11/10/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.11.2009

பார்ப்பனர் மேல் வெறுப்பு
வினவு என்பவர் தான் எந்த பொருளை பற்றி பதிவு போட்டாலும் அதில் எப்படியாவது பார்ப்பனர்களை திட்டாமல் அவருக்கு சோறு இறங்காது. இப்படித்தான் பாருங்கள், கள்ளர் சாதியினர் தம் குலப்பெண் தலித்தை மணந்ததற்காக அவளை கொலை செய்ததை கண்டித்து பதிவு போட்டார். அதில் சம்பந்தப்பட்ட கள்ளர் சாதியை கண்டித்து எழுதினார், பிறகு என்ன தோன்றியதோ அதை திசை திருப்பி பார்ப்பனருக்கு எதிரான கும்மியாக அதை மாற்றி அங்கு கும்மி அடிக்கப்பட்டு வருகிறது.


என்னத்த இவர்களோட விவாதிக்கிறது? அடப்போங்கப்பா எங்களுக்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கின்றன. கடைசியாக அதில் நான் இட்டப் பின்னூட்டம், 


ஐயா ஆர்.வி.



//என்ன விவாதத்தில் நேர்மையை எதிர்பார்க்கிறேன். அது சில சமயம் கிடைப்பதில்லை.//
அதுவும் வினவு தளத்தில் எப்போதுமே கிடைப்பதில்லை. அதனால்தான் கூறுகிறேன் இம்மாதிரி வெறுப்பாளர்களிடம் பேசுவதைவிட வேறு ஏதாவது உருப்படியான காரியங்கள் செய்யலாம் என்று.
வீட்டு வாடகை விளம்பரம் பற்றி வினவு பேசியிருந்தார். இப்போது கூட தில்லி போன்ற நகரங்களில் வட இந்தியர்கள் தாங்கள் அளிக்கும் விளம்பரங்களில் தென்னிந்திய பிராமணர்களுக்கு முன்னுரிமை என்று இருக்கும். அவர்களுக்கு என்ன பார்ப்பனர் மேல் அவ்வளவு பாசமா என்ன? அவர்கள்தான் தாம் உண்டு தம் வேலை உண்டு என இருப்பார்கள், வீடு தேவைப்படும்போது கேட்டால் வீட்டை காலி செய்து கொடுப்பார்கள் என்று அவர்கள் நினைப்பதுதான் காரணம். இக்காரணங்களை பெரியாரும் தனது இடங்களை வாடகைக்கு விடும்போது கூறி, பார்ப்பனர்களுக்கே முன்னுரிமை அளித்தார் என்பதையும் படித்துள்ளேன். இது ஒரு சமூக கண்ணோட்டம்.
மேட்ரிமோனியல் விளம்பரங்கள் குறித்து ஆணித்தரமாக நீங்கள் கூறியதற்கு அவர்களிடம் பதில் இல்லை, வழுக்குகிறார்கள்.
மோடி விஷயம். நரேந்திர மோடி மேல் லஞ்ச ஊழல் குற்றம் எதையும் காங்கிரசால் கடந்த தேர்தல் சமயம் எழுப்ப இயலவில்லை. இந்த விஷயத்தில் அவர் அளவுக்கு  வேறு எந்த முதன் மந்திரி இச்சமயம் இந்தியாவில் உண்டு? அது ஒன்றே போதுமே அவரை ஆதரிக்க. கோத்ரா/கலவர விவகாரம் இருமுறை வாக்காளர்களால் சீர்தூக்கி பார்க்கப்பட்டு, இரு முறையும் மோடியை குஜராத்தியர் வெற்றி பெறச்செய்தனர். அதுவும் இரு தேர்தல்களிலும் சம்பந்தப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் அவரைக் குறித்து தம் வன்மத்தை வெளிப்படையாக கூறி, தேர்தலை மிகக் கடுமையாக நடத்தினர். அவர்களையும் மீறித்தான் மக்கள் வாக்களிக்க நேர்ந்தது.
மேலும் மோடி என்ன பார்ப்பனரா? சீக்கியக் கொலைகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய ராஜீவ் காந்தியை விட அவர் எவ்வளவோ மேல்.
நிங்கள் கூறுவதுபோலவினவு தளத்தில் மறுமொழிகள் ஏறுக்கு மாறாக காலவரிசையின்றி வருவது ஒரு பெரிய தலைவலியே. அவரது செட்டிங்ஸ்கள்தான் அதற்கு காரணம். அதை சரிசெய்யாதவரை நிலைமை இப்படித்தான் இருக்கும். அதை அவர் செய்வாரா என்பதை பார்க்கலாம்.
உங்களுக்கு பதில் சொல்லவே நான் இப்போது வந்தேன். இனிமேல் வருவதாக இல்லை.



இந்தப் பின்னூட்டத்துடன் அப்பதிவை கைகழுவி விட்டேன். அதுதேறாத கேஸுன்னா. 


வி.எஸ். சூரியின் புத்தகம்
அது அமேசான் தளத்தில் கிடைக்கிறது. என்ன, விலைதான் 16 அமெரிக்க டாலர்கள். அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு அது பெரிய தொகை இல்லை என்றுதான் நினைக்கிறேன். முடிந்தால் வாங்கி பார்க்கலாம். அதில் அச்சுப்பிழைகள் அதிகம். நான் அவனிடம் சொன்னதற்கேற்ப அப்புத்தகத்தைன் சோர்ஸ் கோப்பை எனக்கு அனுப்பினான். நானும் அதில் பிழைதிருத்தி அவனுக்கு அனுப்பியுள்ளேன். ஆனால் அச்சு காப்பியில் அவை அப்படியே உள்ளன. அவற்றையும் மீறித்தான் நான் அப்புத்தகத்தின் மேம்பாட்டை கண்டேன். 


மொழி பெயர்ப்பு விஷயத்தில் பலமுடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது. அவனுடன் டிஸ்கஸ் செய்து வருகிறேன். ஏனெனில் மூலப்புத்தகத்தை எழுதியவரின் ஒப்புதல்களுடன் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும். அவன் அவை சம்பந்தமாக எனக்கு பிளாங்க் செக் போல ஒப்புதல் தந்தாலும், அதை பொறுப்புடன் ஏற்று நடத்தவேண்டும் என்ற எண்ணம் என்னை அவசரப்படாமல் இருக்கச் செய்கிறது. முக்கியமாக ஆங்கிலத்தில் சொல்விளையாட்டுகள். அவற்றை தமிழில் வேறுவிதமான சொல்விளையாட்டுகளால் ஈடுகட்ட வேண்டியிருக்கும். இதுதான் இலக்கிய மொழிபெயர்ப்பின் கடினமான பகுதி. 


தொழிற்நுட்ப கட்டுரைகளில் இப்பிரச்சினை இல்லை. அவற்றை மொழிபெயர்க்க (a+b)2 = a2 + 2ab + b2 என்னும் ரேஞ்சில் எழுதினால் போதும். என்ன, சம்பந்தப்பட்ட சமன்பாடுகள் தெரிய வேண்டும். அதற்குத்தான் தொழிற்நுட்ப அறிவு. அது சரி, மேலே அது பற்றி இங்கு ஏன்? முடிவுகள் முதலில் எடுக்கப்படட்டும். பிறகு வேலை சுலபமாகி விடும்.


எனது ஆங்கில வலைப்பூவில் ஒவ்வொரு அத்தியாயமாக வெளியிடலாம் என்றும் எண்ணம். ஆங்கில மூலத்தின் காப்புரிமை அவனுடையது. தமிழ் மொழிபெயர்ப்பின் காப்புரிமை என்னுடையது என்பதை இங்கு சந்தேகத்துக்கிடமின்றி கூறிவிடுகிறேன்.


கர்நாடக வக்கீல்கள் அமளி
நீதிபதி தினகரனை எதிர்த்து கர்நாடகாவில் வக்கீல்கள் அமளி செய்துள்ளனர். சென்னை வக்கீல்களின் காற்று இங்கும் அடித்திருக்கிறது. ஆனால் சென்னை வக்கீல்கள் அதை கண்டித்துள்ளதாக அறிகிறேன். காரணம் என்னவாக இருக்கும்.


அதை கூறுவத்ற்கு முன்னால் ஒருவார்த்தை. வ்க்கீல்கள் செய்வது சென்னையாயினும் பெங்களூர்வனாலும் ரௌடித்தனமே. ஆமாம், சென்னை வக்கீல்கள் ஏன் இதை மட்டும் கண்டிக்கிறார்கள்? அவர்களுக்கு அதற்கான யோக்கியதை என்ன? டோண்டு புதிர்களில் அதை போடுவோமா? விடைகள் ப்ளீஸ். க்ளூ: சென்னையில் வக்கீல்களின் நிலைப்பாட்டை விழுந்து விழுந்து ஆதரித்த வினவின் எதிர்வினை பெங்களூரு விஷயத்தில் டீஃபால்ட்டாக எவ்வாறு இருக்கும்?


அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

M Arunachalam said...

ஒரு திராவிட கழக கண்மணியின் பொருமல்:

அய்யகோ!! தமிழனின் காபி ரைட் கன்னடர்களால் களவாட படுகிறதே!! ரவுடி இசம் கழக தமிழனின் ரத்தத்தில் ஊரியதாயிற்றே!!! அதையும் மற்றவர்கள் பறித்து கொண்டால், கழக தமிழனின் தனித்துவம் மறைந்து விடாதா. இது பார்ப்பனர்களின் சதியன்றோ? போற்றி பாதுகாத்து வளர்த்த திராவிட கழக கலாசாரம் இப்போது அண்டை மாநிலங்களிலும் பரவியது ஒருபுறம் பெருமையாக இருப்பினும், கழக தொண்டன் தான் இப்போது பத்தோடு ஒன்று பதினொன்றாக ஆகி விட்டதை எண்ணி எண்ணி வேதனை படுகிறான். அய்யகோ அவனை தேற்றுவதற்கு இப்போது எந்த பெரியவரும் இல்லையே!!!

வால்பையன் said...

வினவு, தமிழ் ஓவியா போன்றவர்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் சிந்திக்கும் திறன் நின்றுவிடும் போல!

(சொந்த செலவில் சூனியம்)

கிருஷ்ண மூர்த்தி S said...

/ஒரு கட்டத்துக்கு மேல் சிந்திக்கும் திறன் நின்றுவிடும் போல/

கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்வதற்குச் சிந்திக்கும் திறன் எதற்கு?

கட் அண்ட் பேஸ்ட் தமிழ் ஓவியாவை, அப்பப்போ விவரங்களுடன், பலநேரங்களில் விவகாரங்களுடன் எழுதும் வினவுடன் கம்பேர் செய்ததற்குக் கடுமையான கண்டனங்களுடன்,

--வால்பையன் ரசிகர் மன்றம்

Mukhilvannan said...

அன்புள்ள டோண்டு அவர்களுக்கு,
தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவர்களை எழுப்பிப் பாருங்கள்.
அதுமாதிரி ஆட்கள்தான் வினவும்.
சமீபத்தில் ஒரு பதிவில் இத்தகைய நபர்களை “திராவிட மாயாண்டிகள்” என்று வருணிக்கப்பட்டிருந்ததைப் படித்தேன். பொருத்தமான பெயர். பல்பொருள் ஒருசொல். காலப்போக்கில் இவர்கள் அனைவரும் சருகுகள் ஆகிவிடுவர். இவர்களுடன் வாதிடுவது .......கத்தலுக்குப் பதில் சொல்லுவதுபோலத்தான்.
அ. நாமதேயன்

dondu(#11168674346665545885) said...

@சுந்தரா
அப்பதிவில் நான் பின்னூட்டமிட்டதே ஆர்.வி. தனது நேரத்தை இம்மாதிரி வெத்து பதிவுகளில் வீணடிக்க கூடாது என்பதை வலியுறுத்தவே.

விஷயம் தெரிந்த் எவரும் வன்மத்துடன் பதிவிடும் வினவு குழுவினரை புறக்கணிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

NO said...

அன்பான நண்பர் திரு டோண்டு,

திரு வினவு மற்றும் அவர்தம் நண்பர்கள், தாங்கள் மட்டும்தான் ஜனநாயகத்தின் உண்மையான பிரிதிநிதிகள், எதைப்பற்றியும் பேசி, யாவரையும் வசை பாடும் உரிமை அவர்களிடம் மட்டும்தான் உள்ளது என்று மார்த்தட்டி, அதே சமயம் தங்களுக்கு சாதகமாக ஜால்ரா அடிக்காதவர்களின் பின்னூட்டங்களை நீக்கி, இதைப்போன்ற அராஜகத்தை வாழும் கலை ஆக்கிய தங்களின் ஆருயிர் தலைவரான ஸ்டாலினின் ஆத்மார்த்த சிஷ்யர்கள் நாங்களே என்று ஒவ்வொரு முறையும் prove செய்து கொண்டு இருக்கிறார்கள்!

நீங்கள் சொல்லுவதைப்போல இதில் நண்பர் திரு ஆர்வியும் தன பங்குக்கு, மூளை சலவை செய்யப்பட்ட இந்த சிவப்பு சிர்ப்பிகளுடன் எப்படியாவது விவாதம் செய்து நல்லவையை, உண்மைகளை புரியவைக்க முடியுமா என்ற வேண்டாத வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்! இதில் என்ன வேடிக்கை என்றால் திரு ஆர்வி சொல்லுவதை திரு வினவு பதிவிடுவார், எனென்றால், அதை வைத்துக்கொண்டு
ஒரு நாலு ஐந்து புரட்சி கொழுந்துகளையும் சேர்த்துக்கொண்டு, கண்டபடி சாடி, பார்த்தியா, திரு ஆர்வியின் (நானாவது திரு ஆர்வி என்று போடுகின்றேன், ஆனால் அவர்கள் திரு ஆர்வியை சேர்த்து பலருக்கு கொடுக்கும் பட்டமோ அநாகரீகத்ததிலும் அநாகரீகம்) விவாத்ததை எப்படி தோற்கடித்தோம், வாங்க எல்லாம் வந்து இந்த மாதிரி விவாதம் பண்ணுங்க என்று டமாரம் அடிப்பார்கள்!

அதே நான் பின்னோட்டம் இட்டால், அதும் இவங்க ஸ்டைலில் இல்லாமல், ஆனால் கிண்டல் மட்டுமே செய்து, அதவும் இவர்களின் சிதைந்து போன சித்தாந்த விளக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால், அதை அழிப்பார்கள்! அதற்க்கு நண்பர் திரு வினவு கொடுக்கும் விளக்கம், " காழ்ப்புணர்ச்சியுடன் மற்றும் வேண்டும் என்றே தாக்கவேண்டும் என்று எழுதியவர்களின் பின்னூட்டங்களை நாங்கள் போடுவதில்லை" என்ற ஒரு அருமையான கொள்கை!

எப்படி? இவர்கள் எல்லோரையும் கண்டபடி தாக்கி எழுதலாம், ஆனால் யாராவது, இவர்களைப்பற்றி, அதுவும் நாகரீகமாகவே எழுதினால். அது சரி இல்லையாம்!!!

நண்பர் திரு வால் பையன் சொல்லுவதைப்போல, இவர்கள் nothing but gone case!!!!

நான் எழுதி இவர்கள் போட மறுத்த ஒன்றிலிருந்து சில வரிகள்!! Just as a sample!!!!

"" பித்தம் பிடித்த பத்தாம் பசலி சத்தம் போட்டு சுத்திவந்ததாம்!
சுற்றி நின்ற சுண்டைக்காய்கள் சங்கீதம் இதுவே என்று சத்தியம் செய்ததாம்

பாக்க வந்த புண்ணாக்கு சிலது பக்கம் பக்கமாக கக்கிட்ட்டுபோனதாம்
கேட்டு கேட்டு செவிடான சிலது சங்கீத சம்ரட்டே என்று வாழ்த்து சொன்னதாம்

குளிர்ந்துபோன எங்க தங்கராசு தண்டோரா போட்டாராம்!
பண்டார பரதேசிகளே பாக்க வாங்க இந்த கண்கொள்ளா கச்சேரிஎன்னு!

செவிட்டுசாமியும் வந்தாராம் உங்க சங்கீதம் மட்டுமே வேணும்முன்னு சொன்னாராம்!
சொக்கிப்போன தங்கராசு தப்புதப்பா தட்டினாராம்

சத்தம் தாங்காம சிலபேரு வந்தாங்களாம்
தப்பாயிருக்கே தம்பிரானே, தாளமெல்லாம் தெரியுமா உமக்கென்று!

இதைக்கேட்ட தங்கராசு கைய்யமட்டும் சுத்தினாராம்
சும்மாயிருந்த ஒரு சுண்டைக்காய் சாணியத்தூக்கி அடிச்சாராம்
சொல்லவந்த சங்கரபாண்டிஎல்லாம் சத்தம்போடாமல் escape ஆனார்களாம்

ஆட்டத்த ஆரம்பித்த தங்கராசு சொன்னாராம்,
செவிட்டுப்பசங்க நாங்க செவிடனுக்கு நடத்துற கச்சேரியில சங்கு ஊத ஆளு எதற்குன்னு?"""

நன்றி

க.கா.அ.சங்கம் said...

வினவு தளம் வைத்திருப்பவர்களை ரா அமைப்பினர் கைது செய்து விசாரிப்பதாக விசாரிப்பதாக நேற்று கனவு கண்டேன்.

என் கனவு நனவாக உங்கள் தென்திருப்பேரையாரை வேண்டிக்கொள்ளுங்கள்.

திரு ஆர்.வி அவர்கள் வேலை மெனக்கெட்டு அங்கு அவர்களுடன் விவாதம் செய்கிறார். ஆனால் அவர்களோ இப்படி கிருக்குச் சித்தாந்ததைப் பரப்புவதே முழு நேரவேலையாகத் திரிபவர்கள். அவர்களுக்கு அதற்கு சம்பளம் எல்லாம் கிடைக்கிறது.

கம்யூனிஸ்டுப் பன்னாடைகளுடன் விவாதிப்பதும், ஒரு கத்தோலிக்க/பெந்தகொஸ்த சர்ச்சில் பாஸ்டருடன் விவாதிப்பதும், மசூதியில் உள்ள மதவெறி முல்லாவுடன் விவாதிப்பதும் ஒன்று தான். அவர்களுக்கு அவர்கள் சித்தாந்தம் தான் ஒசத்தி, மற்றதெல்லாம் தவறு.

வால்பையன் said...

//கம்யூனிஸ்டுப் பன்னாடைகளுடன் விவாதிப்பதும், ஒரு கத்தோலிக்க/பெந்தகொஸ்த சர்ச்சில் பாஸ்டருடன் விவாதிப்பதும், மசூதியில் உள்ள மதவெறி முல்லாவுடன் விவாதிப்பதும் ஒன்று தான்.//

நீங்க காவி வேட்டியா!?
உங்களுடன் உரையாடினால் நடுநிலையுடன் பேசுவீர்களோ!?

க.கா.அ.சங்கம் said...

வால்,
கருப்பு சட்டை போட்டால் புரட்சி என்று இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்களெல்லாம் (காவி) டீ சர்ட் ஜீன்சுக்கு மாறிட்டோம்...



கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பது தான் என் வேலை. அதற்காக எனக்கு சம்பளம் கிடைப்பதில்லை. சொந்தச் செலவில் தான் இந்தச் சூனியம் வைத்துக்கொள்கிறேன்.


நான் நடுநிலையாளன் அல்ல. என் மதத்தினைச் சார்ந்து தான் நான் முடிவெடுப்பேன். அதை ஓப்பனாக சொல்லவும் செய்வேன். மற்றவர்களைப்போல் பெரியார் தாடிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தாக்கும் நடு நிலை வியாதியல்ல நான்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது