சமீபத்தில் அறுபதுகளின் துவக்கத்தில் திரையிடப்பட்ட “பாலும் பழமும்” படத்தில் சிம்மக்குரலோனுக்காக நம்ம டி.எம்.எஸ். பின்னணிக்குரல் தந்த போனால் போகட்டும் போடா பாடலில் “வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது”? என்று வரிதான் இப்பதிவின் தலைப்பு என்று சொல்ல என்றென்றும் அன்புடன் பாலா எல்லாம் வரத்தேவையில்லை. எல்லோருக்கும் தெரிந்ததே இத்தகவல். அது ஏன் என்பதற்கு முன்னால் எனது பொன்னியின் புதல்வர் - 3 க்கு வந்த ஒரு அனானி பின்னூட்டம் ஒன்றைப் பற்றிக் கூற வேண்டும்.
ஆங்கிலத்தில் 3 பகுதிகளாக கேட்டுள்ளார். கடைசியில் எனது கருத்தையும் கேட்டுள்ளார். அவர் கேட்டுள்ளதை நான் இங்கு சுருக்கி தருகிறேன்.
அரசு வேலைகளில் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணம் ஒன்று இப்போது பரிசீலனையில் உள்ளது. சாதாரணமாக மத்திய அரசு வேலையில் ஓய்வு பெறும் வயது 60. அதை 65-க்கு அல்லது 62-க்காவது உயர்த்த வேண்டும் என முயற்சிகள் நடக்கின்றன. அதன் பலன்கள் என்ன?
உடனடி சாதகமான விஷயம் என்னவென்றால் ஓய்வு பெறும் சமயம் தர வேண்டிய கிராஜுவிடி போன்றவை 2 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒத்தி போடப்படும். இப்போது ஆயுள் 80 வரைக்கும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் முதலிய நாடுகளில் ஜனத்தொகை குறையும் அபாயம் உள்ளது.ஆகவே வயதானோரது விகிதமும் அதிகரிக்கும். அதே சமயம் அவர்களுக்கு தரப்படும் சலுகைகளுக்காக உழைக்க வேண்டிய இளைஞர்களின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை.
ஆனால் லோக்சபா தேர்தல் நேரத்தில் அதை கொண்டுவரத் துணியாததன் காரணம் இளைஞர்களுக்கு வாய்ப்பு தராதது போன்ற தோற்றம் வந்து விடலாம் (அதுவும் ராகுலை காங்கிரசில் மையப்படுத்தும் நேரத்தில்) என்ற அச்சமே காரணம். மேலும் காங்கிரசுக்கே தாங்கள் வெற்றி பெறுவது அத்தருணத்தில் சந்தேகமாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்த பின்னால் அதை கொண்டு வருவதில் அரசு அக்கறை கொண்டுள்ளது. பிரதமரும் தீவிரமாக இருக்கிறார்.
இதன் இன்னொரு சாதகமான பலன் என்னவென்றால் சீனியர் அரசு அதிகாரிகளின் அனுபவ அறிவை இன்னும் சில காலங்களுக்கு பெறலாம். அதுவும் ஆயுள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் அவர்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு முழு பலத்துடன் செயல்படலாம். அதை ஏன் இழக்க வேண்டும்?
பிரதமருக்கு மட்டுமே இது தோன்றவில்லை. சில காலத்துக்கு முன்னால் பல்கலைக்கழக மான்யக் குழு நிறுவிய கமிட்டியும்வும் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துமாறு ஆலோசனை கூறிள்ளது.
உலக நாடுகளில் பலவர்றில் இந்த எண்ணம் ஏற்கனவே செயலாக்கப்பட்டுள்ளன.
ஆனால் பாகிஸ்தானுடன் சேர்ந்து Sharm-el-Sheikh-ல் விட்ட அறிக்கையால் பிரதமர் தாக்கப்படும் நேரத்தில் அவர் இதில் உறுதியாக இருந்து செயல்படுவாரா என்பதையும் பார்க்க வேண்டும். இருப்பினும் சில நாள் கழித்து இதை அவர் செயல்படுத்தலாம். பாஜக தேர்தல் தோல்வியால் துவண்டுள்ள நேரத்தில் அவர்கள் தரப்பிலிருந்து அவ்வளவு எதிர்ப்பு வராது என்றும் நினைக்க வாய்ப்பு உண்டு.
இதையெல்லாம் கூறிவிட்டு எனது கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது.
மேலே சொன்ன காரணங்கள் காத்திரமானவை என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். ஆனால் அதன் பிரதிகூலன்களையும் பார்க்க வேண்டும்.
ஓய்வு வயதை உயர்த்தல் எளிதுதான். ஏனெனில் கிராஜுவிட்டி, பென்ஷன், அதை கம்யூட் செய்து வரும் கணிசமான தொகை ஆகியவற்றை உடனே தராமல் இரண்டு ஆண்டுகளுக்காவது தள்ளிப்போடலாம். ஆனால் எதிர்காலத்தில் ஓய்வு வயதை குறைப்பது என்ற எண்ணம் வரும்போது அது அத்தனைக்கத்தனக் கடினமாகும் என்று கூற பொருளாதார நிபுணர்கள் எல்லாம் தேவையில்லை. டோண்டு ராகவனே கூறிவிடலாம். (உதாரணத்துக்கு ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 60-க்கு குறைத்தால், 60-62 வயதிருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவார்கள்).
அதே போல உயர்பதவியில் இருப்பவர்கள் அந்தந்த நிலைகளிலேயே இருக்கும்போது கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னேறுவது எங்ஙனம்? அதைத்தான் வேறொரு தருணத்தில் “வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது”? என்று கண்ணதாசன் கேட்டார். (அப்பாடா, பதிவின் தலைப்பை நியாயப்படுத்தியாகி விட்டது).
இடியாப்பச் சிக்கல்தான் இல்லை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
41 comments:
எப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலாக இருந்தாலும், அதைத் தீர்க்க எளிமையான், உறுதியாகப் பலன் தரும் வழி ஒன்று இருக்கிறது.
ஓட்டுப் போடும் தகுதிக்குப் பதினெட்டு வயது ஆனாலே போதும் என்று குறைக்கத் தெரிந்த மாதிரி, தேர்தலில் போட்டியிட வயது உச்ச வரம்பு 60 தான் என்று ஆக்க வேண்டும். அதைத் தாண்டியவர்கள் எல்லாம் வெளியில் இருந்தோ, இதயத்தில் இடம் கொடுத்தோ ஆதரவளித்தாலே போதுமானது. திறமையை அப்படிக் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாமே!
தேர்ந்தெடுக்கப் படும் அமைச்சரக, முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உட்பட எவரும் இரண்டு முறைக்கு மேல் அதேபதவி அல்லது உயர் பதவி எதையும் வகிக்க முடியாமல் சட்டம் இயற்றட்டும்.
இந்த இரண்டைச் செய்தாலே, நாட்டில் பாதிக்கு மேல் இவர்கள் ஏற்படுத்துகிற குழப்பங்கள் குறைந்து விடும்! ஜனங்கள் படுகிற அவஸ்தையும் கூடத் தான்.
ஓய்வு பெறும் வயதைத் தள்ளிப் போடுவது என்பது, பிரச்சினையைத் தள்ளிப் போடுவதே! இப்படித் தற்காலிகத் தீர்வுகளையே தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பது தான், இவர்களால் எந்தப் பிரச்சினையையும் முழுமையாகத் தீர்க்க முடியாமல் போகிறது என்பதுடன், பிரச்சினை பூதாகாரமாக வளரச் செய்யவும் வழி வகுக்கிறது!
//தேர்தலில் போட்டியிட வயது உச்ச வரம்பு 60 தான் என்று ஆக்க வேண்டும். அதைத் தாண்டியவர்கள் எல்லாம் வெளியில் இருந்தோ, இதயத்தில் இடம் கொடுத்தோ ஆதரவளித்தாலே போதுமானது. திறமையை அப்படிக் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாமே!//
கடைசியாக சொன்னதை இன்ஃபார்மலாக ஏற்கனவே செய்து வருகிறார்கள். எங்கள் ஐ.டி.பி.எல்லில் கூட ஓய்வுக்கு பின்னால் கன்சல்டண்டாக எடுத்து கொண்டார்கள்.
ஆனால் அதிலும் அநியாய சலுகைகள் எல்லாம் நுழைகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு தவறைச்செய்கிறவர்கள்,தடுக்கும் உறுதியான வழி இல்லாதபோது, அதைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே இருப்பார்கள், அதற்குக் கூட்டணியும் அமைத்துக் கொள்வார்கள் என்பதால் தான் அதற்கு அரசியல் ரீதியாக,ஆணிவேரிலிருந்து தொடங்கவேண்டும் என்று சொல்கிறேன்.
தவிரவும்,தொடர்ந்து களையெடுக்கத் தவறியதன் விளைவாக, சுதந்திரம் பெற்று அறுபத்திரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட, இங்கே குடிதண்ணீருக்கு, சாலைவசதி, மருத்துவ வசதி, அடிப்படைக் கல்வி இப்படி எந்த அடிப்படைத் தேவையும் கூட பெரும்பாலான மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.
தமிழக அரசின் மொத்த வருவாயில் அரசு ஊழியர்களுக்கான சம்பளமே பெரும்பகுதியைச் சாப்பிட்டு விடுகிறது. மிச்சமிருப்பதிலும், அங்கே இங்கே அவர்கள் இவர்கள் என்று பலருக்கும் பங்கு போட்ட பிறகு, மக்களுக்குப் போய்ச் சேருகிற உண்மையான திட்டங்கள், பலன்கள் என்று பார்த்தால் என்ன மிஞ்சும் என்று யோசிக்க வேண்டிய தருணம் இது.
புதிதாக வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடிகிற அமெரிக்காவில் 65 வயது ஒய்வு பெறுகிற வயதாக இருந்து விட்டுப் போகட்டும். இங்கேயும் அது சரியாக இருக்குமா என்பது தான் கேள்வி!
ஸ்வைன் ஃப்ளூ டைமில் இந்த தலைப்பு தேவையா??
:)
/ஸ்வைன் ஃப்ளூ டைமில் இந்த தலைப்பு தேவையா??/
நமீதாவுக்குக் கோவில் என்று தலைப்பு வைத்து விட்டால், சரியாகப் போய் விடுமா:-((
இத்துடன் சேர்த்து hire and fire பாலிசியும் கொண்டு வந்து, பணி நிரந்தரம் என்பது தொடர்ந்து 20 ஆண்டுகளாவது பணியாற்றியவர்களுக்கே என்றும் சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும்.
50 வயசுல எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு இளைஞர்களுக்கு வேலை கொடுக்கனும்!
//அரசு வேலைகளில் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணம் ஒன்று இப்போது பரிசீலனையில் உள்ளது. சாதாரணமாக மத்திய அரசு வேலையில் ஓய்வு பெறும் வயது 60. அதை 65-க்கு அல்லது 62-க்காவது உயர்த்த வேண்டும் என முயற்சிகள் நடக்கின்றன.//
இந்த முயற்சிகள் பணியில் இருப்பவர்கள் வரவேற்கக் கூடிய ஒரு விஷயம் தான் என்றாலும் இதில் ஒரு சின்ன சிக்கலும் உண்டு.
பணிக்கால அடிப்படையில் பதவி உயர்வும் ஒட்டிக்கொண்டே வருவதால்,
'supervisory posts' களில் அதற்கான காலியிடங்கள் ஏற்படாமலேயே, செய்யும் வேலையைச் செய்து கொண்டே அந்த பதவி உயர்வுக்கான சம்பளம் மட்டும் வாங்கும் கூட்டம் அதிகரித்து, அடிமட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறையக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
மற்றும், மேல்மட்ட பதவிகளில் இருக்கும் மூத்த பணியாளரை விட, நேரடித் தேர்வில் தேர்ந்து புதிதாக பணிக்கும் வரும் அதிகம் படித்த, அவரை விட தகுதி வாய்ந்த, இளைஞர்கள் கீழ்மட்ட பணிகளைச் செய்யும் நிலை ஏற்படும்.
(உதாரணமாக மேல்மட்ட பணியாளர்கள் வெறும் பட்ட படிப்பு படித்தவராய் இருக்கையில், புதிதாகப் பணியில் சேருவோர் தொழில்நுட்ப பட்டப் படிப்பு படித்தவராய் இருப்பர்.) இதனால், இயல்பான சில உளவியல் அமைதியின்மையும், வேலை வாங்க முடியாத நிலையும் ஏற்படும்.
புதிதாக ஆள்சேர்ப்பதே (New Recruitment) இல்லையென்றாலும், அடிமட்ட வேலக்களைச் செய்வது யார் என்ற கேள்வியும் எழும். எல்லாரும் ராஜா என்றால், படையாட்கள் யார் என்கிற நிலை..
செய்யும் வேலையே தான், கூடுதல் சம்பளத்திற்காகவும், அரசுக்கு தன்னுடைய 'கமிட்மெண்ட்'களைத் தள்ளிப்போடவும் தான் இது என்றால் O.K. அரசுத் துறைகளையெல்லாம் இழுத்து மூடிவிட்டு, தனியார்வசம் ஆக்கத் துடிக்கும் வேகத்தில், இதெல்லாம் வெட்டிப் பேச்சோடு முடியும் வேலையும் ஆகும்.
Hike in pension to benefit 12 lakh jawans: Prime Minister
Prime Minister Dr. Manmohan Singh said on Saturday that the government's decision to increase the pension of retired jawans and Junior Commission Officers (JCOs) will benefit 12 lakh ex-servicemen and their families.
Prime Minister Dr. Manmohan Singh said on Saturday that the government's decision to increase the pension of retired jawans and Junior Commission Officers (JCOs) will benefit 12 lakh ex-servicemen and their families.
"We have accepted the recommendations of the committee constituted to examine the issue of pension of ex-servicemen. This will lead to increased pension for about 12 lakh retired jawans and JCOs," Singh said in his address after unfurling the national flag at the ramparts of Red Fort here on the occasion of 63rd Independence Day.
"We are proud of our brave soldiers. It is our duty to ensure the ex-servicemen are able to lead a life of comfort, " he added.
Meeting a long-pending demand, the government had last month announced in the General Budget that it accepted the recommendations of Committee headed by Cabinet Secretary K M Chandrasekhar to substantially increase the pension of retired Army men.
The revised pension was implemented beginning July this year and it was an attempt to bring it as nearer to the 'One Rank-One Pension' demand of armed forces as possible.
The decision to increase the pension for defence personnel would cost the exchequer over Rs 2,100 crore annually.(COURTESY-CGENEWS)
YOUR COMMENT FOR THIS ?
WILL THE SAME FORMULA BE EXTENDED TO ALL GOVERNT EMPLOYESS IN FUTURE?
WILL THE BANK EMPLOYEES ( A STRONG UNITED UNION FORCE(formidable) IN INDIA) START ANOTHER NATION WIDE STRIKE REQUESTING THIS FOURTH BENEFIT( OR 3RD BENEBIT PLUS) ?
( STATE BANK EMPLOYEES ARE ENJOYING ( cGpf,gratuiy,ENHANCED PENSION)) three retiring benefits, already BY THREATENING massive hundred % strike by officers,executives and other officials.)
when govt took severe action against oil sector employees when they struck work for their genuine demands( implementation of rao committee recommendations- wage revision for every 10 years only, not as in banking sectoR ( every 5 yeras),.
Why no action so far against bank employees( execept no pay no work) for the PAST 30 yeras ?
YOUR COMMENT AND DISCUSSION?
/
கிருஷ்ணமூர்த்தி said...
நமீதாவுக்குக் கோவில் என்று தலைப்பு வைத்து விட்டால், சரியாகப் போய் விடுமா:-((
/
நமீதா ஆண்ட்டிக்கா புதுசா வந்த ஃபிகர்க்கு கட்டுங்கப்பா கோவில
:))
ஒரு உண்மைத் தகவல்:
அரசின் புதிய கொள்கைப்படி இந்தத் துறையில் தனியார் நுழைவு தராளமாய் அனுமதிக்கப் பட்டது.அரசின் சலுகைகள் அளவுக்குமீறி அளிக்கபட்டது.தனியார் துறைகள் தனக்கே உரித்தான தில்லுமுல்லுகள்,தில்லாலங்கடி வேலைகள் ,பல தந்திர ஏமாற்று விளம்பரங்கள்,வித்தைகள் செய்தும் அரசுத்துறையின் பெரும் லாபம் வெகுவாய் குறைவதற்கு ஒரு காரணமாய் அமைந்த்துவிட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
சரி இதுவாவது உலகெங்கும் நடக்கும் வியாபார உத்தி என்று சொல்லி சமாதானப் படலாம்.
ஆனால் அடுத்து அவர்கள் செய்யும் ராஜதந்திரம்( அரசியலில் நடக்கும் ஆள்பிடிக்கும் வேலை).பணியில் ஓய்வு பெரும் அதிகாரிகளை ஆசை வார்த்தை கூறி கைநிறைய சம்பளம்(லஞ்சம்) கொடுத்து தங்களின் ஏஜெண்ட்களாக இல்லையில்லை ஒற்றர்களாய் ஆக்கி செயல் படுவது கொடுமையிலும் கொடுமை.
இதி அரசின் விதிகளின்படி ஓய்வு பெற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த பணியிலும் சேரக் கூடாது.
விதிகள் எல்லாம் ஏழை பாழைகளுக்குத்தான்.
1.இந்த புல்லுருவிகள் வசிப்பது அரசுத்ததுறையிடம் வாங்கிய கடனில் கட்டிய வீட்டில்
2.இவர்கள் பிள்ளைகள் லட்சம் லட்சமாய்( 80 % மென்பொருள் வல்லுனர்கள்) சம்பாதிப்பதற்கான பொறியாளர் கல்வி பெற உதவித்தொகை அரசு கொடுத்தது
3.ஓய்வுதியத்தொகை,பணிக்கொடை முதலியவை களை கணக்குப் பார்த்தால் இவர்கள் கடைசியாய் வாங்கிய சம்பளத்தில் சுமார் 60 விழுக்காடு வரை கிடைக்கிறது.
4. மருத்துவச் சலுகை பணிக்காலத்தில் உள்ளது போல கிடைக்கிறது
இதன் பின்னாலும் அடிமைதொழில் செய்ய செல்லும் இவர்களுக்கு (பேராசைக்காரர்கள்) என்ன தண்டனை கொடுக்கலாம்?
இந்த குடிலர்கள்,எட்டப்பர்களை எந்த வகையில் கடவுள் தண்டிப்பார்?
ஓய்வுபெறும் வயதை 60 லிருந்து 62/65 ஆக்கினால் ஒருவேளை இந்தக் கொடுமை ஓரளவுக்கு தடுக்கபட்டு ,அந்த அரசுத்துறையை நலிவிலிருந்து காப்பாற்ற ஒரு வழி கிடைக்கலாம்.
(குறிப்பு: இந்த அரசுத்துறையின் செயல் பாடுகள் முன்பு இருந்ததைவிட நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது ,வாடிக்கையாளர் நலம் பேணுதலில் நல்ல மாற்றம், வெளிப்படையான அனுகுமுறை ஆகியவை பாரட்டுக்குறியது.இந்தத்துறை இருக்குவரை தான் தனியாரடங்கியிருப்பர் இல்லையென்றால் ஆம்னி பஸ் துறையில் நடக்கும் செயல்கள்(துவரம் பருப்பு மகாமாத்யம் போல) இதிலும் நடக்க வாய்ப்புள்ளது)
அனானி எழுப்பியிருக்கிற கேள்வி பிரச்சினையை,கொஞ்சம் வேறு திசைக்குத் திருப்பி விடுகிற மாதிரி இருக்கிறது.
முதலில், முன்னாள் ராணுவ ஊழியர்களுக்கு பென்ஷன் கூட அறிவித்தது, இதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது, இந்த சலுகையும் இல்லையென்றால், ராணுவத்தில் சேருகிறவர்களுடைய எண்ணிக்கை, ஆர்வம் வெகுவாகக் குறைந்து விடும். இப்போதே, நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
அடுத்து,வங்கி ஊழியர்களைப் பற்றி இவர் பேசியிருப்பது. ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கியின் செல்லப் பிள்ளையாக இருந்த போது, எல்லாவற்றிலுமே கொஞ்சம் அதிகப்படியாகவே[அடுத்தவர்கள் இலையில் இருந்தும்] பெற்றுக்கொண்ட வங்கி. அங்கே மற்ற வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் வருவதற்கு முன்னாலேயே பென்ஷன் சலுகை இருந்தது. அதைக் காட்டி மற்ற வங்கி ஊழியர்களும் கேட்டபோது, பென்ஷன் இரண்டாவது சலுகையாக மட்டுமே வழங்கப்பட்டது. ஸ்டேட் வங்கியைப் போல மூன்றாவது சலுகையாக அல்ல.
அப்போதும் கூட, வலதுசாரி கம்யூனிஸ்ட் சார்பு சங்கம் பென்ஷன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டது என்பதற்காக, இடது சாரி கம்யூனிஸ்ட் சார்பிலான BEFI பென்ஷன் ஒப்பந்தத்தில் அது சொத்தை, இது சொத்தை என்று எதிர்த்துப்பிரச்சாரம் செய்தது. அதை நம்பிய ஏராளமான ஊழியர்கள் நிர்வாகம் தரவேண்டிய PF தொகையை விட்டுக் கொடுத்துப் பென்ஷனை ஏற்க விரும்பவில்லை.
என்னுடைய நினைவில் இருப்பது சரி என்றால், அகில இந்திய ரீதியில் இந்த மாதிரி பி ஃஎப் ஐ விட்டுக் கொடுத்து, பென்ஷன் வேண்டும் என்று ஒப்புக் கொண்டவர்கள் வெறும் இருபத்திரண்டு சதவீதம் மட்டுமே. ஒரே ஒரு வங்கியில் மட்டும் இது முப்பத்தைந்து சதவீதம் என்றும் நினைவு.
அது ஒருபக்கம், வங்கிஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருதரம் ஊதிய விகிதம் திருத்தியமைப்பதைப் பற்றியும் கொஞ்சம் தவறான கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறார். 1946 இல் வங்கி ஊழியர்கள் போராட ஆரம்பித்தபோது, ஊதிய உயர்வை மட்டுமல்ல, மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்தப் படுவதற்கு எதிராகவே போராட்டம் இருந்தது. அதையொட்டி தேசாய் அவார்ட் என்று ஒன்று 1949 இல் வந்தது. கூலி கொஞ்சம் கூட்டிக் கொடுக்க சிபாரிசு இருந்தது, மனிதர்களாக நடத்தப் படுவதைப் பற்றி அது கண்டுகொள்ளவே இல்லை.கூலி அதிகம் கொடுத்தால் திவால் ஆகிவிடுவோமென வங்கிகள் மேல் முறையீடு செய்ய, மறுபடி ஒரு கமிஷன், சாஸ்திரி அவார்ட் என்று அதற்குப் பெயர், அதுவும் மறுபடி மறுபடி திருத்தப்பட்டு, ஒரு வழியாக 1966 இல்தான் முதல் ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கே வந்தது. அதன்படி, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு இதர பிரச்சினைகளைப் பேசி, புதிய ஒப்பந்தம் காண வகை செய்யப் பட்டது. அது அப்படியே, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை என்று கறாராக நடந்ததில்லை.
அது தவிர, ஒவ்வொரு ஒப்பந்தப் பேச்சு வார்த்தையின் போதும் வங்கி நிர்வாகங்கள் வேலைப்பளுவைக் கூடுதலாக ஏற்றுக் கொள்வது குறித்துச் சில புதிய நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது, அதுவும் புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆவது என்பது வங்கித் துறையில் மட்டுமே நான் அறிந்தவரை நடக்கிறது.
/வேலைகளைச் செய்வது யார் என்ற கேள்வியும் எழும். எல்லாரும் ராஜா என்றால், படையாட்கள் யார் என்கிற நிலை.. /
வங்கி ஊழியர் விஷயத்தில் இந்தக் குழப்பங்களை எதுவும் இல்லை. அரசு அலுவலகங்களில், தட்டிக் கழிப்பது ஒன்று மட்டுமே தாங்கள் சம்பளம் வாங்குவதற்கான தகுதி என்றிருப்பவர்களிடம், அவர்களை ஊக்குவிக்கும் அரசியல் வியாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி!
முக்கியமாக, ஊதிய உயர்வு 3/5/10 வருடத்திற்கொருதரமா என்று கேட்பதை விட, விலைவாசியைக் கட்டுப் படுத்த அரசுக்கு யோக்கியதை இருக்கிறதா, இலவசங்களை வாரி வழங்கி மக்களையும், வேலை செய்யவில்லை என்றாலும் சம்பளம், சலுகைகள் என்று அரசு ஊழியர்களையும் திருப்திப்படுத்தி, வாக்குகளை கவர் செய்து மீண்டும் பதவிக்கு வர முயலும் அரசியல் கட்சிகளை என்ன செய்வது என்று கேட்க ஆரம்பியுங்கள்.
உங்கள் கேள்விகளுக்கு, விடை தெரிய ஆரம்பிக்கும்!
டோண்டு சார்,
நம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வயதின் உச்ச வரம்பு 80 என்றும் வயதுகளின் கூட்டு தொகை 110 ஐ தாண்டகூடாது என்றும் சட்டம் வர வேண்டும்.
அதாவது பிரதமர் வயது 80 என்றால் ஜனாதிபதி் வயது 30 ஐ தாண்ட கூடாது!!
எப்டி நம்ம யோசனை?
அய்யா முதலியாருக்கும் வைணவ பழக்கங்களும் ஒரே மாதிரி இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் குமுதத்தில் அதை பற்றி எழுதவில்லையே? ( அய்யங்கார் பற்றி எழுதும் பொது )
//உங்கள் கேள்விகளுக்கு, விடை தெரிய ஆரம்பிக்கும்!//
வங்கி உழியர்களின் கடின உழைப்பு மறுப்பதற்கில்லை.
ஓவ்வொரு ஊதிய ஒப்பந்தித்திலும் அவர்க்ளின் வேலை பழு கூட்டப்படுவதும் உண்மை.
இருந்த போதிலும் சாதரண எழுத்தர் பணியில் இருக்கும் உழியர்கள் 1960 களில் அஞ்சல்துறை எழுத்தர் பணி
யாளரை விட குறைவாய் சம்பளம் வாங்கியவர்கள், தங்களுடைய தொழிற்சங்க பலத்தால் இன்று அவ்ர்களைவிட பல மடங்கு சம்பளமும் சலுகைகளும் பெற்று இருப்பது நிதர்சனம்.உண்மையில் அஞ்சல எழுத்தர் பணி வங்கிப் பணியைவிட கடினம்.
இந்தியாவிலே எழுத்தர் பணிக்கு(10+2 கல்வித்தகுதி மட்டும்) அதிகமாய் சம்பளம், சலுகைகள் வாங்குவது வங்கிப் பணியாளர்மட்டும்.
இதை அடுத்த ஊதிய ஒப்பந்தம் வந்தவுடன் இந்த ஊரறியும்,உலகறியும்.
வலிமை உள்ளவன் சொன்னதெல்லாம் இங்கே நடக்குது.
/Blogger மங்களூர் சிவா said...
நமீதா ஆண்ட்டிக்கா? புதுசா வந்த ஃபிகர்க்கு கட்டுங்கப்பா கோவில
:))/
அந்தம்மாவே மொத்த இடத்தையும் அடைச்சுகிட்டு இருக்குறப்போ, வேறு யாருக்கு கோவில் கட்டமுடியும்?
இப்பவே மூச்சு முட்டுதப்பா:-((
அந்நியன் பெருமூச்சுடன் சொன்னது:
/இருந்த போதிலும் சாதரண எழுத்தர் பணியில் இருக்கும் உழியர்கள் 1960 களில் அஞ்சல்துறை எழுத்தர் பணி
யாளரை விட குறைவாய் சம்பளம் வாங்கியவர்கள், தங்களுடைய தொழிற்சங்க பலத்தால் இன்று அவ்ர்களைவிட பல மடங்கு சம்பளமும் சலுகைகளும் பெற்று இருப்பது நிதர்சனம்.உண்மையில் அஞ்சல எழுத்தர் பணி வங்கிப் பணியைவிட கடினம்./
இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, ஊதிய விகிதங்கள் உற்பத்தித்திறன், லாபம் இவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப் படுகின்றன. முந்தைய பதிலிலேயே ஒருவிஷயம் சொல்லியிருந்தேன், ஸ்டேட் வங்கி ரிசர்வ் வங்கியின் செல்லப் பிள்ளையாக இருந்ததோடு, வருமானம், உற்பத்தித் திறன் அதிக இருந்ததால், எப்போதுமே அவர்களுக்கு மூணு கொம்புக்கு மேல் தான் உபசாரம் நடக்கும். மற்ற வங்கி ஊழியர்கள், ஸ்டேட் வங்கியில் வேலை செய்பவர்களை விட கடினமாகத் தான் இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொருமுவதில்லை!
அல்லது,
இரண்டாவதாக, இங்கே தமிழகத்தில், அரசு ஊழியர்களைத் தங்களுக்குச் சாதகமான கருவியாக்கிக் கொள்வதற்காக, அள்ளி வீசப்படும் சலுகைகள் மாதிரி. இவர்கள் என்ன போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் நடத்தினாலும் கொஞ்ச நாள் கழித்து அவை சம்பளப் பிடித்தம் செய்யப்படாது,கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதைப் போல.
அஞ்சல் தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஒன்றும் சங்க வலிமை இல்லாதவர்கள் அல்ல.NFPTE ஆக ஆரம்ப காலத்தில் ஒன்றாக இருந்தது, காலப்போக்கில் ஜாதீய, பிராந்திய அடிப்படையிலும், தொலைத் தொடர்பு தனியாகவும் ஆனது.அப்படி இருந்தும் கூட அஞ்சல் ஊழியர்கள் தமிழ் நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இவர்களை விட இன்றும் வலிமையான சங்க அமைப்பு உள்ளவர்கள் தான். 1980 களிலிருந்தே தொழிற்சங்க அமைப்பு, வங்கிகள் உட்பட, பலவீனப் பட்டுக் கொண்டே தான் வருகிறது.
உங்களுடைய பெருமூச்சு, ஆதங்கம் எனக்குப் புரிகிறது. என்னுடன் பணியாற்றிய ஹம்பக் ஒருவர் பெருமூச்சு விட்டுச் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன். அவர் முதுகலை முடித்தவுடன்,அவர் படித்த கிறித்தவக் கல்லூரியில் வேலை தேடி வந்தது. "வங்கியில் சம்பளம் கூட என்று இங்கே வந்தேன். பாருங்க! UGC சம்பள விகிதம் வந்தவுடன், அறுபதாயிரம், ஒரு லட்சம் என்று எங்கேயோ போய் விட்டார்கள்!"
பொருமுவதற்கும், பெருமூச்சு விடுவதற்கும் எல்லை இருக்கிறதா என்ன?
//உங்களுடைய பெருமூச்சு, ஆதங்கம் எனக்குப் புரிகிறது. என்னுடன் பணியாற்றிய ஹம்பக் ஒருவர் பெருமூச்சு விட்டுச் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன். அவர் முதுகலை முடித்தவுடன்,அவர் படித்த கிறித்தவக் கல்லூரியில் வேலை தேடி வந்தது. "வங்கியில் சம்பளம் கூட என்று இங்கே வந்தேன். பாருங்க! UGC சம்பள விகிதம் வந்தவுடன், அறுபதாயிரம், ஒரு லட்சம் என்று எங்கேயோ போய் விட்டார்கள்!"
பொருமுவதற்கும், பெருமூச்சு விடுவதற்கும் எல்லை இருக்கிறதா என்ன?//
to
mr. anniyan and mr.krishanamoorthy
please see this link for all this
Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?
http://classroom2007.blogspot.com/2009/08/opportunity.html
//இரண்டாவதாக, இங்கே தமிழகத்தில், அரசு ஊழியர்களைத் தங்களுக்குச் சாதகமான கருவியாக்கிக் கொள்வதற்காக, அள்ளி வீசப்படும் சலுகைகள் மாதிரி. இவர்கள் என்ன போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் நடத்தினாலும் கொஞ்ச நாள் கழித்து அவை சம்பளப் பிடித்தம் செய்யப்படாது,கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதைப் போல.//
தேர்தல் நடத்துவது அரசு ஊழியர்கள்.அவர்கள் தயவு ஆட்சியாளர்க்கு வேண்டும்.மேலும் அரசு ஊழியர்களிடம் ஜெ.படும் பாட்டை பார்த்தால் !.
ஆனால் ஒன்று புரியவில்லை இதே பாணியில் மத்திய அரசும்,பொதுத்துறை நிறுவனங்களும். பணியாளர்க்ளுக்குவாரி வாரி வழங்குவது ஏனோ புரியவில்லை.
மக்களின் வரிப்பணம் இப்படி வாரி வாரி இறைக்கப் படுவதை என்று தான் இந்த மக்களுக்கு புரியுமோ தெரியவில்லை!
/mr. anniyan and mr.krishanamoorthy
please see this link for all this
Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?/
அனானியாவந்து ஒருத்தர் இப்படி ஆலோசனை மாதிரி ஒரு தண்டனை, தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.படிச்சுப் பாத்தேன்.
என்னுடைய கருத்தில் இப்படி சோதிடம், சாதகம், பரிகாரம்னு சொல்றதை விட, தமிழ் ஓவியா ஐயா செய்கிற வெட்டி ஓட்டுகிற திருப்பணியே மேல்!
உங்களுக்குன்னு சொந்தமா யோசிக்க வராதா? தப்போ சரியோ, முயற்சித்துப் பார்க்காத வரை, இப்படித்தான் ஏதோ ஒரு வகுப்பறையில் பெஞ்சு தேய்த்துக் கொண்டு வாத்தியார் சொல்வதையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்!
எல்லோருமா? பூமி தாங்காது!!
அனானிக்கு ஒரு சின்னதா, நெஜமாவே சின்னது தான்! ஒரு வகுப்பறைப் பாடம்:
இரண்டாவது உலகப்போரின் முடிவில், ஜப்பான் கிட்டத்தட்ட சரணடையப் போகிறது என்று தெரிந்துமே கூட, அமெரிக்கா அணுகுண்டை ஒருதடவை அல்ல, இரு முறை அங்கே தான் வீசியது.
முதலில் வீசியதன் தாக்கம் சரியாகத் தான் இருந்ததா என்பதை சரிபார்க்கத் தான் இரண்டாம் முறையாகவும் வீசப்பட்டதாகச் சொல்லப் பட்டது.
ஆனால்,இரண்டு உலகப் போர்களுக்கு முக்கியமான காரணமான, holocaust என்று பெரிதாகப் பேசப்படுகிற யூதப் படுகொலைக்குக் காரணமான ஜெர்மனி மீது குண்டு போடக் கனவு கூட வரவில்லையாம் அமெரிக்காவுக்கு! ஆனாக்க, ஒரு காரணம் எல்லாருக்குமே தெரியும்-ஜெர்மானியத் தொழில்களில் அமெரிக்காவுக்குக் கூட்டு, இருந்தது. தவிர, சக வெள்ளைத் தோல் காரன் என்ற அபிமானமோ, ஆசியக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே காட்டுமிராண்டிகள் என்ற அருவருப்போ, எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
சில கேள்விகளுக்கு வகுப்பறையில் இருந்து கொண்டு விடை தேட முயல்வதென்பது கிணற்றுத்தவளையாக இருந்துவிடுவதே!
எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பது, உங்களுடைய சுதந்திரம், நான் அதில் குறுக்கே வரவில்லை!
தவறு திரு கிருஷ்ணமூர்த்தி!
உலக போரில் 1941 வரை நடுநிலைமை வகித்த அமெரிக்காவை,வலுச்சண்டைக்கு இழுத்ததே ஜப்பான் தான்;பியர்ல் ஹார்பர் மூலம்!
அதனாலதான் அவர்களுக்கு அணுகுண்டு கிடைத்தது
ஒரு சிறிய குறிப்பு:
அணுகுண்டு போடப்பட்ட ஹிரோஷிமா இப்பொழுது எப்படி இருக்கிறது தெரியுமா?
நியூயார்க்கை விட அழகாக,செழிப்பாக!
அப்படியானால் குண்டு வீசி ஒரு சில நாட்களில் அந்நகரம் எப்படி இருந்திருக்கும் வீசப்பட்ட அன்று மக்கள் எப்படி எல்லாம் ஓடி அலைந்திருப்பார்கள் என பார்க்கவே முடியாதா என்று நினைப்பவர்கள் சென்னை கிண்டி தொழிற் பேட்டையையும் ,அதை ஒட்டி உள்ள பஸ் நிறுத்தத்தையும் இன்றும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
வலைஞன் சொன்னது:
/உலக போரில் 1941 வரை நடுநிலைமை வகித்த அமெரிக்காவை,வலுச்சண்டைக்கு இழுத்ததே ஜப்பான் தான்;பியர்ல் ஹார்பர் மூலம்!
அதனாலதான் அவர்களுக்கு அணுகுண்டு கிடைத்தது/
அமெரிக்கர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் நடுநிலைமை! அதுவாச்சும் தெரியுமா, வலைஞர்?
இரண்டாவது உலகப்போரில், சம்பந்தப்படாமல் இருப்பதாகக் காட்டிக் கொண்டு, அதே சமயம் இரண்டு தரப்புக்குமே ஆயுத விற்பனை செய்து கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் யுத்தத்தில் நேசநாடுகள் என்ற கூட்டத்தில் புகுந்து கொண்டது. பேர்ல் ஹார்பர் வெறும் சாக்குத்தான்!
யுத்தம் முடிந்த நிலையில், ஜப்பான் சரண் அடைவது என்ற முடிவெடுத்து விட்ட நிலையில், குண்டு வீசியது அதுவும், முதல் தரம் வீசினதோடு தகவல்கள் ஒத்துப் போகிறதா என்று பார்க்க அடுத்த நாளே இரண்டாவது குண்டையும் அமெரிககா வீசியது.
பேர்ல்ஹார்பர் என்று தங்களுடைய கோழைத்தனத்தை மறைத்து எடுத்த சினிமாப் படங்களில் இருந்தல்லாமல்,வரலாற்றைக் கொஞ்சம் சரியாகப் படியுங்கள்.
/அணுகுண்டு போடப்பட்ட ஹிரோஷிமா இப்பொழுது எப்படி இருக்கிறது தெரியுமா?
நியூயார்க்கை விட அழகாக,செழிப்பாக!/
உண்மைதான். இது ஜப்பானிய மக்களுடைய உழைப்பு, உறுதிக்குக் கிடைத்த பலன். ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களுக்கு, மிக சாமர்த்தியமாக, தங்களுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்தினார்கள். பதிலடி கொடுத்தார்கள்,வென்றவர்களைத் தோற்கடித்தார்கள்!
கிண்டியைப் பற்றி....!
என்ன சொல்ல வருகிறீர்கள்?
//இது ஜப்பானிய மக்களுடைய உழைப்பு, உறுதிக்குக் கிடைத்த பலன். ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களுக்கு, மிக சாமர்த்தியமாக, தங்களுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்தினார்கள்.//
அதற்கு அமெரிக்கா அளித்த அபரிதமான பொருளுதவியும் காரணம்.
இன்னொன்று, வலைஞன் சொன்னது போல இது யுத்தம். அணுகுண்டு ஜப்பானியர் வசம் இருந்திருந்தால் அவர்கள் அமெரிக்காவின் மேல் கண்டிப்பாக போட்டிருப்பார்கள். அப்போது இரண்டு நகரங்களுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்களா என்பது மிகவும் ஐயத்துக்குரியது.
தாய்லாந்து, சைனா, பர்மா ஆகிய தேசங்களை ஜப்பானியர் வென்றபிறகு சூறையாடியதை சரித்திரம் பக்கம் பக்கமாக சொல்கிறதே.
மேற்கு ஜெர்மனிக்கு அமெரிக்கா உதவிய அதே தருணத்தில் ரஷ்யா கிழக்கு ஜெர்மனியை மொட்டையடித்தது.
ஆக, அமெரிக்கா வெற்றியடைந்த பிறகு தனது உதவிகளை தந்தது. அதையும் பாராட்ட வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், ஒரு பின்னூட்டத்தில், போகிற போக்கில், ஆறு வருட யுத்தம், அதன் முன்-பின் விளைவுகள், காரணங்கள் எல்லாவற்றையுமே சொல்லிவிட முடியாது. ஹிட்லருடைய யூத வெறுப்பு நாங்களே உண்மையான ஆரியர்கள் என்று கொக்கரித்தது போலவே,ஜப்பானியர்களுடைய மற்றைய கிழக்கத்திய மக்களை விடத் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற மனோபாவம் இருந்தது, அவர்கள் யுத்தத்தில் கொடுமைகளே செய்யவில்லை என்று வாதிட நான் இங்கே முயலவில்லை.அமெரிக்காவின் கோர முகம் இவர்கள் இரண்டுதரப்பையும் விட மோசமானது அவ்வளவு தான்.
இங்கே இதைத் தொட்டு எழுதியதற்கு முக்கியமான காரணம், வகுப்பறைக்கு என்னைப் போகச் சொன்னவருக்கு, ஒரு சின்ன வகுப்பு என்று சொல்லி ஆரம்பித்தது....ஜாதகம், ஜோதிடம் உண்மையென்றால், எங்கேயோ ஆரம்பித்த கொடுமை, எங்கேயோ முடிந்ததைத் தொட்டு இதையெல்லாம் எப்படி விளக்க முடியும் என்ற கேள்வி,அதையாவது அனானி புரிந்துகொள்கிறாரா என்று பார்ப்பதற்காகவே, நேரடியாகத் தொடாமல் சொல்லியிருந்தேன்.
அவ்வளவே! மற்றபடி, தலைப்பை விட்டு, வேறெதையோ பேசும் எண்ணம் எனக்கில்லை.
This is a great idea. Joint Family is a thing of past, given that if a person retires at 58, what is he going to do? When my grandfather retired he had his sons and grandkids with him so he was busy but my father, he is in India all his kids are in abroad! other than depression he got nothing. People are living longer thats the fact, given that its the best possible solution.
//அடுத்து,வங்கி ஊழியர்களைப் பற்றி இவர் பேசியிருப்பது. ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கியின் செல்லப் பிள்ளையாக இருந்த போது, எல்லாவற்றிலுமே கொஞ்சம் அதிகப்படியாகவே[அடுத்தவர்கள் இலையில் இருந்தும்] பெற்றுக்கொண்ட வங்கி. அங்கே மற்ற வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் வருவதற்கு முன்னாலேயே பென்ஷன் சலுகை இருந்தது. அதைக் காட்டி மற்ற வங்கி ஊழியர்களும் கேட்டபோது, பென்ஷன் இரண்டாவது சலுகையாக மட்டுமே வழங்கப்பட்டது. ஸ்டேட் வங்கியைப் போல மூன்றாவது சலுகையாக அல்ல.//
பொது உடமைப் பூங்காவில் பூத்த புரட்சிமலர் , வங்கி ஊழியரின் போர்வாள்,பழுத்த அனுபவ சாலி, முன்னாள் இடதுசாரிதொழிற்சங்கத் தலைவர் அண்ணன் கிருட்டினமூர்த்தி சொல்வது மிகவும் சரி.
மற்ற பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கோரிக்கை பென்சன்(3வது சலுகை) அரசால் நிராகரிக்கப்பட்டது.
அது ஏன் பென்சன் மறு ஆப்ஸன் கோரிக்கை வேண்டி போராட்டங்கள் நடந்த போதும் இன்னும் அது கனியவில்லை.
பென்சன் தரப்போவது வங்கி இருந்தும் அரசின் முட்டுக்கட்டை புரியாத புதிர்.
வங்கியின் லாபம் ஊழியர்களின் அயராத உழைப்பால் வந்தது என்பதை மறக்கலாமா?
அன்னிய அனானிகள் பக்கத்தில் இருக்கும் ஒரு வங்கியின் கிளைக்கு சென்று ஒருமணி நேரம் இருந்துவிட்டு பின் சொல்லவும்.
பால்ராஜ்
வங்கி ஊழியர்
//ஒரு உண்மைத் தகவல்:
அரசின் புதிய கொள்கைப்படி இந்தத் துறையில் தனியார் நுழைவு தராளமாய் அனுமதிக்கப் பட்டது.அரசின் சலுகைகள் அளவுக்குமீறி அளிக்கபட்டது.தனியார் துறைகள் தனக்கே உரித்தான தில்லுமுல்லுகள்,தில்லாலங்கடி வேலைகள் ,பல தந்திர ஏமாற்று விளம்பரங்கள்,வித்தைகள் செய்தும் அரசுத்துறையின் பெரும் லாபம் வெகுவாய் குறைவதற்கு ஒரு காரணமாய் அமைந்த்துவிட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.//
டோண்டுசார் இவர் சொல்வது ?
டோண்டுவைப் பற்றி டோண்டுவின் கருத்து?
டோண்டுவைப் பற்றி முரளிமனோகரின் கருத்து?
டோண்டுவைப் பற்றி போலிடோண்டுவின் கருத்து?
டோண்டுவைப் பற்றி ஓவியாவின் கருத்து?
டோண்டுவைப் பற்றி அன்புடன் பாலாவின் கருத்து?
உலக நாட்டாமை அமெரிக்காவின் சொம்பு ஏற்கனவே நசுங்கி போய் விட்டதால்! இனிமேல் அமெரிக்காவுக்கு யாரும் சொம்பு தூக்க வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்!
>கிருஷ்ணமூர்த்தி said...
>ஆனால்,இரண்டு உலகப் >போர்களுக்கு முக்கியமான >காரணமான, holocaust என்று >பெரிதாகப் பேசப்படுகிற
holocaust இரண்டாம் உலக யுத்தம் போது நடந்தது,அதனால் அது உலகப்போருக்கு `காரணம்` இல்லை. உலகப்போரை சந்தர்பமாக கொண்டு, ஜெர்மனி holocaust ஐ செய்தது. மற்ற பாயிண்டுகளை டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்.
http://vijvanbakkam.blogspot.com/
ஹிரோஷிமா-நாகசாகி நாள்.
//Anonymous said...
டோண்டுவைப் பற்றி டோண்டுவின் கருத்து?
டோண்டுவைப் பற்றி முரளிமனோகரின் கருத்து?
டோண்டுவைப் பற்றி போலிடோண்டுவின் கருத்து?
டோண்டுவைப் பற்றி ஓவியாவின் கருத்து?
டோண்டுவைப் பற்றி அன்புடன் பாலாவின் கருத்து//
டோண்டுவின் பிரதம சிஷ்யன் வால்பையனை விடலமா?
@வால்பையன்
அமெரிக்காவை யாரும், அத்தனை எளிதாக தூக்கி எறிய முடியாது. அந்த நாட்டின் அடிப்படை வசதிகளும், அரசு மற்றும் தனியார் கட்டமைப்பும், வேறெந்த நட்டாலும கொண்டு வர முடியாது. டாலர் வெறும் பேப்பர் ஆக இருந்தாலும், அது தான் இன்னும் உலக கரன்சி.
உலக பொருளாதாரம் சீர்பட அமெரிக்க மக்கள் வாங்கினால் தான், உலக தொழிற்சாலைகள் இயங்கும்.
அதன் fundamental strengths, அங்கு வாழ்ந்தால் தான் தெரியும்.
சமவேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையின் இன்றைய நிலை எப்படியுள்ளது?
உள்ளாட்சித்துறை,மாநில அரசுத்துறை,மாநில தலமைசெயலகத்துறை மத்திய அரசுத்துறை,அஞ்சல்துறை,பொதுத்துறை,காப்பிட்டுதுறை,வங்கித்துறை ஆகிய துறைகளில் எழுத்தர் பணியாளர்களுக்குள்,அடிப்படை கல்வித்தகுதி சமமாய் இருக்கும் போது சம்பள வித்தியாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் போல இருப்பது நியாயமா?
லாப அடிப்படையில் இந்த சம்பளங்கள் என்றால்,சேவைத்துறையில் பணிஆற்றுவோர் செய்த பிழை என்ன?
@வன்பாக்கம் விஜயராகவன்
உங்கள் அந்தப் பதிவில் நல்ல பாயிண்டுகள் தந்துள்ளீர்கள். ஜெயமோகன் போகிற போக்கில் குறிப்பிட்ட டேவிட் இர்விங் பற்றி இங்கு பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/David_Irving
இர்விங் தனது ஹோலோகாஸ்ட் எதிர்ப்பு வாதங்களை வைத்த போது ஒன்று கேட்டார், ஹிட்லர் எங்கேனும் நேரடியாக யூத ஒழிப்பு ஆர்டர்களில் கையெழுத்து போட்டாரா என்று அசட்டுத்தனமாக.
அவர் வாதங்களுக்கு மரண அடி பதிலாக ஜெர்மன் பத்திரிகை Der Spiegel பல இதழ்களில் தந்தது. அவற்றை நான் அக்காலக் கட்டங்களில் ஜெர்மன் நூலகத்தில் வைத்து படித்துள்ளேன்.
ஜெயமோகன் ஹிரோஷிமா பற்றி பேசுவது அவர் உரிமை. அதற்காக ஹோலோகாஸ்டை ஏன் இழுக்க வேண்டும்? ஆனால் அதுவும் அவர் உரிமை என விட்டுவிடுவதை தவிர வேறு வழியில்லை. அதே சமயம் அவருக்கு நீங்கள் எழுதியதும் சரியே.
நானும் எழுத நினைத்தேன். ஆனால் அப்படி எழுதும்போது என்னால் எனது கோபத்தை கண்ட்ரோல் செய்திருக்க முடியும் எனத் தோன்றவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@வன்பாக்கம் வியயராகவன்.
point noted, and taken
@ரமணா
அதானே, அபிமானத்துக்குரிய வாலை விட்டு விட்டால் எப்பூடி :-))
@அனானி
/எழுத்தர் பணியாளர்களுக்குள்,அடிப்படை கல்வித்தகுதி சமமாய் இருக்கும் போது சம்பள வித்தியாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் போல இருப்பது நியாயமா?/
நியாயமில்லைதான்!
இதையே, கல்லுடைக்கிற கஷ்டமான வேலைக்கு ஏன் குறைந்த கூலி?
பேனுக்கு அடியில், நாற்காலியில் சௌகரியமாக உட்கார்ந்துகொண்டு வேலை செய்கிறவர்களுக்கு எதற்கு அதிகக் கூலி என்றும் கேட்டிருந்தால், இன்னும் நியாயமாக இருந்திருக்கும்.
/லாப அடிப்படையில் இந்த சம்பளங்கள் என்றால்,சேவைத்துறையில் பணிஆற்றுவோர் செய்த பிழை என்ன?/
அவர்களுடைய பிழை ஒன்றுமேயில்லை நண்பா! தங்கமும் உலோகந்தான், தகரமும் உலோகம் தான்! விலையை நிர்ணயிப்பது சந்தையின் தேவை தானே தவிர, உலோகங்களின் தவறு எதுவுமில்லை. இங்கே ஒரு உதாரணத்திற்காக மட்டுமே, உலோகத்தை எடுத்துக் கொண்டேன், மறுபடி அந்த வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாம்.
// Anonymous said...
@வால்பையன்
அமெரிக்காவை யாரும், அத்தனை எளிதாக தூக்கி எறிய முடியாது. அந்த நாட்டின் அடிப்படை வசதிகளும், அரசு மற்றும் தனியார் கட்டமைப்பும், வேறெந்த நட்டாலும கொண்டு வர முடியாது. டாலர் வெறும் பேப்பர் ஆக இருந்தாலும், அது தான் இன்னும் உலக கரன்சி.
உலக பொருளாதாரம் சீர்பட அமெரிக்க மக்கள் வாங்கினால் தான், உலக தொழிற்சாலைகள் இயங்கும்.
அதன் fundamental strengths, அங்கு வாழ்ந்தால் தான் தெரியும்.//
அடுத்தவன் சொத்துக்கு ஆசப்பட்டவன் தானும் அழிந்து தன் சொத்தையும் இழப்பான் என்பது முது மொழி.
அமெரிக்கா ஒரு கடைந்தெடுத்த சுயநலமி.
வினை விதைத்தவன் வினை அறுக்கிறான்.
கோதுமைக்கும்,பால் பவுடருக்கும் இன்னும் பிற உணவுப் பொருட்களுக்கும் நம் பாரத்தை கையேந்தும் நிலை 21-12-2012 ல் அமெரிக்காவிற்கு வரலாம்
அமெரிக்காவை நீதிதேவன் நிச்சயம் தண்டித்து தூக்கி எறிவான்.
உலக வரை படத்தில் இனி அமெரிக்காவை( பொருளாதர நிலையில்) தேட வேண்டிய சூழ்நிலை வரலாம்.
உப்பை மட்டும் ( அடுத்த நாட்டினரது உழைப்பையும்)தின்ன அமெரிக்கா ?
காலம் பதில் சொல்லும்.
ஓபாமாவின் சித்து வேலைகள் செயல் படா சூழ்நிலை
அமெரிக்கா இனி பேரிக்காய் ( இது ஒரு ரைமுக்குத்தான்)விற்றுத்தான் பொழைக்கவேண்டும்.
இனியும் ( கலாச்சார,பொருளாதரச் சீரழிவுகளை பார்த்த பிறகும்)அமெரிக்காவை பார்த்து பாராட்டுவதை விட்டு விட்டு நம் பாரதத்தை மாபெரும் வல்லரசாய் பிறருக்கு உதவிடும் நல்லரசாய் மாற்றிக் காட்டுவோம்.
பால்ராஜ், வங்கி ஊழியர் என்று சொல்லி வந்த அனானிக்கு:
/அன்னிய அனானிகள் பக்கத்தில் இருக்கும் ஒரு வங்கியின் கிளைக்கு சென்று ஒருமணி நேரம் இருந்துவிட்டு பின் சொல்லவும்./
ஒரு கார்ப்பரேஷன்/முனிசிபாலிடி ஆபீஸ், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்,உங்க வாரத் கவுன்சிலர், இப்படி இன்னும் நிறைய புனிதமான இடங்களை விட்டுவிட்டீர்களே! அங்கேயெல்லாம் முதலில் போய்க் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, அப்புறம் ஏதோ ஒரு வங்கிக்குப் போய் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லியிருக்கலாமே!
உள்ளூர் அனானிகள் உபத்திரவமே தாங்க முடியவில்லை, எதுக்கு அந்நிய அனானிகளை எல்லாம் வம்புக்கு இழுக்கிறீர்கள்? பாவம் அவர்கள், விட்டு விடுங்கள்!
//டோண்டுவின் பிரதம சிஷ்யன் வால்பையனை விடலமா? //
சிஷ்யனாக இருப்பதை விட சொத்துக்கு வாரிசாக அறிவித்தால் தன்யனாவேன்!
//@வால்பையன்
அமெரிக்காவை யாரும், அத்தனை எளிதாக தூக்கி எறிய முடியாது. //
ஆமாம், அது ரொம்ப பெருசு!
//அந்த நாட்டின் அடிப்படை வசதிகளும், அரசு மற்றும் தனியார் கட்டமைப்பும், //
அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகள் ஊத்திகிட்டு தான் அடிப்படை வசதிகள் இல்லாமல் பலர் வீட்டை விட்டு தெருவில் திரிகிறார்கள்!
//டாலர் வெறும் பேப்பர் ஆக இருந்தாலும், அது தான் இன்னும் உலக கரன்சி.//
சும்மா சொல்லிக்க வேண்டியது தான்!
அவன் பாட்டுக்கு அடிச்சு தள்ளுவான்! உங்களை போல் ஆட்கள் அதை கொண்டாடுங்கள்! எல்லா நாடும் நாசமாக போகட்டும்!
//உலக பொருளாதாரம் சீர்பட அமெரிக்க மக்கள் வாங்கினால் தான், உலக தொழிற்சாலைகள் இயங்கும்.//
உலக சந்தை யூரோப் நாட்டு பக்கம் சாய்ந்து பல வருடங்களாகிவிட்டது! இனி அமெரிக்காவில் குப்பை கொட்டுவதை விட்டுவிட்டு வேறு நாடு தேடி கொள்ளுவது உத்தமம்!
//உலக வரை படத்தில் இனி அமெரிக்காவை( பொருளாதர நிலையில்) தேட வேண்டிய சூழ்நிலை வரலாம்.//
நிலப்பரப்பிலேயே தேட வேண்டிய நேரம் வரும்!
கடலோர பிரதேசங்கள் அழிந்து அமெரிக்கா 45% மட்டுமே மிஞ்சும் என்பது விஞ்ஞானிகள் கருத்து!
நீங்கள் சொன்ன அதே வினை தான் இதற்கும் காரணம்!
இயற்கையை ஓவராக சீண்டினால் அது தான் கதி!
Post a Comment