7/25/2010

பிஸ்மில்லாஹ்! - இன்ஸா அல்லாஹ்! - மாஷா அல்லாஹ்! - சுப்ஹான் அல்லாஹ்!

சென்னைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் மெரீனா பீச்சுக்கு சென்ற தருணங்கள் கொஞ்சமே. அதிலும் அலைகளில் ஆசைதீர கால்களை நனைத்துக் கொண்ட தருணங்களை கைவிரல்களில் எண்ணி விடலாம்.

நேற்று குடும்பத்துடன் பீச்சுக்கு சென்றிருந்தோம். திடீரென என்ன தோன்றியதோ, பீச்சுக்கு போகலாம் என தீர்மானித்து எனது காரை வரவழைத்தேன். காந்தி சிலைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு நான், என் வீட்டம்மா, என் மகள் ஆகிய மூவரும் கடலுக்கு சென்றோம். வெகு நாட்களுக்கு பிறகு மணலில் காலடிகள் அழுந்த சென்றது நன்றாகவே இருந்தது. சிறிது நேரம் கழித்து மனைவியும் மகளும் கரைக்கு சென்று மணலில் உட்கார நான் ஆசை தீர இன்னும் சிறிது நேரம் அலைகளில் நின்றேன். கடல் நீருடன் பளபளவென ஒரு அட்டை மிதப்பதை பார்த்து அதை பாய்ந்து எடுத்தேன். (என்ன இருந்தாலும் எனது சிறுவயது திறமைகள் மறையவில்லைதான். அவையாவன, அலை வந்து மூடும் முன்னமேயே மணலுக்குள் மறைய முயலும் சிப்பிகளை தாவித் தோண்டி எடுத்தல், நண்டுகளை துரத்தி உள்ளங்கையால் அவற்றை அறைந்து கொல்லுதல் ஆகியவை).

அந்த அட்டையில் பல இசுலாமிய வாசகங்கள் காணப்பட்டன. அதன் ஒருபக்கத்தில் ஆயத்துல் குர்ஸி வாசகங்கள்:


Allahu la ilaha illa huwa, Al Haiyul Qaiyum La ta'khudhuhu sinatun wa la
nawm lahu ma fi as samawati wa ma fil 'ard Man dhal ladhi yashfa'u 'indahu
illa bi idhnihi Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhitunabi
shai'in min 'ilmihi illa bima sha'a Wasi'a kursiyuhus samawati wal ard wa la
ya'uduhu hifdhuhuma wa Hu wal 'Aliyul Adheem
Allah! There is no god but He - the Living, The Self-subsisting, Eternal. No slumber can seize
Him Nor Sleep.His are all things In the heavens and on earth. Who is there can intercede In
His presence except As he permitteth?He knoweth What (appeareth to His creatures As)
Before or After or Behind them. Nor shall they compass Aught of his knowledge Except as He
willeth. His throne doth extend Over the heavens And on earth, and He feeleth No fatigue in
guarding And preserving them, For He is the Most High. The Supreme (in glory).
(Al-Baqarah 2: 255)

அல்லாஹ்- அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

இதன் ஆடியோவை இங்கே கேட்கலாம்.

இன்னொரு பக்கத்திலோ அனைத்து நேரமும் அல்லாஹ்வின் நற்சிந்தனைகள்:
எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது: பிஸ்மில்லாஹ்!
எதையும் செய்ய நினைக்கும்போது: இன்ஸா அல்லாஹ்!
நற்செய்தி கேள்விப்படும்போது: மாஷா அல்லாஹ்!
எதையும் ஆச்சரியத்துடன் புகழும்போது: சுப்ஹான் அல்லாஹ்!
இன்னும் பல. அட்டையை பத்திரமாக எடுத்து வந்துவிட்டேன். அதை வைத்துத்தான் இப்பதிவு. இதைப் போடுவதற்கென்றே எனக்கு அது கடலலையில் எதேச்சையாகக் கிடைத்தது போல தோன்றியது. ஆகவே இப்பதிவு.

தில்லியில் இருந்தபோது கேபிள் டிவி இணைப்பின் உபயத்தால் பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சிகள் பார்க்க முடிந்தது. அதில் வரும் உருது செய்திகளை தேனினும் இனிய உருது மொழியை கேட்பதற்காகவே அவதானிப்பேன். ஆரம்பத்திலேயே செய்தி வாசிப்பவர் BISMILLAH-IR-REHMAN-IR-RAHIM (In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful - அதீத கருணையும் ஆழ்ந்த இரக்கமும் கொண்ட அல்லாவின் பெயரால்) என கம்பீரமாக ஆரம்பிப்பதைக் கேட்கும்போது அரபு மொழியின் இனிமை புலப்படும் (கடவுள் விருப்பம் அதுவானால் அதையும் கற்க ஆசை).

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

அருள் said...

அரபு மொழி மெய்யாகவே இனிய மொழிதான். எனக்கு அதில் ஒருவார்த்தைக்கும் பொருள் தெரியாது. ஆனால் கூட்டங்களில் பேசி முடிக்கும்போது 'ஷுக்ரான்' என்பார்கள். அது நன்றி என்று சொல்லாமலேயே விளங்கும்.

அரபு பாடல்களும் அரபு இசையும் - மொழி புரியாவிட்டாலும் மனதை மயக்கும்

Anonymous said...

periyar dasanukku aduththu donduvaa?

adakkadvule

ராம்ஜி_யாஹூ said...

எனக்கு தெரிந்த ஒரே வாக்கியம்-
சலாமு அழைக்கும் (உபயம்- வடிவேலு பார்ஹிபன்- வெற்றி kodi கட்டு)

தம்பி இந்த பசங்க எல்லாம் பேசிக்றாங்க நீங்க ஏதோ துபாய்ல இருந்தீங்க்லாம்
துபாய்ல எங்க, அபிதாபியா, பஹ்ரினா

dondu(#11168674346665545885) said...

27, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் பஸ்நிலையம் அருகில், துபாய்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பத்மநாபன் said...

நிறைவான பதிவு .
இப்படி ஒவ்வொருவருடைய நம்பிக்கைகளிலும் என்ன நிறை இருக்கிறது என்று மேன்மைகளை நல்ல வார்த்தைகள் கொண்டு பேசுவது தான் மனிதம் போற்றும் செயல் .. வாழ்த்துக்கள் சார் .
நான் தற்பொழுது பணிபுரியும் இந்த ஓமன் நாட்டில், இஸ்லாமிய நாடு என்று சொன்னாலும் , எல்லா மதத்தவரின் வழிபாட்டு தளங்களும் உள்ளன . யாரும் யாருடைய நம்பிக்கைகளையும்
புன்படுத்துவதில்லை. இகழ்வதில்லை .
கூட்டு வழிபாட்டில் பிஸ்மில்லாஹ் -இர் -ரெஹ்மான் என்று அரபியில் சொல்வது இனிமையாக இருக்கும் ..
சுக்ரான் சுக்ரான் பல கோடி சுக்ரான்

வஜ்ரா said...

உங்களுக்கு அரபி எழுத்துக்கள்-அப்ஜத் படிக்கத் தெரியுமா ?

virutcham said...

@Arul
அரபு மொழி அந்நிய மொழி இல்லையோ? ரொம்ப இனிமை என்று நீங்க ஒத்துக் கொள்ள தயாரா இருக்கீங்களே. நம்ம தமிழ் முஸ்லிம்கள் இந்த மொழியை காட்டாயம் படித்து ஆக வேண்டும் . இது உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே ?

@dondu

நண்டை எல்லாம் ஏன் கொல்லணும். வேண்டாமே

இரண்டு நாள் முன்னாடி தமிழன் தொ.கா என்று நினைக்கிறேன். முஸ்லிம் தொழுகை குறித்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பெண்( இதுவே முன்னேற்றம் தானே ) நடத்தும் நிகழ்ச்சி.
அதில் சொல்லப் பட்டது.
பிற மதத்தவர் தும்மும் போது ஒரு முஸ்லிம் என்ன செய்ய வேண்டும் ?
இதற்கு அரபியில் ( அரபி தான் என்று நினைக்கிறேன் ) முதலில் சொல்லி விட்டு பின் தமிழிலும் சொன்னார்.
உங்களை அல்லா காப்பாற்றட்டும். உங்கள் நிலைமை சீராகட்டும் ( கிட்டத்தட்ட இது மாதிரி சொன்னார் )
என்னை இது மிகவும் கவர்ந்தது.

dondu(#11168674346665545885) said...

//பிற மதத்தவர் தும்மும் போது ஒரு முஸ்லிம் என்ன செய்ய வேண்டும் ?//

(உங்களுக்கே?) தும்மல் வரும்போது:
அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் அல்லாவுக்கே உரியது)

பிறர் தும்மும்போது:
யர்கமுகல்லாஹ்! (அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிப்பானாக)

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராம்ஜி_யாஹூ said...

கூகிள் இல் இப்போது தேடினேன்.,
அதில் கிடைத்த ஒரு விளக்கம் எனக்கு மிக பிடித்தத்தாக் இருந்து.

Alhamdulillah

It is by the grace of God/Allah that this occurred

இறைவனின் கருணையால் தான் இது நடந்தஹு, கிடைத்தது. இந்த வாக்கியம் ஒன்று போதுமே, நமது ஈகோ, ஆணவத்தை குறைக்க.

Anonymous said...

அரபு பாடல்களும் அரபு இசையும் - மொழி புரியாவிட்டாலும் மனதை மயக்கும்

oree thamasu

Anonymous said...

நீங்கள் ஒரு முறையாகினும் குர்ஆனை கண்டிப்பாக தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்க வேண்டும் என்பது என் அவா. உங்களது தேடல்களுக்கு பதில் கிடைக்கும்

அருள் said...

virutcham said...

// //@Arul அரபு மொழி அந்நிய மொழி இல்லையோ? ரொம்ப இனிமை என்று நீங்க ஒத்துக் கொள்ள தயாரா இருக்கீங்களே. நம்ம தமிழ் முஸ்லிம்கள் இந்த மொழியை காட்டாயம் படித்து ஆக வேண்டும் . இது உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே ?// //

அந்நிய மொழி என்பதற்காகவே அது இனிமை இல்லை என்று கூறிவிட முடியுமா? ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி இனிமையானதாகவே இருக்கும். அதற்காக மற்ற மொழிகளை மோசமானவை என்று கூறிவிட முடியாது.

தமிழ் முஸ்லீம்கள் அரபு மொழியை கட்டாயமாகப் படிப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. (எல்லோரும் அப்படி படிப்பதும் இல்லை). தமிழர்கள் தமிழைப் படிக்க வேண்டும். அதற்கு அடுத்ததாக அவர்கள் எந்த மொழியைப் படித்தாலும் அதில் குற்றம் காண எதுவும் இல்லை.

அரபு தமிழுக்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்பு மொழியாக இல்லை. ஆனால், கல்வியில் ஆங்கிலம், நிருவாகத்தில் இந்தி, வழிபாட்டில் சமற்கிருதம், இசையில் தெலுங்கு எல்லாம் தமிழுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மொழிகளாக இருக்கின்றன.

எனவே, மொழி ஒரு சிக்கல் அல்ல. ஆக்கிரமிப்பு நோக்கம்தான் தவறு.

Giri Ramasubramanian said...

@ டோண்டு

இனிமை. மிக்க நன்றி.

@ அருள்

இந்தப் பதிவு இந்தக் கருத்தை விவாதிக்கும் தளம் இல்லை, எனினும் நீங்கள் தொடங்கியதால் ஒரு சிறு கருத்து (இது என் கருத்து இல்லீங்கோ)

எவ்வளவு இருந்தும், இந்தியாவிலேயே தமிழன் மட்டும்தான் பிடிவாதமாகத் தமிழ் மட்டும் போதும் என்று வாழ்பவன். மற்ற எல்லோரும் flexible என்கிறார்கள் என்னுடன் பழகும் வேற்று பாஷை நண்பர்கள், எல்லோரும். ஆமாம் நண்பரே...எல்லோரும் கூட்டு சேர்ந்து சொல்கிறார்கள். முதலில் நான் ஒருவர் இருவர் என விவாதம், தர்க்கம் என செய்து கொண்டிருந்தேன். கடைசியில் பார்த்தால் நான் சந்திக்கும் எல்லா வேற்று பாஷை அன்பர்களும் இதையேதான் ஒப்பிக்கிறார்கள்.

நம் அடிப்படை தவறா அல்லது அவர்கள் அடிப்படை தவறா அல்லது இரண்டுக்குமிடையேயான புரிதல் நிலை தவறா எனத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று புரிந்தது. "இது மாறாது, மாறவே மாறாது"

ராஜவம்சம் said...

இந்த வலப்பக்கத்தில் இதுப்போன்ற ஒரு இடுக்கையை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

U F O said...

சுபஹானல்லாஹ்...!!!

DONDU...?!?!?

மாஷாஅல்லாஹ்.

ஜசாக்கல்லாஹ் க்ஹைரன்... ஸார்.

அல்ஹம்துலில்லாஹ்.

R.Gopi said...

டோண்டு சார்....

அருமையான இந்த பதிவை பதிந்தமைக்கு ஷுக்ரன்....

அருள் said...

கிரி said...

// //இந்தியாவிலேயே தமிழன் மட்டும்தான் பிடிவாதமாகத் தமிழ் மட்டும் போதும் என்று வாழ்பவன்.// //

'தமிழர்கள் தமிழை உயர்த்திப் பிடிக்கிறார்கள்' என்பது இல்லாததை இருப்பதாகப் பேசும் செயல்.

அதுபோகட்டும், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மட்டும் போதும் என்று வாழ்கிறார்களா இல்லையா ? என்று கொஞ்சம் விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

(இந்திபேசும் மாநிலங்களைவிட அதிகமாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசுகிறார்கள்).

Anonymous said...

//எவ்வளவு இருந்தும், இந்தியாவிலேயே தமிழன் மட்டும்தான் பிடிவாதமாகத் தமிழ் மட்டும் போதும் என்று வாழ்பவன். மற்ற எல்லோரும் flexible என்கிறார்கள் என்னுடன் பழகும் வேற்று பாஷை நண்பர்கள், எல்லோரும். ஆமாம் நண்பரே...எல்லோரும் கூட்டு சேர்ந்து சொல்கிறார்கள். முதலில் நான் ஒருவர் இருவர் என விவாதம், தர்க்கம் என செய்து கொண்டிருந்தேன். கடைசியில் பார்த்தால் நான் சந்திக்கும் எல்லா வேற்று பாஷை அன்பர்களும் இதையேதான் ஒப்பிக்கிறார்கள்//

ஓரளவுக்குத்தான் சரி.

சென்னையில் இரயில்வே கவுண்டரில் தமிழ்தெரியா ஒருவர் ஆங்கிலத்தில் கேட்டால், புக்கிங் கிளார்க உங்களை கேவலமாக பார்த்து தமிழில் பதில் சொல்லமாட்டார் அவர் தமிழனாக இருந்தால்.

மயிலாப்பூர் மெட்ரோ ஸ்டேசனில் ஒரு பெண தமிழில் பாரத்தை கொடுக்க, அதைகிழிந்து எரிந்தார் புக்கிங்க் கிளார்க் பிஹாரி.

டெல்லியில் எங்கும் இந்தியில் கேளுங்கள். ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில்தான் பதில் கிடைக்கும். ஆனால் அதே கிளார்க் வெள்ளைக்காரனிடம் ஆங்கிலம் பேசுவான். உங்கள் தமிழும் நீங்களும் அவ்வளுவு கேவலம் அவனுக்கு.

தங்களுக்குள்ளே ஆங்கிலம் பேசி வாழ்பவன் தமிழன் என்பது பெருங்குற்றச்சாட்டு.

As I see, Tamilians are liberal in language policy.

virutcham said...

//அந்நிய மொழி என்பதற்காகவே அது இனிமை இல்லை என்று கூறிவிட முடியுமா? ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி இனிமையானதாகவே இருக்கும். அதற்காக மற்ற மொழிகளை மோசமானவை என்று கூறிவிட முடியாது.//

இதை நாங்க வரவேற்கிறோம். மொழி என்னும் வகையில் அதன் இனிமை ஏற்புடையது தான். சந்தர்ப்பம் கிடைத்தால் நானும் கற்பேன்.

அனால் அதன் கட்டயமாக்கலில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்காது என்பதும் தெரியும். நம் நாட்டின் போலி செகுலரிசத்தின் வெளிப்பாடு அதன் பாதுகாப்புக்கு உலை வைப்பது தெரிந்தும் செய்யும் தாரள மயமாக்கலின் பின்னணி அரசியல் தான் இது என்பது தெரியும்.

பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்பதால் தொடர்ந்து விவாதம் வேண்டாம் டோண்டுவின் அழகான பதிவை திசை மற்ற வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

வால்பையன் said...

எல்லாம் சரி, தமிழ்ல ஏன் வணக்கம் சொல்ல மாட்டிகிறாங்க!?

ராஜவம்சம் said...

//எல்லாம் சரி, தமிழ்ல ஏன் வணக்கம் சொல்ல மாட்டிகிறாங்க!?//

உங்களை வணங்குகிறேன் அப்படின்னு சொன்னா இஸ்லாத்தின் அடிப்படையே அடிவாங்கிடும் வணக்கம் படத்தவனுக்கு மட்டும் தான் என்பது இஸ்லாத்தின் கொள்கை.

அதுமட்டும் அல்ல முற்போக்குவாதியும் அப்படிதான் நினைகிறான்

சுயமரியாதைகாரனும் அப்படிதான் சொல்றான்

உங்கள் மீது சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும் என்று தமிழில் சொல்லசொல்லுங்கள் நன்றி.

Anonymous said...

//உங்களை வணங்குகிறேன் அப்படின்னு சொன்னா இஸ்லாத்தின் அடிப்படையே அடிவாங்கிடும் வணக்கம் படத்தவனுக்கு மட்டும் தான் என்பது இஸ்லாத்தின் கொள்கை//

All I know is "Vanakkam" means my respect to you. It does not means, I treat you like God.

Also I understand God created human as well as the human created God.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது