சென்னைப் பல்கலைக்கழக வைணவத் துறையின் தலைவர் திரு. எம். ஏ. வெங்கிடகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய ஒரு உரையிலிருந்து சில வரிகள் கீழே தருகிறேன்.
அசோகவனம். ராவணன் சீதையை பயமுறுத்திவிட்டு அப்பால் செல்கிறான். மரத்தின் மேலே ஒளிந்திருக்கும் அனுமன் சீதைக்கு ஆறுதல் கூற நினைக்கிறான். ஆனால் எந்த மொழியில் பேசுவது? அதற்குத்தான் தமிழைத் தேர்ந்தெடுக்கிறான். இதை எப்படி நாம் உணர்வது? அனுமன் சீதையிடம் இனிய மொழியில் பேசினான் என்று வால்மீகி கூறுகிறார். அவரால் அவ்வாறு குறிப்பிடப்பட்ட மொழி தேமதுரத் தமிழாகத்தானே இருக்க வேண்டும்? அவர் இதை வடமொழியில் குறிப்பிடுகையில் “மதுரம் வாக்யம்” எனக் கூறுகிறார்.
அவ்வாறு குறியிடப்படும் தமிழ்தான் ஆழ்வார்களது மொழியுமாகும் என கூறுகிறார். இறை அனுபவத்தில் மூழ்கியவர்கள் ஆழ்வார்கள். மற்ற எதையுமே அவர்கள் உணர்ந்தாரில்லை. நீரில் மூழ்கி மூச்சை பிடித்து இருப்பவன் நீருக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதில் அக்கறை இல்லாதது போலத்தான் ஆழ்வார்களும் நாராயணனை மிஞ்சி ஒன்றுமே இல்லை என இருந்திருக்கின்றனர். அந்த அனுபவமே அவர்களது பாசுரங்களாக வெளியே வந்துள்ளது. அவற்றை இயற்றும்போது அவை இயல்பாகவே ஆழ்வார்களிடமிருந்து வெளிவந்தன, இருப்பினும் அவை எல்லா இலக்கண விதிகளுக்கும் உட்பட்டு காட்சியளிப்பதே பெரிய அற்புதம்தான் என்றும் திரு. வேங்கிடகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார். அப்படித்தான் என ஆமோதிப்பது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன்.
மேலே சொன்ன உரை பற்றி எனக்கு சொன்ன நண்பர் டாக்டர். வி.கே.எஸ்.என். ராகவனுடன் பேசும்போது அவரிடம் வடமொழியில் ஏன் பேசவில்லை எனக்கேட்க, அவர் ராவணன் வடமொழியில் மிகவும் தேர்ச்சி பெற்ற பிராமணன், ஆகவே அனுமன் சீதையிடம் பேசியது என்ன என்பதை எதேச்சையாகக்கூட ஒட்டுக்கேட்டு அறியக்கூடாது என்று எண்ணியிருக்கலாம் என்றார்.
அப்போ ராவணன் தமிழ் பேசும் பிராமணன் இல்லையா??????
சாதியை உருவாக்கியவர் யார்?
திராவிடக் குஞ்சுகள் சொல்கின்றன பார்ப்பனர்கள்தான் என. அவர்களை விடுங்கள், அவ்வாறு பேசினால்தான் அவர்களுக்கு அடுத்த வேளை சோறு என்ற தோரணையில் அவர்கள் இருக்கின்றனர். காந்தியும் சாதியும் என்னும் வரிசையில் நம்ம ஜெயமோகன் எழுதிய பதிவு வரிசையில் ஒரு இடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் சொன்னவற்றை இங்கு முதற்கண் விவாதத்துக்கு வைக்கிறேன்.
“சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.
ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவற்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்”.
=====================================================================
“இந்தக் கோணத்தில்தான் நாம் காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.
காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.
இந்திய சமூகம் மீது நெடுங்காலமாக நிகழ்ந்த பல அன்னியத் தாக்குதல்களை வெல்லவும் தாக்குபிடிக்கவும் அது உதவியிருக்கிறது. மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழில்குழுவாகத் திரண்டு ,ஒரே உடலாக தங்களுக்கு வாழ்க்கை விடுத்த கடுமையான சவால்களை சமாளிக்க சாதியமைப்பு வழியமைக்கிறது. ஆகவே மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் உதவி இல்லாமலேயே மக்கள் தங்களை சிறிய சுயநிர்வாக அமைப்புகளாக தொகுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ள சாதி உதவியிருக்கிறது. சாதியாசாரங்களும் சாதிவிதிகளும் அவ்வாறு உருவாகி வந்தவையே”.
அதிலிருந்து சில வரிகள்:
“(2957-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த நாடோடியும் அவர் வக்கீல் நண்பரும்) அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு போகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.
ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.
நீ என்னதான் சொல்ல வருகிறாய் என என்னைக் கேட்கும் முரளி மனோகருக்கு நான் கூற விரும்புவது, சாதி விஷயத்தை ஒற்றைப் பரிமாணத்தில் பார்ப்பது என்பது மகா தவறு ஆகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
21 comments:
ஒற்றைப் பரிணாமமோ கற்றைப் பரிணாமமோ, சாதீயம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இருந்த வடிவத்தில் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதது தான்!
@கிருஷ்ணமூர்த்தி
யாரும் சாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப் படுத்தவில்லை. அதே சமயம் சாதி அமைப்பின் மற்ற அனுகூலங்கள் இருக்கும் காரணத்தால்தான் அந்த அமைப்பே இன்னும் நிற்கிறது என்பதையும் மறுக்கவியலாது.
குழுவமைத்தல் என்பது மனிதனின் இயற்ககிக் குணம். இதற்கு பல பரிணாமக் காரணங்கள் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன இன்னும் வால்பையனைக் காணோம்? இன்னிக்கு இருக்கு கச்சேரி...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//அதே சமயம் சாதி அமைப்பின் மற்ற அனுகூலங்கள் இருக்கும் காரணத்தால்தான் அந்த அமைப்பே இன்னும் நிற்கிறது என்பதையும் மறுக்கவியலாது.//
Mr. Dondu,
Since you have not experienced the pains outshining the gains due your higher ranking in the social hierarchy, you don't seem to understand that. And hence your perspective.
For people/group that don't see gains outweighing the pains due to their lower social ranking, it is okay( correct or just the only forward step is) to dismantle this social hierarchy. For them, it is okay to lose such skills/finesse however great they may be.
And the alternate perspective continue to gain currency in this modern time and may well establish itself even if you don't like it.
Looking from a third perspective, this model has not proved to be "the best" to be retained forever. There are examples of other nations that has become developed without adopting *this* model.
@அனானி
நீங்கள் விரும்பினால் ஒரே நாளில் சாதி அழிந்துவிடப் போகிறதா என்ன? பல நூற்றாண்டுகளாக உறுதியாக நின்றது அவ்வளவு சீக்கிரம் அழியாது என்றுதான் கூற வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நண்பரே,
பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பது என்ன ? ஒருவனின் பிறக்கும் போதே இருக்கும் மனநிலைக்கு (நல்ல, சம, தீய எண்ணங்கள்) ஏற்பவே தொழிலை ஏற்படுத்தி கொள்கிறார்கள். எனவே செயல்களின் அடிப்படையில் வர்ணம் கற்பிக்க பட வேண்டும் என்பது தானே ?
இதைக் குழைத்து முன்னோர்களின் அடிப்படையில் சாதியை அமைத்தது தானே மிகப்பெரிய தவறு ?
இது தானே இன்று இந்து தர்மமே அழியக்கூடிய நிலையில் இருப்பதற்கு காரணம்?
உண்மையில் பகவத் கீதையின் அடிப்படையில் பிரம்மத்தை (அறிவை, உண்மையை, சத்தியத்தை) வெளிப்படுத்தும் அப்துல் கலாம், அண்ணாதுரை ஆகிய அறிவாளிகள் தானே பிராமணர்கள் ? இதை வெளிப்படையாக பேசினால் பிரச்சிணை முடிந்ததே ?
செய்வீர்களா ?
@சபரிநாதன்
இப்போது பின்னோக்கி பார்க்கும்போது க்ளியராகவே தவறு எனத் தெரிபவை அவை உருவாகும்போது இயற்கையாகவே மனித மனத்தின் போக்குக்கேற்பவே உருவாயிற்று. இவற்றையெல்லாம் யாரும் ரூம் போட்டு யோசித்து செய்யவில்லை.
இப்போது கூட பார்க்கலாம் சாதி எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும் எனக்கூறிவரும் திகவில் கூட வீரமணி தனது புதல்வனைத்தான் முன்னிறுத்துகிறார். பெரியார் கூட அப்படியே மணியம்மைக்கு கட்சி பொறுப்பை தூக்கித் தந்துவிடவில்லை. அதற்கு முன்னர் அவரை தனது மனைவியாக்கியபின்னால்தான் செய்ய முடிந்தது. பாமக, திமுக ஆகிய எல்லாவற்றிலும் பிள்ளைகள்தான் முன்னிறுத்தப்படுகிறார்கள். வெளியாட்கள் இவற்றை தவறு என கூறவியலும்போது சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் மட்டும் அதை இயல்பாகத்தானே ஏற்றுக் கொள்கிறார்கள்?
அது போலத்தான் முதலில் வெறும் வர்ணங்களாக ஆரம்பித்த வழிமுறைகள் சாதிகளாக காலப்போக்கில் இறுகின. அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு சாதகமான விஷயம் இருந்தது, ஆகவே எல்லோரும் அதில் ஒத்துழைத்தனர்.
இப்போது பார்க்கும்போது அதெல்லாம் அநீதி எனக் கூறுபவர்களே தங்களுக்கு என வரும்போது அதைத்தான் வாய்ப்பு கிடைத்தால் செய்கின்றனர்.
இப்பிரச்சினை பலபரிமாணங்கள் கொண்டது. கல்யாண விளம்பரங்களிலேயே பார்க்கலாமே மனிதருள் இத்தனை சாதிகளா என்று. கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் அரசியல்வாதியே தனது பிள்ளைக்கு தனது சகோதரியின் மகளைத்தான் பெண்கேட்கிறான். அவன் தலைமையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் தம் மகன் மகளுக்கு திருமணம் என வரும்போது சந்தியில் நிற்கிறார்கள்.
சாதி முறை இல்லாவிட்டால் வேறுவகைகளில் வேற்றுமைகள் உலகின் எல்லா நாடுகளிலுமே இருந்து வருகின்றன. இங்கிருப்பவர்கள் கண்ணுக்கு அவை தேவலாம் எனப்படுவது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போலத்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
annadorai arivali?the greatest joke of the century.VIZZY
//@அனானி
நீங்கள் விரும்பினால் ஒரே நாளில் சாதி அழிந்துவிடப் போகிறதா என்ன? பல நூற்றாண்டுகளாக உறுதியாக நின்றது அவ்வளவு சீக்கிரம் அழியாது என்றுதான் கூற வேண்டும். //
ஒரு நாளில் நடக்காதுதான். அதுக்காக முயற்சியை விட்டுட முடியுமா?
அமைதிப்படை படத்தில் 'அமாவாசை' எனும் பாத்திரம் பேசும் ஒரு வசனம், "முடியும்ன்னு நெனச்சதுனாலதான் அமெரிக்காக்காரன் நிலாவுல போய் எறங்குனான். முடியாதுன்னு நெனச்சதுனாலதான் நம்மாளுங்க நெலாச்சோறு ஊட்டிட்டு இருக்காங்க"
எல்லாம் நம்பிக்கைதானே.
@Vijayan
நான் குறிப்பிட்டு இருந்தது. இப்போது உள்ள அறிவியல் அண்ணாதுரை.
@dondu
ஐயா, “பின்னோக்கி பார்க்கும்போது க்ளியராகவே தவறு எனத் தெரிபவை” ஏற்று கொண்டமைக்கு நன்றி.
மற்றவர்களை போல Copy Paste செய்வதும், பிறரை கை காண்பிப்பது நமக்கு வேண்டாம். புரியுமென நினைக்கிறேன்.
பரமன் சொல்வது இதை தான்: எவன் உண்மையை மக்களுக்கு அறிவிக்கிறானோ அவனே பிராமணன்.
எவன் மக்களை காக்க இராணுவ வீரனாகவோ, காவல் துறையிலோ உயிரை விட தயராக இருக்கிறானோ அவனே சத்ரியன்.
எவன் எல்லா பொருள்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க பாடுபடுகிறானோ அவனே வைசியன்.
எவன் தன் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைக்கிறானோ அவனே சூத்ரன்.
உண்மையில் இவர்க்ளுக்குள் ஏற்ற தாழ்வு என்பதே கிடையாது. (இவர்கள் எந்த நாடாலும், மதமானாலும், இப்போது கூறப்படும் சாதியானாலும்)
இந்த பகவத் கீதை மொழிகளை இங்கு விவாதிக்கும் அனைவரும் ஒப்பு கொள்வர்கள் என்றே கருதுகிறேன்.
இதை தவிர ”என் பிறப்பால் எனக்கு இது வந்தது” எனக் கூறுபவர்கள் பகவத் கீதையையே மாற்றுவது போல தான் எனவே கருதுகிறேன்.
அன்புடன்,
சபரிநாதன்
சாதி விஷயத்தில் நமக்கு, தற்போது உள்ள, இந்தக் திராவிடக் கண்ணோட்டம் மிகவும் அபத்தமானது. சமுதாயத்தில் பிராமணர்கள், சாதியை அறிமுகப்படுத்தி சதி செய்து முன்னுக்கு வந்தார்கள் என்னும் கூற்று சற்று ஆழ்ந்து வரலாற்றை நோக்கினால் கூட கட்டுக்கதை என்பது விளங்கும். பிராமணர்களின் செல்வம் சார்ந்த முன்னேறம் என்பது கடந்த 200 ஆண்டுகளாகத் தான் நடந்து வந்துள்ளது. அதற்கு முன்பு வரை, கற்றிருந்தால் கூட, ஒரு சில விதிவிலக்குகள் தவிர, அனேகமானவர்கள் இரந்துன்னும் நிலையில் தான் வாழ்ந்து வந்துள்ளார்கள். மற்றபடி, உயர்வு தாழ்வு என்பது அதனை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை தான். உதாரணமாக, விவசாயியின் இன்றைய நிலை ஒரு 200 ஆண்டுகள் முன்பு உள்ள நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். விவசாயியை பிராமணர்கள் தான் திட்டமிட்டு கீழ் நிலைக்குக் கொண்டு வந்தார்களா? உடனே ”விவசாயிகள் அப்படி ஒன்றும் கீழ்நிலையில் இல்லை” என்று வாதிடக் கிளம்பினீர்கள் என்றால், தயவு செய்து எத்தனை விவசாயிகள் தங்கள் மகனும் விவசாயியாக ஆக வேண்டும் என்று எண்ணுவார்கள்? எத்தனை விவசாயி மக்கள் தாங்களும் விவசாயியாக ஆக வேண்டும் என்றும் அவாவோடு வளர்கிறார்கள் என்று கண்டு கொண்டு வாருங்கள்.
”இனிய மொழி” என்ற பதத்தை மட்டும் வைத்தே அது தமிழ் தான் என்ற முடிவுக்கு வருவது சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றுகிறது. இனிய மொழி பேசினான் என்பது இனிமையாகப் பேசினான் என்ற அர்த்ததில் தான் பெரும்பாலாகச் சொல்லப்படும். இதற்குத் தமிழில் நிறைய உதாரணங்கள் உள்ளது.
//இதை தவிர ”என் பிறப்பால் எனக்கு இது வந்தது” எனக் கூறுபவர்கள் பகவத் கீதையையே மாற்றுவது போல தான் எனவே கருதுகிறேன்.//
உண்மைதான், ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே பகவத்கீதை இந்த விஷயத்தில் மார்றப்பட்டு விட்டது. அதுவும் மனித இயற்கையால் தானாகவே உருவானது. ஒவ்வொரு ஸ்டெப்பிலும் சம்பந்தப்பட்டவர்கள் அதை தங்கள் நலனாகப் பார்த்தார்கள் என்பதே நிஜம்.
இப்போது எளிமையான அந்த முறைக்கு போக விரும்பினாலும் போகவியலாது. அதைத்தான் நான் கூறுகிறேன்.
அதே சமயம் இப்போது கூட சாதி அமைப்பு நிறை பலருக்கு சௌகரியமாக இருப்பதால்தான் அது தொடர்கிறது என்றுதான் கூற விரும்புகிறேன்.
சாதிவேறுபாடுகளை களைவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
மரத்தின் மேலே ஒளிந்திருக்கும் அனுமன் சீதைக்கு ஆறுதல் கூற நினைக்கிறான். ஆனால் எந்த மொழியில் பேசுவது? அதற்குத்தான் தமிழைத் தேர்ந்தெடுக்கிறான்.
//
பார்ப்பான பாசிஸ்டுகளா, அப்ப தமிழ் குரங்கு பேசும் மொழியென்று சொல்கிறீர்களா ?
-இப்படி வினவு, த.ஓ மற்றும் பல மாய்மால்ய மஹானுபாவுலுக்கள் கூறக்கூடும்.
ஐயா,
//பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே பகவத்கீதை இந்த விஷயத்தில் மார்றப்பட்டு விட்டது.//
பகவத் கீதை தத்துவம் இன்றும் ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ளது.
அறிவியல் அறிஞர்கள் (பௌதீக, மனோ)-பிராமணர்கள், வீரர்கள் (இராணுவம்,உள்துறை)-சத்ரியர்கள், தொழிலதிபர்கள்-வணிகர், உழைப்பாளிகள்-சூத்ரர் எனவே ஒவ்வொரு நாட்டிலும் படி நிலை உள்ளது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சாதி தான் அழிந்து வருகிறது. ”நீங்கள் சாதியை குடும்ப அமைப்போடு குழப்பி கொள்கிறீர்கள் என கருதுகிறேன்”. சுற்றத்தாருடன் உள்ள குடும்ப அமைப்பு உதவுகிறது; சௌகரியமாக இருக்கிறது எனக்கூறுங்கள் ஒப்பு கொள்கிறேன்.
தயவு செய்து சாதி என்ற பதத்தை எடுங்கள். இன்றைய இந்துக்களின் பிரிவினையை தூண்டுபவர்களுக்கே அது பயன்படும். (புரியுமென நினைக்கிறேன்)
அன்புடன்,
சபரிநாதன்.
Mr.Dondu,
I've read your blog and liked
many topics you write about.
(eg; how to write complaint letter
to corporates etc)
Somehow I can't avoid the feeling that this topic is particulary chosen now so 5 lakh hit can be acheived soon :-) is it true ?
@வஜ்ரா
அதுக்கு முன்னாலே தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி எனக் கூறிய அந்த கன்னடியரை கண்டிக்க வேண்டியிருக்குமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/
Congrats on crossing 5 lak hits.
//
நீ என்னதான் சொல்ல வருகிறாய் என என்னைக் கேட்கும் முரளி மனோகருக்கு நான் கூற விரும்புவது, சாதி விஷயத்தை ஒற்றைப் பரிமாணத்தில் பார்ப்பது என்பது மகா தவறு ஆகும்.
//
நீங்கள் அதை என்னதான் மகா குற்றம் என்றாலும், பண்டாரங்கள் சேர்ந்து மடம் கட்டுவது பற்றி யோசிப்பது போல் அதைப்பற்றி பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். விடிந்ததும் திருவோட்டைத் தூக்கிக்கொண்டு போவது போல் தன் சாதிக்குள் சடங்குகள் செய்து கொள்வார்கள்.
இதில் சில அறிவு ஜீவிகள் கலப்பு மணத்தால் சாதி மறையும் என்றும் நம்புவார்கள். கலப்பு மணத்தால் ஒரு சாதியிலிருந்து இன்னொறு சாதிக்குவேண்டுமானால் போகலாம், ஆனால் ஏதாவது ஒரு சாதி அடையாளம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
சீதை, ராமன், அனுமான், இன்னும் தசரதன், கௌசல்யா, கைகேயி, லக்ஷமணன், பரதன், சத்ருக்னன், etc etc எல்லாருமே தமிழில்தான் பேசினார்கள் என்று சொல்ல வேண்டியதுதானே? அட, போங்கையா ..
I think Dondu sir's first comment on forming groups is human nature is very important.
Extending that thought, I am looking at my situation here (US I mean).
Its said US citizens wear their patriotism on their sleeves. Meaning they are highly patriotic, and never hesitate to bring up that concept in each and every issue they deal with. This concept which starts at the top as nation, comes down to all the levels of region, state, cities etc. For example, there are so many activities that happen which encourages the citizens in the City to feel proud about their city, talk about the culture, events, sports etc. That way I think the grouping mentality is nurtured.
So my question is, what would it take to encourage such mindset, that we are all living together in a city/area, so lets combine our energy for the common good. May be a start...
Post a Comment