டெயிலி பயனியர் பத்திரிகையின் இக்கட்டுரையின் சுட்டியை எனக்குக் கொடுத்த நண்பர் எம். அருணாச்சலம் அவர்களுக்கு என் நன்றி. வழக்கம்போல முதலில் கட்டுரையின் தமிழாக்கம், பிறகு டோண்டு ராகவன் வருவான். கட்டுரையின் பின்னூட்டங்கள் ஆங்கிலத்திலேயே விடுகிறேன்.
ராஜாவை வீழ்த்திய சாமானியன்
நவம்பர் 16, 2010 3:38:18 PM
சந்தன் மித்ரா | புதுதில்லி
ஸ்பெக்ட்ரம் ஊழலை தோண்டியெடுத்த ஜே. கோபிகிருஷ்ணனுக்கு பயனியர் தரப்பிலிருந்து பாராட்டு
இந்த ஜே.கோபிகிருஷ்ணன் என்பவர் திருவனந்தபுரத்தில் இருந்தவாறு பயனியரின் இப்போது இல்லாமல் போயிருக்கும் கொச்சி எடிஷனில் பகுதி நேர நிருபராக இருந்தார் என்பதுகூட ரொம்ப நாட்களாக எனக்குத் தெரியாது. ஆகவே அவர் 2007ல் கொச்சி எடிஷனை ஏறக்கட்டியதும் தில்லிக்கு வந்து தலைமை ஆஃபீசில் வேலை தருமாறு கோரியபோது எனக்கு அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வரவில்லை. ஆகவே அவரால் கையெழுத்திடப்பட்டு வந்த சில ஸ்டோரிகளை நான் பார்த்திருந்தாலும், அவருக்கு தில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை, ஆகவே இங்கு அவருக்கு உருப்படியான தொடர்புகள் இருக்காது என்று நான் அலுவலக தலைமையதிகாரி நவீன் உபாத்யாயாவிடம் கூறினேன். ஆனால் நவீன்தான் என்னுடன் பேசி ஒரு மூன்று மாதத்துக்கு ட்ரியலாக அவரை எடுத்துக் கொள்ள சம்மதிக்க வைத்தார். அவருக்கு தில்லியின் அளவுகோல்களுக்கு ஒவ்வாத சிறுதொகை ஸ்டைபண்ட் வழங்கப்பட்டது.
அந்த மூன்று மாதங்களில் அவர் ஒன்றும் பிரமிக்கத்தக்க ஸ்டோரீஸ் எதுவும் எழுதவில்லை. இருப்பினும், அவரது உண்மையான உழைப்பு, பிறருடன் இனிமையாக பழகும் தன்மை, விடாமுயற்சி ஆகியவை அவருக்கு முழுநேர வேலையை வாங்கித் தந்தது. சம்பளம் என்னவோ இன்னும் கட்டை சம்பளம்தான். ஆனால் பாரளுமன்றத்தின் மத்திய ஹாலில் அவரது செயல்பாட்டை விதந்தோதினர் இடதுசாரி கட்சிகளில் உள்ள சில நண்பர்கள். தகவல் தொடர்பு விவகாரங்களில் அவரது அறிவின் ஆழத்தைப் பற்றியும் கேள்விப்பட்டேன். ஆனால் அவர் அதிகாரபூர்வமாக இடது சாரிகளை கவர் செய்ததால் நான் அதற்கெல்லாம் ரொம்ப முக்கியத்துவம் தரவில்லை.
பிறகு ஆரம்பித்ததையா அவரது கட்டுரைகளின் ஊர்வலம். 2ஜி பெக்ட்ரம் ஊழலின் பரிமாணங்களை அவர் கவர் செய்ய ஆரம்பித்தார். அந்த பிரச்சினை ரொம்ப சிக்கலானது, இப்போது கூட பலருக்கு அதன் நுட்பங்கள் புரியாது. ஆனால் கோபி ஊழலை வெளியாக்கி புட்டு புட்டு வைத்தார்.
அவரிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிரத்தியேக கட்டுரைகள் வரவர அவரை நோக்கி தகவல்களும் காந்தத்தை நோக்கி வரும் இரும்பு போல வர ஆரம்பித்தன. நவின் எல்லா இணைப்புகளையும் அவதானித்து, அந்த ரிப்போர்டுகளை நகாசுபடுத்தினார். இணையத்திலிருந்து கோபியும் பலவிவரங்கலை தோண்டி எடுத்தார். 2ஜி ஊழலை அவர் விடாது பின் தொடர்ந்தார். அதிகாரிகலை சந்தித்தார். எல்லா அரசியல் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். கேரளாக்காரர் ஆனாலும் அவர் நடுநிலை அரசியலில்தான் இருந்தார்.
அவர் மேல் கொண்டுவரப்பட்ட அழுத்தங்களை நான் அறியேன், ஆனால் என் மேல் அவை கொண்டுவரப்பட்டன. எனது 27 ஆண்டு வாழ்க்கையில் இது மிக அதிகமாக இப்போது நடந்தது. இருப்பினும் அவர்றை மீறி நான் செயல்பட்டேன் என்பதைப் பெருமையாகக் கூறிக் கொள்வேன். ஆனால் எல்லாவற்றையும் மீறி நான் பெருமை கொள்வது கோபிகிருஷ்ணனுக்கு நான் எல்லா வசதிகளையும் தந்து, தேசீய ஊடகத்தில் அவரை வளையவிட்டேன் என்பது. கோபியின் பெருமைதரும் சாதனையில் இப்போது பயனியரும் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறது
பயனியரின் புலனாய்வுக் குழு கோபியுடன் இது பற்றி பேசியதிலிருந்து சில வரிகள்:
கேள்வி: 2-ஜி ஊழலை எப்போது கண்டுகொண்டீர்கள்?
விடை: Swan மற்றும் Unitech நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அமோக விலைகளுக்கு விற்றதுமே (4,500 கோடி மற்றும் `6,200 கோடி, செப்டம்பர் 2008-ல்). எங்கள் மூக்கு ஊழலை முகர ஆரம்பித்து விட்டது. அலுவலக தலைவர் நவீன் உபாத்யாயா என்னிடம் மேலும் தகவல்களை தேடி எடுக்குமாறு கூறினார். நல்லவேளையாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உள்ளும் புறமும் நன்றி அறிந்த ஒரு நம்பிக்கையான எட்டப்பர் கிடைத்தார். பிரதமர் ராஜாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்து ராஜாவிடமே என்ன நடக்கிறது எனக் கேட்டதாகவும் ஒருமுறை அந்த எட்டப்பர் கூறினார்.
மெதுவாக எட்டப்பர்மூலம் அமைச்சகத்தின் ஊழல்களின் பரிமாணங்கள் புலப்படத் துவங்கின. அன்னாட்களில் தான் தனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்ததையே தானும் செய்ததாக ராஜா பொய்யுரைத்து வந்தார். அந்த எட்டப்பரோ ராஜாவும் அவரது உறவினர்களும் பினாமி கம்பெனிகளில் செய்த முதலீடுகளை விளக்கினார். இந்த ஊழலின் பலன்கள் பல பெரிய நிறுவனங்கள், அரசியல்வாதிகள் லயசன் முதலைகள் ஆகியவருக்குத்தான் சென்றது என அவர் என்னிடம் சொன்னார்.
எனது எடிட்டருடன் பேசி அவரது ஒப்புதலைப் பெர்றால் மட்டுமே தான் மற்றத் தகவல்கலை தரவியலும் எனவும் இந்த எட்டப்பர் கூறினார். எடிட்டரும் ஒப்புதலைத் தர தகவல்கள் சரிபார்ப்பு எட்டப்பரது அலுவலகத்திலும் வேறு பல இடங்களிலும் ரகசியமாக நடந்தது.
கேள்வி: எது உங்களது முதல் ஸ்டோரி, அதன் எதிர்வினைகள் என்ன?
பதில்: ஊழலின் அளவைப் பார்த்ததுமே ராஜாவின் ரியல் எஸ்டேட் பினாமிக் கம்பெனிகளின் விவரங்களை எடுத்தோம். ராஜாவின் தகுதிக்கு மீறிய சொத்து சேர்ப்பை வெளிக்கொணர முடிவு செய்தோம். சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் சந்தன் மித்ராவும் நவீன் உபாத்யாயாவும் சரிபார்த்தனர். 11 திசம்பர் 2008-ல் வெளியான முதல் ஸ்டோரியில் ராஜாவின் பிரதான ரியல் எஸ்டேட் கம்பெனியான Green House Promoters பற்றிய விவரங்களை கூறியிருந்தோம். மற்ற பினாமி கம்பெனியின் விவரங்கள் அடுத்துவரும் நாட்களில் வர ஆரம்பித்தன.
கே: எல்லாவற்றையும் நிறுத்துமாறு உங்கள் மேல் அழுத்தம் வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்?
ப: முதல் ரிப்போர்ட் வந்ததுமே எடிட்டர் சொன்னபடி நான் ராஜாவை சந்தித்தேன். அவரது கட்சியில் உள்ள அவரது விரோதிகள்தான் இதற்கு பின்னால் உள்ளனரா எனக்கேட்டு சில பெயர்களையும் கூறினார். அவரது தனிப்பட்ட சொத்து விவரங்கள் எனக்கு எப்படிக் கிடைத்தன என்று அவர் என்னை கேட்டார். அப்படியே ஆடிப்போயிருந்தார் அவர். எல்லாவற்றையும் நிறுத்துமாறு அவர் கேட்டார். நான் எடிட்டர் சொன்னதாலேயே அவரது வெர்ஷனைப் பெறவே அவரைப் பார்க்க வந்தேன், வேறு எதற்கும் இல்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். ராஜா என்னுடன் பேச ஒப்புக்கொண்டாலும் திரும்பத் திரும்ப நான் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். பல பெரிய நிறுவனங்களும் என்னிடம் அதையே கேட்டன. அதே நேரம் யாரும் என்னிடம் தவறாக நடந்ததாகவோ என்னை பயமுறுத்தியதாகவோ கூற மாட்டேன்.
அச்சமயம் ராஜா 3G ஏலத்தை கேபினட்டின் ஒப்புதல் இன்றி மலிவான விலைக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தார். பெரிய நிறுவனங்களின் ஏஜெண்டுகள் நான் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டன. இல்லாவிட்டால் மத்திய அரசு 3G ஏலத்தை ஒரு EGoM-விடம் ரெஃபர் செய்யும் என அவர்கள் பயந்தனர். அதைத்தானே நாங்களும் விரும்புகிறோம் என நாங்கள் பதிலளித்தோம். அதே சமயம் என்னைக் குறி வைப்பார்கள் என்றும் பலர் எச்சரித்தனர். அதை நான் அலட்சியம் செய்தேன். 3G விஷயத்தை எப்படியாவது EGoM-க்கு கொண்டு போகக்கூடாது என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக எனக்கு என்னவெல்லாம் ஆசை காட்டினார்கள் என்பதை நான் இங்கே கூறுவது சரியாக இருக்காது. ஆனால் கடைசியில் EGoM வந்தது, ராஜா பிக்சரில் இருந்து விலகினார், நாட்டுக்கு 1.06 லட்சம் கோடிகள் கிடைத்தன.
Q: நீங்கள் இதையெல்லாம் நிறுத்த உங்களுக்கு யாரேனும் பணம் கொடுப்பதாகச் சொன்னார்களா?
A: ஆகா செய்தார்களே. ஆஃபர் செய்த தொகைகள் மிக பெரியன. நிறுவன மற்றும் ராஜாவின் ஏஜெண்டுகளும் நான் எடிட்டரிடம் ஒன்றுமே கூறாது கட்டுரைகளை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் சிலர் டபுள் கேம் எல்லாம் ஆடினார்கள். ஒருவர் ராஜாவைப் பற்றி பல தகவல்கள் தந்து அதே சமயம் ராஜாவுக்கும் பல தகவல்கள் தந்தார். ஆனால் முதல் எட்டப்பர் ஸ்டெடியாக நின்றார் பயமின்றி. பல அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்களும் உதவி செய்தனர்.
கே: ராஜாவின் ராஜினாமாவோடு விஷயம் நிற்குமா அல்லாது மேலும் தலைகள் உருளுமா?
ப: நான் என்ன நினைக்கிறேன் என்றால் சுப்பிரமணியன் ஸ்வாமி மற்றும் சாந்தி பூஷன் தொடுத்த வழக்குகள் அவற்றின் கோர்சை முடித்து, சட்டவிரோதம் என சியேஜியால் அடையாளம் காணப்பட்ட லைசன்சுகள் எல்லாமே கேன்சலாகும். பெட்ரோல் பம்ப் ஊழல் வழக்கில் நடந்தது போல அரசு ஏலம் நடத்தச் சொல்லும். ராஜா போன்ற சிலர் சட்டத்தின் சீற்றத்துக்கு ஆளாகலாம். அதே சமயம் நிறுவனங்களுக்கு ரொம்ப பாதிப்பு இராது. ஏலம் நடந்து அரசுக்கு சுமார் 2-3 லட்சம் கோடி ரூபாய்கள் கிடைக்கலாம்.
கே: Howஸ்பெக்ட்ரம் கொள்கையில் வெளிப்படை தன்மையைக் கொணர்ந்து தில்லுமுல்லு நடக்கதிருக்க அரசு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
ப: ஸ்பெக்ட்ரம் மேலாண்மை ISROவிடம் தரவேண்டும், ஆனால் எந்த அரசியல்வாதியும் இதை விரும்ப மாட்டான், காரணம் தெரிந்ததே. ஸ்பெக்ட்ரம் ஆடிட் இன்னும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது எளிதாக பணம் பண்ணும் பொருட்டு. இஸ்ரோ மாதிரி ஒரு நிறுவனம் ஆடிட் செய்தால்தான் வெளிப்படைத் தன்மை வரும்.
கே: ஸ்பெக்ட்ரமுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?
ப: தெரியவில்லை. ராஜாவின் ராஜினாமா பற்றி தெரிந்ததும் ஒரு களைப்பு வந்துள்ளது. இப்போதைக்கு ஏதும் ஐடியா இல்லை.
முதுகில் ஒரு ஷொட்டு பயனியருக்கும் கோபிக்கும்.
ராஜாவின் ராஜினாமா பற்றித் தெரிந்ததுமே ட்வீட்டுகள் ஆரம்பித்தன. பல ட்வீட்டுகள் ரிபீட்டு என்று ஆயின. கோபி கிருஷ்ணாவுக்கும் பயனியருக்கு பாராட்டு மழை குவிந்தது. பெரிய பேப்பர்களோ பல 24x7 நியூஸ் சேனல்களோ தொடவே பயந்த விஷயத்தை பயனியரும் கோபியும் கையாண்டதை பல ட்வீட்டுகள் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டன. தோல்வி ராஜாவுக்கு மட்டுமல்ல, பெரிய ஊடகங்களுக்கும்தான்!
பின்னூட்டங்கள்: (அவற்றை ஆங்கிலத்திலேயே விடுகிறேன்)
BRAVO GOPI !!
By H.Balakrishnan on 11/16/2010 1:08:58 PM
'GOPI' deserves all the accolades for his fantastic investigative journalism. Living in 'far-away' Chennai, I owe the 'Pioneer' my debt of gratitude for bringing to light the '2G Spectrum Scam' of 'Spectrum Raja'. I have read all the reports filed by 'Gopi'.Credit is also due to Dr.Chandan Mitra for writing this emocium to 'Gopi'. Not many Indians are blessed with this large heart to praise their 'Juniors'.God Bless 'Gopi'
THE MAN WHO FELLED A KING
By PVENKATASUBRAMANIAN on 11/16/2010 12:31:54 PM
Shri. Chandan Mitra,
Excellent. I am one of the few in Chennai could know the truth on the entire 2G spectrum scam only because of relentless reporting in your daily. Thanks to you and Mr. Gopi. Regards, P.Venkat
Salute your bravery
By Ramesh on 11/16/2010 12:13:52 PM
As a proud Indian, we salute your bravery and patience in getting this man out of the ministry. Hope all the money lost is regained. Better still if the Nehru clan is thrown out of India
Gopi and Pioneer
By ShaD on 11/16/2010 11:39:20 AM
Million Salutes to Gopi and Pioneer team!!
The man who felled a king
By Kumar on 11/16/2010 11:31:53 AM
The Pioneer and Mr. Gopikrishnan have done a tremendous national service by exposing this gross irregularity done by high level public officials. Hope Pioneer's continued effort will succeed in exposing all involved in spite of an all out effort by the present government to stonewall and cover up.
The man who felled a king
By s subramanyan on 11/16/2010 11:31:31 AM
Hearty congratulations to J Gopirkshnan; the country needs many such. We are grateful. Kudos to the editor ho potted him and e ncouraged dhim. I have hopeds now that the India n nmedia ahs enopujgh talent waiting to be tapped by editoros. It is they who could unravel the severasl scams that occur almost daily. Kudos once again to The Pionner. COntginue the godo work.
bravo mr gopalkrishnan & pioneer
By hitesh on 11/16/2010 11:24:39 AM
its great to read that v still have courageous reporter..hats off
the man who reinforced democracy
By d v sridharan on 11/16/2010 8:50:12 AM
a journalist raised far from the centres of power in delhi, has taken on power and venality and slayed a monster. it is our free, democratic society that has produced a man like gopi, making us believe that someone somewhere will arise at the right time to avenge evil
The World Hails J Gopikrishna and the Whistleblower
By Maheswar in Kathmandu on 11/16/2010 6:41:35 AM
These two truly served the poor and demoracy in India with their courageous act I am sure they will inspire all moral and ethical citizens to punish the corrupt and end graft in Indian politics
Spectrum, Gopi the winner
By krishnan on 11/16/2010 6:05:47 AM
It is the greatest story ever told and the outcome is unforgettable! We are all proud that there are patriotic citizens still! We in tamilnadu urge chandan and his team to investigate the entire bandwagon of the Tamilnadu Cm, his family, his close aides, loyal ministers. The whole government is reeling under corruption. This old man is surviving on sheer opportunsm and is escaping everytime. I will say Marans escaped. In the spectrum case the role of kanimazi and her mother should also revealed.
Congratulations.
By R. Gopalakrishnan Nair on 11/16/2010 1:56:58 AM
I wholeheartedly congratulate The Pioneer, Messrs Chandan Mitra (whom I knew from his TOI stint), N Upadhyay and above all the unrelenting and fearlessly dedicated Gopikrishnan. I am very disappointed to know that the Kochi edition of the Pioneer was aborted. Because, I strongly feel that if there is any state in India which warrants the existence of a newspaper like the Pioneer with its dedicated staff, it is none but Kerala.
இப்போது டோண்டு ராகவன். இந்த மொழிபெயர்ப்பு வேலை மனதுக்கு நிறைவாக இருந்தது. எளிமையான ஆங்கிலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
18 comments:
Thanks Pioneer and team
THanks Dondu for translation
டோண்டு சார், இதைப்பற்றி பதிவு போட தயாராகி கொண்டிருந்தேன். நீங்கள் போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி.
@திரவிய நடராஜன்
அதற்காக நீங்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். உங்கள் சட்ட ஞானத்தையும் இதில் கொண்டு வாருங்கள். நான் அதை படிக்க ஆவலாக உள்ளேன்.
போடுவீர்கள்தானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அரைத்த மாவையே ஏன் அரைக்க வேண்டும்? பிரச்சனைகள், ஊழல்களுக்கா பஞ்சம் நம் நாட்டில்?
வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில், அரசியல் விபச்சாரியாக அறியப்படும் பாடாவதி மடையர்கள் கட்சி தலைவர் கொய்யா, எந்த பக்கம் கரை ஒதுங்குவார் - திருடர்கள் முன்னேற்ற கழக தலைவர் கொலைஞர் வீரப்பரிடம் சரணடைவாரா அல்லது அகில இந்திய அனாமதேய திருடர்கள் முன்னேற்ற கழக தலைவி பூலான் தேவியிடம் சீட்டுக்காக மன்றாடுவாரா?
டோண்டு சார்,கோபி ஒரு சாமான்யன் அல்ல அவர் தான் ராஜா. நன்றி
Dondu Sir - Thanks for agreeing to my request and for translating & publishing this interview of J. Gopikrishnan of The Pioneer newspaper, who was the reporter who unearthed the 2G Spectrum scam and brought it to the limelight.
@எம்.அருணாசலம்
என்ன மொழிபெயர்ப்பு ஓக்கேயா? எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன இருந்தாலும் தமிழனுக்கு ஒரு மலையாளி தான் எதிரி என்பதை கோபிகிருஷ்ணன் நிரூபித்திருக்கிறார். :D
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
Well done. மொழிபெயர்ப்பும் சரியாகவே, அதே ‘டோன்’ குறையாமல் இருந்தது. என் பாராட்டுகள்!
எட்டப்பர் என்ற மொழிபெயர்ப்பு நெருடலாக உள்ளது. தவிர்க்கப்பட வேண்டும். உள்விவகார முறைகேடுகளைத் தாமாக வெளிப்ப்படுத்த இயலாதவர்கள் நம்பகமான பிறரிடம் தெரிவித்து பரிகாரம் காண முற்படுவது சிறந்த தேச சேவையாகும். சுயநலம் காரணமாக துரோகம் செய்பவர்களுக்கான குறியீடாக விளங்கும் எட்டப்பர் என்கிற பதப் பிரயோகத்தை இங்கு பயன்படுத்துவது சரியா என யோசிக்க வேண்டும்.
-மலர்மன்னன்
எட்டப்பன் என்பவன் காட்டிக் கொடுத்தவன் அல்ல. அவர் வெள்ளையர்களின் தோழன். கட்ட பொம்மனுக்கு எதிரே நின்று சண்டை போட்டவன். ஒரு நாளும் கூட இருந்து உறவாடிக் கேடுத்தானும் அல்ல குழி பரித்தானும் அல்ல. ஆனால் உண்மையில் அண்டி வந்தவர்களை காட்டிக் கொடுத்தவன் புதுக்கோட்டை மன்னன் தொண்டைமானே. இப்படி போலியாக எட்டப்பனை யார் கதை kattiyathu என்றே தெரியவில்லை. மலர்மன்னன் என்பவரது ஆதங்கம் வேறு விதமானது. அதுவும் mathikkap பட vendiyathu.
i agree with malar mannan.the person should be thanked for his service to
nation.
i second malarmannan. whistle blowers should be respected.
திரு கோபிகிருஷ்ணனுடைய பணி பாராட்டத் தக்கது. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழும் காங்கிரசில் ஒட்டுண்ணியாகச் சேர்ந்த திமுக ராசா செய்த இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஒரு பெரோஸ் காந்தி இல்லாத குறையை திரு கோபி தீர்த்துவிட்டார். திரு மலர்மன்னனின் கருத்து சரி. ஊழலை வெளிக்கொணர உதவிய ஒரு தேசபக்தனை, கேவலம் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனோடு ஒப்பிடுவது வேதனை தருகிறது. இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்டது என்பது என் கருத்து. எனினும் இன்று நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கும் இந்த ஊழல், மிஸ்டர் க்ளீன் என்று தலைநிமிர்ந்து நின்ற மன்மோகன் சிங் தலைகுனிய வைத்துவிட்டது. சுப்பிரமணிய சுவாமியின் கிடுக்கிப் பிடிக்குள் இந்த ஊழல் பெருச்சாளிகள் சிக்கப்போவது உறுதி. இத்தாலியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து பாரதநாடு விடுதலை பெறவேண்டியது அவசியம். அந்த புண்ணிய காலம் விரைவில் வரட்டும். இந்தப் பணிக்குத் துவக்கம் செய்த திரு கோபிகிருஷ்ணன் மற்றும் டோண்டு சார் ஆகியோருக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது.
welldone Pioneer ,Mr.Gopi Krishnan and his team,
J.senthilkumar
I dont have words to congratulate pioneer and Gopi.They are national heros.We stand behind you TEAM PIONEER.
Post a Comment