இது ஒரு மீள்பதிவு. எனக்கு சில நாட்களுக்கு முன்னால் கிடைத்த இன்னொரு அனுபவத்தின் காரணமாக இதை மறுபடியும் வெளியிடுகிறேன். முதலில் பதிவு.
இன்று (19.11.2007) எதேச்சையாக திண்ணை பத்திரிகையை பார்க்க நேர்ந்தது. அதில் எழுதியிருந்தார்கள், "திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை. அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை". இது அவர்கள் கொள்கை. அதைப் பற்றி பிரச்சினையில்லை. இருப்பினும் ஒரு எண்ணம். அப்படியிருந்தும் ஏன் பலர் அதற்கு கட்டுரைகள் அனுப்புகின்றனர்? ஏனெனில் அதில் எழுதுபவர்களுக்கு ஒரு கௌரவம் கிடைக்கிறது. ஆக, பணமாக இல்லாவிட்டாலும் வேறு ஏதோ வகையில் அனுகூலம் கிடைக்கிறது.
இது கணையாழிக்கும் பொருந்தும். சுஜாதாவின் தொடர்கதை நிர்வாண நகரத்தில் (நன்றி சுரேஷ்பாபு அவர்களே) கணையாழி பத்திரிகையின் நிர்வாகி வருவார். கணேஷ் வசந்துடன் பேசுவார். அதில் கணையாழியில் வந்த கவிதையை எழுதினவரைப் பற்றிய விசாரணை. "அதை எழுதியவருக்கு சன்மானம் அனுப்பியிருப்பீர்களே, அந்த விலாசம் வேண்டும்" என்று கேட்டதற்கு தயக்கம் மற்றும் பாசாங்கு இல்லாமல் பதில் வரும் கணையாழியிடமிருந்து. "அப்படியெல்லாம் சன்மானம் அனுப்பினால் கணையாழி போண்டியாகி விடும்"
ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.
சேவை உபயோகிப்பாளர் பலருக்கு சேவையின் தேவையான தரம் பற்றி ஐயமே இல்லை. மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கான விலை என்று வரும்போது மட்டும் மூக்கால் அழுவார்கள். உதாரணம் எனக்கு மிகப் பரிச்சயமான துறையிலிருதே எடுக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்ஸ்டாக் மொழி பெயர்ப்பு சேவை பற்றி ஓர் ஆய்வு நடத்தினார்கள். சேவை பெறுபவர்களிடமிருந்து பல விவரங்கள் கேட்கப்பட்டன. அவர்களது தேவைகள் பற்றியும் கேட்கப்பட்டது. அதில் ஐ.டி.பி.எல்.லில் இருந்து வந்த பதில்கள் அளிக்கும் பார்வை பொதுவாகவே வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்ப்பதையே பிரதிபலித்தன.
தரம்: மிகச் சிறந்த தரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமே இல்லை.
விலை: ஒரு பக்கத்துக்கு பத்து ரூபாய் மேல் தர இயலாது (அடிமாட்டு விலை எனக் கருதப்படும் இன்ஸ்டாக்கின் ரேட்டே இருபது ரூபாய், அப்போதைய சந்தை விலை 50 ரூபாய்).
நான் வேறு இடத்தில் படித்த ஒரு விஷயம் இங்கு ஞாபகத்துக்கு வருகிறது. இது ப்ளாண்டி என்னும் காமிக்ஸில் படித்தது. ப்ளாண்டி என்னும் பெண்மணியும் அவரது சினேகிதியும் கேட்டரிங் தொழில் நடத்துகிறார்கள். அவர்களிடம் ஒரு வாடிக்கையாளர் வருகிறார். கேட்டரிங் செய்ய கொட்டேஷன் கேட்கிறார். அவரது எதிர்ப்பார்ப்புகள் அபரிதமான அளவில். போட வேண்டிய ஐட்டங்கள் அதிகம். அதுவும் சுடச்சுட இன்முகத்துடன் பரிமாற வேண்டும். இவர்கள் கொடுத்த கொட்டேஷனைக் கேட்டு தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறிவிடுகிறார். பின் ஏன் இவ்வளவு ஸ்பெசிஃபிக்கேஷன் தந்தாராம் எனக் கேட்டால் நல்ல தரம் பெற பணம் பிரச்சினையாக இருக்கக் கூடாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.
நான் மேலே குறிப்பிட்ட இன்ஸ்டாக் இப்போது கிட்டத்தட்ட இல்லாமலேயே போய் விட்டது. அதற்கு காரணம் பல. அரசுக்கே அதை மூட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. இன்னும் காரணங்களும் உண்டு. அவற்றில் நான் பார்த்த முக்கியமானது என்னவென்றால் அவர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை நடத்திய விதமே.
இன்ஸ்டாக்கில் ஒவ்வொரு வேலைக்கும் இரண்டு விலைகள் உண்டு. அர்ஜண்ட் ஆர்டினரி போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். அர்ஜண்டுக்கு 300 சொற்கள் கொண்ட ஒரு பக்கத்துக்கு 30 ரூபாய் தருவார்கள். வேலை துரிதமாக முடிக்க வேண்டும் (அதைவிட துரிதமாக நான் வேலை செய்ததால் எனக்கு இது பிரச்சினையே இல்லை என்பது வேறு விஷயம்). ஆர்டினரி வேலைக்கு பக்கத்துக்கு 20 ரூபாய்தான் தருவார்கள். ஆனால் அவகாசம் அதிகம் தருவார்கள். இது ஏற்று கொள்ளக்கூடிய ஏற்பாடே. ஆனால் திடீரென ஒரு குளறுபடி நடந்தது. தில்லியிலேயே உள்ள வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து நயமாகப் பேசி ஆர்டினரி வேலையை சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொல்வார்கள். வெளியூரில் இருப்பவர்களால் அவ்வாறு செய்ய இயலாது. ஆகவே பல முறை ஆர்டினரி வேலை அர்ஜண்ட் வேலையின் நேரத்துக்குள் முடிக்க வேண்டியிருந்தது. பணம் என்னவோ அதே 20 ரூபாய்தான். இது வாடிக்கையாளர்களது சமன்பாட்டை பாதித்தது. இம்மாதிரி வேலைகளுக்கு முக்கியமாக என்னைத்தான் நாடுவார்கள். நானும் வேறு வேலை இல்லாதிருந்தால் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். ஆனால் ஒரு நிலைக்கு அப்புறம் நான் மறுக்க ஆரம்பித்தேன். ஒன்று அர்ஜண்ட் வேலைக்கான சம்பளம் தரவேண்டும் இல்லையெனில் ஆர்டினரி வேலைக்கான கால அவகாசம் தர வேண்டும் என்று கொடி பிடித்ததில், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளில் இது முடிவுக்கு வந்தது. இன்ஸ்டாக்குக்காக நான் வேலை செய்த காலக்கட்டத்தில் (1981-1995) பக்கத்துக்கான விலையும் மெதுவாக படிப்படியாக உயர்ந்து ஆர்டினரி வேலைக்கான விலை 70 ரூபாயை எட்டியது நிஜமே. ஆனால் அதற்குள் எனது சந்தை ரேட் 200 ஆயிற்று. ஆகவே நான் வேறு வழியின்றி இன்ஸ்டாக் வேலைகளை மறுக்க ஆரம்பித்தேன். (இப்போது ரேட் 500 ரூபாய்க்கும் மேல், 200 சொற்கள் கொண்ட பக்கத்துக்கு).
நல்ல சேவை வேண்டுமானால் நல்ல விலையும் தரத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்தான். ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. "If you want to pay peanuts, you will get only monkeys".
இன்னும் ஒரு விஷயம். இவ்வளவு பேசும் டோண்டு ராகவன் ஏன் இன்ஸ்டாக்குக்கு வேலை செய்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக கூறுகிறேன்.
1. அக்காலக் கட்டத்தில் சோஷலிச பொருளாதாரத்தில் அன்னிய நாடுகளுடன் செய்து கொள்ளும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் வெகு குறைவு. ஆகவே மொழிபெயர்ப்பு வேலைகளும் குறைவே.
2. அரசு துறைகள் தங்களுக்கு தேவையான மொழிபெயர்ப்புகளை இன்ஸ்டாக் மூலம்தான் செய்வித்து கொள்ள வேண்டும் என்பது அப்போதைய அரசின் கொள்கை. ஆகவே வேலைகள் இன்ஸ்டாக்கில்தான் அதிகம் கிடைத்தன.
3. எவ்வளவுக்கெவ்வளவு வேலை செய்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனது மொழியின் தரம் கூடுமல்லவா. (இப்போதைக்கு நான் பதிவுகள் போடுவதற்கும் எனது தமிழின் தரத்தை உயர்த்திக் கொள்வது எனது நோக்கங்களில் ஒன்றே என்று இந்த இடத்தில் கூறிவிடுகிறேன்).
4. எல்லாவற்றையும் விட முக்கியமாக இன்ஸ்டாகின் உதவியால் என்னால் ஒரு வெற்றிகரமான மொழிப் பெயர்ப்பாளனாக மாற முடிந்தது. அதாவது டில்லியில் கால் ஊன்றிக் கொள்ள ஒரு இடம் கிடைத்து, ஐ.டி.பி.எல்லில் நல்ல வேலை கிடைத்து, அனுபவம் பல பெற்று, என்றெல்லாம் கூறிக் கொண்டே போகலாம்.
இப்பதிவை இற்றைப்படுத்த தூண்டுதலாக இப்போது கிடைத்த அனுபவமும் அதேதான். முதலில் பல கேள்விகள் கேட்டனர், எனது சேவையின் தரம் பற்றி. அதாவது பிராஜக்டுகளை குறித்த நேரத்துக்குள் மிகத்தரமான முறையில் தரவியலுமா என்று.
தாராளமாகச் செய்யலாம், சரியான விலை அதற்கெல்லாம் கிடைத்தால் என்று நான் பதிலளிக்க, வந்ததையா ஆஃபர்.
The work is for a semi private publication
we have got 3 other Translators for various parts and we pay Rs 40 per page
Will this work for you?
if possible please look into the baraha font as the others are doing it in that
Thanks
எனது பதில்:
How many words are there in your page? Even assuming a modest figure 200 words in a page, Rs. 40 represents just 20 paise per word.
This is a ridiculously low rate as far as I am concerned. I charge Rs. 3 per word and this works out to Rs. 600 per page of 200 words.
I am not interested to accept your work at the very low rate of Rs. 40 per page.
இதற்கு வந்த பதில்:
This is not technical writing.
Linguistic companies charge rs 50 per page for non profit religious translations.
like kumbabhishekam newsletters sthala puranas etc
எனது பதில்:
It is immaterial as to the purpose of the translation. As far as I am concerned, time is money and your pages will take up the same time as in the case of my regular translation assignments.
My time in a day is limited to just 16 hours at the computer and I cannot afford to waste my time in so called non profit translations. Please see my blog post on the subject of non-profit organizations
அவர்கள் விடவில்லை. [They have to prove a point. Money was no object (they have none)].
We had send the message to xxx groups - for vaideekas & house wife's who are good at this and may want to do a noble service & also get paid & we have found about 19 responses & they had already started work. The message was forwarded. very very sorry to have taken up your time.
எனது முடிவான பதில்:
It is good that this has happened.
There are housewives and Vaithikas with oodles of time at their disposal and can welcome a few pocket money. Their livelihood needs are met otherwise. but in my case, my sole source of income is translation.
Trouble is, you want a serious professional delivering jobs in right time and in the bargain delivering perfect work as well. Quite laudable objectives. But then you are not ready to shell out the extra money for these enhanced requirements.
Please read my post on this sort of demands by the client at http://dondu.blogspot.com/2007/11/blog-post_19.html
மீண்டும் டோண்டு ராகவன். ஒரு மொழிபெயர்ப்பு என்றால் எவ்வளவு வேலை அது பிடிக்கும் என்பதையே புரிந்து கொள்ள முடியாதவர்களிடம்/விரும்பாதவர்களிடம் இப்படித்தான் கடுமையாகப் பேச வேண்டியிருக்கிறது. இதில் நான் இழக்கப்போவது ஒரு கொத்தடிமையின் நிலையையே. யாருக்கு வேண்டும் அது?
எனது துபாஷி வேலையில் இன்னிக்கு தமாஷ் என்ற தலைப்பில் இட்ட பதிவில் அவதூறு ஆறுமுகம் போன்றவர்கள் என்னவெல்லாம் ஃபிலிம் காட்டினர் என்பதைப் பாருங்களேன் (உழைக்காமல் ஆயிரத்தி இருநூறு ரூபாயை கொண்டுவந்தது திருட்டுக்கு சமம் அல்லவா டோண்டு ராகவன் அவர்களே?). ஆனால் இதே விஷயத்தை நான் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் பதிவிட்டபோது சக மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து அமோக ஆதரவே கிடைத்தது.
இதைத்தான் “எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா” என்று கூறுகிறார்களோ? :)))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
-
நியூயார்க் நகரின் மையத்தில் அமர்ந்து செய்த ஒரு காணொளி. அந்த இடத்தில்
அப்போது உருவான எண்ணம் அப்படியே வெளிவரவேண்டும் என நினைத்தேன். மைக்
பொருத்துவது வரை ஒரு ...
1 hour ago
11 comments:
//இப்போதைக்கு நான் பதிவுகள் போடுவதற்கும் எனது தமிழின் தரத்தை உயர்த்திக் கொள்வது எனது நோக்கங்களில் ஒன்றே என்று இந்த இடத்தில் கூறிவிடுகிறேன்//
பொதுவாக நேர்மை உறங்குகின்ற இந்த காலக்கட்டத்தில், வலைத்தளத்தில் இப்படித் அடித்துச் சொல்ல, எத்தனைப் பதிவர்களுக்கு துணிவிருக்கும்? தொடர்ந்து அடித்து விளையாடுங்கள் வலையுலக யுவராஜரே!
//இப்போதைக்கு நான் பதிவுகள் போடுவதற்கும் எனது தமிழின் தரத்தை உயர்த்திக் கொள்வது எனது நோக்கங்களில் ஒன்றே என்று இந்த இடத்தில் கூறிவிடுகிறேன்//
இன்னொன்றையும் இங்கு கூற விரும்புகிறேன். எனது தமிழ் தட்டச்சு வேகம் அதிகரித்ததில் தமிழும் நான் மொழிபெயர்க்கும் மொழிகளில் ஒன்றாகப் போயிற்று. ஆக தாய் மொழிக்குள் மொழிபெயர்ப்பு செய்யும் பேறு பெற்றேன்.
அதற்காகவும் நான் தமிழ் பதிவுகளுக்கு கடமைப்பட்டவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
உங்களோடு தொலைபேசியில் பேசிய பின்னால் இன்றுதான் உங்களது ப்ளாக்கை பார்க்க நேரம் வாய்த்தது. அதற்குள்ளாக மள மளவென்று வேறு சில பதிவுகளையும் போட்டுவிட்டீர்கள். வலையுலக டெண்டுல்கர் என்றால் சும்மாவா?
தங்களுடைய இந்தப் பதிவில் தரத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நல்லது. ஆனால், இந்தத் தரத்தை அடைவதற்காக நீங்கள் பின்பற்றிய வழிமுறைகள் என்ன என்பது பற்றி ஒரு கட்டுரை வெளியிடுகிறீர்களா? இக்கட்டுரை பொதுவாக முன்னேறவேண்டும் என்று நினைக்கின்ற என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக அமையும்.
(மற்றபடி நீங்கள் சொல்லியபடி தூக்கத்தைக் குறைக்க முயற்சி செய்து அது சரியாக வரவில்லை என்பதில் எனக்கு வருத்தமே.)
இப்போது என்ன புத்தகம் படிக்கிறீர்கள்?
வணக்கம் பெங்களூர் நண்பரே,
பின்னூட்டத்துக்கு நன்றி. ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் பின்னூட்டம் வந்துள்ளது.
நான் இப்போது உவேசா அவர்களது 'என் சரித்திரம்' படித்து கொண்டிருக்கிறேன். சில பதிவுகள் போட எண்ணம்.
தரத்தை உயர்த்துவது பற்றிய பதிவையும் போட்டால் போயிற்று.
விடியற்காலைத் தூக்கம்தான் ஜெயிப்பதற்கு கஷ்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவு சுவாரஸ்யமில்லாமல் "சப்"னு போச்சே
//பதிவு சுவாரஸ்யமில்லாமல் "சப்"னு போச்சே//
Not even when you just get monkeys?
Regards,
Dondu N.Raghavan
//அதற்காகவும் நான் தமிழ் பதிவுகளுக்கு கடமைப்பட்டவன்//
இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை. தமிழல்லாத மொழிகளில் வேலை செய்து பாக்கெட்டை ரொப்பிகொண்டு தமிழ் மீது ப்ற்றுள்ளது போல காட்டிக்கொள்வது!!!
//தமிழல்லாத மொழிகளில் வேலை செய்து பாக்கெட்டை ரொப்பிகொண்டு//
திறமை இருந்தால் நீங்களும் வேற்றுமொழி கற்று வேலை செய்யுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
hayyram said...
// //டோண்டு சார், கீழ்கண்ட தளத்தில் இருக்கும் பேட்டியை தமிழ்ப்படுத்திப் போட முடியுமா?// //
டோண்டு ராகவன் Said...
// //எனது பதில்:
It is immaterial as to the purpose of the translation. As far as I am concerned, time is money and your pages will take up the same time as in the case of my regular translation assignments.....
ஒரு மொழிபெயர்ப்பு என்றால் எவ்வளவு வேலை அது பிடிக்கும் என்பதையே புரிந்து கொள்ள முடியாதவர்களிடம்/விரும்பாதவர்களிடம் இப்படித்தான் கடுமையாகப் பேச வேண்டியிருக்கிறது. இதில் நான் இழக்கப்போவது ஒரு கொத்தடிமையின் நிலையையே. யாருக்கு வேண்டும் அது? // //
@அருள்
வழக்கம்போல தவறாகப் புரிந்து கொண்டீர்கள். ஹேராம் எனது வாடிக்கையாளர் அல்ல, சக பதிவாளர். அவர் எனக்கு அளித்தது ஆலோசனை. எனது தளத்தில் வந்தால் எக்ஸ்போஷர் அதிகம் கிடைக்கும், எனக்கு ஹிட்டுகள் ஏறும். விருப்பம் இருந்தால் செய்வேன், இல்லாவிடில் இல்லை.
ஆனால் வாடிக்கையாளர் என்பது வேறு, ஒத்துக் கொண்டால் செய்தே ஆகவேண்டும். இல்லையானால் எனது நம்பிக்கைத் தன்மை பாழாகும்.
அதற்கு முதலிலேயே விஷயங்களைத் தெளிவுபடுத்துதால் நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//@அருள்
வழக்கம்போல தவறாகப் புரிந்து கொண்டீர்கள். ஹேராம் எனது வாடிக்கையாளர் அல்ல, சக பதிவாளர். // நன்றி டோண்டு சார். இந்த சின்ன விஷயம் நமக்குப் புர்நிதால் கூட உள்ளே மூக்கை நுழைத்து சிண்டு முடிந்து வேடிக்கை பார்ப்பது அரசியல் வாதிகளின் வேலை தானே. அரசியல் வாதிகளுடன் நெருக்கமானவர் என்பதாலேயோ என்னமோ அருள் அவ்வழியே பேசுகிறார்.
Post a Comment