11/08/2009

வி.எஸ். சூரி, எனது நண்பன்


எனக்கு சாதாரணமாக நண்பர்கள் எனச்சொல்லும் அளவில் அதிகம் பேர் இல்லை. எனது விட்டேற்றியான மனநிலையும் அதற்கு துணை செய்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் அப்படி இருக்கும் குறைந்த எண்ணிக்கையுள் உள்ள நபர்களில் சூரிக்கு நிச்சயம் இடம் உண்டு. கடைசியாக இவனை நேரில் பார்த்தது சமீபத்தில் 1982-ல். அதன் பிறகு தொடர்பு விட்டுப் போயிற்று. இருப்பினும் 2002-ல் எதேச்சையாக அவனது தொலைபேசி எண் கிடைத்து அவனுடன் தொடர்பு கொண்டபோது பழைய நட்பு அப்படியே இருந்ததை இருவருமே கண்டோம்.

நல்ல நட்புக்கு ஒரு அடையாளம்தானே அது. ஏதோ நேற்றுத்தான் பார்த்துக் கொண்டதுபோல எங்கள் தொடர்பை புதுப்பித்து கொள்ள முடிந்தது. அதுவே நல்ல நட்பு என்றுதான் நினைக்கிறேன்.

சமீபத்தில் 1971 ஜனவரியில் மத்தியப் பொதுப்பணித்துறையில் ஜூனியர் இஞ்சினியராக சேர்ந்தபோது அவனும் அதே பதவியில்தான் இருந்தான். முதல் நாளிலிருந்தே எங்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு விட்டது. மொத்தம் எட்டு ஜூனியர் இஞ்சினியர்கள் அந்த அலுவலகத்தில் இருந்தோம். எங்கள் 8 பேருக்கும் ஒரு கேபின். எல்லோருமே பிரும்மச்சாரிகள். ஒரே கொட்டம்தான். அது பற்றி பிறகு. சூரியிடம் வருகிறேன். வாழ்க்கை பற்றிய சூரியின் கண்ணோட்டம் தமாஷாக இருக்கும். 1968-ல் மத்தியப்பொதுப்பணியில் ஜூனியர் இஞ்சினியராக சேர்ந்தவன் 2005-ல் ஓய்வு பெறும்வரை அதே பதவியில்தான் இருந்தான். அத்துறையில் இருந்த ஆயிரக்கணக்கான இஞ்சினியர்களில் இவன் ஒருத்தன் மட்டுமே அவ்வாறு பிடிவாதமாக இருந்தான். அதனால் வேலை தெரியாது என்றெல்லாம் இல்லை. அதில் நிபுணன். ப்லமுறை பிரமோஷன்கள் வந்த போதும் அதை அவன் மறுத்துவிட்டான். தான் ஏ.இ. போஸ்டுக்கான மெட்டீரியல் இல்லை என விட்டேற்றியாகக் கூறிவிட்டான்.

திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை. ஆகவே கமிட்மெண்டுகளும் இல்லை, ஆகவே வரும் சம்பளமே போதும் என்ற மனப்பான்மை வேறு. அற்புதமான ஆங்கில அறிவு. எழுதுவதில் நாட்டம். ஒரு புத்தகம் ஆங்கிலத்திலிருந்து அவனது தாய்மொழியான கன்னடத்துக்கும் இன்னொரு புத்தகம் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்திருக்கிறான். என்ன, அவை பப்ளிஷ் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை. அதனால் எல்லாம் அவன் மனம் தளரவும் இல்லை என்பதும் நிஜமே.

சில நாட்களுக்கு முன்னால் திடீரென அவனிடமிருந்து ஒரு பார்சல் கூரியரில் வந்தது. திறந்து பார்த்தால் ஒரு ஆங்கில புத்தகம் அவன் எழுதியது. அமெரிக்காவில் பப்ளிஷ் ஆகியிருக்கிறது. தலைப்பு Jestus. Library of Congress Control No. 2009937472, ISBN 10:0-9822553-2-2, ISBN 13:978-0-9822553-2-2.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அப்புறம்தான் விஷயம் தெரிந்தது, அவன் தனது சொந்த செலவிலேயே இந்த புத்தகத்தை அச்சடித்துள்ளான் என்று. புத்தகத்தை பிரித்து படித்தால் அதை கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு விறுவிறு எனச் சென்றது. சர்ரியலிசத்தில் விளையாடியுள்ளான். முதல் அத்தியாயம் காஃப்கா புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. மேஜிக் ஆகியவை இடம் பெறுகின்றன. ஆனால் எல்லாமே ஒரு ஒழுங்கில் உள்ளன.

அதில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயர் Rock Van. அது பற்றி எழுதும் முதல்வரிகளிலேயே தெரிந்தது அது என்னை வைத்து உருவாக்கப்பட்டது என. அதனால் கூட அப்புத்தகத்தை படித்தேன். இம்மாதிரி ஒரு நாவலில் என்னையே காண்பது எனக்கு இதுதான் முதல் முறை.

ஓரிரு உதாரணங்கள் தருகிறேன்.
On my return path I had an impulse to visit my old pal, Rock Van. He had graduated as an engineer and worked for some years in a government department. He had a flair for languages. During his spare time he mastered German, French, Italian and Spanish. He had a working knowledge of half a dozen other languages too like Russian Arabic, Japanese, and Hindi etc. He fell so much in love with languages that he resigned as an engineer and took up a job as translator in a few high paying companies .A dragoman as he called himself. He landed up in a prestigious government department in that capacity. He took a second retirement and began working freelance. He spent most of his time at home, glued to the seat in front of a computer.

As I expected he was in. I rang the bell. His door opened within a minute and Rock Van stood, tall and smiling broadly.

“Welcome.”, he grinned. I stepped into his phrontistery. The computer was on. A pile of printouts lay by the keyboard. A quick glance told me it was in French.

“A doctoral thesis. I am translating it into English for someone.”, he explained.

Rock Van opened the fridge and brought back a big bottle of apple juice and two stainless steel tumblers. He was a strict teetotaler. And a vegan. Rock Van collected jokes as a hobby. He could reel off a joke on any subject. He was also an inexhaustible source of obscure trivia, and was peculiarly proud of that. He would dish out an unimaginable tit-bit and ask me ,“ How many know it?”

Rock set the ball rolling with his opening gambit.

“The name of Napoleon’s favorite horse was Desirée.”

“ I see”. I knew what was coming.

“Now how many know it?”, he asked.

“Rock, it is quite sufficient if you and I know it. Why bother about how many know it?”

He laughed, because that was my standard reply to his regular question.

“ Anyhow Napoleon is dead and Shakespeare is dead.”, I added and bit my tongue.

Give him the smallest opening and he will push a joke through it.

“ I asked ,how many know. Well apparently even some very famous people do not know about Shakespeare.”
I did not believe him. I raised my eyes. He began with a  straight face.
“There was this famous pugilist. He was the world champion for years. Nobody could beat him in the ring. The journalist interviewing him asked casually, ‘Do you know Shakespeare?’ The fellow replied. ‘Shakespeare ? I will punch  him out in the first round.”
Rock Van burst into laugher. I smiled. Fortunately he knew my allergy towards jokes and cut short his narration”.
=========================================================================
I went to meet Rock Van at his house for the regular monthly visit. I generally choose the time when his wife would be out to the office, so that we could chat freely. We indulged in our monthly quota of gossip and information update, as he called it.
“Goethe’s last words were,  ‘more light’. Many people feel inspired by those words. Actually the room in which he lay was dark and he wanted the blinds drawn. Now, how many people know it?”
Reluctantly I supplied my part of the catechism. “Rock, it is quite sufficient if you and I know it.” He chuckled in satisfaction.
Rock, needless to mention, was in front of his computer. He had opened two windows, one for his translation work (a German document) and in another window he was checking mail. He was carrying on the conversation with me too. I often wondered how he could pay attention to three things at a time. “Nothing to it.”, he had said, “I read novels while I am walking in the streets, you know.” (He claimed he could even do eight different things at a time – multitasking, he called it. Efficient time management, he had further explained. I have my own doubts about the first word, the adjective, I had replied.)”
======================================================================
”I entered the all too-familiar scene. Rock Van in silk pajamas, carrying on his love affair with the computer, two windows open on the monitor. Rock  banging off on the key board.
The familiar cup of coffee and his familiar greeting.
“The original name of Kirk Douglas was Issur Danielovitch Demsky. How many know it?”
“It is quite sufficient if you and I know it. Ok?”
He would never be satisfied if this ritual was not carried out. I said.
“I read the book Ivanhoe, by Sir Walter Scott. I liked it much.”
“Oh, that? ” he said, “ Yeah. I read it recently in 1960.”
“Recently ? In 1960? You call that recent?”
“Why not? It is still so fresh in my memory. You want me to quote a few lines out of the book?”
“No thanks. I believe you.”
He smiled happily. As with jokes, so with books. You name a book and he will quote sentences out of it. I think I said somewhere that when the mood is on him, he walks along the street (and across) reading a book. He says he holds the book slightly below the eye level so that he can have two views – of the book and of the traffic. Like the two windows on his computer, he had further clarified”.

இவை போதும் என நினைக்கிறேன். சும்மா சொல்லப்படாது, Rock Van இந்த டோண்டு ராகவனுக்கு ஏனோ பிடித்த கேரக்டராகிப் போனான்.

இந்த புத்தகத்தைத் தமிழில் கொண்டுவர எண்ணம். சூரி முழு அனுமதி தந்துவிட்டான். ஆக மொழிபெயர்க்க வேண்டியதுதான் பாக்கி. அதற்கான முன்னோடிதான் இப்பதிவு.

(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

all the best sir

ஜீவி said...

//இந்த புத்தகத்தைத் தமிழில் கொண்டுவர எண்ணம். சூரி முழு அனுமதி தந்துவிட்டான். ஆக மொழிபெயர்க்க வேண்டியதுதான் பாக்கி. அதற்கான முன்னோடிதான் இப்பதிவு.//

செய்யுங்கள். இப்படிப்பட்ட செயல்பாடுகள் நட்புக்கு மிகுந்த அரத்தத்தைக் கொடுப்பதுவாய் அமையும்.

இப்படித்தான் எனக்கு அந்தியந்த நண்பனாய் அமைந்தவனின் பெயர் ரகுராமன். புதுவை ஜிப்மரில் பணியாற்றியவன்.

சமீபத்தில் வெளியான எனது சிறுகதைத் தொகுப்பின் முதல் பக்க முதல் கதையின் முதல் வார்த்தை 'ரகுராமன்' என்று தொடங்கும். இதைப் படித்து விட்டு ரொம்ப நெகிழ்ந்து போய்விட்டான் என் நண்பன்.
பார்ப்போரிடமெல்லாம் சொல்லிப் பரவசப் பட்டான் என்று தெரிந்தது. இப்படி சில, நமக்கே நெருக்கமான விஷயங்களை, நமக்குப் பிறகும் வாழ்வதற்கு இவ்வுலகில் விட்டு விட்டுச் செல்வது மிகவும் அர்த்தம் நிறைந்ததாக எனக்குப் படுகிறது.

நீங்கள் குறிப்பிட்டமாதிரி, நல்ல நட்புக்கு அடையாளம், எவ்வளவு காலம் கழித்துச் சந்தித்தாலும், நேற்றுப் பிரிந்து இன்று பார்ப்பது போல் இருக்கும். "அப்புறம் என்ன ஆயிற்று என்றால்.." என்று நேற்று விட்டதை இன்று தொடங்குகிற மாதிரிப் பேச்சைத் தொடங்கி விடலாம்.

ஆழ்ந்த நட்புக்கு இணை அதுவே தான்.

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் Rock Van.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

//1971- ஜனவரியில் மத்தி...

...இதுதான் முதல் முறை. //
இந்த இடங்களில் இருப்பவை ஃபயர்பாக்ஸில் சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் கூடுதலாக எடிட் செய்திருந்தால் மாற்றி விடவும்.

Anonymous said...

super. congrats.

Anonymous said...

How much you are charging for this translation?

dondu(#11168674346665545885) said...

@அனானி
இது நானே விரும்பி செய்யும் மொழிபெயர்ப்பு. ஆகவே இலவசமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

தமிழ் பிரதிக்கான புக்கிங் இந்த பின்னூட்டம்!

sriram said...

ராகவன் ஜி
நீங்க சாதாரணமா புத்தகங்களை மொழிபெயர்க்க மாட்டீர்களே? இது நட்புக்கு மரியாதையா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Chandra said...

dear dondu sir,

great one i will be more interested to read your Tamil version.

chandra

பட்டாம்பூச்சி said...

All the best Dondu Sir :)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது