11/12/2009

டோண்டு பதில்கள் - 12.11.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. இந்தியாவில் எப்படிப்பட்ட புரட்சி வந்தால் நல்லது நடக்கும்?
பதில்: நாம் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும், எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் தருவார்கள் என எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்தாலே போதும். அந்த புரட்சிதான் தேவை.

2. சமையல் நிகழ்ச்சிகள் பத்திரிக்கைகளிலும்,டிவிகளிலும் அதிகமாய் வருவது பற்றி?
பதில்: சமையல் என்பது அற்புதமான கலை. அது பற்றி எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் போதாது.

3. தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை காதலிக்கும் மனிதன்?
பதில்: காதலிக்கும்போது உதைபடுவான், அப்படியே ஃப்ளூக்கில் கல்யாணம் அப்பென்ணுடன் நடந்து முடிந்தாலும் வாழ்நாள் முழுவதும் லோலுப்படுவான்.

4. தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை மணக்கும் அப்பாவி?
பதில்: அவன் அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பம்ப் ஆப்பரேட்டராக இருந்து கொண்டு தான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இஞ்சினியர் என பொய் கூறி ஒரு டீச்சரை மணந்த பாவியை நான் அறிவேன். மேலே உள்ள கேள்விக்கான பதிலையும் பார்க்கவும்.

5. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன எனும் போக்கு பரவலாய்?
பதில்: இது ஒன்றும் புதிது அல்லவே. ராமன் ராவணன் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறதே.

6. இது வரை நடந்துள்ள விசாரணை கமிஷன்களில் சூப்பர் தமாசு எது?ஏன்?
பதில்: வக்கீல்கள் போலீசார் மோதலில் முதலில் நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் வக்கீல்களின் ரௌடித்தன நடவடிக்கையை எடுத்து கூற, அது பொறுக்காமல் வக்கீல்கள் புலம்பி, அக்கமிஷன் பாதியிலேயே கைவிடப்பட்டதுதான் சூப்பர் தமாசானது. 

7. சினிமாக்காரங்களைத் தேடி ஊரை விட்டு ஓடுவது குறைந்துள்ளதா?
பதில்: அப்படியெல்லாம் குறைந்த மாதிரி தெரியவில்லையே.

8. ஜெயம் ரவியின் பேராண்மை ஆங்கிலப் படம் போலுள்ளது உங்கள் கருத்து? (பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்)
பதில்: அதுதான் ஏதோ ரஷ்ய படத்தின் காப்பி என கூறியுள்ளார்களே.

9. உப்புமா படங்களைக் கூட டீவிகளை வைத்துக்கொண்டு காசு பார்ப்பதில் யார் கெட்டி?
பதில்: சன் டிவி

10. மதிய உணவிற்குப் பின் குட்டி தூக்கம் போடும் பழக்கம் உண்டா?
பதில்: பகல் 12 மணிக்கு ஏ.வி.ஜி. ஸ்கேனிங் தானே துவங்கும். அது முடியும்வரை கணினியில் வேகம் சற்றே மட்டுப்படும். அந்த நேரத்தில் கண்ணசரலாம்.

11. தேவைக்கு மேல் தன்னிடம் பணம், சொத்து உள்ளவர்கள் கூட நிம்மதியாய் இல்லையே?
பதில்: அப்படியிருந்தால் கண்ட தோலான் துருத்தியெல்லாம் கடன் கேட்டுப் படுத்துவானே.

12. கல்லூரி படிப்பெல்லாம் இனி வேலை வாய்ப்பிற்கு உதவாது என ஆகிவிடுமா?
பதில்: கல்லூரி படிப்புகள் வேலை ஓரியண்டட் ஆக இல்லாவிட்டால் அப்படித்தான் நடக்கும்.

13. வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கை எப்போது இனிக்கும்?
பதில்: அதை இனிமையாக்கிக் கொள்ளவேண்டும் என அவர்களுக்கு உணர்வு வரும்போது. கடந்த காலம் கேன்சல் செய்யப்பட்ட காசோலை, எதிர்காலம் பின் தேதியிடப்பட்ட காசோலை, நிகழ்காலமே கையில் உள்ள ரொக்கப் பணம் என்பதை உணர்ந்தாலே பாதி யுத்தம் வெற்றியடைந்தது போல.

14. வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கை எப்போது கசக்கும்
பதில்: கேன்சல் செய்யப்பட்ட/பின் தேதியிட்ட செக்குகளை வைத்துக் கொண்டு அழும்போது.

15. கிரெடிட் கார்டுகளால் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு பின்,அவர்களின் இன்றைய நிலை?
பதில்: கிரெடிட் கார்டுகளால் அமெரிக்காவில் திவாலானவர்கள் கதை அறுபதுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகளாக வந்துள்ளது. ஆயினும் மக்கள் திருந்தவில்லை. அந்த நிலை இப்போது இந்தியாவுக்கும் வருகிறதோ என அஞ்சுகிறேன்.

16. மவுன விரதம் இருக்கும் பழக்கம் உண்டா?
பதில்: ஒரு சத்தியராஜ்படத்தில் கவுண்டமணி மௌனவிரதம் இருக்கும் நேரம் பார்த்து அவர் பிளஸ் டூ தேர்வில் தவறியது தெரியவர எல்லோரும் அவரைச் சாட அவர் கொட்டாப்புளி போன்ற மௌனம் கடைபிடிக்க, ஐயோ வேண்டாம் சாமி. நாம் மௌன விரதம் இருக்கும் நேரம் பார்த்து எல்லோரும் கும்மியடிப்பார்கள். அது தேவையா.

17. அறிவின் முதிர்ச்சியை காட்டுவது எது?
பதில்: முகஸ்துதிக்கு மயங்காது இருப்பது.

18. ஆண்கள் தினம் வருமா?
பதில்: பெண்கள் தினம் போக மீதி எல்லாமே ஆண்கள் தினம்தானே.

19. உலகில் ஓஹோவென்று வாழ்ந்த சிலர், வாழ்வின் கடைசி கட்டத்தில் சாப்பாட்டுக்கே கூட கஷ்டப்படும் நிலை ஏன்?
பதில்: அந்த ஓஹோவென்ற வாழ்க்கை அப்படியே தனது வேறு முயற்சிகள் இல்லாமல் அப்படியே இருக்கும் என நம்பியதால்தான்.

20. வாழ்க்கை தரம் உயர்வது வசதியாலா? பண்பாலா?
பதில்: நற்பண்புகளை மறக்கவிடாத வசதிகளால்.

21. ஒரு சில டீன்-ஏஜ் பெண்கள் வழி மாறி செல்ல எது முக்கிய காரனம்?
பதில்: வழிமாறி செல்வது டீன் ஏஜ் பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்லவே. 

22. இதை சீர் செய்வது எப்படி?
பதில்: அவ்வாறு வழிமீறி செல்பவர்கள்தான் சுதாரித்து கொள்ள வேண்டும்.

23. உங்கள் இளமை காலத்தில் (சமீபத்தில்) அழகான இளம் பெண்களிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறியது?
பதில்: எனக்கென எனது அத்தைப் பெண் இருந்ததால் எப்பெண்ணிடமும் வழிய வேண்டிய அவசியம் எனக்கிருந்ததில்லை. அவர்களை இம்ப்ரெஸ் செய்யவும் முயன்றதில்லை. ஆகவே நான் நானாக இருந்து இயல்பாக பேச முடிந்தது. அதுக்காக சைட் எல்லாம் அடிக்கவில்லையா என கேட்காதீர்கள். அது பாட்டுக்கு அது, தூரத்திலிருந்து நாசுக்காக.

24. ஆண்-பெண் சமம் வந்துவிட்டதா?
பதில்: பெண்களும் எல்லா துறைகளிலும் தம் முத்திரையை பதித்து வரும்போது அதுவும் வந்துதானே தீர வேண்டும்?

25. பொய் சொல்லாமல் வாழ முடியுமா?
பதில்: முடியாது என்பதால்தானே ஐயன் வள்ளுவனும் வாய்மை எனப்படுவதியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் கூறியுள்ளார்.  

26. அறுபது வயதிலும், 20 வயது இளம் ஜோடிகளை போல் வலம் வருபவர்?
பதில்: 63 வயதிலும் தனது அறுபது வயது காதல் மனைவி அவன் கண்ணுக்கு அதே இளமையுடன் இருந்தால் அவ்வாறு வலம் வர என்ன தடை?

27. கணவனால், மனத் துன்பத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு உங்கள் ஆலோசனைகள்?
பதில்: சுமுகமாகப் போவது என்பது ஒருகை ஓசையாக இருக்க முடியாது. ஆகவே எல்லாவித விளைவுகளையும் யோசித்து செயல்படுவது அவசியம். பிரிவு என்பது கடைசி பட்சமாக இருக்க வேண்டும்.

28. பெண்களால், மனத் துன்பத்துக்கு ஆளாகும் கணவன்களுக்கு ஆலோசனைகள்?
பதில்: முந்தையக் கேள்விக்கான விடைதான் இங்கேயும்.

29. வாழ்க்கை வண்டியில் முன் சக்கரம் யார்?
பதில்: இரு சக்கர வண்டியா, நான்கு சக்கர வண்டியா? சம்பந்தப்பட்ட தம்பதியர் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அது. வெளி ஆட்களுக்கு அதில் என்ன வேலை?

30. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவர்கள் ( மனநிலை) ?
பதில்: பலமுறை காலம் கடந்த பச்சாத்தாபமாக அது உருவெடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடத்தல்தான் நலம்.

31. உங்களுக்கு நன்கு தெரிந்த சூப்பர் மாமியார் - மருமகள் (உதாரண ஸ்திரீகள்) யார்?
பதில்: D. கௌசல்யா, R. சீதை

32. இந்த சென்னை மழையில் வாக்கிங் அனுபவம்?
பதில்: சில முறைகள் கிட்டியது. சூப்பர் அனுபவம். முயற்சி செய்து பார்க்கவும்.


கந்தசாமி
அதிரடியாக உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டால் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்?
1. தங்கத்தின் விலை உயர்வு உச்சத்தில்?
பதில்: தங்கத்தின் விலை உயர்வு என்பது இந்தியர்களின் தங்க மோகத்தால் வருகிறது. அதை அடக்க என்ன வாய்ப்பு இருக்கக் கூடும் எனத் தெரியவில்லையே.

2. பருப்புவகைகளை பதுக்கி வைத்துள்ள வியாபாரிகளை அடக்க?
பதில்: உற்பத்தியை அதிகப்படுத்துவதுதான் ஒரே வழி.

3. அம்பானி சகோதரர்கள் சண்டை கோர்ட் வரை?
பதில்: சுமுகமாக தீர்த்து வைப்பேன். அதுதான் நாட்டுக்கு நல்லது.

4. ஐடி துறையின் எழுச்சி?
பதில்: ஊக்குவிப்பேன்

5. இந்தியாவின் ஜிடிபி ஐ 9 % ஆக்க?
பதில்: அதை பெருக்கவைக்கும் தடைகளை நீக்குவேன்.

6. வறட்சியை போக்கி செழிப்பு செய்ய?
பதில்: நீர் மேலாண்மையை மேம்படுத்துவேன். இஸ்ரவேலர்களின் சொட்டுநீர் பாசனத் திட்டத்தை அமுல்படுத்துவேன்.

7. நதி நீர் இணைப்பு?
பதில்: அதனால் ஏற்படக்கூடிய சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, செலவாகக் கூடிய தொகை, விலை-ஆதாய விகிதம் எல்லாவற்றையும் பார்ப்பேன்.

8. தீவிர வாதம் ஒழிய?
பதில்: விடாத கண்காணிப்பு, மக்களின் முன்னேற்றம் பரவலாக்கல் ஆகியவை.

9. பாங்குகள் இணைப்பு?
பதில்: செய்ய வேண்டியதுதான். அதுதான் நல்லது என என் வீட்டம்மா (முன்னாள் பாங்க் எம்ப்ளாயீ) கூறிவிட்டார். பின்னால் ஏது அப்பீல்?

10. பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு?
பதில்: முள்மேல் போட்ட சேலை இப்பிரச்சினை. அதிரடியாக ஏதும் செய்யவியலாது.


ரமணா
இந்த மிரட்டல்களுக்கு உங்கள் ஸ்பெஷல் கமெண்ட் என்ன?
1.எடியூரப்பாவை மிரட்டும் ரெட்டிகள்

பதில்: எடியூரப்பா மோடி இல்லையே என்பதுதான் என் வருத்தம்.

2. காங்கிரசை கண் அசைவில் மிரட்டும் தலைவர்
பதில்: யார்? கலைஞரா? இது என்ன தமாஷ்?

3. ஸ்டாலினை மிரட்டும் அழகிரி(மாநில பதவிப் போட்டியில்)
பதில்: எனது பெர்சனல் சாய்ஸ் அழகிரிதான்.

4. ஜெ. அம்மையாரை மிரட்டும் சக்திகள்
பதில்: ஒரு வலுவான மாற்று ஏற்பாடு திமுகவுக்கு தேவை என்பதற்காகவாவது ஜெயலலிதா சுதாரித்துக் கொள்ளல் அவசியம். 

5. நடுத்திர வர்க்கத்தினரை மிரட்டும் தங்கத்தின் விலை
பதில்: தங்கம் மேல் அப்படி என்ன மோகம்?

மீண்டும் அடுத்த வாரம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?

அன்புடன்,

டோண்டு ராகவன்

28 comments:

சுதாகர் said...

//அதுதான் ஏதோ ரஷ்ய படத்தின் காப்பி என கூறியுள்ளார்களே. //

அந்த சுட்டியை நன்கு படிக்கவில்லையா?

நீங்கள் சொல்வது போல் அங்கில்லை. கடைசியில் இவ்வாறு முடிக்கிறார்.

//முக்கிய கோரிக்கை : நம் பதிவுலகிலும் கண்டிப்பாக பேராண்மை குறித்த விமர்சனங்கள் நிறைய வரலாம். இந்தப் படம், ரஷ்ய படத்திலிருந்து சுட்ட படம், காப்பி என்றெல்லாம் சொல்லி, அதை மட்டுமே பிரதானப்படுத்தி, ஒப்பீடு செய்து, தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம். நல்ல முயற்சியை பாராட்டலாம். வரவேற்கலாம்.//

நீங்கள் ஒரு தலை பட்சமாக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது, அப்படியா?

dondu(#11168674346665545885) said...

@சுதாகர்
அப்படம் ஆங்கிலப்படம் என குறிப்பிட்டதற்கான பதில் மட்டுமே அது. மற்றப்படி அப்படத்தை பார்ப்பேன் எனத் தோன்றவில்லை. அதற்கு காரணம் நேரமின்மை மற்றும் விருப்பமின்மையாகத்தான் இருக்கும்.

இப்போதெல்லாம் படங்கள் பார்ப்பதே குறைந்ததற்கும் அதுதான் காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கேடியார் said...

சிங்கப்பூரில் ஆபிசில் ஆங்கிலத்தில் பேச மாட்டேன் தமிழில் மட்டுமே பேசுவேன் என்று லந்து செய்தால் எப்படி அடிப்பார்கள்?

கேடியார் said...

வேலை நேரத்தில் வாங்கும் சம்பளத்திற்க்கு உருப்படியாக ஏதும் செய்யாமல் கேவலமான வலைபூ எழுதிபவர்களை என்ன செய்யலாம்

கேடி குண்ணன் said...

சில கள்ளர் ஜாதி வெறியர்கள் ஜாதிகாரன் என்பதால் மூர்த்திக்கு கூஜா தூக்கினார்களா?

dondu(#11168674346665545885) said...

@கேடி குண்ணன்
கேள்வி தவறானது. மூர்த்தி விஸ்வகர்மா ஆசாரி வகுப்பை சார்ந்தவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Suresh Ram said...

கணவனால், மனத் துன்பத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு உங்கள் ஆலோசனைகள்?

குடும்ப வன்முறை சட்டம் , வரதக்சனை தடுப்பு சட்டம் , IPC 498a மற்றும் வக்கீல் போலீஸ் துணையுடன் கணவரை குடும்பத்தாருடன் சிறைக்கு அனுப்புங்கள். கோர்ட் மூலமாக பெருந்தொகையும் கிடைக்கும் .
http://tamil498a.blogspot.com/
**************************8888
பெண்களால், மனத் துன்பத்துக்கு ஆளாகும் கணவன்களுக்கு ஆலோசனைகள்?
உச்ச நீதிமன்றம் கூறியபடி நடந்து கொள்ளுங்கள்
Obey wife and be happy, reiterates SC judge
http://timesofindia.indiatimes.com/india/Obey-wife-and-be-happy-reiterates-SC-judge/articleshow/4566330.cms
***********************
ஆண்கள் தினம் வருமா?
International Men's Day is an international event celebrated on November 19 every year
http://en.wikipedia.org/wiki/International_Men's_Day
http://internationalmensday-india.blogspot.com/

வால்பையன் said...

//நாம் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும், எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் தருவார்கள் என எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்தாலே போதும்.//

பின் அரசியல் கட்சிகளுக்கு வேலை இருக்காதே!

வால்பையன் said...

//தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை காதலிக்கும் மனிதன்?//

எந்த தகுதி!?

Sundara said...

அழகிரியைப் பற்றிய உங்கள் கணிப்பு சரியாகத்தான் இருக்கவேண்டும். திருச்சியில் வசிக்கும் என் உறவினர் கூட, அழகிரியின் படிமத்துக்கு உள்ளே வேறு ஒரு அழகிரி இருக்கிறார் என்கிறார்.

வால்பையன் said...

//ஜெயம் ரவியின் பேராண்மை ஆங்கிலப் படம் போலுள்ளது உங்கள் கருத்து?//

அப்படியா!

அசுரன்னு ஒரு டப்பா படம் பிரிடியேட்டரை காப்பி பண்ணி செல்வமணி எடுத்தாரே, அது கூட ஆங்கிலபடம் மாதிரியே உங்களுக்கு இருந்திருக்குமே!

வால்பையன் said...

//வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கை எப்போது இனிக்கும்?//

ஸ்வீட் சாப்பிடும் போது!

வால்பையன் said...

//வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கை எப்போது கசக்கும்//

பாவக்காய் சாப்பிடும்போது!

வால்பையன் said...

//ஆண்கள் தினம் வருமா?
பதில்: பெண்கள் தினம் போக மீதி எல்லாமே ஆண்கள் தினம்தானே. //

அருமையான பதில்

வால்பையன் said...

//ஒரு சில டீன்-ஏஜ் பெண்கள் வழி மாறி செல்ல எது முக்கிய காரனம்?//

இப்படி கேள்வி கேட்பது தான் காரணம்!

வால்பையன் said...

//தங்கத்தின் விலை உயர்வு உச்சத்தில்?//

கமாடிடி என்று அழைக்கப்படும் விலை பொருள்கள் விலை குறைந்தால் தான் ஆச்சர்யப்படனும்!

Anonymous said...

//
ஸ்டாலினை மிரட்டும் அழகிரி(மாநில பதவிப் போட்டியில்)
பதில்: எனது பெர்சனல் சாய்ஸ் அழகிரிதான்.

//

இக்கரைக்கு அக்கரை பச்சை போலுள்ளது.

வரும் தேர்தலில் பேசாமல் ஸ்டாலின் மதுரையிலும், அழகிரி சென்னையிலும் நின்றால் பைசா செலவில்லாமல் ஜெயிக்கலாம் என்று நினைக்கிறேன்.

மங்களூர் சிவா said...

எல்லா கேள்விகளும், பதில்களும் அருமை.

Anonymous said...

எம்.கண்ணன்.

கேள்விகள்:

1. கமல்ஹாசன் ஏன் விவேக்கை தன் படங்களில் சேர்ப்பதில்லை ? விவேக்கின் விவகாரங்களினாலா ? (வடிவேலுக்கு தேவர் மகனிலும் (மிக நல்ல), சிங்காரவேலனிலும் சுமாரான ரோல்.)

2. எல்லா 2 வீலர் கம்பெனிகளும் ஏன் சில ஸ்டாண்டர்டைசேஷன் செய்வதில்லை. ஒரு வண்டியில் பூட்டும் போது இடது புறம் (ஹேண்டில் பார்) தலை சாய, இன்னொரு வண்டியில் வலது புறம் - பார்க்கிங் லாட்டுகளில் இடம் வேஸ்ட் ஆகிறது, வண்டி விட, எடுக்க மிக கஷ்டமாக உள்ளதே ?

3. அழகிரி திருச்செந்தூர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 2 துணை முதல்வர்கள் அஃபிஷியலாக கிடைப்பார்களா ?

4. அதிமுகவில் உட்கட்சி தேர்தலாமே ? நெசமாலுமே ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறதா என்ன ?

5. ஜெயமோகன் வசனத்தில் பழசிராஜா - மூணேகால் மணிநேரம் உட்கார்ந்து சரித்திரப் படம் பார்க்க மறத் தமிழர்களுக்கு நேரம் இருக்குமா ?

6. 'கனகவேல் காக்க' படம் வெற்றி பெற்று விட்டால் பா.ரா முழுமூச்சில் சினிமாவில் இறங்கிவிடுவாரா ?

7. சோனியா காந்தி ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை அடக்கிவைத்த மாதிரி பிஜேபி டெல்லி தலைகளால் ரெட்டி சகோதரர்களை கர்நாடகத்தில் அடக்க முடியவில்லையே ?

8. அசினின் அக்குள் வியர்வை பற்றியெல்லாம் கவர் ஸ்டோரி (+ படம்) போடுமளவிற்கு விகடன் வந்துவிட்டதே ? முன்பெல்லாம் விகடன் கவர் ஸ்டோரி என்றால் ஒரு நல்ல விஷயம் இருக்கும். ஆனால் கடந்த 4 மாதங்களாக அடாசு விஷயங்களை கவர் ஸ்டோரியில் ?? என்ன ஆயிற்று விகடன் இணை, துணை, பொறுப்பு மற்றும் முதன்மை ஆசிரியர்களுக்கு ?

9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோமல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வெண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக் குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே ? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

(ஆனால் http://www.charuonline.com/Nov2009/alaikiren.html)

10. ஒரு எழுத்தாளர் அல்லது படைப்பாளியின் உழைப்பிற்கு, வெற்றிக்கு பின்னால் அவரது மனைவியின் சப்போர்ட் எவ்வளவு முக்கியம் ? (அதாவது பிக்கல் பிடுங்கல்கள், நச்சுத் தொல்லைகள் இல்லாத சப்போர்ட்)

மணிகண்டன் said...

டோண்டு, ஹுசைன் குறித்து ஜெயமோகன் எழுதியதில் லூசுத்தனமாக ஹுசைனை எதிர்க்கும் உங்களை போன்றவர்களை பாசிச்ட் என்று சரியாக கூறியுள்ளாரே ? உங்களின் கருத்து என்ன ?

dondu(#11168674346665545885) said...

@மணிகண்டன்
அது ஜெயமோகனது கருத்து. நான் அதை ஏற்கவில்லை, அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1.தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை வெறுக்கிறீர்கள்?ஏன்?
2.தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை ஆதரிகிறீர்கள்?ஏன்?
3.அடுத்து என்ன திட்டம்(2011 தேர்தலில்)வரும் என் கணிக்கிறீர்கள்?
4.மாதம் 30,000 க்குமேல் வாங்கும் அலுவலர்களுக்கு ரேசனில் மலிவு(து.பருப்பு) பொருள் மான்ய விலையில் தேவையா?அடுக்குமா?
5.இன்றைய நிலவரப்படி உலகில் பெரும் செல்வந்தர் யார்?
6.வேலை இல்லா பட்டதாரிகளுக்கு வழங்கப் படும் அரசின் உதவித் தொகை திட்டம் எப்படி உள்ளது?
7.வாழும் மனிதனின் அவசியத் தேவைகள் எவை எவை?
8.இந்த பரந்த இந்த உலகில் வாழத் தெரிந்தவன் - யார்?
9.இந்த பரந்த இந்த உலகில் வாழத் தெரியாதவன் யார்?
10.வி.ஆர். எஸ்., திட்டத்தால் வெளியேறியவர்கள் நிலை?
11.கல்வித்துறையின் வளர்ச்சி எப்படி உள்ளது?
12.தன்னை விட படித்த மனைவியுடன் வாழ்க்கை நடத்துவதுபவரின் மனநிலை?
13.மனதறிந்து துரோகம் செய்தவர்களை-செய்பவர்களை என்ன செய்யலாம்?
14.பூவுலகில் கவலையே இல்லாத மனிதர் சுயபுத்தியுடன் எவரேனும் உளரோ?
15.வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் நிலை எப்படியுள்ளது?
16.பொதுவாய் கவிஞர்கள், இயல்பு நிலை தவறி இருப்பது ஏன்?

Anonymous said...

//
9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோமல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வெண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக் குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே ? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
//

இந்துத்வாவாதிகள் வெறும் வாய்ச்சவடால் விடுபவர்கள் அல்லர் என்பதும், திராவிட ராஸ்கல்கள், மற்றும் கம்யூனிஸ்டுகள் வெறும் வாய்ச்சவடால் கேசுகள். முழு லூசுகள் என்று இதிலிருந்தே தெரியவில்லையா ?

Anonymous said...

//
டோண்டு, ஹுசைன் குறித்து ஜெயமோகன் எழுதியதில் லூசுத்தனமாக ஹுசைனை எதிர்க்கும் உங்களை போன்றவர்களை பாசிச்ட் என்று சரியாக கூறியுள்ளாரே ? உங்களின் கருத்து என்ன ?
//

அன்பின் யமகுண்டன்,

ஹுசைன் போன்ற துலுக்கர்கள் நபிகள் நாயகத்துடன் ஒன்பது வயது அயிஷா புணருவதை வரைந்திருந்தால் பெரிய புரச்சியாளன் என்று சொல்லலாம்.
நமது கோவில்களிலேயே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள புணரும் கோலத்து சிலைகளை அசிங்கமாக படம் வரைவதனால் யாருக்கு என்ன நன்மை ?

ஜெ.மோ ஹுசைனைப்பற்றி தெரியாமல் பேசுகிறார். தெரிந்தால் அவர் ஹுசைனை டிஃபெண்ட் செய்ய மாட்டார்.

ஹுசைன் போன்றவர்களின் படைப்புகளை யாரும் தடை செய்வது தவறு தான். படைப்பாளியின் சுதந்திரம் என்றுமே இருக்கவேண்டியது.

Anonymous said...

17.வெளிநாட்டு மோகம் நம் இளைஞர்களிடையே மீண்டும் வருமா?
18.நாட்டில் பெண் களுக்கு எதிரான, செக்ஸ் - வயலன்ஸ் கூடுவது அடிப்படை காரணம்?
19.எண் கணித முறைப்படி பெயரை மாற்றும் போக்கு அதிகமாகிறதே?பலன் ?
20.நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு வழிகள்?
21.சுகமாக வாழ விரும்புகிறர்வர்களுக்கு வழிகள்?
22.நேரம் போதமாட்டேன்ங்கிறதே என்பவர்கள் பற்றி?
23.ஒருவரது குறிக்கோளை அடைய எளிய உபாயங்கள்?
24.உலகில் செழுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
25.சித்த மருத்துவம் பிரபலமாய் ஆகிறதா?
26.மனிதனுக்கு எதற்கு பொறுமை தேவை?
27.குடும்பத்தில் அதிகம் உழைப்பது யார்?
28.துரோகம் செய்தவன் எதிர்காலம்?
29.திறமையும் இல்லாமல், கர்வத்துடன் அலைபவர்கள் ?
30.ஒருவனின் தலை எழுத்து பற்றி சொல்வது உண்மையா?நம்புகிறீர்களா?
31.விதியை மதியால் வென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா?
32.கனமழையில் நீலகிரியில் நிலச்சரிவு மனிதனின் பேராசைக்கு இயற்கையின் சாபம் என பார்த்த பிறகும் திருந்தாத ஜென்மங்கள்?












22.

S. Krishnamoorthy said...

அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,
இது தங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது. இருந்தாலும், டோண்டு வாசகர்கள், பதிவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன்.
நேற்று நானும் என் மனைவியும் ஆழ்வார்ப்பேட்டை டேக் மையம் திரு ஆர்.டி.சாரி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த யதிராஜவ்வைபவம் அல்லது ஸ்ரீராமானுஜர் என்ற நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். பற்பல ஆச்சரியங்கள் எங்களுக்குக் காத்திருந்தன:
1. நாட்டியம் ஆடியவர் திரு ஜாகிர் ஹுசேன் எனும் 28வயது முஸ்லிம் இளைஞர்.
2. அருமையான தமிழில் வைஷ்ணவ சம்ப்ரதாயங்களைப்பற்றி ஆழ்ந்த புலமையுடன் பேசினார்.
3. வடகலை-தென்கலை, பஞ்சராத்ரிய-வைகானஸ ஒழுகுகள் பற்றி வைஷ்ணவர்களுக்கே தெரியாத பல விஷயங்களைத் தெளிவாக விளக்குகிறார்.
4. யதிராஜவைபவம் - ஸ்ரீ ராமானுஜர் (உடையவர்) வாழ்க்கையில் நடந்த நான்கு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி.
5. நிகழ்ச்சியைத் தயாரித்தவ்ர் ரேவதி சங்கரன். இவர் அத்வைதி.
6. இந்த நிகழ்ச்சிக்காக ஜாகிர் ஹுசேன் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீ ராமனுஜருக்காகத் தன் இருகண்களைப் பறிகொடுத்த கூரத்தாழ்வாரின் சந்ததிகளைச் சந்த்து, அவர்களுடன் தங்கி, பல வைஷ்ணவ ஒழுகுகளைக் கேட்டறிந்து தமது நாட்டியத்தினை மேம்படுத்தி உள்ளார்.
7. திருச்சேறை(?) சாரநாதப் பெருமாளுக்குத் தங்கத்தில் ஆபரணங்கள் ஏதும் இல்லை என்று பட்டர் மூலம் கேள்விப்பட்டுத் தனக்குக் கிடைத்த கலைமாமணி விருதுடன் கிடைத்த தங்கப்பதக்கத்தை (5 பவுன்) பெருமாளுக்குக் காணிக்கை ஆக்க இருக்கிறார்.
8. திருக்குறுங்குடி ஜீயர் முன்னிலையில் ஸ்ரீ ராமனுஜர் (யதிராஜ வைபவம்) நாட்டிய நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.
விரிப்பின் பெருகும் என்பதால் சுருக்கிச் சொல்லவேண்டியதாகிவிட்டடது.
9. வைஷ்ணவ சம்ப்ரதாயங்களில் மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ள இந்த இளைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனின் மாணவர்.
10. சித்ராவை அக்கா என்றும், (காலம்சென்ற்ற)விஸ்வேஸ்வரனை அத்திம்பேர் என்றும் ரேவதி சங்கரனை அம்மா என்றும் அழைக்கிறார்.
11. உங்கள் அனைவருக்கும் எம்பெருமானும், எம்பெருமானாரும் “இறைவனும்” எல்லா நலன்களையும் அருளுக என்று இறுதியில் பலஸ்ருதி சொல்லிவிட்டு “என்னை ஆசீர்வதியுங்கள்” என்று பணிந்து வேண்டிக்கொண்டார்.
இந்தச் செய்தியைத் தாங்கள் தங்கள் பதிவினில் வெளியிட்டு நலம் புரியவேண்டும்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

வஜ்ரா said...

//
டோண்டு, ஹுசைன் குறித்து ஜெயமோகன் எழுதியதில் லூசுத்தனமாக ஹுசைனை எதிர்க்கும் உங்களை போன்றவர்களை பாசிச்ட் என்று சரியாக கூறியுள்ளாரே ? உங்களின் கருத்து என்ன ?
//

மணிகண்டன்,

ஹுசைனை எதிர்ப்பவர்கள் இந்து பாசிஸ்டுகள் என்று ஜெயமோகன் கூறுகிறார், அதை நீங்கள் அமோதிக்கிறீர்கள். அவர் திராவிட கழகம், கம்யூனிஸ்டுகள் பற்றி படு கேவலமாக பல இடங்களில் விமர்சித்திருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

விளக்குவீர்களா ?

வஜ்ரா said...

//
2. எல்லா 2 வீலர் கம்பெனிகளும் ஏன் சில ஸ்டாண்டர்டைசேஷன் செய்வதில்லை? ஒரு வண்டியில் பூட்டும் போது இடது புறம் (ஹேண்டில் பார்) தலை சாய, இன்னொரு வண்டியில் வலது புறம் - பார்க்கிங் லாட்டுகளில் இடம் வேஸ்ட் ஆகிறது, வண்டி விட, எடுக்க மிக கஷ்டமாக உள்ளதே ?
பதில்: ஸ்கூட்டர் கம்பெனிகள் மட்டும்தானா இதில் குற்றவாளி? வீடுகளில் நாம் உபயோகிக்கும் ப்ளக்குகளுக்கும் ப்ளக்டாப்புகளுக்குமே பொருந்துவதில்லையே. பல நேரங்களில் பொருட்களை டிசைன் செய்பவர்கள் தமது கற்பனைத் திறமையை மூட்டை கட்டி வைத்து விடுகின்றனர் என்றுதான் கூற வேண்டும். நீங்கள் கூறிய உதாரணத்தையே எடுத்து கொள்ளுங்கள். மிகவும் உண்மையான, சீரியசான குற்றச்சாட்டு. ரொம்பவும் எளிமையாக தவிர்த்திருக்க வேண்டிய விஷயம், ஆனால் அதிலேயே கோட்டை விட்டிருக்கிறார்களே.
//


அனேகமாக தற்பொழுது மார்கெட்டில் வரும் புதிய ரக மாடல்களில் இரண்டு பக்கமும் ஹாண்ட் பரை சாய்த்து நெக் லாக் செய்ய முடியும்.

ஒரு காலத்தில் நெக் லாக்குக்கு தனி சாவி, பெட்ரோல் டேங்குக்கு தனி சாவி, பெட்ரோல் லாக்குக்கு தனி சாவி என்று வண்டியை எடுத்து மறுபடியும் வைப்பதற்குள் மூளையை ஏகத்துக்கு வேலை செய்யவைப்பார்கள். கடவுள் புன்னியத்தில் இப்பொழுதெல்லாம் ஒரே சாவி தான். வண்டியை எடுப்பதும் வீடு வந்து சேர்வதும் தானாக நடக்கும் விஷயம் போலாகிவிட்டது.

பிளக்கும் பிளக் டாப்பும் இந்தியாவில் சில நிர்ணயிக்கப்பட்ட சைசில் தான் இருக்கவேண்டும் என்ற விதி முறையெல்லாம் இருக்கிறது தான். ஆனால் "சஸ்தா மால்" தயாரிப்பவர்கள் இதெல்லாம் கடைபிடிப்பதில்லை.

நீங்கள் "சஸ்தா மால்" வாடிக்கையாளராக இருந்தால் இப்படித்தான் கஷ்டப்படுவீர்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது