ஐரோப்பாவின் தீண்டத்தகாதவர்கள் ஏனும் தலைப்பில் கலையரசன் என்பவர் இட்ட பதிவை பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தேன். அதிலிருந்து முதலில் சில வரிகளை பார்ப்போம்.
ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும், தீண்டத்தகாதவர்களாக கருதி ஒடுக்கப்பட்ட, "ரோமா" நாடோடி இன மக்களைப் பற்றி வெளியுலகம் அதிகம் அக்கறைப் படுவதில்லை. காலங்காலமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக கூடாரங்களை அமைத்து வசித்த ரோமா இனத்தவர்கள், பெரும்பான்மை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. அதனால் நிரந்தர வறுமைக்குள் வாழும் படி நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஹிட்லரின் நாசிச ஆட்சிக் காலத்தில் யூதர்கள் மட்டும் அழிக்கப் படவில்லை. இலட்சக் கணக்கான ரோமா மக்கள் ஹிட்லரின் இனவழிப்புக்கு பலியானார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவில், யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தாயகத்தை உருவாக்க முன்வந்த வல்லரசுகள், ரோமா மக்களின் பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை.
ரோமா இன மக்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து நாடோடிக் கூட்டமாக ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள். அந்த மக்களின் தாயகம், வட இந்தியாவில், அல்லது இன்றைய பாகிஸ்தானில் இருந்திருக்க வேண்டும். அனேகமாக இஸ்லாமிய படையெடுப்புகளால் காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்திருக்கலாம். இது வரை உறுதியான வரலாற்றுத் தகவல்கள் இல்லா விட்டாலும், சரித்திர ஆசிரியர்கள் அவ்வாறு கருதுகின்றனர். ரோமா மக்கள் ஒரு காலத்தில் இந்து மதத்தை பின்பற்றியவர்கள். அவர்களின் ஸ்வாஸ்திகாவை (இந்துக்களின் புனிதச் சின்னம்), பிற்காலத்தில் ஹிட்லர் நாஸி கட்சியின் சின்னமாக்கியதாக ஒரு கதையுண்டு. ஆயிரக் கணக்கான வருடங்கள் ஐரோப்பாவில் வாழ்வதால், இன்றைய ரோமா இனத்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். ஆனால் நிறவெறி கொண்ட வெள்ளையின கிறிஸ்தவர்கள், அவர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை.
யூதர்கள் மற்றும் ரோமா குடியினர் பற்றி பிறகு பார்ப்போம். முதலில் நம் நாட்டில் கிட்டத்தட்ட இதே மாற்று நிலையில் உள்ள நாடார்கள் மற்றும் தலித்துகள் பற்றி நான் இட்ட ஆதரிசமாகக் கொள்ள வேண்டிய பெருமதிப்புக்குரிய நாடார் சமூகம் என்னும் பதிவில் நான் எழுதியதை முதலில் இங்கு மீண்டும் கொணர்வேன்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்பு போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.
இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.
------------------------------------------------------------------------------------------
தலித்துகளைப் போலவே நாடார்களும் சொல்லொண்ணா வன்கொடுமைகளை அனுபவித்தவர்கள். ஆனால் தலித்துகள் அப்படியே இருக்கிறார்கள், நாடார்களோ பெருமிதம் தரும் அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதை பார்க்கும்போது முன்னவர்களது நிலை வேதனை அளிக்கிறது. ஒரு முதல் முயற்சியாக இரட்டைக் குவளை முறையை எப்படி எதிர்க்கொள்ளலாம் எனக் கூறிய ஆலோசனைக்கு எவ்வளவு கேலியான பின்னூட்டங்கள்? நான் சந்தித்த ஒரு தலித் நண்பரிடம் இப்பதிவைப் பற்றி கூறியபோது அவர் அரசு டீக்கடை வைத்து தருமா என ஒரு அடிப்படை கேள்வியே கேட்டார். அவ்வாறு எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்த்து நின்றால் சுயமரியாதைக்காகாது என்பதை அவர் புரிந்து கொள்ள தயாரில்லை. அதே மாதிரி நாடார்களும் நின்றிருந்தால் இப்போதைய அவர்களது உன்னத நிலை கனவில்கூட கிட்டியிராது என்பதே நிஜம்.
இம்மாதிரி நேர்மறையான எண்ணங்களை உள்ளடக்கிய தொடரை எழுதியதற்கு குமுதம் பாராட்டப்பட வேண்டும். அதைவிடுத்து அது என்னவோ ஜாதியை தூக்கி நிறுத்துகிறது எனக் கூறுவது வெறும் தட்டையான எண்ணம். இத்தகைய முன்மாதிரிகளை எத்தனை முறை எடுத்தியம்பினாலும் போதாது என்பதே எனது ஆணித்தரமான கருத்து.
நான் இட்ட ராம்நகரி பதிவிலிருந்து சில வரிகளை இங்கு காட்டுவேன். “இடையில் (நாவிதர் வகுப்பைச் சார்ந்த ராம்நகரியின்) தந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லாது போக அவ்ரை மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அங்கிருக்கும் மருத்துவர் ராம்நகரியின் தூரத்து உறவுக்காரர். ராம்நகரி அவரிடம் "நல்ல வேளை நம்ம சாதி ஆள் நீ இங்க இருக்க.." என்று இழுக்கும்போதே, மருத்துவர் ஒரு மாதிரி சங்கடத்துடன் கனைத்து விட்டு அவரை தனியாக அழைத்து சென்று தனது சாதி யாருக்கும் அந்த மருத்துவமனையில் தெரியாது, ஆகவே தயவு செய்து அங்கு அதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த சாதி பிரச்சினை ராம் நகரியை ஒவ்வொரு மாதிரி பாதிப்பதையே பல வகையில் காண்பிக்கிறார்கள்”.
நாடார்கள் தம் முயற்சியால் பெற்ற பெருமை இஸ்ரவேலர்கள் தம் நாட்டையே உருவாக்கினதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. அவர்களும் நாடார்கள் போலவே தமக்குள்ளேயே ஒற்றுமையாக இருந்து முன்னேறினர். முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் நாடார்களுக்கு எனது பெரிய சல்யூட். இந்த வலைப்பூவை இப்போதுதான் பார்த்தேன். நல்ல முயற்சி.
இந்த வேற்றுமைகள் ஏன் என்பதை நான் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. நாடார்கள் சுயமுயற்சி செய்தனர், தலித்துகள் செய்தவை போதாது அவ்வளவே. கசப்பான, ஆனால் மறுக்க முடியாத உண்மை. அதை விடுத்து தலித்துகளுக்கு ஆதரவாக பேசுவது போல அவர்களது செயலின்மைக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்களது ஆழ்மனதில் போய் பார்த்தால் அவர்கள் எங்காவது முன்னேறி விடுவார்களோ, நாடார்கள் போல தங்கள் ஆதிக்கத்திலிருந்து தப்பித்து விடுவார்களோ என்ற அச்சம்தான் தெரிகிறது.
சரி இங்குதான் இப்படி என்றால் ரோமா குடிமக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் உள்ள இந்த வேற்றுமைகள் ஏன் என்பதைப் பார்த்தாலும், இங்கு இந்திய நிலைக்கான காரணங்களே அங்கும் முன்னுக்கு வருகின்றன.
ரோமா இன மக்களும் யூதர்களும் நாடின்றி பல நூற்றாண்டுகள் அலைந்தவர்கள் என்னும் ஒரு செய்தி மட்டுமே இருவருக்குமே பொதுவானது. ரோமா இன மக்கள் ஓரிடத்தில் நிற்கும் மனநிலை இல்லாதவர்கள். சுதந்திரப் பிரியர்கள். ஆகவே அவர்களாகவே பல முறை ஊர் ஊராக குடிபெயர்ந்தனர். கைவசம் நிலையான தொழில் இல்லாததால் அவர்களில் சிலர் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டனர். அந்த சிலரது செயல்பாட்டினால் மற்றவர்களது பெயரும் கெட்டது, நம்மூரில் குறவர்கள் இனத்துக்கு வந்தது போல. அவர்களை பற்றிய அசைக்க முடியாத கெட்ட அபிப்பிராயம் மற்றவர்கள் மனதில் விழுந்தது விழுந்ததுதான் என ஆயிற்று. அதை மீறிச் செயல்பட மிகுந்த கடின உழைப்பு தேவை. அதை செய்ய அவர்கள் இதுவரை தயாராக இருந்ததாகவும் தெரியவில்லை.
ஆனால் யூதர்கள் விஷயத்தில் அவர்களாக விரும்பி இடம் மாற்றவில்லை. எங்கு இருந்தாலும் அந்தந்த சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கவே முனைந்தார்கள். அவர்கள் தம் நிலையை உழைப்பின் மூலம் உயர்த்தவே முயன்றனர். சில ஆண்டுகளிலேயே அவ்வாறு உயர்ந்தும் காட்டினர். ஆனால் சுற்றிலுமிருந்த மக்கள் அவ்வளவாக முன்னேறவில்லை, அதற்கு அவர்களது சோம்பேறித்தனமே காரணம் என்றாலும், எப்போது ஒரு சமூகம் தனது குறைபாடுகளை ஒத்துக் கொண்டுள்ளது?
சௌகரியமாக பல குற்றச்சாட்டுகளை யூத சமூகத்தின் மேல் வைத்தது. ஏசு கிறித்துவை கொன்றதாக எழுந்த பொய் அவற்றில் முக்கியமானது. மேலும் ஒருவர் அக்கால கட்டத்தில் இஷ்டத்துக்கு எந்தத் தொழிலையும் ஏற்றுச் செய்ய முடியாது. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு குழு உண்டு (guild). அதில் சேர்ந்து, பயிற்சி பெற்று, தேர்வுகளை எதிர்க்கொண்டு வெற்றி பெற்றால்தான் அத்தொழிலை செய்யவே இயலும். அந்த நிலையில் யூதர்களை ஒரு குழுவுமே சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. அவர்களுக்கு கிடைத்த ஒரே தொழில் வட்டிக்கு கடன் கொடுப்பதுவே. அதிலும் அவர்கள் நல்ல முறையில் ஈடுபட்டு பணக்காரர்கள் ஆனாலும், அதற்காக வேறு வயிறெரிந்தனர் மற்றவர். கடன் தொகைகள் அதிகமானால் கடன் கொடுத்த யூதர்களை போட்டுத் தள்ளவும் அக்கால பிரபுக்கள் தயங்கவில்லை. உண்மை கூறப்போனால் சிலுவைப் போர்களின் ஆரம்பமே யூத வட்டிக் கடைக்காரர்களைக் கொல்வதுதான்.
இருந்தாலும் யூதர்களும் போராடினர். தங்களுக்கு நடந்தவற்றையெல்லாம் ஆவணப்படுத்தினர். அவற்றின் உதவியோடு புதிதாக அபாயம் உருவாவதை கண்டுகொண்டு தங்களைக் காத்துக் கொண்டனர்.
அமெரிக்க யூத எழுத்தாளர் லியோன் யூரிஸ் (Leon Uris) எழுதிய நாவல் மிலா-18 போலந்தில் வார்ஸா நகர யூதக்குடியிருப்பில் உள்ளவர்கள் நாஜிகளை எதிர்த்துப் போராடியது பற்றி விளக்கும் ஒரு காவியம். அதில் ஒரு ஜெர்மன் படைத் தலைவர் வார்சா தலைமை நிர்வாகியிடம் யூதர்களை பற்றிய தனது எண்ணங்களை இவ்வாறு வெளியிடுவார். (நினைவிலிருந்து மொழிபெயர்ப்பு செய்கிறேன்).
“நீங்கள் என்னவோ யூதர்கள் கோழைகள், அவர்களது இந்த எதிர்ப்பை ஓரிரு நாட்களில் நசுக்குவோம் என்கிறீர்கள். அது தவறான புரிதல். இப்போது பலருக்குமே தெரியாத விஷயம் என்னவென்றால் யூதர்கள் மிகுந்த போர்க்குணம் கொண்ட இனத்தவர். அவர்கள் போர் புரிய ஆரம்பித்தால் கடுமையாகவே அதை செய்வார்கள். மேலும் இந்த போராட்டம் பிற்காலத்தில் அவர்களது ஆவணங்களில் வரும், ஜெர்மனிக்கு தீராத அவமானம் தரும்”.
அப்படித்தான் நடந்தது. மேலே நடந்ததைக் கூறும் முன்னால் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்த்தம் - 28.06.2009 பதிவிலிருந்து சில வரிகளைத் தருகிறேன்.
„Wanderer, kommst du nach Sparta, verkündige dorten, du habest uns hier liegen gesehn, wie das Gesetz es befahl.
கி.மு. 480-ல் தெர்மோபைலே என்னும் இடத்தில் தங்களை விட பலமடங்கு அதிகம்பேரை கொண்ட பாரசீகப் படையினரை 300 பேர்களே இருந்த கிரேக்கப் படை எதிர்த்து போராடி அத்தனை பேரும் அழிந்த இடத்தில் உள்ள நடுகல்லில் மேலே கூறிய ஜெர்மானிய வாசகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. அதன் பொருள் பின்வருமாறு, “இதைப் பார்க்கும் நாடோடிகளே, நீங்கள் எங்கள் ஊரான ஸ்பார்ட்டாவுக்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள எங்களவரிடம் கூறுங்கள், நாங்கள் யாவரும் ஒருவர் விடாமல் எதிரிகளுடன் போராடி எங்களுக்கென விதிக்கப்பட்ட வீர மரணம் அடைந்தோம் என”. உலக சரித்திரத்தில் பல போர்கள் நடந்து விட்டன, நடக்கின்றன, நடக்கவும் இருகின்றன. ஆனால் இந்தப் போரும் அதை போன்ற வெகு சில போர்கள் மட்டும் இன்னமும் மக்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளன. வெற்றியா தோல்வியா என்பது இரண்டாம் பிரச்சினை. முக்கிய விஷயம் என்னவென்றால், மரணம் நிச்சயம் என அறிந்திருந்தும் கடைசிவரை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்வதே.
அவர்கள் கொல்லப்பட்டாலும் அவர்களது பெயர்கள் மக்கள் மனதில் வைக்கப்பட்டு பாடப்படும். அதே போல இஸ்ரவேலர்களது வரலாற்றில் மஸாடா என்னும் இடத்தில் நடந்த போரை இன்னமும் இஸ்ரவேல குழந்தைகள் போற்றுகின்றனர். அப்போரில் எல்லா யூதர்களும் இறந்தனர். அவ்விடத்தில் இன்னமும் இஸ்ரவேலர்கள் “மஸாடா இனிமேல் விழாது” என்னும் வீரச்சபதம் எடுக்கின்றனர். 1943-ல் போலந்து தலைநகரம் வார்சாவின் யூதக் குடியிருப்பை நாஜிகள் நாசமாக்கிய போது அவர்கள் எதிர்த்து போராடினர். அது April 19, 1943 - May 16, 1943 வரை நீடித்தது. 1939-ல் போலந்தின் அதிகாரபூர்வமான ராணுவம் கூட அவ்வளவு நாள் தாக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க யூத எழுத்தாளர் எழுதிய “மிலா 18” நாவலிலும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய “தி வால் (சுவர்)” என்னும் நாவலிலும் இது பற்றி பார்க்கலாம். இங்கும் போராளிகள் கடைசியில் கொல்லப்பட்டாலும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ளனர்.
அவ்வாறெல்லம் செய்தவர்கள் யூதர்கள். அவர்களது ஆவணப்படுத்தலாலும் விடாமுயற்சியாலும்தான் ஐ.நா. சபை யூத நாடு பாலஸ்தீனம் என இரு நாடுகளை உருவாக்கியது. அப்படியே உருவான யூத நாட்டை குழந்தையை தொட்டிலிலேயே கொல்வது போன்ற குரூரத்துடன் முயன்ற அரேபியன்களை மலத்தில் தோய்த்த செருப்பால் மாறி மாறி அடித்தனர் இஸ்ரவேலர்கள்.
ஒன்று நிச்சயம். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்ற நிலை வரவேண்டுமானால் நீங்கள் முதலில் உங்கள் தேவை என்னவென்று என உணர்ந்து, அதற்கான முழுமுயற்சியில் விடாமல் ஈடுபடவேண்டும். ஒரு போதும் அதைரியப்படக் கூடாது. அவ்வளவுதான் விஷயம்.
இதை ரோமா இனத்தவரும், நம் நாட்டில் தலித்துகளும் புரிந்து போராட முயல வேண்டும். அப்புறமும் பல கடினமான பரீட்சைகள் அவர்களுக்கு முன்னால் உள்ளன. ஆனால் முயல வேண்டும் என்ற எண்ணமே வராது முடங்கினால் எப்படி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
76 comments:
நாடார்களில் கணிசமானோர் இந்து மதத்தை தூக்கியெறிந்ததும் கூட நாடார்கள் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். கூடவே, "நாம் நாடார்" என்கிற புரிதலுடன் சாதி ரீதியிலான - சாதி அணிதிரட்டலும் நாடார் முன்னேற்றத்தின் பின்னணி ஆகும்.
அவ்வாறே, ஸ்ரீ நாராயண குருவின் வழிகாட்டுதலால், பார்ப்பனீயத்தை முற்றிலுமாக தூக்கியெறிந்து - பார்ப்பனர்களுடனான தொடர்புகள், மேலாதிக்கம் அனைத்தையும் அறவே மறுத்ததனாலும் முன்னேறிய சாதி ஈழவர்கள். "நாம் ஈழவர்" என்கிற புரிதலுடன் சாதி ரீதியிலான - சாதி அணிதிரட்டலும் ஈழவர் முன்னேற்றத்தின் பின்னணி ஆகும்.
அதாவது, உழைப்பு மட்டுமல்ல, ஆழமான சாதி உணர்வும், சாதி ஈடுபாடும், சாதி அணிதிரட்டலும் கூட இவர்களது முன்னேற்றத்திற்கு காரணமாகும்.
good post.from ur articles only,i was able to gather ample details about the jews.
i think perhaps arul has taken a vow to connect everything under the roof
to create illfeeling against brahminism.
@ராதாகிருஷ்ணன்
அதற்கென்ன செய்வது? அவர் பார்ப்பன வெறுப்பு என்பதை சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்டு வந்தவர் என நினைக்கிறேன்.
கூட இருப்பவர்கள் எல்லா கஷ்டத்துக்கும் பாப்பானே காரணம் எனச்சொல்லிச் சொல்லியே அவர் போன்றவர்களை வளர்த்திருக்கிறார்கள்.
தங்கள் சாதியினர் செய்யும் வன்கொடுமைகள், மேற்கொள்ளும் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை மூடி மறைக்க பார்ப்பனீயம் என்று பெரிசாக ஈயத்தைக் கலாய் பூசுகின்றனர்.
நாடார்கள் விஷயத்தில் அவர்கள் இந்து மதத்தை பெரும்பாலும் தூக்கி எறிந்ததே காரணம் என்று கூறியவர் அதே போல மதம் மாறி கிறித்துவர்களானாலும் தலித்துகளை வன்கொடுமை செய்வதில் சளைக்காத கிறித்துவ வன்னியர்கள் பற்றிச் சொன்னால் மட்டும் பம்முவார், கோபப்படுவார். ஏனெனில் அவரது ஸ்பான்சரான ராமதாசுவே வன்கொடுமை சட்டமே கூடாது என பேசுபவர். இவர் என்ன அவரை விட உயர்ந்தவராகி விடுவாரா?
தான் வன்னிய சாதி வெறியனாக நின்று என்னவோ பார்ப்பனர்தாம் சாதி வெறியர் என்பார்.
அப்படியானாலும் அவர் சாதி சனங்களே இன்னமும் திருமணம் போன்ற சடங்குகளுக்கு பார்ப்பனரை கூப்பிடுவதைத் தடை செய்யவியலாத கையறு நிலையிலேயே தான் இருப்பதாக அவர் எண்ணுகிறார் போலும். இங்கு தமிழ் நாட்டில் அவரைப்போலவே பல்லாயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். முரண்பாடுகளின் மூட்டைகள் இந்த அருள் படையாச்சிகள்.
என்னால் ஆனது என்னவென்றால், அவ்வப்போது அவர்கள் தத்தம் கொள்கையிலிருந்து சருக்கும்போது ஜெண்டிலாக சுட்டிக் காட்டுவதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ரோமா இன மக்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து நாடோடிக் கூட்டமாக ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள். அந்த மக்களின் தாயகம், வட இந்தியாவில், அல்லது இன்றைய பாகிஸ்தானில் இருந்திருக்க வேண்டும். அனேகமாக இஸ்லாமிய படையெடுப்புகளால் காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்திருக்கலாம். //
2000 வருஷத்துக்கு முன்னால் ஏது இஸ்லாம் மதம்
//2000 வருஷத்துக்கு முன்னால் ஏது இஸ்லாம் மதம்//
அவர் சொன்னதை மூன்று ஊகங்களாக பார்க்க வேண்டும் என நினைக்கிறேன், 1 அல்லது 2 அல்லது 3.
அவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் யாராவது டோண்டு ராகவன் மாதிரி சமீபத்தில் கி.பி. 1 எனக் கூறவார்கள் என எதிர்பார்க்கவா முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு சென்ற நாடார், ஈழவர் இடையே உள்ள ஒற்றுமையைதான் நான் எடுத்துக்காட்டினேன். இரண்டு சாதியினரும் பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை பெற்றனர், தாங்கள் சாதி அடிப்படையில் ஒன்றாகத் திரண்டனர். அதன் பின்னரே, அவர்கள் முன்னேற்றமடைந்தனர். வெறும் உழைப்பு மட்டுமே அவர்கள் விடுதலைக்கு போதுமானதாக இல்லை என்பதே எனது கருத்து.
மற்றபடி, குறிப்பிட்ட சில சாதியினர் உழைக்காத சோம்பேரிகளாக இருந்ததாகக் கூறுவது மோசமான சிந்தனை. மாறாக, அவர்கள் உழைப்பை மற்ற ஆதிக்க சாதியினர் சுரண்டினர் என்பதே உண்மை.
"நாடார்கள் சுயமுயற்சி செய்தனர், தலித்துகள் செய்தவை போதாது அவ்வளவே. கசப்பான, ஆனால் மறுக்க முடியாத உண்மை." என்கிற அற்புதமான கண்டுபிடிப்பை எடுத்துக்காட்டியிருக்கிறீகள். உழைக்காமல் ஊரார் உழைப்பாலேயே வளர்ந்த பார்ப்பனர்கள் இந்த கண்டுபிடிப்பை கூறுவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.
மாட்டில் கூட அதிகமாக உழைக்கும் அதிகமாக பால் கொடுக்கும் எருமை மாட்டைவிட, குறைவாக உழைக்கும் குறைவாக பால் கொடுக்கும் பசு மாடு உயர்வானது என்று பேசும் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள். கோவிலில் வேர்வை வடிய பெரிய மணியை அடிக்கும் பார்ப்பனர் அல்லாதோரைவிட, சின்ன மணியை ஆட்டும் பார்ப்பனர்கள் அதிகமாக பொருள் ஈட்டுவது உங்களுக்கு தெரிந்ததுதான்.
"முயல வேண்டும் என்ற எண்ணமே வராது முடங்கினால் எப்படி?" என்று அற்புதமாக ஆலோசனை தருகிறீகள்.
தயவு செய்து - ஒடுக்கப்பட்ட சாதியினர் உழைக்க முன்வருகிறார்களா? இல்லையா? நம் நாட்டில் உழைப்புக்கு என்ன மதிப்பு? என்பதை அறிய பின்வரும் நூலைப் படித்துப் பாருங்கள். உங்கள் கண்கள் திறக்கட்டும்:
தமிழில்: பானை செய்வோம் பயிர் செய்வோம் - நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு, விலை ரூ. 65
(TULIKA PUBLISHERS, 13 Prithvi Avenue, First Street, Abhiramapuram, Chennai 600 018, Phone 24981639/24671117)
ஆங்கிலத்தில்: Turning the pot, Tilling the land: Dignity of Labour in our Times, ரூ. 150
(Navayana Publishing, 155, Second Floor, Shahpur Jat, New Delhi 110049)
@அருள்
நீங்கள் சொன்ன அந்த ஒற்றுமையை அடையவும் பெரும் உழைப்பு தேவைப்படும். அது தலித்துகளிடம் இல்லை. அவர்களில் முன்னேறியவர்கள் ராம்நகரி படத்தில் வரும் மருத்துவர் போல தத்தம் சாதியினரிடமிருந்து விலகி நிற்கின்றனர்.
நாடார்கள் அப்படி இல்லை. இதுதான் உண்மை. தலித்துகளுக்கு உங்களைப் போல அவர்கள் மேல் வெறும் போலி பரிதாபம் காட்டுபவர்கள் தேவையில்லை.
கசப்பான உண்மையை எதிர்கொள்வதே முக்கியம். அதைத்தான் நான் கூறினேன்.
மற்றப்படி உழைப்பு என்றால் வெறும் உடல் உழைப்புதானா? அறிவு உபயோகித்து வேலைஉ செய்வதும் உழைப்பதுதான். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மணிக்கணக்கில் மொழிபெயர்ப்பு/துபாஷி வேலையில் ஈடுபடும் நான் செய்யாத உழைப்பா?
தன் கட்சியினர் தனக்காக தீ குளிக்கும்போது தன் மகனுக்கு மட்டும் மந்திரி பதவி வாங்கிக் கொடுக்க துடிக்கும் தலைவர்தான் தொண்டர்களின் உழைப்பில் உண்டு கொழிப்பவர். அவரைப் போன்றவர்களை திருத்தப் பாருங்கள்.
நான் அந்தத் தொண்டர்களுக்கு இம்மாதிரியான சுயநலம் பிடித்த தலைவர்கள் போலவே நீங்களும் சுயநலமாக எண்ணி அவரவர் குடும்பத்தை உயர்த்திக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு போகிறேன்.
நான் கூறுவது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் சரித்திர நிகழ்வுகள் அவைதான் உண்மை என்பதை ஊர்ஜிதம் செய்யும்
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //உழைப்பு என்றால் வெறும் உடல் உழைப்புதானா? அறிவு உபயோகித்து வேலை செய்வதும் உழைப்பதுதான். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.// //
உடல் உழைப்பு, அறிவு உழைப்பு இரண்டுமே மதிப்பு மிக்கதுதான். அதேசமயம், எந்த உழைப்பாக இருந்தாலும், அதனால் கிடைக்கும் பலனைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும். அந்த பலன் அடைப்படையிலேயே, உழைப்பவர்களின் முன்னேற்றமும் அமைய வேண்டும்.
காலம் காலமாக இந்த நாட்டில் பார்ப்பனர்கள் உழைத்த உழைப்பு - அதனால் இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த நன்மை, இவற்றைப் பட்டியலிட்டால், வெங்காயத்தை உரிப்பதால் கிடைக்கும் பலன் தான் மிஞ்சும்.
அதேசமயம், மற்றவர்களை ஏய்த்ததால், பார்ப்பனர்கள் அடைந்திருக்கும் பயன்களை பட்டியலிட்டால், அது எண்ணிக்கையில் அடங்காது.
இந்த கமெண்ட்கள் முற்றிலும் அருளுக்காக, மற்றவர்களும் படிக்கலாம்.
குறிப்பு இதில் ஒரு வார்த்தையைக் கூட நான் எழுதவில்லை. அருளுடைய பாணியிலேயே காப்பி அண்ட் பேஸ்ட்!.
//”ஐயா வணக்கம்” ”தமிழ்வணக்கம் தம்பி ” ”இல்லீங்க…நான் வேற” ”என்ன சொல்றீங்க தம்பி?” ”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்” ”நல்லா இருங்க…வாழ்க தமிழ்” ”அப்டிச்சொல்றீங்களா?”. ”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”. ”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப்ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”தாராளமா…வெல்க தமிழ்!”
”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா?” ”ஆமாந்தம்பி…நான் ஒரு தமிழியன்” ”சரிங்க..இப்ப பாத்தீங்கன்னா இந்த தமிழ்யர்னாக்க என்னங்க அர்த்தம்?”
”தமிழே மூச்சு என்று வாழ்கிறவர்கள் தமிழர் என்க” ”மூச்சுன்னாக்க இப்ப நீங்க விடுறமாதிரி இல்லீங்களா?” ”வெல்க தமிழ்!” ”சரிங்க…அய்ய இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னு சொல்றாங்க அதுக்கும் தமிழியர்ங்கிறதுக்கும் என்னங்க வித்தியாசம்?” ”தமிழரே தமிழியராக முடியும். ஆயின் தமிழரெல்லாம் தமிழியரல்ல.. தமிழணங்கின் சீரிளமைத்திரம் வியந்து தினந்தோறும் வாழ்த்தும் உள்ளங்களைச்சுட்ட சான்றோர் இட்ட பெயர் அது…” ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடணும்கிறீங்க?” ”உங்களுக்கு மேலே எதுனா சந்தேகம் இருந்தாக்க கேளுங்க தம்பி சும்ம அதுலயே போட்டு நோண்டாம..”
”அய்யா மன்னிக்கணும்..இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னாலே என்னான்னு பலருக்கு தெரியறதில்லை” ”உங்களுக்குத் தெரியுதா?” ”இல்லீங்க..அந்த பலரிலே நானும் ஒருத்தன்” ”சரியாப்போச்சு…தம்பி தமிழன் என்பவன் தமிழ்த்தந்தைக்கும் தமிழ்த்தாய்க்கும் பொறந்தவன்…” ”தமிழர்தந்தைன்னா பெரியார் அய்யா இல்லீங்களா?” ”இல்ல தம்பி இது வேற…. கவனியுங்க எவனொருவன் தமிழிலே பேசி தமிழிலே கற்று தமிழால் வாழ்கிறானோ அவனே தமிழன். தமிழ்ப்பகைவரை கருவறுக்க களம்புகக் காத்திருப்பவன் எவனோ அவனே தமிழன்”//
அன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா? ஆம். ஆனால் ஏன்?
படையெடுப்புகள் மற்றும் அடக்கு முறைகள்மூலம் உருவாக்கமுடியாத அதிகாரத்தை கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என அன்றைய மன்னர்கள் அறிந்திருந்தார்கள். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்துவராத, நிலத்தை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கே வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில்கள் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம்.
அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன. ஒன்று மதஞானம். இதைக்கொண்டு பிராமணர்கள் வெவ்வேறு வழிபாட்டு வழக்கம் கொண்ட மக்களை ஒன்றாக திரட்டினார்கள். இரண்டு, சோதிட ஞானம். இது விவசாயத்துக்குரிய வானிலை ஞானமாகவும் அன்றாட வாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது. மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.
பழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கிருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக் கள்வர்கள்கூட கொல்வதில்லை. அந்த மதிப்பை பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம். பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்.
சோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண்நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சைநிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே. அவ்வாறு நிலங்கள் ஊர்களாக ஆனபோது அங்கே கோயில்களை நிறுவி, அக்கோயில்கள் அனைத்திலும் ஒரேவகையான ஆகமமுறை பூசைகளை அமைத்து ,அவற்றை ஆற்ற பிராமணர்களை குடியமர்த்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இறுக்கமான ஒரு அமைப்பை ராஜராஜன் உருவாக்கினார். அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.
இந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச் செய்யக் கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழுக்க கல்விசார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.
ஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல. கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை[சமரசம் தூது] பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அகிம்சை மதங்கள் பேரரசுகளை உருவாக்க உதவாதபோது அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள்.
அதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான்.
நன்றி ஜெயமோகன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த கமெண்ட்கள் முற்றிலும் அருளுக்காக, மற்றவர்களும் படிக்கலாம்.
குறிப்பு இதில் ஒரு வார்த்தையைக் கூட நான் எழுதவில்லை. அருளுடைய பாணியிலேயே காப்பி அண்ட் பேஸ்ட்!.
//”ஐயா வணக்கம்” ”தமிழ்வணக்கம் தம்பி ” ”இல்லீங்க…நான் வேற” ”என்ன சொல்றீங்க தம்பி?” ”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்” ”நல்லா இருங்க…வாழ்க தமிழ்” ”அப்டிச்சொல்றீங்களா?”. ”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”. ”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப்ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”தாராளமா…வெல்க தமிழ்!”
”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா?” ”ஆமாந்தம்பி…நான் ஒரு தமிழியன்” ”சரிங்க..இப்ப பாத்தீங்கன்னா இந்த தமிழ்யர்னாக்க என்னங்க அர்த்தம்?”
”தமிழே மூச்சு என்று வாழ்கிறவர்கள் தமிழர் என்க” ”மூச்சுன்னாக்க இப்ப நீங்க விடுறமாதிரி இல்லீங்களா?” ”வெல்க தமிழ்!” ”சரிங்க…அய்ய இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னு சொல்றாங்க அதுக்கும் தமிழியர்ங்கிறதுக்கும் என்னங்க வித்தியாசம்?” ”தமிழரே தமிழியராக முடியும். ஆயின் தமிழரெல்லாம் தமிழியரல்ல.. தமிழணங்கின் சீரிளமைத்திரம் வியந்து தினந்தோறும் வாழ்த்தும் உள்ளங்களைச்சுட்ட சான்றோர் இட்ட பெயர் அது…” ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடணும்கிறீங்க?” ”உங்களுக்கு மேலே எதுனா சந்தேகம் இருந்தாக்க கேளுங்க தம்பி சும்ம அதுலயே போட்டு நோண்டாம..”
”அய்யா மன்னிக்கணும்..இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னாலே என்னான்னு பலருக்கு தெரியறதில்லை” ”உங்களுக்குத் தெரியுதா?” ”இல்லீங்க..அந்த பலரிலே நானும் ஒருத்தன்” ”சரியாப்போச்சு…தம்பி தமிழன் என்பவன் தமிழ்த்தந்தைக்கும் தமிழ்த்தாய்க்கும் பொறந்தவன்…” ”தமிழர்தந்தைன்னா பெரியார் அய்யா இல்லீங்களா?” //
இந்த கமெண்ட்கள் முற்றிலும் அருளுக்காக, மற்றவர்களும் படிக்கலாம்.
குறிப்பு இதில் ஒரு வார்த்தையைக் கூட நான் எழுதவில்லை. அருளுடைய பாணியிலேயே காப்பி அண்ட் பேஸ்ட்!.
//”ஐயா வணக்கம்” ”தமிழ்வணக்கம் தம்பி ” ”இல்லீங்க…நான் வேற” ”என்ன சொல்றீங்க தம்பி?” ”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்” ”நல்லா இருங்க…வாழ்க தமிழ்” ”அப்டிச்சொல்றீங்களா?”. ”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”. ”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப்ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”தாராளமா…வெல்க தமிழ்!”
”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா?” ”ஆமாந்தம்பி…நான் ஒரு தமிழியன்” ”சரிங்க..இப்ப பாத்தீங்கன்னா இந்த தமிழ்யர்னாக்க என்னங்க அர்த்தம்?”
”தமிழே மூச்சு என்று வாழ்கிறவர்கள் தமிழர் என்க” ”மூச்சுன்னாக்க இப்ப நீங்க விடுறமாதிரி இல்லீங்களா?” ”வெல்க தமிழ்!” ”சரிங்க…அய்ய இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னு சொல்றாங்க அதுக்கும் தமிழியர்ங்கிறதுக்கும் என்னங்க வித்தியாசம்?” ”தமிழரே தமிழியராக முடியும். ஆயின் தமிழரெல்லாம் தமிழியரல்ல.. தமிழணங்கின் சீரிளமைத்திரம் வியந்து தினந்தோறும் வாழ்த்தும் உள்ளங்களைச்சுட்ட சான்றோர் இட்ட பெயர் அது…” ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடணும்கிறீங்க?” ”உங்களுக்கு மேலே எதுனா சந்தேகம் இருந்தாக்க கேளுங்க தம்பி சும்ம அதுலயே போட்டு நோண்டாம..”
”அய்யா மன்னிக்கணும்..இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னாலே என்னான்னு பலருக்கு தெரியறதில்லை” ”உங்களுக்குத் தெரியுதா?” ”இல்லீங்க..அந்த பலரிலே நானும் ஒருத்தன்” ”சரியாப்போச்சு…தம்பி தமிழன் என்பவன் தமிழ்த்தந்தைக்கும் தமிழ்த்தாய்க்கும் பொறந்தவன்…”/
”அய்யா மன்னிக்கணும்..இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னாலே என்னான்னு பலருக்கு தெரியறதில்லை” ”உங்களுக்குத் தெரியுதா?” ”இல்லீங்க..அந்த பலரிலே நானும் ஒருத்தன்” ”சரியாப்போச்சு…தம்பி தமிழன் என்பவன் தமிழ்த்தந்தைக்கும் தமிழ்த்தாய்க்கும் பொறந்தவன்…” ”தமிழர்தந்தைன்னா பெரியார் அய்யா இல்லீங்களா?” ”இல்ல தம்பி இது வேற…. கவனியுங்க எவனொருவன் தமிழிலே பேசி தமிழிலே கற்று தமிழால் வாழ்கிறானோ அவனே தமிழன். தமிழ்ப்பகைவரை கருவறுக்க களம்புகக் காத்திருப்பவன் எவனோ அவனே தமிழன்”
”அப்டீங்களா? ஐயா இப்ப பாத்தீங்கன்னா நம்ம நாட்டிலே பலபேருக்கு தமிழ்ப்பகைவர்னாக்க என்னான்னே தெரியறதில்லீங்க…” ”உங்களுக்குத் தெரியுமா தம்பி?” ”இல்லீங்க…நானும் அதிலே ஒருத்தன்” ”தம்பி தமிழனுக்கு பகைவர்கள் பலர். வெளியூர்பகைவர்கள் உள்ளூர் பகைவர்கள் என அவர் இருவகை. வெளியூர்பகைவரை இனங்கண்டுகொள்ளுதல் எளிது. அவர்கள் தமிழருக்கு தண்ணீர் தரமாட்டார்கள்”
”அப்டீங்களா கர்நாடகக்காரங்களையும் மலையாளிங்களையும் தெலுங்குக்காரங்களையும் சொல்லலாமுங்களா?” ”சரியாகச் சொன்னீர்கள். தமிழரல்லாதாரெல்லாம் தமிழ்ப்பகைவரே என்பதே நம் ஆய்ந்தவிந்த கொள்கை” ”அய்யா இப்ப பாத்தீங்கன்னாக்க உள்ளூர் பகைவர்களைப் பற்றிச் சொன்னீங்க…”’ ”ஆமாம் தம்பி உள்ளூர் பகைவரை இனம்கண்டுகொள்ளல் மிக்க எளிது…அவர்கள் பூணூல் போட்டிருப்பார்கள்” ”போடல்லேன்னாக்க?” ”அவர்கள் தந்தையர் போட்டிருப்பார்கள்…அல்லது அவர்கள் பாட்டனார் போட்டிருப்பார்கள்…தம்பீ, இப்ப பாலாறுன்னு சொல்றோம். அங்க என்ன ஆறா ஓடுது….? எப்பவோ ஆறு ஓடின தடம்தானே அது?என்ன சொல்றீங்க?”
”சரியாச் சொன்னீங்கய்யா… இந்தத் தமிழ்ப்பகைவர்கள் என்ன செய்றாங்க?” ”பகைவர் என்ன செய்வாங்க? நாள்தோறும் தமிழரையும் தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்கும் திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள்… ” ”அப்டீங்களா? கேக்கவே ஆச்சரியமா இருக்குங்க” ”பின்ன? என்னதம்பி நீங்க? மீடியாவிலே இருக்கீங்க இதுகூட தெரியல்லீங்களா? தமிழ் அழிஞ்சுகிட்டு இருக்கு தம்பி ..இந்த தொலைககட்சிகள் வந்து நந்தமிழை அன்றாடம் கொன்றுகோண்டிருக்கின்றன…”
”அய்யா இப்ப பாத்தீங்கன்னா, இதுக்கு எதிரா நீங்க என்ன பண்றீங்க?” ”தம்பீ, பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார் பொங்குதமிழர்க்கின்னல் வந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு… பிரச்சினைன்னாக்க சங்க எடுத்துரணும்ல…நாங்க அதான் முழங்கிட்டிருக்கோம்…” ”எங்கய்யா?” ”டிவியிலேதான்…வேற எங்க? நீங்க நான் பேசுற நிகழ்ச்சியைப்பாக்கிறதில்லியா? சங்கே முழங்குன்னு ஓபனிங் சாங் கூட இருக்கே” ”இல்லீங்க…நான்லாம் டிவி பாக்கிறதில்லை.. நம்ம வேலைக்கே நேரம் சரியா போகுதுங்க” ”பாக்கணும்ல தம்பி?”
”அய்யா இன்னொரு கேள்வி…இப்ப தமிழர்கள் நடுவே தமிழுணர்வு அழிஞ்சுகிட்டிருக்கு இல்லீங்களா?” ”தமிழுணர்வே கெடையாது…புள்ளைங்களை கழுத்துப்பட்டி கட்டி சீருடை அணிவித்து ஆங்கிலப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள்… தமிழ்பேசத்தெரிந்த தமிழனே குறைந்துவருகிறான்” ”அதுக்கு காரணம் என்னன்னு நெனைக்கறீங்க?” ”தமிழ்ப்பகைவர்களான பார்ப்பனர்தான்..என்னதம்பி..இதையெல்லாம் கேக்கணுமா? அவனுங்க கான்வெண்டு ஸ்கூலுக்கு புள்ளைங்களை அனுப்பறதைப்பாத்துத்தானே நம்மாளுங்க அனுப்பறாங்க…”
”அப்டிச்சொன்னா எப்டீங்க? இப்ப எல்லாரும்தான் ஐடி துறைக்கு போகணும்னு ஆசைப்படறாங்க” ”அந்த ஆசை எப்படி வந்தது? தமிழ்ப்பகைவர் ஐடிதுறைக்குப்போய் சம்பாதிப்பதைக்கண்டுதானே நந்தமிழனும் நலம்கெட்டு அவ்வாறு எண்ணப்புகுந்தான்? எண்ணிப்பார்க்கவேண்டாமா நாம்?”
”அய்யா நீங்க சொல்றது ரொம்ப ஓவரா இருக்கிறமாதிரி இருக்குங்க….” ”இப்ப பாருங்க தம்பி நாம தமிழுடையான வேட்டியை ஏன் அணிவதில்லை?” ”ஏன்?” ”பார்ப்பனர்கள் வேட்டியை குறுக்காக எடுத்து கால்சட்டைபோல ஆக்கி அணிந்து கொண்டு அதை பஞ்சக்கச்சம் என்றார்கள். அதைக்கண்டுதானே தமிழரும் அறிவுகெட்டு அதேபோல அணிய விரும்பி இன்று கால்சட்டை அணிந்து கத்தரிக்கோல் போல நடக்கிறார்கள்? என்ன கொடுமை இது?”
”அய்யா…அப்டி சொல்லிட்டே போனா எப்டீங்க? இப்ப பாத்தீங்கன்னா உ.வே.சாமிநாதய்யர்தானே சங்க இலக்கியங்களை மீட்டுக்கொடுத்தார்? புஸ்தகத்திலே அப்டித்தானே போட்டிருக்கு?” ”தம்பி நீங்க சின்ன வயசு…பார்ப்பனச்சதியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இன்னும் பக்குவம் வரல்விலை…. இல்ல கேக்கிறேன்யா, உ.வே.சாமிநாதய்யர் ஏன் கஷ்டப்பட்டு புறநாநூறு அகநாநூறுன்னு நாநூறுகளா மீட்டுக்கொண்டாந்தார்? தமிழ்ப்பாடம் கஷ்டமா ஆகணும், தமிழ்ப் புள்ளைங்க தமிழ்படிக்காம ·பிரெஞ்சு லத்தீன்னு இரண்டாம் மொழி எடுத்துப்படித்து வீணாப்போகணும்னுதானே? சோழியன் குடுமி சும்மா ஆடாது தம்பி, சொல்லி வச்சிருக்காங்க. சாமிநாதனுக்கு தஞ்சாவூர்பக்கம்தான் நெனைப்பிலே வச்சுகிடுங்க”
”சரிங்க…இப்ப பாத்தீங்கன்னாக்க…பலபேர் இருந்திருக்காங்களே..பாரதியார்..” ”அவரு வெள்ளைக்காரன்கிட்ட சரண்டர் ஆனவர் தம்பி… அவர் என்ன எழுதினார்? நீங்க ஏன் அவரைப்படிக்கிறீங்க?பேசாம பாரதிதாசனைபப்டிங்க” ‘அவ்ரு வெள்ளைக்காரனை எதுத்தாருங்களா? ” அவரு ஏன் எதுக்கணும்? அவரு பாப்பானை எதுத்து எழுதினார்…”
”இல்லீங்க பாரதியார் நம்ம தேசிய கவிஞர்…. ” ”அவரு ஆரியனைப் புகழ்ந்து தமிழை இழிவுபடுத்தி எழுதினாரு… செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலேங்கிறாரு… தமிழைக் கேட்டா ராத்திரியிலே காதிலே எறும்பா கடிக்குதுன்னு எவ்ளவு வெஷத்தோட சொல்றான் பாத்தீங்களா? அவரு பாட்டையே பாருங்க…ஸ்வதேச கீதங்கள்னு சொல்றான்..தமிழை மொழிக்கலப்பால அழிக்கிறதுதானே அவனோட நோக்கம்? என்ன சொல்றீங்க?”
”அய்யா அப்டி பாத்தாக்க இப்ப பாரதிதாசன் கவிதை சொன்னீங்க..அதிலேகூட சங்காரம், நிஜம்னு வடமொழிச்சொல்லைத்தானே போட்டிருக்கார்?” ”பாத்தீங்களா நீங்களே சொல்லிட்டீங்க….பாரதிதாசன் யாரு? சுத்த தமிழ்க்கவிஞன் .. அவரோட மொழியையும் கலப்பு மொழியா ஆக்கி அவரையும் கெடுத்தது யாரு? நல்லா சிந்திச்சுப்பாக்கணும் நீங்க”
”அய்யா எனக்கு ஒண்ணுமே புரியல்லீங்க…” ”பாத்தீங்களா தம்பி இன்னைக்கு இப்டி ஒரு ஊடகத்துறையிலே இருக்கிற உங்களுக்கே ஒண்ணும்புரியாம அடிச்சிருக்காங்கன்னா அவங்களோட வலிமை என்னன்னு நாம பாக்கணும். உங்களையே முட்டாளா ஆக்கிட்டான் பாத்தீங்களா? ஒண்ணும்புரியாத கேணையனா ஆக்கிட்டு போய்ட்டான் பாத்தீங்களா?” ”அய்யா நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்…” ”பாத்தீங்களா ஒருபேச்சுக்குச் சொல்ற ஆளா உங்கள ஆக்கிட்டானுக..” ”அய்யா…”. ”சரி சரி…”
”அய்யா..அத விடுங்க. இப்ப பாத்தீங்கன்னாக்க நெறையபேர் இருக்காங்களே…கல்கி ,சாண்டில்யன்,நா.பார்த்தசாரதி…இப்ப தமிழ் மன்னர்களோட கதையை எல்லாம் கல்கிதானே எழுதினார்? ராஜராஜசோழன், மாமல்லன் எல்லாரைப்பத்தியும்?” ”ஆமா எழுதினார்.எதுக்கு? எதுக்கு எழுதினார்?நல்லா யோசிச்சுப்பாக்கணும்…” ”எதுக்குங்க?” ”தமிழனை முட்டாளா ஆக்கறதுக்கு! தலைகாணி தலைகாணியா அவனுக எழுதற சரித்திரத்தையெல்லாம் தமிழன் படிச்சுட்டு ஒக்காந்திட்டிருப்பான். அவன் ஆங்கிலம் படிச்சு அமெரிக்காவிலே வேலைக்குப் போவான்…என்ன தந்திரம் பாத்தீங்களா?”
”அய்யா பார்ப்பனர்கள் ஏன் அப்டிச்செய்யணும்? அவங்களுக்கு இதனாலே என்ன லாபம்?” ”ஏன்னா தமிழரை ஒழிக்கணும்னு அவங்க திட்டம் போடுறாங்க…ஏன்னா தமிழருக்கு அவங்கதான் பகைவருங்க. கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவேன்னு பாரதிதாசன் சும்மா பாடிடலை…சாதிவெறி…சாதிவெறியாலே அப்டிச்செய்றாங்க”
”ஆனா அவங்களைத்தவிர மத்த சாதிங்க தானே சங்கம்லாம் வச்சு தீவிரமா இருக்காங்க?” ”தமிழன் இன உணர்வுகொள்ளும்போது அப்படித்தான் சங்கம் வைப்பான்.. அந்தக்காலத்திலேயே மதுரையிலே சங்கம் வச்சவங்க தமிழருங்க….” ”இன உணர்வுன்னாக்க சாதி உணர்வுங்களா?” ”இன உணர்வுன்னா திராவிடஇன உணர்வு..நாமெல்லாம் திராவிட இனம்…கன்னடமும் களித்தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்….பாட்டிலே கேட்டிருப்பீங்க…” ”அவங்கள்லாம் நமக்கு தண்ணி தராதவங்கள்ல?” ”ஆமா..தமிழ்ப்பகைவர்கள் தமிழரோட ஒண்ணாச்சேந்தா திராவிடஇனம்னு சுருக்கமா புரிஞ்சுக்கலாம்”
”வேண்டாங்க…நான் புரிஞ்சுக்கறதையே விட்டாச்சு…எதுக்குங்க வம்பு..நீங்க சொல்லுங்கய்யா…இப்ப தமிழர் இப்டி சாதிகளா பிரிஞ்சு கிடக்கிறதனாலேதானே சாதிக்கலவரம் வருது?” ”தம்பி இப்பதான் நீங்க விஷயத்துக்கே வறீங்க. ஆதித்தமிழனை சாதித்தமிழனா ஆக்கினது யார்? யார் சொல்லுங்க தம்பி?”
”சரி, அவங்கன்னு வச்சுக்குவோம்…அப்ப இந்த நாடார் தேவர் வன்னியர் எல்லா அடையாளத்தையும் நாம விட்டுடலாமே…” ”தம்பி என்ன சொல்றீங்க? அதெல்லாம் தமிழரோட பண்பாட்டு அடையாளங்கள்…நந்தமிழரோட இனச்சின்னங்களே அதெல்லாம்தானே? அதை விட்டுட்டா அப்றம் தமிழருக்கு என்ன மிச்ச்சமிருக்கு சொல்லுங்க…” ”ஆனா இப்டி சாதி அடையாளத்தோட இருந்தா சண்டை வந்திருதே” ”வருமே…வரணும்ணுதானே நால்வருணமா நம்மையெல்லாம் பிரிச்சான் பார்ப்பனன்?”
”அய்யா கடைசியா ஒரு கேள்வி” ”கேளுங்க தம்பி, நீங்க இன்னைக்கு முழுக்க கேட்டுகிட்டே இருந்தாலும் நம்ம கிட்ட வரலாற்றுபூர்வமான பதில்கள் இருக்கு” ”இல்லீங்கய்யா..தமிழர்களோட கெட்ட விஷயங்கள்லாம் பார்பப்னர்களாலேதான் வந்திருக்கு?” ”ஆமாம் ..அதிலென்ன ஐயம்?” ”இல்லீங்கய்யா இப்ப பாத்தீங்கன்னா தமிழர்களோட கெட்ட விஷயங்கள்ளிலே ஏதாவது ஒண்ணாவது தமிழராலேயே வந்தது இருக்குங்களா?” ”அதென்ன தம்பி அப்டி கேட்டுட்டீங்க? இல்லாம இருக்குமா? ஒண்ணு இருக்கு…அந்த கெட்ட விஷயம் தமிழராலேயே வந்ததுதான்” ”அது என்னங்கய்யா? ”பார்ப்பனர்களை நம்புற கெட்ட பழக்கம்தான்…”
”அய்யா இப்டி எதுக்கெடுத்தாலும் ஒரு சிறுகூட்டத்தை குறைசொல்ற பழக்கம் சரியா ? தெரியாம கேக்கிறேன்…தப்பா நெனைக்காதீங்க” ”தம்பீ, இப்டி எதுக்கெடுத்தாலும் அவங்களையே குறைசொல்ற ஆளுங்களா நம்மள ஆக்கிவச்சிருக்கங்க பாருங்க…எவ்ளவு கொடுமை…நம்ம எனத்துமேலேயே செலுத்தப்பட்ட வன்முறை இல்லீங்களா இது? சொல்லுங்க”
”வணக்கம்ங்கய்யா … நேயர்களே நீங்கள் இதுவரை கேட்டது தமிழியர் அறி.இல.அருளப்பன் அவர்களுடன் ஒரு நேர்காணல். நடத்தியவர் பிரபு வெங்கடேஷ். வணக்கம்.”
நன்றி!. திரு. ஜெயமோகன்
ஜெயமோகனுக்கான சுட்டி http://www.jeyamohan.in/?p=8712
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்! ஒரே கமெண்ட் பல தடவை வந்துடிச்சி!. மன்னிக்கவும்.
பரவாயில்லை நல்லதந்தி. மட்டுறுத்தும் போதே பல எக்ஸ்ட்ரா காப்பிகளை தவிர்த்தேன், அப்படியும் மிஞ்சியவற்றை பின்னால் நீக்கி விட்டேன்.
பை தி வே, நீங்கள் கோட் செய்த ஜெயமோகனின் எழுத்தின் சுட்டி: http://www.jeyamohan.in/?p=1314
அன்புடன்,
டோண்டு ராகவன்
// நல்லதந்தி said...
டோண்டு சார்! ஒரே கமெண்ட் பல தடவை வந்துடிச்சி!. மன்னிக்கவும்.
//
நல்ல தந்தி. உங்க கமெண்ட் பதிவ விட பெருசு. ஆனா இதையே ஒரு நாடகம் மாதிரி எழுதியிருக்கலாம்
// //அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன.....
....மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.// //
வெரி குட்....
சூத்திரனுக்கு சொத்துவைத்து கொள்ளவோ, திருமணம் செய்து கொள்ளவோ உரிமை இல்லை என்று சொன்ன மனுதர்ம சாஸ்திரம்தானே அது? அதை இன்றக்கும் போற்றவேண்டும், பின்பற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை?
வாழ்க ஜெயமோகன், வாழ்க டோண்டு, வாழ்க நல்லதந்தி....
//நல்ல தந்தி. உங்க கமெண்ட் பதிவ விட பெருசு. ஆனா இதையே ஒரு நாடகம் மாதிரி எழுதியிருக்கலாம்//
அதைத்தானே ஜெயமோகன் செஞ்சாரு. அங்கிருந்துதானே நல்லதந்தி அதை கோட் செய்துள்ளார்?
பார்க்க: http://www.jeyamohan.in/?p=1314
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சூத்திரனுக்கு சொத்துவைத்து கொள்ளவோ, திருமணம் செய்து கொள்ளவோ உரிமை இல்லை என்று சொன்ன மனுதர்ம சாஸ்திரம்தானே அது? அதை இன்றைக்கும் போற்றவேண்டும், பின்பற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை?//
என்ன உளறல்? அவ்வாறு நான் ஆசைப்பட்டால் நாடார்களை வியந்தோதுவேனா? தலித்துகளையும் அவர்களைப் பின்பற்றுமாறு கூறுவேனா?
இன்னும் தலித்துகள் தங்கள் தெருக்களில் செல்லும்போது செருப்பு போடலாகாது, சைக்கிளை தள்ளியவாறுதான் செல்ல வேண்டும் என்றெல்லாம் உதார் விடும் வன்னிய மற்றும் பிற வன்கொடுமையாளர்கள்தான் அவ்வாறு ஆசைப்படுகிறார்கள்.
ஒழிக அவர்களது வன்கொடுமைக்கான மனநிலை.
டோண்டு ராகவன்
// //இன்னும் தலித்துகள் தங்கள் தெருக்களில் செல்லும்போது செருப்பு போடலாகாது, சைக்கிளை தள்ளியவாறுதான் செல்ல வேண்டும் என்றெல்லாம் உதார் விடும் வன்னிய மற்றும் பிற வன்கொடுமையாளர்கள்தான் அவ்வாறு ஆசைப்படுகிறார்கள். ஒழிக அவர்களது வன்கொடுமைக்கான மனநிலை.// //
இந்த விஷயத்தில் எனது நிலைபாடும் அதுவேதான். தலித்துகளின் உரிமையை மறுக்கும் மற்ற சாதியினர் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.
அதுபோலவே, சம தகுதியிருந்தும் - பார்ப்பன அர்ச்சகர்கள் நுழையும் கோவில் கருவரைக்குள், பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் நுழையக்கூடாது என்று உதார் விடும் பார்ப்பன சாதி வெறியர்களை நீங்கள் கண்டிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒழிக அவர்களது வன்கொடுமை மனநிலை
அர்ச்சகர்களாக தகுதி பெற்றவர்களை அனுமதிக்க மறுப்பவர்களை நானும் கண்டிக்கிறேன், அவர்கள் பார்ப்பனராக இருந்தாலும். இதில் சமரசமே கிடையாது.
கேஸ் நடக்கிறது. நல்ல தீர்ப்பே வந்து தகுதி பெற்ற எல்லோரும் கருவறைக்குள் செல்லும் உரிமை வரவேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சூத்திரனுக்கு சொத்துவைத்து கொள்ளவோ, திருமணம் செய்து கொள்ளவோ உரிமை இல்லை என்று சொன்ன மனுதர்ம சாஸ்திரம்தானே அது? அதை இன்றக்கும் போற்றவேண்டும், பின்பற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை?//
ஸ்ஸ்ஸ்ஸப்பா! அருள் உங்களுக்கு என்ன சொன்னாலும் ஒன்று,புரியப் போவதில்லை. அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். இல்லாவிடில் புரிந்தாலும் ஒத்துக் கொள்ள விரும்பாதிருக்க முயலுகிறீர்கள்.
இந்து மதத்தில் ஜாதிகள் குழுக்கள் மட்டுமே. வர்ணங்கள் மட்டுமே நான்கு. இந்த நான்கு வர்ணங்களும் அனைத்து ஜாதியினருக்குமே பொருந்தும். ஒரு ஜாதியில் இருப்பவன் நன்கு வேதங்களைப் படித்து இருந்தால் அவன் தானாகவே பிராமண வர்ணத்திற்க்கு போய்விடலாம். இப்படியே மற்ற வர்ணங்களும் அமையும்.இப்படி இருந்ததுதான் இதிகாசக் காலம்.இப்போதும் அதுதான் வேறு ரூபத்தில் நடக்கிறது. நன்கு படித்த தாழ்த்தப் பட்டவரின் நிலை, படிக்காத பிராமணனின் நிலையை விட உயர்ந்த நிலையை அடைகிறதா இல்லையா?.
நல்லதந்தி said...
// //ஒரு ஜாதியில் இருப்பவன் நன்கு வேதங்களைப் படித்து இருந்தால் அவன் தானாகவே பிராமண வர்ணத்திற்க்கு போய்விடலாம்.// //
ஸ்ஸ்ஸ்ஸப்பா!
உங்களது லட்சக்கணக்கான புராண இதிகாசங்களில் இருந்து இதற்கு ஒரே ஒரு உதாரணம் காட்டுங்களேன் பார்ப்போம். (அதாவது, இந்து மதத்தில் ஒரே ஒருவராவது சாதி மாறினதற்கு ஆதாரம், வரலாறு உண்டா?)
""பகவத் கீதை""
""""கண்ணன்: குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.
அர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்?
கண்ணன்: குலம் முழுவதிலும் அதர்மம் பரவும்.
அர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்?
கண்ணன்: அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்
அர்ச்சுனன்: குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்?
கண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.
அர்ச்சுனன்: இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா?
கண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல, அக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,(சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்(பிதுருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன.
அர்ச்சுனன்: கண்ணா! குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்?
கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.""""
க்ஷத்திரியரான விஸ்வாமித்திரர் பிரும்மரிஷியானார், பிராம்மணராக பிறந்த துரோணர் க்ஷத்திரியனாக கடமைகளைச் செய்தார்.
செம்படவ்ப் பென்ணின் புதல்வர் வியாசர். மனு பார்ப்பனர் அல்ல.
அந்தந்த காலங்களுக்கான கோட்பாடுகள் உண்டு. அவற்றை பின்னர் வரும் காலங்களின் ஸ்கேலுக்கு வைத்து பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சும்.
அதெல்லாம் இருக்கட்டும், பதிவின் முக்கிய விஷயத்துக்கு வாருங்கள். தலித்துகள் முன்னேற வேண்டும் என நான் ஆசைப்பட்டு யோசனைகள் கூறுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
யூதர்களது ஒப்பிஒடல் ரோமா இனத்தவருடன், அது பற்றி உங்கள் கருத்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்களது லட்சக்கணக்கான புராண இதிகாசங்களில் இருந்து இதற்கு ஒரே ஒரு உதாரணம் காட்டுங்களேன் பார்ப்போம். (அதாவது, இந்து மதத்தில் ஒரே ஒருவராவது சாதி மாறினதற்கு ஆதாரம், வரலாறு உண்டா?)//
அருள் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிஜமாகவே நீங்கள் முட்டாளா அல்லது முட்டாளைப்போலவே நடிக்கிறீர்களா என்பது தெரியவில்லை.
நான் ஜாதிக்கும் வர்ணத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ள பின்னூட்டத்தை படிக்காமலேயே அல்லது படித்தும், அதிலிருந்தே ஜாதி யாராவது மாறியதாக சரித்திரம் உண்டா என்று கேட்கிறீர்களே எப்படீ?.நான் எங்கே ஜாதி மாறியதாக குறிப்பிட்டு இருக்கிறேன். வர்ணங்கள் மாறமுடியும் என்றுதானே குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு சரியான விளக்கம் டோண்டு தந்திருக்கிறார்.
இப்போதும் சொல்கிறேன். இந்து மதத்தில் ஜாதிகள் என்பது குழுக்கள் ஆகும். ஒரு ஜாதியிலேயே பல உட் பிரிவுகள் இருப்பதற்கான காரணமும் அதுவே. வர்ணங்கள் என்பது ஒருவனது இயல்பையும்,மனதையும், பொறுத்து அவனாக அமைத்துக் கொள்வதாகும். முற்காலத்தில் இப்படி இருந்தது பிற்காலத்தில் ஜாதியினுள் நுழைக்கப் பட்டது.
//நன்கு படித்த தாழ்த்தப் பட்டவரின் நிலை, படிக்காத பிராமணனின் நிலையை விட உயர்ந்த நிலையை அடைகிறதா இல்லையா?// இதற்கு பதில் என்ன?
இதிகாச காலத்திற்குப் பிற்கும் கூட வர்ணம் மாறிய உதாரணம் உள்ளது.
முற்கால பல்லவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டகாலத்தில் காஞ்சிக்கு வேதம் படிக்கச் சென்ற மயூர சர்மன் என்ற பிராமண இளைஞன், அங்கு ஒரு பல்லவ வீரனால் அவமதிக்கப் பட்டதால், பல்லவர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களுடைய ஆளுகையில் இருந்த சில பகுதிகளைக் கைப்பற்றி அரசனானன். அவன் புதிய அரச வம்சத்தையே உருவாக்கினான்.அதற்கு கடம்ப வம்சம் என்ற பெயர். மயூரசர்மன்.மயூர வர்மன் ஆனான். வர்மன் என்பது சத்திரியப் பட்டம்.இதே போல அசோகனுக்குப் பின்னர் மௌரியர்களை ஒடுக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய புஷ்யமித்ர
சுங்கன் ஏற்படுத்திய சுங்க வம்சம், அந்த சுங்க மரபை ஒழித்துக்கட்டிவிட்டு
ஆட்சியைப் பிடித்துக்கொண்ட 'கண்வ வம்சம்' ஆகியவை எல்லாமே
பிராமண மரபுகள்தாம். கடைசியாக சிவாஜியும் சத்திரியர் அல்ல்ர் என்பதும் அவர் மன்னராகி சத்திரபதி என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டதும் அருளுக்குத் தெரிந்த விஷயம் தானே!. ஆகவே வர்ணம் மாறலாம் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர் என்று நம்புகிறேன்.
உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவா விவாகம் போன்றவற்றை ஆதரித்துப் போர் நடத்தியவர்கள் ப்ராமணர்கள்!
வேதத்திற்கு நிகராக தமிழ் மொழியில் 'திராவிட வேதம் ' என்ற திவ்யப் பிரபந்தத்தை உருவாக்கியவர்களும் ப்ராமணர்கள்!
வேதத்தை வெளியே சொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி உடைத்து திருக்கோட்டியூர் மதில் மீதி நின்று வேதகீதம் கிளப்பிய புரட்சிக்காரர் ராமானுஜர்.
நாய்களோடு திரிந்த சண்டாளனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட ஆதிசங்கரர் பிராமணரே!
ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் ப்ராமணர்களே!
வான சாத்திரத்தில் பலநூறு ஆண்டுகளூக்கு முன்பு சீரிய சிந்தனையைப் படைத்தது ஆரியப் பட்டரே! அரசியலில் சாத்திரங்களை இயற்றியதும் அவர்களே! சர்.சி.வி ராமனும் பிராமணனே. கணக்கு மேதை ராமானுஜமும் பிராமணனே!
(செக்ஸி) பால் உறவுகளையும் இலக்கணமாக்கிச் சொன்னதும் வாத்ச்யாயனர் என்ற பிராமணரே!
அண்மைக் காலத்தில் - கம்யூனிசத்தை இந்தியாவில் பரப்பியவர்களும் பிராமணரே!
காந்தியாருடன் பணியாற்றிக் கொண்டே நாத்திகம் பேசிய 'கோரா 'வும் பிராமணரே!
பி.ஆர்.அம்பேத்கார் என்ற புரட்சிக்காரரின் பெயரிலுள்ள 'அம்பேத்கார் ' அவரை ஆதரித்து வளர்த்த பிராமணரின் பெயரே!
காந்தியார் என்ற வைசியரின் மகனுக்குத் தனது திருமகளைத் தந்த பிராமணர்தான் மூதறிஞர் ராஜாஜி.
முதல் உலகப்போரில் இந்தியர்கள் பிரிட்டனுக்கு ஒத்துழைத்தால், யுத்தம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்து, பின்னர் போருக்கு ஒத்துழைத்த இந்தியர்களை ரௌலட் சட்டம் என்ற கடுமையான அடக்கு முறை சட்டம் இயற்றி ஏமாற்றிய வெள்ளைக்காரர்களை ராஜியப் பிரதிநிதி சபையில் கடுமையாக எதிர்த்து வாதிட்டு காந்தியடிகளிடமும் பாராட்டுப் பெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாச சாஸ்திரி பிராமணரே!
தமிழைப் பேணிக் காப்பதிலும் பிராமணர்கள் முன்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்!
தமிழின் முதல் முனியான அகத்தியனே பிராமணன்தான்! தொல்காப்பியரைக் கூட அப்படிக் கூறுவதுண்டு! தமிழின் அழகிய பனுவல்கள் அவர்களால் ஆக்கப்பட்டதுண்டு! வடமொழிக்கு நிகரான தமிழ் இலக்கணங்களை - இலக்கியங்களை ஆக்கிட முனைந்து நின்றவர்களும் அவர்களே!
தமிழனே முதலில் தோன்றிய இனம்; குமரிக் கண்டத்து நாகரீகமே - முதல் நாகரீகம் என்று ஆதாரத்தோடு பேசியவர்கள் ராகவ ஐயங்காரும் சீனிவாச ஐயங்காரும்.
அழிவு நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை ஊர் ஊராக அலைந்து திரிந்து யாசகம் கேட்டு ஓலைச் சுவடிகளைத் திரட்டி எட்டுத் தொகை , பத்துப்பாட்டு என்று இலக்கியங்கள் அனைத்தையும் புத்தகத்தில் அச்சேற்றி தமிழுக்கு பெரும் தொண்டாற்றியவர் உ வே சுவாமிநாத ஐயர் என்ற பிராமணரே. இல்லையேல் இன்றைக்கு தமிழினத்திற்க்கே தாம் தான் தலைவன் என்று கிரயப் பத்திரம் காட்டுபவர்களும், புலியை முறத்தால் அடித்த பெண்மனி பற்றி வாய்கிழிய வீரம் பேசி கூடவே பிராமண எதிர்ப்பும் பேசும் வாய்ச் சொல் வீரர்களுக்கு தமிழ் வீரம் பேச புறநானூறு ஏது?.
தமிழ் சினிமாவில் பிராமணர்கள்-பாகம் 2
சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் இயக்கத்தின் தூண் பரிதிமாற் கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி.
தமிழ்க் கவிதையுலகில் புரட்சி செய்த பாரதியாரும் பிராமணரே! இன்றைக்கும் புதுக்கவிதை என்ற புரட்சியைச் செய்யும் சி.சு.செல்லப்பாவும் பிராமணரே!
காண்டேகரைத் தமிழுக்குத் தந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், சகல கலா வல்லவராய் இருந்து அகில இந்தியப் பத்திரிகையுலகில் சாதனை புரிந்த கல்கியும் வாசனும் பிராமணர்களே!
வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைக் காத்து நிற்பவர்களூம் அவர்களே!
வெளிநாட்டுக்குச் சென்றால் அந்த நாகரீகத்தை ஏற்காமல்... நமது நாகரீகம் காத்து, விடாப்பிடியாக வீடுகளில் தமிழ்பேசும் குடும்பங்களும் பிராமணக் குடும்பங்களே!
தமிழில் புரட்சி செய்து - விஞ்ஞானக் கருத்துகளை - புதுமைக் கருத்துகளைத் துணிவுடன் சொல்லிவரும் சுஜாதா போன்றவர்களும் பிராமணர்களே!
முகலாய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தென்னாட்டில் நுழைய விடாமல் ஹரிஅரபுக்கர்களை உருவாக்கிய வித்யாதரரும் பிராமணரே!
தென்னாட்டுப் போர்க்களங்களில் வீரசாகசம் நிகழ்த்தி - மைசூர் அரசை நடுநடுங்க வைத்த திருமலை நாயக்கரின் படைத் தளபதி ராமப்பையர் பிராமணரே!
வெள்ளையனை எதிர்த்த சுதந்திரப் போரில் (வட நாட்டில்) பிராமண மன்னர்களூம், தளபதிகளும் இருந்தார்கள்.
தென்னாட்டில்... பகத்சிங்குக்கு முன்பு மணியாச்சி ஸ்டேஷனில் வெள்ளைக்காரனைத் துப்பாக்கியால் சுட்ட வீரனான வாஞ்சிநாதன் - பிராமணனே!
வெள்ளையரை கிடுகிடுக்க வைத்த ஆயுதப் புரட்சியைத் தமிழகத்தில் நிகழ்த்தியவர் வ.வே.சு. அய்யர்.
திருப்பூர் குமரனின் குருவாய் இருந்து போலீஸ் தடியடிக்கு ஆளாகி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகளில் முறிவு ஏற்பட்ட திருப்பூர் பி.எஸ். சுந்தரம் பிராமணரே.
1938 இந்தி எதிர்ப்புப் போரில் துணிவாக ஈடுபட்டவர் சி.வி.ராஜகோபாலாச்சாரியார்!
1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமது போலீஸ் வேலையைத் தூக்கி எறிந்த போலீஸ் வெ.கண்ணனும் பிராமணரே!
இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்து வீரப்பதக்கம் பெற்ற தமிழர்களில் பலர் - செங்கற்பட்டு சென்னை மாவட்டங்களைச் சார்ந்த பிராமணர்களே!
இப்போதும் மார்வாடிகளை எதிர்த்து - வட்டி வாங்குவதை எதிர்த்து சிறை புகுந்து கடுமையான வீரப்போர் நிகழ்த்துகின்ற மாவீரன் எம்.கே. சீனிவாசனும் பிராமணரே!
இதுமட்டுமில்லை; நவீன - மார்டன் துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். புதிய பாஷன்களை, புதிய டிசைன்களை விரும்பி ஏற்பதும் பிராமணர்களே!
மீசை வைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதம்; ஆனால் மீசையோடு தாடியும் வைத்து அழகாகப் பவனி வருபவர்கள் பிராமணர்கள்!
மடிசார் அதிகமாக இல்லை; மேக்சி - பெல்பாட்டம் - ஜீன்ஸ்தான் அதிகம்!
உடையில் - உணவில் - பழக்கவழக்கத்தில் மட்டுமில்லாமல் மன ஒப்பனையிலும் (மெண்டல் மேக்கப்) அவர்களுக்கு பழைய பஞ்சாங்கத் திமிர்த்தனம் கிடையாது! மேல்மதிப்பு என்ற மமதை இல்லை!
இந்த நிலையில் அந்தப் பிராமணர்களை என்ன செய்தோம் ?
அரசியலில் - சமுதாயத்தில் - அரசுப் பணிகளில் பல்வேறு குறுக்கு வழிகளில் தள்ளி வைத்தோம் ?
அரசுப் பணிகளை விட்டு அவர்கள் தனியார் நிறுவனங்களில் - அயல்நாடுகளில் பிழைப்பைத் தேடி அலைந்து வாழ்கிறார்கள்.
கர்நாடகமான நிலையிலிருந்து பிராமண சமுதாயம் காஸ்மாபாலிட்டன் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இனியும் நாம் கர்நாடகத்தனமான வெறுப்பிலும் - ஒதுக்குதலிலும் இருக்கத் தேவை இல்லை!
மனந்திருந்திய மகனாக (பிராக்டிகல் சன்) மதித்து, ஏற்றுத் தரவேண்டியதைத் தந்தாக வேண்டும்.
1967-ம் ஆண்டு முதல் பிராமண சமுதாயத்துக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.
ஆட்சி பீடத்திலிருந்து அவர்கள் 13 ஆண்டு காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
13 ஆண்டு காலம் அவர்கள் ஆளப்படுபவராய் இருந்தது போதும். இனிவரும் அமைச்சரவையில் பிராமணர் ஒருவர் அமைச்சராக வரவேண்டும்.!
நூற்றுக்கு 3 சதவிகிதம் பிராமணர் என்பது உண்மைதான். ஆனால் நூற்றுக்கு அரை சதவிகிதம் கூட இல்லாத இசை வேளாளர்கள் முதலமைச்சராய் இருக்கலாம்; ஒரு சதவிகிதம் கூட இல்லாத சமுதாயத்தினர் அமைச்சர்களாக இருக்கலாம்.
மூன்று சதவிகித பிராமணர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி இல்லை இல்லை என்றால் இதுதான் சமூக நீதியா ?
ஆக இந்த முறை பிராமணர்களுக்கென்று அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும்.
சாதி அடிப்படையில் அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறபோது அவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு ?
இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்டால் சுயநலம். நாங்கள் கேட்கிறோம். பொதுநலத்தின் பெயரால் கேட்கிறோம்.
பிராமணரே அமைச்சரவையில் கூடாது என்றால் இந்தியாவின் பிரதம மந்திரியாக இந்திரா காந்தி எப்படி இருக்க முடியும் ? அவரும் பிராமண குலத்தைச் சார்ந்தவர் தானே ?
நிதி அமைச்சராக ஆர்.வெங்கறாமன் எப்படி இருக்க முடியும் ?
அந்தப் பிராமணத் தலைவர்களின் தலைமையில் நடக்கும் இந்திரா காங்கிரஸ் ஆட்சியை - கட்சியை எப்படி ஆதரிக்கிறார்கள் ?
பிராமண மந்திரிகள் தமிழ்நாட்டுக்குக் கூடாது என்றால் இந்தியாவுக்கும் கூடாது! அவர்களது கட்சியைத் தேர்தலில் ஆதரிக்கவும் கூடாது! செய்வார்களா ?
அத்தைக்கு மீசை முளைத்து - குதிரைக்குக் கொம்பு முளைத்து கருணாநிதி-இ.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால்...
ஆகவே, பிராமண மந்திரி தமிழகத்திற்கு வருவது தவிர்க்க முடியாதது. மனம் ஒப்பி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கருணாநிதி மெளனம் சாதிக்கலாம். நீதி தேவனான வள்ளல் - இதயம் பேசுகிறது இதழுக்குப் பேட்டி அளித்த போது -
'அண்ணா நகரில் ஹண்டே வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் கிடைப்பார் ' எனக் கூறிவிட்டார்.
பிராமணர்கள் ஏற்ற 13 ஆண்டுகால தண்டனை போதும்! அவர்கள் அமைச்சர் பதவி கேட்க முன்வர வேண்டும்.
அவர்கள் அதைக் கேட்கிறார்களோ... இல்லையோ... அந்தக் கோரிக்கையை வலியுறுத்த இந்தப் பேனாவும்... நாவும் தொடர்ந்து வாதாடும், போராடும்.
வாதாடவும் - போராடவும் அவசியம் இல்லாமல் போக வேண்டுமானால் வள்ளலின் ஆட்சிவர வேண்டும். இரட்டை இலை வெற்றிபெற வேண்டும்.
பிராமணப் பெரியோர்களே! தோழர்களே இறுதியாகச் சொன்னதை உறுதியாக உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
(தமிழகச் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது நீரோட்டம் இதழில் மே 24, 25 தேதிய இதழ்களில் அடியார் எழுதிய கட்டுரை இது! இந்தக் கட்டுரைக்கேற்ப புதிய அமைச்சரவையில் டாக்டர் ஹண்டே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
நன்றி: பிராமணர்களுக்காக நான் வாதாடுகிறேன் - இலக்கியத் தென்றல் அடியார் - முதற்பதிப்பு: 1980 - நீரோட்டம் வெளியீடு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://dondu.blogspot.com/2009/08/blog-post_30.html
இந்தியாவின் அண்டை நாடுகளைக் கூட அதட்டி வைத்திருந்த இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி கூட பிராமணப் பெண் தானே!
அயோக்கிய அரசியல் வாதிகளையெல்லா ஆடிப்போகச் செய்து, தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறது, அதற்கு இத்தனை வலிமை இருக்கிறது என்று வெளிப்படுத்திய தைரியசாலி டி என் சேஷன் ஒரு பிராமணர்.
ஏன் இன்று கூட சமூகத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக தன்னந்தனி ஆளாக யாருக்கும் பயப்படாமல் அநீதிக்கு எதிராக நீதிமன்றம் போய் போராடி அரசாங்கத்தையே அவர் சொல்வதைப் போல் செயல்பட வைக்கும் டிராபிக் இராமசாமி ஒரு பிராமணரே.
பிராமணர் என்றால் கோழைகளென்று காதில் பூசுற்றும் தமிழ் சினிமா சமூகம் இந்த தைரியமுள்ள பிராமணரை கதாநாயகனாகக் கொண்டு படம் எடுக்குமா?
ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டாலே பத்திரிக்கை அலுவலகம் புகுந்து அங்குள்ளவர்களை கொலை செய்து விடும் அரக்கர்கள் வாழும் அரசியலில், சமூக நீதிக்கு தவறான காரியங்கள் நடத்தப்படும் போது அவற்றை இன்றளவும் சிறிதும் பயமில்லாமல் பத்திரிக்கையில் கண்டிப்பதும் உண்மைகளை வெளிப்படுதுவதும் ஒரு கடமையாகவே செய்து கொண்டிருக்கும் துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி ஒரு பிராமணரே!
இப்படி சமூகத்தில் எல்லா திசைகளிலும் தமிழருடன் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றி தமிழனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பிராமணர்களை இன்னும் எத்தனைக் காலம் தான் அவமதித்து மிதித்து நடப்பார்களோ இந்த பார்ப்பன எதிர்ப்பு வீரர்கள்!.
பகுத்தறிவு என்ற பெயரைச்சொல்லி தமிழர்களை அடி முட்டாள்களாக மாற்றி ஐம்பது வருடம் ஆகி விட்டது. இன்னும் எத்தனைக் காலம் தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே?! இந்த நாட்டிலே! தமிழ் நாட்டிலே....?????
அன்புடன்
ராம்
டோண்டு ராகவன் Said...
// //யூதர்களது ஒப்பிஒடல் ரோமா இனத்தவருடன், அது பற்றி உங்கள் கருத்து?// //
யூதர்களையும் ரோமா இனத்தவரையும் ஒப்பிடுவது பொருத்தமானது அல்ல. யூதர்கள் இயேசுவின் காலத்திற்கு முன்பிருந்தே நாகரீக வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அதிகாரத்தில் இடம்பெற்றும் வந்திருக்கின்றனர்.
ஆனால், ரோமா இனத்தவர்கள் இப்போதுவரை நாடோடிகள்தான். குறிப்பிட்ட அதிகார இடங்களையும் அவர்கள் பெறவில்லை.
மக்கள் தொகை அடிப்படையிலும், யூதர்களில் பாதி எண்ணிக்கை அளவே ரோமா மக்கள் இருக்கின்றனர். குறிப்பாக, அவர்கள் எந்தஒரு நாட்டிலும் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் வசிக்கவில்லை.
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, யூதர்கள் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதுதான்.
யூதர்களின் அமெரிக்க ஆதிக்கமே, இஸ்ரேலில் அவர்கள் கோலோச்ச காரணமாக இருக்கிறது. (இஸ்ரேலில் வசிக்கும் யூதர்களின் எண்ணிக்கைக்கு சமமாக அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள்). ஆனால், ரோமா இனத்தவர் ஐரோப்பாவை தாண்டவில்லை.
யூதர்கள் அதிகார நிலையிலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் விலக்கப்பட்டே இருந்துள்ளனர். மேலும் அடிமை நிலையிலேயே வைக்கப்பட்டைருந்தனர். பணம் ஈட்டினாலும் அது எப்போது வேண்டுமானாலும் அவர்களிடமிருந்து பறிக்கப்படும் நிலைதான் இருந்துள்ளது.
அதே சமயம் ரோமா இனத்தவர் யாருக்குமே அடிமையாக இருந்ததேயில்லை. தங்களது நாடோடி வாழ்க்கையை விரும்பி ஏற்றவர்கள் அவர்கள். ஓரிடம் சரிபடாவிட்டால் அங்கிருந்து உழைக்காது கூடாரங்களை தூக்கி அப்பால் சென்றவர்கள் அவர்கள்.
அவர்களை நான் ஒப்பிடவில்லை. கலையரசன்தான் அதைச் செய்தார். அவ்வாறு ஒப்பிட முடியாது என்றுதான் நானும் எனது இப்பதிவின் ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்டேன்.
எனது பதிவின் நோக்கமே அவரவர் முன்னேற்றத்துக்கு அவரவர்தான் பாடுபட வேண்டும், யூதர்கள் நாடார்கள் போல.
மற்றவர்களை எதிர்பார்த்தல் காரியத்துக்காகாது, தலித்துகள், பாலஸ்தீனியர்கள் ரோமா இனத்தவர்கள் போல.
அமெரிக்காவை பாதிக்கிறார்கள் யூதர்கள் என்றால், அதுவும் அவர்களது உழைப்பாலேயே வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
வாழ்க ஜெயமோகன், வாழ்க டோண்டு, வாழ்க நல்லதந்தி....
//
அறிவு கெட்டத்தனமாகப் பேசுவது தான் அருளின் முழுநேர வேலையோ ?
ஜெயமோகனின் பதிவை முழுதாகப் படித்தால் ஏன் அவர் அப்படிச் சொல்கிறார் என்று விளங்கும்.
டி.டி.கொசம்பி கூறியதை அவர் தமிழில் அழகாகச் சொல்லியது கூடத் தெரியவரும்.
டி.டி.கொசம்பி போன்றவர்கள் மார்க்ஸ்வாதிகள், மனுவாதிகள் அல்ல.
பிரச்சாரத்தையே உண்மையாக நம்பும் ஒரு "அல்டிமேட் தொண்டன் அருள்" வாழ்க.
யூதர்கள் பற்றி எதுவோ கிளிய பேசுவது பற்றி மிக்க மகிழ்ச்சி, எனது சந்தேகம் என்னவென்றால் இங்கிருக்கும் சாதிமுறைகள் நமக்கு நன்றாக தெரியும், வெளி உலகை பொறுத்தவரை நாம்(உங்களை சேர்கல) திராவிடர்கள் அல்லது சவுத் இண்டியன்ஸ்! அது மாதிரி தானே யூதர்களும், அல்லது அவர்களுக்குள் சாதி வேறுபாடு இல்லாத பட்சத்தில் இந்த உவமை எப்படி இங்கே சாத்தியமாகும்!
//கூட இருப்பவர்கள் எல்லா கஷ்டத்துக்கும் பாப்பானே காரணம் எனச்சொல்லிச் சொல்லியே அவர் போன்றவர்களை வளர்த்திருக்கிறார்கள். //
ஒரு விஷச்செடி இருக்கிறது, அதன் கிளையை மட்டுமே வெட்டி கொண்டு வருவதால் அது செயலற்று போகுமா அல்லது அதன் ஆணி வேரை புடுங்கனுமா!?
பார்பனீயம் முற்றிலுமாக களைத்தெரியப்பட வேண்டிய ஒன்று என்று அனைவருக்கும் தெரியுமே!
//அவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் யாராவது டோண்டு ராகவன் மாதிரி சமீபத்தில் கி.பி. 1 எனக் கூறவார்கள் என எதிர்பார்க்கவா முடியும்?//
கேக்குறவன் கேனப்பயலா இருந்தா டோண்டு அதையும் கூறுவார்!
//மாட்டில் கூட அதிகமாக உழைக்கும் அதிகமாக பால் கொடுக்கும் எருமை மாட்டைவிட, குறைவாக உழைக்கும் குறைவாக பால் கொடுக்கும் பசு மாடு உயர்வானது என்று பேசும் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள். //
செமையான உதாரணம்!
@ நல்லதந்தி!
எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, நான் நல்லா இருக்கேன், அதுனால பார்பனியர்களின் ஆதிக்கம் நாட்டில் நடந்த மாதிரியோ, பார்பனீயம் நாட்டில் இருக்கும் மாதிரியோ தெரியல என்பது சுயநலமான பேச்சாக தான் தெரியுது!
இது என்ன ஒயின்ஷாப் பாரா சமதர்மம் பேச!
எல்லா இடங்களிலும் மனிதன் சமமாக பார்க்கபட்டால் தானே நீங்கள் பாப்பனர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று வக்காலத்து வாங்க வேண்டும்!
//மணிக்கணக்கில் மொழிபெயர்ப்பு/துபாஷி வேலையில் ஈடுபடும் நான் செய்யாத உழைப்பா? //
உழைப்பு எதுவாக இருந்தாலும் அதற்குறிய நியாயமான கூலியை பற்றி தானே இங்கெ பேச்சு!
@ ஹேராம்
நீங்களும் பார்பனர் என்பதில் பெர்மிதம் கொள்கிறீர்களா!?
பார்பனர்களின் சாதனைகளை பட்டியலிட்ட நீங்கள், அவர்களின் சேட்டைகளை கோட்டை விட்டது ஏன்!
பேசிக்கலி நாம் மனிதர்கள் அதை மனிதில் நினைத்தவர்கள் உங்கள் பட்டியலில் உள்ளவர்கள், தம்மை உயர்வாக நினைப்பவர்கள்(சாதிரீதியாக) மட்டுமே பார்பனர்கள்!
விளங்குச்சா!
ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள்.ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. "ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_06.html
//ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள்.ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. "ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_06.html//
இப்போதுதானே மூன்று நூற்றாண்டுகள் ஆகின்றன அவர்கள் செட்டில் ஆகி. அவர்கள் முன்னால் இன்னும் நீண்ட ஆண்டுகள் நிற்கின்றன, தம் குறிக்கோளை அடைய.
இஸ்ரவேலர்களின் முன் உதாரணத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியதுதான்.
ஒன்று மட்டும் நிச்சயம். அவர்களாகத்தான் தங்கள் விமோசனத்தைத் தேடிக் கொள்ள முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@வால்பையன்
//பார்பனர்களின் சாதனைகளை பட்டியலிட்ட நீங்கள், அவர்களின் சேட்டைகளை கோட்டை விட்டது ஏன்!//
பார்ப்பனர்களால் ஒரு பிரயோசனமான காரியமும் நடக்கவில்லை என்று அருள் கூறியதற்குத்தான் பட்டியலே தந்தார் ஹேராம்.
//உழைப்பு எதுவாக இருந்தாலும் அதற்குறிய நியாயமான கூலியை பற்றி தானே இங்கே பேச்சு!//
உழைப்பே செய்யாத பார்ப்பனர்கள் என அருள் அபிப்பிராயப்பட்டதால் அப்படியெல்லாம் இல்லை எனக் கூற வேண்டியிருந்தது.
//எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, நான் நல்லா இருக்கேன், அதுனால பார்பனியர்களின் ஆதிக்கம் நாட்டில் நடந்த மாதிரியோ, பார்பனீயம் நாட்டில் இருக்கும் மாதிரியோ தெரியல என்பது சுயநலமான பேச்சாக தான் தெரியுது!//
அப்படி நல்லதந்தி எங்கே சொன்னார்?
//கேக்குறவன் கேனப்பயலா இருந்தா டோண்டு அதையும் கூறுவார்!//
அம்மாதிரி கிபி 1-ல் செயலாக வாழ்ந்து இப்போதும் செயலாக இருந்தால் டோண்டுவைப் பொருத்தவரை கி.பி. 1-ம் சமீபம்தான். சரித்திரத்தில் நூற்றாண்டுகள் காலகட்டத்தில் மிகச் சிறியவை, மனித வரலாற்றை முழுமையாக எடுத்துக் கொண்டால்.
//ஒரு விஷச்செடி இருக்கிறது, அதன் கிளையை மட்டுமே வெட்டி கொண்டு வருவதால் அது செயலற்று போகுமா அல்லது அதன் ஆணி வேரை புடுங்கனுமா!?//
அதேதான் நானும் சொல்கிறேன். சுயமுயற்சிக்கு வக்கின்றி தங்கள் தோல்விகளுக்கு ஒரு சாதியை மட்டும் குறை கூறும் மனநலமின்மைதான் ஒரு விஷச்செடி. அதைத்தான் நாங்கள் வேருடன் களைகிறோம்.
என்னைவிட மிக அழகாக ஜெயமோகன் கூறியுள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வால் நண்பா! //நீங்களும் பார்பனர் என்பதில் பெர்மிதம் கொள்கிறீர்களா!?// இல்லை நண்பா! ஒருவர் வாழும் விதத்தால் வேண்டுமானால் ஜாதி பெருமையடையலாம். ஆனால் வெறும் ஜாதியால் யாருக்கும் எந்தப் பெருமையும்
உண்டாகப்போவதில்லை. நாம் மனிதராக எப்படி வாழ்கிறோம் என்பதே முதன்மையானது.
///பார்பனர்களின் சாதனைகளை பட்டியலிட்ட நீங்கள், அவர்களின் சேட்டைகளை கோட்டை விட்டது ஏன்!/// நான் கூற வந்தது ஒன்றுதான்.. ப்ராமணர்களை காரண காரியம் இல்லாமல் தொடர்ந்து மிகவும் மோசமாக அவமதித்துக் கொண்டே வருவது ஜாதிக்கொடுமை என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை. இந்த நாட்டிற்கு தமிழுக்கு என்று ஜாதி பாராமல் அனைவருடனும் கைகோர்த்து உழைத்த பல பிராமணர்கள் வாழ்க்கை பற்றி பாடப்புத்தகத்தில் கூட எடுத்து வைக்காமல் புறக்கனிக்கப்படுகிறது. மேல் ஜாதிக்காரன் கீழ் ஜாதிக்காரனை திட்டினாத்தான் ஜாதிக்கொடுமைன்னு இல்லை. பலர் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரனை அடி, உதை, ஒழி என்றெல்லாம் பேசிகொண்டிருப்பதும் அவர்களின் வாழ்க்கையை தொடர்ந்து ஜாதீய ரீதியாக அவமதித்துக் கொண்டிருப்பதும் மிக மோசமான ஜாதி வன்கொடுமை. அது தமிழகத்தில் கட்டுப்பாடில்லாமல் நடந்து வருகிறது. பல இனையதளங்கள் அதற்காகவே இயங்குகின்றன. டோண்டு சாரின் தளத்தைப் பொறுத்தவரை அந்த தொழிலை டீஃபால்ட்டாக பார்ப்பவர் நண்பர் அருள். இந்த காலத்தில் பணமிருப்பவன் மேல் ஜாதி. பணமில்லாதவன் கீழ்ஜாதி. ப்ராமணனாக இருந்தாலும் பணமில்லாமல் அழுக்குசட்டை போட்டு பரட்டை தலையுடன் யாரிடமாவது காசுகேட்டால் சீ என்று ஒதுங்குவார்கள் அன்றி அந்கே ஜாதி தெரியாது. ஆக எல்லோரும் பணம் சம்பாதிக்க வழிவகை செய்துவிட்டால் ஜாதி ஏற்றத்தாழ்வு தானே காணாமல் போகும். அந்த வழியை அரசியல் வாதிகள் செய்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஓட்டு போட ஏழைகள் வேண்டும். இலவசங்களை பெற்றுக்கொள்ளும் பிச்சைக்காரர்கள் வேண்டும். எனவே ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதில் அவர்களைப் போல யாரும் வெற்றி காண்பதில்லை. ஆனால் ஏழைகளின் கோபம் அரசியல் வாதிகளின் மேல் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் நீ ஏழையாக இருப்பதற்கு பார்ப்பான் காரணம் என்று கூறி தனது திருட்டுத்தனத்தை மறைக்கப்பார்க்கிறான். ஆனால் அதைப்புரிந்து கொள்ளாத பகுத்தறிவற்ற ஆட்டு மந்தைக் கூட்டன் பார்ப்பானை திட்டி காலம் தள்ளுகிறதே தவிற ஏழைகளாக நம்மைதொடர்ந்து நீட்டிக்கச்செய்வது ராமதாஸ், உட்பட அவர் யாருக்கெல்லாம் கூஜா தூக்கப்போகிறாரோ அவர்களும் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இவையெல்லாம் புரிந்து கொள்ள நல்ல பொருளாதார அறிவு தேவை. அட சராசரி அறிவே கூட இல்லையென்றால் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது. எனவே ப்ராமணர்களை தொடர்ந்து கேவலப்படுத்தி ஜாதிக்கொடுமை செய்வதை நிறுத்துங்கள். ப்ராமணர்களையும் மனிதர்களாகப்பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் நீங்கள் மனிதம் பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. 'குடுமியை குனியவை' என்று மிகக்கேவலமாக பிராமணரை ஜாதிரீதியான தகாத வார்த்தையில் எழுதுயது வால்பையனே! ஆனால் நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கியதில்லை என்றும் கூறிக்கொள்கிறீர்கள். ப்ராமனர்களுக்கெதிராக ஜாதி வன்கொடுமை நடத்துவதை மனிதத்தன்மையுடன் நிறுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களாக நீங்கள் இருந்தால்....
hayyram said...
// //ப்ராமனர்களுக்கெதிராக ஜாதி வன்கொடுமை நடத்துவதை மனிதத்தன்மையுடன் நிறுத்துக்கொள்ளுங்கள்// //
இது GOOD JOKE'க்கா? அல்லது, குரூரமான JOKE'க்கா?
//இது GOOD JOKE'க்கா? அல்லது, குரூரமான JOKE'க்கா?//
தம்மவர் (கிறித்துவர்களானாலும்) வன்கொடுமை செய்து கொண்டேயிருக்க, வன்கொடுமை சட்டம் நீக்கப்பட வேண்டும் என மருத்துவர் கோருவதை விடவா மேலே சொன்னது ஜோக்?
@ஹேராம்
இதை பார்ப்பனருக்கெதிரான வன்கொடுமை என நான் கூறவே மாட்டேன். இது வெறும் கொசுத்தொல்லை. கொசு கடிக்கும்போது பொளேரென போடு போட்டால் ஓடிப்போகப் போகிறது.
அபார்ப்பனரது சான்றிதழ் நமக்குத் தேவையில்லை. அவர்கள் வயிற்றெரிச்சலில் உளறும் போதெல்லாம், வெறுமனே என்னப்பா ஜாட்டான் என்ன உளறுகிறாய் என அவ்வப்போது கேட்டுக் கொண்டால் போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எல்லா இடங்களிலும் மனிதன் சமமாக பார்க்கபட்டால் தானே நீங்கள் பாப்பனர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று வக்காலத்து வாங்க வேண்டும்!//
வால்! நான் பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்கவில்லை. அவர்களால் பாதிக்கப் பட்டால் அவர்களை ஏன் கண்டு கொள்ளவேண்டும் என்றே கேட்கிறேன்.
நான் வக்காலத்து வாங்குவதெல்லாம், குறைகள் அதிகம் இல்லாத இந்து மதத்தைக் குறை சொல்பவர்களின் கூற்றுகள் அர்த்தமற்றவை என்பதற்காகவே. அது பார்பனர்களை முன்னிட்டு அல்ல.எதற்கெடுத்தாலும் மனு கினு என்பதெல்லாம் எரிச்சலைத்தானே ஊட்டுகிறது. வாழ்க்கையில் மனு எந்த சந்தர்ப்பத்தில் வருகிறது என்பதே தெரிய வில்லை.
உங்கள் வாழ்க்கையில் (இந்த இடத்தில் உங்களுக்கு என்பது உங்களைக் குறிப்பதல்ல, நீங்கள் இம்மாதிரி ஆள் இல்லை என்பது உங்களுடன் பழகிய எனக்குத் தெரியும் அருள் போன்றவர்களைக் குறிப்பிடும் வார்த்தை)நீங்கள் பார்பனர்களுக்கு கொடுக்கும் ஐந்தும், பத்தும்தான் பிரச்சனை என்றால் அந்த சடங்கிற்கு பார்பனர்களை தவிர்த்து விடுங்களேன். சும்மா அவர்களைப் போட்டு ஏன் நோண்டிக் கொண்டிருக்கிறீர் என்பதே என் கேள்வி.
என்னுடைய ஜாதி உட்பட பல ஜாதிகளில், எந்த மதச் சடங்குகளிலும் பார்பனர்களுடைய சம்பந்தம் என்பதே கிடையாது. வண்ணான் இருப்பார், நாவிதர் இருப்பார் , வெட்டியான் இருப்பார் ஆனால் பார்பனர்கள், கல்யாணச் சடங்கு,இறுதிச்சடங்கு உட்பட எந்தச் சடங்கிலும் இடம் பெறுவது கிடையாது. புரோகிதம் உட்பட. அதைப் போல அவர்களைப் பிடிக்காவிட்டால் தவிருங்கள். திட்டுவது, வன்மம் கொள்வது என்பதில் அர்த்தம் இல்லை என்றே சொல்கிறேன்.
PLEASE PUT UP WITH ME for WRITING IN ENGLISH... I AM YET TO MASTER TAMIL TYPING:--- TAMIL NADU & ITS NATIVE POPULATION WHICH HAS VERY GOOD TRADITION AND CULTURE ARE BEING SPOILED BY THE PRESENT DAY POLITICIANS AND THEIR CLOSE ASSOCIATES. HOWEVER THE PEOPLE AS A SMALL GROUP , SAY AT A COMMUNE LEVEL ( LIKE THE NADARS HAVE DONE -- BY ORGANIZING THEM SELF, THE NADAR MAGIMAI ,)IF ORGANISED , WITHOUT WAITING FOR THE GOVT.... THEN THE FUTURE GOVT WILL BE FORCED TO GO TO THEM.
NADARS WERE MOLDED BY THE THOUGHTS OF SWAMI VEVEKANANDA .
OUR DALITS ARE WAITING FOR THEIR MAHATMA ... SRI KAKKAN'S LIFE IS YET TO AFFECT THEM.
WE ALL PRAY TO THE ALMIGHTY TO HAVE CHANGE OF GOVERNMENT, WHICH HAS THE HEART & STRENGTH OF RAJARAJA, VER SHIVAHI, TIRUMALI NAYAKA, KRISHNADEVARAYA, AND THEIR ABLE MINISTERS LIKE SHEKILAR,VIDYARANYA, APPAYADIKISHITA, RAMAPPAA , RECENT PAST MORAJI DESAI, AND OUR OWN P CHIDAMBARAM, TO GIVE FEW EXAMPLE quickly.
WE NEED LEADERS & GOOD GOD FEARING SUBJECTS. OUR DALITS ARE SLOWLY REALISING , WHAT GOOD EDUCATION CAN GIVE THEM.
IF THEY FURTHER REALISE THAT THEY CANNOT BE TAKEN FOR RIDE BY FREE BEES , THEN TAMILNADU WILL EMERGE A STRONG REGION .. ALL INTELLECTUAL WILL COMEBACK, HARMONY WILL PREVAIL AMONG THE VARIOUS COMMUNITIES.. PEOPLE WILL REALISE THE REAL MEANING OF "VARNA" , ie QUALITY, PERSONALITY. CAST CONFLICTS WILL GO AWAY, AS THEY ARE NOW. VALZGA BHARATAM.
நல்லதந்தி said...
// //திட்டுவது, வன்மம் கொள்வது என்பதில் அர்த்தம் இல்லை// //
யார் மீது யாருக்கு வன்மம்???
அன்னை பார்வதி அம்மாளை தமிழ்நாட்டிற்குள் விடாதது சரிதான் என்று டோண்டு சொல்வது,
யூனிகோட் கன்சார்ட்டியம் என்று அழைக்கப்படும் ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் தமிழ் ஒருங்குறி முறைக்குள் சமஸ்கிருத எழுத்துக்களை திணிப்பது
- இதுபற்றியெல்லாம் யோசித்து பாருங்கள்!
@சீதாராமன்
உங்களுக்கு ஒரு வார்த்தை. ஆங்கிலத்தில் எழுதினால் பரவாயில்லை. ஆங்கில எழுத்துக்களில் தமிழைக் கொணர்வதுதான் கொடுமை.
அதே சமயம், ஆங்கிலத்தில் எழுதும்போது முழு டெக்ஸ்டையும் கேபிடல் எழுத்துக்களில் எழுதுவது சரியில்லை.
அது இணைய பாவிப்பில் உரக்கக் கத்துவதற்கு சமமாகக் கொள்ளப்படும். அதிலும் உங்களது மேலதிகாரிக்கு நீங்கள் இவ்வாறு எழுதினால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவீர்கள்.
மற்றப்படி உங்கள் கருத்துக்கள் சுவாரசியமானவையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அன்னை பார்வதி அம்மாளை தமிழ்நாட்டிற்குள் விடாதது சரிதான் என்று டோண்டு சொல்வது,//
அன்புள்ள அருள் நீங்கள் மேலே கோடிட்டுக் காட்டியது, எந்த விதத்தில் இந்தப் பதிவிற்கு சம்பந்தம் என்று தெரியவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் நான் எழுதிய எந்த விஷயமும் இந்தப் பதிவிற்குச் சம்பந்தம் இல்லாததுதான், அதை மனதிற் கொண்டு இதற்குப் பதிலளிப்பதென்றால், பார்வதி அம்மாளை தமிழகத்தில் நுழைய விடாதது யார் என்று உங்களுக்கே தெரியும் ஆனால் அவரை, அந்த அதிகார பீடத்தில் உள்ளவரை உங்களால் வைய இயலாது, அதை ஆதரித்தவர்களைத் திட்டும் மனோபாவம்தான் உங்களின் மொத்த பிரச்சனையும். இதைத்தான் சரி செய்யுங்கள் என்கிறேன்.
//இதை பார்ப்பனருக்கெதிரான வன்கொடுமை என நான் கூறவே மாட்டேன். இது வெறும் கொசுத்தொல்லை// உண்மை தான் டோண்டு சார். ஆனா தொல்லை விடாமல் தொடரும் போது அது கொடுமையாகத் தான் தெரிகிறது. நான் 4 அல்லது 5 வயதிருக்கும் போது மதுரையில் நாங்கள் குடியிருந்த அந்த தெரு தி மு க வெறியர்களை முக்கியஸ்தர்களாக கொண்டது. பார்பான்களைக் கண்டால் அடி உதை என்று உரையேற்றப்பட்ட பிரசாரத்தில் மூழ்கியவர்கள். அவர்களின் குழந்தகளுக்கே அஞ்சுகம், கருணாநிதி என்று தான் பெயர் வைத்திருப்பார்கள். தி மு க வில் எல்லோரும் சாராயம் காய்ச்சி விற்கலாம் என்று திறந்து விட்ட போது இவர்களது வீட்டிலேயே சாராய வியாபாரம் நடந்தது. அங்கே குடித்து விட்டு பத்தடி தள்ளி இருக்கும் எங்கள் வீட்டு வாசலில் வாந்தி எடுக்கும் அந்த தி மு க கும்பல். அத்தகைய தெருவில் 5 வீடுகள் கொண்ட ஸ்டோர் வீட்டில் குடியிருந்தோம். சிறுவனான நான் தெருவில் உட்கார்ந்திருந்தால் தி மு க வீட்டுப் பிள்ளைகள் தெருவில் பிள்ளைகளோடு சேர்ந்து என் மீது கல்லைக் கொண்டு எறிவார்கள். அவர்களுக்கு பத்து முதல் பதிமூன்று வயது இருக்கும். நான் உள்ளே ஓடிப்போவேன். ஒரு நாள் நல்ல பிளேடால் என் கண்ணத்தை ஷேவ் செய்வது போல அவர்களில் ஒருவன் கீறி விட்டுப் போனான். முகமெல்லாம் ரத்தம். என் தாயார் தெரு முக்கு வரை வந்து அவர்கள் கையைக் காலை உடைப்பதாக சபதம் செய்து போனாள். பாவம். அந்த ஸ்டோர் வீட்டில் 5 குடியிருப்பிற்கும் வாசலில் ஒரு பொதுக்கழிப்பறை இருக்கும். அந்த வயதில் எனக்கு கழிவறை கதவை மூடினால் பயம் உண்டாகும் என்பதால் பாதியாக திறந்து வைத்தே வெளிக்கி இருப்பது வழக்கம். நான் எப்பொழுதெல்லாம் உள்ளே இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் பத்தடி தூரம் நின்றவாறு அந்த சிறுவர்கள் என் மீது குறிபார்த்து கல்லெறிவார்கள். கதவின் மீது கல் படும் சப்தம் கேட்டு என் தாயார் தெரு முக்கு வரை அவர்களை விரட்டிச் சென்று திட்டி விட்டு வருவார். ஓடிப்போய் கிக்கிலி கான்பிப்பார்கள் அந்த சிறுவர்கள். எல்லாவற்றிர்கும் ஐயர் குடும்பம் என்ற ஏளனமும் இவங்களக் கண்டாலே பிடிக்காதுடா, அட்றா அவன என்று காதுபட பேசும் குணமும் தான் அடிப்படை காரணமாக இருந்தது. சில வருடங்களில் அவர்கள் பெரியவர்களாக ஆன போது மாறிப்போனார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அந்த அறியாத வயதில் எனக்கு உண்டான பயமும் ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்கிறார்கள் என்கிற புரிபடாத கிலியும் எப்படி இருந்திருக்கும். ஆனால் என்னமோ எனக்கு யார் மீதும் வெறுப்பு வரவில்லை. அவர்களின் முகம் கூட எனக்கு ஞாபம் இல்லை. ஆனால் யோசித்துப் பாருங்கள். இந்த காழ்புணர்ச்சியின் ஊட்டமும் அதே மனநிலையும் தானே அயோத்தியா மண்டப வாசலில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த வயோதிகரை வெட்டிப் போட காரணமாக இருந்தது. அதே காழ்புணர்ச்சியைத் தானே இன்றைக்கு அருளோ வால்பையன்களோ பல இடங்களில் தீ ஊற்றி வளர்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை வெளியே தெரியாத கொடுமைகள் நடந்து கொண்டிருக்குமோ யாருக்குத் தெரியும்! நான் எழுதுவது சுய பச்சாதாபம் இல்லை. இப்படியெல்லாம் நடப்பதற்கு காலம் மாறாமல் தொடர்ந்து இவர்கள் விதைத்து வரும் விஷ விதையின் விருட்ஷங்கள் இன்றைக்கு சினிமாவிலும் சராசரி நண்பர்கள் பேசும் போதும் பிரதிபலிக்கிறது, இன்னும் ஏன் இதையே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை எனச் சொல்லத்தான். இன்னும் எத்தனை ப்ராமணர்கள் வெட்டப்பட வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள்? அல்லது அவமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்? இதை ஜாதி வன்கொடுமை என்று கூறாமல் என்ன செய்வது. நேரடியாக வாயில் மலம் தினிக்கும் கொடுமையும் ஒன்று தான் இவன் வாயில் யாராவது மலத்தை தினியுங்களேன் என்று ஒருவரைத் தூண்டி விடுவதும் ஒன்றுதான். முதலாவது நேரடியான வன்கொடுமை இரண்டாவது வரப்போகும் வன்கொடுமை. இவற்றிர்கெல்லாம் இவர்கள் கூறும் ஒரே சாக்கு.. எம் முப்பாட்டன் கெட்டதுக்கு உன் முப்பாட்டன் தான் காரணம் என்பது தானே ஒழிய நடைமுறை வாழ்க்கையில் எது எப்படி இருக்கிறது என்ற சிந்தனையோ பகுத்தறிவோ அல்ல. என்னமோ போங்க? ஒரு நாள் எல்லோரும் மாறுவாங்க. அதுவரை பொறுத்திருப்போம். அழிக்கத்தான் செய்வார்கள் என்றால் அழிந்தும் போவோம். சமூக வெள்ளத்தில் அது தான் நடக்குமென்றால் யாராலும் மாற்ற இயலாது. ஆனால் சமூகம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. அந்த இயற்கை மீது நம்பிக்கை கொண்டே இன்னும் எல்லோருடனும் பழகிக்கொண்டிருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் இவை பற்றி புரிந்தால் சரிதான்.
அங்காடித்தெருவில் ப்ராமணர்கள் பற்றி கேள்வி எழுப்பிய போது ஜெயமோகன் என்னைச் சாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு வேளை நீங்கள் பார்த்திராவிட்டால் இதோ சுட்டி..
http://www.jeyamohan.in/?p=7499
பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:-
வலை தளத்தில் சிலரைப்பற்றி காரசாரமான விவாதங்கள் நடக்கும் இந்த தருணத்தில், சிலவற்றை மேற்கோள் கட்ட இருக்கிறேன். அதாவது சிலர் என்ன சொன்னாலும் கடைசியில் பார்பனர்களை சாடுவதில் வந்து நிற்கிறது என்று சொல்லுபவர்களுக்கு சில பதில்கள்.
இதை படித்து விட்டு இது யாரால் அல்லது எந்த இயக்கத்தை சார்ந்தவர்களால் எழுதபட்டிருக்கும் என்பதை சொல்லவேண்டும்.
படியுங்கள் ..............
--------------------------------------------------------
பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:-
--------------------------------------------------------
விவாதம் 1 : மதம் என்பது தனிமனித வழிமுறை என்று கூறிவிட்டு இந்து மற்றும் பார்ப்பன மதம் பற்றி மட்டும் விமர்சிக்கிறீர்களே!
இந்து மதம் என்பது பார்பனரின் ஆளுமையை கட்டி காக்கவே செய்யப்பட்ட ஒரு கோட்பாடு. அவர்களின் தனி ஆளுமைமுறை நீர்த்து போகசெய்ய பார்பனர் அல்லாத சமூகங்கள் செய்தவையை எதிர்த்து நாட்டுக்குள் ஒரு நாடாகவே கட்டியமைத்தார்கள் பார்ப்பனர்கள்! இந்த "தனி நாட்டை" மதம் என்ற பெயரிட்டு அமைத்ததுதான் உலகிலேயே ஒரு பெரும் தந்திரம் என்று கூறலாம். பார்ப்பனீயம் என்பதற்கு இந்துமதம் என்று பெயரிட்ட முதல் பொய்யிலிருந்து வந்ததுதான் மற்ற பொய்கள்.
விவாதம் 2 : நல்ல பார்ப்பனர்களும் இருக்கிறார்களே!
நல்ல "பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்" என்பதிலிருந்தே தெரியவில்லையே அவர்கள் எவ்வளவு என்று. சில நல்லவர்கள் இருப்பதை வைத்துக்கொண்டு நம்மின் பார்ப்பன வெறுப்பை எடைபோடலாகாது! அவர்கள் ஏதாவது நமக்கு நல்லது செய்தால், நம்மை விரும்பி அவர்கள் அதை செய்தார்கள் என்பதை விட நம்மிடையே அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக செய்தார்கள் என்று கொள்ளலாம்.
விவாதம் 3 : பார்ப்பனர்கள் பலர் நம் சமூகத்தில் பல தொழில்கள் செய்யவில்லையா, அங்கே பல பார்ப்பனர்ர் அல்லாதவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
எந்த திருடன் வேண்டுமானாலும் குப்பையை விற்கலாம். பார்ப்பன திருடர்கள் தொழில் என்ற பெயரில் குப்பைகளை செய்து பார்ப்பனர் அல்லாதவரை அங்கே நியமித்து அந்த குப்பைகளுக்கு தங்க முலாம் பூசி விற்கிறார்கள். அவ்வளவுதான். அதே சமயம் அவர்கள் செய்யும் ஓரிரு நல்ல பொருட்களுக்கு மற்ற பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு விலைகளை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள். ஆகவே பார்ப்பனர் செய்யும் / விற்கும் பொருட்களை வாங்கும் தமிழர்கள் மற்றாரு தமிழனின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்!
விவாதம் 4 : பார்ப்பனரல்லாதவர்களில் பார்ப்பன தன்மை இல்லையா?
இப்படி சொல்லுவதால் அது பார்ப்பனியத்தின் வீரியத்தை காட்டுகின்றதே ஒழிய பார்ப்பனரல்லாதவர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதாவது இதைப்போன்ற பார்ப்பனரல்லாதார்களின் தீய தன்மைகளை பார்ப்பனீயம் என்று அழைப்பதாலேயே பார்பனர்கள் எவ்வளவு மோசம் என்பது புரியவில்லையா? இப்படி பல நவீன பார்ப்பனர்கள் இருப்பதால் எல்லோருக்கும் புரியும் விடயம், பார்ப்பன விடம் எவ்வளவு ஆழமாக இந்த சமூகத்தில் பரவி இருக்கிறது என்பதே! இந்த ஒரு விடயமே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்! திராவிட தமிழர்கள் எல்லோரும் தனக்குள் உள்ள பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாகும்!
விவாதம் 5 : இவர் பார்பனர் அல்ல. மாறிவிட்டார். கோவிலுக்கு போவதாக தெரியவில்லை. பூணூல் அணிவதாக தெரியவில்லை.
மேலே தெளிவாக சொல்லிவிட்டோம். பார்ப்பனியம் என்பது மதம் இல்லை. நம்முடைய தலைவர் அப்பொழுதே சொல்லி இருக்கிறார், இது ஒரு வினோதமான மதம் ஏனென்றால் இந்த மதத்தை பின் பற்றுபவர்களை தொலைவிலிருந்தே மோப்பம் பிடுத்து விடலாம் என்று! ஒரு பார்ப்பனன் ஆனவன் என்றும் பார்ப்பனன்தான். என்ன சில சமயங்களில் பிழைப்பிற்காக, தங்களின் தொழிலை காப்பாற்றுவதர்க்காக நான் அது இல்லை இது இல்லை என்பார்கள். அனால் நம் தலைவர் சொல்லுவதெல்லாம், பார்ப்பனன் என்றும் பார்ப்பான்தான்!
விவாதம் 6 : இந்த குறிப்பிட்ட மனிதர் பார்ப்பனர்தான். ஆனாலும் இவர்களின் தந்தை மற்றும் பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருந்தவர்கள்தான்.
ஆடு எப்படி குதிரை ஆகாதோ, பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருப்பதால் மட்டுமே ஒருவன் தமிழன் ஆகி விடமுடியாது. அதாவது படையெடுத்த ஆரியர் இங்கே தங்கியதால் தமிழன் என்று சொல்லக்கூடாது!
விவாதம் 7 : அவர்களும் மனிதர்கள்தானே!
அவர்களும் மனிதர்கள் தான். அதில் சந்தேகமே இல்லை.அதே சமயம் கொசுவும் உயிருனம்தான். அவை நம்மை துன்புறுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. நாம் செய்வது அவைகளை அடக்குவது. அவைகள் நம்மை துன்புறுத்தாமல் இருக்க அவைகளின் வீரியத்தை அடக்குவது. நாமும் பார்ப்பனர் விடயத்தில் அதைத்தான் செய்கிறோம்!
விவாதம் 8 : மனிதர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று நீங்களே சொல்லிவிட்டு.....
பார்பனர்கள் பற்றியல்ல அது. மனிதர்களை பற்றி. சிங்கமும் பன்னியும் வெவ்வேறுதான்!
விவாதம் 9 : பார்ப்பன எதிர்ப்பு என்பது முட்டாள்த்தனம்!
இந்த பொய்யை இனி இந்த திராவிட நாடு ஏற்காது! பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடி பத்திரிகைகள் வேண்டுமானாலும் அப்படி எதையாவது எழுதலாம். ஆனால் உண்மையில் அறிவுள்ள பார்ப்பனர்களை யாரும் பார்த்தது கிடையாது. அறிவுள்ள எவரும் பார்ப்பனர்களின் எதிரிதான். சில அறிவுஜீவிகள் இதை பார்த்து யோசிக்கலாம் வருந்தலாம். ஆனாலும் நாங்கள் சொல்லுவது ஒன்றுதான். பார்ப்பனருக்கு எதிரான இந்த போரை நடத்திக்கொண்டே இருப்போம் என்பதுதான் அது.
விவாதம் 10 : பார்ப்பனர்களின் பலரை துயரத்திர்க்குள் ஆக்கிவிட்டீர்களே. பல குடும்பங்கள், பல பார்ப்பனர்கள் வாய்ப்பு இல்லாததினால் உண்மையில் கஷ்டப்படுகிறார்களே?
எங்கள் வழிமுறைகளால் எந்த பார்ப்பனருக்கும் இங்கே ஒன்றும் ஆகவில்லை என்பதுதான் நிஜம். என்ன, எங்களுக்கான உரிமைகளை தட்டிப்பறித்த அவர்களை சாடி அந்த உரிமைகளை நாங்கள் மறுபடியும் எடுத்துக்கொண்டோம்! சில ஆயிரம் பார்ப்பனர்கள் பசியால் வாடுகிறார்கள் என்றால், பல லட்சம் பார்ப்பனரல்லாதவர்கள் பல ஆயிரம் வருடங்கள் வாடியதை பார்த்தல் இது ஒன்றும் இல்லை என்றேசொல்லலாம்.நமக்கும் பார்ப்பனர்களுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
உங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் திராவிடர்கள் ஆகிய நாம் எதற்கும் பரிதாபமே பார்க்கக்கூடாது!
Saturday, November 6, 2010
நாஜிகளின் யூத வெறுப்பு எழுத்துக்களும் நம்ம ஊரு பார்பன வெறுப்பு எழுத்துக்களும்! - ஒரு மொழி பெயர்ப்பு!
நாஜிகளின் யூத வெறுப்பு எழுத்துக்களும் நம்ம ஊரு பார்பன வெறுப்பு எழுத்துக்களும்!
-----------------------------------------------------------------------------
- ஒரு மொழி பெயர்ப்பு!
------------------------
என்னுடைய முந்தைய பதிவிற்கு பல ஹிட்டுகள் கிடைத்தது புரிகிறது (ஆனால் கமெண்டு வராது, ஓரிரண்டை தவிர). சில ஈமெயில்களும் வந்தன, எழுதப்பட்டதின் ஞாயத்தை பாராட்டி. இன்றைக்கு நேரம் கிடைத்ததால், இதைப்பற்றி மேலும் ஒரு பதிவு கண்டிப்பாக போடவேண்டும் என்று நினைத்திருந்தேன். கிடைத்தது கொஞ்சம் நேரம்.
முதலில் சொல்லிக்கொள்ள விரும்புவது, இங்கே நான் ஒரு சமுதாயத்தை நிந்தித்து எழுதியதைபோல பல பல பதிவுகள் வந்து விட்டன. இதை விட கொச்சையாக செமத்தியாக, கண்டபடி வந்திருக்கின்றது, வந்து கொண்டிருக்கிறது, வரும்! ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல.
கீழே உள்ள பதிவு, அதாவது "பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்" உண்மையாக நான் எழுதியது இல்லை. சொல்லப்போனால், அது தமிழில் எழுதப்பட்டதே இல்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், இது பார்ப்பனரை பற்றி எழுதப்பட்டதே அல்ல. என்ன குழும்புகிறதா? ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு யூதர்கள் என்பதை எடுத்து பார்பனர் என்று போட்டு, சில மாற்றங்களை மட்டும் செய்து (அதாவது மைய கருத்து மாறாமல்) தமிழாக்கமும் செய்தேன். அவ்வளவுதான்!
குழப்பம் தெளிவடைய கீழே இருப்பதை கவனமாக படியுங்கள்!
-------------------------------------
German (NAZI) Propaganda Archive
-------------------------------------
Background: The Nazis were always worried about those Germans who did not accept anti-Semitism. In this article from the party monthly for propagandists, the writer provides ten responses to the most common objections they encountered to Nazi anti-Semitic measures. These were arguments intended for everyday use in conversation with fellow citizens.
The source: Kurt Hilmar Eitzen, “Zehn Knüppel wider die Judenknechte,” Unser Wille und Weg (6) 1936, pp. 309-310.
@நோ
உங்கள் பதிவுக்கான சரியான சுட்டி: http://nonono-no-no.blogspot.com/2010/11/blog-post.html
நீங்கள் தந்திருப்பது உங்களது ஹோம் பக்கத்துக்கானது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
NO எப்போதுமே ON அதாவது ஆண்! ;)
பார்ப்பன துவேஷம் என்பதெல்லாம் சும்மா கப்சா, கட்டுக்கதை, புரூடா.... அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
மாறாக, தமிழர்களுக்கு எதிரான அடங்காத வன்மத்துடன், குறிப்பாக, தமிழ்நாட்டின் BC/MBC/SC/ST மக்களுக்கு எதிரான அடங்காத வன்மத்துடன் அலைவது பார்ப்பனர்கள்தான்.
இதனை வெளிப்படுத்த கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் பார்ப்பனர்கள் தவறவிடுவதே இல்லை.
எடுத்துக்காட்டு: 'சோ' ராமசாமி, சுப்ரமணியசாமி, டோண்டு
//பார்ப்பன துவேஷம் என்பதெல்லாம் சும்மா கப்சா, கட்டுக்கதை, புரூடா.... அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.//
அடேங்கப்பா! அருள் இன்னும் கொஞ்சம் சோத்தை போட்டு முழு பூசணிக்காயை மூடுங்க!
//எடுத்துக்காட்டு: 'சோ' ராமசாமி, சுப்ரமணியசாமி, டோண்டு// அப்படி இவர்கள் செய்தது தான் என்ன? ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக லிஸ்ட் கொடுக்களேன், தெரிந்து கொள்வோம் என்னவென்று..
hayyram said...
// //
//எடுத்துக்காட்டு: 'சோ' ராமசாமி, சுப்ரமணியசாமி, டோண்டு// அப்படி இவர்கள் செய்தது தான் என்ன? ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக லிஸ்ட் கொடுக்களேன், தெரிந்து கொள்வோம் என்னவென்று..
// //
ஈழத்தமிழர் உரிமை, இடஒதுக்கீடு, சிதம்பரம் கோவிலில் தமிழ் என்பது போன்று பலவற்றில், பேசிவைத்ததுபோல, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிரான நிலைபாட்டில் இருப்பது போதாதா?
///ஈழத்தமிழர் உரிமை, இடஒதுக்கீடு, சிதம்பரம் கோவிலில் தமிழ் என்பது போன்று பலவற்றில், பேசிவைத்ததுபோல, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிரான நிலைபாட்டில் இருப்பது போதாதா?// ஏதாவது பேசனுமேன்னு பேசுறீங்க. அவ்ளோதான்! பாவம் சார் நீங்க!
வரவர அருளும் சித்தூர் முருகேசன் மாதிரி பேச ஆரம்பித்துவிட்டார், பார்க்க: http://kavithai07.blogspot.com/2010/10/blog-post_29.html
அவர் ப்ரூஃப் கொடுக்கும்போது அருளும் தருவாராக இருக்கும்.
வன்கொடுமை சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என்று வன்னியசங்கத் தலைவர் கேட்டது பற்றி நான் கேட்ட கேள்விக்கு அருள் பதிலே சொல்லவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //வன்கொடுமை சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என்று வன்னியசங்கத் தலைவர் கேட்டது பற்றி நான் கேட்ட கேள்விக்கு அருள் பதிலே சொல்லவில்லை.// //
கருத்தை உங்களது விருப்பம் போல திணிக்க வேண்டாம்.
வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரவில்லை. அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை - அதாவது, குற்றமிழைக்காத அப்பாவிகள் பாதிக்கப்படுவதை - தடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
தேவர் பாதுகாப்பு பேரவையின் நிறுவனர் கதிரேசனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் மதுரையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராமதாஸ், ""வன்கொடுமை தடுப்பு சட்டம் (பி.சி.ஆர். ஆக்ட்) தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தை நீக்க, பா.ம.க. சார்பில் சட்டமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்'' என்று தெரிவித்திருக்கிறார்.
ராமதாஸின் இந்த கருத்து, தலித் இயக்கங்களிடம் கொந்தளிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிரான கண்டனங்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில், ராமதாஸுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவதில் சீரியஸாக இருக்கிறது இந்திய குடியரசு கட்சி.
இக்கட்சியின் மாநில தலைவரும் மூத்த தலித் அரசியல் தலைவருமான செ.கு.தமிழரசனிடம் பேசியபோது, ""ராமதாஸிடமிருந்து இப்படியொரு கருத்தை எதிர்பார்க்கவே இல்லை. ஒட்டுமொத்த தலித் தலைவர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது அவரது கருத்து.
இந்த சட்டத்தை நீக்க, ராமதாஸ் வலியுறுத்துவதற்கு முன்பு, தலித்து களுக்கு எதிரான வன்கொடுமைகள் இந்த சமூகத்தில் அறவே நீக்கப்பட்டு விட்டனவா? என்பதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பொறுப்புள்ள ஒரு அரசியல் தலைவரான ராமதாஸ் மனம் போன போக்கில் பேசியிருப்பது ஜீரணிக்க முடியவில்லை.
இன்றைக்கு நடைமுறையில் உள்ள இந்த சட்டம் 1989-ல் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நடைமுறையில் இருப்பதால்தான் ஓரளவிற்கேனும் தலித்துகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது. சட்டத்தையே நீக்கிவிட்டால்... தலித்துகளின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சமீபத்தில் "தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துதான் இருக்கிறது. இரட்டை குவளை முறை, மலம் அள்ள வைத்தல், சிறுநீரை குடிக்க வைத்தல் உள்ளிட்ட கொடுமைகள் நடக்கவே செய்கின்றன. தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் 8-வது இடத்தில் இருக்கிறது' என்று அதிர்ச்சியுடன் தெரிவித்திருக்கிறது. ஆக... எதார்த்தம் இப்படி இருக்கும் நிலையில், இந்த சட்டத்தையே நீக்க வலியுறுத்துவேன் என்பது ஆரோக்கியமானது தானா என்பதை ராமதாஸ் சிந்திக்க வேண்டும்.
ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகிவிட்டால், போக்குவரத்து கழகத்தையே ரத்து செய்து விடலாமா? அந்த வகையில், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதற்காக சட்டத்தையே நீக்கிவிட வேண்டுமென்பது எப்படி சரியாகும்? அதனால், ராமதாஸ் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இதைத் தவிர்த்து, சட்ட மன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை பா.ம.க. கொண்டு வருமேயானால்... விளைவுகள் மோசமானதாக இருக்கும்'' என்கிறார் ஆவேசமாக.
பார்க்க: http://shockan.blogspot.com/2010/10/blog-post_2325.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இனிமேல் அருள் இந்தப்பக்கமே வரமாட்டார் போல இருக்கே. ஐயா டாக்டர் சட்டத்தை நீக்கச் சொல்லியுள்ளார் என்பது புரூவ் ஆனபிறகு, பயங்கர சைலண்ட் ஆகிட்டாரே.
வஜ்ரா said...
// //இனிமேல் அருள் இந்தப்பக்கமே வரமாட்டார் போல இருக்கே// //
மருத்துவர் அய்யா அவர்கள் என்ன பேசினார் என்பதை பதிவுலகில் வரும் செய்தியை ஆதாரமாகக் கொண்டு பதிலளிக்க முடியாது. இதுகுறித்து தலித் அமைப்புகள் என்ன பேசுவார்கள் என்பதும் அறிந்ததுதான்.
அதேசமயம், "வன்கொடுமை தடுப்பு சட்டம் (பி.சி.ஆர். ஆக்ட்) தவறாக பயன்படுத்தப்படுகிறது" என்கிற வாதத்தை பா.ம.க தொடங்கப்பட்ட 1989 முதலே பேசிவருகிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகின்றனர். குற்றமிழைப்போர் தண்டிக்கப் படவேண்டும் என்கிற கருத்தில் பாமக பின்வாங்கவில்லை.
குற்றமிழைக்காத அப்பாவிகள் பலர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. இதனை எவரும் நியாயப்படுத்த முடியாது.
இரண்டு உண்மைகள் ஒன்றுக்கொன்று எதிரானது போல தோன்றலாம், ஆனால், அதுவே உண்மை ஆகாது. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று கோருவது வன்கொடுமைக்கு ஆதரவான கருத்து என்று நினைத்தால் அது தவறான புரிதல்.
உண்மையில், "தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராவதற்கு தடை விதிக்கும் நீதிபதிகளும், Paraiah என்கிற வார்த்தையை அகராதியில் சேர்த்த Oxford நிறுவனமும்"தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
Post a Comment