நேற்று பெரிசு ஜெயமோகனின் ஆர்.எஸ்.எஸ். பற்றிய பதிவைப் பார்த்து ஆஹா என துள்ளி குதித்தது. அது என்ன நினைத்ததோ தெரியாது என்று யார் சொன்னாலும் சொல்லலாம், நான் சொல்லலாமா? சரி என்னதான் செய்கிறது என பார்த்தேன்.
அதுவும் பிளாக்கரில் லாக் இன் செய்து செட்டிங்ஸுக்கு போய் விஷமம் செய்து ஒரு ஃபீட் உரலை உருவாக்கி சேவ் செய்து விட்டு என்னை வெற்றியுடன் பார்த்தது.
அன்று முழுக்க உற்சாகத்துடன் இருந்தது. இரவு வாக்கில் ஐயோ என தேள் கொட்டியது போல துள்ளிக் குதித்தது. அதுவும் ஏன் என எனக்கு தெரிந்ததால் அமைதி காத்தேன்.
என்னவாயிற்றென்றால் அதன் பதிவுகள், அவற்றின் பின்னூட்டங்கள் ஆகியவற்றின் மொத்த சுட்டிகளும் தமிழ்மணத்தின் பக்கங்களிலிருந்து மறைந்து போயிருந்தன. அதுவும் பாவம் கன்ட்ரோல் எஃப் போட்டு டோண்டு, dondu என்றெல்லாம் வைத்து தேடியது. ஒண்ணும் தேறல்லை. அதுக்கு ஒரே திகைப்பு. அதுக்கே தெரியல்லைன்னா எனக்கு மட்டும் தெரியப் போகிறதா என்ன?
பிறகு நான் அதுக்கு சொன்ன ஆலோசனையின்படி ஒரு மின்னஞ்சலை தமிழ்மணத்துக்கு அனுப்பியது. தான் செட்டிங்ஸ்களை மாற்றியதில் குழப்பமா அல்லது அவங்களாகவே தன்னை நீக்கிட்டாங்களான்னு அதில் கேட்டிருந்தது.
இத்தனை வருடங்களா நீ அவங்களை படுத்தியிருக்கே, அப்போவெல்லாம் நீக்காதவங்க இப்போ மட்டும் நீக்குவாங்களான்னு நான் அதை சமாதானம் செய்தேன்.
அதுக்கேத்தாப்போல் இப்ப அதன் சுட்டிகள் திரும்ப வந்து விட்டன. ஆக டோண்டு ராகவனின் மறைவு கொஞ்ச நேரத்துக்குத்தான்.
இக்கதையின் நீதி யாது? பிளாக்கர் செட்டிங்ஸ் எல்லாம் மாத்தினாக்க சில சமயம் இந்த மாதிரியெல்லாம் கூட ஆகும் அப்பூ.
அன்புடன்,
முரளி மனோகர்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
18 comments:
சார் பதிவின் தலைப்பு எனக்கு புடிக்க வில்லை.
தலைப்பை மாற்றவும் அல்லது பதிவையே கூட நீக்கலாம். அல்லது டோண்டு பதிவு கணினி கோளாறு என்று மாற்றுங்கள்.
சும்மா ஒரு மொக்கை. நெருப்புன்னா வாய் வெந்துடாது, கவலை வேண்டாம்.
எனினும் உங்க்ள் பின்னூட்டத்துக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்க பதிவு மறைவுன்னு தானே போடனும். ஏன் உங்களுக்கே உங்கள் இரங்கல் செய்தி.
அப்புறம் அருளை ஏன் கமெண்ட் போட வேண்டாம்னு சொன்னீங்க. நல்லாத்தான் எழுதறார்
அருளை பின்னூட்டமிட வேண்டாமென நான் எங்கே கூறினேன்? நானே அனானியாக வந்து அவரை திட்டினேன் என அவர் விடாது அப்பண்டமாக கூறிக்கொண்டிருந்தார். அம்மாதிரி பொய்யான குற்றச்சாட்டுகளை தாங்கி வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மட்டும்தான் கூறினேன்.
போய் நான் எழுதியதை சரியாக படியுங்கள்.
எனது சந்தேகம் என்னவென்றால், தனக்கு எதிரான பின்னூட்டங்களை அவரே அனானியாக போட்டார் என்பதுதான். அதற்கேற்றார் போல் நான் அனானி ஆப்ஷனை தூக்கியதும் அவர் வரவேயில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவர்(அருள்) luckylookonline.com பதிவில் நீங்க தான் அனானின்னு பின்னூட்டம் போட்டிருக்கார். அதனால தான் கேட்டேன்
லிங்க்
https://www.blogger.com/comment.g?blogID=25593973&postID=2387140726155386127
பதிவு
http://www.luckylookonline.com/2010/10/blog-post_29.html
இதுல பாருங்க
அது பொய் குற்றச்சாட்டு என்பதுதான் நான் கூறுவது. அவரே அவ்வாறு செய்து கொண்டார், நான் அனானி பின்னூட்டங்களை அனுமதிப்பதால். இப்போது அவ்வாறு இல்லை என்றவுடன் இங்கு வந்து பின்னூட்டம் போட என்ன தடை?
அதுவும் போனதாக நீங்கள் சொன்ன பதிவு போலி டோண்டுவுக்கு பெரிதும் துணைபோனவருடையது.
அவரைப் பற்றி மேலும் கூற எனக்கு விருப்பம் இல்லை, பார்க்க: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_10.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நெருப்புன்னா வாய் வெந்துடாது//
ஆனாலும் தலைப்பு "என்ன நடந்ததோ?" என திக்கென்றது.
எதுவும் எவருக்கும் என்னேரமும் நடக்கம்லாமல்லவா?
//அவரைப் பற்றி மேலும் கூற எனக்கு விருப்பம் இல்லை, பார்க்க: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_10.html//
பாத்துட்டேன் நன்றி
ஏதோ சீரியஸ் என நினைச்சா! காமெடி எல்லாம் பண்ணிறீங்க அப்பு.
டோண்டு ராகவன் Said...
// //நானே அனானியாக வந்து அவரை திட்டினேன் என அவர் விடாது அப்பண்டமாக கூறிக்கொண்டிருந்தார்...
எனது சந்தேகம் என்னவென்றால், தனக்கு எதிரான பின்னூட்டங்களை அவரே அனானியாக போட்டார் என்பதுதான்.// //
அனானியாக வந்து பின்னூட்டமிடுவது நீங்களேதான் என்றா (உங்கள் பதிவில்) நான் கூறினேன்....?
எனக்கு எதிராக நானே பின்னூட்டமிட்டேன் என்பதும் நல்ல நகைச்சுவை.
எப்படியோ 'அனானியை' காணாமல் போக செய்ததற்கு நன்றி.
தலைப்பு ரொம்ப சின்னப் புள்ளைத்தனமால்ல இருக்கு.
உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கும் கொஞ்சம் கூட பொருந்தலை.
இதுக்குப் பேரு தான் "மரண"-மொக்கையோ ?
தமிழ்மணம் உங்கள் ஆர்.எஸ்.எஸ் ஃபீடைத்தான் சேகரித்து காட்டுகிறது. விசயம் அவ்வளவே. அதில் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்தால் தமிழ்மணம் உங்கள் வலைத்தள அப்டேட்களை சேகரிப்பதில் சிக்கல் ஏற்படும்.
//அனானியாக வந்து பின்னூட்டமிடுவது நீங்களேதான் என்றா (உங்கள் பதிவில்) நான் கூறினேன்....?//
ஆம், அதை insinuate செய்தீர்கள். மற்ற பல பதிவுகளில் போய் ஒப்பாரி வைத்தீர்கள்.
ஆனால் நானோ அதையெல்லாம் நீங்களே செய்தீர்கள் என சந்தேகப்பட்டதை வெளிப்படையாகவே கூறினேன்.
எது எப்படியானால் அனானி ஆப்ஷனை தூக்கியாயிற்று.
அதை போட்டது அச்சமயம் தேவையாக இருந்தது, இப்போது இல்லை, அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தலைப்பை பார்த்து பகீர்னு இருந்தது...
அப்புறம் தொடர்ந்து படிச்சா, ஆஹா.. இது இவரோட யூஷுவல் லொள்ளு தானேன்னு நினைத்து கொண்டேன்...
தலைப்பைப் பார்த்ததும் பகீர்ன்னு இருந்தது. நீங்க சொன்ன நண்பேண்டா உணர்வான்னு தெரியல :)
////நெருப்புன்னா வாய் வெந்துடாது//
சரிதான். சிலவற்றை (தவறாக, ஆபாசமாக) உதிர்த்துவிடும் போது கன்னம் வீங்குவதும் உண்மைன்னு சிலர் சொல்றாங்களே. அது பற்றி ?
//நீங்க சொன்ன நண்பேண்டா உணர்வான்னு தெரியல :)//
இதில் என்ன சந்தேகம்?
//சரிதான். சிலவற்றை (தவறாக, ஆபாசமாக) உதிர்த்துவிடும் போது கன்னம் வீங்குவதும் உண்மைன்னு சிலர் சொல்றாங்களே//
நெருப்புன்னா வாய் வெந்துடுமாங்கறது எதிராளிக்கும் தெரியுமான்னு பார்க்க வேண்டும் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
i thought it is related to activities of sangh parivar. yes, please write in detail and ur views on sangh activities.dont hesitate.
Post a Comment