இதன் முந்தைய பகுதி இதோ வந்தேன் டோண்டு
இப்பதிவை போடும் உந்துதல் எதேச்சையாக வந்தது. திடீரென தேதியைப் பார்த்தால் நவம்பர் 7. இன்றுடன் நான் பதிவுலகுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. இது 894-வது பதிவு என்று கூறுவது புள்ளிவிவரம் கருதியே.
சாதித்தது என்னவென பார்த்தால் அளவற்ற தன்னம்பிக்கை, தாய் மொழியில் எழுதும் போதை, பல நண்பர்கள், எனக்காக உழைத்த முக்கிய விரோதி மற்றும் அவனது அல்லக்கைகள் என கூறிக்கொண்டே போகலாம்.
அதிலும் முக்கியமாக என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தப் பதிவுலகுக்கு வந்ததுதான் என்று கூறினால் அது மிகையாகாது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது செயல்பாட்டை ஊக்குவித்த தமிழ்மணத்துக்கும் இங்கே நன்றி தெரிவிக்கிறேன். அது பற்றி நான் எழுதிய இப்பதிவிலிருந்து சில வரிகள் இதோ.
பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன? தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாடு இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.
இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.
பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.
தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவிப்பது நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவுக்குத்தான். அவர்தான் எனது பதிவுலக பிரவேசத்துக்கு தூண்டுகோல்.
அடுத்து வரும் ஆண்டுகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
23 hours ago
28 comments:
வாழ்த்துகளும், பகிர்வுக்கு நன்றியும்!
--பழமைபேசி (எ) மணிவாசகம்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் டோண்டு சார். முரட்டு வைத்தியம் முதற்கொண்டு உங்களிடம் இருந்து inspire ஆக கொள்ள எராளமான விஷயங்கள் உண்டு.
வாழ்த்துக்கள் டோண்டு சார்.
ஐந்தாம் ஆண்டு
கொண்டாடும் டோண்டு
பதிவுலகை பல காலம் ஆண்டு
வர வாழ்த்துகிறான் இந்த வாண்டு.
மனமார்ந்த வாழ்த்துகள்!
வாழ்த்துகள் டோண்டு சார்..
உங்கள் மொழிபெயர்ப்பு அனுபவங்கள், முரட்டு வைத்தியம், அனுபவப் பகிர்வுகள் என்றும் பிறர்க்கு பயனுள்ளதாக அமைந்திருந்தன. அவை என்றும் தொடர வாழ்த்துகள். உங்கள் மொழிபெயர்ப்பின் வாயிலாக சிறந்த ஜெர்மானிய, பிரெஞ்ச் படைப்புகளை தமிழுக்கு கொண்டு வரலாமே
வாழ்த்துக்கள் டோண்டு சார்
ராகவன் சார்,
கடுமையான மொழிபெயர்ப்புப் பணியை தொடர்ந்து கொண்டு, 600-க்கும் மேற்பட்ட இடுகைகளை எழுதியிருப்பது ஒரு சாதனை தான் !
நீங்கள் வலையுலக தெண்டுல்கர் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
Happy to note I was the selector when you made your debut in blogging :)
Nobody can drop you. You only can decide when you should retire ;-)
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!
அன்புடன்
பாலா
வாழ்த்துக்கள். Why dont you think of a compilation of your best articles into a book for the coming bookfair.
if you tell your intent many publishers may come forward.
@ஷிர்டி சாயிதாசன்
புத்தகம் போடும் அளவுக்கு அவற்றில் ஒரு விசேஷமும் இல்லை என்பதுதான் நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்கோ...வாங்கோ.,,
தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதரை அடிக்கடி நினைக்கிறேளே, அந்த்வூரா பூர்விகம்? சும்மா கேட்டேன். நமக்கு அந்தவூர் பக்கம் அதனாலே.
@கள்ளபிரான்
தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் பற்றி நான் இட்டப் பதிவு இதோ:
பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
'இதோ வந்தேன்' என்று ஓடி வந்து தலைகாட்டும் பொழுதே, 'டோண்டு'சாருக்கே சொந்தமான அந்த இளமையும் துள்ளிக் குதித்து ஓடிவருவதாகத் தோன்றுகிறது.. சமீபத்திய ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நவம்பர்--7, சமீபத்திய 894 ப்திவுகளுக்கு முந்தைய முதல் பதிவு, சமீபத்திய..
நீங்கள் மறந்தாலும், ஒரு இரவு பூராவும் விழித்திருப்பதற்காக ஆரம்பத்திலிருந்து என் பதிவுகள் பூராவும் படித்து நீங்கள் கழித்த, விமரிசித்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். உங்கள் விழிப்பினால் விளைந்த பலங்கள் அனந்தம்.
கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ என்றால், கண்ணுக்குத் தெரிந்து..தினம் தினம் நூற்றுக்கணக்கானோர், உங்கள் பதிவு வழி-- என் பதிவுகளைப் பார்த்து, படித்து, புதுப்புது படிப்போர் கிடைத்த, கிடைக்கும் பேற்றை இந்த நேரத்தில் அவசியம் சொல்லியே ஆகவேண்டும்.
உங்கள் உற்சாகம், தளாராத உழைப்பு தொடரட்டும்.. பற்பல ஐந்தாண்டுகளைக் காண வாழ்த்துக்கள்.
கூடிய விரைவில் 5 லட்சம் ஹிட்சுகளை தாண்டுவதுற்க்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சார்!
வாழ்த்துக்கள்.
ராகவன் ஐயா, இன்னும் 50 வருடம் நீங்க எழுதனும்னு என் அப்பன் வரதனை வேண்டிக்கிறேன்.. உங்கள் பதிவு மூலமாக நிறைய அறிந்து கொண்டோம்.. உங்கள் அனுபவம் அருமையானது...
வாழ்த்துக்கள்.
இந்த மிரட்டல்களுக்கு உங்கள் ஸ்பெஷல் கமெண்ட் என்ன?
1.எடியூரப்பாவை மிரட்டும் ரெட்டிகள்
2.காங்கிரசை கண் அசைவில் மிரட்டும் தலைவர்
3.ஸ்டாலினை மிரட்டும் அழகிரி(மாநில பதவிப் போட்டியில்)
4.ஜெ. அம்மையாரை மிரட்டும் சக்திகள்
5.நடுத்திர வர்க்கத்தினரை மிரட்டும்
தங்கத்தின் விலை
வாழ்த்துக்கள்.
டோண்டு சார்..
ஐந்தாண்டு வலை சேவையை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்...
தாங்கள் மேலும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக பல நூறு பதிவுகளை பதிய வேண்டும் என்பதே எங்கள் அவா...
as bala says ur sachin tendulkar of tamil blog word. my wishes to yr 5 th year
எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் எந்தவித பயனுமில்லாத குப்பைகள் நிறைந்த (பெரும்பாலும்) இந்த பதிவுலகில் நடைமுறை பயன்களை, ஆலோசனைகளை, நல்ல அனுபவங்களை வாசிப்பவர்களுக்கு அள்ளி வழங்கியவை உங்கள் பதிவுகள். உங்கள் பல பதிவுகளை காப்பி செய்து word format ஆக சேமித்து வைத்துள்ளேன்.(ஏதேனும் விதிமுறைகளை violate செய்கிறேனா என தெரியவில்லை. எனக்கு மிகவும் பயனளிக்கின்றன என கூற விழைகிறேன்.) ஒருவர் கூறியது போன்று நிச்சயமாக உங்கள் நல்ல பதிவுகளை தொகுத்து புத்தகமாக கொண்டு வர முயற்சிக்கலாம். நன்றிகள் பலப்பல.
//ஏதேனும் விதிமுறைகளை violate செய்கிறேனா என தெரியவில்லை. எனக்கு மிகவும் பயனளிக்கின்றன என கூற விழைகிறேன்.//
எனது எழுத்துக்க்ளின் காப்புரிமை என்னிடம்தான் உள்ளது. நீங்கள் தனிப்பட்ட முறையில் அவற்றை படிப்பதற்காக வேர்ட் கோப்பில் வைப்பது தவறில்லை என நினைக்கிறேன். அதை கட்டுப்படுத்தவும் இயலாது.
ஆனால் அவற்றை பொதுவில் வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை மறக்காதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துகள்.
//
ஐந்தாண்டு வலை சேவையை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்...
//
யோவ், அவரு எங்கெய்யா முடிச்சிருக்காரு....இன்னும் தொடந்துகொண்டுத்தானே இருக்காரு...என்னமோ கோர்ஸ் படிச்சு முடிச்ச மாதிரி சொல்றியே..
//நீங்கள் மறந்தாலும், ஒரு இரவு பூராவும் விழித்திருப்பதற்காக ஆரம்பத்திலிருந்து என் பதிவுகள் பூராவும் படித்து நீங்கள் கழித்த, விமரிசித்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன்.//
எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த இரவு அல்லவா அது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்தாம் வருட வாழ்த்துக்கள்!
Post a Comment