11/24/2010

ஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து - ஆகவே அவரை வீட்டுச் சிறையில் வைக்கவும் - சுப்பிரமணியன் சுவாமி

ஜூனியர் விகடன் சார்பாக ஆர்.பி. என்பவர் சுப்ப்ரமணியன் சுவாமியை ஸ்பெக்ட்ரம் விவகாரம் சம்பந்தமாக பேட்டி எடுத்துள்ளார். அப்பேட்டி இன்று சென்னையில் கடைகளில் வெளியான, 28.11.2010 தேதியிட்ட ஜூவி இதழில் பக்கங்கள் 4, 5, 6-ல் வந்துள்ளது. முழு பேட்டியை படிக்க ஆவல் உள்ளவர்கள் கடைக்கு சென்று வாங்கவும். இப்பதிவு அதன் சுருக்கம், கூடவே டோண்டு ராகவனது சொந்தக் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

அந்தப் பேட்டியில்தான் சுப்பிரமணியன் சுவாமி இப்பதிவின் தலைப்பில் கூறியதை சொன்னார். அது பேட்டியின் போக்கிலே வரும். முதலிலே பேட்டியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு இப்போது ராசா அம்பலப்பட்டு நிற்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும். தனது கட்டுரைகள் மூலம் ராஜாவை வீழ்த்திய சாமான்யன் கோபி கிருஷ்ணா பற்றி நான் ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளேன். இப்போது சுவாமியை கவனிப்போம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நினைத்தாலே தனக்கு “அலிபாபாவும் 40 திருடர்களும்” கதைதான் நினைவுக்கு வருகிறது என சுவாமி நகைச்சுவையாக பேட்டியின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுகிறார்.

1. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் காசு பார்த்ததாக தான் நினைக்கவில்லை, ஆகவே அவர் பதவி விலகத் தேவையில்லை என சுவாமி கருதுகிறார்.

2. அவர் பல மாதங்கள் தன் கடிதங்களுக்கு பதில் போடாததில் அவருக்கு கூட்டணி சம்பந்தமான நிர்ப்பந்தங்கள் ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிக்கிறார்.

3. மத்திய அமைச்சர்களிடம் சொத்துக்கணக்கைத் தருமாறு பிரதமர் கேட்பது சரிதான், அதே சமயம் அந்த விவரங்கள் உண்மையா என்பதையும் அவர் பார்க்க வேண்டும்.

4. ராசா ராஜினாமா செய்தது ஆரம்பமே. இனிமேல்தான் மேலும் பல விஷயங்கள் நடக்க வேண்டும்.

5. இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும் விசாரணை நடக்க வேண்டும். பணப்பரிமாறல்களை பர்றிய ரகசிய விஷயங்களை கண்டறிய அமெரிக்காவின் உதவியை நாடலாம். தான் அதற்கு பாலமாக இருக்கத் தயார் என அவர் கூறுகிறார்.

6. 1.76 லட்சம் கோடி என்பது வருவாய் இழ்ப்பே. ஆக்சுவலாக கைமாறிய தொகை 60 ஆயிரம் கோடிகள் என்பது அவர் கருத்து. விரிவான கணக்குகளை அவர் நீதிமன்றத்தில் சொல்லவியலும் என்றும் அவர் கூறினார்.

7. பாராளுமன்ற மைய மண்டபத்தில் ராசா தன்னிடம் தானும் சுவாமியும் தமிழரே என்ற விஷயத்தைக் கூற, சுவாமியோ ராசா போன்றவர்கள் தன்னை கைபர் போலன் கணவய்க்கு அப்புறத்திலிருந்து வந்தவர்கள் எனக் கூறுவதாகக் கூறி, ராசா பதில் பேசாமல் அப்பால் சென்றார்.

8. இப்போதே யார் யாருக்கெல்லாம் பணம் போயிற்று என ராசா கூறிவிட்டால் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உண்டு.

9. ஆகவே ஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து. அதனால் அவரை வீட்டுச் சிறையில் வைக்கவும் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

அதே ஜூவி இதழில் கருணாநிதி தன் குடும்பத்தினர் தன்னை நம்பாது நீரா ராடியா என்னும் பெண்மணியையே தமது பதவிகளுக்காக நம்பியுள்ளனர் எனப் பொதுவாகச் சொல்லிக் கண் கலங்கி விட்டாராம். என்ன செய்வது, உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகணும்னு இருக்கே.

இப்படி பூதாகாரமாக வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலை மாறன் சகோதரர்களுடன் சமாதானமாகப் போய், இதயம் உருகியது, கண்கள் பனித்தன என்ற ரேஞ்சுக்கெல்லாம் பேசுவது கோமணத்தால் மலத்தை அடக்க நினைத்தக் கதைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Venkatramanan said...

சுப்ரமணியசுவாமியின் பேட்டி!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Unknown said...

அது எப்படி திடிர்னு இப்பொ மட்டும் சட்டம் தன் கடமைய செய்யுமோ?

குவாட்ரொச்சி,சுக்ராம், மற்றும் பலர்..ஐ பார்த்தா அப்படி தெரியலையே ?

ConverZ stupidity said...

//அதே ஜூவி இதழில் கருணாநிதி தன் குடும்பத்தினர் தன்னை நம்பாது நீரா ராடியா என்னும் பெண்மணியையே தமது பதவிகளுக்காக நம்பியுள்ளனர் எனப் பொதுவாகச் சொல்லிக் கண் கலங்கி விட்டாராம்.

ஏய்.. ஆ.. ஆ டண்டணக்கா... ம்ம்ம் ... ஏய் டனக்கு நக்கா

அப்பாவி தமிழன் பரணி said...

ஆமாங்க நானும் படிச்சேன், எல்லாம் வெறும் முதலை கண்ணீர் இந்த கெழட்டு ---- ( நான் அசிங்கமாய் பேசி தமிழன் தரத்தை கீழிறக்க விரும்பவில்லை கோடிட்ட இடத்தில் உங்களுக்கு பிடித்த வார்த்தையை போட்டுக்கொள்ளவும் ) இந்த வயதிலும் பதவி வேண்டும், பருவ மங்கைகளின் ஆடல்கள் பார்க்க வேண்டும் , தான் எழுதியவைகளை தன துதிபாடிகள் ( காஞ்சமுத்து, கோலி ) இவர்களை கொண்டு துதிபாட வேண்டும்

இதையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த தமிழ்ளினகாவலர் பற்றி என் கண்ணதாசன் சொன்னது தான் நியாபகத்திற்கு வருகிறது

பதவி வேண்டும், பதவிக்கு மேல் பதவி வேண்டும், அந்த பதவியை காப்பாற்ற 4 பேர் வேண்டும், அந்த நான்கு பேருக்கு எதாவது செய்ய வேண்டும், அதற்கும் விளம்பரம் வேண்டும் என்ற வேடிக்கை மனிதர்களில் இவனை யாரேனும் பார்த்து இருக்கிறிகளா - ஆதாரம் கண்ணதாசன் அவர்களின் கடைசிப்பக்கம் புத்தகம்

ரவிஷா said...

நான் போன முறை பின்னூட்டம் விட்டதையே சுகர்கோட் செய்து சொல்லியிருக்கிறார் சு.சுவாமி! பார்த்துக்கொண்டேயிருங்கள், தற்கொலைகள் தொடரக்கூடும்!

MV SEETARAMAN said...

//கருணாநிதி தன் குடும்பத்தினர் தன்னை நம்பாது நீரா ராடியா என்னும் பெண்மணியையே தமது பதவிகளுக்காக நம்பியுள்ளனர் எனப் பொதுவாகச் சொல்லிக் கண் கலங்கி விட்டாராம்//
கருணாநிதிக்கு வயது ஆகிவிட்டது, தலைவனுக்கு உள்ள தகுதி ஒன்றுமே இல்லய், ஒரு சாதரண தகப்பனைப்போலவே நடக்கிறார். கண் கலங்கு கண்ணே !!!!

சுழியம் said...

சுப்பிரமணிய சுவாமி பேட்டியில் இவ்வாறு சொல்லுகிறார்:

////''கணவரின் மரணத்துக்கு துணை போனவர்கள், பெற்ற தாயிடமே செயினை பறித்துக்கொண்டு ஓடி வந்தவர்கள் என்றெல் லாம் பார்த்ததுதான் இந்திய அரசியல்! ///

கணவரின் மரணத்திற்குத் துணை போனவர் யார்?

பெற்ற தாயின் செயினைப் பறித்துக்கொண்டு வந்தவர் யார்?

dondu(#11168674346665545885) said...

@சுழியம்
சுப்பிரமணியன் சுவாமியிடம் இக்கேள்வியைக் கேட்பது நலம், இருப்பினும் எனது டோண்டு பதில்கள் அடுத்த பதிவின் வரைவுக்கும் இதை கொண்டு சென்று எனக்குத் தோன்றும் பதிலை அளிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது