விளையாட்டு போல நான் பதிவுலகுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகவிருக்கின்றன (08.11.2010). வந்த போது வெறும் பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதித்தேன். அப்போதே பலர் அனானி ஆப்ஷனை சேர்க்குமாறு கூறினர். ஏதோ ஒரு உள்ளுணர்வில் அதை செய்யவில்லை. அக்காலகட்டத்தில் அனானி மற்றும் அதர் ஆப்ஷனை தவிர்க்குமாறு கூறி பல பதிவுகள் போட்டேன்.
அவற்றில் ஒன்றுதான் முரட்டு வைத்தியம் - 4. அதிலிருந்து சில பத்திகள்:
"துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால், இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க:பதிவின் சுட்டி" என்ற ரேஞ்சில் வரும் என் பின்னூட்டங்கள் பலருக்கு ரொம்ப பரிச்சயமானது. இப்பதிவு அந்த அதர் ஆப்ஷனைப் பற்றியது.
கல்லூரிகளில் இயற்பியல் வகுப்பில் அளக்கும் கருவிகளை காலிப்ரேஷன் செய்யும் பரிசோதனையை உங்களில் பலர் செய்திருப்பீர்கள். உதாரணத்துக்கு ஒரு ammeter-ஐ எடுத்துக் கொள்வோம். மின்சார கரெண்டை அளக்கும் இக்கருவியை உபயோகத்துக்கு அளிக்கும் முன்னால் அதை கேலிப்ரேட் செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்வார்கள் என்றால் அக்கருவியை ஒரு ஸ்டேண்டர்ட் கருவியுடன் சீரீஸில் இணைத்து கரெண்ட் ரீடிங்குகளை எடுப்பார்கள். 1, 2, 3, 4, 5, .... 27, 28, 29, 30 ஆம்ப்ஸ் ரீடிங்குகளை ஸ்டேண்டர்ட் காண்பிக்கும்போது சோதனைக்குட்படுத்தப்படும் கருவி என்ன ரீடிங்குகள் காட்டுகிறது என்பதையும் குறிப்பார்கள். பிறகு இரண்டு கருவிகள் ரீடிங்குகளையும் க்ராஃபில் ப்ளாட் செய்வார்கள். 0-30 A கருவியில் ஒரு ஆம்பியருக்கு ஒரு புள்ளி வீதம் 30 பாயிண்டுகள் கிடைக்கும். எல்லாவற்றையும் ப்ளாட் செய்து பிறகு அவற்றை ஒரு கோட்டால் இணைப்பார்கள். சாதாரணமாக நாம் ஸ்மூத் கர்வ் வருவது போல இணைக்க வேண்டும். ஆனால் இங்கு மட்டும் ஒரு பாயிண்டை அதன் அடுத்த பாயிண்டுடன் நேர்க் கோட்டால்தான் இணைக்க வேண்டும். ஏனெனில் இந்த இணைக்கும் கோடு கண்டின்யுவஸ் கர்வ் அல்ல. அப்படி ஸ்மூத் கர்வாக வெளியிடுவது நியாயப்படுத்தமுடியாத துல்லியம் என்று கூறுவார்கள்.
விஞ்ஞானத்தில் இது ரொம்ப முக்கியமான அடிப்படை. அதாவது தேவையில்லாமல் துல்லியம் தரக் கூடாது. சரி, இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம். அனானி ஆப்ஷன் என்பதில் ஒரு பொய்மையும் இல்லை. அது அனாமத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லையாதலால் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இதில் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது கேலிப்ரேஷன் கிராஃபில் நேர்க்கோடுகளால் பாயிண்டுகளைச் சேர்ப்பது.
ஆனால் இந்த அதர் ஆப்ஷன் இருக்கிறதே, இது ரொம்ப அபாயகரமானது. இதை வைத்துக் கொண்டு பல விஷமக் காரியங்கள் செய்யலாம்.என் விஷயத்தில் செய்யப்பட்டன என்பதை இந்தத் தமிழ்மணத்தில் பலரும் அறிவார்கள். இதை நாம் கேலிப்ரேஷன் புள்ளிகளை smooth curve ஆக இணைப்பதற்கு சமம்.
பலருக்கு நான் இப்போது கூறப்போவது கசப்பாக இருந்தாலும் ஒன்றைக் கூறியே ஆக வேண்டும். வலைப்பதிவாளர்களில் கணிசமான பேர்கள் மென்பொருள் உணர்வு அதிகம் இல்லாதவர்கள். பார்ப்பதை அப்படியே நம்புபவர்கள். அதர் ஆப்ஷனில் வெறுமனே பெயர் மற்றும் வலைத்தள முகவரி மட்டும் கேட்கப்படும். இந்த அதர் ஆப்ஷனை உபயோகித்து யார் வேண்டுமானாலும் எவருடைய பிளாக்கர் எண்ணையும் உபயோகித்து பின்னூட்டம் இட்டு விடலாம். அப்போது டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தாலும் சரியான பிளாக்கர் எண்ணே தெரியும். ஆனால் இதைப் பலமுறை கூறியும் பிரயோசனம் ரொம்ப இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இப்போதைய பிளாக்கர் வசதிகள்படி அனானி ஆப்ஷனும் அதர் ஆப்ஷனும் தனித்தனியே செயலற்றதாகச் செய்ய இயலாது. ஆகவேதான் வெறும் பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவு அபாயம் இல்லாத அனானி ஆப்ஷனும் இதில் அடிபட்டாலும் வேறு வழியில்லை. பிளாக்கருக்கு இது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். அவர்களும் கவனிப்பதாகக் கூறியுள்ளனர்.
அதெல்லாம் சரிதான் முரட்டுவைத்தியம் இதில் எங்கே வந்தது என்று கேட்பவர்களுக்கு இதோ கூறிவிடுகிறேன்.
இந்த அதர் ஆப்ஷனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறினேன் அல்லவா. அதை எப்படி எதிர்க்கொள்வது என்று யோசித்து செயல்பட்டதுதான் அந்த முரட்டு வைத்தியம். அம்மாதிரி யோசனையின் விளைவுதான் நான் பிரபலப்படுத்திய மூன்று சோதனைகள். அவை உருவானதுகூட ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்.
முதலில் என் பெயரில் பிளாக்கர் கணக்கு துவங்கப்பட்டு அசிங்கப் பின்னுட்டங்கள் அப்பெயரில் வெளியிடப்பட்டன. என்னுடைய உடனடி எதிர்வினை எலிக்குட்டி சோதனையைப் பற்றிக் கூறுவதே. போலி ஆசாமி அவ்வாறு துவக்கிய பிளாக்கர் கணக்கில் ஒரு வலைப்பூவையும் துவக்கினான். அதை க்ளிக் செய்தால் அது மெடா ரீடைரக்ஷன் என்ற உத்தியைப் பயன்படுத்தி என்னுடைய வலைப்பூவுக்கு இட்டுச் சென்றது. இதை எப்படி முறியடிப்பது? அதில்தான் பிறந்தது என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி என்றப் பதிவு. சில நாட்களுக்கு புதுப்பதிவு ஒன்றும் போடாமல் இருந்ததில் மெடா ரீடைரக்ஷன் மூலம் என் வலைப்பூவுக்கு வந்தவர்களின் கவனம் இப்பதிவால் ஈர்க்கப்பட்டது. ஆகவே போலியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஓசைப்படாமல் மெடா ரீடைரக்ஷனை வாபஸ் பெற்றான்.
இப்போது அதர் ஆப்ஷனை உபயோகித்து எலிக்குட்டி வைத்தாலும் என் பிளாக்கர் எண் வருமாறு செய்தான். சிறிது நேரம் என்ன செய்வது என்று திகைத்தேன். அப்போதுதான் என் நண்பர் எஸ்.கே. துணைக்கு வந்தார். என் ப்ரொஃபைலில் போட்டோ போட்டுக் கொள்ளச் சொன்னார். அவ்வாறு செய்ததில் நிலைமை சீரானது.
அதர் ஆப்ஷனில் வரும் பின்னூட்டங்களில் போட்டோ தெரியாது. அதே போல என் போட்டோவைப் போட்டு போலி ஆசாமி ஆரம்பித்த பிளாக்கர் கணக்கிலிருந்து பின்னூட்டமிட்டால் எலிக்குட்டி சரியான எண்ணைக் காண்பித்து விடும். இவ்வாறு என் முதல் இரண்டு சோதனைகள் வடிவு பெற்றன, அதாவது எலிக்குட்டி மூலம் சரியான பிளாக்கர் எண் தெரிய வேண்டும், அதே சமயம் போட்டோவும் தெரிய வேண்டும். மேலும் இவை இரண்டும் சேர்ந்து நிறைவேற வேண்டும்.
ஆனால் பிரச்சினைகள் வேறு ரூபத்தில் வந்தன. பல வலைப்பதிவாளர்கள் போட்டோக்கள் எனேபிள் செய்யவில்லை. அவர்களில் சிலர் அதர் ஆப்ஷன் வேறு வைத்திருந்தனர். மேலும், பிளாக்கர் இல்லாத வேறு சேவை தளங்களில் வலைப்பூ வைத்திருப்பவர்கள் விஷயத்தில் எலிக்குட்டி சோதனையோ போட்டோவோ பிரயோசனப்படாது. இங்குதான் என் மூன்றாம் சோதனை உருவாயிற்று. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை நான் இதற்காகவே வைத்திருக்கும் என் தனிப்பதில் பின்னூட்டமாக இடுவதைத்தான் கூறுகிறேன்.
என்னால் முடிந்த அளவுக்கு பாதுகாப்புகள் செய்து கொண்டேன். ஆனால் அவை மட்டும் போதாது என்பதுதான் நிஜம். எலிக்குட்டியை வைத்துப் பார்க்கக் கூட சோம்பல் பலருக்கு. சிலருக்கு அது பற்றி நிஜமாகவே தெரியாது என்பதையும் கூறிவிட வேண்டும். இங்குதான் என் முரட்டு வைத்தியத்தின் அடுத்த நிலை எட்டப்பட்டது. தமிழ் மணத்தில் மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள், புதுப்பதிவுகள் எல்லாவற்றையும் படித்து என் பெயரில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று பார்ப்பது எனக்கு வழமையான வேலையாயிற்று. அவ்வாறு வரும் பதிவுகளில் போய் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களின் கவனத்தை ஈர்ப்பது எனது அடுத்த நடவடிக்கை ஆயிற்று. வீர வன்னியன், மயிலாடுதுறை சிவா, ரயாகரன், வா. மணிகண்டன் போன்ற சிலரைத் தவிர்த்து எல்லோருமே உடனுக்குடன் போலிப் பின்னூட்டங்களை நீக்கினர். இத்தருணத்தில் என் சார்பில் போலி பின்னூட்டங்களை அடையாளம் கண்ட என் நண்பர்கள் ரோசா வசந்த், குழலி ஆகியோரை நான் நன்றியுடன் குறிப்பிடுகிறேன். பலர் எனக்கு இது சம்பந்தமாக தனி மின்னஞ்சல்கள் வேறு அனுப்பினர்.
ஆக, நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. இங்குதான் போலி ஒரு தவறு செய்தான். என் பதிவில் யாருமே பின்னூட்டம் இடக்கூடாது என்று அடாவடி செய்ய ஆரம்பித்தான். அதன்படி யார் என் பதிவில் பின்னூட்டமிட்டாலும் அவர்கள் பதிவுகளில் போய் அசிங்கமாக பின்னூட்டம் என் பெயரில் இட ஆரம்பித்தான். அதன் விளைவாக தமிழ்மணத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் கட்டாயமாக்கப் பட்டது. விரல் எண்ணிக்கையில் அடங்கக் கூடிய சிலரைத் தவிர எல்லோருமே இந்த விதியை ஆதரித்தனர். ஆகவே தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டப் பதிவுகளிலிருந்து அசிங்கப் பின்னூட்டங்கள் மறைந்தன.
இன்னும் எனது இந்த முரட்டு வைத்தியம் தொடர்கின்றது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்.
"Constant vigilance is the price demanded by freedom" என்பது தாரக மந்திரம். சிறிது ஏமாந்தாலும் சுதந்திரம் பறிபோய்விடும் அபாயம் உண்டு. அதே போலத்தான் மன நிம்மதியும். சுற்றுப்புறத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எங்கிருந்து யார் வந்து நிம்மதியைக் குலைப்பார்கள் என்பது தெரியாது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேலே சுட்டப்பட்டுள்ள பதிவுக்கான பின்னூட்டங்களை அங்கேயே பார்த்து கொள்ளவும்.
மேலும் அது 2006-ல் நான் வெறுமனே பிளாக்கர் பின்னூட்டம் மட்டும் அலவ் செய்த காலத்தில் எழுதப்பட்டது. ஆகவே சற்றே அவுட் ஆஃப் டேட். ஏனெனில் அதன் பிறகு நான் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை அலவ் செய்தேன். அதற்கு முக்கிய காரணமே போலி டோண்டு மற்றவர்களை எனக்கு பின்னூட்டம் போட விடாமல் தடுத்ததே காரணம். மேலும், அதற்குள் என்னிடம் மட்டுறுத்தல் ஆயுதம் வந்ததால் சமாளித்துக் கொள்ள முடிந்தது.
ஜூலை 2008-ல் போலி கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டதுமே அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை நீக்கியிருக்கலாம். இருந்தாலும் சோம்பல் (lethargy or inertia) காரணமாக நிலைமையை மாற்றவில்லை.
இப்போது என்ன விஷயம் என்றால் அனானி ரூபத்தில் வந்து மற்ற பதிவர்களை திட்டுகிறார்கள். அது ரொம்பவும் அசிங்கமாக போனால் நான் சாதாரணமாக அசிங்க வார்த்தைகளை நீக்கிவிட்டு கருத்தை மட்டும் அலவ் செய்வேன் (டோண்டுவால் மாடிஃபை செய்யப்பட்டது அல்லது அதுபோன்ற சொற்களுடன் அவை வரும்).
இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. மேலும் அதர் ஆப்ஷனில் வரும் பின்னூட்டங்கள் இல்லவே இல்லை, அவ்வளவு விஜிலண்டாக அவை சாதாரணமாக எழுதப்பட்டிருந்தாலும் அதர் ஆப்ஷன் என்பதற்காகவே அவற்றை நீக்கினேன். ஆக, இப்போது கொசுத் தொல்லையாக மிஞ்சியிருந்தது அனானி ஆப்ஷன் மட்டுமே. அதையும் தூக்கியாயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
16 comments:
நல்ல நடவடிக்கை :)
//நல்ல நடவடிக்கை//
நல்ல நடவுகளை அடிக்கையா, கெட்ட நடவுகளை அடிக்கையா?? அவ்வ்வ்...
போலி டோண்டு, அனானி, ஜாதீயம் இதையே எத்தனை ஆண்டுகள் எழுதி கொண்டிருக்க.
இவை எல்லாம் தாண்டி வெளியில் ஒரு பெரிய உலகம் இருக்கிறது சார்.
அந்த உலகத்தை பற்றி எழுதுங்கள் சார்.
@ராம்ஜி_யாஹூ
இந்தப் பதிவுக்கும், அதன் முன்/பின் நடவடிக்கைகளுக்கு அடிப்படை காரணமே போலி டோண்டுவும், இப்போதும் ஆக்டிவாக செயல்படும் அவனது அல்லக்கைகளும்தானே காரணம். அதை இந்த காண்டக்ஸ்டில் சொல்லியே ஆக வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@பழமைபேசி
உங்கள் வயல் நாய் பேச்சியின் வழித்தோன்றல் சௌக்கியமா?
ரொம்ப நாட்களாகவே கேட்க நினைத்து கொண்டிருந்தேன். அதன் பின்புலனை முதலில் கூறி விடுகிறேன்.
என் நண்பன் என்னுடன் மத்தியப் பணித்துறையில் வேலை செய்தவன், திடீரென அமெரிக்கா போய், பச்சை அட்டை வாங்கி, இப்போது அமெரிக்க குடிமகனாகவே ஆகி விட்டான். அவனை பல ஆண்டுகள் கழித்து பார்த்தபோது அவனிடம் அது பற்றி விசாரித்தேன்.
அவன் ஒரு முறை ட்ரெயினில் பிரயாணம் செய்தபோது ஒரு சக பயணிக்கு அறிமுகமாகி, அவரது ஊக்குவிப்பில் அமெரிக்கா சென்றதன் விவரங்களை சொன்னான். ஏதோ கதை கேட்பது போல இருந்தது.
அதே போல நீங்கள் அமெரிக்கா சென்றதற்கு ஏதேனும் பின்புலம் இருந்தால் அதை சுவாரசியமாக எழுதலாமே. ஏனெனில் வயல் நாய் பேச்சியுடன் கும்மாளம் போட்ட அச்சிறுவன் பழமைபேசியான நீங்கள் இப்போது உலகின் மறுகோடிக்கு சென்றாலும், பழைய வேர்களை மறக்காமல்தானே இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.
உங்களது அந்த மாறுதல் பற்றிய உங்கள் பதிவுகள் சுவாரசியமாகவே இருக்கும் அல்லவா. ஆகையால் அவற்றை உங்கள் வலைப்பூவில் இடுமாறு உங்களை உரிமையுடன் கேட்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பத்தி பத்தியாய் வருகிற பின்னூட்டங்களையும் மட்டுறுத்தினால் நல்லது. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டங்களினால் வருகிற அலுப்பு சொல்லி மாளாது.
@ரிஷபன்மீனா
அப்படீன்னா உங்களை அருள், சங்கமித்திரன், தமிழ் ஓவியா ஆகிய வகையறாக்கள் அலுப்படைய வைக்கிறாங்கன்னு சொல்லறீங்களா?
இப்போதைக்கு அவங்க காமெடி ரிலீஃபாக இருக்கட்டும்.:)
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பின் டோண்டு ராகவன்,வணக்கம்.நலம்தானே.
வியப்பான ஓர் ஒற்றுமை என்னவென்றால் மிக அண்மையில் பெயரில்லா அனானிகளால் பெரிதும் மன உளைச்சல்களுக்கு ஆளான நான் அது பற்றி ஒரு பதிவில் http://masusila.blogspot.com/2010/10/blog-post_23.html எழுதியிருப்பதோடு அத்தகைய பெயர்தராப் பின்னூட்டங்களை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்திருக்கிறேன்.தயவு செய்து அதைப் பார்த்துப் பின்னூட்டம் உட்பட(காரணம் அதிலதான் க்ளைமாக்ஸ் இருக்கிறது)உங்கள் மேலான கருத்துக்களை எழுதக் கோருகிறேன்.
வேறு எதைத் தடை செய்ய வேண்டும் என்பது புரியவில்லை ஆலோசனை சொல்லுங்கள்.
@எம்.ஏ.சுசீலா
பின்னூட்டமிட்டு விட்டேன்.
அனானி ஆப்ஷனை எடுத்தாயிற்று. மட்டுறுத்தல் வேறு இருக்கிறது. இனிமேல் பிரச்சினை வராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனானி ஆப்ஷன் தவிர அதர் ஆப்ஷன் என்று ஏதோ போட்டிருக்கிறீர்களே.தமிழில் வலை இருப்பதால் தெரியவில்லை.தெளிவுபடுத்துவீர்களா.
@எம்.ஏ. சுசீலா
அனானி ஆப்ஷனை எடுத்தால் அதர் ஆப்ஷன் தானாகவே விலகி விடும்.
அதர் ஆப்ஷன் பற்றி நான் இப்பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்.
அதர் ஆப்ஷனில் வெறுமனே பெயர் மற்றும் வலைத்தள முகவரி மட்டும் கேட்கப்படும். இந்த அதர் ஆப்ஷனை உபயோகித்து யார் வேண்டுமானாலும் எவருடைய பிளாக்கர் எண்ணையும் உபயோகித்து பின்னூட்டம் இட்டு விடலாம். அப்போது டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தாலும் சரியான பிளாக்கர் எண்ணே தெரியும்.
ஒரு பின்னூட்டம் எனது பதிவில் பிளாக்கர் பெயரில் வந்தால், அது பிளாக்கர் பின்னூட்டமா, அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டமா என்பதை பார்க்க எனக்குத் தெரியும். ஆனால், அது தெரியாதவர்கள் வம்பேயின்றி அந்த ஆப்ஷனையே தூக்குவது நலம். உங்களிடம் அந்த ஆப்ஷன் இப்போது செயலிழந்துள்ளது. அப்படியே இருக்கட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி..
இன்று முதல் ஒரு வாரம் தமிழ்மணம் என்னை நட்சத்திரப் பதிவராக்கியுள்ளது.
தங்கள் நல்வாழ்த்துக்களை நாடுகிறேன்.
அட, ஆமாம்.
அனேக வாழ்த்துக்கள்.
ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது இடப்பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம்! ஆகா, பிடி எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!!விரைவில் எழுதுகிறேன்!!!
dondu sir, i saw the link given by you on false dondu murthy.
it is very clear that cyber crime is seriously followed and punished.
but still, some miscreants like 'vaal paiyan' always use foul language when commenting.
even if we can understand their level of communication it is highly irritating to see the same kind of comments they give for every post.
it would be of great help if you could right away do away with cheap comments.
thanks.
@நாராயணன்
அம்மாதிரி திட்டுவதையும் முற்போக்குக்கு ஆதரவாக எழுவதற்காக என்பது போலத்தான் செயல்பாடு இருக்கும்.
ஹிந்துமுறைப்படி திருமணம் எல்லாம் மூடநம்பிக்கை, பெண்ணுக்கு சம உரிமை, நாத்திகம் பேசுவது ஆகியவற்றை வைத்து செயல்பட்டு கொண்டிருந்தவர்கள், தங்களுக்கென வரும்போது அவர்றையெல்லாம் மாற்றிக் கொள்வார்கள் என்பதை பலர் ஜீரணிக்காததாலேயே சமீபத்திய சர்ச்சைகள் எனது வலைப்பூவில் எழுந்தன.
தனிப்பட்ட முறையில் நான் இந்த மாற்றத்தை வரவேற்கவே செய்தேன் என்பதையும் அவர்களை இது விஷயமாக கேலி செய்யவில்லை என்பதையும் எனது பதிவுகளிலிருந்தே பார்த்து கொள்ளலாம்.
ஆக, அட் லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு அவர்கள் இங்கு வந்தால் அட்க்கி வாசிப்பார்கள் என்பதையாவது நம்பலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment