சோ அவர்கள் ET-க்கு தந்த பிரத்தியேக நேர்காணலை பார்த்ததும் என்னுள் பல எண்ணங்கள் கிளர்ந்தெழுந்தன. பிரெஞ்சில் déjà vu என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருள் ஏற்கனவே பார்த்தது என்று வரும். அதை கடைசியில் விளக்குகிறேன்.
கஸாண்ட்ரா (Cassandra) என்னும் பாத்திரம் ஹோமரின் இலியாடில் வரும். அது ட்ராய் மன்னன் ப்ரியாமின் பெண்ணின் பெயர். அவளது சகோதரர்கள்தான் பாரிஸ் மற்றும் ஹெக்டார். கிரேக்க ராணி ஹெலனை பாரிஸ் ஓட்டி வந்து விடுகிறான். அது ட்ராயின் பத்து ஆண்டுகால முற்றுகையில் உருவெடுத்து ட்ராய் நகரம் அழிவதற்கே வழிகோலுகிறது. இந்த கஸாண்ட்ராவால் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூற இயலும் என்பது அவள் பெற்ற வரம். அதே நேரத்தில் அவள் கூறுவதை யாருமே நம்ப மாட்டார்கள் என்றும் அவளுக்கு செக் வைக்கப் படுகிறது.
ஹெலனை அழைத்துவரக்கூடாது, அவ்வாறு செய்தால் ட்ராய் அழியும் என்று அவள் கூறுகிறாள், யாருமே நம்பவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முடிவில் ஒரு மரக்குதிரையை மட்டும் விட்டு விட்டு கிரேக்கர்கள் ட்ராயிலிருந்து பாய் விரித்து கப்பலை செலுத்துவது போல போக்கு காட்ட, அந்த குதிரையை ட்ராயுக்கு உள்ளே இழுத்து வரலாகாது என்றும் அதே கஸாண்ட்ரா கூறுகிறாள். அப்போதும் யாரும் அவள் சொல்வதை லட்சியம் செய்வதில்லை. அப்புறம் என்ன ஆயிற்று என்பதை பார்க்க இலியாட் படிக்கவும். ஹெலன் ஆஃப் ட்ராய் என்னும் தலைப்பில் படமும் எடுத்துள்ளார்கள்.
இப்போது இக்கதையெல்லாம் ஏன் என கேட்கிறான் முரளி மனோஹர். விஷயத்துக்கு வருகிறேன்.
சோ சொன்ன பல விஷயங்கள் இப்போது ரொட்டீனாக பலிக்க ஆரம்பித்துள்ளன. முதலில் புலிகள் விஷயத்தைப் பார்ப்போம்.
புலிகள் வந்த நாள் முதலிலிருந்தே சோ அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் இல்லை என சொல்லி வந்தார். ஆரம்பத்தில் புலிகளை விரும்பிய பலருக்கு அவரை இதனால் பிடிக்காமல் போயிற்று. மற்ற காரணங்கள் இருந்தாலும் இதுவும் அதற்கு ஒரு முக்கிய காரணமே. இப்போது புலிகள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட நிலையில் அவர் சொல்லி வந்த உண்மைகள் பலருக்கு புரிய ஆரம்பித்துள்ளன. இந்திய தேர்தலில் புலிகள் பிரச்சினை பெரிய பங்கு வகிக்காது என்றார். அப்படியில்லை என பலர் சீன் காட்டினாலும் அவர் சொன்னதுதான் நடந்தது. ஒரு சராசரி தமிழக வாக்காளனுக்கு ஆயிரத்தெட்டு கவலைகள், ஆனால் அவற்றுள் புலிகள் உள்ளே வரவில்லை என்பதே நிஜம்.
அவர் மேலே சுட்டப்பட்டுள்ள செவ்வியில் சொன்னது போல இங்குள்ள சில விளிம்பு நிலை மனிதர்கள் வேண்டுமானால் ஏதேனும் போராட்டங்களில் ஈடுபடலாம், சிலர் தீக்குளிக்கும் அளவுக்குக்கூட போகலாம். ஆனால் அப்போராட்டங்கள் எல்லாமே மாநில அரசால் சுலபமாக அடக்கப்பட்டு விடும். ஏனெனில் அம்மாதிரியான போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு கிட்டாது. காரணம், அவர் ஏற்கனவேயே கூறி வந்ததைப் போல இது எப்போதுமே எந்த தேர்தலிலும் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, இப்போது முடிந்த தேர்தலிலும் கூட அதே நிலைதான். எதிர்க்கட்சிகள் கோஷம் போட சில வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதனால் எல்லாம் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்தம்.
புலிகள் ஒடுங்கிய நிலையில் இங்குள்ள இளைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது சக உணர்வு போராட்டங்களாக வெடிக்காதா எனக் கேட்டால், தமிழனுக்கு தமிழன் என்னும் அளவில் ஒரு ஈழத் தமிழனுடன் சக உணர்வு இருக்கும். ஆனால், கோபமுள்ள போராட்டமாக அவை மாற வாய்ப்பில்லை என்பதை மறுக்க இயலாது. புலிகளை பொருத்தவரை இங்குள்ள தமிழர்களுக்கு அவர்களுடன் சக உணர்வு இல்லை. ஒரு வேளை தேர்தலில் வெறுமனே பேசப்படும் பிரச்சினையாக வேண்டுமானால் அது பின்னால் அது உருவாகலாம், அவ்வளவே என சோ கூறுவதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
புலிகள் ஆதரவு தொல். திருமாவளவன் ஓரிடத்தில் ஜெயிக்கும் அதே நேரத்தில் இன்னொரு புலி ஆதரவாளர் வைக்கோ தோற்கிறார். இதுவும் சோ சொன்னதைத்தான் ஊர்ஜிதம் செய்தது.
புலிகளின் தோல்வியால் தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரிக்கக் கூடும். ஆனால் அகதிகளுடன் அகதிகளாக எஞ்சியுள்ள புலிகளும் வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். இலங்கை அரசும் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் கூறுவது சரியே என நான் நினைக்கிறேன்.
கூட்டிக் கழித்து பார்த்தால் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்னும் பெருமூச்சு எழுவதை தடுக்கவியலாதுதான். ஏனெனில், தமிழர்களுக்கு அதிக அனுகூலங்களை அது தன்னுள் கொண்டிருந்தது. அதை கெடுத்தது புலிகளே. இதையெல்லாம் சோ அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே சொல்லி வந்திருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எது எப்படியானாலும் தனி ஈழம் என்பது எதிர்க்கத் தக்கதே. இலங்கையின் உள்ளே ஒரு தமிழ் மாநிலம், இருக்க வேண்டும், சிங்களவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகளோடு என்பதுதான் சரியாக அமையும் என சோ சொன்னது சரியே.
ஆகவே இந்திய அரசு தேவையானால் அழுத்தம் கொடுத்து ஸ்ரீ லங்கா அரசு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்த வேண்டும். ஏனெனில், இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இலங்கை அரசுதான் என்பதையும் நம் மறக்கக் கூடாது. இதையெல்லாம் சோ சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதே.
மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.
வி.பி.சிங்கை எல்லோரும் கொண்டாடும் காலத்திலிருந்தே அவர் நம்பத் தகாதவர் என்பதை சோ வலியுறுத்தி வந்திருக்கிறார். அந்த மனிதர் செய்த சொதப்பல்களால் இந்திய அரசியலில் விளைந்த குழப்பங்கள், முக்கியமாக மண்டல் விஷய பிரச்சினைகள் இன்னும் நாட்டை பீடிக்கின்றன.
இந்தியாவை சோவியத் யூனியன் அடிமைபடுத்த முயற்சிக்கிறது என்பதை அவர் ஆதாரங்களுடன் எழுபதுகளிலேயே கட்டுரைகளில் எழுதியபோது பலர் அவரை நம்பத்தான் இல்லை. இருப்பினும் சோவியத் யூனியன் அழிந்ததும் வெளியான பல ஆவணங்கள் எவ்வாறு நம் நாட்டின் பல தலைவர்கள் சோவியத் யூனியன் பேச்சுக்கு தாளம் போட்டனர் என்பது தெரிந்து கொண்டபோதுதான் அவர் சொன்னதன் உண்மை பலருக்கு புலப்பட்டது.
என்ன செய்வது, கஸாண்ட்ரா சொல்லும்போது யாரும் நம்பவில்லை. உண்மை தெரிந்தபோது எல்லாமே டூ லேட் என ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் இம்மாதிரி நடப்பதை பார்த்தால் இந்த déjà vu எண்ணங்களை தவிர்க்க இயலாதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
6 hours ago
21 comments:
""வி.பி.சிங்கை எல்லோரும் கொண்டாடும் காலத்திலிருந்தே அவர் நம்பத் தகாதவர் என்பதை சோ வலியுறுத்தி வந்திருக்கிறார். அந்த மனிதர் செய்த சொதப்பல்களால் இந்திய அரசியலில் விளைந்த குழப்பங்கள், முக்கியமாக மண்டல் விஷய பிரச்சினைகள் இன்னும் நாட்டை பீடிக்கின்றன""
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் ப்ளிஸ்!
சோ, புலிகளை எதிர்த்த அளவுக்கு ஈழ தமிழ் பொதுமக்கள் பற்றி கவலை கொள்ளவோ மாற்று கருத்துக்களை வைக்கவோ இல்லை. இவ்வளவு ஏன், அவரது அமெரிக்காவே இலங்கையின் போர் குற்றங்கள் விசாரணைக்குரியது என்று சொல்லிவிட்டது. சிங்கள அரசு நியாயமான போரை நடத்துவது போல நடந்து கொள்கிறார். சிங்கள அரசை விட சிங்கள இறையாண்மையை பற்றி அதிகம் சோ கவலை கொள்வதையும் நான் பொய் என்கிறேன், சோ இது வரை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இறையாண்மை பற்றி கவலை கொண்டதுண்டா, இலங்கை போல...!
இதற்கான பதிலை தங்களிடம் எதிர்பார்க்கும், ...
சோ ரசிகன்
(அதற்காக எல்லாவற்றையும் ஒப்பு கொள்ள முடியாது!)
@மணிப்பாக்கம்
பிரச்சினைக்கு அடிப்படை காரணமே சிங்கள அரசு என்பதையும் சோ சொல்லித்தான் வந்திருக்கிறார்.
புலிகள் சிறு பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பெல்ட் பாம் கட்டி அனுப்பிய நிலையில்தான் சிங்கள அரசு எல்லோர் மீதும் சந்தேகம் கொள்ளும் நிலை வந்தது என்பதை சோ சொல்வதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
போர் எதிக்ஸ் என்பது வெறுமனே பாடங்களில் படித்து பரீட்சை எழுதி பாஸ் செய்வதற்காக இல்லை. அதன் பிராக்டிகல் அமலாக்கம் எப்போதுமே உண்டு.
ஜெனீவா கன்வென்ஷன் கூறுகிறது, தூதர்களை கொல்லக் கூடாது என. அவ்வாறு இல்லாவிட்டால் எல்லாமே போர் என்றுதான் முடியும். சமாதானப் பேச்சுக்கு இடமே இருக்காது.
சமாதானம் பேச வந்த அமிர்தலிங்கத்தை ஏமாற்றி புலிகள் கொன்றதுதான், இப்போது நடேசன் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தாலும் கொல்லப்பட்டதில் முடிந்துள்ளது.
இம்மாதிரி பல பல unethical விஷயங்களை புலிகள் செய்ததாலேயே இப்போது அவர்களுக்கு அதே ட்ரீட்மெண்ட் கிடைத்த போது கேட்பார் இல்லாமல் அழிந்தது நடந்துள்ளது.
சிவிலியன்களை கடைசி அரை கேடயமாக உபயோகித்த்னர் என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இதை சோ முதலிலிருந்தே கூறி வந்துள்ளார். இதையெல்லாம் மீறித்தான் இலங்கை அரசு செயல்பட வேண்டியிருந்தது என்பதையும் மறக்கலாகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அண்ணா.. ஒங்களப் பொருத்த வரை 1)மக்கள் = கொறஞ்சது டோண்டு ஸ்டேடஸ்க்கு இருக்கறவா
2)தத்துவார்த்த தலைவர் = சோ க்கு கொறவா யாரும் கிடையாது
3) நாடு = டோண்டுவும் அவரைப் போன்றவர்களும் வசிக்கும் இடம்
4) மொழி = நீங்க பேசறத்துக்கு கொறவா ஏதுவும் கிடையாது
சரி.. சரிண்ணா.. புரியறது..
ஆனா பகவானே.. மக்கள்ல நான் கடவுள் படத்தல வர்றவா மாதிரிதான் பெரும்பாலும் இருக்கா.. அவாளுக்கு என்ன பதில் சொல்றதுண்ணா.. ம்த்ருதேவா மாறப் போறளா... ராசபக்ச மாறனது போறாதா.. ஏன்னா வயத்தறச்சல கொட்டிக்கறேள்...
வருந்துகிறேன், தவறாக என்னை புரிந்து கொண்டீர்கள், புலிகள் அழிக்கபட்டதை வரவேற்கிறேன், அவர்கள் கோழைகள்!
ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் இறையான்மை பற்றி சோ வின் கருத்துக்களை கேட்டனே.... நன்றி !
சோ தம் காலத்துக்கு முன்னே பிறந்த ஒரு சிந்தனையாளர். அவர் சொல்வதை எல்லாம் வேடிக்கை பார்ப்பது போலவோ, அல்லது கோமாளி சொல்வது போலவோ தான் சித்தரிக்கப்படுகிறதே தவிர அவரது வார்த்தைகளில்
ஊடுருவும் கருத்துக்களை ஆணித்தரமான வாதங்களை தமிழ்ச்சமூகம் அந்தந்த கால கட்டங்களிலே ஒப்புக்கொள்வதில்லை. இதற்கு காரணம் ஒரு சராசரி இந்திய்ன் இன்று எந்த அளவுக்கு எதிர்மறை உணர்வுகளை
எழுப்பிவிடும் எண்ணங்களுக்கு த்தன்னை உட்படுத்திக்கொள்கிறானோ அந்த அளவுக்கு சட்ட்பூர்வமாகவோ,
நியாயமாகவோ அல்லது லாஜிகலாகவோ ( இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன ? தெரியவில்லை) எண்ணுவதில்லை.
கடந்த 40 வருட அரசியல்வாதிகளின் போக்கும் மற்றும் சினிமா கலாசாரமும், தமிழ் மக்களை எதிர்மறை எண்ணங்களுக்கு, (NEGATIVE EMOTIONAL THOUGHTS) உதாரணமாக வன்முறை, கூடா நட்பு, உழைக்காது வரும் பொருள், ஆண் பெண் பால் கவர்ச்சி, அடிமையாக்கிவிட்டதென்றால் மிகையாகாது.
இன்றைய இளைஞர் சமுதாயம் அரசியல் மற்றும் சினிமா போக்கிலிருந்து விடுபட்டு ஆக்க பூர்வமான சிந்தனைகள்
வயப்பட்டால்தான் இது சாத்தியம். ஈழத்தமிழர் பிரச்னை மட்டுமன்றி மற்ற பிரச்னைகளிலும் முக்கியமாக பொருளாதார, சமூக நிலைகளிலும் சோவின் நிலைப்பாடு பாரபட்சமற்றது.
நிற்க.
ஈழத்தமிழர்கள் வேதனைகள் தொடர்கின்றன. பான் கீ முனுக்குக்கூட அங்கு நடக்கும் கான்சன்ட்ரேசன் காம்புக்குச் செல்லும் அனுமதி இல்லை. அவர் ஒரு 2 லட்சம் பேர் வேதனையுறுவதைப்பார்த்து கண்ணீர் வடித்திருக்கிறார்.
இங்கு கவிதை எழுதியவரும், உண்ணாவிரதம் இருந்தவர்களும், தேர்தல் காலத்தே ஆவேசம் கொண்டு பேசியவர்களும் இவர்களுக்கு இன்று என்ன உதவி செய்யப்போகிறார்கள் ?
கடைசியாக,
சோ கடந்த 40 வருடங்களாக சொல்வதெல்லாம் ஒன்றே: சுயமாக சிந்தனை செய்.
நமக்கோ அதெல்லாம் பழக்கமில்லை.
அது நமது விதி.
வி.பி. சிங் 20 ஆண்டுகள் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டை அப்படியே எடுத்து சட்டமாக்கியது தனது அரசியல் நிலையை நிலைநிறுத்திக் கொள்ள மட்டுமே. மற்றப்படி அவருக்கு சமூக நீதிகளில் எல்லாம் அக்கறை இருந்ததென்று சொல்ல இயலாது.
அதுவும் அந்த மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டே கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான சென்சஸ் ரிப்போர்டை அப்படியே இற்றைப் படுத்தாது தயாரிக்கப் பட்டதே. ஆக, வி.பி. சிங் அதை அமலாக்கம் செய்த போது அது கிட்டத்தட்ட அப்போது 60 ஆண்டுக்கு முந்தைய நிலைஅயைத்தான் காட்டியது. எப்படியும் கோர்ட் அதை தடுத்து விடும் தான் நல்ல பெயர் வாங்கிவிடலாம் என எண்ணியிருக்கிறார். அதனால் பலன் பெற்ற ஒரு வெஸ்டட் இண்டெரெஸ்ட் குழு வேகமாக உருவாகியதுதான் நடந்தது. வட இந்தியாவே இதில் கொதித்து போனது. எல்லா முயற்சியும் தனது பிரதமர் பதவியை நிறுத்தி கொள்ள அவர் செய்த யுக்தி, அதுவும் அவருக்கு காலணா பிரயோசனம் இல்லாமல் போனதுதான் மிச்சம். அது ஒரு பெரிய் நகைமுரண்.
எது எப்படியானாலும் அவரது குறுகிய நோக்கு பார்வை பின்னால் இன்னும் இருக்கும் பல கந்திர கோலங்களுக்கு முக்கிய காரணம்.
அப்படிப்பட்ட வி.பி. சிங்கை முதலிலிருந்தே சரியாக அடையாளம் கண்டு இந்த மனிதர் செய்வது நாட்டுக்கு கெடுதி என்பதை கண்டறிந்தவர்களில் முக்கியமானவர் சோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சோ இது வரை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இறையாண்மை பற்றி கவலை கொண்டதுண்டா, இலங்கை போல...!//
ஈராக், ஆஃப்கானிஸ்தானில் நிலைமை எப்படி போனால் நமக்கு என்ன என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஈராக், ஆப்கானிஸ்தான் நிலைமை எப்படி போனால் என்ன என்று நாம் விட்டு விட முடியாது. ஏனெனில் ஆப்கான் , ஈரான், ஈராக் போன்ற தேசத்து மக்களுடன் பண்டை காலம் தொட்டே நாம் நெருங்கிய கலாச்சார தொடர்பு வைத்துள்ளோம், இப்பொழுது தான் பாகிஸ்தான் என்ற நாடு அவர்களுக்கும் நமக்கும் குறுக்கே நிற்கிறது. மேலும் அப்கானில் செயல்படும் தலிபான் போன்ற அமைப்புகள் இந்திய எதிர்ப்பையும், அரசு இந்திய ஆதரவையும் கொண்டுள்ளன. எனக்கும் ஒரு தேசமாக சிங்களர்களும் , தமிழர்களும் இருக்க வேண்டும் என்று ஆசை தான் ஆனால் இந்த வரிகளில் எனக்கு ஒப்புதல் இல்லை "எது எப்படியானாலும் தனி ஈழம் என்பது எதிர்க்கத் தக்கதே" . இலங்கை பிரச்சினையை இங்கு உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நாம் ஏன் தனி ஈழம் அமைவதை மட்டும் தடுக்க வேண்டும்.
அன்புடன்,
ராம்குமார்
"They (LTTE) could have buried their arms somewhere for later use". This is Cho's comment in his interview to ET. He has been saying similar stuff about Sadam Hussain. Sadam would have buried WMDs is Cho's belief. The US and its allied forces have tried to find those WMDs and never they found anything close to WMD. If you like, you can choose the statement by Cho that suits your claim. Although, I have been reading Thuglak for over 15 years, I don't think his opinion about SL tamils and SL government is correct. Cho claims that India can force SL to go for a political solution after LTTE. (i) The SL ambassador says that there is no discrimintaion of tamils (Even Cho don't believe this!) (ii) Fonseka says that India didn't help in our war against terrorism. These two statements came after Prabhakaran's death. While the war was going on, a minister has said in SL parliament that with out India's help we could not have been where we are (Close to winning the war against terrorism). After the war, their stand is changing. Already, SL indicates that their friend is China and Pakistan, not India. Hamabntota port has been leased to china by SL, which was under LTTE control till 2002. This port is part of China's "String of Pearls", which looks like a noose around India. Rajapakshe said that the estern province is liberated and to rebuild, he announced a program called "Raise of East". If you want to know the raise of east, you can read theis article http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5382676/Sri-Lanka-accused-of-ethnic-cleansing-of-Tamil-areas.html
30 வருடத்துக்கு முன்பு இலங்கையில் இளைஞர்கள் அரசியல் பிரச்சனைகளுக்கு வன்முறையை ஆதரிக்க தொடங்கிய கால கட்டம். அப்போ சோ அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் உரை ஆற்றினாராம். பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வு அல்ல வன்முறையால் மோசமான விளைவுகளே ஏற்படும் என்று குறிப்பிட்டாராம். சில வருடங்களின் பின் தமிழர்கள் முன்பு எப்போதும் அனுபவிக்காத கொடுமையான அடக்கு முறையை புலிகள் அவர்கள் மீது செலுத்திய போது தாங்கள் பாம்புக்கு பால் வார்த்து வளர்த்து விட்டோமே என்று கவலைப்பட்டனர். அப்போ சோ அவர்களின் யாழ் பல்கலைக்கழக உரையை கேட்ட மாணவர்கள் சோ அப்பவே சொன்னாரே நாங்கள் தான் கேட்காமல் விட்டோம் என்று கவலைபடுவார்கள். சோ அவர்கள் உயர்ந்த சிந்தனையாளர்.
தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் கொன்று சிறுவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு பிடித்து கொண்டு சென்று பலி கொடுத்து மக்களை அழித்து லட்சகணக்கான மக்களை அகதிகளாக்கிய பயங்கரவாதம் இறதியில் அழிந்துவிட்டது.
தங்களை தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லி இலங்கை தமிழாகளுக்காக முதலை கண்ணீர் வடிப்போர் புலிகள் கேடயமாக வைத்திருந்த மக்களை விட்டுவிடும்படி புலிகளை எப்போதாவது கேட்டனரா?
சோ தற்போது பாரதீய ஜனதாவை நம்புங்கள் என்று பலமுறை கத்தி விட்டார்? ஆனால் மக்கள் தான் கேட்பதாக இல்லை. அது ஏன் என்று தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனாலும் இந்த நிலை மாறும். நாம் தான் அந்த நேரத்தில் இருப்போமா என்று தெரியவில்லை
இதுவே சோ மட்டும் பிராமணனாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் நிலை மிகச் சிறப்பாக இருந்திருக்கும். (கருணாநிதியை விட) - பிராமண துவேஷம் என்பது ரத்தத்தில் ஊறிவிட்ட இம்மாநிலத்தில் என்ன செய்ய இயலும். கரடியாய் கத்திக் கொண்டிருக்க வேண்டியது தான்.
"இந்திய தேர்தலில் புலிகள் பிரச்சினை பெரிய பங்கு வகிக்காது என்றார். அப்படியில்லை என பலர் சீன் காட்டினாலும் அவர் சொன்னதுதான் நடந்தது." You have chosen, what helps you to write this post. Let me point out some other points. Cho said that Congress can't tackle terrorism and BJP can! Also, BJP is strong is many states, hence BJP alliance will win! What Cho said about BJP didn't happen!
You hit the bull's eye with the following statement:
//வி.பி. சிங் 20 ஆண்டுகள் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டை அப்படியே எடுத்து சட்டமாக்கியது தனது அரசியல் நிலையை நிலைநிறுத்திக் கொள்ள மட்டுமே. மற்றப்படி அவருக்கு சமூக நீதிகளில் எல்லாம் அக்கறை இருந்ததென்று சொல்ல இயலாது.//
Well Said Mr. Dondu. If V.P.Singh really believed in reservation & true upliftment of those people who benefit from reservation, he would have proved it to the world by getting himself admitted in a Govt. hospital in India and got treated by a doctor who became one through reservation. Instead, he went to London to get treatment. V.P.Singh has been a hypocryte to the core.
Same is the case with "Maaveeran" Prabakaran.
When you have time, please read the following post:
http://hereisarun.blogspot.com/2009/05/blog-post.html
//
லாஜிகலாகவோ ( இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன ? தெரியவில்லை)
//
அந்த வார்த்தை பெரிதும் பயன்படுத்தப்பட்டு "கற்பழிக்கப்பட்ட" வார்த்தை. அது தான் "பகுத்தறிவு"
//
ி.பி. சிங் 20 ஆண்டுகள் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டை அப்படியே எடுத்து சட்டமாக்கியது தனது அரசியல் நிலையை நிலைநிறுத்திக் கொள்ள மட்டுமே. மற்றப்படி அவருக்கு சமூக நீதிகளில் எல்லாம் அக்கறை இருந்ததென்று சொல்ல இயலாது.
//
இப்பொழுது 27% இடஒதுக்கீட்டை சட்டமாக்கிய அர்ஜுன் சிங் நிலை என்ன ?
அவர் ஏன் மந்திரி ஆகவில்லை ? அல்லது ஆக்கப்படவில்லை ?
அவரது சொந்த மகளுக்கே காங்கிரஸ் டிக்கட் கொடுக்காமல் கைவிட்ட நிலை தெரியுமா ? அவர் சுயேச்சையாக நிற்க, தந்தை அர்ஜுன் சிங், மகளை கைவிட்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தாராம். என்ன கொடுமை சரவணன் இது.
பகுத்தறிவு = commonsense
அறிவுப்பூர்வமான தர்க்கரீதியாக = logical
//
லாஜிகலாகவோ ( இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன ? தெரியவில்லை)
//
அந்த வார்த்தை பெரிதும் பயன்படுத்தப்பட்டு "கற்பழிக்கப்பட்ட" வார்த்தை. அது தான் "பகுத்தறிவு"
இந்தப் பின்னூட்டம் ரசிக்கும் படி இருந்தது.
குப்பு குட்டி.
//இப்போது நடேசன் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தாலும் கொல்லப்பட்டதில் முடிந்துள்ளது.//
புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது சைனைட் அருந்தி தற்கொலை செய்யவைத்த, தங்களுக்கு பிடிக்காதோர் பலரை நயவஞ்சகமாக கொலை செய்த புலி தலைமை தாங்கள் மட்டும் உயிர் வாழும் ஆசையில் வெள்ளைக் கொடி ஏந்தி இலங்கை இராணுவத்திடம் சரணடைய வநதுள்ளார்கள். தமிழ் துரோகிகள் என்று புலி தலைமையை தவிர வேறு யாரும் கிடையாது.
http://thatstamil.oneindia.in/news/2009/06/01/india-ltte-men-may-have-slipped-into-india-warning.html
அகதிகள் என்ற போர்வையில் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் வரை தமிழகத்திற்குள் ஊடுறுவியிருப்பதாகவும், எனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கடை நிலைப் போராளிகளே இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம் எனவும், அகதிகள் முகாம்களில் இவர்கள் அகதிகள் போல தங்கியிருக்கலாம் எனவும் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன.
இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோரப் பகுதிகளில் தீவிர உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் நடமாடுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைக் கொண்டவர்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்றவர்கள் மட்டுமே திறந்த வெளி முகாம்களில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் சில முக்கிய தலைவர்களைக் காணவில்லை என்று இலங்கை அரசே கூறியுள்ளது. குறிப்பாக உளவுப் பணிகளில் கில்லாடியான பொட்டு அம்மான் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Post a Comment