11/07/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 07.11.2009

நீதிபதி தினகரன் விவகாரம்
இவர் வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்ததில் மறுப்பு ஏதும் பெரிதாக இருக்கவில்லை. ஆயினும் அவரை டிஃபண்ட் செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்த்தால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவரை விட்டுவிட வேண்டும் என்ற தோரணையில் வீரமணி, தமிழ் ஓவியா வகையறாக்கள் கூறுகின்றனர். மேல் விவரங்களுக்கு இட்லி வடையின் இப்பதிவைப் பார்க்கலாம்.

ஆனால் நான் சொல்லவருவது வேறு. இதே மாதிரித்தான் நீதியரசர் ராமசாமி, அவரது மாமனார் நீதியரசர் வீராச்சாமி ஆகியோர் சர்ச்சையில் சிக்கிய போது இதே மாதிரி வாதங்களை முன்வைத்துத்தான் அவர்களது ஆதரவாளர்கள் பேசினார்கள். அதுவும் ராமசாமி பார்லிமெண்டால் இம்பீச் செய்யப்படும் அளவுக்கு விஷயம் போயிற்று என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

உன் முகத்தைக் காட்டு விதிகளை நான் கூறுகிறேன் என்ற தலைப்பில் நான் போட்ட மொக்கைப் பதிவில் கூறியது அவ்வளவு மொக்கை இல்லை என தினகரனின் விஷயம் நிரூபீகிறது.

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் அவரது உறவினர்களால் கொலை
இது பற்றி வினவு பதிவு போட்டுள்ளார். அவரது செயல்பாட்டை இங்கு பார்ப்போம். முதலில் எழுதுகிறார், “கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன. தஞ்சை, திருச்சி முதலான மத்திய தமிழகத்தில் வாழும் கள்ளர் சாதியினர் தேவர் சாதி பிரிவில் ஒருவராவார்கள். பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்”.


நான்கூட ஆச்சரியப்பட்டேன், என்னடா இவ்வளவு கடுமையாக எழுதுகிறாரே என. ஏனெனில் அவர் பார்ப்பனர்களைத்தான் அதிகம் திட்டுவார். மற்ற சாதியினர் செய்யும் உயர்சாதீய அக்கிரமங்களை பார்ப்பனீயம் என லேபல் போட்டு அங்கும் பார்ப்பனர்களை இழிவுபடுத்துவார். ஆனால் இப்பதிவில் பார்ப்பனீயம் என்னும் சொல்லும் வரவில்லைதான். சரி அவரும் திருந்திவிட்டார் என எண்ணினேன்.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி விட்டார். ஒரு பின்னூட்டத்தில் அவரே எழுதுகிறார், “//தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்// என்று எழுதியிருந்தோம். ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது. கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். சாதிவெறிக்கு அந்த சமூகம் பலியாகி இருந்தாலும் அதை மேற்கண்ட வரியில் இடித்துரைப்பது தவறு. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு தோழர் ராசாத்திக்கு நன்றி. இனி இத்தவறுகள் நிகழாத வண்ணம் கவனமாக இருப்போம்”


கண்டிப்பாக கவனமாகத்தான் இருப்பார். கள்ளர் சாதியினர் என்ன பார்ப்பனரா, தம்மை இழித்து பேசுபவர்களை அப்ப்டியே புறக்கணித்து போவதற்கு. செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம் வினவுக்கு இருக்கக் கூடாதா என்ன? கண்டிப்பாக இருக்கலாம்தான். அப்படியே பார்ப்பனீயம் என்னும் சொல்லையும் போட்டுக் கொண்டாகிவிட்டது.


 ஹிந்து பத்திரிகையில் வரும் திருமண விளம்பரங்களை சுட்டி அவர் கூறுகிறார், பார்ப்பனரின் சாதி வெறி பற்றி. எல்லா பார்ப்பனர்களுமே அப்படித்தான் என்று வேறு எகத்தாளப் பேச்சு. அதே ஹிந்துவில் மற்ற சாதியினரும்தானே அதே மாதிரித்தானே விளம்பரம் தருகிறார்கள் என்றால் பதில் தர இயலாது அவரால்.

பெரியாரின் சீடர் வேறு எப்படி இருப்பார். அவரும் கீழ்வெண்மணி விஷயத்தில் சுயசாதி அபிமானத்துடன் பேசியவர்தானே.

பாமக என்ன செய்யப் போகிறது?
மற்றவர்களைப் போலவே நானும் இந்த தமாஷ் எப்படி செல்லப்போகிறது என்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன் என்று இப்போதைக்கு கூறிவைக்கிறேன். அது என்ன செய்யலாம் என்பதை யாராவது யோசனைகளாக பின்னூட்டத்தில் கூறுங்களேன்.


எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பற்றி ஜெயமோகன் எழுதும் பதிவுகள்
தனக்கே உரித்தான் நேர்த்தியுடன் ஜெயமோகன் அவர்கள் எம்.எஸ். பற்றி எழுதிய பதிவு, அதற்கான கடிதங்கள் ஆகியவற்றை நான் சுவாரசியமாக படித்து வருகிறேன். அந்த வரிசையில் கடையாக வந்த இப்பதிவிலியே முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகளும் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அங்கு போய் எல்லாவர்றையும் படிக்கலாம்.

நான் இங்கு குறிப்பிட விரும்புவது எம்.எஸ். அவர்கள் ஜி.என்.பி.க்கு எழுதிய கடிதம்தான். காதல்வயப்பட்ட ஒரு பெண்மணி அதை எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்காதல் நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அந்த பெண்மணியும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விட்டார்.

இப்போது போய் அக்கடிதம் வருவது மனத்தை புண்படுத்துகிறது. முதல் கேள்வி அது எப்படி வெளியில் வந்தது? அக்கடிதம் பெற்ற ஜி.என்.பி.யே அதை கிழித்துப் போட்டிருந்திருக்க வேண்டும் செய்யவில்லை. அதே சமயம் காதலையும் ஏற்கவில்லை. அக்கடித்தத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? அவரது ஈகோவுக்குத்தான் அது தீனி போட்டிருக்கிறது. சுத்த் அல்பத்தனமாக எனக்கு அது படுகிறது.

அவரும் மறைந்து விட்டார். அக்கடித்தத்தை மெனக்கெட்டு வெளியாரிடம் தர வேண்டிய அவசியம் அவரது வாரிசுதாரர்களுக்கு என்ன வந்தது? அல்பத்தனம் ஸ்க்வயர்டு (squared) என்றுதான் கூறவேண்டும். அதையும் பெற்று ஆராய்ச்சி செய்தவரோ அல்பத்திலும் அல்பம்.

மொத்தத்தில் ஒரே அல்பங்களாக உள்ளன. ஹூம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Anonymous said...

ஜெயமோகன் கூறுவது போல சாதி என்பது தொழில் முறை வகுப்பு தான். வேறு ஒன்றும் இல்லை!

ஜாதிகளை ஒழிப்போம், அனைவரும் சந்தோசமாக இருப்போம்.

-விஜய்

வன்பாக்கம் விஜயராகவன் said...

"அக்கடிதம் பெற்ற ஜி.என்.பி.யே அதை கிழித்துப் போட்டிருந்திருக்க வேண்டும் செய்யவில்லை. அதே சமயம் காதலையும் ஏற்கவில்லை. அக்கடித்தத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? அவரது ஈகோவுக்குத்தான் அது தீனி போட்டிருக்கிறது. சுத்த் அல்பத்தனமாக எனக்கு அது படுகிறது.

அவரும் மறைந்து விட்டார். அக்கடித்தத்தை மெனக்கெட்டு வெளியாரிடம் தர வேண்டிய அவசியம் அவரது வாரிசுதாரர்களுக்கு என்ன வந்தது? அல்பத்தனம் ஸ்க்வயர்டு (squared) என்றுதான் கூறவேண்டும். அதையும் பெற்று ஆராய்ச்சி செய்தவரோ அல்பத்திலும் அல்பம்."

இதில் என்ன அல்பத்தனமோ, ஈகோவோ இருக்கு. செய்தியை அலசாமல் செய்தி கொண்டுவந்தவனின் கெட்ட எண்ணத்தை பழிப்பது நல்லதல்ல

விஜயராகவன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

இன்னும் சொல்லப் போனால், இந்த கடிதங்களை சுப்புலக்ஷ்மி இறந்த பின்பு வெளியிடுவது, அவர்கள் கண்ணியத்தை காண்பிக்கிறது

விஜயராகவன்

KaveriGanesh said...

பதிவர் சந்திப்பு ரத்தும், நான் எடுத்த புகைப்படங்களும்
என்ற‌ என்னுடைய‌ ப‌திவை ப‌டிக்கவும்.

http://kaveriganesh.blogspot.சொம்/

dondu(#11168674346665545885) said...

@வன்பாக்கம் விஜயராகவன்
என்ன புடலங்காய் செய்தி? இது நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மையை செய்யப் போகிறதா? எம்.எஸ். மற்றும் ஜி.என்.பி. ஆகிய இருவருக்குமிடையில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கட்டுமே. அவற்றையெல்லாம் கொண்டுவர நினைப்பவருக்கும் மஞ்சள் பத்திரிகைக்காரனுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டையும் நான் காணவில்லை.

அக்கடிதத்தை இவ்வளவு நாள் வைத்திருந்து வெளியில் (காசுக்கு?) தந்தவர்கள் அல்பங்ககள்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

டோ ரா "என்ன புடலங்காய் செய்தி? இது நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மையை செய்யப் போகிறதா? "

ஒரு செய்தி புடலங்காயா இல்லையா என்பது படிப்பவர் மனதில் உள்ளது. நாம் கேட்கும் செய்திகளில் எந்த % நாட்டுக்கு நன்மையோ அல்லது உங்களுக்கு நன்மையோ செய்தது ?


விஜயராகவன்

வால்பையன் said...

சாதி வெறியுடன் யார் இருந்தாலும் காயடிக்கபட வேண்டியவர்கள்!

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

வன்பாக்கம் விஜயராகவனோ மற்றும் ஜெயமோஹனோ மற்றவர்கள் சொல்லும் கருத்தையோ, கேள்விகளையோ கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் பதில் போடுகிறார்கள். இது சாமர்த்தியம் என்று நினைத்துச் செய்கிறார்களா அல்லது வீண் ஆணவ முனைப்பா தெரியவில்லை.

ஒருவரின் அனுமதியில்லாமல் அவரது அந்தரங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துதல் சரியா என்ற கேள்வியைக் கண்டு கொள்ளவேயில்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.

இவர்கள் வீட்டு அந்தரங்கம் வீதியில் பேசப்பட்டால் " ஆஹாஹா ! இது ஒரு செய்தி" என்று ரசிப்பார்களா ? காலம்தான் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கண்ணன், கும்பகோணம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது