதி நாளில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு பயங்கரமாக உதவியதில், ஆஸ்திரேலியாவின் ஆட்டம் க்ளோஸ் :) 166 ரன்களில் சுருண்டு, இங்கிலாந்து 10 ரன்களில் வென்று ஒரு Famous Victory !!! தொடரையும் 3-2 என்ற கணக்கில், இங்கிலாந்து வென்றது".



4) தாங்கள் எப்பொழுது வெப்சைட் தொடங்க உள்ளீர்கள்?
பதில்: எனக்கு ஏற்கனவே நான்கு வெப்சைட்டுகள் உள்ளன. அவற்றில் மூன்று மொழிபெயர்ப்பு தலைவாசல்களில், அவையும் இலவசம். ஒன்றே ஒன்று மட்டும் நான் காசு கொடுத்து உருவாக்கி கொண்டது.

5) உங்கள் வெப் பக்கம் கறுப்பில் இருந்தால் 70% பவர் சேமிக்க முடியும் என்பது தெரியுமா? அப்படி தெரிந்தால் நீங்கள் அந்த மாற்றத்தை கொண்டு வருவீர்களா?
பதில்: அதில் மாற்றம் செய்ய நான் சேவை அளிப்பவரிடம்தான் கூற வேண்டும். அது சரி, கருப்பாக இருந்தால் பவர் சேமிக்க முடியும் என்று கூறுவது உண்மையா? எனக்கென்னவோ கருப்பாக இருந்தால் பார்ப்பவர் கண்ணின் பவர் வேண்டுமானால் கூடலாம். பை தி வே கருப்பு நிற மாருதி கார்களின் எரிபொருள் செலவு மற்ற மாருதி கார்களை விடக் குறைவு. இது உண்மை. ஏன் எனக் கூற இயலுமா?

6) அடுத்த வார கேள்வி கேட்க நேரிட்டால், உங்களுக்கு எது சம்பந்தமாக கேட்டால் பிடிக்கும்?
பதில்: எதில் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்.

7) விடாது கருப்பு தொடர் உங்களுக்கு பிடிக்குமா?
பதில்: இந்திரா சவுந்திரராஜன் எழுதி, நாகா டைரக்‌ஷனில் வந்த தொடர்தானே? எனக்கு அது பிடிக்கவில்லை.

மீண்டும் அடுத்த வாரம் (கேள்விகள் இருந்தால்) சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/11/2008

தொடரும் உத்தபுரம் ஸ்டைல் கூத்துக்கள்

உத்தபுரம் நிகழ்வுகள் சம்பந்தமாக நான் இட்ட பொங்கி எழுங்கள் தலித் நண்பர்களே பதிவில் குறிப்பிட்டிருந்தவை மறுபடியும் சேலம் கந்தம்பட்டியில் நடந்துள்ளன. அது பற்றி குமுதம் ரிப்போர்டரில் (14.09.2008) தலித்துகளின் ஆலயப்பிரவேசம் என்னும் தலைப்பின்கீழ் வந்துள்ள செய்தி கீழே தடித்த சாய்வெழுத்துக்களில் தரப்பட்டுள்ளது.

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த வன்னிய மக்கள் தங்களின் குலதெய்வமாகத் திரௌபதியம்மனுக்குத் தனியே கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். வன்னியர்கள் மட்டும் வழிபட்டு வந்த இந்தக் கோயிலுக்குள் நுழைந்து வழிபட கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதைக் கண்டித்துப் போராட்டத்தில் இறங்கினர் அங்குள்ள தலித் இளைஞர்கள். அவர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளும் களத்தில் இறங்கினர்.

`தலித்துகள் கோயிலுக்குள் நுழையவே கூடாது, உயிரைக் கொடுத்தாவது அதனைத் தடுப்போம்' என்று வன்னியர் தரப்பும் மார்தட்ட, கந்தம்பட்டியில் அமைதி குலைந்து பதற்றமான சூழல் உருவானது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆலய நுழைவுப் போராட்டம் அறிவித்து கோயிலுக்குள் நுழைவதாக அறிவிப்புச் செய்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கடைசிநேரத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோயில் மாவட்ட நிர்வாகத்தால் இழுத்துப் பூட்டப்பட்டது. திருமாவளவன் இதுகுறித்து பொதுநல வழக்கொன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து, கோயிலைத் திறக்கக் கோரியிருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றமும் கோயிலைத் திறக்கவும் அதில் தலித்துகள் நுழைந்து வழிபடவும் அனுமதியளித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தர விட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தலித் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய சேலம் போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் செப்டம்பர் எட்டாம்தேதியை கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோயில் மீண்டும் திறக்கப்படும் நாளாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் போலீஸார் கந்தம்பட்டியில் குவிக்கப்பட்டனர். `எங்களைக் கலந்தாலோசிக்காமல் காவல்துறையும், வருவாய்த்துறையும் இப்படி ஒரு முடிவை எடுத்தது நியாயமேயில்லை' என்று குற்றம் சாட்டிய வன்னியர்கள், இதைக் கண்டிக்கும் விதமாக கந்தம்பட்டியை விட்டே வெளியேறிவிடுவது எனக் கூடிப் பேசித் தீர்மானித்தனர்.

செப்டம்பர் ஏழாம் தேதி மாலையில் தங்களுடைய வீடுகளைப் பூட்டிக் கொண்டு தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு கந்தம்பட்டியைச் சேர்ந்த வன்னிய மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். சேலத்திலிருந்து ஏறத்தாழ சுமார் இருபது கி.மீ. தொலைவில் இருக்கும் கஞ்சமலைப் பகுதியை நோக்கி அவர்கள் பயணிக்கத் தொடங்கினர்.

இதைக் கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த அவர்களை நாம் பாதி வழியிலேயே மடக்கிப் பேச்சுக் கொடுத்தோம்.

கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரான மணி, "நாங்கள் கட்டிய கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோயிலை, எங்களுக்கு உரிமையுடைய டினாமினேஷன் கோயிலாக அறிவிக்கக் கோரி நாங்கள் தொடர்ந்திருக்கும் வழக்கு சேலம் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. அதன் தீர்ப்பு வருமுன்னரே பொதுநல வழக்கொன்றில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இதைப் பற்றி இரு தரப்பிடமும் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டிய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவை தலித்துகளிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி எட்டாம் தேதி கோயிலைத் திறப்பதாக அறிவித் திருக்கிறது. இது எங்களுக்கு மனவேதனையை அளிப்பதாக உள்ளது. எங்களுக்கு உரித்தான கோயில் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்று கட்டாயம் நாங்கள் நம்புகிறோம். அப்படி அறிவிக்கப்பட்ட பிறகே நாங்கள் மீண்டும் கந்தம்பட்டிக்குத் திரும்பப் போகிறோம்'' என்றார். தற்போது கஞ்சமலைப் பகுதிக்குச் சென்றுவிட்ட கந்தம்பட்டி வன்னியர்கள் அங்கேயே உணவு சமைத்துச் சாப்பிட்டுப் பிடிவாதமாகத் தங்கியிருக்கிறார்கள்.

கோயில் திறப்புநாளாக அறிவிக்கப்பட்டிருந்த எட்டாம் தேதியன்று காலையில் இருந்தே அதிக எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட, கந்தம்பட்டியில் பரபரப்பு கவ்விக் கொண்டது. காலை 10.20 மணியளவில் கந்தம்பட்டி தலித்துகள், தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து ஊர்வலமாக மாலைகளுடன் பழத்தட்டுகளை ஏந்தி திரௌபதியம்மன் கோயிலுக்கு உற்சாகத்துடன் கிளம்பிச் சென்றனர். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகப் பூட்டியே கிடந்ததால் குப்பை மண்டிக் கிடந்த கோயிலை அவசரகதியில் சுத்தம் செய்து தூய்மையாக்கினர்.

ஏதாவது அசம்பாவிதம், கலவரம் என்றால் அதனையும் சமாளிக்கும் விதத்தில் ஆயுதங்கள், தலைக் கவசங்கள், கண்ணீர்புகைக் குண்டுகள் சகிதம் போலீஸார் தயாராக நிறுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க ஈரோடு எஸ்.பி. அவினாஷ்குமாரும், சேலம் போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளும் வந்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் கோயில் திறப்பு சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டுமென சில நெறிமுறைகளை அறிவுறுத்தியிருந்தது. கோயிலுக்கு வழிபட வருபவர்கள் `ஊர்வலமாக வரக் கூடாது. கொடிகள், பேனர்கள் முதலியவற்றை ஏந்தி வரக் கூடாது. கோஷங்கள் எதனையும் எழுப்பக் கூடாது' போன்ற விதிமுறைகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் அப்பட்டமாக மீறப்பட்டது. தங்களுடைய பகுதியில் இருந்து ஊர்வலமாகக் கிளம்பிய விடுதலைச் சிறுத்தைகள் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்ட சமயத்தில், மறைத்து எடுத்து வந்திருந்த தங்களது கட்சிக் கொடிகளை அம்மனின் சன்னதிக்கு முன்பாகத் தூக்கிக் காட்டி உற்சாகமாகக் குரலெழுப்பி அதிர வைத்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலய எல்லைக்குள் நின்றவாறே `வீரவணக்கம் வீரவணக்கம்' என்று கோஷமிட்ட அவர்களைத் தடுத்து வெளியேற்றுவதற்கு போலீஸ் பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

"இது அண்ணன் திருமாவளவனுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பான வெற்றி'' என்றார் கந்தம்பட்டி 24-வது டிவிசனின் விடுதலைச் சிறுத்தைகள் செயலாளரான கண்ணன். "எங்களைக் கருவறைக்குள் நுழைய போலீஸ் அனுமதி மறுத்து விட்டது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் வழிபட வருவதால் கோயில் பூசாரி இன்றைக்கு கோயிலுக்கே வராமல் தவிர்த்து விட்டார். இரு தரப்புக்கும் பொதுவான பூசாரி ஒருவரை அரசு நியமித்து பூஜைகளை நடத்திட வேண்டும்'' என்றார் தலித் தரப்பினைச் சேர்ந்த பெரியதனக்காரரான கணேசன்.

சேலம் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநகரச் செயலாளரான இமயவரம்பன் "நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸின் அச்சுறுத்தலுக்குப் பயந்துதான் வன்னியர்கள் நாங்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனவே இது நிஜ வெற்றியல்ல. வன்னியர்கள் மனம் திருந்தி எங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

கோயிலுக்குள் நுழைந்து விட்டு வெளியேறிய தலித்துகளைப் பார்த்து ஏகவசனத்தில் பேசினர் சில வன்னியர் தரப்பினர். உடனே இருதரப்பிலும் திமிறிக் கொண்டு பாய்ந்தவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் போர்க்களக் காட்சிகள் அங்கு அரங்கேறியிருக்கும். `கோயில் இருந்தாத்தானேடா நீங்க இங்க வந்து கும்புடுவீங்க. கோயிலையே இடிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?' என்று வன்னியர்கள் கொந்தளிப்பாகக் கொட்டிய வார்த்தைகளை உளவுத்துறையினர் மிகவும் உன்னிப்பாகக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
ஸீ சூர்யா
படங்கள் : விஜய்


இப்போது டோண்டு ராகவன். மேலே சுட்டப்பட்ட எனது உத்தபுரம் நிகழ்ச்சி சம்பந்தமான பதிவிலிருந்து சில வரிகள்.
"அரசின் செயல்பாடுகள் வெறுமனே எதிர்வினைகள் புரிவதாகவே உள்ளன. இந்த கலெக்டருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வெளியில் போய் எவ்வளவு நாட்கள்தான் உட்கார முடியும்? அவ்வாறு சென்றவர்களில் யாரேனும் அரசு ஊழியர்கள் இருந்தால் அவர்களை முதலில் வேலையை விட்டு தூக்க வேண்டும். அது முடியாவிட்டால் வேறு ஏதாவது ஊருக்கு மாற்றல் செய்ய வேண்டும். அவனவன் சொந்த ஊரில் பல பகுதி வேலைகள் பார்த்து கொண்டு அரசிலும் வேலை செய்து பல சம்பளங்கள் வாங்குகிறார்கள். இந்த மாற்றலே பெரிய தண்டனையாக அவர்களுக்கு இருக்கும். ஊருக்கே பொது அபராதம் விதிக்கலாம். எடுத்துக்காட்டு தண்டனையாக (Exemplary punishment) பெரிய அளவில் தந்தால் மற்ற ஊர்களில் வன்கொடுமை செய்பவர்களும் யோசிப்பார்கள். தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை தரும் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை எடுப்பது பற்றிக் கூட யோசிக்கலாம்".

இப்போதாவது அரசு முன்னால் செய்த தவற்றை செய்யாமல் இருக்க வேண்டும். போனவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதே நலம். எவ்வளவு நாளைக்குத்தான் அடாவடி செய்ய இயலும்? அரசு செய்யுமா?

குறைந்த பட்சம் தலித்துகளாவது தங்கள் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும். அது பற்றி நான் அதே உத்தபுரம் சம்பந்த பதிவில் எழுதிய வரிகள் இதோ. அவற்றில் ஒரு மாற்றமுமில்லை.

"தலித்துகளும் தத்தம் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும். என்ன நடக்கிறது என்றால் அவர்களில் பலர் ஒரு மொந்தை கள்ளுக்கும் ஒரு வேளை அசைவ சாப்பாட்டுக்கும் தங்கள் உழைப்பை வழங்கி விட்டு சென்று விடுகின்றனர். அதிலும் தங்கள் சகோதரர்களையே ஆண்டைக்காக அடிப்பதும் நடக்கிறது. பார்த்திபன் நடித்த பாரதி கண்ணம்மா இதை சரியான பார்வை கோணத்தில் காட்டாவிட்டாலும் காட்டிய அளவிலேயே மனதை பாதித்தது. அக்கொடுமையை பற்றி சரியாகக் கூறாது பூசி மொழுகிவிட்டு மீனாவுக்காக உடன்கட்டை ஏறுவது போன்ற அபத்த காட்சி.

பெற வேண்டிய கூலி கிடைக்கவில்லையென்றால் வேலை செய்ய முடியாது என்று இருப்பதே உத்தமம். மிகக் கடினமான செயல்தான் இருந்தாலும் ஏதேனும் பெரிய அளவில் இவ்வாறு செய்ய வேண்டும். அவர்களிலேயே படித்து பெரிய நிலைக்கு வந்து விட்டவர்கள் தங்களது ஏழை சகோதரர்களிடமிருந்து விலகி நிற்பது துரதிர்ஷ்டவசமானது.

இந்த இடத்தில் நாடார்கள் உதாரணம் மனதில் கொள்ளத்தக்கது. தலித்துகளைப் போலவே வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் இன்று தங்கள் சமுதாய ஒற்றுமையால் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். ஆகவே தலித்துகளால் இதெல்லாம் முடியாது எனக் கூறுவது சரியாக இருக்காது. முதலில் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளட்டும்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

மங்களூர் சிவா திருமணம்

நண்பர் மங்களூர் சிவாவின் கல்யாணம் எளிமையாக, மனதிற்கு நிறைவு தரும் முறையில் நடந்தது. காலை 7.30 -லிருந்து 9.00 மணி வரை முகூர்த்தம். எனது மின்ரயில் கோடம்பாக்கத்தை அடைந்தபோது மணி காலை 7.30 ஆகி விட்டது. ரயில் நிலையத்திற்கு மேற்கு பக்கம் வந்து ஆட்டோ பிடித்து கோவிலுக்கு போனேன். ஒரே கூட்டமாக இருந்தது. இன்று மட்டும் 150 திருமணங்கள். லிஸ்டில் சிவராமன் பூங்கொடி பெயர் இல்லை.

நம்ம லக்கிலுக்குக்கை செல்பேசியில் கூப்பிட்டேன். அவர் தான் திருமணத்துக்கு வரவில்லை என கூறிவிட்டார். பிறகு மருத்துவர் ப்ரூனோவுக்கு போன் செய்தால் அவரும் வரவில்லை என கூறினார். சரி என்று சிவாவுக்கே ஃபோன் செய்தால் செல்லை எடுக்கவேயில்லை. கடைசியில் உண்மைத் தமிழனை கூப்பிட்டால் அவர் அப்போதுதான் திருமணத்திற்கே கிளம்பி கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து உண்மைத் தமிழனிடமிருந்து கால் வந்தது. எல்லோரும் தெப்பக்குளத்துக்கு அருகில் கூடியுள்ளனர் என அவர் கூறினார். அங்கு போயும் முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுபடியும் சிவாவுக்கு ஃபோன் செய்தால் இப்போது அவர் லைனில் வந்தார். என்னை பார்த்து விட்டதாகவும், அப்படியே அதே இடத்தில் இருக்குமாறும் கூறிவிட்டு நண்பரை அனுப்பினார். அவர் பக்கத்திலேதான் இருந்திருக்கிறார்.

நான் சிவாவுக்கும் மணப்பெண்ணுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். பெண்ணுடன் சில வரிகள் ஜெர்மனில் பேசினேன். நான் போவதற்கு சற்று முன்புதான் மாங்கல்யதாரணம் நடந்து முடிந்திருந்தது.

உள்ளே சென்று முருகனை தரிசனம் செய்தோம். பதிவர்கள் தாமிரா, அப்துல்லா, வெண்பூ, அவர் மனைவி மற்றும் சுட்டிக் குழந்தை, சஞ்சய் [இவரை முரளிகண்ணன்தானே என்று கேட்டதற்கு ஆமாம் என்றார் :)]. வெண்பூவின் மனைவி உள்ளே சன்னிதி வரை சென்று விபூதி பெற்று வந்தார். அங்கிருந்து சரவணா பவனுக்கு எல்லோரும் சென்றோம். அதற்குள் உண்மைத் தமிழனிடமிருந்து ஒரு அழைப்பு. அவர் கோவிலுக்கு வந்து விட்டிருந்தார். அவரையும் சரவணா பவனுக்கே வரச்சொன்னோம்.

ஹோட்டலுக்கு போகும் வழியில் G3 மற்றும் இம்சை அரசி வந்தனர். சரவணாபவனில் செமக்கூட்டம். நாற்காலிகள் காலியாக ஆக ஒவ்வொருவராக உட்கார்ந்தோம். ஹோட்டலில் ஸ்ரீ (ஒற்றை அன்றில்) என்னும் பதிவருடன் அறிமுகம். அப்துல்லா உபவாசத்தில் இருப்பதால் எதுவும் சாப்பிடவில்லை. சஞ்சய் எங்கள் எல்லோரையும் அமர்த்தும் பொறுப்பை ஏற்று கொண்டார். மணமகன் சிவாவின் சகோதரியும் வந்தார்.

நேற்றுத்தான் கோவிலில் சிவா திருமணத்திற்காக புக் செய்திருக்கிறார். அதனால் லிஸ்டில் பெயர் வரவில்லை. கோவிலில் நடக்கும் திருமணம் எளிமையாகவும் அதே சமயம் மன நிறைவாகவும் நடக்கும் என்பதை இன்றுதான் நேரடியாக உணர்ந்தேன். உண்மையான சமரசம் இங்குதான் உள்ளது.

போட்டோக்களை எனக்கு மின்னஞ்சல் செய்வதாக சஞ்சய் கூறியுள்ளார். அவை வந்ததும் அவற்றையும் வலை ஏற்றுகிறேன்.

அப்படியே ஒரு மினி பதிவர் சந்திப்பாகவும் அமைந்ததும் மகிழ்ச்சிக்குரியதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/08/2008

முயற்சியின் எல்லைகள்

இரு நண்பர்கள் காட்டினூடே சென்று கொண்டிருந்தனர். திடீரென புலி ஒன்று அவர்கள் முன்னால் தோன்றியது. எடு ஓட்டம் என இருவரும் ஓடினர். புலியும் துரத்தியது. “புலி அளவுக்கு வேகமாக நம்மால் ஓட முடியாது, என்ன செய்வது” என்று ஒருவன் குழற, இன்னொருவன் ஓடிக்கொண்டே கூறினான்: “அது எனக்கும் தெரியும். ஆனால் என்னைப் பொருத்தவரை உன்னைவிட வேகமாக ஓடினால் போதும்” எனக் கூறி சிட்டாகப் பறந்தான். இந்தக் கதை இங்கு ஏன் வருகிறது என்பதை பிறகு கூறுகிறேன்.

ஐ.டி.பி.எல். லில் இருந்த போது ரஷ்ய ஜெனெரேட்டிங் செட் (500 KVA என்று நினைவு) ஒன்றை சென்னை தொழிற்சாலையிலிருந்து குட்கானுக்கு வரவழைத்து நிறுவினோம். சும்மா சொல்லப்படாது, எருமை மாட்டு சைசுக்கு இருந்தது. அதே திறன் கொண்ட மற்ற ஜெனெரேட்டிங் செட்டுகளை விட மிகப்பெரிய அளவில் இருந்தது. இதைத்தான் ஓவர் இஞ்சினியரிங் எனக் கூறுவார்கள். எவ்வளவு தேவையோ அதைவ்ட அதிக மூலப்பொருட்களை உபயோகிப்பதுவே ரஷ்ய பொறியியல் நிபுணர்கள் வாடிக்கை. இதனால் என்னவாயிற்று என்றால், தேவையின்றி பொருள் விரயம் ஏற்பட்டது. அதனால் அதிகப்பலன் ஏதேனும் விளைந்தாலும், அதனுடைய அசௌகரியங்கள் அவற்றை மறக்கடித்தன.

தடை ஓட்டப்போட்டியில் பார்க்கலாம். விவரம் தெரிந்தவர்கள் தடையை க்ளியர் செய்ய எவ்வளவு தேவையோ அவ்வளவு உயரம்தான் குதிப்பார்கள். அப்போதுதான் அதிகம் களைப்படையாமல் தவிர்க்கலாம், ரேசையும் வெல்லும் வாய்ப்பு உண்டு. தேர்தல் சமயங்களில் பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சியினர் எங்கு வெற்றி வாய்ப்பு குறைவோ அங்குதான் அதிகம் பாடுபட வேண்டும். வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளை தவிர்ப்பதுவும் புத்திசாலித்தனமான செயல். பத்து சீட்டுகளில் சுமாரான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது, இரண்டு சீட்டுகளில் அமோக வெற்றி பெறுவதை விடச் சிறந்ததுதானே.

தேர்வுகளில் கேள்விகளுக்கு பதில் எழுதும்போது எவ்வளவு கேள்விகள் முடியுமோ அத்தனை கேள்விகளை முயற்சிக்க வேண்டும் என எங்கள் ஆசிரியர் கூறுவார். ஒரே கேள்வியில் கவனம் செலுத்தி எத்தனை நல்ல முறையில் எழுதினாலும் அக்கேள்விக்கு எவ்வளவு மதிப்பெண்ணோ அதைத்தான் பெற இயலும். அதுவே பரவலாக கேள்விகளை முயற்சித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். இது ரொம்பவும் ஆப்வியஸ் என்றாலும் தேர்வு எழுதும்போது பலர் அதை மறப்பதே நடக்கிறது.

நான் உறுப்பினராக இருக்கும் ப்ரோஸ் காம் மொழிபெயர்ப்பாளர்களின் தலைவாசல் ஆகும். மொழிபெயர்ப்பு தேவைப்படும் தருணங்கள் பல கம்பெனிகளுக்கு அடிக்கடி ஏற்படும். விஷயம் தெரிந்தவர்கள் இத்தலைவாசலுக்கு வந்து தங்கள் அப்போதைய வேலைக்கேற்ற மொழிபெயர்ப்பாளர்களைத் தேடுவார்கள். அதற்கென்றே மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் துபாஷிகளின் லிஸ்டுகளை அது பல மொழி ஜோடிகளுக்கு பாவிக்கிறது. உதாரணத்துக்கு இந்தியக் கம்பெனி ஒன்றுக்கு ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால், அத்தளத்திற்கு சென்று மூல மொழி ஜெர்மன், இலக்கு மொழி ஆங்கிலம் என தெரிவு செய்வார்கள். நாடு இந்தியா என்பதைத் தெரிவு செய்தால் இந்தியாவில் உள்ள அத்தனை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் அத்தனை ப்ரோஸ் மெம்பர்களும் பட்டியலில் வருவார்கள். இதில் இன்னொரு விஷயம் உண்டு. கட்டணம் செலுத்தியிருக்கும் ப்ளாட்டினம் உறுப்பினர்களின் பெயர்கள்தான் முதலில் தனி லிஸ்டாக வரும். அதில் உள்ள முதல் சில பேரிலிருந்துதான் கம்பெனிகள் தங்கள் தெரிவை செய்யும். சாதாரண மெம்பர்களின் லிஸ்டுகள் பின்னால் வரும். அதைப் பார்ப்பவர்கள் குறைவே. ஆக உறுப்பினராக இருக்கும் ஒருவர் முதற்கண் செய்ய வேண்டியது ப்ளாட்டினம் உறுப்பினர் ஆவதே. ஆண்டுக்கு 128 அமெரிக்க டாலர்கள். அதை நான் தரவில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் நானும் ப்ளாட்டினம் மெம்பர் என்பதுதான் முக்கியம்.

பிளாட்டினம் மெம்பர் ஆவது மட்டும் போதாது. அந்த லிஸ்டிலும் முதல் இடங்களுக்கு வருதல் முக்கியம். அதற்குத்தான் குடோஸ் புள்ளிகள் உதவுகின்றன. மொழிபெயர்க்கும் போது சில சொற்களுக்கு விளக்கம் சட்டென்று வராது. அப்போது ப்ரோஸ் காமில் இதை குடோஸ் கேள்வியாகப் போட்டால் சக மொழிபெயர்ப்பாளர்கள் உதவிக்கு வருவார்கள். அதுவும் அடுத்த சில நிமிடங்களிலேயே விடை கிடைக்கும். அதே போல மற்றவர்களின் சந்தேகங்களுக்கும் நாம் விடையளிக்கலாம். நமது பதில்களை ஏற்று கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கு குடோஸ் மற்றும் ப்ரௌனீஸ் புள்ளிகள் கிடைக்கும். இரண்டாவதால் நமக்கு பல பயன் உண்டு. அவற்றின் மூலமே நான் இலவசமாக ப்ளாட்டினம் உறுப்பினன் ஆக முடிந்தது. ஆனால் குடோஸ் புள்ளிகள் இன்னும் அதிக சூட்சுமம் வாய்ந்தவை. குடோஸ் புள்ளிகள் வரிசையில்தான் உறுப்பினர்கள் பட்டியலிடப்படுகின்றனர். ஆக, ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும், இந்தியாவில் நிலை கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் நரசிம்மன் ராகவன் வருகிறான் (அடியேன்). தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் பட்டியல்களிலும் நரசிம்மன் ராகவன் முதலிடத்தில் வருகிறான் (இது உலகளவு பட்டியல்களிலிருந்து). அந்த முதலிடத்தை தக்கவைத்து கொள்ள விடாது குடோஸ் கேள்விகளுக்கு பதிலளித்து அவை ஏற்கப்பட வேண்டும். இதையே அதே சமயம் முழுநேர வேலையாகவும் வைத்து கொள்ள இயலாது. எனக்கும் மொழிபெயர்ப்பு வேலைகள் வரும் அல்லவா?

ஆக, இங்கு நான் செய்ய வேண்டியது என்ன? ஒரு விஷயம். என்னதான் நான் முயன்றாலும் ஐரோப்பிய மொழிகளை பொருத்தவரையில் அகில உலகளவில் முதல் இடங்களுக்கு வர இயலாது. அதற்கென ஜாம்பவான்கள் உள்ளனர். ஆகவே அதை நான் முயற்சிக்கவேயில்லை. என்னை பொருத்தவரை இந்திய மொழி பெயர்ப்பாளர்களில் நான் முதலிடத்தில் இருப்பதுதான் முக்கியம். அதைத்தான் செய்து வருகிறேன். இந்திய கம்பெனிகள் இந்தியாவில்தான் மொழிபெயர்ப்பாளர்களை தேடுவர். அவர்களுக்கு வெளி நாட்டு மொழிபெயர்ப்பாளர்களை தெரிவு செய்வது கட்டி வராது. ஆக நான் அவர்கள் கண்ணில் படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.

நான் கூற வருவது என்ன? புலியை விட வேகமாக ஓடுவது முக்கியமல்ல. கூட ஓடுபவரை விட அதிக வேகம் ஓடுவதுதான் நாம் செய்யக்கூடியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/07/2008

சபாஷ் கூகள் க்ரோம்!

நண்பர்கள் பாரா, பத்ரி ஆகியோர் இந்த புது உலாவி பற்றி கூறியதும் எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. இருப்பினும் எனது கணினி தொந்திரவு செய்த நேரத்தில் இந்த அறிவிப்பு வந்ததுதான் பிரச்சினை.

அதாவது கணினியை துவக்குவதற்கே படாத பாடுபடவேண்டும். பலமுறை சுயமாகவே திரும்ப ஆரம்பித்து அது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது. சில சமயங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென ரீஸ்டார்ட்டுக்கு வேறு சென்றது. கவுண்டமணி சொல்வதுபோல ரொம்ப குஷ்டம்டா சாமின்னுதான் சொல்லணும். வழக்கம்போல இங்கும் எனது கணினி குரு முகுந்தன் துணைக்கு வந்தான். முதலில் வைரஸ் ஏதேனும் இருக்கும் என சந்தேகம். ஆகவே சி மற்றும் டி ட்ரைவ்களை திரும்ப லோட் செய்ய வேண்டியிருந்தது. இயந்திரங்களுக்கே உரித்தான படுத்தல் என் கணினியும் செய்தது. அதாவது முகுந்தன் இருந்தவரைக்கும் சமர்த்தாக இருந்தது. அவன் அந்தண்டை போனதும் பிரச்சினை ஆரம்பம். நான் வாக்கிங் போய்விட்டு கணினியை துவக்க எண்ணினால் அதே பழைய பிரச்சினை. இன்றுதான் முகுந்தன் அதையும் சரி செய்தான். வேண்டுமென்றே கணினியை மூடிவிட்டு சில மணிநேரம் கழித்து ஆன் செய்தபோது பிரச்சினை இல்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டும் எனக்கூறி மரத்தைத் தொட்டுக்கொள்கிறேன்.

சரி கூகள் குரோமை தரவிறக்கலாம் என்று செய்தேன். சும்மா சொல்லக்கூடாது சுகுராக இறங்கி இன்ஸ்டால் ஆயிற்று. பிரச்சினை ஏதும் இல்லை. அதிலிருந்து கொண்டுதான் இப்பதிவையே போடுகிறேன். இதற்குள் தமிழ் தட்டச்சிடுவதில் இருந்த பிரச்சினைகளை நாகராஜன் அவர்கள் அனாயாசமாக தீர்த்து வைத்துள்ளார். புது என் எச் எம் எழுத்தியையும் இறக்கிக் கொண்டேன். இதில் என்ன சிறப்பு என்றால், நான் பாமினி என்னும் லொள்ளு எழுத்துரு என்று நொந்து கொண்டதை போல இனிமேலும் கஷ்டம் இல்லை. பாமினியும் ஃபோனெடிக்கில் வந்து விட்டது. ஹிந்தி வேறு வந்து விட்டது. அதிலும் மொழிபெயர்ப்புகள் செய்யலாம். ஜாலி.

மீண்டும் கூகள் க்ரோம். பயங்கர வேகமாகச் செயல்படுகிறது. அதுவும் யூட்யூப் வீடியோ க்ளிப்புகளைப் பார்க்க ரொம்ப சௌகரியமாகவே உள்ளது. இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் திக்கி திக்கி வருவது போல எல்லாம் இல்லை.

வாழ்க்கை அற்புதமயமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/05/2008

டோண்டு பதில்கள் 05.09.2008

திமுக தொண்டன்:
1. பத்மநாபா கொலை என்பது துரோகி அழிப்பா அல்லது கொலையா? தெளிவுபடுத்தவும்??
பதில்: பத்மநாபா கொலை பற்றி ஜெயின் கமிஷனது அறிக்கையிலிருந்து சில வரிகள் தருகிறேன். அவை 1997-ல் இண்டியா டுடே பத்திரிகையில் வந்தன.
"The (Jain) report emphasises the political antagonism between the DMK government in the state and the Rajiv Gandhi government at the Centre. Karunanidhi took over as chief minister in January 1989 after his party's decisive victory over the Congress and the AIADMK. According to the report, 1989 signified "the perpetuation of the general political trend of indulging the Tamil militants on Indian soil and tolerance of their wide-ranging criminal and anti-national activities ... LTTE activities of arms smuggling, abduction of Indian citizens and officials and intimidation of the law enforcement machinery were tolerated". Citing the brutal murder of EPRLF leader K. Padmanabha, along with 15 others in Madras on June 19, 1990, Jain has resurrected memories of "the impunity with which the LTTE could operate in India".

The commission has quoted two reports of the Intelligence Bureau (IB) that speak of Karunanidhi not being averse to the elimination of EPRLF leaders by LTTE hit squads. These reports, filed on June 28, 1990 (nine days after Padmanabha's murder) referred to "the chief minister informing Natesan (an LTTE activist) to provide advance information regarding LTTE movements and also sought details of locations of LTTE hideouts to direct the police to keep away from such places". The IB also recorded the "opinion expressed by the chief minister regarding Padmanabha being a betrayer". Another report quoted by Jain claims the "chief minister also told Natesan that killing of Padmanabha was a necessity and so also of Vardaraja Perumal and that Natesan should ensure that he (Karunanidhi) was taken into confidence before such acts are committed". The commission has also recorded the evidence of former state home secretary R. Nagarajan, which further indicts Karunanidhi: "Nagarajan has deposed that the DGP informed him that the chief minister has asked him (DGP) that the police need not evince keen interest to trace out the culprits in the Padmanabha massacre till his arrival the next day for further instructions from him." To drive home the point, the commission has quoted extensively from Chidambaram's speech to the Lok Sabha on February 25, 1991, in which he claimed that the movement of senior eprlf leaders "was conveyed by the state police to the LTTE". Padmanabha's killing is important because it was the same hit squad that was later deployed to eliminate Rajiv".

If that isn't enough to damage Karunanidhi, the commission has quoted other documents and various statements given to it by former LTTE activists. For example, Kasi Anandan, a senior member of the 10-member central committee of the LTTE's political wing, admitted in his deposition on September 11, 1996, that "the LTTE had very friendly relations with Karunanidhi. In the days of Karunanidhi as CM, movement of LTTE was more free. Local administration was also friendly in Tamil Nadu". Anandan even disclosed that the "LTTE was able to communicate from Jaffna to Tamil Nadu when the V.P. Singh government was at the Centre and the Karunanidhi government in Tamil Nadu."

Jain has recorded vivid details of the LTTE's free access to Karunanidhi and key state government officials. Anandan revealed that he, along with another LTTE leaders, used to meet Karunanidhi in strict privacy: "I have met Karunanidhi several times alone and once or twice with Natesan." Neither the Tamil Nadu government nor the Centre had any clue as to what transpired in these meetings.

Further, Jain records that Karunanidhi and top state officials were directly involved in getting many LTTE cadres released from police custody. The interim report contains an IB account of the interference during the raid on a LTTE hideout on November 30, 1990. At least two key LTTE cadres, Kiruban and Anandan, were let off due to instructions from above: "A posse of policemen converged on the Thillai Nagar hideout of LTTE in Tiruchirappalli in the early hours of today (Nov.30) and laid siege to the premises that had 19 LTTE cadres including Kiruban and Kasi Anandan, the LTTE representative liaising with the Tamil Nadu Government. The cadres refused to let the police in and issued an ultimatum to the effect that if the siege was not lifted by 12 noon today, all the cadres would consume cyanide and commit suicide."
கருணாநிதி அவர்களது புலிகள்பால் பரிவைப் பற்றி ஜெயின் கமிஷன் மேலும் பேசுகிறது. அது பற்றி வேறு ஒரு சமயம் பார்ப்போம். இக்கேள்விக்கு இப்போது வருகிறேன். பத்மநாபா ஒரு துரோகி என பிரபாகரனால் கணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதுதான் நிஜம். பத்மநாபா ஒரு துரோகியாகவே கருணாநிதி அவர்களாலும் சித்தரிக்கப்பட்டார் என்பதையும் ஜெயின் கமிஷன் அறிக்கை கூறுகிறது. இக்கொலைகள் நடக்கும்போதே புலிகள் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. ராஜீவின் கொலைக்கு அப்புறம் சுத்தமாக அழிந்தது.


அனானி (பெயர் டோண்டுவினால் சென்சார் செய்யப்பட்டது):
1. தமிழ்நாட்டு தமிழர்கள் அதாவது மலையக தமிழர்கள் வந்தேறிகள் என்று சொல்லி அவர்களை இந்தியாவிற்கு திரும்ப அனுப்பியதில் யாழ்பாணவாசிகளுக்கு பெரும் பங்கு உள்ளதாமே?? உண்மையா??
பதில்: யாழ்ப்பாணவாசிகளுக்கும் மட்டக்களப்புவாசிகளுக்கும் ஒத்துக் கொள்ளாது. புலிகளுக்கு இசுலாமியரைப் பிடிக்காது. இசுலாமியரோ தங்களைத் தமிழர்கள் என்பதைவிட இசுலாமியர் என்றே வரையறுத்துக் கொள்ள விரும்பினர் என்றும் அறிகிறேன். அவற்றையெல்லாம் புரிந்து கொள்வது கடினம். இடியாப்பச் சிக்கல்கள் அவை.

சித்தார்த்தா:
1. உங்கள் வாழ்க்கையில் பின்னோக்கிப் பார்த்து, செய்யாமல் விட்டதை எண்ணி வருந்தியுள்ளீரா?
பலமுறை அவ்வாறு என் வாழ்வில் நடந்திருக்கிறது. செய்யாமல் விட்டது மட்டுமல்ல செய்தவை பற்றியும் வருந்தியுள்ளேன். பலமுறை கடந்த காலத்துக்கு சென்று அவற்றை சரிசெய்ய ஏதாவது கால யந்திரம் கிடைக்காதா என்றும் ஏங்கியுள்ளேன். அதே சமயம் அவ்வாறு செய்யும் பட்சத்தில் அப்போதைய டோண்டு ராகவன் காலப்பயணி டோண்டு ராகவன் சொல்படி கேட்பானா என்பதும் சந்தேகமே. சமீபத்தில் 1971 ஜனவரியில் மத்தியப் பணித்துறையில் சேர்ந்த அடுத்த நாளுக்கு பொக்காரோ ஸ்டீல் கம்பெனியில் வேலைக்கான நியமன உத்திரவு வந்தது. அதில் சேர்ந்திருந்தால் பதவி உயர்வுகள் வேகமாக வந்திருக்கும். ஆனால் நான் ஜெர்மனோ பிரெஞ்சோ படித்திருக்க இயலாது. ஆக, அப்போது கஷ்டமாகப் பட்டது இப்போது பின்னோக்கி பார்க்கும்போது நல்லதாகவே தெரிகிறது. எனது வாழ்க்கையில் மட்டுமல்ல, எல்லோருக்குமே இம்மாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கும் என்பது உறுதி.

2. ஜயேந்திரர் வழக்கு என்னாயிற்று?
இழுபறியாக போய்க்கொண்டிருக்கிறது. இணையத்தில் போய்ப்பார்த்தால் இம்மாதிரி செய்தி வருகிறது.
"ச‌ங்கரராம‌‌ன் கொலை வழ‌க்கு: செ‌ப்.24 விசாரணை! (வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008(16:05 IST)
ச‌ங்கரராம‌ன் படுகொலை வழ‌க்‌கி‌‌ல் புது‌ச்சே‌ரி அரசு, அரசு வழ‌க்க‌றிஞ‌ரை ‌நிய‌மி‌க்க காலதாம‌த‌ம் ஏ‌ற்படுவதா‌ல் விசாரணையை செ‌‌ப்ட‌ம்ப‌ர் மாத‌ம் 24ஆ‌ம் தே‌தி‌‌க்கு கூடுத‌ல் மாவ‌ட்ட ‌நீ‌திப‌தி வி. ஆறுமுக‌ம் த‌‌ள்‌ளிவை‌த்தா‌‌ர்.
கா‌ஞ்‌சிபுர‌ம் வரதராஜ பெருமா‌ள் கோ‌யி‌ல் மேலாள‌ர் ச‌ங்க‌ரராம‌ன் கொலை வழ‌க்கு தொட‌ர்பாக கா‌‌ஞ்‌சி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர்கள் ஜெயேந்திர சரஸ்வதி, ‌விஜயே‌ந்‌திர சர‌ஸ்வ‌தி உ‌ள்பட 24 பே‌ர் மீது வழ‌‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்த வழ‌க்கு புது‌ச்சே‌ரி ‌நீ‌‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இ‌ன்று இ‌ந்த வழ‌க்கு ‌விசாரணை‌க்கு வ‌ந்த போது கு‌ற்ற‌ம் சா‌ற்ற‌ப்‌‌ப‌ட்ட 24 பே‌‌‌ரி‌ல் கா‌ஞ்‌சி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர், ‌விஜயே‌ந்‌திர சர‌ஸ்வ‌தி உ‌ள்பட 16 பே‌‌ர் ஆஜராகவி‌ல்லை.
இ‌ந்த வழ‌க்‌கி‌‌ல் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் ‌உச்ச நீதிமன்றத்தில் வழ‌க்கு தொட‌ர்‌ந்‌திரு‌ந்தன‌ர். இ‌‌ந்த வழ‌க்‌கு தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என்றும், புதுச்சேரி அரசுதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அரசு வழ‌க்க‌றிஞரை ‌நிய‌மி‌க்க புது‌ச்சே‌ரி அரசு நடவடி‌க்கை எடு‌த்து வருவதாக ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்திற்கு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.
ச‌ங்கரராம‌ன் படுகொலை வழ‌க்‌கி‌ல் பு‌து‌ச்சே‌ரி அரசு‌, அரசு வழ‌க்க‌றிஞரை ‌நி‌ய‌மி‌க்க உ‌ள்ளதா‌ல், அடு‌த்த மாத‌ம் 24ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌க்கு ‌விசாரணை துவங்கும் எ‌ன்று எ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது".
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!

3. மாநில அரசுக்கும் தேர்தல் லோக்சபா தேர்தலுடனேயே வந்து விடுமா?
வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவேயே கருணாநிதி அவர்கள் சமீபத்தில் 1971-ல் அதைத்தானே செய்தார். சரித்திரம் திரும்புகிறது போலும். அத்துடன் இன்னொன்றும் கூறுவார்கள். அதாவது, "சரித்திரம் திரும்ப வரும் வாய்ப்பு உண்டு. முதல் தடவை சரித்திரமாக, அடுத்த முறை அபத்தமாக".


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது